சாந்தி நிலையம் படம் ஜெமினி கணேசன் காஞ்சனா அவர்கள் நடித்தது.
எம்.எஸ் விஸ்வநாதன் சார் மியூசிக்.
நிறைய குழந்தைகள் நடித்ததால சட்டுனு மனதுல ஓட்டிக்கிட்ட படம். அதுவுமில்லாம இது மனதுக்கு நெருக்கமான கதை.
நாகேஷ் சார் காமெடி, நடிகை மஞ்சுளா இதுல குழந்தை நட்சத்திரம். இதுல ஒரு பொண்ணு நகம் கடிச்சிட்டே இருப்பா. ஒரு பையன் உண்டிகோலை வச்சி நாகேஷ் சாரை மிரட்டுவான்.
தன் சித்தியின் ஒரவஞ்சனையில் வேலைக்காரி போல நடத்தப்படும் நாயகி. சித்தியால ஒரு கட்டத்துல இருட்டு அறையில பூட்ட வச்சி தண்டணை அனுபவிச்சு ஒரு நல்ல டாக்டர் மூலமா ஆசிரமத்துல வளர போறா நாயகி. அங்க நிம்மதியான சூழல். டீச்சரா மாறி வளர்ந்து நிற்கறாங்க.
டாக்டருக்கு தெரிந்த குடும்பத்துக்கு ஒரு டீச்சர் தேவைப்படவும் நாயகி அங்க ஆசிரம நிர்வாகம் அனுப்பவும் போறாங்க.
இடையில குதிரையில வந்து பாதையில பயமுறுத்தறார் ஜெமினிகணேசன். அவரிடம் துடுக்கா பேசறாங்க காஞ்சனா.
இனிய மோதல் காதலுக்கு இவங்களை அறியாம விதை தூவிட்டு போகுது. அப்போ ஒரு டயலாக் வரும் உங்களை மாதிரி பெரிய மனுஷங்க பாதையில எங்களை மாதிரி சின்னவங்களை சந்திச்சா உதாசினப்படுத்தாதிங்க. நாளைப்பின்ன சந்திக்க நேரும் போதும் அவங்களை மதிக்க கத்துக்குங்கனு வரும். ஏன்னா ஒரு நாள் அவங்களும் உயர்ந்த இடத்துல போகலாம்னு. ரியலி இந்த படம் பார்க்கறப்ப இந்த மாதிரி தத்துவ டயலாக் மனதுல பதியும் என்று நினைக்கவேயில்லை.
ஜெமினி வீட்டுக்கே காஞ்சனா அம்மா வரவும் இந்த நாயகன் நாயகி சீன் செமையா இருக்கும். சாரி கேட்டு இருதரப்பும் பேசிக்குவாங்க.
என்ன தான் சாந்தமா இருக்காதிங்க குழந்தையை கண்டித்து வளர்த்து விடுங்கனு ஜெமினி சொல்வார்.
கண்டிப்பு அதிகமாக அதிகமாக தான் குழந்தைகளிடம் திருட்டுதனமும் சேட்டையும் அதிகமாகும்னு சொல்வாங்க. மேபீ அது உண்மைதான். இப்ப அம்மா ஆனப்பின்ன உணருறேன்.
குழந்தைகளோட லூட்டி முதல்ல டீச்சரை பிடிக்காம, நிறைய முள் சேர் தண்ணி அபிஷேகம் நடந்து பிறகு டீச்சரை பிடிச்சதும் ஒரு பாடலை கற்று தருவாங்க பாருங்க. அப்பப்பா… அந்த பாடல் இன்னமும் மனதுல நீங்கலை.
இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்
இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெரும் கருணை
அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெரும் கருணை
இறைவன் வருவான்அவன் என்றும் நல்வழி தருவான்
வண்ண வண்ணப் பூவில்
காயை வைத்தவன்
சிற்பி ஒன்றின் நடுவே முத்தை வைத்தவன்
வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவன் சிற்பி ஒன்றின் நடுவேமுத்தை வைத்தவன்
சின்ன சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான் நெஞ்சில் வரும் பாசத்தைபேச வைத்தான்
சின்ன சின்ன நெஞ்சினில் பாசம் வைத்தான் நெஞ்சில் வரும் பாசத்தை பேச வைத்தான்
அன்பே என்பது கோயில்
ஆசை என்பது நாடு
பாசம் என்பது வீடு
பாசம் என்பது வீடு
இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்
உள்ளம் என்னும் கோயிலைகட்டி வைத்தவன்
கண்கள் என்னும் வாசலை தந்து வைத்தவன்
உள்ளம் என்னும் கோயிலைகட்டி வைத்தவன் கண்கள் என்னும் வாசலை தந்து வைத்தவன்
கண்ணில் வரும் பாதையை காண சொன்னான்
நல்ல நல்லப் பாதையில் போக சொன்னான்
கண்ணில் வரும் பாதையை காண சொன்னான்
நல்ல நல்லப் பாதையில் போக சொன்னான்
கண்கள் அவனை காண
உள்ளம் அவனை நினைக்க
கைகள் அவனை வணங்க
கைகள் அவனை வணங்க
இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் அறிவோம் அவனை
அவன் அன்பே நாம் பெரும் கருணை
இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்
ரொம்ப ரசித்த பாடல். 🤩 அதோட பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே.. ஒரு பாட்டும் வரும். பலூன்ல போற மாதிரி. எல்லாமே செட்டுனு இப்ப தெரியுது. ‘செல்வங்களே…. என்று பாட்டுல பூதம் வந்தாலும் திடமா இருக்கணும்னு சொல்வாங்க. ஆனா பாடி முடிச்ச டீச்சரே பயந்துடுவாங்க. மஞ்சுளா அதுக்கு நீங்களே பயப்படலாமா டீச்சர் என்று வாரிவிடுவாங்க. பட் சின்ன வயதில் இருட்டறையில் தண்டனை அனுபவிச்ச காஞ்சனாவுக்கு பயம் போகாது இல்லையா.
எப்பவும் சுமூகமா போன நல்லாவா இருக்கும். இதோ வர்றேன் வில்லினு ஒருத்தங்க வருவாங்க. அப்ப எல்லாம் ஜிகு ஜிகுனு உடைபோட்டு வர்ற பெண்மணிகள் தான் கெட்டவங்க.
ஜெமினியை துரத்தி துரத்தி வருவாங்க. பெண்ணை பார்த்ததும் கண்ணை பார்க்குமானு ஏதோ மாடர்ன் டிரஸ்ல வந்து ஜெமினி முன்ன முன்ன வந்து ஆடுவாங்க. நம்ம நாயகன் கண்டுக்கவே மாட்டார்.🤭
ஆனாப்பாருங்க.. இது அழகான கதை சுமூத்தா போகுதுனு நினைப்போம். அப்ப ஒரு லேடி பயமுறுத்தற மாதிரி ரூமே அதிர சிரிப்பாங்க. உண்மையை சொல்லணும்னா அந்த பெண்மணி சீன் வர்றப்ப எல்லாம் இவங்க யாரு எதுக்கு இப்படி சிரிக்கறாங்கனு திக்குனு ஆகிடும். அதுலயும் ஒருத்தன் வருவான். அதுவும் நாயகன் சந்தோஷமா இருக்கறப்ப எல்லாம் வந்து பணம் கேட்பான். அப்போ ஜெமினி சந்தோஷம் துணி கொண்டு துடைத்து போல மாறிடும்.
அந்த சிரிக்கிற லேடியோட அண்ணாவாம். சிரிக்கிற லேடி ஜெமினியோட முதல் மனைவினு கடைசில வைப்பாங்க ட்விஸ்ட்.
மர்மத்தை அழகா மெயிண்டெயின் பண்ணிருப்பாங்க. காதல், குடும்பம் உறவு, பெண்கள் தன்னம்பிக்கை பெண், சமூகம் மர்மம் நகைச்சுவை என்று கலந்து இருக்கும் படம்.
நாகேஷ் சார் வந்து நின்றாலே குழந்தையோட அவர் அடிக்கும் சேட்டையும் வசனமும் கூட போறபோக்குல சமூக கருத்து சொல்லி தான் நகைச்சுவை இருக்கும். இப்பவும் வருதே நகைச்சுவையென்ற பெயர்ல… கடவுளே கடுப்பா வருது. அப்போ நகைச்சுவையென்றாலும் அதுல சிந்தனை ஏற்றி வசனமா தருவாங்க.
கடைசில வீடு தீப்பிடிச்சி எறியும். அந்த அண்ணன் ஜெமினி முதல் மனைவி இறந்துடுவாங்க.
சின்ன வயசுல பார்த்தப்ப முழு வீடும் தீவச்சி எடுப்பாங்களா? டவுட் வந்துச்சு. இப்ப அதே படம் பார்க்கறப்ப செட்டிங் என்றும் அதுவும் சின்ன செட்டிங் என்று தெரியறப்ப அப்ப இருந்த மக்கள் இதெல்லாம் தெரியாம பார்த்து இருக்காங்க. சினிமா தொழில் ரகசியங்கள் தெரியவும் புஸ்ஸூனு ஆகிடறதே. அதுக்கு தான் தொழில் ரகசியம் யாருக்கும் கற்று தர கூடாது போல.
நடுவுல நாயகியோட சித்தி சித்தி பசங்க நிலையெல்லாம் காட்டும் போது ‘கடவுள் இருக்கான் குமாரு’ தோன்றினாலும் அதுவும் மனதை கலக்கம் உண்டாகிடுது.
சரி இதுல ரொமன்ஸ் இல்லையானு கேட்கறிங்களா… இருக்கு இருக்கு.😜 “இயற்கை என்னும் இளையகன்னி ஏங்குகின்றாள் துணையை எண்ணி.” spb சாரோட முதல் சினிமா பாட்டு என்று அப்பா சொன்னார்.
காவியபுதனில் சன்டிவி புண்ணியத்துல முதல் முறை பார்த்தது. முதல்முறை எப்படி ரசித்து பார்த்தேனோ இப்பவும் அதே மனநிலையில் சினிமா செட்டிங் தெரிந்தப்பின்னும் ரசனை மாறாது பார்ப்பேன்.
கொஞ்ச நாளைக்கு முன்ன என் பெரிய மகளுக்கு போர்ஸ் பண்ணி இந்த படத்தை பார்க்க வச்சேன். முதல்ல பழைய படமா ஏன் என்னை டார்ச்சர் பண்ணறிங்கனு சொன்னா. பட் கதை போக போக அவளுக்கு பிடிச்சிடுச்சுனு சொன்னா.
இது மாதிரி நல்லகதைனா சொல்லுங்கம்மா நம்ம டைம்ல பார்ப்போம்னு சொல்வா. ஆமாங்க. சின்னதுக்கு ஒரு டைம் எனக்கு ஒரு டைம் என் பெரிய மகளுக்கு ஒரு டைம்னு பிரித்து ஆளுக்கு ஒரு டிவி நிகழ்ச்சி அது முடிய அடுத்தவங்களுக்குனு ரூல்ஸ். பின்ன எந்நேரமும் கார்டூன் பார்த்தா நான் பாவமில்லையா. சின்னதுகிட்ட ரிமோட் போச்சு அவ்ளோ தான்.
ஆனா குறிப்பிட்ட வயது வந்த குட்டிஸ்கு நல்ல படத்தை சுட்டிகாட்டி வற்புறுத்தி பார்க்க வைக்கலாம். என் மகள் பார்ப்பா. அதனால இந்த மாதிரி படங்கள் லிஸ்ட் விமர்சனமா என் பார்வையில் தொடர்ந்து வரும்.
நன்றி
பிரவீணா