செம்புல பெயல் நீர்போல
விழியன் என்னும் அபிஷேக் அவளுக்காக காத்திருந்தான். அவள் தான் அபிராமி.
ஆறு மாதமாக விழியன் சோஷியல் மீடியாவில் நட்பு பாராட்டி பேசியதில் அபிராமியின் பேச்சில் பிடித்தம் ஏற்பட்டு காதல் என்று அங்கீகரிக்கும் நேரம் அபிராமியோ ‘நாம நேர்ல மீட் பண்ணலாமா’னு கேட்டு விட்டாள்.
விழியனும் காதலை இந்த சோஷியல் மீடியாவில் இன்பாக்ஸில் சொல்லி விடுவதற்கு பதிலாக நேரில் சொல்லலாமென்ற ஆவல் பெருகியது. இன்பாக்ஸில் சொல்லி அவள் பார்க்க வரும் இந்த சந்தர்ப்பத்தை தவிர்ப்பானேன.
‘என்னடா இவ்வளவு நேரம் வெயிட் பண்ணறோம் அவளை காணோமே’ என்று அபிஷேக் உள்ளத்து குரலாய் கேட்டு விட்டான். விழியன் என்பது அபிஷேக்கின் புனைப்பெயர் அல்லவா.
“வருவா வருவா. தேவதைகள் பொறுமையா தான் வருவாங்க.” என்று கவிஞனாய் விழியன் பதில் தந்தான் மனசாட்சியிடம்.
சட்டென மின்னல் குறுஞ்செய்தியாக “ஹாய் தனியா தானே வந்திருக்கிங்க” என்று கேட்டாள்.
போன் எண்ணை பரிமாறி இன்று தான் வாட்ஸப்பில் முதல் முறையாக அபிராமி அவளாக ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினாள்.
பரவசமாக அதனை படித்து விட்டு “ஆமா அபி தனியா தான் வந்திருக்கேன்” என்று அனுப்பினான்.
“ஓ… ஓகே.. நான் பதினைந்து நிமிடத்துல வருவேன். சிக்னலில் மாட்டிட்டு இருக்கேன்” என்று அனுப்பினாள் அபிராமி.
விழியன் அதிகளவு உற்சாகமாக தலையை கோதினான். போனில் கேமிரா எடுத்து தன் முகத்தை கண்டு தேவையேயில்லாத செல்பி ஒன்றிலும் தான் தினமும் பார்க்கும் தன் முகத்தினை இங்கு வந்து பலமுறை பார்த்து விட்டான்.
அழகானவனாக அது காட்சிப்படுத்தியது. விழியனுக்கு அபிராமி வந்ததும் அவளின் கண்ணுக்கு தான் ஈர்ப்பு கொடுக்கும் விதமாக தன் காதலை சொன்னால் மறுப்பு கொடுக்க இயலாத வகையிலும் தான் இருக்க பெரும் வேண்டுதலை முன் வைத்தான்.
அபிராமி கவிதைகளை போல அவளின் பேச்சும் அவளின் பதில்களும், அவனை அத்தனை பித்தம் கொள்ள வைத்திருந்தது. கூடுதலாக அவனின் பெயரை போலவே ‘அபி’ என்றதால் அவள் தான் தன் இணையான காதலி என்று முடிவே செய்தான்.
அவளிடம் காதலை கூறி இன்றே அவன் வீட்டில் அறிமுகப்படுத்தும் அளவிற்கு ஆவலில் இருக்கின்றான்.
அபிஷேக் அபிராமியின் பழக்கம் ஒரு கவிதை போட்டியில் வாக்குவாதத்தில் மட்டும் ஆரம்பித்து சண்டை முற்றி நான் இப்படி தான் என்று முட்டிக் கொண்டு மன்னிப்பும் கேட்காமல் விழியனை விழி பிதுங்க வைத்து பிறகு கவிதை ஒன்றில் மறைமுகமாக சூரியன் சந்திரனாக கவிதை வடிவில் சந்திரன் சூரியனிடம் மன்னிப்பு கேட்டு புதிதாய் ஈர்த்தவள்.
அதன் பின் விழியனே ‘நீங்க என்னிடம் தானே மன்னிப்பு கேட்டு அந்த கவிதை எழுதியது’ என்று வெளிப்படையாய் கேட்டு ‘அப்படின்னு நீங்க வச்சிக்கலாம். நான் ஆமானு சொன்னதாவே வச்சிக்கோங்க.’ என்று சமாதானம் அடைந்து நட்பானவர்கள். அதன் பின்னும் அந்த பொது குழுவில் எப்பொழுது கட்டுரைக்கு இருவரும் மோதி தான் எழுதினார்கள்.
கொஞ்ச நாளாய் விழியன் அபிராமி பேசும் கட்டுரை வாதத்திற்கும், கவிதைக்கும் மாற்று கருத்து எதுவும் அளிக்கவில்லை. மாறாக லைக் பட்டன் அழுத்துவதற்கு பதிலாக லவ் பட்டனை அனுப்பினான்.
அபிராமி இதனை அறிந்தாலோ இல்லையோ விழியனால் இதற்கு மேல் பொத்தி வைக்க மனமின்றி குறுஞ்செய்தியில் தன் போன் எண்ணை பரிமாறினான்.
ஆனால் அபிராமி உடனடியாக அதற்கு பதிலாக தன் எண்ணை பதிவு செய்யவில்லை. மாறாக அவன் அனுப்பியதை கண்டுக் கொள்ளாதவள் போன்று இருந்தாள்.
இதோ சில தினமாக அபிராமி பேசாமல் தவிர்த்து பின்னர் அது இயலாது போக ஒரு முடிவோடு சந்தித்திடலாமென போன் எண்ணை பகிர்ந்து இன்று காண நேரம் ஒதுக்கி வைத்து விட்டாள்.
விழியன் பின்னந்தலையை கோதி கழுத்தில் தடவி அங்கிருக்கும் பெண்களை சாவதனமாக பார்த்தான்.
அந்த நேரம் சில பெண்கள் அவனை தான் நோட்டமிட்டனர். அழகான பெண்கள் தன்னை நோக்குவதில் சற்றே மிரண்டான். இது என்னடா அபி வர்றப்ப நான் இவங்களை பார்த்தேன். அம்புட்டு தான் சைட் அடிக்கிறியாடானு என்னை ரிஜெக்ட் பண்ணிட்டு போனாலும் போகலாம். அவ தான் கட் பண்ணறதுல கேடி.
கொஞ்சம் அதிகப்படியா பேசினா உடனே கத்தரிச்சிடறா’ என்றவன் போன வாரம் அவன் பேச அவள் நாசுக்காய் கத்தரித்து பேச்சை முடிப்பதை கண்டான்.
இன்னமும் காணோமே என்று போன் செய்து விட்டு காதில் வைத்தான்.
“ஹலோ விழியன் வந்துட்டேன். ப்ளிஸ் காத்திருங்க” என்ற குரலில் இவன் பேச விடாமல் கத்தரித்து விட்டாள்.
“அம்மாடி ஹார்ட் பீட் எகுறுதே….” என்று கண்ணாடி கோப்பையில் நிரம்பியிருந்த நீரை பருகினான்.
எதிரே ஒரு பூசி மொழுகியே குண்டு பெண் இவனை கண்டு சிரிப்பை மறைக்கவும் போனை எடுத்து தலையை நுழைத்து கொண்டான்.
முகநூலில் அபிராமி என்று அவள் பதிவிட்ட கவிதை கட்டுரை என்று அனைத்தும் மீண்டும் எண்ணிக்கை பாராது படித்தான்.
உதட்டில் முறுவல் தெரிக்க விழி நிமிர்த்திட, அந்த குண்டு பெண் வந்து எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.
“ஹலோ இங்க என் லவ்வர் வர்றாங்க.” என்று பதறினான்.
“என்னது?” என்று விழியை பெரிதாக்கினாள் குண்டு பெண்.
“ஆமாங்க என் லவ்வர்” என்றவன் எங்கே அபிராமி வந்து இவன் வார்த்தையை கேட்டுவிடுவாளோ என்று பயந்தான். காதலியிடம் காதலை அறிவிக்காமலே லவ்வர் என்று யாரோ ஒரு பெண்ணிடம் கதை அளக்கின்றோமே என்ற எண்ணம் வேறு பதட்டமாக்கியது.
“விழியன்… மீட் பண்ணறதா தானே பேச்சு. உங்க லவ்வரையும் கூப்பிட்டு இருக்கிங்களா?” என்று கேட்டதும் விழியன் உலகம் இருட்டானது போன்ற நிலை உருவாகியது.
“நீ…நீங்க அபி… அபிராமி.?” என்று கேட்டான்.
“ஆமா… அப்பவே வந்துட்டேன் உங்களோட குறும்பு தனத்தை இரசிக்க தனியா உட்கார்ந்து இருபது நிமிடமா ரசித்தேன்.” என்று மனதில் பட்டதை கூறினாள்.
“ஓ… அபிராமி… நீங்க… நைஸ் மீட்டிங் யூ” என்று தண்ணீரை பருகினான்.
அவன் தன்னை கண்டு பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளானென அறிந்து கொண்டாள் அபிராமி.
அதை வெளிக்கட்டிக் கொள்ளாமல் உங்களை பார்க்கணுனு ஒரு வாரமா தோன்றியது. அதனால தான் உங்க போனுக்கு பேசாம நேர்ல மீட் பண்ணலாமானு வந்துட்டேன்.” என்றாள்.
“ம்ம்… தேங்க்ஸ் உங்க கவிதை ரொம்ப அருமையா இருக்கும். உங்களை மீட் பண்ணணும்னு நினைச்சேன்.” என்றான்.
அதற்கா மீட் பண்ண துடிச்ச என்று அபிஷேக் என்னும் கவிதை உலகில் சஞ்சரிக்கும் விழியனை ஏளனப்படுத்தியது.
“உங்க ஒரிஜினல் பெயர் என்ன விழியன்.” என்று சகஜமாக அபிராமி நட்பாய் கேட்டாள்.
“அபிஷேக். அபியென்ற பெயர்ல எழுத வந்தேன். நீங்க ஏற்கனவே அபி என்று எழுதவும் விழியன்னு புனைப்பெயர் வச்சிட்டேன்.” என்றான்.
நடுவே ஆர்டர் கொடுக்க வந்த வெயிட்டரிடம் இருவரும் மாதுளை ஜூஸ் லெமன் ஜூஸ் என்று ஆர்டர் தந்துவிட்டு பேச ஆரம்பித்தனர். சரியாக கூறவேண்டுமென்றால் அபிராமி மட்டும் பேசினாள்.
“சோ… நீங்களும் அபி தான்.” என்று பேச “ம்ம்” என்றான்.
“உங்க லவ்வரும் வர்றதா சொன்னிங்க. இன்னும் வரலையா?” என்று கேட்டாள்.
அவனோ தலை குனிந்து நின்றான்.
“சோ… என்னோட கவிதை கட்டுரையில ஈர்ப்பாகி என்னோட பதிலுக்கு பதில் பேசி அதுல பிடிச்சி லவ்வுனு தோன்றவும் மீட் பண்ணி நேர்ல லவ் சொல்ல ஆசைப்பட்டிருக்கிங்க.” என்றாள்.
இல்லையென்று கூற வந்தவன் அவள் எப்பொழுதும் கனித்து பேசும் விதமாக உணரவும் ஆம் என்றான்.
“நீங்க இல்லைனு சொன்னா தான் ஆச்சரியம். ஏன்னா காதல் இந்த காலத்துல இண்டர்டென்ட்ல தான் கடை விரித்து கிடக்குது.
நம்ம தாத்தா பாட்டி காலத்துல அத்தை மாமா பசங்களை தான் பார்ப்போம். அதனால அவங்க மேல காதல் வந்திருக்கும்
அடுத்த தலைமுறை காலேஜ்ல ஆரம்பிப்பாங்க. ஆனா காதல் என்றாலே தப்புனும் ஜாதி மதம் பிரிச்சிட, ஒரு தலையா காதலிச்சு சொல்லாமலேயே மனசுல பூட்டி வச்சிப்பாங்க. அதுக்கு அடுத்த தலைமுறை காதலை சொல்வாங்க விட்டுட்டும் போவாங்க. டெலிபோன் காதல் லெட்டர் காதல் எல்லாம் தெரிந்தவங்களை காதலிச்சாங்க. இப்ப அதை தாண்டி இன்டர்ரெட்ல தெரியாதவங்களை பல்வேறு சோஷியல் நெட்வொர்க் மூலமா முகநூல், டிவிட்டர், இன்ஸ்டால காதலிக்கறோம்.
இது தான் இப்ப உங்களுக்கு பாதிச்சிருக்கு. என்னோட இன்ஸ்டா கவிதை முகநூல் ‘வாக்குவாதங்கள் விவாதிக்கலாம் குழு’ல கட்டுரையில உங்களோட மோதவும் என்னோட எழுத்துல பேசி பழகி கருத்து எதிர்மறையா இருந்தாலும் ஈர்த்துடுச்சோ.” என்றாள்.
சிரிக்கும் பொழுது கன்னத்துல குழி விழுந்தது. ஆனால் அவளின் பூசிய முகத்தில் அவன் அதில் ரசிப்பை தான் உடல்வாகில் ஆடியிருந்தான்.
நிச்சயம் அவளின் எடைக்கு சரியான அளவுக்கு கொஞ்சம் கூடுதல். ஆனால் ‘அபி’ என்ற பெயரும் வசீகரிப்பு எழுத்தும் அவனுக்கு சிக்கென்ற பெண்ணை அவன் வயது எதிர்ப்பார்த்து ஏமாந்தது அவன் பார்வையில் பேசும் தடுமாற்றத்திலும் கண்டு விட்டாள் அபிராமி.
“டோண்ட் ஓர்ரி அபிஷேக் பயப்பட வேண்டாம். நான் ஸ்போட்டிவா தான் எடுத்துக்கிட்டேன். ஜஸ்ட் உங்களை பார்த்து பேசிட்டா அந்த காதல் முற்றிலும் உங்களுக்கு போயிடும் பாருங்க. இதே நான் போன்ல அவாய்ட் பண்ணினா நீங்க பீல் பண்ணிட்டு இருக்கலாம். அதனால தான். இப்ப நீங்க என்னை பார்த்து தயங்கினாலும் வீட்டுக்கு போவதற்குள்ள அப்பாடி தப்பிச்சிட்டோம்னு ரிலாக்ஸ் ஆகிடுவிங்க பாருங்க” என்று கூறவும் அபிஷேக்கால் பதிலுக்கு மறுக்க இயலாது தயங்கினான்.
“ஜூஸை குடிங்க” என்றதும் லெமன் ஜூஸை கலக்கினான்.
மாதுளை அருந்தியவள் சுற்றி கூட்டத்தை கண்டாள். ஆங்காங்கே காதலர்கள் கூட்டம்.
மாதுளை அருந்தி முடித்து பில் பே செய்ய பர்ஸை எடுக்க,”இல்லை நான் பே பண்ணறேன் அபி” என்றான்.
அபிராமியோ ஒரு நிமிடம் அவனின் அழைப்பில் திகைத்து சிரித்து “ஓகே அபி” என்றாள்.
“ம்ம்… இந்தாங்க. இது உங்களுக்கு இந்த தோழியோட பரிசு” என்று நீட்டினாள்.
அபிஷேக்கும் அபிராமிக்காக வாங்கினான். ஆனால் அதில் காதல் என்று கொட்டி கிறுக்கி வைத்திருக்க கொடுக்க இயலாது தவிர்த்த நிலையில் நின்றான்.
அப்பறம் இந்த அதிர்ச்சியில இருந்து மீண்டு, எப்பவும் போல விவாத குழுவுல பேசுங்கப்பா. எனக்குன்னு வர்ற ராஜக்குமாரன் எனக்காக வருவான். அவன் எப்படியிருந்தாலும் என்னை மணக்கறப்ப என் கண்ணுக்கு தேவக்குமாரனா தான் தெரிவான். அதனால இந்த பீல் பண்ணி அப்சட் ஆகாம எப்பவும் போல சோஷியல் மீடியால இன்ஸ்டாலையும் கவிதை அனுப்பினா படிங்க அபிஷேக்கா இல்லாம விழியனா.” என்று கூறி வாசல் வரை வந்தனர்.
அபிஷேக் தலையாட்டினான். அபிராமி ஸ்கூட்டி எடுத்து புறப்பட்டதும் அபிஷேக் என்பவனை விழியன் என்னும் மனசாட்சி காறி துப்பியது.
அழகை பார்த்து தான் காதலிப்பியா டா. நீ எல்லாம் புரட்சி பேசற விவாதக்குழுவுல இருக்காதே. ‘முகநூலில் முகமூடி அணிந்த போலி மனிதன் நீ.’ என்று எடுத்தியம்ப பைக்கை உதைத்து புறப்பட்டான்.
அபிராமி வீட்டுக்கு வந்து நேராக கண்ணாடி பிம்பத்தில் தன்னை கண்டாள்.
கண்ணாடி அவளின் முழுஉருவத்தை காட்டவில்லை. அதனால் சற்று இடைவெளி விட்டு நின்றாள். தன்னருகே அபிஷேக்கை நிறுத்தி பார்த்தாள். சோ சேட் அவனுக்கு நீ மேட்ச் இல்லை. உனக்கும் அவன் மேட்ச் இல்லை அபி. விழியனுக்கு நல்ல பேர் அமையட்டும்.’ என்று நாளை விவாதக்குழுவில் என்ன தலைப்பு அதற்கு என்ன எழுத தன் சிந்தனை தூண்டுகின்றதென யோசனைக்கு சென்று தன் உடல் வாகை மறந்தாள்.
அதன் பின் விழியன் தனது இன்ஸ்டா முகநூல் கணக்கு இரண்டிலும் ஆக்டிவாக இல்லை என்று அபிராமி அறிந்து கொண்டாள்.
கொஞ்சம் வலித்ததாலும் அபிஷேக் செய்ததில் தவறாக தோன்றவில்லை. விருப்பு வெறுப்பு என்பது அவனின் தனிப்பட்ட கருத்து. இதில் தன்னால் என்று வருந்தவும் அவள் தயாராகயில்லை. அவளின் தாய் தந்தை வைத்து தானே தன்னுடல் அமைப்பு அமையும். இதில் பெல்லி இடை என்பது அவளுக்கு சாத்தியப்படாதவொன்று.
ஆறுமாத காலம் கடந்து அன்று அபிராமியை பெண் பார்க்க வந்திருந்தனர் மாப்பிள்ளை வீட்டாட்கள்.
அபிராமி இதுவரை பெயரை கூட கேட்காமல் மணப்பெண் அலங்காரத்தில் வந்து நின்று விட்டாள்.
அவளும் காபி தட்டை வைத்து போனமுறை போல தன் உடல்வாகை காரணம் காட்டி தானாக தட்டி கழிப்பார்கள் என்று பெயருக்கு வந்தவரை உபசரிக்க, “இது தான் மாப்பிள்ளை விழியன் என்றனர். அபிராமி திகைத்து நிமிர அங்கு அபிஷேக் அல்ல. வேறு யாரோ ஒருவன் புன்னகை ததும்ப காபியை எடுத்து அவளை பார்த்து முறுவளித்தான்.
‘இதென்னடா வம்பா இருக்கு. விழியன் என்று பெயரா?’ என்று தலைகவிழ்ந்து கொண்டாள்.
உடனடியாக மாப்பிள்ளை அவர்கள் அம்மா காதில் கிசுகிசுக்க ‘போச்சு காபி தட்டை கொடுத்ததும் அவரோட அம்மா காதை துளையிடறார். பிடிக்கலை என்றதை கூறயென்ன தவிப்போ’ என்று தோன்றியது.
ஆனால் மாறாக மாப்பிள்ளைக்கு பொண்ணை பிடிச்சிருக்காம். இரண்டு நிமிஷம் பேசணும்னு சொல்லறார். நீங்க சம்மதிச்சா பூ வச்சிட்டு பேச டைம் கொடுக்கலாம்” என்று விழியனின் தாய் பல்லவி கூறவும் அபிராமி தந்தை தட்டு மாற்ற தயாரானார்.
அதற்கு பின் சில மணித்துளியில் விழியன் அபிராமி மாடியில் தனியாக நின்றனர்.
“எனக்கு லவ் மேரேஜ் ரொம்ப பிடிக்கும்ங்க. ஆனா பாருங்க காலேஜ்ல காதலிக்க முடியலை. அதனால கல்யாணம் பண்ணப்போற பொண்ணை காதலிச்சிக்கலாம்னு விட்டுட்டேன்.” என்றான்.
அபிராமியோ என்னை போன்றோர் எல்லாம் திருமணம் முடிந்து அதன்பின் தான் காதலிக்கும் கொடுப்பினை அமையும் என்ற எண்ணம் எழந்தது. அடுத்த நொடி இவனுக்கென்ன குறைச்சல் காதலிக்க ஏன் என்னை தேர்ந்தெடுத்தான் என்பது போல பார்த்தாள்.
“ஆமாங்க… அப்படி தான் அரேன்ஜ் மேரேஜ் பண்ண முடிவெடுத்தேன். பட் அன்பார்சினெட்லி நான் லவ் மேரேஜ் பண்ண போறேன்.” என்றான் விழியன்.
அபிராமிக்கு ஒன்றும் விலங்காமல் போக, “ரெயின்போ மால்ல காபிஷாப்புக்கு ஒருநாள் போனேன். அங்க ஒரு பொண்ணு ‘ஹலோ விழியன் வந்துட்டேன். ப்ளிஸ் காத்திருங்க’ என் பெயருல ஹனி டிப் வாய்ஸ்ல பேசினா. அந்த குரலில் திரும்பி பாரத்தேன். டெடிபியர் மாதிரி குண்டானா ஒரு பொம்மை அங்க உட்கார்ந்து ஒருத்தனை ரசிச்சா. என்ன ஏதென அவளை ஆர்ய்ந்தேன்.” என்றதும் அபிராமிக்கு தூக்கி வாறி போட்டது.
“அப்பறம் எப்படி என்னை பிடிச்சிதுனு தட்டை மாத்தினிங்க.?” என்று கேட்டாள்.
“அந்த புனைப்பெயர் விழியனுக்கு உங்களை பிடிக்காம போயிருக்கலாம். ஏன்னா அவன் வேஷமிட்டது விழியனா. ஆனா அபிஷேக்கா நுழையலை.
இந்த விழியன் விழியனாவே உங்களை ஆராய்ந்து உங்க பேச்சில உங்களை தேட ஆரமபிச்சான். எஸ் நீங்க போன ஸ்கூட்டியை தேடி ஆர்டிஓ போய் அட்ரஸ் வாங்கி உங்களை தொலைவில இருந்து பார்த்து உங்க செயல் குணம் ஈர்க்க லவ் பண்ணியதை அரேன்ஜா மாற்ற அம்மாவிடம் சொன்னேன்.
அம்மா என் ஆசையையும் எங்க பேச்சையும் புரிந்து எனக்காக இங்க வந்துட்டாங்க.
“என்ன அபிராமி குழம்பறிங்களா… ஒருத்தன் லவ் என்றதும் தெளிவா யோசித்து அவன் வருந்தக்கூடாது. அதுக்கு நாம எப்படி இருக்கோம்னு புரிஞ்சி நடந்திங்க. யாரோ ஒருத்தனை புரிஞ்ச நீங்க சரியான துணை கிடைச்சா எந்தளவு விருற்புவிங்கனு புரிந்தது. அபிராமி உனக்கான காதல் நானா மாறி உள்ளத்துல நிரம்ப காத்திருக்கேன். என்னை பிடிச்சிருக்கா” என்றான்.
“விழியன்…. என்னால நம்ப முடியலை. யாரையோ பார்த்து அவாய்ட் பண்ணினா முதல்லயே பண்ணிட்டா காயம் உருவாகாதுனு மீட் செய்தேன். அது உங்களை சந்திக்க தான் கடவுள் அமைத்த சந்தர்ப்பமா மாறும்னு கனவுலயும் நினைக்கலை.
ஒவ்வொரு பெண்ணுக்கும் காதலிச்சி அந்த காதல் கரம் பிடிக்குமானு தெரியலை. ஆனா காதல் தோல்வியில தான் என் காதல் மொட்டு விட்டிருக்குனு நினைக்கிறப்ப என்னால என்னால பேச முடியலை. நான் (fat)பேட் குறைக்க எல்லாம் முடியாது.” என்று விளக்கினாள்.
“உன்னை யாரு குறைக்க சொன்னா அபிராமி. டெடிபியராட்டும் இருக்க. உன்னை மெத்தையா அணைத்துப்பேன்.” என்றவனின் இலகுவான காதலில் மனங்கள் சங்கமித்தது.
“என்னையெல்லாம் தூக்கி சுத்த முடியாது.”
“அபிராமி அபிராமி” என்று குணா கமலாக கூறிவிட்டு “அதெல்லாம் தூக்க முடியலைனா பரவாயில்லை. என் கார்ல ஏத்திப்பேன்.” என்று கூற அபிராமியின் பூசிய உடல்வாகில் அப்படியொன்றும் விழியனின் உண்மைக் காதலின் பார்வையில் பூசிய உடல் வாகு என்பதோடு விழி விரித்து ஆனந்தமானாள்.
எக்காலத்திலும் இன்னாருக்கு இவள்(ன்) என்று நாம் பிறக்கும் சில மணித்துளிகளிலேயே ஆண்டவன் இயற்றிடுவான். அப்படியிருக்க காதல் என்று நடுவே எது வந்த போதிலும் உண்மை காதல் எதுவென்று ஒரு நொடி நம்மை உணர்த்தி விட்டு செல்ல செம்புயல் பெயர் நீர் போல வந்திடும். அப்படி அபிராமிக்கு வந்த விழியன் இவன்.
-முற்றும்.
-பிரவீணா தங்கராஜ்.
Superb …veena… அருமை…. அருமை…குண்டா இருந்தா love பண்ண கூடாதா…என்ன..?🤷♀️
சூப்பர் சூப்பர் ❤️👏🥰 காதல் பொதுவானது அது வர்ர, வளர்ற மனங்கள் சம்மந்தப்பட்டது அதுக்கு இந்த கருப்பு, சிவப்பு, குண்டு,ஒல்லி,அழகு இது எல்லாம் தேவை இல்லை, முதல் பார்வையில் காதல் என்பது அந்த நபரின் மீதான பிடித்தம் மட்டுமே அது காதல் அல்ல தொடர்ந்து பார்த்து பார்த்து பழகி ஈர்த்து தான் காதல் வருது. இன்னும் சிலருக்கு அவங்க செயல்கள் புடிச்சு கூட காதல் வரும் அங்க இந்த புற காரணங்கள் கருத்தில் பதியாது.
ரொம்ப ரொம்ப அழகு 🥰
Beautiful story