கல்யாணம்ங்கிறது ரொம்ப கஷ்டமான ப்ராசஸ்னு நினைச்சேன்… அது ரொம்ப சுலபமா நடந்து முடிஞ்சு எனக்கே எனக்குனு தனியா ஒரு வீடும் வந்ததால ‘ப்பூ! இவ்ளோ தானே மேரேஜ் லைஃப்!”னு ரிலாக்ஸா இருக்குறேன் நான்… பை த வே, மேரேஜ் ஆன பொண்ணு புகுந்த வீட்டுக்குப் போனதும் ஒரு இடத்துல இருக்குற செடியைப் பிடுங்கி இன்னொரு இடத்துல வச்சா வாடுற மாதிரி கொஞ்சநாள் வாட்டமா தான் இருப்பானு சொல்லுற சோ கால்ட் ஆறுதல்கள் எல்லாம் எனக்குத் தேவையே படல… எங்க வீட்டுல இருந்த மாதிரியே இங்கயும் என்னால லேட்டா எழுந்திருக்க முடியும்… அங்க அப்பாவும் நானும் வேலைய ஷேர் பண்ணிப்போம்… இங்க நானும் முகிலும் ஷேர் பண்ணிக்குறோம்… அப்பா அளவுக்கு இல்லனாலும் அவனும் ஏதோ கொஞ்சம் சுமாரா வேலை செய்யுறான்… பையன் பாவம், ஒரேயடியா மிரட்டவேண்டாம்னு அட்ஜெஸ்ட் பண்ணிட்டிருக்கேன் நானு.
-மேகா
முகிலனின் ஹோம்ஸ்டே குடித்தனத்துக்கு உகுந்த வீடாக மாறியிருந்தது. மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடு அது. தரை எல்லாம் கருப்பு மார்பிள் பதிக்கப்பட்டு அத்துணை குளிர்ச்சியாக இருந்தது.
லிவிங் அறையில் அழகுக்காக ஒரு கணப்பு பகுதி இருந்தது. அறைக்குள் வெப்பத்தைக் கடத்த மின்சார கணப்பு ஒன்றும் இருந்தது.
மேகவர்ஷிணி விழிகள் மலர அவற்றை பார்த்துக்கொண்டிருந்தாள்.
முகிலன் அவள் தோளைச் சுரண்டியவன் “இந்தப் பாத்திரத்தை இப்பிடியே வச்சுக்கிட்டு நிக்கப் போறியா? அங்க தான் கிச்சன் இருக்கு… ஃப்ரிட்ஜ்ல வச்சுட்டு வா… உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று கட்டளையிடும் தொனியில் சொல்லிவிட்டு அந்த வீட்டின் தாழ்வாரம் போன்ற அமைப்பில் கிடந்த இருக்கையை நோக்கி சென்றுவிட்டான்.
ரிசப்சன் லாபியாக இருந்திருக்கும் போல! மேஜைகளை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக மரத்தில் கலை வேறுபாடுகளுடன் கூடிய பெஞ்ச் ஒன்று போடப்பட்டிருந்தது அங்கே.
மேகவர்ஷிணி அவன் கைகாட்டிய திசையிலிருந்த சமையலறைக்குள் நுழைந்தவள் நவீன மாடுலார் வகையறா சமையலறையை ரசித்தவண்ணம் இட்லி மாவு அடங்கிய எவர்சில்வர் பாத்திரத்தை ஃப்ரிட்ஜுக்குள் வைத்தாள்.
தாகம் அடங்காத உணர்வு! தண்ணீர் பாட்டிலை எடுத்து மடமடவென தொண்டையில் சரித்தவள் “மேகா” என்ற முகிலனின் குரல் கேட்கவும் “இதோ வந்துட்டேன் முகில்” என்று பழக்கமற்ற புடவையைக் கையில் இலாவகமாகப் பிடித்தபடி ஓடினாள்.
அவன் அமர்ந்திருந்த மர பெஞ்சில் சில இன்ச் இடைவெளி விட்டு அவள் அமரவும் வேண்டுமென்றே தள்ளி அமர்ந்தான் முகிலன்.
அது மேகவர்ஷிணியை உசுப்பிவிட்டது!
“எனக்கு ஒன்னும் தொட்டதும் ஒட்டிக்குற வியாதி இல்ல முகில்… நீ என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணுற”
மூக்கு நுனி கோபத்தில் துடிக்க அவள் அடிக்குரலில் கூறவும் திகைத்தவன் பின்னர் தொண்டையைச் செருமிக்கொண்டான்.
“எல்லாம் ஒரு தற்காப்பு தான்… உன் ஃப்ரெண்ட், சித்தி, அத்தை எல்லாரும் படிச்சு படிச்சு சொன்ன அட்வைஸை மறந்துட்டியா?” என்று சொன்னவன் ஓரக்கண்ணால் பார்க்கவும் மேகாவும் கொஞ்சம் அமைதியானாள்.
“அவங்க நமக்குள்ள சம்திங் சம்திங் தான் நடக்குறப்ப தான் கவனமா இருக்க சொன்னாங்க… இப்பிடி ஒரேயடியா விலக்கிவைக்க சொல்லல” என்றாள் காட்டமாக.
முகிலனுக்கு அவளது கோபம் சிரிப்பை வரவழைத்தது. நியாயப்படி கோபத்தில் குதிக்கவேண்டியவன் அவனே! கிட்டத்தட்ட அவனுக்கு நடந்தது கட்டாயத்திருமணம்! அவனே மனதைத் தேற்றிக்கொண்டு இயல்பாக நடமாடிக்கொண்டிருக்கிறான்! இவளோ சின்ன சின்ன விசயத்துக்குக் கூட உம்மணாமூஞ்சி ஆகிவிடுகிறாள்!
கேலியாக நினைத்துக்கொண்டவன் “சரிம்மா! தள்ளி வந்துட்டேன்… போதுமா?” என்று அவளை நெருங்கி அமரவும் மேகவர்ஷிணியின் வதனம் சீரானது.
“சொல்லு”
“நமக்குக் கல்யாணம் ஆனதால என்னோட சுதந்திரம் பாதிக்கப்படாதுங்கிற சூரிட்டி எனக்கு வேணும்… நான் ஒரு வ்ளாகர்… வ்ளாகிங்குக்காக அடிக்கடி ஊர் சுத்துவேன்… அதெல்லாம் நீ கண்ட்ரோல் பண்ணக்கூடாது… உனக்கும் எனக்கும் இடையில எமோஷ்னல் பாண்டிங் உருவாகுற வரைக்கும் நீ என் கிட்ட நெருங்க முயற்சி பண்ணக்கூடாது”
வரிசையாகப் பட்டியலிட்டவனை வினோதமாகப் பார்த்தாள் மேகவர்ஷிணி. பின்னர் கையுயர்த்தி நிறுத்து என பணித்தவள்
“இந்த டயலாக் எல்லாம் நான் சொல்ல வேண்டியது மிஸ்டர் முகிலன்”
முகிலன் அவளை முறைத்துவிட்டு “எப்பவும் உன் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் நீயே பாத்துக்கணும்… சும்மா நைநைனு என்னை நச்சரிக்கக்கூடாது… அதே மாதிரி என் சம்பந்தப்பட்ட வேலையை நானே பாத்துப்பேன்… உன் உதவி எனக்குத் தேவையில்ல”
“இதுல்லாம் வீட்டு வேலைக்கு அப்ளிகபிள் இல்ல… இங்க நீ எல்லா வேலையையும் ஷேர் பண்ணிக்கணும்”
மாமியார் சொன்ன பாயிண்டை மறக்காமல் இடைச்சொருகினாள் மேகவர்ஷிணி.
“ஒன்னு கூட மறக்கல?” வேண்டாவெறுப்பான சிரிப்போடு அவன் கேட்க
“எனக்கு யானை மாதிரி மெமரி அவர்” என்று நெற்றியின் பக்கவாட்டில் தட்டி புருவம் உயர்த்தினாள்.
“சரி… சரி”
கடுப்பாகச் சொன்னவன் “இன்னொரு முக்கியமான விசயம்… எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சுனு சோசியல் மீடியால என் ஃபேன்ஸ் கிட்ட பேசுறதை நீ தடுக்கக்கூடாது” என்றான்.
மேகவர்ஷிணி மண்டையை உருட்டியவள் “எனக்கும் ஒரு கண்டிசன் இருக்கு” என்றதும் அவனது கண்களில் கவனம்!
“எந்தக் காரணத்தைக் கொண்டும் நமக்கான பெர்ஷனல் மொமண்ட்ஸ் எதையும் நீ கண்டெண்ட் ஆக்கிடக்கூடாது”
“இப்ப வரைக்கும் நான் அந்த மாதிரி செஞ்சதில்ல”
“ஏன்னா உனக்குக் கல்யாணம் ஆகல… ஆனா இப்ப மேரீட் மேன்… சோ ஹனிமூன் வ்ளாக், ஒய்புடன் ஒரு நாள், ஹோம் டூர், கிச்சன் டூர், பாத்ரூம் டூர்னு எதையாச்சும் ஆரம்பிச்சதா தெரிஞ்சுது, விளைவுகள் மோசமா இருக்கும்”
ஆட்காட்டிவிரலால் பத்திரம் காட்டி எச்சரித்தாள் அவள். முகிலனுக்குச் சிரிப்பாக இருந்தது. இப்போது வரை அவனுக்கு அந்த எண்ணமில்லை. எனவே அவளது நிபந்தனையை ஏற்றுக்கொண்டான்.
“சரி இப்பிடியே உக்காந்திருந்தா மதியம் சாப்பாட்டுக்கு என்ன செய்யுறது? வா வேலைய ஆரம்பிப்போம்”
இருவரும் சேர்ந்து சமைக்க ஆயத்தமானார்கள்.
முதல் பிரச்சனையே என்ன சமைப்பது என்பதில்தான் ஆரம்பித்தது.
“சாம்பார் வைக்கலாம் முகில்”
“சாம்பாரா? உவ்வேக்… கல்யாணத்துல சாப்பிட்டுப் போரடிச்சிடுச்சு… வேற எதாச்சும் செய்வோம்”
“வேற என்ன? வத்தக்குழம்பு?”
“சை! அதை மனுசன் சாப்பிடுவானா? ஏன் நம்ம பிரியாணி செய்யக்கூடாது?”
“எனக்குப் பிரியாணி செய்யத் தெரியாதே”
மேகவர்ஷிணி உதடு பிதுக்கவும் “டோண்ட் வொர்ரி… நான் யூடியூப் பாத்து சமைக்குறேன்… நீ வெஜ்ஜீஸ் கட் பண்ணு” என்று அமர்த்தலாக உரைத்தவன் ஏப்ரன் அணிந்து தயாரானான்.
மேகவர்ஷிணி காய்கறிகளை வெட்டிக் கொடுக்க சமையல் சுலபமென ப்ரஷர் குக்கரை அடுப்பில் வைத்தவன் நெய்யை ஊற்றி இலவங்கப்பட்டை, ஏலம், கிராம்பு போட்டுத் தாளிக்க ஆரம்பித்ததும் கிராம்பு வெடித்து அவன் கையில் படவே “அவுச்” என்று வலியில் கத்திவிட்டு ஸ்பேச்சுலாவைப் பறக்கவிட்டவன் கையை உதறினான்.
பறந்த ஸ்பேச்சுலாவோ கொஞ்சம் விட்டிருந்தால் மேகவர்ஷிணியின் தலையைப் பதம் பார்த்திருக்கும்.
அனிச்சையாகக் குனிந்து தன் தலையைக் காப்பாற்றிக்கொண்டவள் “அடப்பாவி! உன்னைச் சமைக்கச் சொன்னதுக்கு என் மண்டையை உடைக்க பாத்தியே” என்று கலவரத்துடன் உரைக்க
“போடி! என் கைல எண்ணெய் தெறிச்சிடுச்சு… வலி உயிரு போகுது” என்று அழாதக் குறையாகக் கூறினான் முகிலன்.
அவனை முறைத்தவள் “சிம்ல வச்சிட்டு பண்ணு முகில்… அடுத்து ஆனியன், ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட் போடு” என்று விரட்டினாள்.
அவனும் வராத கண்ணீரைத் துடைத்துக்கொண்டு “முகிலைப் பிடிச்சு கரண்டிய குடுத்து சமைக்க சொல்லுகிற குடும்பம்” என்று சோகமாகப் பாடிக்கொண்டே சமைத்தான்.
யூடியூபில் சொன்னபடி சமைத்து முடித்த சதிபதி இருவரும் சாப்பிட்டபோது மிகவும் திருப்தியாக உணர்ந்தார்கள்.
இதே வேலையை தானே தினமும் அன்னை செய்வார். ஒரு கிராம்பு வெடித்து கையில் சிறு காயம் ஏற்பட்டதே இப்போது வரை எரிச்சல் எடுக்கிறதே! தினந்தோறும் இதை செய்யும் பெண்கள் இதை எல்லாம் பொறுத்துக்கொண்டு தானே மறுநாள் சமைக்கத் தயாராகிறார்கள்!
முகிலனுக்கு வீட்டரசியாக இருக்கும் பெண்கள் மீது பிரமிப்பும் மதிப்பும் வந்தது.
சாப்பிட்டதும் மேகா காயத்திற்கு போடும் ஆயின்மெண்டோடு வந்தாள். முகிலன் என்னவெனப் பார்க்கும்போதே அவனது புறங்கையில் இருந்த சிறு காயத்தின் மீது ஆயின்மெண்டைத் தடவினாள்.
காயத்தின் எரிச்சலுக்கு ஆயின்மெண்ட் குளிர்ச்சியாக இருந்தது. ஆரஞ்சு வண்ண சேலையை இடையில் செருகிக்கொண்டு அருகே அமர்ந்து மருந்து போட்டுவிட்டவளை ஆழ்ந்து நோக்கினான் முகிலன்.
அவனது புறங்கையை எடுத்து ஊதியவள் “இனிமே வலிக்காது… நீ வேலை செஞ்சு டயர்ட் ஆகிருப்ப… படுத்துக்க முகில்” என்று சொல்லிவிட்டு நகரப்போனவளைக் கை பிடித்து அமர வைத்தவன் “தேங்க்ஸ்” என்று புன்னகைக்கவும் செல்லமாக அவனது தலையில் குட்டினாள் அவள்.
“பொண்டாட்டிக்கு எப்பிடி தேங்க்ஸ் சொல்லணும்னு கூட தெரியல… மக்கு புருசனா இருக்கியே முகிலு”
இராகமாக இழுத்து அவள் சொல்லவும் முகிலன் சத்தமாகச் சிரித்தான்.
“என் மனசாட்சி கூட அடிக்கடி இப்பிடி தான் என்னைச் செல்லமா கூப்பிடும் மேகா”
வேறு எந்த உணர்வுகளுமின்றி நட்பாகத் தொடர்ந்த உரையாடலுடன் தனிக்குடித்தனத்தில் முதல் நாள் ஆரம்பித்தது மேகவர்ஷிணிக்கும் முகிலனுக்கும்.
அன்று மாலையே இருவரும் சென்னைக்குப் பயணப்பட்டார்கள். மறுநாள் கல்லூரியில் சிலவேலைகள் பாக்கி இருக்கிறதல்லவா! அது போக சென்னை வீட்டில் இருக்கும் பொருட்களை இடமாற்றம் செய்யவேண்டும்.
இருவரும் மூன்று நாட்களுக்கு வேண்டிய உடைகளை எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தவர்கள் அந்த வீட்டை ஒதுங்க வைத்து உறங்கவே பன்னிரண்டு ஆகிவிட்டது. உறங்கும் முன்னர் கணவனின் கைக்காயத்துக்கு மறக்காமல் மருந்திட்டாள் மேகா.
“இந்த ஆயிண்மெண்ட் டியூபை எடுத்துட்டு வந்தியா?”
“ப்ச்! இது என்ன கேள்வி? கையில இருக்குற காயம் உளர்ந்து போற வரைக்கும் மருந்து போடணும்ல”
“என் கைக்காயத்தை இவ்ளோ தூரம் ஞாபகம் வச்சிருக்கியா?”
“ஏன் தற்கு… தத்தித்தனமா இப்பிடி ஒரு கேள்வி?”
தற்குறித்தனம் என்பதைச் சொல்ல வந்தவள் பாதியில் மாற்றியதை அறிந்தவன் மென்மையாகப் புன்னகைத்தான்.
கண்களைச் சுருக்கியவன் “ப்ச்! எனக்காக நீ யோசிக்குறதை பாக்குறப்ப மனசுக்குள்ள குளுகுளுனு இருக்கு… ஏன்னு தெரியல” என்றான்.
“ஏசி தான் காரணம்”
மேகவர்ஷிணி சிரிக்காமல் பதில் சொல்லவும் போலி முறைப்போடு படுக்கையில் விழுந்தான் முகிலன்.
மறுநாள் விடியலில் கல்லூரிக்குச் செல்ல தயாரான மேகா “இன்னைக்கு ஸ்விகில ஆர்டர் பண்ணி சாப்பிட்டுடு முகில்… நான் மதியம் தான் வருவேன்… நானும் ரம்ஸ் பேபியும் ஹோட்டல்ல சாப்பிட்டுப்போம்” என்று சொல்ல
“கொஞ்சம் வெயிட் பண்ணு… நானும் வந்துடுறேன்… ரெண்டு பேரும் சேர்ந்தே காலேஜுக்குப் போவோம்” என்று அவளோடு கிளம்பத் தயாரானான் முகிலன்.
அவசரமாக மறுத்த மேகவர்ஷிணி “என் வேலைய நானே பாத்துக்குறேன் முகில்… அது தானே நமக்குள்ள இருக்குற டீல்” என்று புன்னகையோடு சொல்லிவிட்டு அவனது பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பிப் போய்விட்டாள்.
அவன் ஸ்தம்பித்துப் போய் நிற்பதைக் கூட கவனிக்கவில்லை அவள்.
முகிலன் தனது வார்த்தைகளை மீண்டும் மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தான். நான் சொன்னதைத் தானே அவள் திருப்பிக் கூறினாள். ஏன் எனக்குள் வெறுமையுணர்வு எழுகிறது?
புறங்கை காயம் உலர்ந்து போய் இருந்தாலும் சுருக்கென வலிப்பது நிற்கவில்லை.
உடனே மொபைலில் அன்னையின் எண்ணுக்கு அழைத்தான்.
ரஞ்சனா ஆசையாய் மகனிடம் பேச ஆரம்பித்தார்.
“ஒன்னும் சிரமம் இல்லையே முகில்… மேகாம்மா காலேஜுக்குப் போயிட்டாளா?”
“போயிட்டாம்மா… என்னை மட்டும் தனியா விட்டுட்டுப் போயிருக்கா… நேத்து கிராம்பு வெடிச்சு கையில காயமாயிடுச்சும்மா… காயப்பட்ட புருசனைத் தனியா விட்டுட்டுப் போறோம்ங்கிற குற்றவுணர்ச்சி இல்லாம கிளம்பிட்டா உங்க மருமக”
குற்றப்பத்திரிக்கை வாசித்த மகனை எண்ணி ரஞ்சனாவுக்குச் சிரிப்பு வந்தது.
“டேய் மகனே! நீ இருக்கியே! இருபத்தைஞ்சு வயசு பையன் மாதிரியா பேசுற? மோசம்டா நீ” என்று சிரித்தார்.
“மா! சிரிக்காத… உன் மகன் இங்க வலியோட இருக்கேன்மா”
போலியான அழுகையோடு சமையலறைக்குள் புகுந்தவன் இண்டக்சனில் வெந்நீர் வைத்தான்.
“இப்ப என்ன பண்ணுறடா?”
“காபிக்குத் தண்ணி சுட வச்சிருக்கேன்மா… மானிங் ப்ரேக்ஃபாஸ்ட் ஸ்விகில தான் போடப்போறேன்… நீ சாப்பிட்டியாம்மா?”
அன்னையும் மகனும் பேசும்போதே பின்னே பாரிவேந்தனின் குரல் கேட்டது.
“அப்பா என்னமோ கேக்குறார்… என்னனு பாரும்மா” என அழைப்பைத் துண்டிக்கப் போனவனைத் தடுத்தார் ரஞ்சனா.
“அவர் மேல இன்னும் கோவம் குறையலையாடா?” வாஞ்சையாகக் கேட்டார் ரஞ்சனா.
“போம்மா… அவர் எடுத்த முடிவால என் லைஃப் தலைகீழா மாறிப்போயிடுச்சு… எங்க எப்பிடி இருந்தவன் நான்? இப்ப இங்க வந்து மேகாக்கு வாட்ச்மேன் வேலை பாத்துட்டிருக்கேன்” போலியாய் சலித்துக்கொண்டான்.
“அப்பிடியா? இப்ப தான் என்னைத் தனியா விட்டுட்டுப் போயிட்டானு அழாதக்குறையா சொன்ன”
சரியான பாயிண்டை ரஞ்சா பிடித்ததும் முகிலன் என்ன பதிலளிப்பது என்று புரியாமல் அமைதியானான்/.
“நீ குடும்ப வாழ்க்கைக்குப் பழக ஆரம்பிச்சிட்ட முகில்… மேகா இல்லாத தனிமை உனக்குப் பாரமா தெரிய ஆரம்பிக்குறது தான் அதுக்கான அறிகுறி”
ரஞ்சனா சொல்வது உண்மை தானோ? நான் மேகாவுடன் நேரம் செலவளிக்கவும் அவளுடன் இருக்கவும் விரும்புகிறேனா? அவள் இல்லாத பொழுது சுமையாய்த் தோன்றுகிறதே! அதற்கான காரணம் இதுதானா?
அன்னையுடன் பேசி முடித்துவிட்டுப் பால் கலக்காத காபியை அருந்திபடியே சிந்திக்க ஆரம்பித்தான் முகிலன்.
Super super super interesting 😍😍😍😍😍😍😍
Payapullaiku ipo dhan family man brain yosikudhu pola
மேகத்தின் மோனம்..!
(அத்தியாயம் – 14)
அடப்பாவி…! அவன் மனசு இப்ப பொண்டாட்டியை தேடத் தொடங்கியாச்சுன்னு அவனுக்கே தெரியலை. அந்த லஷ்ணத்துல இருக்குது அவனோட தெளிவு. சும்மாவா
சொன்னாங்க செலிப்ரேட்டிஸ் எல்லாம் அத்தனை அறிவாளியும் கிடையாது, சாலச் சிறந்தவங்களும் கிடையாது. ஜஸ்ட் ஃபார் ட்விங்கிள் ஸ்டார்ஸ்.
பரவாயில்லை, அப்பா கிட்ட மட்டும் தான் அவனோட மூர்க்கத்தனமும், முசுட்டுத்தனமும் அளவுக்கு மீறி எக்ஸ்போஸ் ஆகுது. பட், அம்மா எதை சொன்னாலும் நிறுத்தி நிதானமா கேட்டுக்கிறான்.
அப்படி கேட்டுக்கிட்டதாலத் தானே, குக்கிங் வேலையை ஷேர் பண்ணிக்கிட்டான். அதுமட்டுமில்லாம, சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நா பழக்கம்ங்கிற மாதிரி….
சமையலும் சில பல சோதனைகளுக்கு அப்புறம்…
மாஸ்டர் செஃப் ஆகிடலாம்ன்னு புரிஞ்சிடும். இதுல வேலை செஞ்சதுக்கு அடையாளமா விழுப்புண் எல்லாம் வாங்கி இருக்கான். (எண்ணெய்ல பொறிச்ச கிராம்பு எகிறி விழுந்ததை சொன்னேன்) இதுல இருந்து என்ன தெரியுதுன்னா, அப்பா பக்கம் பக்கமா பேரகிராப் வைஸ் சொல்ற அறிவுரைகளை விட, அம்மா அழகா ரெண்டே வரியில திருக்குறள் கணக்கா சொல்ற எதார்த்தம் தான் மனசுல பதியுதுன்னு நினைக்கிறேன்.
தவிர, நம்ம முகிலனும் குட்பாய் தானே…! என்ன கொஞ்சம் முசுட்டுக் குழந்தை அவ்வளவு தான்..!
போக, போகப் புரிஞ்சிப்பான்
அப்பாவோட ஆதங்கத்தையும்,
மேகாவோட லவ்வையும்…
அப்படித்தானே முகில்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
சூப்பர்
Ha ha !! Mukil entered marriage life
Oruthi un mela akkarai pattathum tha ellam thonumada unaku ava panrathula santhosa padura la
Epaum nama solra vaarthaiye namakku ethir la irukaravanga sollum pothu kashtama irukkum…. Spr going waiting for nxt epi😍😍😍😍😍
Mugil aniyathuku tubelight ah irukan da saamy ivan realise panni love pannathu kula Megha kezhavi ah aagama irundha seri
Ivangaloda first day thanikiduthanam azhaga than iruku
Mulusaa mega purushan ah maarikkittu erukkura mughil paiyya 😛😛😛😛
குடும்ப இஸ்திரன் ஆகத் தயாராகிட்டியா முகில் 👌👌👌👌
சூப்பர். .
Nice epi sis 👌👍😍 mukil eppo dhan da nee correct ah yosikira eppdiye sariyana route la po pa😉🥰😍
Superrrrr Superrrrr superrrrrr 👌👌👌👌👌
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
அருமையான பதிவு
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰👌🥰👌👌👌👌👌👌👌👌👌
Mugil 😍
Super ma