இன்ஸ்பெக்டராக வந்து நின்ற இளைஞன் திருடனை தன் கரத்தில் ஒப்படைத்து விட்டு அவனின் பெயரில் கம்பிளைன்ட் கொடுக்கும் படி இயலினியிடம் கூறினான்.
ஆனால் அதை சிறிதும் விரும்பாத இயலினி, “நான் எதுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்கணும்… அப்படி கொடுத்துட்டு என்னைக்கு இவன் வந்து என்னைய கொல்லுவான்னு நான் பார்த்து கிட்டு பயந்து கிட்டே கிடக்கணும்மா? அதுக்கு பேசாம…” என்றவள்
யாரும் எதிர் பார்க்காத நேரம் இரண்டு ஆண்களின் பிடியில் நின்று கொண்டு இருந்த திருடனின் வலது கால் முட்டியை நோக்கி தன் பலம் மொத்தமும் திரட்டி கொண்டு ஓடி வந்து ஒரு உதை விட மடார் என்ற சத்தத்துடன் அவன், “அம்மாமாமாமா…” என்ற அலறலுடனே அப்படியே தரையில் சரிந்து துடி துடித்தான் வலியில்.
நடந்ததை கண்ட மக்களோ, “அச்சோ…” என்றே அதிர்ந்து அவரவர் அவரவர் வாயில் தங்களின் கரங்களை வைத்து கொண்டு நின்ற இடத்தில் இருந்து இரண்டு அடி தள்ளி சென்று அப்படியே நின்றனர்.
இன்ஸ்பெக்டரோ ஒரு பெண் இப்படி செய்வாள் என்று சிறிதும் எதிர் பார்க்காததால் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த பிறகே பாய்ந்து சென்று இயலினியின் வலது கர புஜத்தை பிடித்து திருடன்னை விட்டு தூரம் இழுத்து விட்டு பற்களை கடித்து கொண்டே, “ஏய்… என்ன பண்ணுற?” என்றே இயலினியிடம் சினம்மாக வந்தான்.
அவளோ ஓடி வருவதற்காக இரண்டு கரத்தால் இரு பக்கமும் சிறிது தூக்கி இருந்த பாவாடையை கீழே விட்டு விட்டு வெகுசாதாரணம்மாக, “நான் என்ன பண்ணுனேன்? நான் ஒன்னும் பண்ணலையே…” என்று தோளினை குலுக்கி கொண்டு தனது பைக்கை நோக்கி சென்றாள்.
எவ்வளவு பெரிய காரியத்தை செய்து விட்டு ஏதோ ஒன்றுமே செய்யாதது போல் போகிறாளே என்று சினமாகவே இரண்டே எட்டில் அவளின் முட்டி கைக்கு மேல் இருந்த கரத்தை அழுந்த பற்றி மீண்டும் ஒரு இழு இழுத்து தன் முன் நிறுத்தியே, “ஏய்… என்ன டி நக்கலா?” என்றான்.
டி என்ற வார்த்தையை கேட்டதுமே இயலினியின் மூக்கு புடைத்து விட்டது… “என்ன சொன்ன? டி யா? ஏய்… நான் எப்படி மரியாதையா பேசுறேன்னோ அதே மாதிரி நீ என் கிட்ட மரியாதையா பேசு… இல்லன்னா என் பேச்சியே வேற மாதிரி இருக்கும்… அப்பறம் இந்த டிரஸ்க்கு கூட மரியாதை குடுக்க மாட்டேன்… நியாபகம் வச்சிக்கோ…” என்றாள் போலீஸ்காரன் உனக்கு எல்லாம் நான் சளைத்தவள் இல்லை என்பது போல்.
குற்றம் செய்து விட்டு எவ்வளவு திமிராக பேசுகிறாள் என்று வெறியேறவே, “யு ஆர் அண்டர் அரெஸ்ட்…” என்று கூறி இயலினியின் கரத்தை அந்த இன்ஸ்பெக்டர் பிடித்து இழுத்தான்.
அவன் இழுக்கும் போதே கரத்தை உதறி விட்டு, “ஹலோ மிஸ்டர்… இந்த மாதிரி கைய பிடிக்கிற வேலைய எல்லாம் வச்சுக்காதீங்க… அதே மாதிரி ஒரு பொண்ண அரெஸ்ட் பண்ணனும்னா லேடி போலீஸ் வர வச்சி தான் அரெஸ்ட் பண்ணனும்… உங்களால என்னைய அரெஸ்ட் பண்ண முடியாது…” என்று இயலினி கூற
உடன்னே அந்த இன்ஸ்பெக்டர், “யார் சொன்னா அரெஸ்ட் பண்ணனும்னா லேடி போலீஸ் வேண்டும் என்று? ம்… சொல்லு… ரொம்ப பேசுற… உன்னைய தூக்கி கிட்டு போயி ஜெயில்ல வச்சிருக்க தான் லேடி போலீஸ் தேவை… உன்னைய அரெஸ்ட் பண்றதுக்கு எல்லாம் லேடி போலீஸ் தேவையில்ல… நானே போதும் வா…” என்றே இயலினியின் கையை பிடித்து இழுத்தான்.
ஓ… இது தப்பா? பரவா யில்ல என்றே மீண்டும் அந்த போலீஸ்காரர் கரத்தை உதறி விட்டு, “சரி… உங்களால என்னைய அரெஸ்ட் பண்ண முடியும் ஒத்துக்குறேன்… ஆனால் என்னைய அரெஸ்ட் பண்ணுற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணுனேன்…” என்று கேட்டாள்.
இயலினியின் கேள்வியில் முகம் இறுகியே, “ஏய்… என்ன நக்கலா? இப்போ நீ தானே எங்க எல்லார் கண்ணு முன்னாடியும் அவன் கால உடைச்ச… இது அவன் திருடனத விட பெரிய கிரைம்…” என்று கூற
அதை கேட்டதும், “ஹ… ஹ… சார்… நீங்க நடந்தத எல்லாத்தையுமே தப்பா நினைச்சுக்கிட்டீங்க… இங்க பாருங்க என் கழுத்த… அவன் என் செயினை என் கழுத்துல இருந்து பிடிங்கிட்டு போனான்… அதனால பாருங்க என் கழுத்துல காயமா இருக்கா? அதுக்கு தான் என் செயின்னை பிடுங்கி கிட்டு ஓடுன திருடர் ஆண்ணன் கால உதைச்சேன்… அப்படி உதைச்சதுல அவர் கால் எலும்பு முறிஞ்சிடுச்சி… அவ்வளவு தான்…” என்றாள்.
இயலினி கூறியதை கேட்டதும் அந்த இன்ஸ்பெக்டர் முகம் கருத்து விட்டது… “ஏய்… நீ பண்ணுன கிரைமுக்கு விளக்கம் சொல்லி கிட்டு இருக்கியா… ஒழுங்க மரியாதையா வந்து ஜீப்ல ஏறு…” என்று மிரட்டினான்.
“அடடா… சார் இந்த விளையாட்டு கேஸுக்கு எல்லாம் உங்களால என்னைய அரெஸ்ட் பண்ண முடியாது சார்… சரி அப்படியே என்னைய அரெஸ்ட் பண்ணனும்னாலும் உங்க கிட்ட அரெஸ்ட் வாரண்ட் ஏதாவது இருக்கா?” என்றே இயலினி கேட்டாள்.
அவள் கேட்டதில் போலீஸ்காரனுக்கும் மூக்கு சிவந்து விட்டது… “இந்த நடுக்கடை வீதி தெருவில் அத்தனை பேர் முன்னிலையில் ஒரு பெண் தன்னை அதுவும் ஒரு போலீஸ்காரனையே அவமதிப்பதோடு மட்டும் மில்லாமல் என்னையவே எவ்வளவு இளக்காரமாக பேசுகிறாள்? இவளை என்ன செய்வது?” என்றே அவனுக்கு அவ்வளவு சினம் வந்தது.
அவளை அப்படியே விட்டு விட்டு செல்ல விருப்பம் மில்லை… அவள் திருடனை அடித்தால் அது கேஸ் போட வேண்டாம் என்ற எண்ணம் இருந்தாலும் அவள் பேசும் பேச்சுக்காகவாவது அவளை ஸ்டேசன் அழைத்து சென்று பயம்முறுத்த வேண்டும் என்ற அளவிற்கு அந்த இளைஞனுக்கு கோபம் வந்தது.
ஆகையால், “அரெஸ்ட் வாரண்ட் கேக்குறியா? உன்னைய மாதிரி ஆளுங்கள எல்லாம் நல்லா உள்ள தூக்கி உக்கார வச்சி எஃப்ஐஆர் போட்டா தானா எல்லாம் நடக்கும் வா…” என்றே இயலினியின் கரத்தை பிடித்து இழுத்தான்.
இயலினியின் தாக்குதலால் கால் வலி வேறு திருடனுக்கு உயிரே போக இதில் போலீஸ்காரன் என்னைய டாக்டர் கிட்ட கொண்டு போகாம என்றே, “டேய் போலீஸ்காரா… இங்க ஒருத்தன் கால உடைச்சி கிட்டு உயிர் போற வலியில உக்காந்து இருக்கேன் டா… சும்மா அடிச்சிட்டு போக இருந்தவ கிட்ட ஏற்கனவே நீ பேசி தான் டா அவ இப்படி வந்து என் கால உடைச்சா… இப்ப மறுபடியும் நீ பேசி பேசியே வேற ஏதாவது என்னைய அவ பண்ணிட போறா… எனக்கு பயம்மாக இருக்கு என்னைய எவனாவது சீக்கிரம் ஹாஸ்பிடல் கூட்டி கிட்டு போங்க டா… என் காலு போச்சே…” என்று அவன் முணுமுணுத்துக் கொண்டு இருவரையும் முறைத்து கொண்டு இருந்தான்.
ஆனால் பாவம் திருடனை யாரும் பார்க்க வில்லை… நன்றாக சந்தன நிற பாவடை சட்டை மேலே சென்னிற தாவணி அணிந்து மஞ்சள் பூசிய முகத்தில் கல் வைத்த சென்றிய பொட்டினை வைத்து கொண்டு அழகோவியம்மாக நிற்கும் பெண்ணும் அவளுக்கு நேராக ஆறடியில் முறுக்கிய மீசையுடன் மானநிறத்தில் போலீஸ் கட்டிங் கேசத்துடன் கட்டுடல் காளையாக நின்றவனும் போட்டு கொண்டு இருக்கும் சண்டை தான் அங்கு இருந்தவர்களுக்கு உற்சாகம்மாகவும் அடுத்து என்ன நடக்க போகின்றது என்று ஒருவித எதிர் பார்ப்புடனும் பார்த்து கொண்டு இருந்தனர்.
இயலினிக்கோ சும்மா சும்மா கைது பண்ணுறேன்னு கையை பிடிப்பது அவ்வளவு கோவத்தை தந்தது… ஆகையால் மீண்டும் அவனது கரத்தை உதறி விட்டு விரல் நீட்டியே, “யோவ் மரியாதையா போயிடு… ஆமாம்… என்னைய கூட்டி கிட்டு போறதுலையே குறியா இருக்கியே… என்னைய கைது பண்ணிக்கிட்டு போயி என்ன பண்ண போற? ஆமாம் என் மேல என்ன கம்ப்ளைன்ட்? யார் கம்ப்ளைன்ட் கொடுத்தா? சரி… நான் அந்த திருடர் சார் கால உடைச்சத்துக்கு என்ன ஆதாரம் உன் கிட்ட இருக்கு? சரி… ஆதாரத்த விடு… யார் வந்து சாட்சி சொல்ல போறா? இதோ… இதோ… இவங்க… இவங்க…” என்றே அங்கு இருந்த மக்களை தன் இரு கரங்களையும் விரித்து காட்டி
“இவங்க எனக்கு எதிரா சாட்சி சொல்ல போறாங்களா? எங்க சொல்லுங்க… அம்மா நீங்க சொல்ல போறீங்களா? தாத்தா நீங்க… அண்ணா நீங்க… பாட்டி நீங்க… சொல்லுங்க… உங்கள்ல யார் தான் நான் அந்த திருடர் சார் கால உடைச்சத பார்த்தீங்க சொல்லுங்க போலீஸ் சார் கிட்ட… ஹாங்… அப்புறம் ஒரு விசியத்த நல்லா நியாபகம் வச்சிக்கோங்க…” என்றவள்
போலீஸ் பக்கம் தன் இடது கரத்தை நீட்டி, “நீங்க இவங்க கிட்ட நான் தான் இந்த திருடர் சார் கால உடைச்சேன்னு சாட்சி சொல்ல வந்தீங்கன்னா… நான் அந்த திருடர் சார் வந்து என் செயின திருடுனாருன்னு அத பிடுங்க போன வாக்குவாதத்துல தான் அவர் கால உடைச்சேன்னு சொல்லுவேன்… அப்ப உடைச்சத பார்த்ததா சொன்ன உங்க கிட்டயே கோர்ட்டு வரைக்கும் உங்கள வர வச்சி நீதிபதி இவர் திருடுனாரா? அத நீங்க பார்த்தீங்களான்னு உங்க கிட்ட மறுபடியும் கொஸ்டின் கேட்பாங்க… அப்ப நீங்க பார்த்தேன்னு சொன்னீங்கன்னா திருடன அடிச்சதால தான் நான் அடிச்சேன் அப்படின்னு சொல்லிட்டு கேஸ் இல்லாம போயிடும்… இதுதான் இந்த கேஸோட தன்மையே…” என்ற இயலினி
நேருக்கு நேராக போலீஸ்க்கு நேராகவே நின்று, “சரி… நடக்க போறத சொல்லுறேன்… இவரு இப்ப என்னைய அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போறேன்னு சொல்றார்… அப்படி அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போறேன்னு சொல்லி உங்களை சாட்சிக்கு கூப்பிட்டு கேஸ் இல்லாம போனால்… அவர் என்ன பண்ணுவாரு? அவரு என் மேல போட்ட கேஸ் பொய் கேஸ்சாவோ தேவை யில்லாத கேஸ்சாகவோ ஆகி அரசாங்கம் அவரை சஸ்பெண்ட் பண்ணும்… அப்படி அவர் சஸ்பெண்ட் ஆகக்கூடாது என்கிற ஒரே காரணத்துக்காக உங்களை அந்த திருடன் சார் திருடவே இல்ல… இந்த பொண்ணா தான் போயி திமிரு பிடிச்சி அந்த சார் கால உடைச்சேன்னு சொல்ல சொல்லி உங்களை மிரட்டுவார்… அப்பறம் நீங்க கோர்ட்டு கேஸ்சு கூடவே ஒரு பொண்ணு மேல… அதுவும் அப்பாவி பொண்ணு மேல பழிய போட்ட பாவம் எல்லாத்தையும் சுமக்கணும்… என்ன மக்களே… இந்த சாரோட கூட்டு சேர உங்கள்ல யாராவது தயாராக இருக்கீங்களா?” என்று அங்கு கூட்டம் கூடி இருந்த மக்களிடம் கேட்க திரும்ப
அவர்களோ எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போலவே அவரவர் அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டு நைசாக நகர்ந்து கொண்டனர்.
நக்கலான புன்னகையுடனே போலீசை பார்த்து, “என்ன சார்? நீ சாட்சி சொல்ல போறியா… போ… பொயி உன் சாட்சிய உன் எஃப்பைஆர்ல எழுது பார்க்கலாம்… உன்னால முடியாது… சரி… கோர்ட்டுல உன் கண்ணால பார்த்தேன்னு சொல்லு பார்க்கலாம்… போலீஸ் சாட்சி எங்கேயும் எப்போதும் செல்லுபடி ஆகாது… அப்படி செல்லுபடி ஆகும்ன்னு சொன்னா தான்… போலீஸ் நீங்க கொண்டு போற அத்தனை பேருக்கும் சாட்சியா நிப்பீங்களே… அதனால வேற சாட்சி தான் வேணும்… அப்பறம் இங்க யாரு சொல்ல போறா?” என்றே சுற்றி பார்த்தவள் பார்வையில் விழுந்தான் திருடர் சார்.
அவனை பார்த்த இயலினி, “அச்சச்சோ… அடிப்பட்டவன் காயப்பட்டவன் துடியா துடிக்கிறான்… ஆனால் இந்த ஆளு… இந்த ஆளு வேஸ்ட்டு திருடர் சார்… இருங்க நானே ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணுறேன்…” என்று கூறி கொண்டே ஆம்புலன்ஸை வர கூறி போன்னை வைத்தவள்
“இவள் என்ன பெண் தானா? கொஞ்சம் கூட பயம்மே இல்லாம எப்படி போலீஸ் ஆன என் கிட்டையே எதிர்த்து பேசுறா?” என்றே இயலினியை வெறித்து பார்த்து கொண்டு இருந்த இளைஞனை பார்த்தே, “யோவ்… என்னய்யா யோசிக்கிற? வேறு யார எனக்கு எதிரா சாட்சியா நிறுத்தலாம்ன்னா… முதல்ல கேஸ் எவன் குடுக்குறான்னு கேளுய்யா… ஓய்… திருடர் சார்… நீங்க என் மேல கேஸ் குடுக்க போறீங்களா…” என்று கேட்டே அந்த திருடனை பார்க்க அவன் இரண்டடி தரையில் அமர்ந்த படியே தள்ளி சென்று விட்டான்.
அவன் தள்ளி சென்றதும் வாய் விட்டே சிரித்த இயலினி, “ஹ… ஹ… கேஸ் இஸ் டிஸ்மிஸ்…” என்று உதடு பிதுக்கி அந்த இளைஞன் இடம் கூறியே தனது பைக்கை நோக்கி செல்ல
“ஏய்… நில்லு டி… நீ எல்லாம் ஒரு பொண்ணா? பொண்ணுன்னா பூ மாதிரி இருக்கணும்…” என்று அந்த இளைஞன் அவளை எதுவும் பண்ண முடிய வில்லையே என்ற ஆத்திரத்தில் அவளை காயப்படுத்த முனைந்தான்.
இயலினியும் திரும்பி, “ஓஓஓகோ ன்னான்னாம்… யார் சொன்னா பொண்ணுன்னா பூ மாதிரி இருக்கணும்னு? கண்டிப்பா சொன்னவன் ஒரு நல்ல பொண்ணா இருக்குற வீரமான பொண்ணா இருக்குற நேர்மையான பொண்ணா இருக்கிற பொண்ண அடக்கறதுக்காக உபயோகப்படுத்துகிற ஒரு மோசமான வார்த்தையா தான் பூவ நினைத்து பொண்ண வர்ணித்து பெண்கள கை பொம்மையா ஆக்கி அழிச்சி இருப்பான்…” என்று கூறியே பைக்கில் ஏறி கிளம்பி விட்டாள்.
பைக் கண்ணை விட்டு மறையும் வரைக்கும் பார்த்து கொண்டு இருந்த இளைஞனுக்கு செல்லும் இயலினி ரொம்ப வித்தியாசம்மாக தெரிந்தாள்… அவள் இன்னும் தன்னை எதிர்த்து எதிர்த்து பேசி கொண்டு இருப்பது போலவே தோன்ற, “பூ தான்… நீயும் ஒரு பூ தான்… என்ன? நீ சென்னிற தாவணில பூத்த ரோஜா பூ இல்லை… சென்னிற குருதியை உறைய வைக்கும் அரளிப்பூ… விஷக்கன்னி…” என்றே அவனின் இதழ் முணு முணுத்தது.
சூப்பர்… அன்ட் வெரி நைஸ் கோயிங்.
Thank you
Nice story going interesting
Thank you
Good epi
👌👌👌👌👌👌😘😘