Skip to content
Home » About

About

Welcome

பிரவீணா தங்கராஜ் நாவல்களை அச்சுப் புத்தகமாக (Paperback) வாங்க விரும்புவோர்pravee.thangaraj@gmail.com என்ற மின்னஞ்சலிலும் அல்லது 98409 32361 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு புத்தகம் வாங்கலாம்.

Buy Praveena Thangaraj Books – Praveena Thangaraj Novels

பிரவீணா தங்கராஜ் என்று, நாவல் எழுத்தாளராக அடையாளப்படுத்தி கொள்ளும் நான் சென்னையில் வசிப்பவள். சிறு வயதில் தங்கமலர், சிறுவர்மலர், கல்கண்டு இதழ் என்று புத்தகம் வாசிக்கும் எனது பயணம், இதோ தொடர்ந்துக் கொண்டே வந்து, நாவல் எழுத்தாளராக உங்களுக்கு அறிமுகமாகின்றேன்.   

நம் வாழ்வில் சின்ன சின்ன நிகழ்வுகளை சுவைப்பட எழுதி வைப்பதற்கு டைரி தேவைப்படும். அப்படி ஆரம்பித்து எழுத பழகியதே என் எழுத்தின் ஆரம்பம்.

   கல்லூரியில் விளையாட்டாய் கவிதையை கிறுக்கி தோழிகளிடம் காட்டிய பொழுது எனது முதல் கிறுக்கல்கள் ஆரம்பமானது. சின்ன சின்னதாய் வாழ்க்கையில் என்னோடு கலந்தவையை கவிதை மூலம் இயற்றி இரண்டாம் கட்டத்திற்கு வந்தேன். அதனை வீட்டில் என் அத்தை(அப்பாவின் அக்கா) மாமா(கல்லூரி பிரின்சிபால் பதவியில் இருந்தவர்) இருவரிடமும் காட்டிய அன்று ‘பொண்ணு நீ என்னை மாதிரியே கவிதை எழுதற, எழுதுவது எல்லாருக்கும் வராது. உனக்கு கவிதை எழுத வரும் என்ற பொழுது, நீ இன்னமும் நிறைய எழுது என்று தட்டி கொடுத்து பிழை களைந்து பாராட்டினார்கள். இதுவே என் முதல் ஊக்கம். அதன் பின் மனதில் ரசித்தவை எழுத்தில் வடித்தேன். சமூகத்தின் மீது எழும் கோபத்தையும், இயற்கையை ரசிப்பதையும், எழுத, அடுத்து அத்தியாயமாக காதலையும் எழுத வைத்து கவிதை வடித்தேன். மங்கையர் மலர் ராணிமுத்து, கல்லூரிமலர், குமுதம் சிநேகிதி, என்று புத்தககளில் வரிசையாக கவிதை வெளிவந்தது. என் எழுத்துக்கு அது அஸ்திவாரம்.

கவிதை கொஞ்சம் எட்டி வைத்து, பொழுது போகவேண்டுமென்று கதை படிக்க ஆரம்பித்தேன். புத்தகப் ப்ரியையான என்னை, கவிதை மட்டுமா? கதையும் எழுது என்ற மனசாட்சியின் தூண்டுதலில் எழுத துவங்கியது. நாம் நம் வாழ்வில் பொதுவெளியில், விழாக்களில், நல்லது கெட்டது நிகழ்ச்சியில் என்று பல அனுபவத்தினை உள்வாங்கி, வாழ்வின் பிரச்சனைகளையும், தீர்வாக மாற்றி, நாயகன் நாயகியாய் உருவகித்து பிரச்சனையை அவர்களுக்குள் ஏற்றி, அதற்கு தீர்வும் கொடுத்து நாமும் ஒரு பிரம்மனாய் கதாபாத்திரத்தின் மீது தலையெழுத்தாக எழுதி, அவர்களை கதை மாந்தர்களாக நடமாட வைப்பதே ஒரு அலாதி மகிழ்ச்சி.  அப்படிப்பட்ட அலாதியை, விரும்பி நாவல்களாக படைக்க ஆரம்பித்து, இதோ வாசகர்களான உங்கள் முன், நாவல் எழுத்தாளராக மாறியுள்ளேன். அதன் பயணம் இதோ இப்பொழுது praveenathangarajnovels.com என்ற தளம் அமைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இதற்கு முன் எழுதிய 80 கதைளில் பாதி அச்சு புத்தகமாகவும் மற்றும் அமேசானில் இ-புத்தகமாக காபிரைட் செய்யப்பட்டுள்ளது. அதில் காதல் குடும்பம், உறவு, நட்பு, பெண்களை முன்னிறுத்தி மையமாகவும், திகில் நகைச்சுவை மற்றும் சமூகம் சார்ந்த கதைகள் அடங்கியன.

எனது கதைகளின் பட்டியலும், சுட்டிகளும் அறிந்திட praveenathangarajnovels.com என்ற தளத்தில் காணலாம். மேலும் ராணி முத்து நாளிதழில் *பிரம்மனின் கிறுக்கல்கள்* என்ற நாவல், ஜூன் 16, 2022 வெளியாகி உலகத்திற்கு என்னை அடையாளப்படுத்தியது. அதற்கு முன்பிருந்தே என் நாவலை தொடர்ந்து பதிப்பித்த ஸ்ரீ  பதிப்பகத்தினருக்கும் உஷா மேம் லதா மேம் இருவருக்கும் எனது நன்றிகளும் பேரன்பும். 

தற்போது பூ மகள் மாதயிதழிலும் கதைகள் வெளிவருகின்றன. 💖என்னுடைய இனி வரும் கதைகள் அருணோதயம் பதிப்பகம் மூலமாக புத்தகங்களாக வெளியாகும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கின்றேன்.💖

Copyright © 2015 by Praveena Thangaraj All rights reserved.

இதுவரை எழுதிய நாவல்கள் :

1.) முதல் முதலாய் ஒரு மெல்லிய (ஶ்ரீபதிப்பக வெளியீடு)
2.) புன்னகை பூக்கட்டுமே  (ஶ்ரீபதிப்பக வெளியீடு) 
3.) கனவில் வந்தவளே
4.) விழிகளில் ஒரு வானவில்
5.) உன்னோடு தான் என் பயணம் 
6.) உன்னில் தொலைந்தேன் 
7.) இதயத்தினுள் எங்கோ 
8.) தித்திக்கும் நினைவுகள் 
9.) காலமும் கடந்து போவோம் வா 
10.) ஸ்டாபெர்ரி பெண்ணே (Notion press வெளியீடு)
11.) வன்மையாய் வந்து சேர்ந்ததென்ன (Notion press வெளியீடு)
12.) உன் விழியும் என் வாளும் சந்தித்தால் (புத்தகமாக வெளியான நாவல்)
13.) காதலாழி  
14.) கள்வனின் காதலி நானே 
15.) தாரமே தாரமே வா 
16.) அபியும் நானும்
17.) நிலவோடு கதை பேசும் தென்றல்
18.) ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில் (Notion press வெளியீடு)
19.) நுண்ணோவியமானவளே (புத்தகமாக வெளியான நாவல்)
20.) மையல் விழியால் கொல்லாதே
21.) முள்ளும் உண்டு மலரிடம் 
22.) பனிக்கூழ் பா(ர்)வையன்றோ (புஸ்தகா வெளியீடு)
23.) காதல் மந்திரம் சொல்வாயோ (ஶ்ரீபதிப்பக வெளியீடு)
24.) மடவரல் மனவோலை (Notion press வெளியீடு) 
25.) என்னிரு உள்ளங்கை தாங்கும் (ஶ்ரீபதிப்பக வெளியீடு)
26.) தீவிகை அவள் வரையனல் அவன் (புஸ்தகா வெளியீடு)
27.) சிரமமில்லாமல் சில கொலைகள் (புஸ்தகா வெளியீடு)
28.) ஓ மை பட்டர்பிளை (புஸ்தகா வெளியீடு) 
29.) முத்தமிட்டு சுவடுபதி ஆலியே  (புஸ்தகா வெளியீடு)
30.) பூட்டி வைத்த காதலிது  (ஶ்ரீபதிப்பக வெளியீடு) பிரதிலிபி தளம் நடத்திய ‘வித்தியாசமான காதல் சீசன் 2’  என்ற போட்டியில் குறிப்பிடத்தகுந்த படைப்பில் இடம் பெற்றவை
31.)உள்ளத்தில் ஒருத்தி(தீ) 
32.) காலமறிதல்
33.) இமயனே இதயனே (புஸ்தகா வெளியீடு)
34.) துஷ்யந்தா… ஏ.. துஷ்யந்தா… (ஶ்ரீபதிப்பக வெளியீடு)
35.) நதி தேடும் பெளவம் (Notion press வெளியீடு)
36.) நன்விழி (Notion press வெளியீடு) 
37.) இணையவலை கட்செவி அஞ்சல் பிரதிலிபி தளம் நடத்திய ‘மகாநதி’ என்ற போட்டியில் குறிப்பிடத்தகுந்த படைப்பில் இடம் பெற்றவை(Notion press வெளியீடு) 
38.) தழலில் ஒளிரும் மின்மினி (Notion press வெளியீடு)
39.) மனதோடு மாய மின்சாரம் (Notion press வெளியீடு) 
40.) ஹைக்கூ காதலனே
41.) மீண்டு(ம்) வருவேன் (புஸ்தகா வெளியீடு)
42.) செந்நீரில் உறையும் மதங்கி ‘பிரதிலிபி’ தளம் நடத்திய ‘சங்கமம்’ என்ற போட்டியில் நான்காம் இடம் பிடித்து 1000 ரூபாய் பரிசு பெற்றவை.  மேலும் எழுத்துவடிவ நேர்காணல் தளத்தில் இடம் பெற்றது.(Notion press வெளியீடு)
43.) ஏரெடுத்து பாரடா… முகிலனே…
44.) வல்லவா எனை வெல்லவா
45.) உயிர் உருவியது யாரோ(Notionpress வெளியீடு)
46.) பிரம்மனின் கிறுக்கல்கள் (ராணிமுத்து வெளியீடு) 2022 -இல் ஜூன் 16 அன்று வெளியான நாவல் 
47.) விலகும் நானே விரும்புகிறேன் (Notion press வெளியீடு) 
48.) 90’s பையன் 2k பொண்ணு (ஶ்ரீபதிப்பக வெளியீடு)
49.) அவளைத்தேடி (Notion press வெளியீடு)
50.) இதயத்திருடா
51.) பூ பூக்கும் ஓசை (Notion press வெளியீடு) (நந்தவனம் தளத்தில் குறுநாவல் போட்டியில் 3000 ரூபாய் இரண்டாம் பரிசு பெற்றவை)
52.) நேசமெனும் பகடை வீசவா (பிரதிலிபி தளம் நடத்திய ‘வித்தியாசமான காதல் சீசன்’ என்ற போட்டியில் குறிபிடத்தகுந்த படைப்பில் இடம் பெற்றவை)
53.) மேகராகமே மேளதாளமே
54.) ஜீவித்தேன் உந்தன் கவிதையில்
55.) நில் கவனி காதல் செய் (பிரதிலிபியில் சூப்பர் ரைட்டர் 4 போட்டிக்கு எழுதி 6வது இடத்தில் வெற்றி பெற்று 3000ரூபாய் பரிசு பெற்றது)
56.) ரசவாதி வித்தகன் (அருணோதயம் வெளியீடு) 
57.) பஞ்ச தந்திரம் (புஸ்தகா வெளியீடு)
58.) ஸ்மிருதி (ஶ்ரீபதிப்பக வெளியீடு)
59.) நீயின்றி வாழ்வேது (புஸ்தகா வெளியீடு)
60.) நான் கொஞ்சம் அரக்கி
61.) மர்ம நாவல் நானடா (புஸ்தகா வெளியீடு)
62.) என் காதல் கல்வெட்டில்
63.) காதல் பிசாசே (ராணி முத்து வெளியீடு) 2025 மார்ச் 16 இல் வெளியான நாவல்.
64.) நீ என் முதல் காதல்
65.) வினோத கணக்கு 
66.) மனதில் விழுந்த விதையே (வைகை பதிப்பக வெளியீடு) (வைகை தளத்தில் நடைப்பெற்ற கனா காணும் பேனாக்கள் போட்டியில் மூன்றாம் இடமும் 2000ரூபாய் பரிசுப் பெற்ற நாவல்)
67.) கால் கிலோ காதல் என்ன விலை?
68.) நீயென் காதலாயிரு 
69.) என் நேச அதிபதியே
70.)காயமொழி
71.) எந்தன் உயிரமுதே (பூமகள் மாதயிதழில் வெளயீடு)
72.)வெண்மேகமாய் கலைந்ததே
73.)மௌனமே வேதமா (பூமகள் மாதயிதழில் வெளியீடு)
74.)கண்ணிலே மதுச்சாரலே
75.) உயிரில் உறைந்தவள் நீயடி (அருணோதயம் வெளியீடு) 
76.) மனமெனும் ஊஞ்சல் (பூமகள் மாதயிதழ் வெளியீடு)
77.)நெஞ்சை கொய்த வதுகை
78.)ஆலகால விஷம் (சாரல் தளத்தில் வில்லங்க பிரிவுகளில் 2000 பரிசு பெற்ற நாவல்)
79.)காதல் இயமானி
80.)தென்றல் நீ தானே… (பூமகள் மாதயிதழ் வெளியீடு)
எழுதி கொண்டிருப்பது 
81.)அலப்பறை கல்யாணம்
82.) நயனமே நான் தானடி
83.)ஹலோ மிஸ் எதிர்கட்சி
84.)தேநீர் மிடறும் இடைவெளியில்…  
85)ஐயங்காரு வீட்டு அழகே 
Relay story 
1. தேடி வந்த திரவியமே (ஶ்ரீபதிப்பக வெளியீடு)சங்கமம் தளதத்தில் முதல் பரிசு வென்றவை.         
2. சிறை பிடிப்பாயா பொற்சித்திரமே

நிலவோடு கதை பேசும் தென்றல்-22

 💖22 கவியரசனுக்கு நம்பிக்கை இல்லை கமிஷனர் அலுவலகத்தில் நேராக பார்த்து கொண்டு இருக்கின்றான். வந்து இருபது நிமிடம் நேரம் தான்…

Read More

Hello Miss எதிர்கட்சி-4

அத்தியாயம்-4   ஆராவமுதன் தன் போனைசெயல் புரிய வைக்க போனின்உதிரி பாகங்களை மீண்டும் இணைத்து ஆன் செய்ய இம்முறை உயிர்…

Read More

அன்பென்ற மழையிலே 22 -final

மழை -22- final  ப்ரீத்தியின் குழந்தையை பார்க்க வந்த எழிலரசிக்கு , குழந்தையின் தகப்பன் பிரேம் என்றதில் பெரிய அதிர்ச்சி….

Read More