தீரனின் தென்றல் – 49
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
தென்றல் துணிகளோடு அபூர்வா துணிகளையும் ஒரு பேக்கில் எடுத்து அடுக்கி கொண்டு இருந்தார் பொன்னி.
“அம்மா… எதுக்கு இப்போ ட்ரெஸ் பேக் பண்ணிகிட்டு இருக்க?” என்று தென்றல் கேட்க
“ம்ம்… உன் புருஷன் வீட்டுக்கு போறதுக்கு…” தென்றல் முகத்தைப் பாராது பொன்னி கூற
“எது புருஷன் வீட்டுக்கா?” என்று தென்றல் விழிக்க
“என்னடி முழிக்கிற? மாப்ளை உன்னை எப்படியாவது சமாதானம் பண்ணி உன்கூட வாழ அவ்வளவு பெரிய வீடு வாங்கி வைச்சிருக்காரு… நியாயமா நீ கல்யாணம் முடிஞ்ச உடனே அந்த வீட்ல போய் தான் விளக்கு ஏத்தி இருக்கனும்.. சரி சித்ரா மதன் வாழ்க்கை மேல உள்ள அக்கறைல ஒரே நாள்ல ரெண்டு கல்யாணம் னு சொல்லிட்ட…
இங்கேயும் அங்கேயும் அலைய முடியாது னு மாப்ளையும் இந்த வீட்டுக்கே வந்து ரெண்டு நாள் இருந்தாரு. இன்னைக்கு உனக்கு கல்யாணம் ஆகி மூனாவது நாள் நாளும் இன்னைக்கு நல்லா இருக்கு.. அதான் மாப்ளை வீட்டுக்கு கிளம்பு…” என்று பொன்னி கூற
“கிளம்பு கிளம்பு ன்னு சொன்னா நான் மட்டுமா போக நீயும் புவிகுட்டியும் இல்லாம நான் போகமாட்டேன் எங்கேயும்…” என்று தென்றல் கூற
“உன்னைய எங்கேயும் தனியா அனுப்பி வைக்கல எதுக்கு இங்க சோபால படுக்க வச்ச மாதிரி அங்கேயும் மாப்பிள்ளை தனியா கஷ்டப்படுத்தவா? நீ உன் மனசு மாறுற வரைக்கும் நான் உன் கூட தான் இருக்கேன் மாப்பிள்ளையோட பாதுகாப்புக்கு…” என்று பொன்னி கூற முடிந்த மட்டுக்கும் தாயை முறைத்தாள் தென்றல்.
“வர வர என்னை விட உனக்கு அவன் தான் முக்கியமா இருக்கான்.. இல்லையா மா?” சிறு பிள்ளை போல பொறாமை கொண்டு தென்றல் கேட்க
“ஏய்…. முதல்ல மாப்ளைய அவன் இவன் னு கூப்பிடுறதை நிறுத்து..” பொன்னி அதட்ட
“ம்க்கும்…” என்று முகத்தை திருப்பி கொண்டாள் தென்றல். உள்ளே நின்று இதை கேட்டுக் கொண்டு இருந்த ஆதீரன் என் “தென்னு என்கிட்ட இருக்குற உரிமைய மறக்காம தான் இப்படி பேசுறா… பாவம் அத்தைக்கு அது புரியலை…” என்று தன் மனதோடு சொல்லிக் கொண்டு அபூர்வாவிற்கு உடை மாற்றி அழைத்து வந்தான் ஆதீரன்.
இவர்கள் கிளம்பி வர மதன் சித்ராவும் கிளம்பி வந்திட குமாரும் ரூபியும் கூட வந்தனர். “சரி மாப்ளை… நல்ல நேரத்துல கிளம்பனும் போகலாமா?” என்று பொன்னி கேட்க
“ஏன் மச்சான்… இத்தனை நாள் இங்க இருந்த அப்போ அந்த வீடு ஆள் புலக்கம் இல்லாம தூசியாகி இருக்குமே… நேத்தே சொல்லிருந்தா நான் போய் க்ளீன் பண்ணி வைச்சிருப்பேன்ல…” குமார் சொல்ல
“தேவையில்லை மச்சான்… வீடு பக்காவா இருக்கு.. வாங்க போகலாம்..” என்று ஆதீரன் காரை ஸ்டார்ட் செய்ய பொன்னி பின்னால் அமர அபூர்வா “நான் முன்னாடி தான் உக்காருவே..” என்று அடம் பிடிக்க
“குழந்தை தனியா உட்காந்தா ப்ரேக் போடும் போது முட்டிக்க போறா… நீ குழந்தையை மடியில வச்சு உட்காரு..” என்று கூறிய பொன்னி அத்தோடு விடாமல் இறங்கி தென்றலை முன் இருக்கையில் அமர வைத்து விட்டே பின்னால் சென்று அமர்ந்தார்.
குமாரும் மதனும் அவரவர் துணைவியரோடு தங்கள் பைக்கில் வர ஆதீரன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் அனைவரும்.
“வா.. தென்றல்.. அத்தை வாங்க” என்று ஆதீரன் காரில் இருந்து இறங்கி அழைக்க உள்ளே நுழையப் போனவர்களை “ஆதீ தம்பி… ஒரு நிமிஷம்” என்று நிறுத்தினார் கமலம்.
“ஹை.. கமலாம்மா வந்துட்டீங்களா? நீங்க வந்ததை பாஸ் கூட சொல்லவே இல்லை…” என்று மதன் மகிழ
“நேத்து தான் வந்தேன் தம்பி.. ஆதீ தம்பி சொல்லுச்சு ஒரு வழியா ரெண்டு ஜோடியும் ஒன்னு சேர்ந்தாச்சு… ரொம்ப சந்தோஷம் தம்பி.. என்ன கடைசி நேரத்துல என் அக்கா பேத்திக்கு பிரசவ வலி ஆஸ்பத்திரி ல சேர்த்தாச்சு அதான் உங்க கல்யாணத்தை என் கண்ணால பார்க்க முடியலை..” என்று கமலாம்மா வழக்கம் போல வெகுளியாக பேசிக் கொண்டே இருக்க
“அம்மா… அதெல்லாம் உள்ளே போய் மத்ததை பேசலாம்” என்று மதன் சொல்ல
“அட இருங்க ப்பா… கல்யாணம் ஆகி முதல் தடவை வரீங்க… உங்க நாலு பேருக்கும் ஆரத்தி எடுக்கனும்..” என்று கூறியபடியே ரூபியை பார்த்த கமலம் “அம்மாடி… ஆதீ தம்பி சொல்லிருக்கே அதோட தங்கச்சி மாதிரி னு அது நீதான?” என்றிட
“ஆமா ம்மா.. என் தங்கச்சி என் மச்சான் குமாரோட மனைவி ரூபிணி..” என்று அறிமுகம் செய்தான் ஆதீரன்.
“சரி.. நீ வாம்மா… அங்க தட்டுல ஆரத்தி கரைச்சு வைச்சிருக்கேன் எடுத்திட்டு வந்து இவங்களுக்கு ஆரத்தி எடு…” என்று சொல்ல புன்னகையோடு “சரி” என்று சொல்லி நால்வரையும் நிற்க வைத்து திருஷ்டி எடுக்க ஆதீரன் அபூர்வாவை தூக்கிக் கொண்டான்.
“இப்போ உள்ளே வாங்க..” என்று கமலம் அழைக்க அனைவரும் வந்தனர். தென்றல் அருகில் வந்து நின்று அவள் கன்னத்தை வருடியவர் “ஃபோட்டோ ல நீங்க காட்டுனதை விட நேர்ல ரொம்ப அழகா இருக்கு தம்பி… அம்மாடி தென்றல்… நான் தம்பி சென்னைக்கு வந்ததுல இருந்து தனியா ரூம் எடுத்து தங்கி இருந்தப்போ இருந்தே நான் தான் சமைச்சு கொடுக்குறேன் தம்பிக்கு… இத்தனை வருஷத்துல ஆதீ தம்பிக்கு இவ்வளவு அழகா சிரிக்க தெரியும் னு இப்போ தான் எனக்கு தெரியுது…”
“ரொம்ப சந்தோஷமா இருக்கு மா... உங்க ரெண்டு பேரையும் இப்படி ஒன்னா பார்க்க..” என்று அகம் மகிழ்ந்து கூறியவர் “இவ தான் உங்க பொண்ணா ஆதீ தம்பி.. அப்படியே அம்மாவ உரிச்சு வைச்சு பிறந்திருக்கு..” என்று கன்னம் வழித்து திருஷ்டி கழித்த கமலத்தை மேலும் கீழும் பார்த்த அபூர்வா
“அப்பா.. இது யாரு?” என்று கேட்க
“உன் அம்மாவோட அம்மா பொன்னி அம்மம்மா இருக்காங்கல்ல.. அதேப்போல இவங்களும் உனக்கு ஒரு பாட்டி… இந்த அப்பாக்கு அம்மா மாதிரி னு வைச்சுக்கோ…” என்று ஆதீரன் சட்டென்று சொல்லி இருக்க வேலை செய்யும் தனக்கு ஆதீரன் தந்த மரியாதை எண்ணி பூரித்து போனார் கமலம்.
“மாப்ளை… சாமி ரூம் எங்க இருக்கு? விளக்கேத்தி சாமி கும்பிடனும் ல..” என்று பொன்னி கூற
“எல்லாமே தயாரா இருக்கு ங்க.. நீங்க தென்றலோட அம்மா தானே… வாங்க.. புள்ளைங்கள கூட்டிட்டு வாங்க சாமி கும்பிடலாம். அடுத்து சாப்பிட கூட எல்லாமே ரெடி பண்ணிட்டேன்…” என்று பேசிக் கொண்டே பூஜை அறைக்கு அழைத்துச் செல்ல
“தென்றல் விளக்கேத்து…” பொன்னி கூற
“நான் ஏன் மா?” என்று தென்றல் தயங்க
“ஏய்.. என்னடி இது? போ… போய் விளக்கேத்து” என்று அதட்டலாக கூற அமைதியாக விளக்கேற்றி சாமி கும்பிட “தம்பி பொண்டாட்டிக்கு குங்குமம் எடுத்து வைங்க.. மதன் தம்பி நீங்களும் தான் உங்க பொண்டாட்டிக்கு நீங்க குங்குமம் வைச்சு விடுங்க...” என்று கமலா கூற ஆதீரன் தன் மனைவியை கண்ணோடு கண் பார்த்து அவளின் பிறை நெற்றியில் குங்குமம் வைத்து விட அவளோ இவனை பார்ப்பதையே தவிர்த்துக் கொண்டாள்.
சித்ரா அழகாக வெட்கப்பட மதன் சொக்கி போனான்.
“சரி சாப்பிடலாம் வாங்க..” என்று கமலாம்மா சொல்ல முதல் ஆளாக “உங்க சமையலை சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு தெரியுமா?” என்று ஓடி வந்து அமர்ந்தான் மதன்.
அன்று இரவு வரை நண்பர்கள் இருக்க பொழுது மகிழ்வாகவே நகர்ந்தது அனைவருக்கும்…
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️

Interesting
👌👌👌💕💕💕💕
Super