Skip to content
Home » ஆலகால விஷம்-7

ஆலகால விஷம்-7

அத்தியாயம்-7

  • Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

   மும்பையிலிருந்து சென்னைக்கு கிளம்பும் போது இருந்த மகிழ்ச்சி ஆர்வம், எதுவும் சென்னையிலிருந்து மும்பை மாநகரம் வரும் பொழுது இல்லை.

   ஏனோ இருவருக்குள் இறுக்கம். ஏதோ கடவுள் மிகவும் பாரபட்சம் பார்த்து மனிதர்களை படைத்தது போல தோன்றியது.

   வருணிகா தனக்குபின் இந்த பூவுலகத்திற்கு வந்தவள்.
   
  ஆனால் அவளுக்கு எந்தவிதமான இடரும் கடவுள் தரவில்லை.
 
   அழகான முகம், அளவான உடல், தாய் தந்தை அன்பு, அன்பான கணவன்?
    அவளுக்கென்று ஒரு உறவு அதில் அவளது பெண்மைக்குண்டான வெட்கங்கள்.

   இங்கு ஆயிரம் பேர் வந்து சென்றாயிற்று இந்த வெட்கம் தனக்கு வரவில்லை. தாய் தந்தையர் இல்லை.
        எல்லாம் இருந்தும் ஏதோவொரு இடர். மனதை அழுத்த, கண்ணீருக்கு பதிலாக கோபங்கள் பெருகியது.

   சாஹிர் என்பவன் தன்னுடன் வந்தான் சென்றான்‌ என்றதெல்லாம் கூட அடியோடு மறந்துவிட்டாள். 

  ரயிலில் இறங்கி அவளாக அவளது இடத்திற்கு வந்து சேர்ந்தாள். சாஹிர் டேக்ஸி பிடிக்க சென்றவன் பெண்ணவள் மாயமாக, அருகிலிருந்தவர் கேட்டதற்கு ‘அந்த பொண்ணு அப்பவே போயிடுச்சு’ என்றதும் அவளை தேடி அவனும் வரவில்லை‌.

   அவனுக்கு இதுவரை வநீஷா தான் பேரழகி என்று நினைத்திருக்க, மாநிறமுமான, சந்தனம் குழைத்த, அழகாக சிற்பமாக வருணியை கண்டதால் மனம் துள்ளி குதித்தது.

   பெண்கள் பேரழகு கொண்டவர்கள். அவர்களை ரசிக்க ரசிக்க ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட அழகை பிரம்மனவன் சளைக்காமல் படைத்து  அனுப்புவான்.

  ஆண்கள் ரசித்து திணற, எவளிடமாவது தன் இதயம் சிக்கும் அழகியை கண்டறிந்து, மனதை சேர்த்து வைத்துவிட்டான்.

   அந்த மனம் கண்டவளை எல்லாம் பார்த்து ஏங்காது. யாரையாவது பார்த்தால் மட்டுமே. அப்படி தான் வநீஷாவை கண்டது. தற்போது வருணியை சுட்டிக்காட்டியது‌.

   இது தவறு என்று‌ வநீஷாவை காதலிக்க முயன்றான்.‌
  ஆண் மனம் அப்பொழுது தான் கற்பு கலாச்சாரம் என்று கண்டதை யோசித்தது.

  ஒழுக்கமானவள் என்ற வாக்கியத்திற்கு வநீஷா மிகப்பெரிய வினாவிற்கு சொந்தக்காரி.

   வருணிகாவை பற்றியே எண்ணியவனுக்கு அதன் பின்னே நாட்கள் உருண்டது.
    வநீஷா ஒரு மாதமாய் தன்னுடன் தொடர்பில் இல்லாததை தாமதமாய் உணர்ந்தான்.

   வநீஷாவிடம் என்றில்லை, எந்த பெண் மீதும் மோகம் பிறக்காமல் இருந்ததும் ஆச்சரியம்‌.

    காரை எடுத்து கொண்டு நீஷாவை காண சென்றான்.‌

   நீஷாவின் வீட்டில் அவளில்லை‌. அவள் இல்லையென்றால் அவளை வைத்து வியாபாரம்  செய்து நீஷாவின் விவரம் பற்றிய இடத்தில் சென்றான்.‌

   “அவள் எல்லாம் எப்ப போலீஸ் சகவாசம், செலிபிரிட்டி பிரெண்ட், நடிகனோட ஆசைக்குன்னு, நட்பு வச்சி பெரிய ஆளா மாறினாளோ அப்பவே அவ தான் இங்க அடையாளம். அவயெங்க போறா வர்றா என்று நாங்க கேட்கற இடத்துலயிருந்து அவ எப்பவோ பறந்துட்டா‌.” என்று குறையாக நொடித்தனர்.‌

   அவளது போனிற்கு போட்டு போட்டு அழைத்தான். அதில் ரிங்கே எடுக்கவில்லை.

     சாஹிருக்கு பெரிய தலைவலி ஆனது.

  சந்தோஷமாய் சுற்றி திரிந்தவன், நினைத்த நேரம் நீஷாவை புணர்ந்து, ஊர்சுற்றினான். சாதாரண வாழ்க்கைக்கு வாழ ஆசைப்பட்டது குற்றமா? அதுவும் வருணிகாவோடு.

  தனக்கு வநீஷாவோடு வாழும் வாழ்க்கை தான் நிரந்தரம் என்று புரியவே இந்த இடைபட்ட மாதம் தேவைப்பட்டது அவனுக்கு.

வருணிகா நினைப்பில் நீஷாவை மறந்திருந்தவன் தற்போது நீஷாவை தேடினான்.

  போனில் பிடிக்க முடியாது தவித்தவனுக்கு அவளுக்கு எப்பொழுது அழைத்தாலும் சுவிட்ச்ஆப் என்ற கணினி குரலே கேட்டது.

    ஆனாலும் விடாமல் நீஷாவை நினைக்கும் பொழுதெல்லாம் அழைத்தான், ஏமாந்தான்.

அன்று அதிசயமாக நள்ளிரவு தாண்டி நீஷாவிடமிருந்து அழைப்பு வந்தது.

  “நீஷா” என்று அழைக்க, “எதுக்கு கேப் விடாம டெய்லி போன் பண்ணற?” என்றாள். அவளும் இரண்டு மூன்று‌மணிக்கு போனை உயிர்ப்பித்து பார்த்துவிட்டு அணைக்கின்றளே.

   எங்க போனாள்? எங்கிருக்கின்றாள்? என்று எதுவும் கேளாமல் “உன்னை பார்க்கணும். நாம எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்‌” என்று கேட்டான்.‌ முன்பு கேட்டுவிட்டு பதில் வராமல் போனால் இலகுவாக நினைப்பான். ஏனெனில் அவள் மறுத்தாலும் அவனோடு உறவு கொள்வாள்.
   அவனை நிராகரித்து இதோ இது போல கண்மறைந்து இருக்க மாட்டாள். இன்று‌ தலைகீழ் அல்லவா?!

   இம்முறை தயங்காமல் ”சாரி… சாஹிர். நீ எனக்கானவன் இல்லை. அப்படி சொல்றதை விட நான் உனக்கானவள் கிடையாது.

  உனக்கு என்னை விட நல்ல பொண்ணா கிடைக்கட்டும். என்னை தொந்தரவு பண்ணாத.” என்றாள் தெளிவாக. முன்பு இப்படி உரைக்க மாட்டாள். கல்யாணமா.. ஆஹ்.. பார்க்கலாம்” என்று கிலுக்கி சிரிப்பாள். 

  தற்போது நீஷாவின் பேச்சால் சினம் துளிர்க்க, “உன்னை விட நல்ல பொண்ணுன்னா, உன் தங்கச்சி தான் என் கண்ணுக்கு லட்சணமா தெரியறா.

  நல்லா சிக்குன்னு, நீள முடி, மஸ்காரா போடாத கோலிக்குண்டு கண்ணு, கத்தி மாதிரி ஷார்ப் நோஸ், லிப்ஸ்டிக்கே தேவைப்படாத ஸ்ட்ராபெர்ரி லிப்ஸ், இரண்டு பக்கம் ஆப்பிளை நறுக்கி வைத்த கன்னங்கள், கழுத்தாடி அது, அருவி மாதிரி வழுக்குது.

   இன்னும் என்னென்னவோ சொல்லும் போதே கிக்கா இருக்கு. பேசாம நானே அவளை தேடி போய், உன்‌ மகிழை அடிச்சி கொன்னுட்டு, அவளோட நல்லவனா பழகி கல்யாணம் பண்ணிக்கவா?” என்று கோபமாய் கேட்டான்.

  இத்தனை நாள் போனை எடுக்காத கோபம். இதில் அவளை விடுத்து நல்ல பொண்ணை மணக்க கூறுவதால் ஏற்பட்ட ஆத்திரம். அவ்வாறு பேச, நீஷாவிடம் பலத்த அமைதி.

“சொல்லு டி?” என்று சாஹிர் கத்தவும், “வருணியை பத்தி பேசினா நானே உன்னை கொன்றுடுவேன்.” என்று துண்டித்தாள்.

   போனை வைத்துவிட்டு, “எப்படி வர்ணிக்கறான்? அதுவும் என்னிடமே வருணிகாவை பற்றி. நேர்ல இருந்திருந்தா சாஹிர் நீ பிணமா போயிருப்ப.” என்று பொறுக்க முடியாது கத்தினாள்.

    “நீஷா…” என்ற குரல் கேட்கவும், “வர்றேன்” என்று ஹிந்தியில் கத்திவிட்டு, “பிணத்தை தோண்டி எடுத்தது மாதிரி இருக்கான். எந்நேரமும் நான் வேண்டுமின்னா என்ன அர்த்தம்? சே இவனுக்கு ஏன் டிவோர்ஸ் ஆனதுன்னு இப்ப தான் புரியுது.” என்று முனங்கி கஸ்டமரை தேடி சென்றாள்.

    அறுபது வயதை நெருங்கும் கிழவன், மில்லியனராக இருக்க, அவனுடன் இந்த ஒருவாரம் இருக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு தான் நீஷா இங்கு வந்தது. பணம் இந்த சில நாளில் லட்சத்தை தொட்டுவிடும்.

   நீஷாவிற்கு நேரமில்லை. அவள் விரைவில் அதீத பணத்தை சேமிக்க வேண்டும். அவளுக்கு பணத்தேவை வந்துவிட்டது. இத்தனை நாட்களாக கால் வயிறு சாப்பாட்டும் தேவைக்கான காஸ்மடிக், இஷ்டத்திற்கு செலவு செய்ய ஓரளவு பணம் மட்டும் போதும் மற்றவை எல்லாமே சேமிப்பாக சென்றது. இன்றோ அந்த செலவுகள் தாண்டி அவளது தேவைகள் அதிகரித்து விட்டது.

  அதுவும் சிகிச்சைக்காண பணம் வேண்டும்.‌ அவள் பார்க்கும் இதர சிகிச்சைகள். அனைத்தும் அவ்வளவு எளிதல்ல.

  சாஹிரை எல்லாம் நம்பி பிரயோஜனமில்லை. ஏனெனில் மருத்துவ உதவி செய்பவர் வேண்டும்.
   அதற்கு தான் இந்த கிழம்.

   டாக்டர் கிரண். அறுபதை தொடுபவர். இதுவரை அவர் செய்த ஆப்ரேஷன் வெற்றியை மட்டுமே குவித்தது.

  தனக்கும் அவரே ஆப்ரேஷன் செய்ய வேண்டுமென்று பழியாய் கிடக்கின்றாள்.

  அதற்காக அவர் எதிர்பார்ப்பது நீஷாவின் உடலை தான்.

   முன்பு இவருக்கு இன்னாரோடு செல்ல பிடிக்காது மறுப்பவள்.‌ இன்று மறுக்கும் நிலையில் இல்லை. கிரணின் சொல்லுக்கு செவிமடுக்கும் நாகமாய் மாறினாள்.

   நீஷாவை பொறுத்தவரை மகிழுனுக்கும் வருணிக்கும் திருமணம் நடக்கக் கூடாது. வருணியை விடக்கூடாது இது மட்டுமே தாரக மந்திரமாய் நினைத்தாள்.

   மாதங்கள் கழிந்து தன் வீட்டை தேடி உடைந்தவளாக வந்தாள் நீஷா.

  அங்கு சாஹிர் ஹாலில் டிவி பார்த்துக்கொண்டிருந்தான்.‌

  “நீ எங்க இங்க? ஏன்‌வந்த?” என்று எரிச்சலோடு தன் வீட்டில் நுழைந்தாள்.‌

   சாஹிரோ “நான் கொஞ்ச நாளா இங்க தான் இருக்கேன்.‌ நீ தான் இங்க வர்றதேயில்லை. புது வீடு ஏதாவது வாங்கிட்டு அங்க போயிட்டியா என்ன?” என்று கேட்டான்.
  
   ஒவ்வொரு ஆடையாக அவிழ்த்து, “வீடு வாங்க நிறைய பணம் தேவை. அந்தளவு நான் பணக்காரியில்லை.” என்று உரைத்தாள்.

  “அதான் சம்பாதிக்கறியே லட்சக்கணக்குல… வீடு வாங்கறது. ஏன் நோஞ்சான் கோழி மாதிரி மாறிட்ட” என்றான்.‌

   சாஹிருக்கு மும்பை மாநகரம் தண்ணீர் பட்டபாடு. அலைந்து திரிந்து தான் சென்ற இடத்தை தெரிந்துக் கொண்டான் என்று புரிந்தது.

   அங்கு சென்றது மட்டும் தெரிந்து வைத்துள்ளானா? அல்லது காரணமும் அறிந்து விட்டானா? திகில் கூடியது.

“எதுக்கு அங்க பழியா இருக்க? அந்த டாக்டரிடம் ஏன் போற? ஏதாவது பிரச்சனையா? கிழவனை இரண்டு தட்டுதட்டவா?” என்றெல்லாம் கேட்டான்.‌

  “ப்ளீஸ்… எனக்கு அந்த டாக்டரை பிடிச்சிருக்கு போறேன்” என்று குளியலறைக்கு போனாள்.

  கதவை தாழிடும் நேரம், “யாரு அந்த கிழவனையா? அவனையா பிடிச்சிருக்கு” என்று குரலுயர்த்தி கேட்டான்.‌

   “டாக்டர் இல்லையா…. வயக்ரா எல்லாம் போட்டு… சும்மா சின்ன பையனா நடந்துக்கறார். உனக்கென்ன சாஹிர் பிரச்சனை.” என்று ஷவரை திறந்து குளித்தாள்.

   அவள் மீது வடியும் நீரை பார்வையிட்டவன், “நான் உன்னை விரும்பறேன்” என்றான்.‌

   “என்னை விட வருணியை அப்படி வர்ணிச்ச. நான் இருக்கும் போதே உன் கண்ணு அவளிடம் பாயுது. நீ விரும்பறியா?” என்றாள் நக்கலாக.‌

   “ஏன்… உன் பார்வைக்கூட தான் அந்த மகிழனை வெறியா பார்த்த.

   அதுவும் நான் இருக்கும் போதே” என்றான்.‌

    “சாஹிர்… வார்த்தையை அளந்து பேசு. நீ பேசறது நீஷாவை” என்றாள்.

   “நீஷா… அளந்து தான் பேசறேன்.‌ நானா வந்து கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்கறேன்.‌ உனக்கு அந்த மகிழன் தான் தேவையா? அப்படியென்ன டி அவனிடம் பார்த்த?” என்றதும், நீஷா முறைத்து ஷவரை மூடிவிட்டு துண்டை கூட எடுத்து துடைக்காமல் ஆடையை எடுத்து அணிந்தாள்.

       இப்ப இது தான் முக்கியமா?” என்று தூரயெறிய, அவளை மெத்தையில் தள்ளிவிட்டு வன்முறையாக ஆளா ஆரம்பித்தான்.

   “சாஹிர் ஐ ஹேட் திஸ்” என்று முனங்க, “பழகியது தானே? அதுவும் இல்லாம பிடிக்குதோ இல்லையோ பணத்துக்காக மெத்தையில் கிடக்குறவ நீ… என்னை மட்டும் ஏன் பிடிக்காது” என்று கீழ் உதட்டை கவ்வினான்.‌

    நீஷாவுக்குள் மகிழ்-வருணியை கொடுத்த முத்தம் மறக்கவில்லை. அதே போல ஒன்றை தான் சாஹிர் கொடுத்துக் கொண்டிருக்கின்றான். ஏனோ இந்த இதழ் முத்தம் எச்சி முத்தமாக இறங்க மறுத்தது.

    இதே சாஹிரின் உயிரணுவை கூட விழுங்கியிருக்கின்றாள். இன்று எல்லாமே குமட்டுகின்றது.

  நீஷா வெறித்தனமாக தள்ளிவிட்டு அடிக்க, அவளை அருகிலிருந்த துணியால் கையை கட்டிமுடித்தான்.

    நான் இனி தினமும் இங்க தான் இருப்பேன். எனக்கு நீ வேண்டும்.

  என் கண்ணு வருணிகாவை பார்த்துச்சுன்னு பழிப்போடற, அவளை மறக்கடிக்க வை. ” என்று முடித்துவிட்டு எழவும், கட்டபட்ட கைகளை அவிழ்த்தான்.

  நீஷா மூச்சு வாங்க, எழுந்தாள், எழுந்தவள் வேகமாய் பாத்ரூமிற்கு சென்று குளிக்க ஆரம்பித்தாள்.

  நீஷாவின் கண்ணீர்கள் நெருப்பு ஆறாக வழிய, முடிவோடு இனி தன் வீட்டிற்கு இங்கு வருவதை கூட தவிர்க்க முடிவெடுத்தாள்.

    சாஹிரின் இந்த அடாவடி செய்கையால் அல்ல. இங்கே இருந்தால் என்றாவது சாஹிர் தன் அகமாற்றத்தை அறிந்திடலாம் என்ற அச்சம்.

-தொடரும்.
  
   

5 thoughts on “ஆலகால விஷம்-7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *