��36��
அன்றைய ஹோட்டல் பணியை பரபரப்பாய் செய்து முடித்தான் அபி. அவனை ஆரம்பம் முதலே
ஓரவிழியில் கவனித்துக்கொண்டிருந்த சுரேஷ், அவன் வெளியில் கிளம்பும் நேரம்,
“அபி நானும் வரவா??” , என்று வாய் தான் கேட்டது, ஆனால் சுரேஷ் வண்டியின் பின்புறம் ஏறி
அமர்ந்திருந்தான்.
அபி கலகலவென்று சிரித்துவிட்டு, “எங்க போறன்னு கேட்டா நானே சொல்லப்போறேன். இல்ல
பேசாம என்னோட வந்துடணும். அதை விட்டுட்டு, இதென்ன ஏறி உக்காந்துட்டு ஒரு கேள்வி?”,
என்று முழங்கையால் பின்னால் இருந்த சுரேஷின் வயிற்றில் குத்த,
“அடேய் சீக்கிரம் கிளம்பு, போய்ட்டு மதிய சமையல் ஆரம்பிக்கறதுக்குள்ள வரணும்.”, என்று
அவசரப்படுத்தினான்.
வண்டியை சீரான வேகத்தில் செலுத்திய அபி, “நான் தான் அரை நாள் லீவு சொல்லிட்டேனே.
ஆமா நீங்க எப்படி திரும்பிப்போவிங்க?”, என்று அப்பாவியாக கேட்க,
“அடப்பாவி எப்போ டா லீவ் வாங்கின? அதை எங்க வந்து சொல்ற?”, என்று அவன் தோளில்
அடிக்க,
“அண்ணே. நான் வண்டி ஓட்டிட்டு இருக்கேன். தெரியலையா??”,என்று சத்தம் போட்டதும்,
உண்மையில் அவன் கோபித்துக்கொண்டான் என்று நினைத்து சுரேஷ்,” சாரி டா அபி”, என்று
உள்ளே போன குரலில் சொல்ல, அதற்குள் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் என்னும்
பெரிய கட்டிடத்தின் முன் வண்டியை நிறுத்தினான்.
“என்ன அபி அதான் ஏற்கனவே சீட் வாங்கியாச்சுல. அப்பறம் இங்க என்ன பண்ற?”, என்று
சுரேஷ் குழப்பமாக கேட்கவும்,
“இல்லண்ணா அது பி.எல் படிக்க தான் சட்டக்கல்லூரில இடம் வங்கி இருக்கு. இங்க வேற
வேலை. “,என்று அவனோடு இணைந்து நடந்தான்.
சுரேஷ் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. வீட்டின் வறுமை நிலையை எண்ணி படிப்பை விட்டு
வேலைக்கு வந்தவன், அதன் பின் படிப்பை பற்றி எண்ணவே இல்லை.அபி பல்கலைக்கழகத்துக்கு
வருவான் என்று தெரிந்திருந்தால் கண்டிப்பாக சுரேஷ் அவனுடன் வந்திருக்க மாட்டான்.
அவனுக்கு இதுபோன்ற இடங்களில் சற்று சங்கடமாகவே உணர்வான்.
“என்ன அபி இங்க வர்றது போலன்னா நீ என்னை விட்டுட்டு வந்திருக்கலாம்ல.”, என்று அவன்
நெளிய,
“பேசாம வாங்கண்ணே.”, என்று அங்கே அலுவல் அறைக்கு சென்று, சில பார்ம்கள் வாங்கினான்.
“என்ன பண்ற அபி?”,என்று சுரேஷ் அவனை நொச்சி எடுத்து விட்டான்.
“ஐயோ அண்ணே. நான் கரஸ்பாண்டான்ஸ்ல சைக்காலஜி படிக்க அப்ளிகேஷன் வாங்கி
இருக்கேன். வேற ஒன்னும் இல்ல.”
“என்ன அபி அதான் லாயருக்கு படிக்க போறியே, அப்பறம் இது எதுக்கு? “
“வெளில போய்ட்டு சொல்லவா?”, என்று அமைதியாக கேட்டவனை பார்த்து சிரித்துவிட்டான்
சுரேஷ்.
அபி வந்த வேலையை முடித்துக்கொண்டு, வாயிலில் இருந்த நாற்காலியில் சுரேஷை அமர்த்தி,”
அண்ணா, நான் லாயரா ஆகணும்ன்னு போன வருஷம் தான் முடிவு பண்ணினேன். கண்டிப்பா
கிரிமினல் லா தான் எடுப்பேன். அப்போ நான் ஒரு கேஸை விசாரிக்க எனக்கு சாட்சி சொல்ற
ஆட்கள் பற்றியும், குற்றவாளி பற்றியும், வெறும் போலீஸ் ரிப்போர்ட் வைத்து முடிவு எடுக்க
கூடாது. உண்மையை ஆராய எனக்கு புரிந்துணர்வு வேணும் இல்லையா. அதுக்கு நான்
மனோதத்துவம் படிச்சா என்னால சுலபமா சரியான இடத்தை சீக்கிரமா அடைய முடியும்.
பொய்யை உண்மை போல சொல்றவனை அவன் முகத்தை வைத்தே கண்டுபிடிக்கும் ஆற்றல்
கிடைத்தால் , யோசிச்சு பாருங்க. நான் சரியான ஆட்களுக்காக, சரியா வழக்கை, சரியா வாதாட,
இது உதவியா இருக்கும்.”, என்றான்.
“நீ சொல்றது சரி தான். ஆனா இதுவும் மூணு வருஷ படிப்பு, அது அஞ்சு வருஷம் படிக்கணும்.
அதான் ரெண்டையும் எப்படி சமாளிப்ப?”
“செய்யணும் அண்ணா. வேலைக்கும் போய் ப்ளஸ் டூ படிக்கலையா. அதே போல தான் நேரத்தை
சரியா கணக்கு போட்டு செலவு பண்ணனும். இனிமே ஹர்ஷாவை பார்க்க போக கூட தேவை
இல்லையே. வீட்டுக்கும் போக போறது இல்ல. அவ்ளோ தான் அண்ணா. நான், நம்ம ஹோட்டல்,
படிப்பு அவ்ளோதானே நான்.”,என்று அவன் சொன்ன குரலில் கண்டிப்பாக துளி விரக்தி
ஒளிந்திருந்தது.
“விடு அபி.”, என்று அவனை சமாதானம் செய்து சுரேஷ் அழைத்துப்போனான்.
ரிது வகுப்பறையில் பாடம் நடத்துவதை உன்னிப்பாக கவனிக்க, அவள் பக்கத்தில் இருந்த ஆரூ,
கடனே என்று அமர்ந்திருந்தாள்.
“என்ன ஆரூ, ஏன் முகத்தை அப்படி வச்சிருக்க?”
“எனக்கு ஒண்ணுமே புரியல ரிது”, என்றாள். அவள் குரலில் இருந்தது வலி மட்டுமே. அதை
புரிந்துகொண்ட ரிது,
“சரி அமைதியா இரு. நான் கிளாஸ் முடிஞ்சதும் சொல்லித்தரேன்.”, என்று அவளை பெஞ்சுக்கு கீழ்
கையை கோர்த்துக்கொண்டு சொன்னாள்.
ஏதோ ஒரு ஆறுதல் ஆரூ மனதில் தோன்ற, சின்ன முறுவலுடன் பாடத்தில் கவனம் வைத்தாள்.
மாலை ஆருவுக்கு அருகில் அமர்ந்து நிதானமாக விளக்கி சொல்லிக்கொடுத்தாள் ரிதுபர்ணா.
“புரியுது ரிது”, என்ற அவளின் குரலில் உயிர் இல்லை.
அவளை தோளோடு அணைத்துக்கொண்டாள் ரிது, “இங்க பாரு செல்லக்குட்டி, என்னால உன்
வலியை புரிஞ்சுக்க முடியுது. ஆனா நீ இப்படி ப்ரோ நெனப்புலயே இருந்தா நான் அவர் கிட்ட
பேசி, அவர் உன் கிட்ட பேசாம இருக்கறது எல்லாமே வேஸ்ட். நீ இன்னும் கொஞ்சம் மேசூர்ட்டா
நடந்துக்கணும் ஆரும்மா. “, என்றதும்,
“புரியுது ஆனா அவன் இல்லாம என்னவோ போல இருக்கு.”, என்று கண்களில் நீர்கோர்க்க
சொன்னவளின் கரத்தை பற்றி, “நான் உன்னை ஒரேடியா மறக்க சொன்னது போல பில்ட்அப்
பண்ணாத டி. கொஞ்ச நாள் தான். பிளீஸ்”, என்று அவள் நாடியை பிடித்து கொஞ்சி, கெஞ்சி
அவளை படிப்பின் பக்கம் திருப்புவதற்குள் ரிதுவுக்கு கண்டிப்பாக சோர்வு வந்திருக்க வேண்டியது,
ஆனால் இதற்கே சோர்ந்துவிட்டால் அவள் கனவு என்னாவது?
அதனால் எப்போதும்போல சிரித்த முகமாக, படிப்பில் மட்டுமே கவனமாக அதே நேரம் ஆரூ
மீதும் ஒரு கண் வைத்தபடி சுற்றி வந்தாள் ரிது.
“என்னமா செய்யிறீங்க?”, என்ற படி சோபாவில் அவருக்கு அருகில் அமர்ந்த மகனை
ஆதுரத்துடன் கண்ட சாந்தலட்சுமி, “எனக்கென்னப்பா, கோவிலுக்கு கிளம்பிக்கிட்டு இருக்கேன்.
காலைல சமையல், மதியம் தூக்கம், சாயங்காலம் கோவில் ராத்திரி தூக்கம் என்று நாள் நல்லாவே
போகுது.”, என்று சிரித்த முகமாக சொன்னார் அந்த மூதாட்டி.
“எனக்கு தான் ஒன்னும் முடியல, சோமு நான் வேணா ஊருக்கு போகவா?”, என்று கேட்டபடி
வந்தார் கோமதிநாயகம்.
“அப்பா, வீட்டை போக்கியத்துக்கு விட்டு தான் கடனுக்கு வட்டி அதிகம் வராம அடைக்க வழி
பண்ணி வச்சிருக்கேன்.
மூணு இன்ஸ்டால்மெண்ட் கட்டினத்துக்கு அப்பறம் மொத்தமா ஒரு தொகை காட்டினா நமக்கு
கொஞ்சம் சரியா வரும். அதான் பா. ஏன் பா உங்களுக்கு எதுவும் இங்க அசௌகரியமா இருக்கா?
“
“அப்படி இல்ல. ஆனா என்னால இயல்பா இருக்க முடியல. பேசாம ஊருக்கு போய் ஒரு வாடகை
வீட்டுல இருக்கோமே. எனக்கு இந்த ஊரு ஜன நெருக்கடி எல்லாமே சங்கடமா இருக்குய்யா.”,
என்றார்.
சோமுவுக்கு புரிந்தது. ஆனாலும் அப்படி ஒரு வாடகை வீட்டில் அவர்களை விட அவர் மனம்
ஒப்பவில்லை. “அப்பா, அப்படி உங்களை விட்டா அதை விட சுயநலம் என்னை பொறுத்தவரை
வேற இல்ல அப்பா. எனக்காக கொஞ்சம் பொறுங்க அப்பா.”, என்றார்.
அவர் கண்களில் இருந்த கலக்கம் கோமதிநாயகத்தை மிகவும் வருத்தி விட்டது. “அட என்ன சோமு
நீ, நான் ஏதோ இங்க அலைய முடியல, ஒரே கூட்டமா இருக்கேன்னு நெனச்சேன். வேற
ஒன்னுமே இல்ல பா. நான் அதெல்லாம் சமாளிச்சுக்குவேன். விடு. இப்போ தான் வேலை விட்டு
வந்தியா? சாந்தி காபி குடுத்தியா?”, என்று பேச்சை வேறு திசைக்கு மாற்றினார்.
இவர்களின் இந்த சம்பாஷணைகளுக்கு நடுவில் சாந்தலட்சுமி சோமுவுக்கு காபியும் ஸ்னாக்சும்
கொண்டு வந்து வைத்திருந்தார். கணவரின் வார்த்தைகளை கேட்டு மெல்ல சிரித்த அவர்,
“இதெல்லாம் என்னவாம்?”, என்று டீப்பாயை காட்ட, அவர் விழிக்கலானார்.
தாயும் மகனும் சேர்ந்து நகைக்க, இனி ஒருபோதும் மகனிடம் இங்கே தங்குவதில் சங்கடம் என்று
சொல்லக்கூடாது என்று நினைத்துக்கொண்டார் அம்முதியவர்.
லதா பல முறை முயன்றும் ஹர்ஷா அவரிடம் சரியாக பேசவில்லை. அவருக்கு மனதில் வருத்தம்
இருந்தாலும், அவன் நல்லதற்கு தானே செய்தோம் என்று நினைத்தார். ஆனால் ஹர்ஷா மனதில்
அப்படி எண்ணம் ஓடவில்லை.
தந்தையும் நண்பனும் பலமுறை சொல்லியும், தாயின் செல்லமும், தன் விளையாட்டுத்தனமும்
தான் தன்னுடைய இந்த நிலைக்கு காரணம். தான் மட்டும் கஷ்டப்படாமல், தாய் தந்தை, தாத்தா,
பாட்டி என்று அனைவரையும் வருத்துகிறோமே என்று அவன் மனதால் குமைந்து போனான்.
அதனால் அவன் முடிந்தவரை தாயிடம் பேசவே இல்லை. ஆனால் மறக்காமல் சங்கரியிடம் பேசி,
அபி பற்றி தெரிந்துகொண்டான்.
அவன் சட்டம் பயில முடிவெடுத்ததில் ஒரு புறம் இவனுக்கு மகிழ்ச்சி என்றாலும் எங்கே
வம்புசண்டைக்கு போய் விடுவானோ என்ற பயமும் இருந்தது.
ஹர்ஷா அடிக்கடி சங்கரியிடமும், சுரேஷிடமும் பேசி அபியின் நலனை கவனித்தபடி இருந்தான்.
அபி இவனுக்கும் மேலாக, அவன் பயில இருக்கும் கல்லூரி பேராசிரியர் ஒருவரை நித்திலன் மூலம்
பரிச்சயப்படுத்திக்கொண்டு ஹர்ஷாவின் படிப்பு, ஒழுக்கம் என்று அவ்வப்போது விசாரித்து
வந்தான்.
நாட்கள் யாருக்கும் காத்திருக்காமல் அதன் போக்கில் நகர்ந்து செல்ல,ஒரு மாதம் போனது
தெரியாமல் கடந்திருந்தது.
அன்று அபிக்கு கல்லூரி முதல் நாள். அவன் எண்ணம் ஒன்றே ஒன்று தான். கவனம். படிப்பை
தவிர வேறு சிந்தனை இல்லை. என்று எண்ணியபடி நுழைந்தவனை ஒரு கூட்டம் அவர்களை
நோக்கி அழைத்தது.
இயல்பிலேயே திடகாத்திரமான உடல் உள்ள அபி, இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து
உடற்பயிற்சி செய்வதால் நல்ல உடற்கட்டோடு இருந்தான்.
அழைத்த கூட்டத்தில் ஒருவன் கூட அவன் அளவில் கால்பங்கு கூட இல்லை . ஆனால், “என்ன
பர்ஸ்ட் இயரா? என்ன டா இப்பவே ஏதோ லாயர் மாதிரி வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்
போட்டு வந்திருக்க? “,என்று கேட்டனர்.
“இது தானே இந்த ப்ரோபசனுக்கான உடை. அதான்”,என்று அமர்தலாக அவன் சொல்லவும்,
“ஓ.. அப்போ ஜீன்ஸ் போட்ட நாங்க அந்த வேலைக்கு லாயக்கு இல்லன்னு சொல்றியா? உனக்கு
எவ்ளோ திமிரு டா. சீனியர்ன்னு கொஞ்சம் கூட மரியாதை இல்ல. ம்ம்.. “,என்று கேட்டதும்,
“சீனியர்ன்னு மரியாதை தர்றது போல நீங்க நடக்கலையே.”, என்று நிதானமாக அவன் உரைக்க,
“டேய்”, என்று ஒருவன் சட்டையின் கையை ஏற்றிவிட்டுக்கொண்டு வர, அபி அவனை
கூர்மையாக கண்டான். ஆழ ஒரு பெருமூச்சை அவன் வெளியிட,
அவன் மார்புக்கூடு விரிந்து அடங்கியதில் அந்த கூட்டத்திற்கு சற்றே பயம் வரவும், “ஏதோ முதல்
நாளாச்சேன்னு விடுறோம். போ. போ.”, என்று சொல்லிவிட்டு அவர்கள் எதிர் திசையில்
ஓட்டமாக நடக்க, அபி சிறு புன்னகையுடன் அவன் வகுப்பை தேடி நடக்கலானான்.
அப்போது, அவனை ஒரு பெண் கடக்க, அது அவனுக்கு ஆருஷியை நினைவு படுத்தியது. சில
நாட்களாக அவள் ஸ்ரவனை பார்க்க வரவில்லை. அவளுடன் வரும் வாலில்லா குரங்கு தான்
கண்ணில் படுகிறான். மாலை கண்டிப்பாக அகவழகியிடம் ஆருஷி பற்றி கேட்க வேண்டும் என்று
நினைத்தான்.
◆◆◆◆◆
��அகலாதே ஆருயிரே��
��37��
அபி அன்று கல்லூரி விட்டு வரும் போதே ஆருஷியை காண வேண்டும் என்று
எண்ணிக்கொண்டான். அவளை தெரியும் அவ்வளவு தான். மற்றபடி அவள் வீடோ, அவள்
பெயரோ கூட அவனுக்கு தெரியாது. அவன் அவளை மதில் குரங்கு என்றே கூப்பிட்டு
கொண்டிருந்தான். அன்றைய அவளின் தோழியின் அழைப்பில் அவள் பெயர் ஆரூ என்று புரிந்து
கொண்டான். ஆனால் முழுப்பெயர் தெரியாது.
அவன் வீட்டிற்குள் செல்லாமல், தெருவில் நின்றபடி ரிஷியின் சாயலில் ஏதேனும் வாண்டுகள்
விளையாடுகின்றனவா என்று ஆராய்ந்தான்.(அவன் தம்பி தங்கச்சி இருந்தாலும் சார்
கண்டுபிடிச்சிருவாராமாம்..)
அவன் நேரம் கிரிக்கெட் விளையாடிய ஏழு பேரில் ரிஷியும் ஒருவன். அவனை கண்டதும் முகம்
மலர்ந்தவனாக ரிஷி என்று கூவி அழைத்தான்.
பௌலிங் போட தயாரான ரிஷி தன்னை யாரோ அழைப்பதை உணர்ந்து சுற்றும் முற்றும்
பார்த்தவன், அபியை கண்டு புன்னகைத்த வண்ணம்,தன் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு
அபியை நோக்கி ஓடி வந்தான்.
“என்ன? எதுக்கு என்னை கூப்பிட்டிங்க ஜேம்ஸ்?”, என்றான்.
தன் பெயரையே மாற்றி வைத்திருக்கும் இந்த வாலில்லாத வானரங்களை நினைத்து சிரித்த அபி,
“எங்க உன்னோடையே சுத்துவாளே ஒரு குரங்கு அவளை காணோம்?”,என்று கேட்டதும் முகம்
மாறிய ரிஷி,
“என்ன?அவளை எதுக்கு கேக்குறிங்க? என்ன விஷயம்? “,என்று பெரிய மனிதன் தோரணையில்
வினவினான்.
“இல்லாடா இப்பல்லாம் காணொமே அதான் கேட்டேன்”,என்று அபி சமாளிப்பாக சொல்ல,
“அவ ட்வெல்த். படிக்க வேண்டாமா? நீங்க மட்டும் காலேஜ் போறீங்க? அவ ஸ்கூல் போக
வேண்டாமா?”,என்று அவனை லெப்ட் அண்ட் ரைட் வாங்க, அபி நொந்து போனான்.
“டேய் காணமேன்னு தானே டா கேட்டேன். அவ நல்லா பேசினா, என் பிரென்ட்ன்னு சொன்னா
டா. அதான் கேட்டேன். சரி விடு. போய் விளையாடு”, என்று அவனை அனுப்ப முயல,
“சாரி ஜேம்ஸ்,எங்க அக்கா அவங்களை பற்றி யார் விசாரிச்சாலும் எதுவும் சொல்ல கூடாதுன்னு
சொல்லி இருக்காங்க. அதான் நீங்க ஆரூ அக்கா பத்தி கேட்டதும்நான் சொல்லல.ஆரூக்கா
இப்போ நிறைய படிக்கணும் இல்லையா. ஸ்ரவன் வேற ஊருக்கு போயிருக்கான். அதான் நாங்க
வரல. ஸ்ரவன் வந்ததும் கூட்டிட்டு வரேன்.”, என்று நீண்ட விளக்கம் வைத்தான்.
“சரி இந்தா இது என் நம்பர். வச்சிக்கோ. ஆரூ கிட்ட குடு.”, என்றதும் மீண்டும் முகம் மாறிய ரிஷி.
“உங்க மேல நல்ல எண்ணம் இருக்கு ஜேம்ஸ். இது தேவையா? எங்க அக்காவுக்கு தெரிஞ்சா
தோலை உரிச்சு உப்பு தேச்சு வச்சிருவா. அவளுக்கு பிடிக்காத ஒண்ணுன்னா அது என் மூலமா
அவங்களுக்கு வர்ற தூது. அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. நீங்க நேர்ல ஆரூ கூட பேசிக்கோங்க.
நான் நம்பர் வாங்கிட்டு போனா என் அக்கா கண்டிப்பா என்னை அடிப்பா.”, என்றான்.
“சரி நாளைக்கு கண்டிப்பா ஆருவை கூட்டிட்டு வா. “,என்று அவனை அனுப்பிய அபி, மனதில்
அந்த ரிஷியின் அக்காவை மெச்சிக்கொண்டான்.
நம்மில் பலர் பார்த்திருப்போம், வீட்டின் இளைய பிள்ளைகள் மூலமே மூத்த பிள்ளைகள் காதல்
தூது விடுவர். அது அவர்களையும் சேர்த்தே பாதிக்கும். அந்த நேர ஆசையில், கனவில் சிறு
பிள்ளைகள் பற்றி பலர் யோசிப்பதே இல்லை. அவர்களுக்கு நாம் ஒரு தவறான உதாரணமாக
ஆகிறோம் என்ற எண்ணமே பலருக்கு இருப்பதில்லை. அப்படியிருக்கையில், அபியின் மனதில்
ரிஷியின் சகோதரி உயர்ந்து நின்றாள்.
தம்பிக்கு உதாரணமாக, அதே நேரம் யாருடைய தூதையும் ஏற்கா வண்ணம் மிரட்டியும் வைத்து
இருக்கிறாள். அவளுக்காக மட்டும் இன்றி அவள் தோழிக்கு தூது செல்லவும் அவன் தயாராக
இல்லை. ஆக எல்லா நல்ல எண்ணங்களின் ஆரம்பமும் குடும்பத்தில் இருந்து துவங்கி அது சமூக
மாற்றமாகிறது. இனி ரிஷியே வளர்ந்தாலும் கண்டிப்பாக எந்த ஒரு பெண்ணையும் தவறான
கண்ணோட்டத்தில் பார்க்கவோ,அவளிடம் யாரையும் தூது அனுப்பவோ மாட்டான். ஒரு ஆண்
பிள்ளையை சரியான இடத்தில் சரியான வழி நடத்துதலை கண்ட அபிக்கு உண்மையில்
மகிழ்ச்சியே. அதை நினைத்துக்கொண்டே வேலைக்கு கிளம்பினான்.
இரண்டு நாட்களுக்கு பின், ஆருஷி அபியை சந்தித்தாள்.
அவளை கண்ட அபிக்கு ஆச்சர்யம், கூடவே அதிர்ச்சியும். போன முறை அவள் கண்களில் இருந்த
குறும்பு இப்போது மிஸ்ஸிங். அதே நேரம் அவள் பேச்சும் கொஞ்சம் தளர்ந்தே இருந்தது.
மனதில் தோன்றிய கேள்வியை கேட்டே விட்டான் அபி. ஆரூ ஒரு வெற்று புன்னகையை
அவனுக்கு தந்தவள், தன் காதலன் யார் என்பதை தவிர அனைத்தையும் சொல்ல, அபிக்கு உள்ளே
மின்னல் அடித்தது.
“உன் பிரென்ட் சொல்றது சரி தான் ஆரூ. நீ கொஞ்சம் கவனமா படிச்சா போதும். அப்பறம்
வாழ்க்கை உனக்கு தானே.”, என்று அவனும் இலகுவாக சொல்ல
“என்னால என் லாலிபாப் பத்தி அவ கிட்ட பேச முடியல ஜே.பி”(ஜேம்ஸ்பாண்ட் சுருக்கமாம்)
“ஏன்? திட்டுவாளா?”
“இல்ல. அவளுக்கு கனவு இருக்கு லட்சியம் இருக்கு. கண்டிப்பா நான் அவ நேரத்தை வீணடிக்க
மாட்டேன். ஆனா என்னால லாலிபாப் கிட்ட பேசாம, அவனை பற்றியும் பேசாம இருக்க
முடியாது.”, என்று கண்ணீருடன் சொல்ல,
இந்த கண்ணீர் கண்டிப்பாக அவளை படிப்பில் கவனம் வைக்க விடாது என்று உணர்ந்த அபி,
சற்றும் யோசிக்காமல் அவளை தோளோடு அணைத்து, “நான் இருக்கேன் ஆரூ. என்கிட்ட
சொல்லு.”, என்றான்.
“நீயே காலேஜ், வேலைன்னு பிசி. இதுல நான் வேறயா?”, என்று கண்ணீரை துடைத்தவளை
கண்டவன்,
“கண்டிப்பா உனக்காக அரை மணி நேரம் தினமும் தரேன் ஆரூ. நீ என்கிட்ட சொல்லு.”, என்று
ஆதரவாக பேசிய அவனை ஆரூ கண்ணீர் விழிகளால் நன்றியாக நோக்கினாள்.
அன்று முதல் தினமும் இருவரும் அரை மணி நேரம் பேசுவார்கள். இவன் பங்கு பங்கு என்று
ஹர்ஷா பற்றி சொல்லுவான். அவள் லாலிபாப் லாலிபாப் என்று அதே ஹர்ஷா பற்றி
சொல்லுவாள். ரெண்டு பேரும் ஒரே மாதிரியே இல்ல. என்று இரண்டும்
சிரித்துக்கொள்ளும்.(கடவுளே)
காலம் யாருக்காகவும் நிற்காமல் ஓட, அபி சட்டக்கல்லூரி, கூடவே தொலைதூர கல்வி
இரண்டிலும் கவனம் வைத்து படித்தான். அவன் மன ஆறுதல் ஆருஷி மட்டுமே. கூடவே
கொசுராக கிடைக்கும் ரிது பற்றிய தகவல்கள் மறந்தும் ரிது பெயரை ஆரூ
சொல்லவில்லை.”அவளுக்கு பிடிக்காது ஜே.பி”, என்று சொல்லி விடுவாள்.
ஆருவின் நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டு இருந்த ரிதுவுக்கு சில நாட்களாக, அவள்
படிப்பில் காட்டும் தீவிரமும், லாலிபாப் பற்றிய அவளின் பேச்சு குறைந்து இருப்பதும், கூடவே
அவள் முகத்தெளிவும் அவளுக்கு நிம்மதியை கொடுத்து,அவள் படிப்பில் ஆழச் செய்தது.
ஆருவும் பெரிய மாற்றத்தினைக் கண்டாள். அவளின் உணர்வுகள் அபியிடன் வெளிப்பட்டு
விடுவதால் கவனமாக படிக்க துவங்கினாள்.
ஹர்ஷா மனதில் வெறிகொண்டு படித்தான். அவன் பல முறை முயன்றும் சோமு அவனோடு பேச
மறுத்து விட்டார். தந்தையின் முகத்திருப்பல் அவனை வெகுவாக பாதித்தது. எப்படியாவது
படித்து சம்பாதிக்க வேண்டும் என்று மனதில் உறுதி பூண்டான். அந்த வீட்டை மீட்டால் மட்டுமே
தந்தை தன்னிடம் பேசுவார் என்று அவன் முழுவதுமாக நம்பினான்.
அவனின் எண்ணம் உண்மை என்பது போல இருந்தது லதாவின் பேச்சுக்களும், தாத்தாவின்
நடவடிக்கைகளும்.
ப்ரொஜெக்ட் பற்றி தெரிந்து கொள்ள முயன்று, அவனே அதை சிறிய அளவில் செய்யத்
துவங்கினான்.
அது அவனுக்கு நல்ல முறையில் வர,சின்ன சின்ன ப்ராஜெக்ட்கள் அவன் எடுத்து சிறு தொகை
சம்பாதிக்க துவங்கினான்.
நான்கு மாதத்திற்கு பிறகு அந்த ப்ராஜெக்ட்டில் சேர்ந்த பணத்தை அவன் அப்பா கையில் திணிக்க,
சோமு அவனை முறைத்த படி,
“என்னை என்ன நெனச்ச ஹர்ஷா? இந்த பணத்துக்காகவா உன்னோட நான் பேசாம இருந்தேன்.
நீ படிக்க ஆசைப்பட்டது தப்பு இல்ல. ஆனா அதுக்கு உன்னோட முயற்சி கம்மியாவும், நீ இந்த
கோர்ஸ் எடுக்க தேர்ந்தெடுத்த வழி தப்பாவும் இருந்தது. அதுக்கு தான் கோவம். நீ கொஞ்சம்
பொறுமையா இருந்திருந்தால், நானே நார்த் பக்கம் உள்ள காலேஜ்ல இதே கோர்ஸ் கொஞ்சம்
கம்மி செலவுல உன்னை சேர்த்து விட்டிருப்பேன். என்னை யோசிக்க விடாம உங்க அம்மாவும்
நீயும் கழுத்தை பிடிச்சு நெரிச்சது போல உடனே பணம், உடனே அடமானம்ன்னு சொன்னது
தான் எனக்கு கோபம். இந்த பணத்தை நீ வச்சுக்கோ. இப்போவே சம்பாதிக்க ஆரம்பிச்சா
நாளைக்கு படிப்பை விட இது முக்கியமா தெரியும். கவனத்தை படிப்புல வை.”,என்று பணத்தை
அவன் சட்டை பையிலேயே வைத்து அனுப்பி விட்டார் சோமநாதன்.
இதை எதிர்பார்க்காத ஹர்ஷா, தன் ஆசை தன் கனவு என்று மிகவும் சுயநலமாக இருந்து
விட்டோமோ என்று வருத்தம் கொண்டான்.
ஓராண்டு போனது தெரியாமல் போக, பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்
டிக்கெட் அன்று வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் அனைவரையும் கலையரங்கதிற்கு
அழைத்து அவரவர் ஹால் டிக்கெட்டை வழங்கினார். அப்போது ரிதுவை பாராட்டி பேசி, அவள்
கண்டிப்பாக பள்ளிக்கு பெயர் வாங்கி தருவாள் என்று பெருமையாக சொல்ல, நந்தினி மற்றும்
தோழிகளுக்கு வயிரெல்லாம் பற்றி எரிந்தது.
அவர்களும் ஒரு வருடமாக முயல்கிறார்கள் ரிதுவை அவர்களால் அசைக்க கூட முடியவில்லை.
அவ்வளவு கவனமாக இருக்கிறாள் . ஆரூ கூட முன்னை போல இல்லாமல் கவனமாக இருக்க
அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இன்றைய தலைமை ஆசிரியரின் பேச்சு தந்த
எரிச்சலில் பரிட்சை நாளை ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.( அவங்க நல்லா எழுதி பேர்
வாங்க போறாங்க, அதுக்கு தான் காத்திருக்காங்கன்னு நீங்க நெனச்சா அது தப்பு).
அன்று முதல் தேர்வு, பள்ளியே பரபரப்பாக இருக்க, நந்தினி மட்டும் முகம் கொள்ளா மகிழ்வோடு
வளைய வந்தாள். அவள் தோழி ஒருத்தி என்னவென்று கேட்டதும்,
“இன்னிக்கு அந்த ரிது கண்டிப்பா பரீட்சை எழுத முடியாது. அதனால அவ இந்த வருஷம்
பெயில்.”,என்று குஷியாக சொல்ல,
அவளோ புரியாமல் நந்தினியை பார்க்க, அவள் நோட்டுக்குள் இருந்து ரிதுவின் ஹால்
டிக்கெட்டை காட்டியவள், “பார்த்தியா அவளை இடிச்சு, திங்ஸ் விழுக வச்சு, அவ ஹால் டிக்கெட்
எடுத்துட்டேன். இனிமே எப்படி எக்ஸாம் எழுதுவா?”,என்று நக்கலாக கேட்டுக்கொண்டே அந்த
ஹால் டிக்கெட்டை பத்திரமாக வைத்தாள் நந்தினி. அவள் தோழி வாயடைத்து போய் பார்க்க,
நந்தினி முகத்தில் ஒரே பெருமிதம்.
ஹால் டிக்கெட் தொலைந்து விட்டது என்று ரிது அழுது கொண்டிருப்பாள் என்று கற்பனை செய்து
மகிழ்ந்து போனாள் நந்தினி.
★★★★★
��அகலாதே ஆருயிரே��
��38��
நந்தினி முகம் கொள்ளா புன்னகையுடன் அந்த பெரிய தேர்வு அறைக்கு வெளியில் நின்றாள்.
தன்னை சுற்றி எல்லா பக்கமும் உள்ள தேர்வு அறைகளை நோட்டம் விட்டாள். எங்கும் ரிதுவை
காணவில்லை. உள்ளமெல்லாம் மகிழ்வுடன் தேர்வு அறை உள்ளே நுழைய,
அங்கே வரிசை எண் படி மொத்தம் 200 மாணவர் அமரும்படி இருந்த அறையில் பத்துக்கும்
மேற்பட்ட மேற்பார்வையாளர்கள் இருக்க, அவளின் எண் இருக்கும் இடம் தேடி
அமரப்போனவளை, “எக்ஸ்கியூஸ் மி மேம்” என்ற அழுத்தமான குரல் ஈர்க்க, திரும்பிய அவளின்
கருவிழிகள் நிலைகுத்தி நின்றது.
அங்கே அழகிய புன்னகையுடன் ரிது அவளின் எண் இருக்கும் இடம் தேடிப்போனாள்.
அடுத்த மூன்று மணி நேரத்தில் நந்தினியால் தேர்வில் முழு கவனம் செலுத்த முடியாமல் போனது.
அவள் பாதி எழுதுவதும், திரும்பி ரிதுவை பார்ப்பதும், அவள் மேஜையில் தேர்வு பதிவெண் தாள்
உள்ளதா என்று பார்ப்பதும் அலைபாய்ந்தபடியே இருந்தாள்.
அவள் தலையை திருப்பி திருப்பி பார்ப்பதை கண்ட ஒரு மேற்பார்வையாளர் அவளை கண்டிக்கும்
குரலில், “லுக் அட் யுவர் பேப்பர் அண்ட் ரைட்”, என்று சொல்ல, மற்றவர் அவளை வித்தியாசமாக
பார்க்க, அவமானம் பிடிங்கி தின்றது.
வேகவேகமாக ஏனோ தானோ என்று எழுதிவிட்டு வெளியே வந்தவளை சற்று நேரம் கழித்து
வெளியே வந்த ரிது கடந்து போக,
“ஏய் நில்லு, நீ எப்படி எக்ஸாம் எழுதின?”
“ஏன் என் கையால தான்.”, என்று நக்கலாக பதில் சொன்னாள் ரிது.
“உன் ஹால்டிக்கெட் இல்லாம எப்படி எழுதின?”, என்று எரிச்சல் பொங்க கேட்டவளை பார்த்து,
“அதெப்படி ஹால்டிக்கெட் இல்லாம எழுத விடுவாங்க?”, என்று புரியாதது போல ரிது கேட்டதும்,
“லூசா நீ? அதை தானே நானும் கேக்குறேன்.”, என்று கத்திட,
“என் கிட்ட தான் ஹால்டிக்கெட் இருக்கே.”, என்று இலகுவாக சொன்னவளை பார்த்த நந்தினி,
“அதெப்படி டி இருக்கும்? அதான் என்கிட்ட இருக்கே?”, என்று சீற்றம் நிறைந்த குரலில் சொல்ல,
“அடடா.. அது உன்கிட்ட இருக்கா. நல்ல வேளை. நான் கூட எடுத்த கலர் ஜெராக்ஸ்ல ஒன்னை
காணமே. நாளைக்கு எடுக்கணுமோன்னு பயந்துட்டேன். “
“என்னது கலர் ஜெராக்ஸ்ஸா… ??”,என்று நந்தினி வாயை பிளக்க,
“உனக்கு ஒன்னு போதுமா நந்தினி? இல்ல இன்னொரு காபி வேணுமா? என்கிட்ட நாலு இருக்கு
மா. வேணும்ன்னா சொல்லு தரேன். ஆனா… இதை வச்சி நீ என்னமா செய்ய போற?”, என்று
கேட்ட ரிதுவின் குரலில் ட்ன் டன்னாக கேலியும் நக்கலும் வழிய,
“ரிதுபர்ணா…”, என்று கத்தினாள் நந்தினி.
“ச்சி.. சும்மா இரு. என்ன பெரிய வில்லியா நீ? நிறைய சீரியல் பார்ப்பியா? நீ ஹால் டிக்கெட்
எடுத்து வச்சுக்கிட்டா பரிட்சை எழுத முடியாதா? என் ஸ்கூல் ஐ.டி. கார்ட் வச்சு ப்ரின்ஸி கிட்ட
ஒரு சைன் வாங்கினா முடிஞ்சு போச்சு. ஆனா நான் அந்த சான்ஸ் கூட உனக்கு குடுக்கல. எப்போ
ஹால் டிக்கெட் தரும்போது ப்ரின்ஸி என்னை பத்தி பேசுனாரோ.. அப்போ உன் காதுல வந்த
புகையை நானும் பார்க்க தான் செஞ்சேன். நீ என்ன பண்ணினாலும் என் படிப்பை தடுக்கவோ
கெடுக்கவோ முடியாது. நான் ஏதோ ஒரு படிப்பை படிச்சிட்டு பத்து பாத்திரம் தேக்க தான
போறோம்னு திங்க் பண்ற ஆள் இல்ல. என் லட்சியம் வேற. உன்னை மாதிரி சில்லறைத்தனமா
செய்யற ஆட்கள் என்ன பண்ணுவாங்கன்னு கூட என்னால யோசிக்க முடியலன்னா நான் எப்படி
நான் ஆசைப்பட்ட லட்சியத்தை அடையறது. போம்மா.. போ.. அடுத்த எக்ஸாம்காவது ஒழுங்கா
படிச்சு, நல்லா எழுது.நம்ம வாழ்க்கையை எந்த திசையில் பயணிக்க போகுதுன்னு தீர்மானிக்கிற
எக்ஸாம் இது. என்னை பழி வாங்கறதா நெனச்சு, உன் படிப்பை கெடுத்துக்காதே. புரியுதா?”,
என்று அவள் போக வேண்டிய பாதையில் கம்பீரமாக நடந்து சென்றாள் ரிதுபர்ணா.
அவள் நடையில் பெண்களுக்கே உரித்தான நளினம் இல்லாமல் ஒரு ஆளுமையுடன் கூடிய
கம்பீரம் மிளிர்வதை நந்தினியால் நம்பவே முடியவில்லை.
நடந்த அனைத்தையும் ஆருவிடம் சொன்னாள் ரிது, “இருடி அவ மூக்கை ஒடச்சிட்டு வரேன்.
ஆளையும் அவளையும் பாரு.”,என்று முறுக்கிக்கொண்டு எழுந்த ஆருவை அடக்கிய ரிது.
“எனக்கு சந்தேகம் வந்துச்சு டா அதான் நேத்தே அஞ்சு கலர் ஸேராக்ஸ் எடுத்து வச்சிட்டு
ஒரிஜினலை சுடி பாக்கெட்ல வச்சிருந்தேன். அவ என்னை இடிச்சிட்டு கீழ விழுந்த நோட்டில்
இருந்த ஒரு ஸேராக்ஸை எடுத்தா, நல்ல வேளை அவ கண்ணுல ஒன்னொரு நோட் முனையில்
தெரிந்த அடுத்தது படலை. நானும் என்னதான் செய்யறான்னு பார்க்க தான் காத்திருந்தேன்.
அவளுக்கும் நாம ஜெய்ச்சிட்டோம்ன்னு அவ்ளோ சந்தோசம். ஆனா எனக்கென்ன
வருத்தம்ன்னா?, இவ்ளோ புத்தி இருக்கற அவ ஏன் ஒழுங்கா படிக்க மாட்டேன்கிறா? ஆவரேஜ்
ஸ்டுடெண்ட் தான். கொஞ்சம் சிரமும் எடுத்து படிச்சா நல்லா வருவா. சரியான வழிகாட்டுதல்
இல்ல.”,என்று அவளுக்காக ரிது வருந்த,
“அடியேய்.. அவளுக்கு போய் பாவம் பார்கிறியே, அப்பறம் ஆறு மாச பாவம் நமக்கு தான் டி
வரும்.”, ஆருவின் கோபம் ரிதுவுக்கு புரியாமல் இல்லை. ஆனாலும் அவளும் நல்லவளாக
இருந்திருக்கலாம் என்றே தோன்றியது.
அடுத்தடுத்து நடந்த பரிட்சைகளில் ரிது நந்தினியை கண்டுகொள்ளவே இல்லை. ஆரூ அவளை
பார்க்கும்போதெல்லாம் முறைத்தபடியே இருந்தாள்.
தேர்வுகள் முடிந்து அவர்கள் பள்ளிக்கான கடைசி நாளில் ஆரூ, கடந்த ஒன்றரை ஆண்டு இந்த
பள்ளியில் நடந்தவைகளை அசைபோட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவளின் வாலிபால்
பிரக்டிஸ் இனி சுகந்தன் சார் சொன்ன மைதானத்தில் பயின்றால் கல்லூரி சேரும்போதும்
அவளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள வசதியாக இருக்கும் என்றே ரிதுவும்
கூறிட,ஆருவின் மனம் இதயெல்லாம் கடந்து அவளின் லாலிபாப் சிந்தனையிலேயே இருந்தது.
தான் இனி அவனுடன் பேசலாமா என்பதை எப்படி அவள் ரிதுவிடன் கேட்பது என்று
யோசித்துக்கொண்டு இருக்க,
அவளின் கைபேசி ஜே. பி என்ற பெயரோடு அவளை அழைத்தது. மகிழ்ச்சியாக அதை எடுத்து
காதில் ஒற்றியவளை பேச விடாது,
“ஏய் குரங்கு குட்டி, பரிச்சை எல்லாம் முடிஞ்சுதா? நல்லா எழுதினியா டி.”, என்று சந்தோசம்
ததும்பும் குரலில் உரிமையாக கேட்டவனை நினைத்து சிரித்த ஆரூ.
“முடிச்சிட்டேன் ஜே. பி.”,என்று மகிழ்வோடு உரைத்தாள்.
“ம்ம்.. உனக்கென்னமா.. இனிமே கவலையே இல்ல. தினமும் உன் லாலிபாப் கூட ஒரே அரட்டை
தான். இந்த ஜே பி உன் நியாபகத்துல கூட இருக்க மாட்டேன்.”,என்று குறை போல கிண்டல்
செய்ய,
“நீ வேற ஏன் ஜே. பி. நானே எப்படி அவ கிட்ட இதை பத்தி பேசறதுன்னு தெரியாம இருக்கேன்.”,
என்று புலம்பினாள்.
“யார் கிட்ட? உன் பிரென்ட் அந்த ஸ்ட்ரிக்ட் ஆபீசர் கிட்டயா?”, என்ற அவனின் கிண்டலில்,
“அவளை ஒன்னும் சொல்ல கூடாதுன்னு சொல்லி இருக்கேன் தானே.. “,என்று கண்டிக்கும்
குரலில் சொன்னவள், “எனக்கு லாலிபாப் கூட பேச ஆசை தான். ஆனா கண்டிப்பா அவளோட
பெர்மிஷன் இல்லாம பேச மாட்டேன். அவ இல்லன்னா கண்டிப்பா நான் இப்போ இப்படி இருக்க
வாய்ப்பே இல்ல. ஏன் நீ இல்லன்னாலும் இது இப்படி நடந்திருக்காது. நான் இப்படி முழு மூச்சா
படிச்சிருக்க மாட்டேன். நான் இப்போ லாலிபாப் கிட்ட பேச ஆசைப்படறதை அவ கிட்ட
சொல்லவும் மாட்டேன். என்னோட மனசு அவளுக்கு தெரியும். கண்டிப்பா அவளே
சொல்லுவா.”,என்று ரிது பற்றி ஆரூ சொல்ல,
அபி மனதில் பெயர் தெரியா, ரிஷியின் சகோதரியும், ஆருவின் தோழியுமானவள் உயர்ந்து
கொண்டே இருந்தாள்.
அபியும் ஆருவும் ஆளுக்கு ஒரு பக்கம் ஹர்ஷாவின் நினைவில் ஏங்க,அவனோ உலகத்தில்
படிப்பொன்றை தவிர அவனை மீட்க வேறு யாரும் இல்லை என்பதை போல
படித்துக்கொண்டிருந்தான். அவனின் செயல்முறை கல்வி அவனுக்கு பெரிதும் உதவ, தன்னை
இப்படி செயல்வழி படிக்க தூண்டிய நண்பன் அபியை மனதில் நன்றியோடு
நினைத்துக்கொள்வான்.
எலக்ட்ரானிக் பிஸிக்ஸ் அவனுக்கு கொஞ்சம் தடுமாற்றம் கொடுக்க, அதை நன்றாக படித்தால்
மட்டுமே ரோபாடிக்ஸின் செயல்பாடுகள் கைவரும் என்று உணர்ந்தவன், தான் ப்ராஜெக்ட் செய்து
ஈட்டும் வருவாயை கொண்டு அதற்கான மாடல்கள் செய்து அதன் செயலற்றலை புரிந்து கொள்ள
முயன்றான்.
தவறு செய்து செய்து, அதை திருத்தி திருத்தி, அவன் ஒழுங்குபடுத்த, அது அவன் மனதில்
நிலைத்து நின்றது. பாடம் எப்படி யார் எடுத்தாலும், அவன் அதை செயல்முறைப்படுத்தியே
படித்தான். கொஞ்சம் பின்தங்கி போவது போல தோன்றினாலும் தேர்வு நெருங்கும் சமயத்திற்குள்
அனைத்தையும் செயல்முறைப்படுத்தி கற்று முடித்து இருந்தான். அதனால் அவனின் செமஸ்டர்
தேர்வு முடிவுகள் அவனை கல்லூரி நட்சத்திரமாக மாற்றியது.
ஆனால் யாரையும்தான் பக்கத்தில் கூட அண்ட விடாமல் அடுத்தடுத்த பாடத்தில் கவனம்
வைத்தான் ஹர்ஷா. ஒரு காலத்தில் விளையாட்டு பிள்ளை என்று சொன்ன ஹர்ஷா இவன் தான்
என்றால் நம்ப முடியாத அளவுக்கு படிப்போடு ஒன்றி இருந்தான்.
அவன் இயல்பான பொறுமையான குணம் தான் அவனை இந்த விஷயங்களில் அழகாக வழி
நடத்தியது. தோழனும், காதலியும் இருந்தும் பேச முடியாமல், மனதை பகிர முடியாமல் நிற்கும்
அவனுக்கு ஓர் ஆறுதல் அடிக்கடி வரும் லதா மட்டுமே. ஆனாலும் அவளிடம் அவனால் முன்பு
போல பேச முடியாமல் ஏதோ தடுத்தது.
அவன் கண்கள் அவளைத்தாண்டி தன் தந்தை வருகிறாரா என்றே தேடியது. வீட்டிற்கு அழைத்த
லதாவின் அழைப்பை புறக்கணித்து,விடுமுறையில் கூட ப்ராஜெக்ட்கள் எடுத்து செய்துகொண்டு
கோவையிலேயே தங்கி விட்டான். சென்னை வந்தால் அவனால் அபியையோ, அவன்
மனதிற்கினியவளையோ பார்க்காமல் இருக்க முடியாது. அதனால் முயன்று மனதை அடக்கியவன்
படிப்பை மற்றும் பற்றுக்கோலாக பற்றிக்கொண்டான்.
அபி அதிகம் வீட்டுக்கு போகாமல் இருக்க, சங்கரி அவனை ஹோட்டலில் பார்த்துக்கொள்வதால்
பெரிதாக கவலை கொள்ள வில்லை. ஆனால் ராகவேந்தர் மிகவும் பாதிக்கப்பட்டார். அவனை
முற்றிலும் காணாமல் ஏனோ அவன் தன்னை ஒரேடியாக விலகி போனதாகவே அவர் மனதிற்கு
பட்டது.
அவர் அவனைக் காண அடுத்தநாள் ஹோட்டல் செல்லலாம் என்ற முடிவுடன் இருக்க, ரேகா
தந்தைக்கு போன் செய்து பேசும்போது அவர் மனநிலையை அறிந்துகொண்டவள், லாவகமாக,
“இப்போ போனா ஏதோ அவன் சம்பாதிக்கிற பணத்தை வாங்க வந்ததா உங்களை மட்டமா
நினைப்பான். தேவையா?”, என்று அழகாக கொளுத்திக் போட்டாள்.
அவள் நினைத்து செய்ததென்னவோ தந்தை மகன் பக்கம் சாய்ந்துவிடக்கூடாது என்று தான் .
ஆனால் ராகவோ, மகன் தன்னை தவறாக எண்ணி இன்னும் ஒதுங்கிவிட்டால் என்ன செய்வது
என்று மருகி, அந்த எண்ணத்தை கைவிட்டார்.
வாழ்க்கை பலருக்கு பல நேரங்களில் நினைத்தது ஒன்றாகவும் கிடைப்பது ஒன்றாகவும் இருக்கும்.
ஆனால் சிலருக்கு நினைக்க கூட முடியாத வருத்தங்களும் வலிகளும் இருக்கும். தந்தையின்
வலியை தெரிந்து அவரை கைக்குள் வைத்துக்கொள்ளும் ரேகா, ஏனோ அவர் வலியை உணரவே
இல்லை.
★★★★
��அகலாதே ஆருயிரே��
��39��
அன்று சங்கரி காலை வேலைகளை முடித்து, தன் பொடி வகைகளை பையில் வைத்துவிட்டு,
நித்திலனின் இனிப்பகத்தில் வேலை செய்ய கிளம்ப, முகத்தை தூக்கி வைத்தபடி வீட்டிற்குள்
நுழைந்தாள் இளைய மகள் ஸ்வாதி.
சங்கரிக்கு உள்ளே என்னவோ பிசைந்தது. ஒரு வருடமாக எந்த பிரச்சனையும் இன்றி இவள்
இல்வாழ்க்கை சென்றுகொண்டிருப்பதாக ஏதோ மன நிம்மதியில் இருந்தார். அதற்கும் வேட்டு
வைக்க கிளம்பி வந்திருக்கும் சின்ன மகளை என்ன செய்வது என்று புரியாமல்,
“வா ஸ்வாதி, எப்படி இருக்க? மாப்பிள்ளை எங்க? “,என்று கேட்டதும்,
“ஏன் உன் மாப்பிள்ளை கூட வந்தா தான் வீட்டுக்குள்ள விடுவியா? என்ன மா? “, என்று எகிறிய
அவளை புரியாது பார்த்தவர், உள்ளே சென்று அவளுக்கு குடிக்க நீர் எடுத்து வந்தார். கூடவே
அபிக்கு போன் செய்து கையில் வைத்துக்கொண்டார்.
“இந்தா இதை குடி. ஏன் இவ்ளோ கோவப்படுற ஸ்வாதி? நான் மாப்பிள்ளை எங்கன்னு தானே
கேட்டேன்? அங்க உனக்கெதும் பிரச்சனையா மா? நானும் அப்பாவும் வந்து பேசவா? “, என்றார்.
“என்ன பேசப் போறீங்க? அவங்க நான் பண்றதெல்லாம் தப்புன்னு பேசுவாங்க. கேட்டுட்டு,
கொஞ்சம் பொறுத்துப்போ. சொன்னாக் கேளுன்னு எனக்கே அட்வைஸ் பண்ணுவீங்க. அதானே.
“, என்று எரிச்சலாக சொல்லவும்,
‘இவள் தான் ஏதோ குட்டிகலாட்டா செய்துவிட்டாள்’ என்று சங்கரிக்கு புரிந்தது.
“சாப்பிட்டியா? இரு சாப்பாடு எடுத்துட்டு வரேன். “, என்று சமையலறைக்கு வந்தவர், போனை
காதில் வைத்ததும், “அம்மா அக்காவை ஒன்னும் சொல்லவோ, கேட்கவோ வேண்டாம். நான்
சின்ன மாமா கிட்ட பேசுறேன். நீங்க கொஞ்சம் அவளை நல்லா பார்த்துக்கோங்க. அவ ரேகா
அக்கா மாதிரி இல்ல. எதையோ தப்பா புரிஞ்சிட்டு கோவிச்சிட்டு வந்திருப்பா”, என்ற அபியை
உள்ளே மெச்சிக்கொண்டார் சங்கரி.
“நானும் அதான் நெனச்சேன் அபி. ஒரு வேளை குழந்தை விஷயமா எதுவும் மனம் நோகப் பேசி
இருப்பார்களோ? “, என்று சங்கரி வருந்த,
“இருக்காது மா. நான் விசாரிக்கிறேன். நீங்க இன்னிக்கு வீட்டுலயே இருங்க. நான் நித்திலன் சார்
கிட்ட சொல்லிக்கிறேன்.”, என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.
சங்கரி ஸ்வாதிக்கு ஆதரவாக பேசி, சாப்பிட வைத்து அவளை ஓய்வெடுக்க அனுப்பினார்.
கல்லூரி வளாகத்தில் தன் வண்டியை நிறுத்திய அபி, மகேஷுக்கு போன் செய்து, “என்ன சின்ன
மாம்ஸ் எப்படி இருக்கீங்க?” என்றதும்,
“அடப்போ மச்சான். உன் அக்காவை கட்டி நொந்து போய் இருக்கேன். “
“என்ன மாம்ஸ்?”
“ரொம்ப பிடிவாதம் பண்றா அபி. முடியல. உங்க வீட்டுல கொடுத்த பணத்துல தான் வேலைக்கு
சேர்ந்தேன் நானும் இல்லன்னு சொல்லலயே. அதுக்கு? தினமும் சொல்லிக் காட்டிக்கிட்டே
இருந்தா எப்படி?”
“என்ன மாம்ஸ் சொல்றீங்க?”
“அம்மாவுக்கு கண்ணாடி உடைஞ்சு போச்சு. வாங்கிட்டு வந்தேன். அன்னைக்கு இவ ஏதோ கிரீம்
கேட்டாளாம். நான் மறந்துட்டேனாம். அதுக்கு, வேலை வாங்கி தர எங்கப்பா காசு வேணும்.
ஆனா அதுல வர்ற சம்பளத்துல எனக்கு ஒரு பொருள் வாங்கி தர முடியாதா? உங்க அம்மாக்கு
தான் செய்வீங்களா? அப்போ அவங்க கிட்ட காசு வாங்கி வேலைக்கு சேர்ந்திருக்கலாம் இல்ல.
இப்படி பேசிக்கிட்டே போறா அபி. அம்மா பாவம் ஒவ்வொரு தடவ இவ இப்படி பேசும்போதும்,
அப்போ நான் படிக்க வச்சத்துக்கெல்லாம் கணக்கா பாக்கறோம்னு ஒரே புலம்பல். என்னால
அம்மாக்கும் இவளுக்கும் இடையில போராட முடியல.”,என்ற தன் சின்ன மாமனை நினைத்து
வருந்தினான்.
படித்த படிப்புக்கு சொந்த முயற்சியில் வேலை தேடி இருந்தால் இன்று இந்த வேண்டாத
சொற்களை கேட்க வேண்டி இருந்திருக்காது. வரதட்சணை வாங்கி வேலைக்கு போனால்,
மனைவி என்பவள் கணவனை உரிமைப்பட்டவன் என்பதையும் தாண்டி
அடிமைப்பட்டவனாகவே கருத்துவாள். நான் விலை கொடுத்து வாங்கிய பொருள் நீ என்ற
எண்ணம் வர தானே செய்யும். இதயெல்லாம் முன்பே யோசித்திருக்க வேண்டும். என்று மனதில்
ஆயிரம் எண்ணங்கள் ஊர்வலம் வந்தாலும்,
“நான் பேசுறேன் மாம்ஸ்.”, என்று பொறுமையாக சொன்னவனிடன், “வேற ஒரு உதவியும் நீ
பண்ண வேண்டாம் மச்சான். ரேகா அண்ணி கூட அவளை பேசக்கூடாதுன்னு மட்டும் சொல்லு.
அவங்க பேசாத வரை இவ நல்லா அனுசரணையா தான் இருக்கா. அவங்க போன் பண்ணினா
கொஞ்ச நேரத்துல என்னவோ ஆய்டுறா. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.”, என்று
புலம்பினான்.
‘ஆக, இந்த பிரச்சினைக்கும் மூல காரணம் ரேகா தானா ?’, என்று நொந்தவன், “நான் பெரிய
மாமா கிட்ட பேசுறேன்.”,என்றான் இறுகிய குரலில்.
“நான் ஏற்கனவே பேசிட்டேன் மச்சான். அவரும் பல தடவை சொல்லிட்டாரு. அவங்க கேக்க
மாட்டேங்கறாங்க. அது மட்டும் இல்ல. குழந்தை இப்போ வேண்டாம்ன்னு அவ மனசுல ஆழமா
பதிய வச்சிருக்காங்க. நாம சொல்றத அவ காது கொடுத்து கேக்குற நிலையிலயே இல்ல.”
ஒரு பெருமூச்சை வெளியிட்ட அபி, “ரேகா அக்காவை நான் பார்த்துக்கறேன். ஸ்வாதியை சரி
பண்ணிட்டு போன் பண்றேன். வந்து கூட்டிட்டு போங்க.”, கடுமை ஏறிய குரலில் சொல்லிவிட்டு
போனை வைத்தான் அபி. அவன் மனதில் சில திட்டங்கள் வகுத்துக்கொண்டு,அவன் கல்லூரி
நூலகத்தில் நுழைய, வாசலில் கைவைத்து தடுத்தாள் ஒரு நவயுக நங்கை.
அவளை மேலும் கீழும் பார்த்தவன், “எஸ். வாட் டு யூ வான்ட்?”, என்றதும்,
“ஹாய் அபினவ். நான் இங்க பி.எல் செகண்ட் இயர் படிக்கிறேன். யூ ஆர் சோ மேன்லி. ஒரு நாள்
டேட்டிங் போலாமா?”, என்றதும்,
இதழ் பிரித்து சிரித்த அபி, “சீ சிஸ்டர். எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. என்னால டேட்டிங்
எல்லாம் வர முடியாது. அதுல இன்டெரஸ்ட்டும் இல்ல. பிளீஸ் சூஸ் சம்ஒன் வித் யுவர் வேவ்
லென்த். மூவ் அ லிட்டில். ஐ நீட் டு ரெஃபர் சம் புக்.”, என்று அவளை நகர்த்திவிட்டு உள்ளே
நுழைந்தான்.
அவளும் வைத்த கண் வாங்காமல் பார்க்க, அவளை இடித்த அவளின் தோழி, “என்னடி?”, என்று
கேட்டதும்,
“அவனவன் நான் பேச மாட்டேனா, பக்கத்துல உக்கார மாட்டேனான்னு காத்து கிட்டு
இருக்காங்க. நானா இவனை டேட்க்கு கூப்பிடுறேன் இவன் என்னை பார்த்து நோ சொல்லிட்டு
போறான்.”, என்றதும்,
“அவன் ரொம்ப படிப்பாளியாம் டி. அவன் கிளாஸ் கேர்ள்ஸ் கிட்ட கேட்டேன். அவன்
பொண்ணுங்க இல்ல, பசங்க பக்கம் கூட பாக்க மாட்டானாம். ஒரு வருஷம் ஆச்சு, இன்னும் ஒரு
பிரென்ட் கூட இல்ல அவனுக்கு. காலேஜ் வர முடியலன்னா, நேரா ப்ரோஃபசர் கிட்ட கேட்டு
படிக்கிறானாம். இவனெல்லாம் நமக்கு செட் ஆக மாட்டான் டி. நமக்கு பின்னாடியே வர
நாய்க்குட்டி மாதிரி பசங்க தான் நமக்கு சரி. இவன் பின்னாடி நாம நாய்க்குட்டி மாதிரி அலைய
முடியாது.”, என்றாள் நீளமாக.
“எஸ். அவனோட அழகு, ஸ்டைல் பார்த்தா அவன் பக்கம் போகற மனசை கண்ட்ரோல் பண்ண
முடியல. பட் இவன் நமக்கு செட் ஆக மாட்டான். யூ ஆர் கரெக்ட்”, என்று சொல்லிவிட்டு, “ஆமாம்
தேர்ட் இயர் சுசீல் எங்க? இன்னிக்கு டிஸ்க்கொதே போக பாஸ் வாங்க சொன்னேன் அவன்
கிட்ட.”, என்றதும்,
“அட, கபிள் பாஸ் டென் தவுஸண்ட் டி. “,என்று அவள் வாய் பிளக்க,
“சோ வாட்? அதை பற்றி நமக்கென்ன? வா அவன் பிரென்ட் எவனாச்சும் எஸ்ட்ரா பாஸ்
வச்சிருந்தா நீயும் கரெக்ட் பண்ணி ஜாயின் பண்ணிக்கோ. நமக்கு லைஃப் என்ஜாய் பண்ணனும்.
இந்த சாமியார் மாதிரி இருக்க முடியது. “, என்று ஒரு சட்ட புத்தகத்தில் மூழ்கி இருந்த அபியை
சுட்டி காட்டி விட்டு அவள் தோழியுடன் வெளியேறினாள்.
இப்படி நம்மை தவறாக வழி நடத்தும் நட்புகள் என்றுமே ஆபத்தானவை என்பதை அவர்கள்
இருவருமே உணரவில்லை. பார்ட்டியும் டிஸ்க்கொதேவும் இன்று மகிழ்ச்சி அளிக்கலாம். ஆனால்
நாளை வழக்கு கிடைக்காத மொக்கை லாயராக வலம் வரும்போது, சிங்கிள் டீக்கு வழி இல்லாமல்
போகும் என்பதை இவர்கள் உணரும் நாளும் வரும். வாழ்க்கை யாருக்கும் பாடம் கற்பிக்காமல்
விடுவதே இல்லை. கர்மா இஸ் அ பூமராங். நாம் விதைத்த வினையை அறுவடை செய்தே
தீருவோம் என்பதை பலர் உணராமலே வாழ்கின்றனர்.
**
ரிது அன்று கிட்சனில் அம்மாவுக்கு உதவிக்கொண்டு இருக்க, ஆருஷி ரிஷியுடன் சதுரங்கம்
விளையாடிக்கொண்டு இருந்தாள்.
சசி வேலை முடிந்து,பிள்ளைகளை சாப்பிட சொல்லிவிட்டு, தன் எம்பிராய்டரி வேலையில் மூழ்க,
ரிஷி தன் நண்பர்களுடன் விளையாடப் போய் விட்டான்.
தனியே அமர்ந்திருந்த ஆருஷி, கையில் இருந்த வெஜ் ரோலை பார்த்தபடி இருக்க,
“சாப்பிடு டி “,என்ற ரிதுவின் குரலில் நிமிர்ந்தவள் கண்களில் கண்ணீர் குளம் கட்டி நிற்க,
“ஏ.. ஆரூ.. “,என்று அவளை அணைத்துக் கொண்ட ரிதுவுக்கு அவளின் இந்நிலைக்கான காரணம்
புரிப்பட, ஓங்கி அவள் முதுகில் ஒன்று வைத்தாள்.
“ஏண்டி பைத்தியம், நீ இன்னும் அவங்க கூட பேசலையா?”, என்ற கோபக்குரலுக்கு தலையை
குனிந்த படி இல்லை என்று தான் தலையை இடதுவலதாக அசைத்த ஆருஷியை கடுப்புடன்
நோக்கியவள்,
“எக்ஸாம் முடிஞ்சு பத்து நாள் ஆச்சுல்ல, பேச வேண்டியது தானே. உன் படிப்புக்காக தான்
ஆரும்மா நான் பார்த்தேன். மத்தபடி உன் வாழ்க்கை முடிவுகள் உன்னோட இஷ்டம் தான். நீ ஏன்
இப்படி.. “,என்று மேலும் பேச முடியாமல் தொண்டை அடைக்க,
அந்நேரம் ஜே.பி. என்ற அழைப்பு ஆருவின் போனில் வர, புரியாமல் விழித்தாள் ரிது.
“இது ஜே.பி. ஸ்ரவன் வீட்ல இருக்கார்ல அவர்.என்னோட பிரென்ட்.”, என்றதும்,
“அப்போ நான் யாரு டி எருமை?”,என்று அவள் முதுகில் மீண்டும் ஒரு அடியை பரிசாக
கொடுத்தாள் ரிது.
“நீ என் உயிர் டி. அவர் எனக்கு நல்ல நண்பன், உன்னைப்போலவே படிப்புல என் கவனம் இருக்க
நெறய உதவி செஞ்சார்.”, என்றதும், ஏனோ ரிதுவுக்கு அவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற
எண்ணமே மேலோங்கியது.
உடனே அழைப்பினை ஏற்றவள், “ஹலோ, ஜே.பி சார். நான் ஆரூ பிரென்ட். நீங்க ஆரூ படிக்க
ரொம்ப ஹெல்ப் பண்ணினதா இப்போ தான் சொன்னா.ரொம்ப தேங்க்ஸ். இருங்க அவ கிட்ட
தரேன். “, என்று சொல்லிவிட்டு அவளிடம் போனை கொடுத்தவள், எழுந்து கிச்சனுக்கு
சென்றுவிட்டாள்.
ஆருஷி ,”ஹலோ, ஹலோ”, என்று கத்த, அந்த பக்கம் இருந்த அபியோ, சற்று முன் கேட்ட தேன்
குரலில் சொக்கி போய் இருந்தான்.
அவளின் குரலில் ஒதுக்கமோ, ஒட்டாத தன்மையோ இல்லாமல், அதே நேரம் உரிமையும்
இல்லமல் ஒருவித ஆளுமையோடு, என் தோழிக்கு உதவிய ஒருவருக்கான நன்றி என்ற அளவில்
தெளிவான அவள் பேச்சில் எங்கும் குழையவோ, வெட்கம் கொள்ளவோ இல்லை.
அபிக்கு அந்த குரலின் இனிமையை விட ஆளுமை மிகவும் கவர்ந்துவிட, பெயரே தெரியா அந்த
தேவதை அவன் இதயத்தில் அழகிய சிம்மாசனம் ஏறி அமர்ந்துகொண்டாள்.
உதட்டில் உறைந்த புன்னகையுடன் நின்ற அபிக்கு போன் தன் இருப்பை பாடல் இசைத்துக்
காட்ட, அதில் தெரிந்த குரங்கு குட்டி என்ற பெயரை கண்டதும் தான் ஆருவுக்கு போன்
செய்துவிட்டு, அவள் பேசியதும் மெய் மறந்து ஆருவுடன் பேசாமல் போனோம் என்றே அவனுக்கு
தோன்றியது. தன் தலையில் மெல்ல தட்டிக்கொண்டவன், தன் கைவிரல்கள் கொண்டு தலையை
கோதி, ‘அபி.. வாட் இஸ் திஸ்.. காம் டவுன்.. டோன்ட் ஃபிளை..’, என்று தான் மனதை
கடிவாளமிட்டு,
“என்ன குரங்கே.. என்ன பண்ற.. உன் லாலிபாப் கூட பேசியாச்சா? எனக்கு நீ போன் பண்ணவே
இல்ல.”,என்று அடுக்கத் துவங்கினான்.
★★★★
��அகலாதே ஆருயிரே��
��40��
ஆருஷி மிதமிஞ்சிய மகிழ்ச்சியுடன் அபியை காண ஸ்ரவன் வீட்டிற்குள் நுழைத்தாள். ஆனால்
அகவழகி அவளிடம் அன்பாக பேசிவிட்டு அபி அவன் வீட்டிற்கு சென்று இருப்பதாக சொல்லவும்,
ஆருவுக்கு தன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள முடியவில்லையே என்ற வருத்தமே மிஞ்சியது.
உடனே அவன் செல்லுக்கு அழைக்க, அதுவோ அவர் தொடர்பு எல்லைக்கு வெளியில்
இருக்கிறார் என்றது. ‘அப்படி எந்த எல்லைக்கு ஜே.பி போன’, என்று சொல்லி திட்டிவிட்டு
வீட்டிற்கு சென்றாள் ஆருஷி.
அவள் ஏன் மகிழ்ச்சியாக இருந்தாள், எதை பகிர நினைத்தாள் என்பது தானே உங்கள் சந்தேகம்..
மிக மிக மகிழ்ச்சியான செய்தி சொல்ல தான் ஓடிவந்தாள் அவள். அன்று அவர்கள் தேர்வுக்கான
முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆருஷி நல்ல மதிப்பெண் அடிப்படையில் தேர்வாகி
இருந்தாள். அதை சொல்ல மட்டும் அவள் தேடவில்லை அபியை. அபி பல நாட்களாக அவளிடம்
விசாரிக்கும் அவள் தோழி மாநிலத்தில் முதலிடம் பிடித்து அனைத்து தொலைக்காட்சிகளிலும்
தோன்றிக்கொண்டு இருந்தாள். அதை சொன்னால் அவன் பார்ப்பான், மகிழ்வான் என்றே அவள்
அவனை தொடர்பு கொள்ள முயன்றாள். அவள் அறியாத அபியின் மனதா.. ரிதுவை பற்றி
அடிக்கடி ‘உன் தோழி என்ன சொன்னாள்? அவள் சொன்னால் நீ கேட்கும் அளவுக்கு அவள் நல்ல
பிள்ளையா?’ என்று எவ்வளவு போட்டு வாங்கி இருப்பான். அதை உணர்ந்து தான் கழுவும் மீனில்
நழுவும் மீனாக ஆரூ அவளை பற்றி சொல்லாமல் இருந்தாள். ஆனால் இன்றோ உலகமே
பார்க்கிறது. இவனும் பார்த்தால் என்ன என்று தான் அவனிடன் சொல்ல முயன்றாள். ஆனால்
பலன் என்னவோ பூஜ்யம் தான்.
அபி அன்று இருந்த மனநிலைக்கு அவனால் யாரோடும் பேசவோ தொடர்பு கொள்ளவோ
முடியவில்லை. அவன் ஸ்வாதியை மிகவும் மென்மையாக பேசி, மகேஷின் குணநலன்களை
சொல்லி ரேகாவின் மனவோட்டத்தை எடுத்துரைத்து, அவளை சரிகட்டி காலை மகேஷ் வீட்டிற்கு
அழைத்து செல்ல இருந்த நேரம் ரேகா ஒரே போன் காலில் அத்தனையையும் கெடுத்து
வைத்துவிட்டாள்.
என்ன சொன்னாளோ, என்ன கேட்டாளோ, ஸ்வாதி ஒரே பிடியாக தனிக்குடித்தனம் என்று பாட,
மகேஷ் அவளை கூடிச் செல்ல வந்தவன் கோபம் கொள்ள, வீடே களேபரமாக இருக்க,
ராகவேந்தர் தன் மகள்களின் செயல்கள் பார்த்து மனம் பொறுக்காதவராக நெஞ்சை
பிடித்துக்கொண்டு தரையில் சரிந்தார்.
தன்னிடம் அன்பாய் பேசியிராத தந்தை தரையில் சரிந்த நொடி ஓடி வந்து தாங்கி நின்றான்
அபினவ்.
“அப்பா.. அப்பா.. “,என்று அவன் அலற, அவரோ மூர்ச்சையாகி இருந்தார்.
அவரை மகேஷின் உதவியோடு மருத்துவ மனையில் சேர்த்தால், முதல் மாரடைப்பு என்று
சொல்லி அனைவர் மனதிலும் கிலியை விதைத்தனர் மருத்துவர்கள்.
மூன்று மணி நேர போராட்டத்துக்கு பின், மறுநாள் வரை எந்த வித வலியும் ஏற்படாவிட்டால்
ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் சொன்னதும் தான் அபிக்கு மூச்சே வந்தது.
அவனை பொறுத்தவரை தந்தை அக்காக்களுக்கு செய்தாரே தவிர அவர் ஒன்றும்
அனுபவிக்கவில்லை. அதனால் அவரை கடிந்து ஆவது ஒன்றுமில்லை என்பதை உணர்ந்தவன்,
அவரிடம் தள்ளி இருந்து கொண்டானே ஒழிய அவரை வெறுக்கவில்லை.
தனக்கு வேண்டியதை தானே பார்த்துக்கொண்டாதால் தான் அவர் அமைதியாக இருந்தார். இதே
தானும் அவரை எதிர்பார்த்து நின்றிருந்தால், கண்டிப்பாக கடன் பட்டேனும் தான் விரும்பியதை
செய்திருப்பார் என்பதில் அவனுக்கு ஒன்றும் ஐயமில்லை.
இந்த குளறுபடி, மற்றும் மருத்துவமனை வாசத்தில் அவன் ஆருஷியின் தேர்வு முடிவு
அறிவிப்பினை மறந்தே விட்டான்.
அபி ரிதுவை தொலைக்காட்சியில் காணும் வாய்ப்பையும் இழந்திருந்தான். அன்றைய
மனநிலையில் அவனால் சுற்றுப்புறத்தை கிரகிக்கவே முடியவில்லை. இல்லாவிட்டால்
மருத்துவமனை வரவேற்பறையில் நாள் முழுவதும் மணிக்கு ஒருமுறை காட்டப்பட்ட ரிதுவை
அவன் கண்டிருப்பான்.
கடவுளின் எக்குதப்பான கணக்கு
பலநேரம் மனிதர்கள் புரிந்து கொள்ளவே முடியாது. ஆனால் சூட்சமமாக அவர் புரியும் லீலைகள்
வாழ்வில் பல நேரங்களில் நாமே எதிர்பார்க்காத ஆச்சர்யங்களாகவும், அதிர்ச்சிகளாகவும் ஏன்
இரண்டும் கலந்தும் நம்மிடம் வந்து சேர்ந்துவிடும். அதுபோல ரிது-அபி வாழ்வின் நடக்கும் நாள்
என்றோ..???
ரிது தன் தாய் தந்தை அருகில் நின்றபடி அத்தனை தொலைக்காட்சிகளுக்கும்
பதிலளித்துக்கொண்டு இருந்தாள்.
“உங்க அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்ன படிக்க போறீங்க? வாழ்க்கையின் லட்சியம்
என்ன?”, என்ற பல கேள்விகளுக்கும் சிரித்தமுகமாக நின்றவள்,
“அதை அந்த நேர வெற்றியை கொண்டாடும்போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.”, என்று
புன்னகை முகமாக சொன்னவளை ஆச்சர்யமாக பார்த்தனர் அனைவரும்.
“ஆமாம்.. கண்டிப்பா அடுத்தடுத்த வெற்றிகளில் இதே போல உங்க கூட பேசவும், அதை
தொடர்ந்துகொண்டே இருக்கவும் தான் என் விருப்பம்.”, என்று சொன்னவளை,
“என்ன அரசியலுக்கு வரப்போறீங்களா?”, என்ற நக்கலாக ஒரு பத்திரிகையாளரின் கேள்வியில்
உள்ளே கோபம் முளை விட்டாலும், அதை முகத்தில் காட்டாது, “அரசியலுக்கும் மேல சார். அஞ்சு
வருஷம் ஆளும் உரிமை மட்டும் தானே அரசியல்வாதிக்கு. நான் என் வாழ்நாள் பூராவும் ஆளும்
வகையில் வருவேன். ஏன் உங்களுக்கு இவ்ளோ அவசரம். அடுத்த பேட்டியில் சந்திக்கலாம்.
என்னோட இவ்ளோ நாள் சேர்ந்து சிரமம் எடுத்துக்கொண்ட என்னோட பெற்றோர், ஆசிரியர்கள்
மற்றும் என் உயிர்தோழிக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். மிக்க
நன்றி.”, என்று சொன்னவள் தாய் தந்தையுடன் கிளம்பிவிட்டாள். அவள் பேச்சில் இருந்த
கம்பீரமும், நடையில் இருந்த நிமிர்வும் உண்மையில் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
வீட்டிற்கு வந்த சசி அவளுக்கு திருஷ்டி சுற்றி உள்ளே அழைத்து செல்ல,
நாராயணன் மகளை மார்போடு அள்ளி அணைத்தார். அவர் எதிர்பார்க்கவே இல்லை. நல்ல
மதிப்பெண் பெறுவாள் என்று தான் நினைத்தார்களே தவிர மாநில அளவில் முதல் மதிப்பெண்
பெறுவாள் என்று எண்ணவே இல்லை.
அவர் மனமெல்லாம் மகள் மேல் உள்ள பிரியத்தில் கசிந்து உருக, பக்கத்தில் ஒரு பக்கெட்டோடு
வந்து நின்றான் ரிஷி.
“என்னடா இது?”, என்று கேட்ட ரிதுவை அமைதியாக இருக்க சொல்லி செய்கையில்
சொன்னவன்,
“நைனா.. ஸ்டார்ட்..”, என்றான். அவர் புரியாமல் விழிக்க,
“உங்க ஆனந்த கண்ணீரை அள்ளி எடுத்து சென்னை மக்களின் வறட்சியை போக்க எண்ணிய
என் எண்ணத்தை வீணாக்காதீர்கள் நாராயணன்…”, என்று அவன் சரோஜா தேவி அம்மா போல
பேச..
நாராயணன் கண்ணை துடைத்துக்கொண்டு “நில்லு டா டேய்..”,என்று அவனை துரத்த
துவங்கினார்.
சசியும் ரிதுவும் அவர்களை பார்த்து சிரிக்க, ரிஷி இறுதியில் தந்தையிடன் மாட்டி தரையில்
உருண்டு, அவரையும் உருட்டி ஒரு வழியாக்கி விட்டு தான் எழுந்தான்.
சசி மகளை ஆதுரமாக பற்றி, “அடுத்து என்ன பண்ண போற டா கண்ணம்மா.. “,என்றார்.
“யோசிச்சிட்டேன். ஆனா நீங்க என்ன சொல்லுவீங்களோன்னு யோசனையா இருக்கு.”, என்றாள்
தயக்கமாக.
சசி அவள் முகத்தை வைத்தே அவள் எண்ணத்தை கணித்தவராக, “எந்த ஊருக்கு படிக்க
போகப்போற?”,என்றதும்,
ரிது கண்களில் மின்னல் வெட்ட, ரிஷி கண்கள் கண்ணீரை பொழிந்தது. பக்கத்தில் இருந்து
படித்துக்கொண்டு விளையாட வராத போதே அழுதவன் அவன். அவனை விட்டு கிளம்புவது
என்றால், அவனால் அதை சற்றும் எண்ணிப்பார்க்கவே முடிய வில்லை.
நாராயணன் ஓரளவு ரிதுவின் முடிவை எதிர்பார்த்தே இருந்ததால், அவர் முகத்தில் எதையும்
காட்டாமல் நின்றார்.
“என்ன டா உன்னோட பிளான். சொன்னா அப்பாவும் ஆபீஸ்ல லீவ் எடுத்து உன்னோட வர
சரியா இருக்கும்.”, என்றார் மென்மையாக.
“நான் டெல்லி போகலாம்ன்னு இருக்கேன் பா. அங்க யுனிவர்சிட்டில, பி.ஏ, குற்றவியல் மற்றும்
நீதி நிர்வாகம் எடுக்க போறேன்.(B.A. criminology and Justice administration) அப்படியே சைட்
கோர்ஸ்ல பொது நிர்வாகம் எடுக்கணும் பா.”,என்றாள்.
“இதெல்லாம் இங்கேயே இருக்கே ரிது. நீ ஏன் டெல்லிக்கு போக நினைக்கிற?”, என்று மகளின்
மனநிலை அறிய சசி கேட்டதும்,
“அம்மா புது இடம், பாஷை, மனுஷங்க இதெல்லாம் நான் பழகணும். எதுக்கும் பயப்படாம
எதையும் எதிர்கொள்ளற தைரியம் வேணும் அம்மா.”,என்றாள்.
அவள் சற்றும் தன் முடிவில் தளராமல், நிதானமாக அதை எடுத்துரைத்த விதமே இவள் நிர்வாக
படிப்பிற்கு மட்டுமல்ல, வேலைக்கும் தயாராகிறாள் என்று பெற்றோர் இருவருக்கும் புரிய,
“சரி”,என்றனர்.
ரிஷி, “அக்கா இதை படிச்சு என்ன பண்ண போற?”, என்றான். குரலில் அவன் அழுது, அதை
மறைத்திருக்கிறான் என்பதை புரிந்து ரிது,
“ரிஷி, நான் ஒரு ஆட்சியாளரா ஆகணும். அப்போ தான் என்னால அநியாயத்தை தட்டி கேட்க
முடியும். ஆனாலும் வேறு எண்ணமும் இருக்கு. பார்க்கலாம்.எது ஒத்து வருதோ அது.”, என்றாள்.
அவளை இறுக அணைத்தவன், “ஊருக்கு போகறவரை என்னை விட்டு நகரக்கூடாது.”, என்று
சிறுப்பிள்ளையாக மாறி கெஞ்ச,
“உன்னைவிட்டு ஓடிபோக முடியுமா.. அது முடியுமா”, என்று நாராயணன் கேலி செய்து பாட,
மீண்டும் தகப்பனும், மைந்தனும் வீட்டையே இரண்டாகி ஓய்ந்தனர்.
ஆருஷி தன் தந்தையிடம் தன் மதிப்பெண்ணை சொல்ல, அவருக்கு கால் தரையில் பாவவில்லை.
அவள் மகளை அள்ளி ஒரு சுற்று சுற்றி இறக்க, உள்ளே வந்த வேணி என்னவென்று கேட்டார்.
ஆருஷி தன் மதிப்பெண்ணை சொன்னதும் முகம் மலர்ந்தவர், ரிதுவின் மதிபெண்ணும் அவள்
பெற்றிருக்கும் புகழும் அறிந்ததும் மகளை வசை பாடத் துவங்கினார்.
“நீ மட்டும் இதுபோல வாங்கி இருந்தா, இந்நேரம் இது இலவச விளம்பரமா, எங்க தொழில் லாபம்
பார்த்திருக்கும். உன்னை சொல்லி சொல்லியே ஞாபக சக்தி உணவுன்னு ஒரு லிஸ்ட் போட்டு
பணம் கறந்து இருப்பேன். ச்ச.. நீயெல்லாம் என்ன பிள்ளையோ?”,என்று சொல்லிவிட்டுச் செல்ல,
ஆருஷி குளமாகிப்போன கண்ணை தன் தந்தைக்கு காட்டப்பிடிக்காமல் தோட்டத்தில் அமர,
அவள் செல்போன் ஒலி எழுப்பியது.
எடுத்தவள் காதுகளை குளிர்வித்தன, “ஏய்.. ஐஸ்க்ரீம்”, என்ற ஹர்ஷாவின் பனிக்கட்டி
வார்த்தைகள்.
அவள் ஒரு நொடியில் உடைந்தவளாக குலுங்கி அழ,
“ஏ ஏன்டி அழற.. ப்ளீஸ் டி. ஒரு வருஷத்துக்கு அப்பறம் பேசுறேன். இப்படி அழுதா நான் என்ன
பண்ணட்டும். பக்கத்துல கூட இல்லை டி. ப்ராஜெக்ட் விஷயமா நான் ஹைதராபாத்ல இருக்கேன்.
அழாத டி.”,என்று சமாதானம் செய்தவன், கொஞ்சம் கொஞ்சமாக பேசி ஆருவை சமநிலைக்கு
கொண்டு வந்தான்.
“என்ன டி பண்ணப்போற.. எங்க காலேஜ்கே படிக்க வரியா?”, என்று ஆசையாக கேட்டவனிடன்,
“இல்ல லாலிபாப். நான் இங்க சென்னைலையே படிக்கிறேன். நான் சாப்ட்வேர் அண்ட்
அனிமேஷன் (software and animation) எடுக்கப்போறேன்.”,என்றாள்.
“ஏன்டி?”,என்றான்.
“உன்னோட எல்லா டிவைஸ்கும் டிசைன் நான் தான் பண்ணுவேன். மாடல் நான் தான்
பண்ணுவேன்.”, என்றாள் கண்ணிலும் குரலிலும் காதல் மின்ன,
தன் லட்சியத்திற்காக அவள் ஒரு படிப்பை தேர்ந்தெடுப்பது ஹர்ஷாவுக்கு மகிழ்ச்சியை கொடுக்க ,
“அப்பப்போ பேசலாமா டி. உன் பிரென்ட் ஒன்னும் சொல்ல மாட்டாளே?”,
என்றதும்,
“அவ சொல்ல மாட்டா.. ஆனா நான் வாரம் ஒரு நாள் தான் பேசுவேன் லாலிபாப். இது நமக்குள்ள
ஒரு டீல்.”, என்றதும் அவனும் அதற்கு சம்மதிக்க, அவர்கள் காதல் அழகிய புரிதலோடு மணம்
வீசியது.
★★★★
-ஜெயலக்ஷ்மி கார்த்திக்
Super super superb