அத்தியாயம்-2
நந்தவனம் அப்பார்ட்மெண்டில் (நன்விழி கதையில் வருமே அந்த அப்பார்ட்மெண்ட்) தமிழரசன் இரண்டு படுக்கையறை கொண்ட தனி வீட்டில் வசிக்கின்றான்.
சொந்த வீடெல்லாம் இல்லை, வாடகைக்கு இருக்கின்றான். தன் கணினியை இயக்கி மேட்ரிமோனியில் விவரத்தை பதிய வைத்தான்.
அதில் பூர்த்தி செய்ய வந்த கேள்விகளை கண்டு லேசாய் சோகமானான்.
அம்மா-அப்பா பெயர், சொந்த ஊர், உடன்பிறப்பு, எந்த சாதி, எந்த மதம், குலதெய்வ பெயர், உடன் பிறப்பு பெயர், இத்யாதியை கண்டு சோகமாகாமல் இருக்க முடியுமா? தமிழரசன் தான் ஆசிரமத்தில் வளர்ந்தவன். அங்கே படித்து, ட்ரஸ்டில் ஒருவர் படிக்க வைக்க தன் கல்லூரி படிப்பை முடித்தவன். கூடுதலாக சின்ன சின்ன வேலைகளை செய்து வளர்ந்தவன்.
தன் மனதை தேற்றிக்கொண்டு, தனக்கு யாருமில்லை என்றதும், எந்த சாதி மதமென்றாலும் சம்மதம் என்ற பிரிவில், தனது படிப்பு வேலை சம்பளம் குறிப்பிட்டு, அவனுக்கு தேவையான படித்த பெண், நிறைய உறவுகள் கொண்ட குடும்பத்தை எதிர்பார்ப்பதாக மட்டும் தெரிவித்து பதிவு செய்தான். அழகை அவன் குறிப்பிடவில்லை.
அதற்கு பதிவு செய்யப்பட ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினான். தன் முகப்பு படத்தில் தன் புகைப்படத்தை கொடுத்தான்.
அதன் பின் விரைவில் ஒரு குடும்பம் தன்னை அணுகலாமென்ற கனவுகளோடு கண்ணயர்ந்தான்.
கனவு அவனுக்கு வராமல் இருக்குமா? திருமண கனவுகளோடு இமை மூடியவனுக்கு, தன் மணக்கோலத்தில் மேடையில் அமர்ந்து மந்திரம் ஓதிக் கொண்டிருக்க, கொஞ்சம் சிவந்த நிறத்தில் மருதாணி பாதங்கள் குனிந்த தலையுடன் மெதுமெதுவாய் அடியெடுத்து, ஒரு தேவதை பெண்ணவள் வந்தாள்.
ஜிமிக்கியும் அணிந்திருந்த சிவப்பு பட்டும் தாண்டி அப்பெண்ணின் முகத்தை காணும் நேரம் யாரோ மாங்கல்ய தட்டை நீட்ட முகம் மறைக்கப்பட்டது.
அதன் பின் அவன் அருகே அமர, அவளை காண திரும்பினான். கெட்டிமேள சத்தத்திற்கு பதிலாக ஏதோ ஆங்கிலப் பாட்டு, காதில் விடாமல் ஒலிக்க கையால் காதை மறைத்து திருப்பினான். ஓயாமல் சத்தமிட வரும் இமைகள் பட்டென திறந்தது.
“சே… கனவா… கனவுல கூட ஒரு பொண்ணு எப்படியிருப்பான்னு பார்க்க முடியலை” என்று பெருமூச்சை வெளியிட்டு எழுந்தான். போர்வையை மடித்து வைத்து எழுந்தவன் காலை கடனை முடிக்க சென்றான்.
இத்தனை நாள் அலுவலகத்தில் ஒரு எம்பிளாயி. இனி டீம் லீடர் வேறு.. தானே தாமதமாய் செல்ல கூடாதென்ற எண்ணம் அவனுள் தூரிதப்படுத்தியது.
எப்பொழுது ஏதேனும் ஆங்கிலப்பாடலின் பாஸிடிவ் வைப்ஸோடு துள்ளலாய் கிளம்புவான். இன்று சட்டை பொத்தானை மாட்டிக் கொண்டிருந்தான்.
அவனுக்கு என்று டிவி கட்டில் கொஞ்சம் போல கிச்சன் பொருட்கள். அதோடு ஒரு பைக். சம்பளத்தில் அதிக பணம் கொடுத்து வாங்கியது இந்த பைக் மட்டுமே.
பைக்கை தடவி அதிலேறி அலுவலகத்திற்கு விரைந்தான்.
கேசவனை புறக்கணித்தவனாக செலன்றான்.
தலைக்கு மேல் வேலை தளிழரசனுக்கு இருந்தது.
கேசவன் தான் அறிந்தவர் தெரிந்தவர் என்று யார்யாரிடமோ ‘இன்னிக்கு டீம் லீடர் என்று ஓவரா பண்ணறான். என் சர்வீஸ் என்ன? என் வயசென்ன? மரியாதை தெரியாத பையன். டீம் லீடர்னா கொம்பா. நல்ல வேளை இவன் டீம்ல நான் கிடையாது.” என்று புரளி பேசி திரிந்தான்.
தமிழரசனுக்கு கேசவன் ஏதாவது கேனதனமாக தன்னை பற்றி அவதூறு பரம்புவானென்று அறிந்தாலும், கேசவனை போல வெட்டி ஆபிசர் இல்லையே.
அதனால் புது புராஜெக்ட் பற்றி பேசவேண்டிய அவசியம் ஏற்பட அவன் பணியை மட்டுமே கவனித்தான்.
மதியம் வரை வேலையில் மூழ்கி போனான்
பிரேக் டைம் வந்த நேரம் சதிஷிடம், மேட்ரிமோனியில் பதிவிட்ட தன் பயோடெட்டா காட்டினான்.
“ஏன் மச்சான் எந்த பொண்ணு என்றாலும் ஓகேனு போட்டிருக்க?” என்றான்.
“பச்… பெரிசா ஆசையில்லை சதிஷ். தனிமரமா இருபத்தி எட்டு வயசு வரை வளர்ந்துட்டேன். இனி வர்ற காலமாவது மாமா அத்தை மச்சான் தாத்தா பாட்டி, சித்தி, சித்தப்பா தங்கச்சி அக்கா தம்பி அண்ணன் பெரியப்பா பெரிம்மா, பாட்டான், பூட்டி, சகலை, மதினி, கொழுந்தியா, என்று உறவுகளை அடுக்க, “டேய் டேய் இவங்கயெல்லாம் யாருடா… புதுசா சகலை ரகளை மதினி பதனினு?” என்று சதிஷ் கேட்டான்.
”விளையாடாத” என்று தமிழரசன் பேச, ”மச்சான் நான் விளையாடலைடா நீ தான் விளையாடற. ரொம்ப காலம் கழிச்சு இந்த சகலை மதினி கொழுந்தியா பூட்டி, பாட்டன், பேர் எல்லாம் கேட்கறேன். எந்த உலகத்துல இருக்க? இப்ப எல்லாம் ஹஸ்பண்ட் அண்ட் ஓய்ஃப் சேர்ந்து இருப்பதே ஃபேமிலி தெரியுமா?
நீ என்னடான்னா… உனக்குன்னு யாருமில்லாத பட்சத்துல இத்தனை சொந்தத்தோடு உறவுகள் அமையாது” என்ற நிதர்சனத்தை கூறினான்.
“நீயே இப்படி பேசினா என்ன மச்சான். உனக்கு ஒரு அக்கா கல்யாணம் பண்ணி தந்த. உனக்குனு ஒரு குடும்பம் அம்மா அப்பா இருக்காங்க இல்லையா? அது மாதிரி சின்ன குடும்பமா இருந்தா கூட போதும். ஆக மொத்தம் எனக்குன்னு ஒரு குடும்பம்.” என்று சந்தோஷமாய் கூறினான்.
“தமிழ்.. வர்ற போற பொண்டாட்டி தனக்கும் தன் வீட்டுக்கும் மொத்தமா வந்துடணும் அப்படின்ற செல்பிஷ் உலகம் டா. ஆனா நீ பொண்டாட்டி கிடைச்சா கூடவே பொண்டாட்டியோட உறவுகளையும் உன் குடும்பமா பார்ப்பேன்னு சொல்லற பாரு. எனக்கு வருத்தமா இருக்குடா” என்று சதிஷ் நெஞ்சை உருகும் விதமாக உரைத்தான்.
தன் தோளிலிருந்து சதிஷ் கையை லாவகமாக எடுத்து, நீ ஏன்டா வருத்தப்படற. மச்சான் நான் அந்த மாதிரி ஆளில்லை. எனக்கு பொண்ணு தான் வேணும்” என்று தமிழரசன் பதட்டமாய் பேசினான்.
கண்ட சினிமா படத்தில் வரும் கருமாந்திரம் போல நான் பொண்ணா பிறந்திருந்தா உன்னை கல்யாணம் பண்ணிருப்பேன் வருத்தமா இருக்குடா” என்ற ரீதியில் பேசுவதாக தமிழ் நினைத்தான்.
தமிழ் பேசிய அர்த்தமும் அவன் விலகலும் புரிய, “டேய்… தமிழ்.. பார்த்தியா என்னையே ஓட்டுற.
உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க எனக்கு தங்கச்சி இல்லையேன்னு ஃபீல் பண்ணினேன். நீ என்னடான்னா என்னை ‘கே’ ரேஞ்சுக்கு பார்த்துட்ட.
உதைக்க போறேன். மேட்ரிமோனில பொண்ணு மாட்டினா சொல்லு” என்றான்.
தமிழரசனும் சதிஷை கண்டு சிரித்து “சொல்லறேன் டா. சாரி டா” என்று சிரிக்க, “என்னை நீ எப்படி அப்படி நினைக்கலாம்.” என்று கோபமாக அவனை சீண்டி சிரிக்க வைக்க முயன்றான்.
அதன் பின் மதிய வேளையில் தான் சமாதானம் ஆனான் சதிஷ்.
அதுகூட அலுவலக வாசலில் வாட்ச்மேன் அருகே கேசவன் நிற்க யாரோ கத்துவதை பார்த்து “என்னடா கேசவனுக்கு?” என்று தமிழரசன் கேட்க, “வட்டிக்கு பணம் வாங்கி பைக் வாங்கியிருக்கிறான். இவன் நேரமோ என்னவோ பணத்தை தரலை. வண்டிகாரன் டியூ கட்டலைன்னு வண்டியை தூக்கிட்டான். வட்டிக்காரன் பணத்தை நீ வாங்கிட்டு என்னை ஏன்டா வெளியே வெயிட் பண்ண வைக்கிறனு பேசிருக்கான்.
கரெக்ட் தானே… பைக் வாங்கின இடத்துலே அந்த ஆபிசர் கேட்கறது. உன்னிடம் அந்த பேச்சு பேசினான். இங்க பாரு இரண்டு பேர் கேட்டதுக்கு பம்முறான். அப்ப கூட ஆபிஸ் வந்து உதார் விடுவான்.
இதுல பேங்க்ல லோன் கட்டலைன்னு அதுக்கு கொஞ்ச நேரத்துகாகு முன்ன பேங்க் கால்ல திட்டு வாங்கினான். பக்கத்துலயிருந்த பொண்ணு தகவல் சொல்லுச்சு” என்று கூறி வேடிக்கை பார்க்க, “இவனை மாதிரி ஆட்கள் எத்தனை அசிங்கப்பட்டா கூட துடைச்சி போட்டுட்டு போவாங்க. ஏன்னா இங்க வேலை செய்யாம அட்டேசன்சிக் பண்ணற லூசு இவன். முன்ன வயசானவன் என்ற மரியாதை இருந்தது. இப்ப ஒரு மண்ணும் இல்லை” என்று தமிழரசன் கடந்தான்.
“அதுவும் சரிதான். குடிகாரன் பேச்சு. குட்டி சுவராச்சு.” என்று மீண்டும் தங்கள் வேலையை கவனிக்க சென்றனர்.
வீட்டுக்கு வந்தப்பொழுது ரெப்ரெஷ் செய்து, குளித்து சாப்பிட்டு உறங்கும் முன், மேட்ரிமோனியில் அவன் பதிவு செய்ததில் ஒரு பெண் அவனது அலைப்பேசி எண்ணிற்கு அழைத்திருந்தாள்.
“ஹலோ” என்றான் தமிழ்.
“ஆஹ் ஹலோ நான் தமிழ் பேசறேன்” என்று பெண் குரல். தமிழரசனுக்கோ அது நான் தமிழ் கூட பேசணும் என்னும் விதமாக ஒலிக்க, “ஹலோ நான் தமிழ் தான் பேசறேன்.” என்றான்.
“நானும் தமிழ் தான் பேசறேன்” என்றாள் அந்த பெண்.
தமிழரசனுக்கு யாரோ போனை போட்டு கிண்டலடிப்பதாக தோன்ற, “ஏய்.. நான் என்ன இங்கிலிஷா பேசறேன். என்ன கிண்டலா? போனை போட்டுட்டு லந்தா?” என்று எரிச்சலானான்.
“மறுபுறம் அந்த பெண்ணோ “இடியட் பேஸிக் மேனர்ஸ் இல்லை. நான் தமிழ் பேசறேன்னு சொல்லறேன். இங்கிதம் தெரியாம கத்தற. உனக்கு போனை போட்டேன் பாரு” என்று திட்டி விட்டு பட்டென போனை அணைத்தாள்.
தமிழரசனோ, ”யார் இவ? எதுக்கு கால் பண்ணினா? ஏன் திட்டினா? இவளா போன் போட்டு இவளா தமிழ்ல பேசறேன் ஹிந்தில பேசறேன்னு. சை..” என்று போனை மெத்தையில் வீசிவிட்டு படுத்தான்.
மேட்ரிமோனில டீடெயில் நல்லாயிருந்ததேன்னு கால் பண்ணினா என்ன பேச்சு பேசறான். யார் மேலயோ கோபத்துல இருக்கான். அதுக்கு என் போனை சரியா கவனிக்காம பேசி கத்தறான்.
இவனுக்கு எல்லாம் பொண்ணே கிடைக்காது. ம்கும்” என்று அந்த பக்கம் போனில் பேசியவளோ வார்த்தை விட்டு உலாத்தினாள் அவள் தமிழ்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
ஹலோ பிரெண்ட்ஸ்
Youtube la *Praveena Thangaraj Audio Novels* search பண்ணுங்க. என் youtube சேனல் காட்டும்.
அதுல 💖எந்தன் உயிரமுதே💖 புதுக்கதை ஆடியோ நாவலாக இருக்கு.
பூட்டி வைத்த காதலித்து கதை முடியாவும் 🌊நதி தேடும் பௌவம்🌊 போடுவேன்.
உங்க ஆதரவை தாங்க.
அப்படியே சைட்ல வந்தும் படிங்க. நான் பிரதிலிபி அமேசான் சைட் மூன்றிலும் கதை போடறேன்.
சைட்ல அமைதியா கதை வாசிக்கறவங்க அட்லீஸ்ட் ரிஜிஸ்டர் பண்ணுங்க.
❤️ நெஞ்சை கொய்த வதுகை
❤️ வெண்மேகமாய் கலைந்ததே
❤️அலைப்பறை கல்யாணம் மூன்று கதை பதிவிடறேன்.
வெண்மேகமாய் கலைந்ததே கதை முடிய போகுது. இந்த மாசம் வரை தளத்தில் இருக்கும்.
உங்களை அங்கும் இங்கும் எங்கும் எதிர்பார்க்கின்றேன். கீப் சப்போர்டிங். 😊🥰
அப்பறம் ஏற்கனவே எல்லாயிடத்திலும் என்னை பாலோவ் செய்து ஆதரவு தந்து சப்ஸ்கிரைப் செய்து சைட்ல படித்து கமெண்ட்ஸ் செய்யும் ஒவ்வொருத்தருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
🫂🫂🫂🫂🫂💞💞💞💞💞
அலப்பறை கல்யாணம் …!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 2)
ஆஹா… இத்தனை பெரிய மனசுக்காரனா நம்ம தமிழ்..?
அவன் அலையன்ஸ் பார்க்குற விதத்தைப் பார்த்து என் மன சே ரெக்கை கட்டி பறக்குதே….!
ஏன்ப்பா…. யாருப்பா நீ….?
இத்தனை உறவுகளை எதிர்பார்க்கறியே…! அவனின் ஒரேயொரு பொண்டாட்டி வைச்சுக்கிட்டே மண்டை காயுறான்னா…. நீ என்னப்பா
ஃபேமிலியே கேட்குறே…!
ஆனா ஒண்ணுப்பா….
பெரிய ஃபேமிலி கிடைச்ச பிறகு ஜகா வாங்குன வைச்சுக்க….
நாங்க எல்லாரும் உன்னைத் தேடி வந்து ரவுண்ட் கட்டி அடிப்போம்… அது மட்டும் கன்ஃபார்ம்ட்…!
தமிழுக்கு தமிழே ஜோடியாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்..!
😆😆😆
CRVS (or) CRVS 2797
Peru poruththam pakkaavaa erukkey….
செம… தமிழரசன் – தமிழ் ஜோடி பொருத்தம் நல்லா இருக்கும் போலயே சூப்பர்
tamil kanavu kaana aarambichitan ipove sikram ponna kanla kaminga pa . tamil ku tamil tha jodiya ithula illa summava sikram heroine intro kodunga sisy