அத்தியாயம்-27
Thank you for reading this post, don't forget to subscribe!முதன் முதலில் பள்ளிக்கு செல்லும் சிறுவனுக்கு இனிப்பு மிட்டாயை கொடுத்து ஆசிரியர் கணிவாக தான் அமர வைப்பார்கள். அப்படி தான் இன்று பூங்கொத்தை கொடுத்து பலரும் ஆராவமுதனுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
வெளிநாட்டில் படிக்கும் காலத்தில் தந்தையின் அரசியல் ஆராவரம், புகழ்மாலை, சால்வைகள், பெருமையாக பேசும் தருணத்தை எல்லாம் கவனித்தது உண்டு. அதை நேரில் அனுபவிக்கும் நேரம் புகழ்ச்சியின் போதை, உவகையை தந்தது.
இந்த அரசியல் போதை தான், புகழ்ச்சியால் தான், யாரும் தனக்கு பிறகு தன் ரத்தத்தில் உதயமாகும் வாரிசுகளிடமே தங்கள் அரசியல் மலர் பாதை பொறுப்பை தர நினைக்கின்றார்கள். மற்றவர்களிடம் பதவியை தர மறுப்பதை உணர்ந்தான்.
அதன்பின் பதவி ஏற்று தனக்கான இடத்தில் அமர்ந்தான்.
ஏற்கனவே அந்தந்த அமைச்சர்களுக்கு பதவி வழங்கியிருந்ததால், அவரவர் பணிகளை செவ்வென நடந்துக்கொண்டிருந்தது.
அலைப்பேசி வாயிலாக ஆளுநர், பிரதம மந்திரி கூட வாழ்த்தை தெரிவித்தார்கள். மிக இளவயதில் பதவி ஏற்றதில் பலரும் பாராட்டவும் ஜிவ்வென்று ஏறியது.
சில கோப்புகளை பார்வையிட நேர்ந்தபோது, ஏற்கனவே அரசியலை தான் கற்றறிருந்து வந்ததால், கோப்புகளை பார்த்ததும் நன்றாகவே புரிந்தது. கோப்புகளில் அவன் கையெழுத்து போட்டான். ஒரு கையெழுத்தின் வீரியம் உணர்ந்தவனாக விளையாட்டை துறந்தான்.
லேசாக சிதம்பரத்தை அருகே அழைத்து, ‘அங்கிள் சட்ட பேரவை எப்ப போகணும்?” என்றான். சுரபியை எதிரெதிர் காணும் ஆவலில் கேட்டதும், “சில பேர் உங்களை நேர்ல பார்த்து, மனு கொடுக்க வந்திருக்காங்க.
அதை எல்லாம் வாங்கிட்டு சட்டபேரவைக்கு போகலாம் தம்பி.” என்றதும், ஆர்வமும் அவசரமுமாய் எழுந்தான்.
மக்களில் சிலர் வெயிலில் மனுக்களை நீட்டி, தங்கள் கோரிக்கையை கூற துவங்க, நிதானமாய் வாங்கினான்.
ஏனோ கொஞ்ச நேரத்திலேயே வேர்த்துவிட்டது. சூரிய பகவனும் ஆசி வழங்க சுட்டெரித்திருப்பாரோ என்னவோ, ஏசியிலேயே வாழ்ந்தவனுக்கு கைக்குட்டை ஈரமானது.
ஓ.எம்.ஜி என்ன இப்படி இருக்கு?’ என்றாலும் காரில் ஏறிவிட்டால் ஏசி காற்று கிடைக்குமென்று நழுவ பார்த்தான்.
நிற்க வைத்து வாழ்த்து கூறி மனுக்கொடுத்தவர்களில், கண்ணீர் கதைகளையும் கேட்க, அச்சோ என்று தான் கவலையுண்டானது.
“ஓகே ஓகே.. இதுல உங்க பிரச்சனையை எழுதியிருக்கிங்கள்ல? பார்த்து சரிப்பண்ணிடறேன்” என்றவன் காரில் ஏறிய அடுத்த நொடி, “ஏன் அங்கிள் ரூமுக்கு வந்து இனி மனு கொடுக்க சொல்லலாமே? ஏன் வெளியே நின்று தர்றாங்க?” என்று சலிப்படைந்தான்.
“என்ன தம்பி எல்லாம் தெரிந்தும் இப்படி பேசறிங்க. தமிழக முதலமைச்சர் நீங்க. உங்களை பார்த்து மனு கொடுக்க வந்தோம்னு ஆபிஸ் உள்ளவரை எல்லாரையும் அனுமதிக்க முடியாதே. ஏதாவது பாதுகாப்பு இல்லாம வெடிகுண்டு வச்சி உங்களை கொல்ல வந்தா.
சிலர் இப்படி வருவதுண்டு. ஏன் தம்பி வேர்த்துடுச்சா?” என்று ஐஸ் வாட்டரை பருகவும், கேட்டார்.
ஆராவமுதன் வெடிகுண்டு வைத்து கொல்லுமா அளவிற்கு இன்னமும் எந்த செயலிலும் முனைப்பாகவில்லை. அதனால் சிதம்பரம் பேச அதை இலகுவாக நினைத்தான். “இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன். கொஞ்சம் கஷ்டம் தான். டோண்ட் வொர்ரி உங்க சுரபி அளவுக்கு இல்லைன்னாலும் நான் மேனேஜ் பண்ணிடுவேன்” என்று பதிலடி தந்தான்.
சிதம்பரத்தை விட்டு உதறவும் முடியாமல் கூடவே வைத்து காரியம் சாதிக்கும் வல்லமையில் தான் ஆராவமுதன் இருந்தான்.
சட்டபேரவையில், ஆராவமுதன் நுழையவும், ஆளாளுக்கு எழுந்து நின்றனர்.
அத்தனை கரவேஷ்டி ஆட்களில், சினிமா நாயகன் போல, பிளாக் பேண்ட் பிளாக் ஷர்ட் என்று அணிந்து வந்திருந்தான்.
அந்த வெள்ளைக்கூட்டத்தில் கருப்பான உடையணிந்து தன்னை வித்தியாசப்படுத்திட முனைந்தான்.
உண்மையில் அவன் மட்டும் தனியாக தான் தெரிந்தான். இதே முகம் நடிக்க சென்றாலும் மாஸ் ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அந்தளவு தோற்றத்தில் பத்து பொருத்தமும் இருந்தது.
பொதுவான பார்வை பார்த்து வந்தவன், தன் துணையை கண்டும் காணாமல் கவனித்தான்.
இவன் வரும் நேரம் அவள் தனக்கான சீட்டில் தான் ஒய்யாரமாக அமர்ந்திருந்தாள்.
இத்தனை நேரம் கிடைத்த பதவியின் புகழ், அனுபவித்தும், தான் வரவும் இவள் எழவில்லையே என்ற உறுத்தல் கூடுதலாக வாட்டியது.
கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டு அமரவும், வாதங்கள் துவங்கியது.
தற்போது காஷ்மீர் பகுதியில் அநியாயமாக உயிரிழந்தவர்களுக்காக சில நிமிடம் இரங்கல் அஞ்சலி செய்ய எழுந்தார்கள்.
அவ்விடம் நிசப்தமாகவும், பத்து நிமிடம் கழித்து, அப்பகுதியில் மக்கள் உயிரிழந்ததற்கு மத்திய மாநில அரசும் சம்பந்தம் உண்டு என்றும் அந்த கட்சியில் ஆளுங்கட்சி கூட்டணி வைத்ததை கூறி பகிரங்கமாக ஆராவமுதனை குற்றம் சாட்டினாள்.
ஆராவமுதனை என்றால் அவனை அல்ல, அவனது கட்சியை என்று அறிந்தாலும், இப்படி எங்கோ நடக்கும் பிரச்சனைக்கு இன்று தலைமை தாங்கிய தன்னிடம் தன் கட்சியை குற்றம் சுமத்தவும் பதிலுக்கு விவரித்தான்.
“மிஸ்டர் ஆராவமுதன்… கடன் கொடுத்த கயவர்களை எல்லாம் கடனை அடைக்காம நாட்டை விட்டு போனா கூட அவங்க கடனை தள்ளுபடி செய்து விடுகிறது இந்த அரசாங்கம். ஆனால் நம்மை காப்பாற்ற எல்லையில் இருக்கறவங்களுக்கு நிதி ஒதுக்குதா? இதுல ஆள் குறைப்பு செய்து புது வீரரை சேர்க்கலை.
என்ன கேவலமான பதிலிது” என்று பொங்கினாள்
அதோடு மத்திய மாநில அரசாங்கத்தில் இதை பற்றி என்ன பேசினிங்க?” என்று கேள்விகளை அள்ளி அள்ளி வீசவும், ஆராவமுதன் தடுமாற முயன்றான்.
இந்த ஆவேசமான சுரபி இவனுக்கு புதிதானவள். சற்று நேரம் அவளது பேச்சை உள்வாங்கி பதில் தந்தான். ஆனாலும் மற்றவர்களுக்கு அதிருப்தியாகவே தோன்றியது.
ஆராவமுதன் சுரபியையே வீழ்த்தி மணந்து, அவன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ஜம்பமாக இருந்த கட்சி தொண்டர்கள், சற்று ஆராவமுதனின் பதிலில் என்பது சதவிதம் நிறைவு கண்டனர்.
ஏதோவொன்று குறைவதாக தோன்ற, சுரபியின் கேள்விக்கு இலக்கியன் ஐயாவே நிதானமாக தான் பதில் செல்வார். இவரும் அப்படி தான்.” என்று தேற்றிக்கொண்டார்கள்.
என்ன தான் அரசியலில் ஊறிய இலக்கியனாக இருந்தாலும், இலக்கியனின் சொந்த ரத்தம் ஆராவமுதனாக போனாலும், அவமானம், வலி, வேதனையால் அரசியலுக்குள் கால் பதித்த சுரபியிடம் வாதத்திறமையால் ஜெயிக்க முடியாமல் திணறினான்.
முதல் காரணம் அவள் அன்னை மொழியான தமிழில் அழுத்தம் திருத்தமாக, பிழையின்றி உச்சரித்து பேசுகின்றாள்.
ஆராவமுதனுக்கு தமிழ் ஆங்கிலம் கலந்து வந்து பேச்சை சுவாரசியத்தை இழக்க வைத்தது. ஆளுநர், மத்திய மாநில அரசாங்கத்திடம் எல்லாம் ஆங்கிலத்தில் அழகாக உச்சரித்து பகட்டாய் பேச, இங்கு சட்டபேரவையில் தமிழில் மட்டுமே உரையாடி, ஒருவிதமான மேடைபேச்சு போல பேச்சும் ஜாம்பாவான்களிடம் சரியான விகிதத்தில் சொல்லப்பட வேண்டியவையை சொன்னாலும் அது நெருப்பான வார்த்தை வரவில்லை.
இதோ அதோவென்று நேரம் நகர முதல் நாள் பேச்சு கலைந்து, வெளியேறினார்கள்.
ஆராவமுதன் தனக்கான தலைமை செயலகத்தின் அலுவலகத்தில் அமர்ந்து டேபிளில் இருந்த பேப்பர் வெயிட்டை சுழற்றினான்.
“என்ன தம்பி கஷ்டமாயிருக்கா? இதெல்லாம் நீங்க படிக்கற காலத்திலேயே சுரபியை பத்தி சொன்னேன். நீங்க தான் சரியா காதுல போட்டுக்காம இருந்திங்க. டிரையல் எப்படியிருக்கு தம்பி?” என்று கேட்க, ஆராவமுதனோ “சுரபி புத்திசாலி அங்கிள் அதனால தான் அவளை நான் விருப்பி, என் மனைவியா மணந்திருக்கேன்.
அவ முட்டாளா இருந்தா நான் அவளை விரும்பியிருக்கவே மாட்டேன். நீங்க காதுல போட்டு வச்ச விஷயத்தால் அவளை விரும்பலை.
பத்தோட பதினொன்றா என்னால ஈஸியா சுரபியை கடந்திருக்க முடியும். இதோ இவ்ளோ பேசறாளே… அந்த திமிர், தைரியம் அது தான் பிடிச்சிருக்கு.
லைப்ல நம்ம சொல்படி கேட்டு நடக்குற மனைவியை அடக்கி, வேலையை ஏவி, நமக்கு கீழேயே வச்சி பார்க்கறது நிறைய ஆம்பளைகளுக்கு பிடிக்கும்.
ஆனா சில ஆம்பளைக்கு மட்டும் தான், எதுக்கும் அடங்காத திமிர் பிடிச்ச தைரியமான பொண்ணை கல்யாணம் செய்வது பிடிக்கும். எதுக்கும் அடங்காத யாருகாகும் அஞ்சாதவஎன் மனைவி என்ற கர்வமும் பெருமையை தான் தரும்.
எனிவே.. நான் தேர்ந்தெடுத்த பொண்ணு சுரபி. அமுதனுக்கு ஏற்ற சுரபி தான். அதுல டவுட்டே இல்லை.
என்னதான் இத்தனை காலம் அரசியலில் இருந்தாலும் இந்த சீட்ல அவளாலையும் அவ அப்பாவாலையும் தொட முடியலை. ஆனா நான்…. வந்த சில நாளில் தொட்டிருக்கேன்.
கம்பீரமா உட்கார்ந்து, இதோ நீங்க தான் உளவாளினு தெரிந்தும் இப்பவும் பேசிட்டு இருக்கேன்.
இதுக்கு மேல என்ன தந்திரம் ஜெயிக்க போகுது அங்கிள். கொஞ்சம் கொஞ்சம் திணறினாலும் எல்லாம் போக போக பக்காவா பண்ணுவேன் ” என்று நகைக்க, சிதம்பரமோ பதில் தராது மௌனமாக நின்றார்.
பழக்கப்பட்ட அவமானங்கள் அதனால் பெரிதாக மனதில் அம்பாக எய்யவில்லை. ஆராவமுதன் சொன்னதும் சரிதானே. இந்த சீட்டில் அமருவதற்கு தகுதி வேண்டும். ஒரு நிலசரிவில் மக்களுக்கு உதவி மேலே வந்துவிட்டானே.
மதிய உணவு வந்ததும் நன்றாக சாப்பிட்டு எஞ்சிய பணியையும் ஒரெட்டு பார்த்துக்கொண்டான்.
இலக்கியனால் கொடுக்கப்பட்ட அப்பாயின்மெண்ட் எதுவும் மறுக்காமல் தன்னுடையதாகவும் நிகழ்த்திக்கொண்டான்.
மாலை தன் அரசாங்கத்திற்கென்று உபயோகப்படுத்தும் அத்தனை காரையும் தவிர்த்து, சத்தயில்லாமல் பிரைவேட்டாக காரில் ஏறினான்.
காலையிலேயே சுரபி, தந்தை வீட்டுக்கு அழைத்திருந்தாள். அங்கு செல்ல, ஆசைப்பட்டானென்று கூட சொல்லலாம்.
இத்தனை நாள் ஆராவமுதனாக சென்று வந்ததை விட, மாப்பிள்ளையாக, முதலமைச்சராக செல்வதில் கர்வத்தை உணர்ந்தான்.
சுரபிக்கு போனில் அழைத்து “எங்க இருக்க?” என்றான்.
“எங்க வீட்ல” என்றாள்.
ஆராவமுதன் போனை தூரவைத்து, “அத்தையிடம் சொல்லு. வந்துட்டே இருக்கேன். அப்பறம் பேசி முடிச்சிட்டு, நம்ம வீட்டுக்கு இன்னிக்கே கிளம்பிடுவேன். அதையும் சொல்லிடு” என்று கூறினான்.
‘எங்க வீடு’ என்று அவள் கூற ‘நம்ம வீடு’ என்று கூறி அது ‘உங்க அப்பா வீடு மட்டுமே’ என்னும் விதமாக உரைத்தவனை மனதில் மெச்சிக்கொண்டாள்.
“அப்பா… அமுதா கொஞ்ச நேரத்தில் வந்துடுவார்” என்றதும் பல்லவியோ நான் வரவேற்க, சமைக்க, சமையல்காரியிடம் ஏற்பாடு பண்ணிடறேன்” என்று பல்லவி நகர, “அப்பா.. இன்னும் என் மேல கோபமா? நான் ஆராவமுதன் பின்னாடி போறதால் லட்சியத்துல பின் தங்கிடுவேன்னு நினைக்கறிங்களா? கட்சி தொண்டர்கள் தான் நம்பிக்கையில்லாம இருக்காங்க. நீங்களுமா?” என்று கேட்டாள்.
“அதான் பின்னாடி இருக்கியே.” என்று கோபமாக உரைத்தார்.
“என்னை நீங்களும் புரிஞ்சிக்கலையா? இட்ஸ் ஓகேப்பா. எதையும் யாரும் நம்பி தான் ஆகணும்னு நான் எதிர்பார்க்கலை. ஆனா இலக்கியன் அங்கிளை பார்க்க விரும்பினா பார்த்துட்டு வாங்க. ஏன்னா அவர் நிஜமாவே உடல் தளர்ந்து இருக்கார். அதோட உங்களுக்கு பிடிச்சிருக்கோ இல்லையோ உங்க சம்பந்தி” என்று முடித்து கொண்டாள்.
தாலி கட்டியதும் இலக்கியனுக்காக பேசுவதை நட்ராஜ் விரும்பவில்லை. ஆனால் இன்று சட்டபேரவையில் மகள் பேசியதை கவனித்தவருக்கு ஏதோ ஆறுதல் என்று கூறலாம். இலக்கியனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்க போகவேண்டுமா என்ன? என்று யோசித்தார்.
சுரபி சம்பந்தி என்று கூறியதற்கு கோபம் வருகின்றது. பகையும் கோபமும் மனதில் வைத்து பார்த்தால் நன்றாக இருக்குமா?
-தொடரும்.
Super super😍
👌👌👌👍
Fantastic narration sis. Wonderful amuthan. Surabhi you too very smart.
Amudhan ku unmai ah vae confidence iruku than opponent strong ah irundha than valara mudiyum even surabi strong ah irundhalum starting la konjam struggle pannalum manage pannitan
Impressive
Super 👌
👌
SURABI AATATHA ENI THAN PAKA PORA AMUTHA FIRST NAALE IVLO AARCHAYA PADATHA INUM IRUKU . EVLO THA SURABI PATHU CRT AH NADANTHALUM AVA MELA KOVAMAVE IRUKARE INTHA NATRAJ ILLAKIYAN UDAMBU MUDIYAMA IRUKARUNU THERINJIMPOI PAKA KUDA NINAIKA MATRARU
Hello Miss எதிர்கட்சி..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 27)
இலக்கியன் கோபத்தை துறந்த மாதிரி, இந்த நட்ராஜ்ஜூம் கொஞ்சம் கோபத்தை தள்ளி வைக்கலாமே. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கோபம்..? நாளை க் கே பேரனோ பேத்தியோ வந்துட்டா
ஆராவமுதன் குழந்தைன்னு தள்ளி வைப்பாரா, இல்ல தன்னோட மகள் வயித்து பேரன்னு தலையில தூக்கி வைச்சு ஆடுவாரான்னு தெரியலையே…?
😀😀😀
CRVS (or) CRVS 2797
👌👍🔥👍🔥👌👌👌👌👌💯💯💯💯
It’s going interesting…spr
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍
Super super super super super super super super super super
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Semma
Nice update 👍👍👍👍