அத்தியாயம்-21
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
சௌந்திரராஜன் அடுத்தடுத்து பேசியதில், ரஞ்சித் பேசியதை காட்டிலும், தந்தை மீது கோபம் பெருகியது.
“என்னப்பா பேசறிங்க? ரஞ்சித் கெடுத்ததால அவனையே கல்யாணம் பண்ணிக்கணுமா? நீங்க சுயநினைவோட பேசறிங்களா? அறிவு ஏதாவது இருக்கா இல்லையா?” என்று கத்தினாள்.
மணிமேகலையோ, “பாரதி… என்ன வாய் நீளுது. அப்பாவை பார்த்து அறிவிருக்கானு கேட்கற.
அந்த பையன் செய்தது தப்பு. காதலிச்ச பொண்ணு கிடைக்காதுனு உன்னிடம் அத்துமீறிட்டான். அவன் எங்களிடம் காலை பிடிச்சி மன்னிப்பு கேட்டுயிருக்கான். உங்கப்பாவும் நானும் செருப்பால அடிச்சி விரட்டினோம். நல்லா யோசித்து சொல்லுங்கன்னு அவங்க அப்பா சொல்லவும், நிதானமா யோசித்தோம்.
உன்னை கட்டிக்கறதா சொல்லறான். உன்னை இப்பவும் விரும்பறான். நாங்க பார்த்த பிரஷாந்தை விட வசதியானவனா தெரியறான். உன்னிடம் தப்பா நடந்துக்கிட்ட தவறை தவிர, அவன் இனி காலம் முழுக்க உன்னை நல்லா பார்த்துப்பான்.” என்றார்.
பாரதி தன் அன்னையா இப்படி பேசுவது என்றா ஆச்சரியப்பட, சௌந்திரராஜனோ “அவன் நினைச்சிருந்த செய்த தப்பை மறந்து எப்படினாலும் வாழலாம். ஏன்னா சட்டத்துக்கு தேவையான ஆதாரம் எதுவும் இல்லை.
அப்படியிருந்தும் அவன் உன்னை தேடி குடும்பமா வந்து மணக்க கேட்கறான். நம்ம சம்மதிச்சா கல்யாணம் சீக்கிரம் வச்சிடுவாங்க.
நீ காலம் முழுக்க வேலைக்கு கூட போக தேவையில்லை. ராணி மாதிரி வாழலாம். செய்த தப்பை சுட்டிக்காட்டி அவனை அடக்கி, உன் காலுக்கு கீழ விழ வைக்கலாம். எதிர்காலத்தில் புகுந்த வீட்ல நீ தான் ராணி. உனக்கு சொந்தமா வீடு கூட எழுதி தருவதா ரஞ்சித்தோட அப்பா சொன்னார்.” என்றதும் பாரதி இகழ்ச்சியாக உதட்டை வளைத்தாள்.
பாரதி நிதானமாக, “ஆக… என்னை விபச்சாரியா போன்னு சொல்லறிங்க?” என்று கேட்கவும் மணிமேகலை சௌந்திராஜனும் “பாரதி” என்று அதட்டினார்கள்.
ஓரிருவர் திரும்பி பார்க்க குரலை குறைத்தனர்.
“பின்ன என்னம்மா… அவன் என்னை லவ் பண்ணலை. லஸ்டா பார்த்துட்டான். தான் காதலிக்கற பொண்ணு தன்னை காதலிக்கலைன்னாலும் நல்லா வாழணும்னு தான் எவனாயிருந்தாலும் நினைப்பான்.
ஆனா ரஞ்சித் நான் எவனை கல்யாணம் பண்ணினாலும் ஓகே. என்னை எச்சிப்படுத்திடணும், அடைஞ்சிடணும்னு நோக்கத்துல ரேப் பண்ணிருக்கான்மா.
உன்னால எப்படிம்மா என்னை அவனோடவே வாழ சொல்லற.
எனக்கு மயக்கத்தை தந்து கற்பழிச்சாலும், அவன் என்னை தொட்டு தடவியதை நினைச்சி பல நாள் தூங்காம எழுந்து உட்கார்ந்திருக்கேன். உங்களுக்கு தெரியும் தானே?
என்னை ஹாஸ்பிடல்லயும், அங்கயிருந்து அழைச்சிட்டு வீட்டுக்கு வந்தப்பிறகும் குளிப்பாட்டினப்ப என் உடம்புல நாய் மாதிரி கடிச்சி வச்ச அவனோட பற்தடத்தை பார்த்தும் எப்படிம்மா அவனையே கல்யாணம் பண்ண சொல்லற?
என்னை கெடுத்தவனை சட்டத்துக்கு முன்ன தண்டனை வாங்கி தரமுடியலையேனு ஒவ்வொரு நிமிஷமும் எரிச்சலாயிருக்கு. நீங்க என்னடான்னா அவனுக்கு என்னை கல்யாணம் பண்ணி வச்சி அப்ரிசெட் பண்ண பார்க்கறிங்க.
ஏன் பாராட்டு விழா எடுங்களேன்.” என்று கூறவும் சௌந்திரராஜன் அமைதியானார்.
“இல்லைடி… நீ பிரஷாந்திடம் அவரையும் கல்யாணம் பண்ண மாட்டேன். யாரையும் கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதும், எங்களுக்கு மனசுல பயம் வந்துடுச்சு. உன்னை கல்யாணம் பண்ண முன் வந்த பிரஷாந்துக்கு உன்னை பத்தி தெரியும். அவரை மறுத்துட்ட. இந்த ரஞ்சித் தான் உன்னை கெடுத்தது. சரி அவனையே கல்யாணம் பண்ணிட்டா பிற்காலத்தில் மத்தவங்க யாரோட சுடு சொல்லுக்கும் விழ மாட்டோம். கூடவே எதுனாலும் அவனே எல்லாத்தையும் சமாளிக்க உன்னை நல்லா பார்த்துப்பான்னு தப்பா நினைச்சோம். நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிப்பேன் வாக்கு தந்தாலோ, அல்லது எங்களோட வந்துட்டா கூட நாங்க இப்பொழுதுக்கு நிம்மதியா இருப்போம் பாரதி.
உன்னை தனியா விட்டுட்டு நீ தற்கொலைக்கு முயற்சி பண்ணறியா? உயிரோட இருக்கியா இல்லையா? இதெல்லாம் நினைச்சி நினைச்சி பைத்தியம் பிடிக்குதுடி. நானும் உங்கப்பாவும் டாக்டரை கூட பார்த்தோம். மனநல டாக்டர்.
அவங்க எங்க மேல தான் தப்பு சொன்னாங்க. நீ தைரியமா மீண்டு வர தான் தனியா இருப்பதா எடுத்து சொன்னாங்க. ஆனாலும்… மனசு கேட்கலைடி. ஒன்னு கொஞ்ச நாளைக்கு பிறகு யாரையாவது கல்யாணம் பண்ணறேன்னு பொய்யாவது சொல்லு. இல்லை.. எங்களோட வீட்டுக்கு வா. எங்களோட தங்கு. எனக்கு அது போதும்.” என்று மணிமேகலை உரைத்ததும் தந்தையை பார்வையிட்டாள்.
“நீ கூட இருந்தா போதும். நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன். இத்தனை நாளா பெத்த பொண்ணு, கற்பிழந்தவளாச்சேனு உன்னை பார்த்தேன். ஆனா இதுல உன் சம்பந்தம் இல்லைனும், நீ அதுலயிருந்து மீள முதல்ல நாங்க உனக்கு துணையா இருக்கணும்னு இன்னிக்கு தெளிவா புரிஞ்சுக்கிட்டேன்.” என்றார்.
மகள் கெடுக்கப்பட்டதாக தகவல் வந்து சேர்ந்த போது, வெறும் உதட்டு வீக்கம், கழுத்தில் சிறு சிறு சிவப்பு தடயம் என்று மட்டும் கண்டுயிருந்தார்.
மணிமேகலை தானே உள் காயத்தை எல்லாம் கண்டு புழுங்கியது. இன்று மகள் வாய் வழியாக கேட்டதும் ஏதோ மனதை நெருப்பில் இட்டதாக துடித்துவிட்டார்.
தாய் தந்தையை நம்பயியலாத பார்வை பார்த்தவள் ஏதோ முடிவெடுத்தவளாக, “எனக்கு பிரேக் டைம் முடிஞ்சிடுச்சு. வீட்டுக்கு போங்க. நா…ன்ன்ன் ஈவினிங் நம்ம வீட்டுக்கு வர்றேன்.” என்று முடித்துக் கொண்டாள்.
பெற்றவர்களுக்கு அந்த வார்த்தை போதுமானதாக இருந்தது. அதிலும் மணிமேகலைக்கு சந்தோஷம் தர, மகள் கையை பற்றி கண்ணீரை உகுத்தினார்.
இருவரும் சென்றதும் பாரதி தன் அலுவலகத்தில் பணியை தொடர்ந்தாள்.
என்ன தான் வேலையில் அவள் மூழ்கினாலும், இவளால் தானே சரவணன் வீட்டையும் காலி செய்ய ஆனந்தராஜ் கூறினான்.
அனிதா விஷயம் அதிகம் தெரிந்திருக்காமல் இருந்தாலும், வீட்டை காலி செய்ய சொன்னது இவளால் தான். அதனால் தான் மட்டும் தன் வீட்டுக்கு வந்துவிடுவது சரிதானா? இதில் சுயநலமாக இருக்காது? என்று நகம் கடித்தாள்.
அதுக்காக குடும்பத்தோடா அவர்களையும் உன் வீட்டிற்கு அழைத்து செல்வாயா? உன்னை இக்கட்டில் மருத்துவமனையில் சேர்த்ததால் சரவணன் குடும்பத்தை தங்கள் வீட்டில் வைத்துக் கொள்வது நடைமுறையில் சாத்தியமா? என்றவளுக்கு தன் பேங்க் அக்கவுண்ட்டில் எவ்வளவு பணம் உள்ளதென்று ஆராய்ந்தாள்.
அவள் எதிர்பார்த்த தொகையை விட, இருக்கவும் அவனிடம் பணத்தை தந்து அவன் பாதைக்கு வழி வகுக்க கொடுக்கலாம். அவன் செய்த உதவிக்கு பதிலுதவி செய்வதால் பாரதிக்கு மகிழ்ச்சியில் புன்னகை விரிந்தது.
அதே எண்ணத்துடன் வீட்டுக்கு வந்தாள். ஆனந்தராஜ் சரவணனின் வீட்டு பொருட்களை தூக்கி நடுத்தெருவில் போட்டு ஏதோ கத்துவதை தூரத்திலேயே பார்த்துவிட்டு ஓடிவந்தாள்.
“என்ன பாரதி மேடம் வீட்டை காலி பண்ணுவதா சென்னிங்க. எதுவும் எடுத்து வைக்கலையா?” என்றதும் அவள் வீட்டை கவனித்தாள். அவள் பூட்டை உடைத்திருப்பதை கண்டாள்.
கைக்கடிகாரத்தை பார்த்து, “எட்டு மணிக்கு இங்கிருந்து கிளம்பிடுவேன். என் திங்க்ஸை பேக் பண்ணிப்பேன். ஆனா அதுக்கு முன்ன பூட்டை உடைக்க உங்களுக்கு யார் பர்மிஷன் தந்தா?” என்றாள் மிடுக்காக.
“யார் தரணும்?” என்று கேட்க, “ஓ.. பர்மிஷன் உங்களுக்கு தேவையில்லைன்னா. இந்த மாச வாடகையும் பாதி தான் தரமுடியும்” என்றாள்.
சரவணனோ இவ்வளவு நேரம் கலா அக்கா வீட்டில் இன்று இரவு சென்று விட்டு ஒரு வாரத்தில் எங்கையாவது வீடு பார்க்க நினைத்தான். தற்போது அறிந்தவர் தெரிந்தவர் உடனடியாக வீட்டை தரும் அளவுக்கு வீடும் இடமும் பணமும் எதுவுமில்லை.
அம்மா தங்கை வைத்து கலா அக்கா வீட்டில் சென்று விட்டுவிட்டு இவன் எங்கயாவது கூட படுத்து எழுந்திட நினைத்தான்.
பாரதி வீட்டை விட்டு எங்கே செல்வாள் என்று தான் மனம் நிலையில்லாமல் தவித்தது.
அவளே எட்டு மணிக்கு கிளம்புவேன் என்று கூறியதும், அப்ப ஹாஸ்டலில் இடம் பார்த்திருப்பாளோ என்று தான் நினைத்தான்.
மணி தற்போது ஆறரை ஆகவும், “சரவணா” என்று கூப்பிட அவனும் அன்னையை பார்த்தபடி நிற்க, “கூப்பிடுதுலடா போ” என்று விமலா உரைத்திட சரவணன் பாரதி வீட்டுக்குள் வந்தான். “வீடு பார்த்து வச்சியிருக்கிங்களா?” என்று கேட்க உடனே “உடனே வீடு கிடைக்குமாங்க? தெரிந்தயிடத்துல எல்லாம் அட்லீஸ்ட் இரண்டு மாசம் கழிச்சு வீடு காலி பண்ணறதா சொல்லறாங்க. அதுக்கு பிறகு வந்து தங்க சொல்லறாங்க. இப்பன்னா… இல்லைங்க.. பார்க்கலை. தற்சமயம் கலா அக்கா வூட்ல தான் தங்கச்சியும் அம்மாவையும் விடணும். நீ..நீங்க ஹாஸ்டல்ல தங்க பார்த்துட்டிங்களா?” என்று விசாரித்தான்.
“இல்லை சரவணனா” என்றாள்.
“அச்சோ” என்று சோகமானவன் கலா அக்கா வீட்டில் தற்சமயம் தங்குவாளா? என்று கேட்க நாதுறுதுறுத்தது. ஆனால் எப்படி கேட்பான்?
“ஏங்க… உங்க பிரெண்ட்ஸ் வீட்ல?” என்று கூற, “பச் நான் தங்கறதுக்கு இடம் எல்லாம் பிரச்சனையில்லை சரவணனா. நான் யோசித்தது உங்களை தான். என்னால தானே உங்களுக்கு இந்த நிலைமை.” என்றாள்.
“அய்யோ… அதெல்லாம் இல்லைங்க. எப்படியும் அனிதா மூலமா விஷயம் தெரிந்தாலுமா என்னைக்காவது ஆனந்தராஜ் கூட இந்த மாதிரி முட்டல் மோதல் வரும்னு நினைச்சேன்.
இல்லைன்னா… அனிதாவை அந்த பரதேசி ஏதாவது பண்ணிருந்தா… நினைக்கவே முடியலைங்க. அதுக்கு இந்த நிலைமை பெட்டர்ங்க.” என்றான்.
“சரவணா… நான் ஒன்னு தந்தா தப்பா எடுத்துக்க மாட்டிங்களே?” என்று தயக்கமாய் கேட்டாள்.
“இல்லைங்க.. சொல்லுங்க” என்று நின்றான்.
அவள் தோளில் மாட்டியிருந்த கைப்பையில் இருந்து, பணத்தை எடுத்து, “நான் மதியம் வரை வீடு மாறுவதை பத்தி சத்தியமா யோசிக்கலை. மதியத்துக்கு மேல தான் நான் எங்க போகலாம்னு முடிவு செய்தேன். அப்ப தான் உங்க நினைவும் வந்தது.
என்னால நீங்களும் கஷ்டப்படக்கூடாதுன்னு பேங்க்ல இருந்து பணத்தை எடுத்தேன்.
இந்த பணத்தை வச்சிக்ககட்டு அடுத்து வீடு பாருங்க. முடிந்தா.. நல்லதா வீட்டுக்குள்ள எல்லா வசதியும் இருக்கற இடமா மெயின் வீடா, அனிதாவுக்கு ஸ்கூலுக்கு கிட்ட பாருங்க.” என்று நீட்டினாள்.
சரவணன் வாங்க தயங்கினான். வீட்டுக்கு வெளியே விமலா அனிதா எட்டியெட்டி பார்த்தானர். ஏன் ஆனந்தராஜும் தலையை திருப்பி கண்ணை கூர்மையாக்கி பாரதி கையில் இருந்த பணத்தை கவனித்தான்.
சரவணன் மறுக்கும் விதமாக, “இல்லைங்க… பணம்.. அதுவும் நிறைய இருக்கற மாதிரி தெரியுது. எதுக்குங்க.. வீடு தானே. நான் ஒரு வாரத்துல பார்த்துடுவேன். நீங்க எங்க போகணும்னு முடிவு செய்திங்களோ அங்க போங்க. நான் கலா அக்கா வீட்டுக்கு தானே அப்படியே பொடி நடையா போவேன். இங்க இருக்கற சாமான் செட்டு எல்லாம் பக்கத்துல இருக்கற ஆட்டோக்கார அண்ணா வந்து எடுத்துட்டு போக பார்த்துப்பேன்” என்றவன், அவள் கண்ணை பார்த்து ”ஹாஸ்டல்ல பிரெண்ட்ஸ் வீடு எங்க தான் தக
தங்குவிங்க. எதுவும் யோசிக்கலைன்னு சொல்லறிங்க?” என்றான்.
“நீங்க இந்த பணத்தை வாங்குங்க சொல்லறேன்.” என்று கையில் திணிக்க, நடுக்கத்துடன் பெற்றான்.
“நான்.. நான் எங்க வீட்டுக்கே போறேங்க. அம்மா அப்பா மதியம் என்னை தேடி ஆபிஸ் வந்தாங்க. ஒன்னு பிரஷாந்தை கட்டிக்கோ, இல்லை வீட்டுக்கு வான்னு கெஞ்சினாங்க. இதுல ரஞ்சித் வேற அவங்களிடம் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு, என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டிருக்கான். அப்பா அம்மா செருப்பால அடிச்சி விரட்டியிருக்காங்க. அவங்க வீட்டுக்கு வாடினு ரொம்ப வற்புறுத்தறாங்க. அம்மாவுக்கும் என்னை பிரிந்து பயப்படறாங்க. ஏதாவது தற்கொலை பண்ணிப்பேனோனு. அதை நினைச்சி நினைச்சி உடம்பை கெடுத்துக்கறாங்க. ஆக்சுவலி… முதல்ல ரஞ்சித் மேல கேஸ் பைல் பண்ணலையே என்ற கோபமும் என்னை கற்பிழந்தவளா பார்த்து பீல் பண்ணுவதால தான் அப்பா அம்மாவிடமிருந்து தள்ளி வந்தேன்.
இப்ப… ரஞ்சித்தை சந்திச்சு மனசுல இருந்ததை அவன் வீட்ல போய் அவங்க அப்பா அம்மா முன்ன திட்டிட்டேன். அது போதாதது தான். ஆனாலும் அந்த நாயிடம் நான் அழுக்கில்லை. நீ தான். நான் எப்பவும் போல நடமாடுவேன்னு நியாயமா பேசினேன்.
அப்பா அம்மாவிடம் இப்ப கோபம் குறைந்திடுச்சு. அவங்க பயம் நான் உயிரோட இருந்தா போதும்னு யோசிக்கறாங்க. சோ… மத்த பார்வை பேச்சு இனி இருக்காது. அங்க தான் போக போறேன்.” என்றாள் மகிழ்ச்சியாக.
சரவணனோ “சூப்பர்ங்க… அப்பா அம்மா இருக்கும் போது ஹாஸ்டல் பிரெண்ட்ஸ் எல்லாம் யோசிக்கவே வேண்டாம். நான் ஒரு லூசு… உங்களுக்குன்னு பெத்தவங்க இருப்பதையும் வீடு இருப்பதையும் யோசிக்கலை பாருங்க” என்றான். அவன் குரல் வித்தியாசமாய் தெரிந்ததா? என்று பாரதி ஆராயும் முன், “சரிங்க நீங்க கிளம்புங்க இந்த பணம் வேண்டாமுங்க” என்று திருப்பி தர முயன்றான்.
“ப்ளீஸ்.. ப்ளீஸ்…நீங்களே வச்சிக்கோங்க. அதோட… அனிதா விமலா நீங்க கூட என்னோட வாங்க அந்த ஒரு வாரம் அங்க தங்கலாம். வர்றிங்களா” என்று கேட்டாள்.
சரவணன் மறுப்பாய் பேச, பணத்தை கொடுக்கவும் வாங்கவும் என்று சரவணன் செய்கையில் விமலா வந்து, மகனிடமிருந்து பணத்தை வாங்கினாள். பாரதி பேசியதை கடைசியாக கேட்டவராய் “என்னடா நீ அந்த பொண்ணு தான் கூட வந்து தங்க சொல்லுதுல. அப்பறம் என்ன. இந்த நிலையில் என்ன யோசிக்கற. அனிதா வயசு பொண்ணு. அவளை பாதுகாப்பா பார்த்துக்க பாரதி நினைக்கலாம்.” என்று கூறி நீ பக்கத்துல ஆட்டோவை பிடி. நம்ம பொருளை பாரதி வீட்டு பொருளை ஒன்னா ஏத்த சொல்லு” என்று கூறினார்.
சரவணனோ அன்னையிடமிருந்து பணத்தை வாங்கி, “பாரதி… இதை..” என்று ஏதோ கூற வர, “பணத்தை கவரில் சுருட்டி, “இதுல ஒரு லட்சம் இருக்கு. நாளைக்கே வீடு பாருங்க. அவ்ளோ தான்” என்றவள் விமலாவிடம் “ஆன்ட்டி நீங்க திங்க்ஸை எடுத்து வையுங்க” என்றாள் அதிகாரமாக.
சரவணன் எந்த முடிவும் எடுக்க முடியாமல் பாரதி சொன்னதை கேட்டான். ஆனால் மனதில் அம்மா தங்கையை கலாக்கா வீட்டில் விடும் முடிவில் தான் இருந்தான்.
பாரதி பேசியதை அரையும் குறையுமாக கேட்ட விமலாவோ, மகன் பாரதி விரும்புவதால், தங்குவதற்கு ஒன்றாக வீடு பார்ப்பதாக முடிவே கட்டிக் கொண்டார்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Bharathi too good. Intresting
Ethu yenga poi mudiya pogutho
மட்கும் வாழ்வில், மட்காத காதல்…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 21)
ஆனாலும் சரவணனோட அம்மாவுக்கு ரொம்பத்தான் பேராசையோ..? ஏதோ பணத்தை கொடுத்து நல்ல வீடா பார்த்து இருக்கச் சொன்னால், பாரதியையே
மருமகளாக்கிக்கப் பார்க்கிறாங்களோ..?
இதைத் தான் இடத்தை கொடுத்தால், மடத்தை பிடுங்கிக்கிறதுன்னு சொல்றாங்களோ..?
முதல்ல பாரதியை கல்யாணம் பண்ண, தன் மகனுக்கு என்ன குவாலிபிகேஷன் இருக்குன்னு யோசிக்கவே மாட்டாங்களோ,..? கண்ணுக்குத் தெரியாத நல்ல குணம் மட்டும் போதுமா.. வாழ்வதற்கு..?
படிப்பு, வேலை, அழகு, குடும்ப பின்னனி.. இதெல்லாமும் தேவை தானே..? தவிர, ரெண்டு பேரோட காதலும் தானே தேவை, இதுல பாரதி அப்படி எதையும் யோசிக்க கூட இல்லைன்னு நல்லாத் தெரியுது தானே..? அப்புறம் எப்படி சுயநலமா யோசிக்க முடியுது இவங்களால..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super super super super super super super super super super super super super super super super super
Super sis nice epi 👍👌 vimala ammavuku unmai therinja enna nadakumo🙄
intha amma iruke ethaium full ah therinjikama avangale mudivu panni ellam pesuranga manasula aasaiya valathukitu ena anuvangalao saravana na
Nice going
Interesting