Kani Suresh "தனிமையின் காதலி"
வணக்கம் மக்களே .
நான் உங்கள் kani Suresh."தனிமையின் காதலி"
இங்க உள்ள அனைவருக்கும் என்னை தனிமையின் காதலியாக தான் தெரியும் என்று நினைக்கிறேன்.
நான் ஒரு இல்லத்தரசி. இரண்டு குழந்தைகளுக்கு தாய்.
இத்தனை நாட்களாக, வருடங்களாக என்னுடைய கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருந்த நான்.
என்னுடைய கற்பனையே அடுத்தவர்களுக்கு எழுத்து மூலமாக கொடுத்தால் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் என் கண்ணில் பட்டது தான் பிரதிலிபி.
அதில் ஆரம்பத்தில் நான் கதைகளை படித்துக் கொண்டு மட்டுமே இருந்தேன். நாமும் நம்முடைய கற்பனையை இதில் கொடுத்தால் என்ன என்று யோசித்து சிறிது தயங்கி நின்ற போது தினசரி தலைப்புகளில் ஒன்று இரண்டு எழுத ஆரம்பித்த பொழுது என்னையும் ஒரு சிலர் பாலோ செய்து நன்றாக உள்ளது என்று கொடுத்த விமர்சனமே என்னையும் கதைகளை எழுத துண்டுகளாக அமைந்தது.
நம் கற்பனையே நாம் எழுத்து வடிவில் கொடுத்தால் என்ன என்று யோசித்து நான் எழுத ஆரம்பித்த முதல் தளம் பிரதிலிபி .
நான் எழுத ஆரம்பித்து எட்டு மாத காலங்கள் ஆகிறது.
இதுவரை ஏழு கதைகள் எழுதியிருக்கிறேன். இப்பொழுது பிரவீணா தங்கராஜ் அக்காவின் சைட்டில் இரண்டு ஆன் கோயிங் கதையும் எழுதிக் கொண்டிருக்கிறேன் .
போட்டி கதை விருப்பமில்லா மணமேடை விரும்பியவளோடு கதையும் எழுதி இருக்கிறேன்.
தெரியாத ஒன்று இரண்டை கேட்கும்பொழுது முகம் சுளிக்காமல் சொல்லித்தரும் பிரவீணா அக்காவிற்கும் மிக்க நன்றி .
-
Yazhini8 months ago
-
G. Shyamala Gopu8 months ago
-
Nithya Mariappan8 months ago
-
அனுஷா டேவிட்9 months ago
-
Chitra Haridas10 months ago
- 138 Forums
- 1,996 Topics
- 2,256 Posts
- 5 Online
- 884 Members