Welcome
praveenathangarajnovels.com தளத்தில் கதைகளை வாசிக்க, எழுத்தாளர்களை எழுதவும் அன்போடு வரவேற்கின்றேன்.
பிரவீணா தங்கராஜ் என்று, நாவல் எழுத்தாளராக அடையாளப்படுத்தி கொள்ளும் நான் சென்னையில் வசிப்பவள். சிறு வயதில் தங்கமலர், சிறுவர்மலர், கல்கண்டு இதழ் என்று புத்தகம் வாசிக்கும் எனது பயணம், இதோ தொடர்ந்து கொண்டே வந்து நாவல் எழுத்தாளராக உங்களுக்கு அறிமுகமாகின்றேன்.
நம் வாழ்வில் சின்ன சின்ன நிகழ்வுகளை சுவைப்பட எழுதி வைப்பதற்கு டைரி தேவைப்படும். அப்படி ஆரம்பித்து எழுத பழகியதே என் எழுத்தின் ஆரம்பம்.
கல்லூரியில் விளையாட்டாய் கவிதையை கிறுக்கி தோழிகளிடம் காட்டிய பொழுது எனது முதல் கிறுக்கல்கள் ஆரம்பமானது. சின்ன சின்னதாய் வாழ்க்கையில் என்னோடு கலந்தவையை கவிதை மூலம் இயற்றி இரண்டாம் கட்டத்திற்கு வந்தேன். அதனை வீட்டில் என் அத்தை(அப்பாவின் அக்கா) மாமா(கல்லூரி பிரின்சிபால் பதவியில் இருந்தவர்) இருவரிடமும் காட்டிய அன்று ‘பொண்ணு நீ என்னை உனக்கு கவிதை எழுத வரும் நீ இன்னமும் நிறைய எழுது என்று தட்டி கொடுத்து பிழை களைந்து பாராட்டினார்கள். இதுவே என் முதல் ஊக்கம். அதன் பின் மனதில் ரசித்தவை எழுத்தில் வடித்தேன். சமூகத்தின் மீது எழும் கோபத்தையும், இயற்கையை ரசிப்பதையும், எழுத, அடுத்து அத்தியாயமாக காதலையும் எழுத வைத்து கவிதை வடித்தேன். மங்கையர் மலர் ராணிமுத்து கல்லூரிமலர் என்று மூன்று புத்தகத்திலும் வரிசையாக கவிதை வெளிவந்தது. என் எழுத்துக்கு அது அஸ்திவாரம்.
கவிதை கொஞ்சம் எட்டி வைத்து, பொழுது போகவேண்டுமென்று கதை படிக்க ஆரம்பித்தேன். புத்தகப் ப்ரியையான என்னை, கவிதை மட்டுமா? கதையும் எழுது என்ற மனசாட்சியின் தூண்டுதலில் எழுத துவங்கியது. நாம் நம் வாழ்வில் பொதுவெளியில், விழாக்களில், நல்லது கெட்டது நிகழ்ச்சியில் என்று பல அனுபவத்தினை உள்வாங்கி, வாழ்வின் பிரச்சனைகளையும், தீர்வாக மாற்றி, நாயகன் நாயகியாய் உருவகித்து பிரச்சனையை அவர்களுக்குள் ஏற்றி, அதற்கு தீர்வும் கொடுத்து நாமும் ஒரு பிரம்மனாய் கதாபாத்திரத்தின் மீது தலையெழுத்தாக எழுதி அவர்களை கதை மாந்தர்களாக நடமாட வைப்பதே ஒரு அலாதி மகிழ்ச்சி. அப்படிப்பட்ட அலாதியை விரும்பி நாவல்களை படைக்க ஆரம்பித்து இதோ வாசகர்களான உங்கள் முன் நாவல் எழுத்தாளராக மாறியுள்ளேன். அதன் பயணம் இதோ இப்பொழுது praveenathangarajnovels.com என்ற தளம் அமைப்பதிலும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இதற்கு முன் எழுதிய 70 கதைளில் பாதி அச்சு புத்தகமாகவும் மற்றும் அமேசானில் இ-புத்தகமாக காபிரைட் செய்யப்பட்டுள்ளது. அதில் காதல் குடும்பம், உறவு, நட்பு, பெண்களை முன்னிறுத்தி மையமாகவும், திகில் நகைச்சுவை மற்றும் சமூகம் சார்ந்த கதைகள் அடங்கியன.
எனது கதைகளின் பட்டியலும், சுட்டிகளும் அறிந்திட praveenathangarajnovels.com என்ற தளத்தில் காணலாம். மேலும் ராணி முத்து நாளிதழில் *பிரம்மனின் கிறுக்கல்கள்* என்ற நாவல், ஜூன் 16, 2022 வெளியாகி உலகத்திற்கு என்னை அடையாளப்படுத்தியது. அதற்கு முன்பிருந்தே என் நாவலை தொடர்ந்து பதிப்பிக்கும் ஸ்ரீ பதிப்பகத்தினருக்கும் உஷா மேம் லதா மேம் இருவருக்கும் எனது நன்றிகளும் பேரன்பும்.
வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 17
அத்தியாயம் – 17மழை அடித்து ஓய்ந்தது போல அனைவரும் ஷாக்கில் இருந்தனர்.. ரியோட்டோவோ தன் மனையாள் தன்னை அடி வெளுப்பாள்…
வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 16
அத்தியாயம் – 16தன்னை நோக்கி அழகாய் நடைப்போட்டு அப்பா அப்பா என அழைக்கும் அழகிய மழலையை பார்த்தபின் அவனுக்கு உலகமே…
வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 15
அத்தியாயம் -15 “நான் ப்ரஸ்க்கு ஆன்சர் பண்ணிட்டு வர்றேன்” என்றுவிட்டு வெளியே செல்ல திரும்பியவன் மீண்டும் ஆரூவை பார்த்து.. “பட்…
வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 14
அத்தியாயம் – 14கார் சரியாக அவன் சொன்னது போலவே ஒன்பது இருபதுக்கு நிதினின் ஆபீஸ் வளாகத்தினுள் நுழைய அங்கே காத்திருந்தனர்…
வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 13
அத்தியாயம் – 13நிதின் அப்படி கூறியதும்”ஐ காண்ட் பிலீவ் திஸ்.. அவோ உங்கமேலேயும் நீங்கோ அவோ மேலேயும் வெச்சு இருக்கே…
வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 12
அத்தியாயம் – 12கட்டுப்படுத்த முடியுத அளவிற்கு கோவமானவன் அவளது அருகில் வந்து”ச்சீ.. நீயெல்லாம் ஒரு பொண்ணா? கடைசியில நீயும் காசு…