அத்தியாயம்-8
சார்லஸ் சாரா மணமுடித்து ஒரு வாரம் இருந்த நிலையில் பொன் மாலை நேரம் புலர்ந்தது.
வீட்டின் முன் நீண்ட நிழல்கள் படர ஆரம்பித்திருந்தது. கேரளாவின் அந்த ஈரமான காற்று, சூரியன் மறையும் நேரத்தில் ஒரு விதமான அமைதியை கொண்டு வந்தது.
சாரா சிற்றுண்டி செய்வதற்கு சமையலறையில் நிர்மலாவுக்கு உதவிக் கொண்டிருந்தாள். அவள் கைகள் வேலையில் ஈடுபடுத்தினாலும், மனம் ஏதோ வேறு எண்ணத்தில் இருந்தது.
அந்த நேரத்தில் ஹாலில் இருந்த நிர்மலாவின் போன் கர்த்தரின் பாடலை இசைத்து ஒலித்தது.
எந்நாளுமே துதிப்பாய்… என் ஆத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்…
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவும் மறவாது
பாவங்கள் எத்தனையோ நினையாதிருந்தார்; உன்
பாவங்கள் எத்தனையோ
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மாதயவை நினைத்து
எத்தனையோ கிருபை – உன் உயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி
செத்திடாதபடி ஜீவனை மீட்டதால்
பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே சத்தியமேயிது’ என்ற நேரம் அதனை உயிர்பித்து “ஆங்… சொல்லு மெர்ஸி” என்றார்.
அந்த பக்கம் இருந்து மெர்ஸியின் குரல் சந்தோஷத்தோடு ஒலித்தது.
“அம்மா நல்லாயிருக்கிங்களா? அப்பா அண்ணா, சாரா நல்லாயிருக்காளா?” என்று குதுகலமாக குரல் தந்தாள்
“எல்லாரும் சௌக்கியம் மெர்ஸி. குரல் ரொம்ப துள்ளலா, சந்தோஷமா இருக்கே. என்ன விசேஷம்?” என்றார்.
“அம்மா… இங்க மேத்யூ ஆபிஸில் குலுமனாலிக்கு இரண்டு பிளைட் டிக்கெட் தந்திருக்காங்க.
நாங்க நாளைக்கு குலுமனாலிக்கு ஹனிமூன் போறோம். மேத்யூ எல்லாம் ஆல்ரெடி பிளான் பண்ணிட்டாரு.
அங்க ஒரு ரிசார்ட் கூட புக் பண்ணிருக்காரு. சோ… நாங்க அங்க போக டிரஸெல்லாம் எடுத்து வைக்கறேன். அதை சொல்ல தான் கால் பண்ணறேன்.” என்று அந்த வார்த்தைகளில் இருந்த உற்சாகம் நிர்மலாவுக்கு புரிந்தது.
திருமணமாகி ஹனிமூன் செல்லவில்லையா என்று நிர்மலாவே கேட்க நினைத்தார். இன்று மகள் சொல்லவும், சந்தோஷம் கொண்டார்.
“அட… நல்லா இருக்கு. போங்க மா… ஹனிமூன் போயிட்டு வாங்க. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.” என்றார்.
“அம்மா…” என்று சற்று தயங்கி,
“சார்லஸும் சாராவையும் எங்கயாவது ஹனிமூன் போக சொன்னிங்களா அம்மா. அவங்களும் கொஞ்சம் வெளிய போயிட்டு வரலாம். அண்ணாவிடம் கேட்டு பாருங்களேன்” என்றாள்.
நிர்மலா கண்கள் சிந்தனையும் சற்று மாறின.
“அதான் நானும் யோசிச்சுட்டே இருந்தேன். உங்கண்ணா இங்க அவளோட நல்லா தான் பேசறான். அவளுமே சார்லஸை நேசிக்கறா. சொல்லி பார்க்கணும். உங்கண்ணா மனசுல இன்னும் என்ன இருக்கோ?” என்றார் மெதுவாக.
“அண்ணா மனசுல யாருமில்லைம்மா. நீயா ஏதாவது முடிந்துப்போன விஷயத்தை பேசாதிங்க.
சாராவோட போகறதுக்கு நீங்க கொஞ்சம் புஷ் பண்ணுங்க. அது போதும்.” என்றாள்.
சரி சரி என்று பேச்சை முடித்துவிட்டு, போனை வைத்தார்.
சில நிமிடங்களில்,
“சார்லஸ்” என்று அழைத்தார்.
சார்லஸ் ஹாலுக்கு வந்தான்.
“ம்ம் என்னம்மா?” என்றான்
“மெர்ஸி, மேத்யூ நாளைக்கு குலுமனாலி ஹனிமூன் போறாங்களாம்” என்றார்.
“வாவ் சூப்பர்மா.” என்றான் ஆனந்தமாக.
“நீயும் சாராவை எங்காவது வெளியே அழைச்சிட்டு போயிட்டு வரலாம்லடா” என்றார்.
சார்லஸ் முகத்தில் உடனே ஒரு சிறிய மாற்றம்.
“அம்மா… இப்ப என்ன அவசரம்.” என்றான்.
“அது என்னடா கேள்வி? புதுசா கல்யாணம் ஆனவங்க. வெளிய போகணும். ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கலாமே. மெர்ஸிமேத்யூ போறார் என்றதும் சூப்பரனு சொல்லற. நீங்களும் தான் புதுமண தம்பதி.” என்றார்.
சாரா அங்கே அமைதியாக நின்றாள். அவள் எதுவும் பேசவில்லை. ஆனால் அவளது பார்வை மட்டும் சார்லஸை நோக்கி இருந்தது. சார்லஸ் அதை கவனித்தான்.
“அதெல்லாம் போகலாம் மா… கொஞ்சம் நாள் ஆகட்டும். எனக்கு வேலை இருக்கு.” என்று மெதுவாக தள்ளிப் போட்டான்.
“பின்னாடி… பின்னாடி…ன்னு சொல்லிட்டு போவே மாட்டீங்க. இப்போதே போங்க.” என்றார் நிர்மலா.
மோஸஸும் பேச ஆரம்பித்தார். “அம்மா சொல்றது சரிதான் டா. வேலை எப்பவும் இருக்கும். வாழ்க்கைல இந்த டைம் திரும்ப வராது.” என்றதும் சார்லஸ் சிரித்தான்.
“நான் தான் சைக்காலஜிஸ்ட். எனக்கே பாடம் நடத்தறிங்களா?” என்றதும் நிர்மலா சற்று கடிந்து பார்த்தார்.
“சைக்காலஜிஸ்ட் அப்படின்னா உன் லைப்பையும் அனைலைஸ் பண்ணிக்கோ. கல்யாணமாகி ஹனிமூன் போக கூட என்ன தயக்கம்? சாரா நீ ஏதும் கேட்க மாட்டியா?.” என்றதும் சார்லஸ் உடனே பதில் சொல்லவில்லை.
சார்லஸ் தடுமாறவும், சாரா மெதுவாக, அவனுக்கு ஆதரவு தரும் நோக்கத்துடன் “இவர் பிஸியாக ஆயிருந்தால்… பின்னே போகலாம்…” என்று சொன்னாள்.
அந்த ஒரு வரி சார்லஸிற்கு இதம் தந்தது. அதில் இருந்த மென்மை, எதிர்பார்பில்லா அன்பு, இரண்டும் சார்லஸை தெம்பூட்டியது.
“ஆங்… நீயும் அவனோட சேர்ந்துக்கோ… அப்பறம் அவன் மனைவி குடும்பம்னு ஆகவேண்டாமா?” என்று கடுகடுக்க, அந்த நேரத்தில் சார்லஸின் போன் ஒலித்தது.
அவன் திரும்பி பார்த்தான். அதில் தெரியாத நம்பராக இருந்தது.
“ஹலோ” என்று அன்னை பேசும் வார்த்தையில் சலிப்பை இதில் காட்டினான்.
அந்த பக்கம் இருந்து பதட்டமான குரல். “டாக்டர்… நான் வில்லியம் பேசுறேன். நீங்க லாஸ்ட் மந்த் பார்த்த பேஷண்ட் ஜோசப்போட தந்தை. டாக்டருக்கு நினைவிருக்கா? அடுத்த கவுன்சீலிங் கூட வரச் சொல்லியிருந்திங்க” என்றதும் சார்லஸ் உடனே சீரியஸாக மாறினான்.
“ஆ..ஆமா… உங்க பையன் ஜோஸபோட ரிப்போர்ட் வந்துடுச்சு… கொஞ்ச நாள் முன்ன பார்த்தேன். நானே கால் பண்ண நினைச்சேன். பட் என்னோட மேரேஜ் இஸ்ஸூல இருந்தேன். நீங்களும் அதுக்குப் பிறகு கால் பண்ணலை. இப்ப ஜோஸப் எப்படியிருக்கான்.” என்றான். அவன் சாராவுக்கு க்ளினிக் சென்ற போது கூட அந்த கேஸ் பைலை கவனித்து கொண்டான். அதனால் பேஷண்ட் நினைவு இருந்தது.
“டாக்டர்… அவன் ரொம்ப அக்ரஸிவ் ஆகிட்டான். வீட்டில எல்லாரையும் அடிக்கிறான். இப்போ ரூம்ல பூட்டிக்கிட்டிருக்கான். ப்ளீஸ்… நீங்க உடனே வந்து பார்க்க முடியுமா?” என்றார்.
சார்லஸின் முகம் மாறியது.
ஒரு நொடி கூட யோசிக்கவில்லை.
“நான் வர்றேன். பட் அரை மணி நேரம் ஆகுமே. சரி… நீங்க அவனை சமாதானமா பேசி உட்கார வையுங்க. வந்துடறேன்.” என்றவன் மறுபக்கம் வில்லியம்ஸின் குரலில் உடனே கிளம்புவதாக போனை வைத்தான்.
அன்னை நிர்மலா சார்லஸை பார்த்தார்.
“என்னடா? திரும்பவும் க்ளினிக் பேஷண்ட்னு சாக்கா சொல்லி ஓட பார்க்கற.” என்றார்.
“அம்மா… ஒரு அர்ஜெண்ட் கேஸ் மா. பேஷண்ட் ஸ்டேபிளா இல்ல. நான் சாக்கு போக்கு சொல்லி ஓடலை.” என்றுரைத்தான்.
“அதுக்கு இப்பவே போகணுமா? இப்படி தான் கல்யாணம் செய்ய பேச்சை ஆரம்பித்தப்ப ஓடின. இப்ப ஹனிமூன் என்றதும் இதுக்கும் நழுவற. அப்ப இது சாக்கு போக்கு இல்லையா?” என்றார்.
“மா… இது பேஷண்ட் நிலை தெரிந்தும் டிலே பண்ணக்கூடிய விஷயம் இல்ல. அதனால இந்த பேச்சை இப்ப விடுங்க.” என்று தாமதிக்காமல சார்லஸ் தனது வண்டி சாவியை எடுத்துவிட்டான்.
சாராவை ஒரு நொடி பார்த்தான்.
“நான் கிளினிக்குப் போயிட்டு வர்றேன். லேட்டா ஆகலாம். சாப்பிட்டு தூங்கு. எனக்காக வெயிட் பண்ணாத” என்று கூற
சாரா தலையசைத்தாள்.
அவள் முகத்தில் ஏமாற்றம் இல்லை. ஹனிமூன் பற்றிய ஏக்கம் இல்லை. அவளுக்கும் அவள் மறைந்திருக்கும் விஷயத்தை சார்லஸிடம் பேச வேண்டுமென்ற எண்ணம் மனதில் மிதக்கின்றதே.
சார்லஸ் வெளியே போக,
நிர்மலா அவனை கோபமாக பார்த்துக்கொண்டே நின்றார்.
“பார்… பேஷண்ட் என்று வந்தா எல்லாம் சரி. ஆனா வீட்டுல இருக்குறவங்களையும் கவனிக்கணும். இவன் இன்னமும் அவனிஷ்டத்தில் தான் இருக்கான்.” என்று மெதுவாக சொன்னார்.
மோஸஸ் சிரித்தார். “அவன் தனியா இல்லை இனிமேல் கற்றுக்குவான் நிர்மலா. நீ சார்லஸ் விஷயத்தில் ரொம்ப மூக்கை நுழைக்கிற” என்றார்.
சாரா மக்கள் ஏறும் பெரிய போட்டில் தனது இருசக்கர வாகனத்தை ஏற்றி பேசுவது தூரத்திலிருந்து கவனித்தாள்.
போட்டில் ஏறி அமர்ந்ததும் போட் புறப்பட கண்டாள். நிர்மலா மோஸஸ் அவர்களுக்குள் பேசி சென்றதால், வீட்டுக்குள் அமைதி திரும்பியது.
இரவு உணவு உண்ணும் நேரம் சார்லஸிற்கு அழைத்து பார்த்தாள். அவன் சைலண்டில் போட்டுவிட்டு பேஷண்டை கவனிப்பான். போன் போடுவது எல்லாம் தேவையற்றதென நிர்மலா தன் மகன் சார்லஸை வைதார்.
அதனால் சாரா உணவை சாப்பிட்டு முடிக்க, இரவு சார்லஸும் உறங்க கூறியதால், மூன்று பேரும் பிரார்த்தனை செய்ய அமர்ந்தனர்.
நிர்மலா மெதுவாக சாராவை நோக்கி, “சாரா… நீ ஒரு ஜெபம் பண்ணுமா மா… எல்லாருக்காக…” என்று சொன்னார்.
சாரா சற்று திடுக்கிட்டு அவரை பார்த்தாள்.
பிறகு அமைதியாக தலையசைத்து, மெதுவாக மண்டியிட்டு அமர்ந்தாள். கைகளை இணைத்துக் கொண்டு, கண்களை மூடியவள், மெதுவாக ஜெபித்தாள்.
“எண்டே கர்த்தாவே…
இந்நாளிலே எங்களுக்கு தந்த எல்லா நன்மைகளுக்கும் நன்றி பறையுன்னு ஆண்டவரே…
எண்டே வீடும்…
சார்லஸ் வீட்டும்…
இரண்டு குடும்பங்களையும் நீ கரங்களில் எடுத்து ஆசீர்வதிக்கனே ஆண்டவரே…
அம்மச்சியும் அச்சனும்…
அத்தையும் அச்சனும்…
எல்லாருக்கும் நல்ல ஆரோக்கியமும் சமாதானமும் தரனே…
எங்க வீட்டிலே எந்த துக்கமோ, பிரச்சினையோ வராதபடி நீ காத்திடணும்.
நாட்டில் எல்லையில்லா வளமும் பாதுக்காத்திடணும்.
மக்கள் ஜீவித்திட அருளுமைய்யா…
என்ட சேட்டன்
அவர் பார்க்க போயிருந்த அந்த பேஷண்டை… திடக்காத்திரமாக மனதையும் நலத்தையும் அமைதியும் தாரும்.
எங்கள் வாழ்க்கை நீயே நடத்தனே…
இயேசு நாமத்தில் ஜீவத்த அனைத்து உயிருக்காகவும் வேண்டுகின்றோம்
ஆமேன்…”
சாரா கண்களை திறந்ததும், அவள் முகத்தில் ஒரு அமைதி இருந்தது.
நிர்மலா அவளை பார்த்துக் கொண்டிருந்தார்.
அவள் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனசுக்கு உட்பட்டது.
“ஆமேன்…” என்று மெதுவாக சொன்னார்.
மோஸஸ் நிர்மலா உறங்க செல்லவும், சாரா மொட்டு மொட்டு விழித்தபடி, சார்லஸிற்காக உறங்காமல் காத்திருந்தாள்.
ஆனால் நேரம் போக சோபாவிலேயே உறங்கி வழிந்தாள்.
சார்லஸ் வரும் நேரம் மெதுவாக கதவை திறந்து வந்த சமயம் உறங்கி வழிந்த சாராவை தான் கவனித்தான்.
அன்னை தந்தை அறையை கவனிக்க அது தாழிடப்பட்டிருந்தது.
தனக்கு போனில் அழைத்து பார்த்து, வாசலில் எதிர்பார்த்து, அப்படியே உறங்கியிருப்பாளென்று யூகித்தான்.
அவளை தொட்டு எழுப்ப முனைய, சாராவோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.
வாசல் கதவை தாழிட்டவன், உறங்கும் சாராவை இரு கைகளில் ஏந்திக்கொண்டு அறையில் மெத்தையில் கிடத்தினான்.
“டாக்டர் சாரே… எனிக்கு நின்னோடு ஒரு காரியம் பரையணும்.” என்று உறக்கத்தில் உலறினாள்.
“பறையலாம் பறையலாம்.” என்று நெற்றியில் முத்தமிட்டான்.
சாராவுக்கு தரப்படுகின்ற கன்னத்து முத்தம் இன்று இடம் மாற்றம் பெற்று நெற்றியில் விழுந்தது.
பேஷண்டை பார்த்துவிட்டு வந்ததால் லேசான சோர்வும் வாட்ட, குளித்து முடித்து வந்தான்.
மெத்தையில் படுத்ததும், பாரம் களைய, சாரா அவளது வலது காலை சார்லஸ் முதூ போட்டபடி, கையையும் சார்லஸ் நெஞ்சில் போட்டாள்.
சார்லஸோ, கழுத்தை திருப்பி, சாராவை கண்டான்.
சின்ன ஒளியில், சாரா முகம் பிரகாசமாக தெரிந்தது.
ஹனிமூன் போக கூறி அன்னை கூறுகின்றார். தங்கை மேத்யூவுடன் போனால் தானும் சாராவுடன் செல்ல வேண்டுமா? மனம் மாறி பேச வேண்டும். அதெல்லாம் நன்றாக தான் இயல்பாக பேச வருகின்றது. அதை தாண்டி நெருக்கமாய் முன்னேற எது தடுக்கின்றது? என்று யோசித்தான்.
தனக்கு மட்டுமில்லை இந்த விஷயத்தில் சாராவுமே அவசரம் காட்டவில்லை என்ற விஷயமும் புரிந்தது.
அவளும் ஏதோவொரு காரணத்திற்காக ஹனிமூன், நெருக்கம், இரண்டிலும் அமைதியாக தான் இருக்கின்றதாக புரிந்தது.
ஒருவேளை காதல் தாண்டி காமம், இயல்பாக மலருமோ? தினம் தினம் புரிதலோடு ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணம் மனதில் கட்டாயத்தில் அமைகின்றதால் தான் இத்தனை தடுமாற்றம் ஏற்படுகின்றதா?
சார்லஸ் இதை
யெல்லாம் யோசிக்க, சாராவோ சார்லஸை நெருக்கமாய் தலையணை போல கட்டியணைத்து கொள்ள, சார்லஸோ ‘ஹனிமூனுக்கு டிக்கெட் எடுக்க வச்சிடுவா போலயே’ என்று புன்னகை பூத்தான்.
-தொடரும்.

Super sis nice epi 👌😍❤️ sara nalla pesura aana enna thayakkam ah erukum parpom 🤔🧐
பிரியமானவரே என் தேதூதனே…!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 8)
அட.. ரெண்டு பேர் மனசிலேயும் ஏதோ கள்ளத்தனம் இருக்கும் போலவே, அதனால் தான் ரெண்டு பேருக்குமே ஹனிமூன் போக அவசரம் இல்லைப் போல. இந்த சார்லஸ் துகிராவை ஒருத்தலையாத் தானே காதலிச்சான் அப்புறம் என்ன,..? குழந்தைக்காகவும் இஷானுக்காகவும் விட்டுக் கொடுத்துட்டான். ஆனால் இந்த சாராத்தான் ஏதோ மறைக்கிறாளோன்னு தோணுது, நிச்சயமா அது காதல் மட்டும் கிடையாது, வேறெதோ..?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Wow super super. Very intresting sis.
Ticket edu charles anga poi antha thanimaila alaga pesi manasula irukuratha rendu perum veliya sollunga apo thane vali pirakum next life la enter aga mudium ippadiye yosicha onum pana mudiyathu nee already pshycatrist so inum konjam try pani pesa vai sara va