Skip to content
Home » MM 13

MM 13

மேரேஜ் லைஃப் பத்தி கலர் கலர் கனவுகளோட இருக்குற யங்ஸ்டர்சுக்கு க்ரவுண்ட் ரியாலிட்டி என்னனு தெரியுறதே இல்ல… நம்ம மட்டும் சுவாதீனமா தங்கியிருந்த ரூம்ல இன்னொரு ஜீவன் நம்மளை விட அதிக உரிமையோட நடமாடும்… நம்மளோட எல்லா உடைமைகள்லயும் எனக்கும் பாதி ஷேர் இருக்குனு அடிக்கடி உணர்த்திட்டே இருக்கும் ஒய்ப்ங்கிற அந்த ஜீவன்… அது மட்டுமா? கொஞ்சம் அப்பிடியும் இப்பிடியுமா கிடந்த ரூம் பெர்ஃபெக்டா மாற ஆரம்பிக்கும்… உங்களோட பாடி ஸ்ப்ரே மட்டும் இருந்த ட்ரஸ்சிங் டேபிள்ல விதவிதமான ஸ்கின்கேர் ப்ராடக்ட்ஸ், பேங்கிள் ஸ்டாண்ட், தலை வாருற சீப்புல ஆரம்பிச்சு ஷேரிக்குக் குத்துற பின் வரைக்கும் ஆக்கிரமிச்சிடும்… அப்புறம் வார்ட்ரோப் பத்தி சொல்லவே வேண்டாம்…. முன்னாடிலாம் நம்ம இஷ்டத்துக்கு ஒரு காரியத்தைச் செய்வோம்… ஆனா கல்யாணம்னு ஒன்னு ஆனதும் லைஃப் பார்ட்னர் கிட்டவும் ஒரு தடவை சொல்லிட்டுச் செய்வோமேனு மெச்சூரிட்டி வந்த குட்டிப்பையனா மனசு அவதாரம் எடுக்கும்…. ரொம்ப சுதந்திரமான மனப்பான்மை உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதெல்லாம் ஏத்துக்கவே கொஞ்சம் டைம் தேவைப்படும்.

                                                       -முகில், தி க்ளவுட்மேன்

முகிலனுடனான தன் வாழ்க்கை இப்படி தான் இருக்கப்போகிறதென தன்னைத் தயார் செய்துவிட்டுத் தான் மணமேடையில் அவன் கையால் தாலி வாங்கிகொண்டாள் மேகவர்ஷிணி. எனவே அவனுக்கும் அவளுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் எதுவும் அவளுக்குள் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

தேனிலவுக்காக அவன் ஏற்பாடு செய்த ரிசார்ட்டில் ஒரு வாரத்தைக் கல்லூரியில் இருந்து சுற்றுலா வந்த உணர்வோடு கொண்டாட்டமாகக் கழித்துவிட்டு எட்டாம் நாள் பாரிவேந்தனின் இல்லத்திற்கு அவனோடு வந்து சேர்ந்தாள்.

திருமணத்திற்கு வந்திருந்த இரு தரப்பு உறவினர்களும் அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டார்கள். முகிலனின் பெற்றோர் மற்றும் மோகரனங்கம் மட்டுமே வீட்டிலிருந்தனர்.

மகனையும் மருமகளையும் ஆரத்தி சுற்றி வீட்டுக்குள் அழைத்துக்கொண்டார் ரஞ்சனா.

அவர்களுக்காக தடபுடலாக காலையுணவைத் தயார் செய்து வைத்திருந்தார்.

அனைவரும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுகையில் பாரிவேந்தன் முக்கியமான தகவலொன்றை மைந்தனிடம் பரிமாறிக்கொண்டார்.

“இனிமே மோகன் எங்க கூட இந்த வீட்டுல தான் இருக்கப்போறான்… மேகாவ இங்க விட்டுட்டு அவன் மட்டும் தனியா சென்னைல இருந்து என்ன பண்ணப்போறான்? நம்ம எல்லாரும் ஒரே குடும்பமா இந்த வீட்டுலயே இருக்கலாம்னு டிசைட் பண்ணிருக்கேன்” என்றவர் மகனை ஏறிட

“சரிப்பா” என்றான் அவன் சம்மதமாக.

“இதை நான் சொன்னது உன் சம்மதத்தைக் கேக்குறதுக்காக இல்ல… சென்னைல இருக்குற வீட்டை விக்குறதுக்கு மோகன் முடிவு பண்ணிருக்கான்… அங்க உள்ள திங்ஸ் எல்லாத்தையும் ஊட்டிக்கு ஷிஃப்ட் பண்ணணும்… முக்கியமா மேகாவோட ஸ்டடீஸ் வேற இருக்குல்ல… இந்த ஒன் இயரை மட்டும் டிஸ்டன்ஸ் மோட்ல படிக்க காலேஜ்ல பேசியாச்சு… அவளோட ஸ்டடி மெட்டீரியல்ஸை வாங்க நீயும் மேகாவும் நாளைக்குச் சென்னை போகணும்”

அவனது தலை ஆமோதிப்பாக அசைந்தது.

“அப்பிடியே அந்த வீட்டுல இருக்குற திங்ஸ் எல்லாத்தையும் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் மூலமா இங்க கொண்டு வர ஏற்பாடு பண்ணிடு முகில்”

அதற்கும் ஆமெனத் தலையை உருட்டியவனை நமட்டுச்சிரிப்போடு ஓரக்கண்ணால் பார்த்தபடி உணவருந்தினாள் மேகவர்ஷிணி.

அடுத்து தான் பாரிவேந்தன் பெரியதொரு குண்டை தூக்கிப்போட்டார்.

“அந்த திங்ஸ் எல்லாத்தையும் உன் ஹோம்ஸ்டேல இறக்கிடச் சொல்லிடு… ஏன்னா இனிமே நீயும் மேகாவும் அங்க தான் தனிக்குடித்தனம் இருக்கப்போறிங்க”

இவ்வளவு நேரம் தலையை ஆட்டியவன் இப்போது தந்தையை விசித்திரமாக நோக்கினான்.

பாரிவேந்தனோ அதைக் கண்டுகொள்ளாமல் “இன்னைல இருந்தே உங்க தனிக்குடித்தனம் ஆரம்பிக்குது… காலையில விருந்துக்கு என் பொண்டாட்டி சமைச்சுப் போட்டுட்டா… அடுத்தவேளை சாப்பாடு உங்க வீட்டுல நீங்க ரெண்டு சமைச்சு சாப்பிட்டுக்கோங்க… புரொவிசன் எல்லாம் நேத்தே அங்க ராம் வாங்கி வச்சிட்டான்… மேகாக்கு குக்கிங் அவ்வளவா தெரியாதாம்… ரெண்டு பேரும் அட்ஜஸ்ட் பண்ணி வாழுங்க… ரஞ்சு, நீ மருமகளுக்கு இட்லி மாவு மட்டும் கொஞ்சம் குடுத்து விடு… இன்னைக்கு நைட் டின்னருக்கு யூஸ் ஆகும் அவங்களுக்கு” என்று சொல்ல மேகவர்ஷிணிக்கு முகிலனிடம் வாழப்போகும் தனிக்குடித்தன வாழ்க்கையைப் பற்றி எண்ணி குதூகலம் பிறந்தது.

ஆனால் அதைத் துடைக்கும் விதமாக முகிலனின் முகம் சடுதியில் மாறியது. ஹோம்ஸ்டேவை ரிசார்ட்டாக மாற்றும் எண்ணம் கொண்டவனுக்குத் தந்தை திடுதிடுப்பென எல்லா முடிவுகளையும் எடுத்துவிட்டுத் தன்னிடம் வெறும் தகவலை மட்டும் பகிர்ந்தவிதம் உவப்பாக இல்லை.

சாப்பிடும் வரை பொறுமை காத்தவன் ரஞ்சனா ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் இட்லி மாவு கொண்டு வந்து அவன் கையில் திணிக்கவும் கடுப்பாகிப் போனான்.

“நான் இப்ப தனிக்குடித்தனம் வேணும்னு கேட்டேனாப்பா? என் ஹோம் ஸ்டேவை நான் இன்னும் டெவலப் பண்ணலாம்னு நினைச்சேன்… நீங்க என்னை அங்க போய் தங்க சொல்லுறிங்க?”

முகிலன் கடுகடுவென எரிந்து விழ, அப்போது தான் சாப்பிட்ட கையைக் கழுவிவிட்டு வந்த பாரிவேந்தன் இடுப்பில் கையூன்றி அவனை முறைத்தார்.

“இருபத்தஞ்சு வயசு ஆகுதுல்ல… இன்னும் உன்னை கங்காரு மாதிரி நானும் உன் அம்மாவும் எங்க கூடவே வச்சிருக்கணுமா? போதாக்குறைக்குக் கல்யாணம் ஆயாச்சு மகனே… இனிமே நீ குடும்பஸ்தன்… நீயும் மேகாவும் தனி குடும்பம்… இந்த வீடு எனக்கும் என் பொண்டாட்டிக்கும் மட்டும் தான் சொந்தம்… ஒழுங்கா ஹோம் ஸ்டே போர்டை தூக்கி வீசிட்டு அந்த வீட்டுல மருமகளோட சந்தோசமா வாழப் பாரு” என்று அறிவுரை சொல்லிவிட்டு மனைவியையும் நண்பரையும் அழைத்துக்கொண்டு தனது அறைக்குள் போய்விட்டார் அவர்.

முகிலன் ஏமாற்றத்தோடு தரையை உதைத்தவன் தன்னருகே வாயெல்லாம் பல்லாக நின்று கொண்டிருந்த மேகவர்ஷிணியைப் பார்வையால் எரித்தான்.

அவளோ “என்னை எதுக்கு முறைக்குற முகில்? அங்கிளோட ஃபார்வேர்டான திங்கிங்ல கொஞ்சம் கூட உனக்கு இல்ல பாரேன்… சரி சீக்கிரமா வா… எனக்குப் பயங்கரமா பசிக்குது… ஆன்ட்டி இட்லி மாவு குடுத்திருக்காங்க… ரெண்டு பேரும் சேர்ந்து இட்லி சட்னினு ஜமாய்க்கலாம்” என்று சொல்ல

“எங்கப்பா என்னை வீட்டை விட்டுத் துரத்திட்டார்னு நானே கடுப்புல இருக்கேன்… உனக்கு இட்லியும் சட்னியும் கேக்குதாடி?” என்று வெடித்தான்.

உடனே காதுகளைப் பொத்தியவள் “எதுக்கு முகில் கத்துற? உன் பாயிண்டுக்கே வர்றேன்… அங்கிள் உன்னை ரொம்ப திட்டிட்டார்ல… பாவம் உனக்கு மனசு வலிக்கும்… அதனால இட்லிக்குப் பதிலா தோசையா சுட்டுடேன்… வேலை சுலபமா முடிஞ்சிடும்… அப்புறமா உக்காந்து அப்பா துரத்திட்டார்னு அழுதுக்க.. சரியா?” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து முகிலனின் ஹோம் ஸ்டே அமைந்திருக்கும் இடத்துக்குச் செல்ல ஆயத்தமானாள்.

பாரிவேந்தனின் அறையிலோ ரஞ்சனாவும் மோகனரங்கமும் அவரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள் பரபரப்புடன்.

“நீ பாட்டுக்குத் தனியே போனு சொல்லிட்ட பாரி… அவங்க சின்ன பசங்க… திணறிடுவாங்கடா” என்றார் மோகனரங்கம் கவலையுடன்.

“எனக்கும் அதே எண்ணம் தான் அண்ணா… இங்க பாருங்க, நல்லது கெட்டது எடுத்துச் சொல்லி புரியவைக்க பெரியவங்க அவங்க கூட இருக்கணும்” என்ற ரஞ்சனாவைப் பார்த்தபடி பெருமூச்சு விட்டார் பாரிவேந்தன்.

“நீச்சல் கத்துக்க ஆசைப்படுறவனைத் தரை மேல நிக்க வச்சு நம்ம தண்ணிக்குள்ள நீச்சலடிச்சுக் காட்டுனா அவனால கத்துக்க முடியாது… அவனும் தண்ணில இறங்கணும்… கைய காலை அடிச்சு மூச்சுக்கு ஏங்கி பயந்து திணறி கடைசியா லாவகமா நீச்சல் அடிக்க கத்துப்பான்… அதே மாதிரி பொறுப்பா மாறுனு அட்வைஸ் பண்ணுறதை விட அதுக்கான சூழல்ல முகிலைத் தள்ளிட்டா அவனே தட்டுத்தடுமாறி நல்லது கெட்டதைத் தெரிஞ்சுக்கிட்டு வாழ்க்கைனா என்னனு புரிஞ்சிப்பான்… உங்களுக்கு நான் சொல்ல வர்றது என்னனு புரியுதா?”

அவர் கொடுத்த விளக்கம் எல்லாம் சரி தான். இருந்தாலும் இதுநாள் வரை சிறுபிள்ளையாகவே தங்கள் வாரிசுகளை எண்ணிவிட்ட ரஞ்சனாவுக்கும் மோகனரங்கத்துக்கும் கொஞ்சம் ‘திக் திக்’ உணர்வு தான்.

கணவர் கொடுத்த விளக்கத்துக்குப் பிறகு மைந்தன் கோபத்தில் இருந்தது நினைவுக்கு வரவும் ஹாலுக்கு விரைந்தவர் புன்னகை மாறாமல் மகனிடம் வாதிட்டுக்கொண்டிருந்த மருமகளைப் பார்த்ததும் கொஞ்சம் ஆசுவாசமுற்றார்.

“வேணும்னா நீ மட்டும் போ” என்ற முறைப்போடு  நின்ற மைந்தனைக் கவலையாய் ஏறிட்டவர் “முகில்” என்று அதட்டியபடி அவர்கள் அருகே போய் நின்றார்.

அன்னையைக் கண்டதும் முகிலன் சலுகையாய் அவரை அமரவைத்து மடியில் படுத்துக்கொண்டான்.

ரஞ்சனா என்ன செய்ய முடியும்? மருமகளைச் சங்கடமாகப் பார்த்துவிட்டு மகனது சிகையைக் கோதினார்.

“நீயாச்சும் அப்பா கிட்ட பேசும்மா… தனிக்குடித்தனம் வேண்டாம்… மேகாக்கு கூட அப்பிடி ஒரு எண்ணம் கிடையாதும்மா… நம்ம எல்லாரும் இங்கயே ஒன்னா இருக்கலாம்மா.. ப்ளீஸ்மா”

ரஞ்சனா மேகவர்ஷிணியைப் பார்க்க அவளோ முகிலனைக் காட்டி ‘அவனைத் தொட்டிலில் போட்டு தாலாட்டு பாடுங்கள்’ என்ற ரீதியில் இரு கைகளிலும் குழந்தையை ஏந்தி தொட்டிலாட்டுவது போல சைகை செய்தாள் கிண்டலாக.

அதில் சிரித்தவர் “உன் அப்பா ஒரு முடிவு எடுத்தார்னா அது சரியா இருக்கும்னு நான் நம்புறேன் முகில்… மேகாவ பத்தி எனக்குத் தெரியும்… உங்களுக்கான ப்ரைவசிய குடுக்கணும்னு உங்கப்பா நினைக்குறார்டா… புரிஞ்சிக்க” என்றார் ஆதுரமாக.

முகிலன் விருட்டென எழுந்து அமர்ந்தவன் மேகவர்ஷிணியைக் காட்டி “இவ கூட தனியா போய் வாழ்ந்தேன்னா இருபத்து நாலு மணி நேரமும் நான் தான் இவளுக்கு தொண்டூழியம் பாக்கணும்மா… இவளுக்கு வீட்டுவேலை எதுவுமே தெரியாதாம்” என்று குற்றம் சாட்டினான்.

திருமணம் ஆகப்போகிறது என்றால் வீட்டையும் சேர்த்து சுமப்பது பெண்களின் கடமை என்ற எண்ணம் அவனுக்கு. ஆண் என்பவன் பணமீட்டும் கருவி என்றால் பெண் வீட்டிற்காக உழைத்துக்கொட்டும் எந்திரம் என்ற சராசரி ஆண்மகனின் மனப்போக்கு.

இது இக்கால சந்ததி பெண்களை மணமுடிக்கும் ஆண்களுக்கு ஏற்றதில்லையே என்ற கவலை எழுந்தது. அதிலும் ‘Gne Z’ Zoomer தலைமுறை எல்லாவற்றிலும் கொஞ்சம் முற்போக்காக யோசிக்கிற காலம் இது.

இதில் போய் எழுபது எண்பதுகளில் வாழ்ந்த பெண்களின் வாழ்க்கையைக் காட்டி இந்தத் தலைமுறை பெண்களின் தலையில் அதீத சுமையை ஏற்றுவது முட்டாள்தனம். மனிதாபிமான ரீதியில் பார்க்கப்போனால் அது ஒருவகை குரூரமும் கூட.

அதை தன் மகன் செய்வதற்குள் அவனைத் திருத்தும் கடமை தனக்கு இருப்பதாக எண்ணிய ரஞ்சனா உடனே அதை ஆற்றவும் செய்தார்.

“இங்க பாரு முகில், நீ இந்த வீட்டுல எவ்ளோ சுதந்திரமா வளர்ந்தியோ அதே மாதிரி தான் மேகாவும் அவங்க வீட்டுல வளர்ந்திருப்பா… அவளுக்கும் உன்னை மாதிரி கனவு, ஆசை இருக்கும்… வீட்டுவேலைங்கிறது பொண்ணோட கடமை மட்டும் இல்ல முகில்… இன்னைக்குப் பொருளாதார ரீதியா ஆணுக்குத் துணையா பொண்ணுங்க பொருள் ஈட்ட ஆரம்பிச்சிட்டாங்க.. உன்னை மாதிரி ஆம்பளை பசங்க என்னைக்கு பொண்ணுங்க செய்யுற வீட்டுவேலைகளை ஷேர் பண்ணி அவங்களுக்குத் துணையா நிக்க போறிங்கடா? ஆபிஸ் வொர்க் மாதிரி வீட்டுவேலைக்குனு இத்தனை மணிநேரம்னு எந்த ரூலும் இல்லையேடா… நீ நைட் எட்டு மணிக்குத் தலைவலிக்குதுனு சொன்னாலும் இவ உனக்கு காபி போட்டு நீட்டணும்.. இன்னைக்கு வரைக்கும் எல்லா வீடுகள்லயும் எழுதப்படாத சட்டம் இது… கொஞ்சம் யோசி, மேகா படிச்சு முடிச்சு வேலைக்குப் போன அப்புறமும் அவ மட்டுமே வீட்டை தூக்கி பிடிக்கணும்னு நீ யோசிச்சனா அவ முதுகுல ரெண்டு மடங்கு சுமைய நீ ஏத்துறதா தானே அர்த்தம்?”

அன்னையின் விளக்கம் புரிந்தும் புரியாதது போல இருக்க பரிதாபமகத் தலையாட்டினான் முகிலன்.

“மொத்ததுல கல்யாணம்ங்கிற பேருல என்னை நீங்க தண்ணி தெளிச்சு வேற ஒரு வீட்டுக்கு அனுப்பிவைக்குறிங்க” மனத்தாங்கலோடு சொன்னபடி எழுந்தான் அவன்.

“நம்ம சமுதாயம் காலங்காலமா எங்க இனத்துக்கு அதை தானே செய்யுதுடா முகில்… நாங்க அதை தண்ணி தெளிச்சு விடுறதா இப்ப வரைக்கும் நினைக்கலையே… பொண்ணுங்களுக்கு ரெண்டு வீடுனு சால்ஜாப்பு சொல்லி எத்தனையோ தலைமுறையா வாழ்ந்துட்டு வர்றோமே?”

ரஞ்சனா சுருங்கச் சொல்லிவிட முகிலனின் முகம் மாறியதைக் கண்டு இதழ் குவித்து சீட்டியடித்து கரங்களைத் தட்டினாள் மேகவர்ஷிணி. மாமியாரைத் தோளோடு அணைத்து அவரது கன்னத்தில் முத்தமிட்டவள் “நீங்க இந்த ஜென்ரேசன்ல பிறக்க வேண்டியவங்க அத்தை… ஐ லவ் யூ சோ மச்” என்று சொல்லிவிட்டு மீண்டும் முத்தமிட முகிலனோ ‘ஙே’ என்று விழித்தபடி நின்றான்.

ரஞ்சனா சொன்னதை மோகனரங்கமும் பாரிவேந்தனும் அறைக்குள் இருந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். மோகனரங்கத்துக்கு நெகிழ்ச்சியில் பேச்சு வரவில்லை.

இத்துணை அற்புதமான புரிதலுள்ள மாமியார் என் மகளுக்குக் கிடைக்க அவள் கொடுத்துவைத்திருக்க வேண்டுமென எண்ணிக்கொண்டார்.

நண்பரோடு ஹாலுக்கு வந்து புதுமணத்தம்பதியரை ஆசிர்வதித்தவர் மேகவர்ஷிணியிடம் ஒரு தந்தையாகச் சில அறிவுரைகளைக் கூறினார்.

“என் ஃப்ரெண்டும் ரஞ்சிம்மாவும் உன்னைத் தன்னோட பொண்ணா நினைக்குறாங்கடா… உன்னால எப்பவுமே இந்தக் குடும்பத்தோட சந்தோசம் குலைஞ்சிடக்கூடாது… முகில் நுகத்தடில கட்டுன கன்னுக்குட்டி மாதிரி… இந்த அவசர கல்யாணம் அவனை மிரட்சில ஆழ்த்துது… அவனைப் புரிஞ்சு நடந்துக்கடா… உங்க சந்தோசத்தை விட வேற எதுவும் எங்களுக்குப் பெருசில்ல”

“நான் ஒன்னும் கொடுமைக்கார பொண்டாட்டி இல்லப்பா… முகிலைக் கண் கலங்காம பாத்துப்பேன்… ரஞ்சு அத்தை இட்லி மாவு குடுத்த மாதிரி ஒரு வெஜ் கட்டர் குடுத்துடுங்க… உங்க மகன் வெங்காயம் நறுக்குறப்ப கூட அழுதுடக்கூடாது… என் அப்பாக்குக் குடுத்த வாக்கை நான் காப்பாத்தணும்ல” என்று கேலியாய்ப் பேசி சூழலைக் கலகலப்பாக முயற்சித்தாள் மேகவர்ஷிணி.

“அடப்பாவிகளா என்னை வச்சு இவ காமெடி சர்க்கஸ் பண்ண ரெடியாகுறத குடும்பமா நின்னு குதூகலமா வேடிக்கை பாக்குறிங்களே” என்று மனதுக்குள் நொந்து கொண்ட முகிலன் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவளோடு அங்கிருந்து கிளம்பினான், தங்களின் தனிக்குடித்தன வீட்டிற்கு.

16 thoughts on “MM 13”

  1. Kalidevi

    Mugil nee inum porupana paiyana irukanumnu tha unaku intha mudivu panni anga iruka solli irukanga apo tha life na enanu unaku purium inum life etho jail nu pesitu iruka athula love um iruku mugil

  2. முகில் தனிக்குடித்தனத்துக்கு வாழ்த்துகள், 👍👍👍😜😜😜😜

  3. வாவ் சூப்பர். .. பாரி வேந்தன் சொன்னது சரி … நீச்சல் கத்துக்குனும் என்றால் தண்ணீரல இரக்கனும் … சூப்பர். .. ரஞ்சனி அருமையான தாய் மட்டுமில்லாமல் அருமையான மாமியார். ..

  4. M. Sarathi Rio

    மேகத்தின் மோனம்..!
    (அத்தியாயம் – 13)

    பாரி வேந்தன் நல்லாவே பையனை கைட் பண்றாரு…!கைட்டுங்கறதை விட நல்லாவே ஆர்மி ஆபிஸரா ட்ரில் வாங்குறாரு. இதனால முகிலனுக்கு கடுப்ஸ் & பீ பீ ஏறுதுன்னா, மேகாவுக்கு காமெடி ஷோ பார்க்குற ஃபீலிங் கொடுக்குதுன்னு நினைக்கிறேன். அதான் அடிக்கடி தன்னையறியாம சிரிச்சுட்டு, முகிலனை நல்லாவே கடுப்பேத்துறா.
    இப்பவாவது முகிலுக்கு அவனை வைச்சு காமெடி சர்க்கஸ் பண்ணுறாங்கறது
    புரிஞ்சதே… அந்த மட்டுக்கும்
    சந்தோஷம்.

    முகில் அப்பா சொல்றது உண்மை தான்…! மீன் பிடிச்சு கொடுக்குறதை விட, மீன் பிடிக்க கத்து தரது பெஸ்ட்.
    😃😃😃
    CRVS (or) CRVS 2797

  5. Priyarajan

    Spr going….. I love ranju ma😘😘😘😘😘 paari appa 👌👌👌👌👌 nalla guidance epavume pillaingalukku nallathu sonna avangalukku kaduppa tha irukkum but ena panrathu anbu kuda pala samayam kovam ah than velipaduthu…. Spr going waiting for nxt epi😍😍😍

  6. Anupama Ravichandran

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  7. மேகாவுக்கு சூப்பரான மாமியார் கிடைச்சிருக்காங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *