Skip to content
Home » ஒரு பக்க கதை-சர்ப்பம்

ஒரு பக்க கதை-சர்ப்பம்

சர்ப்பம்

காலையிலிருந்து மின்சரம் தடைப்பட்டிருந்தது. இன்று முழுவதும் மின்தடை என்று முன்னவே அறிந்திருந்த காரணத்தால் மீனாட்சி ஒன்பதிற்குள் சமையல் வேலை முடித்து பாத்திரமும் சுத்தப்படுத்தி ஆறுமணிக்கே பிள்ளைகளை எழுப்பி விட்டு குளிக்க வைத்து ஏழுமணிக்கே வாஷிங்மிஷினில் துணியை துவைக்க போட்டு எடுத்து விட்டு, மாடியில் தொட்டியில் நீரையும் வழிய பிடித்து கொண்டாள்.

     என்ன இன்று வீட்டிலிருக்கும் மழலையருக்கு பொழுது போகாமல் வாட்டியது.

     மீனாவின் குழந்தைகள் இருவர் மற்றும் கணவரின் அக்கா பிள்ளைகள் என்று மேலும் இருவர் இருக்க, முதலில் போனில் விளையாடி மகிழ்ந்தனர்.

     மின்சாரம் இருந்தால் டிவியில் ஹாட் ஸ்டாரில் அலசி புது பட கார்டூன் என்று நேரம் கழித்திருப்பனர்.

    இன்றோ அதற்கும் வழியில்லை. போனும் நீ நான் சொல்லறதை பார்க்கலை. எனக்கு இந்த கேம் பிடிக்காது என்று ஆரம்பமானது. கணேஷ் அவன் பாட்டிற்கு பைக்கை எடுத்து வெளியே சென்றான்.

   மீனாட்சியோ பனிரெண்டு வயதுபிள்ளைகளும் எட்டு வயது பிள்ளைகளின் நேரத்தை எப்படி கழிப்பது என்று சிந்தித்தாள்.

      மணி பதினென்று நெருங்கவே போர் அடிக்கு என்று சில்வண்டுகள் காதில் ரிங்காரமிட்டது.

    மீனாட்சி பரமபதம் விளையாடலாமா? என்றதும்

    ”அப்படின்னா…?” என்றது வாண்டுகளில் ஒன்று.

     “ம்ம்… ஸ்நேக் அண்ட் லேடர்.” என்றதும்

     ”ஓ… அதுவா… பட் நாட் இன்ட்ரஸ்ட். பிசினஸ் பின்னாடி இருக்கு.” என்று கூற, மீனாட்சியோ தன் காட்டாமல் “இது நீங்க பிசினஸ் பின்னாடி இருக்கற ஸ்நேக் அண்ட் லேடர் இல்லை. இங்க பாருங்க.” என்று மறைத்து வைத்தை காட்ட வாண்டுகளின் கண்கள் விரிந்தன.

     “அம்மா… இது என்ன சார்ட்… இவ்ளோ பெரிதா…”என்று தரையில் விரித்து வைக்க அங்கே மத்திரம் போல ஏணியும் சர்ப்பமும் மின்னியது.

    அது அக்காலத்தில் வாங்கி மீனாட்சிக்கு அவர்கள் பாட்டி பரிசாக கொடுத்தது.

    பாம்புகள் நிஜமாகவே நெளிவசு போன்றும் ஏணி மின்னுவது போன்றும் இன்றும் வருடம் கலந்து காட்சியளித்தது.

     சிறுவர்கள் விளையாட ஆர்வமாக அமர, சர்ப்பத்தின் ஆட்டம் ஆர்வத்தோடு ஆரம்பித்தது.

    டைய்ஸ் விளையாடிய வாண்டிற்கு தாயக்கட்டை கொடுக்கப்படவும் அதனை உருட்ட தெரியாமல் உருட்டி கடினப்பட்டு தாயத்தை போட்டு விளையாட ஆரம்பித்தனர். அதன் தொடர்ச்சி மற்றவரும் விளையாட விளையாட்டில் அடிக்கடி ஏணியில் ஏறுவதும் மீண்டும் பாம்பு கொத்தவும் இப்படியே நேரம் போனது ஆனால் கடைசி வரை ஆவல் மேலோங்கியது.

    இருவர் வெற்றி பெற்றதும் அடுத்து சடசடவென மற்ற இருவரும் இருப்பிடம் அடைந்தனர்.

மணி மதியம் உணவருந்தும் நேரம் வந்தது.

   “அம்மா இந்த கேம் தினமும் விளையாடலாமா. நல்லா இருக்கு.” என்று மகன் திவேஷ் கேட்கவும், மீனாவோ இந்த விளையாட்டுல என்ன கத்துட்டு இருக்கிங்க.” என்று கேட்டதும், ஜாலியா இருந்துச்சு… நேரம் போச்சு…” என்று மேம்போக்காக விடை வந்தது.

     இல்லை ஆழமா யோசிங்க என்றதும் பெரிய மகள் இசை சிறிது நேரம் கடத்தி,

    “ஐ பைண்ட் இட் மாம்.     கஷ்டப்பட்டு வந்தேன் சே பெரிய பாம்பு கொத்திடுச்சு. இருந்தும் வெற்றியடையணும் என்ற வேகம் வந்துச்சு.

     சின்ன சின்ன ஏணியில் ஏறினப்ப சின்ன சின்ன சந்தோஷமும் கிடைத்தது. அதை ஜாலியா இருந்தது.

     விடாமுயற்சியாய் தாயம் போடணும்னு தாயக்கட்டை உருட்டினேன். ஒவ்வொரு தடவையும் இரண்டு மூன்று என்று தோல்வி வந்தது. ஆனா அந்த தாயம் வரும் வரை சலிக்காம போட்டேன். அப்போ சின்னதா ஒரு பாஸிடிவ் பீல் ஏ… நான் இதுல ஜெயித்துட்டேனு ஒரு முழுமையடைந்த திருப்தி கிடைத்தது.”

     “அத்தை இப்ப நான் சொல்லறேன்.” என்று குகன் கத்தினான்.

      சின்ன சின்ன அப்டவுன்  விளையாட்டில வந்தப்ப அதெல்லாம் கடந்து வரணும்னு கத்துக்கிட்டேன்.

      ஜெயிக்கிற மாதிரி வந்து பெரிய பாம்பு கொத்தினப்ப வெற்றி நிரந்தரம் இல்லை என்றும் அகைன் பஸ்ட்ல இருந்து வந்தப்ப வெற்றியை அடைந்தப்ப தோல்வியும் நிரந்தரமில்லைனும் கற்றுக்கிட்டேன்.” என்றனர்.
  
     “வாவ்… நான் சொல்ல வந்ததை எல்லாம் நீங்களே சொல்லிட்டிங்களே… நான் என்ன சொல்ல…. ம்ம்ம்.. ஆஹ்… இனி தினமும் போன்ல விளையாடம இப்படி சேர்ந்து விளையாடினா. ஒற்றுமையா விளையாடலாம். அதோட மகிழ்ச்சி பன்மடங்கா இருக்கும் ஓகே.” என்று கேட்க அனைவரும் கட்டை விரலை உயர்த்தி ஆதரவு தந்தனர்.

    “அத்தை… நான் அதுல தோற்றுட்டேன் எனக்கு என்ன பண்ணறது என்று தெரியலை.” என்று அப்பாவியாய் கேட்க,

   “ஓ… செல்லக்குட்டி இஷா தோற்றதினால அவளுக்கு பிடிச்ச ஐஸ்கிரீம் அவ என்ன சொல்லறாளோ அதை தான் ஆர்டர் பண்ணப்போறோம். அப்ப ஹாப்பி ஆயிடுவா.” என்றதும் அக்கண்கள் ஒளிப்பெற்றது.

    ”எனக்கு வெண்ணிலா ஐஸ்கிரீம் அத்தை” என்று கூறவும் எல்லோருக்குமே ஐஸ்கிரீம் என்று கூறி கணேஷிடம் போனில் கூறிவிட்டாள். அவனுமே வரும் பொழுது வாங்கி வந்து நீட்டினாள்.

      சர்ப்பம் விஷம் என்பது பலரும் கூறலாம். பரமபதம் சொல்லிக் கொடுக்கிறது நல்லவை தீயவையை… சர்ப்பம் எல்லாம் தீயவை அல்ல.

-முற்றும்-

-பிரவீணா தங்கராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *