Skip to content

பிரியமானவரே என் தேவதூதனே-2

58 / 100 SEO Score

அத்தியாயம்-2

 

மெர்ஸி மேத்யூ கேக்கை வெட்டி பகிர்ந்திட, அதே போல சார்லஸ் சாரா தம்பதியரும் கேக்கை வெட்ட முனைந்தனர்.

 

“ஹலோ ஹஸ்பெண்ட்… இஇ கஷனம் முறுக்கி. ஈனிக்கு இ க்ரீம் ஒன்னு மதி” என்று சுட்டிக்காட்டி அவளுக்கானதை வெட்ட சொல்லி கூற சார்லஸோ அதே போல வெட்டி ஊட்டி விட்டான்.

 

மற்றவர்கள் கையை தட்டி அமர்க்களப்படுத்த, சாராவோ யாரையும் பொருட்படுத்தாது, சார்லஸை கட்டியணைத்து நிமிர்ந்து முகத்தை கண்டாள்.

 

“டாக்டர் சாரே… நிங்கள் ஒரு குழப்பத்தில் குடியிருக்கின்றிர். கஷ்டம் தன்னே… இங்கன இருக்கறவவள் அபிநிந்திக்கனு, எனிக்கு நிங்களோடு சாகாப்தம் தோணிண்டு.” என்று சிரித்தாள். ‘ஆங்’ என்று சார்லஸ் விழித்தான்.

“ஒ… நிங்களுக்கு மலையாளம் அறியல்லே?” என்று கேட்டுவிட்டு, தனக்கு தெரிந்த விதத்தில் தமிழில்

”டாக்டர் சார்.. வகையா என்னிடம் மாட்டிக்கிட்டிங்க. பாவம்.. எல்லாரும் வாழ்த்தறாங்க. நான் உங்களுக்காக அனுதாபப்படறேன்.” என்று சிரித்தாள் சாரா.

 

சார்லஸோ பெருமூச்சை விடுத்து தங்கை மெர்ஸியை கண்டான்.‌

 

அவள் மேத்யூவிடம் இயல்பாக தமிழில் பேச, அவனும் தமிழில் தான் பேசினான்.

 

இந்த சாராவிடம் மட்டும் மலையாள நெடி வீசவும், விழிப்பிதுங்கினான் நாயகன்.

 

வீட்டில் காதல் தோல்வி அடைந்தவன், இன்னமும் திருமணம் செய்யாமல் பிடிக்கொடுக்க மாட்டான் என்று பயந்து, மெர்ஸியின் கணவராக வரப்போகின்றவரின் தங்கை சாராவையே கட்டிக் கொடுக்க கேட்டதில், வீட்டில் பெற்றவர்கள் இப்படி பிடித்து கட்டி வைத்துவிட்டார்கள்‌.

 

சாராவிடம் தன்னிலை புரிய வைக்கும் முன் மெர்ஸியாக தன் காதல் தோல்வியை கூட, சாராவிடம் புட்டு புட்டு வைத்துவிட்டாள்.

 

இதில் தானாக ஏதோ பேசி பழகலாமென தனது க்ளினிகிலிருந்த போனில் பேச நினைத்தான். ஆனால் இதோ இப்பொழுது போல மலையாள நெடி. சோழியை போட்டு குலுக்கியது போல சத்தம். அப்படியே போனை வைத்துவிட்டான்.

 

ஒரு நாளைக்கே விழிப்பிதுங்கியது. இனி வாழ்நாள் முழுவதும் அது தொடர போகின்றது. வாழ்க்கை மொழியிலேயே வில்லங்கத்தை கூட்டுவதை அறிந்து கண்ணை சுழற்றியது சார்லஸுக்கு.

 

“நன்னே பறையறது, மனசிலகாதே அவள் கண்ணுகுள் இருக்கி பச்சிருக்குன்னு.. காண… சுந்தரியானு” என்றாள்.

 

“தேங்க்ஸ்” என்றான் சார்லஸ்‌.

 

“ஓ… மலையாளம் மனசிலாயோ?” என்று வியப்பாய் கேட்க, ”ஆங்.. இல்லை.. புரியாது… நீ.. ஏதோ சுந்தரியானு சொன்ன.. சுந்தரியானோ னா அழகாயிருக்குனு அர்த்தம் மட்டும் தெரியும்.

 

ஏதாவது கண்ணு மூக்கு வாயு பார்க்க அழகா நல்லாயிருக்கேன். நீ சொல்லற… ரைட்” என்றான்.‌

 

“ஹம்.. சரி ஏன்டா” என்றாள்.

 

நெஞ்சில் கை வைத்து ‘உப்ஸ்’ என்றான். சாரா கலகலவென சிரிக்க, அவள் தாயாரோ சிரிக்க வேண்டாம தடையிட்டார்.

 

அவர்களுக்கு ஒரு முறைப்பை பரிசளித்து சார்லஸிடம் நின்றாள் சாரா.

 

எல்லாம் புகைப்படத்திற்காக சேர்ந்து நின்றனர்.

 

சர்ச்சிற்கு பக்கத்திலேயே ஒரு ஹால் இருக்கவும் அங்கே சென்று ரிஸப்ஷன் ஆரம்பமானது.

 

அங்கேயும் இரண்டு விதமான மேடை அமைத்து, நிறுத்தவும், சொந்தம் பந்தம் உறவுகள் வரிசையாக வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

 

ஒலிப்பெருக்கியில் மட்டும் கர்த்தர் பாடல்கள் இடம்பெற்றது.

 

துகிராவோ மெர்ஸியிடம் போட்டோ எடுக்க, சென்றவள் அங்கேயே கால் மணி நேரம் கடந்தது.

“மெர்ஸி… ரொம்ப அழகாயிருக்க. ஆமா.. நீயேன் வெட்டிங் கவுன் போடலை?” என்று கேட்டாள்.

 

“மேத்யூக்கு இதான் பிடிச்சிருக்காம்.” என்று வெட்கப்பட்டாள்.

 

“ஓ… நைஸ் நைஸ்.” என்று சார்லஸ் சாராவின் கோலத்தை கண்டு, “சாரா ரொம்ப அழகாயிருக்கா? சார்லஸுக்கு ரைட் சாய்ஸ்.” என்றாள்.

 

கொஞ்ச நேரம் மெர்ஸி மேத்யூவிடம் வாழ்த்து கூறி பேசிவிட்டு, சார்லஸிடமும் புகைப்படம் எடுத்துவிட்டு சாப்பிட்டு கிளம்புவதாக துகிரா கூறினாள்.

 

துகிரா தற்போது கருவுற்று இருப்பதாலும்‌, அமுல்யாவிற்கு பள்ளியில் விடுமுறை எடுத்ததும், இஷானும் ஒரு நாள் மட்டுமே அலுவலகத்தில் விடுப்பு கேட்டு வந்திட, உடனடியாக திரும்ப வேண்டியதாக மெர்ஸியிடம் உரைத்தாள். கருவுற்றது கூட இரண்டு நாளுக்கு முன்பு தான் தெரிந்தது. அதை இன்னமும் யாரிடமும் பகிரவில்லை. மெர்ஸி இரண்டு மூன்று நாட்கள் தங்க கூறி அடம் செய்யவும் உண்மையை கூறிவிட்டாள். அதனால் மெர்ஸி துகிரா உடனே கிளம்புவதாக சொல்லவும் சம்மதித்தாள்.

துகிரா வந்தது வேறு சார்லஸின் தாய் நிர்மலாவுக்கும் மோஸஸுக்கும் பிடிக்கவில்லை.

 

அதனால் பட்டும் படாமலும் தான் மகனின் முன்னால் காதலியை கவனித்தார்கள்.

அதனாலும் துகிரா கிளம்புவதாக இருந்தாள்.

 

சார்லஸிடம் புகைப்படம் எடுக்க வந்தாள்.

 

இஷான் அமுல்யாவை தூக்கிக்கொண்டு நடக்க மேடையில் துகிராவுக்கு கால் தடுக்கியது.

 

சார்லஸோ ”துகிரா பார்த்துங்க.. கன்சீவா இருப்பதா மெர்ஸி சொன்னா.” என்று மேடைக்கு வரவேற்றான்.‌

 

சாராவோ “ஓ… சேச்சி நீங்க கர்ப்பிணியோ?” என்று கை குலுக்கி வாழ்த்த, துகிராவோ வெட்கம் கொண்டாள்.

 

“சேச்சி முகம் பிரகாசமாயி. அப்பவே சம்சாயிக்கு தோணிண்டு” என்று கேட்டதும், போட்டோகிராப்பர் போட்டோ எடுக்க நிற்க உரைத்தார்.

 

சார்லஸ் தம்பதியுடன் குடும்பமாய் புகைப்படம் எடுத்ததும், சார்லஸோ “உடனோ கிளம்புவதா மெர்ஸி அப்ப சொன்னா. சோ சாப்பிட்டு போங்க.” என்றான்.

 

“சேச்சி… இவட கேரளா பக்ஷனம் வளர நன்னாட்டமிருக்கும். தேங்காய் சேர்த்து, விபாவங்கள் ருசிக்கறமனு. நன்னாயி கழிச்சு” என்று அனுப்ப, “கண்டிப்பா..‌. கேரளா ஸ்பெஷல் ஒரு பிடி பிடிச்சுட்டு தான் போவேன்.” என்று வாழ்த்தி மேடையிலிருந்து இறங்கினாள் துகிரா.

 

சார்லஸுக்கு துகிரா போனதும், “டாக்டர் சாரே… போட்டோகிராப்பர் இவ்விட நோக்க சொல்லி பறைந்து. உங்க எக்ஸ் லவ்வர் போயே” என்று கூறவும், சார்லஸோ, “ப்ளீஸ்.. துகிராவை எக்ஸ் லவ்வர் முன்னால் காதலினு இப்படி அடைமொழி வச்சி சொல்லாத. அவ என்னோட பிரெண்ட். எனக்கும் மெர்ஸிக்கும் உள்ள பொதுவான பிரெண்ட்” என்று திருத்தினான்.

 

“ஓ..” என்று சிரித்தவள் அவன் கையை பிணைத்துக் கொண்டாள்.

 

சார்லஸுக்கு தான் புதிதான உறவில் திக்குமுக்காடி போனான்.

 

அதன் பின் நேரங்கள் கழிந்தது எல்லாம், மாயமானது.

 

ரிஸப்ஷன் சிரிப்புகளும், பிளாஷ் லைட்டுகளும் முடிந்தது. அறை அமைதியான சூழலை தத்தெடுத்தது.

 

சார்லஸ் சாரா வீட்டில் எவ்வித சாந்தி முகூர்த்தம் வேண்டாமென மறுத்துவிட்டு தனது வீட்டிலேயே இருப்பதாக உரைத்தான். அங்கே சார்லஸ் பேச்சை யார் கேட்க நினைத்தார்கள்.

மெர்ஸி மேத்யூ இருவருக்கும் ஒரு அறை அலங்கரித்தது போலவே, சார்லஸுக்கான அறையிலும், பெட்டில் வெள்ளை நிற போர்வையும் ரோஸ் பெட்டல்ஸும் அலங்காரித்து இருந்தனர்.

 

முதலில் நிர்மலா தன் மகள் மெர்ஸியை அலங்கரித்து அனுப்பியதும், மருமகளை காண வந்தார்.

 

அங்கே மரியா சாராவை அலங்கரித்து ஏதேதோ பேசி கடிந்து நின்றார். நிர்மலா வரவும் புன்னகையுடன் மாற்றினார்.‌

 

”அலங்காரம் எல்லாம் முடிந்ததா? சார்லஸ் அங்க வெயிட் பண்ணிட்டு இருப்பார். நீங்க என்ன சம்பந்தி முழிக்கறிங்க” என்று மரியாவை பார்த்து கேட்டார்.

 

மரியாவோ “இல்லை… இரண்டு கல்யாணம் ஆனது, கனவா தெரியுது?” என்று கண்ணீரை துடைத்நார்.

 

“சாரா இனி எங்க வீட்டு பொண்ணு” என்று தாடை பிடித்து கொஞ்சாத குறையாக இருந்தார் நிர்மலா. மரியத்திற்கு அப்படியிருந்தும் சிறு பயம். சாராவை அறைக்குள் அழைத்து சென்று விட்டுவிட்டு திரும்பினார்கள்‌.

 

ஒரு கல்யாணத்திற்கே வேலைகள் இடுப்பை ஒடித்துவிடும். இங்கே இரண்டு திருமணம் என்றதால் கூடுதலாக வேலைகள் இருந்திட அவரவர் உறக்கத்தை தேடினார்கள்.

 

சாரா சார்லஸ் அறைக்குள் நுழைந்தபோது, அவள் கைகள் பால் டம்ளரை இறுகப் பிடித்திருந்தாள்.

 

சார்லஸ் கதவை மெதுவாக மூடி தாழ்ப்பாளிட்டான்.

 

சாரா கண்களில் லேசான மிரட்சி இருக்குமென்று வந்தவனுக்கு அவள் கண்ணில் ஆர்வம் தென்படவும், மிரண்டது என்னவோ சார்லஸ் தான்.

 

தான் ஒரு மனோதத்துவ டாக்டர். ஆனாலும் சாராவிடம் பேசுவதற்கு தயக்கமுடன் நின்றிட, சார்லஸுக்கே அது வெளிப்படையாக தெரிந்தது. ஆனால் சாராவோ “நிங்களுக்கு நல்ல தைரியமுண்டு” என்று ஆரம்பித்தாள்.

 

“எ…எனக்கா? தைரியமா? என்ன சொல்லற?” என்றான் சார்லஸ்.

 

“பின்னே.. நம்ம விவாகத்துக்கு நிங்கள் எக்ஸ் லவ்வரை இன்வெயிட் செய்தே” என்றாள்.

 

சார்லஸ் லேசாக புன்னகைத்து, “துகிரா முதல்ல மெர்ஸிக்கு நல்ல தோழி. அதுக்கு பிறகு என்னோட தோழினு சொன்னேனே. ஆனா துகிராவை நான் தான் ஒன்சைட்டா விரும்பினேன். மத்தபடி… துகிரா என்னை விரும்பலை. ஆனா கல்யாணம் செய்ய பேசியிருந்தோம். இஷான் வந்து குழந்தையை தூக்கிட்டு போனதும், அவ அக்கா குழந்தையை தேடி போகவும், அவரை கல்யாணம் செய்தா தான் அந்த குழந்தைக்கு அம்மாவா இருப்பானு தெரியவும், நானா தான் அவளை இஷானை கட்டிக்க சொல்லி அறிவுறுத்திட்டு வந்தேன். மத்தபடி லவ்வர்ஸ் என்று ஊரை சுத்தியதில்லை‌, கைப்பிடிச்சதில்லை. எப்ப பேசினாலும் டிஸ்டன்ஸ் வச்சி தான் பேசுவேன். இஷானுக்கு அது தெரியும். அவரையும் கல்யாணத்துக்கு கூப்பிட்டேன். அவர் துகிராவை கூட்டிட்டு வந்தார். ஆக்சுவலி… அவர் தான் தைரியசாலி. தன் மனைவியை காதலிச்சவன் கல்யாணத்துக்கு கூட்டிட்டு வந்திருக்கார்.” என்று புகழ்ந்தான்.‌

 

“துகிரா சேச்சின்னா ரொம்ப இஷ்டமோ?” என்று கேட்க, “சேசே.. அப்படியில்லை. துகிரா நினைப்பு இப்ப எனக்கு சுத்தமாயில்லை. அவ என் பிரெண்ட். அவ்ளோ தான்‌.” என்றான்.

 

“நிங்கள் என்றால் எனக்கு இஷ்டம். கல்யாணம் கழிச்ச கேட்ட, நான் மறுத்து. பச்சே… சேட்டன் விவாகம் செய்யணும்னா, என்ட விவாகம் நடக்கணும்னு பிணைச்சிட்டான்.” என்று மேத்யூவை பற்றி கூறினாள்.

 

“குட் பிரதர், இன்பேக்ட் என் சிஸ்டரும் அப்படி தான். சேம் டயலாக். எனக்கு மேரேஜ் நடந்தா அண்ணாவும் மேரேஜ் பண்ணிக்கணும்னு சொன்னா. என் சிஸ்டர் கூட உனக்கு நல்ல பழக்கமோ? என் ஒன் சைட் காதல் கதை வரை சொல்லியிருக்கா? ரொம்ப க்ளோஸோ என் சிஸ்டர் கூட?” என்று இயல்பாய் கேட்டான்.

 

“ம்ம்” என்றவள் குரல் கிணற்றுக்கடியில் கேட்டது.

 

“எனிக்கு உறக்கம் வருனு” என்றாள் சாரா.

 

“ஓ… நமக்குள்ள கல்யாணமாகிடுச்சு அதுக்காக எல்லாமே இன்னிக்கே நடக்கணும்னு இல்லை. நீ..‌ தாராளமா தூங்கலாம்.” என்றான் சார்லஸ்.

 

“தேங்க்ஸ்” என்று படுத்துவிட, சார்லஸுக்கு ஒரு மாதிரி வருத்தம் உண்டானது.

 

சாரா இன்றெல்லாம் ஆசையாக தன்னை காண்பதும், பேசி சிரித்ததும், எண்ணியவன், இன்று அவள் எதிர்ப்பார்த்த இரவை தான் வழங்க இயலாதென கூறி மன்னிப்பு கேட்க எண்ணினான்.‌

 

ஆனால் அவளாக உறக்கம் வருவதாக கூறி படுக்கவும் லேசாக துணுக்குற்றான்.

 

இதுவரை சாராவிடம் பேசியது எல்லாம் துகிராவை பற்றி என்பதால், அவள் மனதை நோகடித்து விட்டோமோ என்று அவளை தீண்டினான்.‌

 

“எனிக்கு உறக்கும் வருனு. சலியப்பெறத்தெடுத்து” என்று தொந்தரவு செய்யாதே என்று கூறினாள்.

 

சார்லஸிற்கு அவள் பேசியது இம்முறை புரியாமல் போகவும், “என்ன சொன்ன? எனக்கு புரியலை? என் சிஸ்டர் தான் மலையாளத்துல பேசுவா. ஐ காண்ட்.” என்றவன் அவள் தோளை தீண்ட, “ஒரு பாரவஷம்பரஞ்சி மனசில்கில்ல? ஏனே புத்திமுட்டிக்கிறது” என்று கத்தவும் சார்லஸ் பயந்து இரண்டடி பின்னகர்ந்தான்.

 

“சாரா… ஆர் யூ ஓகே.. மார்னிங்லயிருந்து நல்லா தானே பேசின. இப்ப என்ன கோபம். நான் துகிராவை முழுசா நீக்கிட்டேன். ஷி இஸ் மை பிரெண்ட் ஒன்லி. மேரேஜிக்கு கூட என் சிஸ்டர் மெர்ஸியோட பிரெண்ட் என்ற ரீஸனுக்காக தான் வந்தா. நான் உன்னை காயப்படுத்த பேசலை.” என்று குழப்பமாய் பேசினான்.‌

 

“பிராபத்தில் நான் நன்னாயி சம்சாரிச்சு. இன்னு ராத்திரி நான் அந்தே தீருமனம் மட்டுமலே? பறையு… சார்லஸ் உண்மை பறையு?” என்று சட்டையை பிடித்து கேட்டாள்.

 

“என்ன பேசறேன்னு சுத்தமா தெரியலை.. தமிழ்ல சொல்லு. இப்ப ஏன் கோபப்படற? நான் பேசறது உனக்கு புரியறப்ப.. நீ தமிழ்ல பேசலாமே? உனக்கு தமிழ் பேச வராதா?” என்று கேட்டான்.

 

“ஓரளவு நன்னாயிட்டு வரும். நான்.. நான்… மார்னிங் நன்னாயிட்டு பேசி… இப்ப.. ராத்திரி அப்நார்மலாயிட்டு இருப்பதா பறைஞ்சே?” என்

று கேட்க, “இல்லை.. அப்படி சொல்லலை. நீ காலையில சிரிச்சு சந்தோஷமா இருந்த. இப்ப… ஏய்.. சாரா… அழுவறியா?” என்று அதிர்ந்தவனாய் கேட்டான்.

 

-தொடரும்.

 

2 thoughts on “பிரியமானவரே என் தேவதூதனே-2”

  1. Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 endha ponnu enna maathi maathi pesudhu🙄🧐🤔 yedhavudhu prechanai erukumo🙄

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!