Skip to content
Home » இதயத்திருடா-22

இதயத்திருடா-22

இதயத்திருடா-22

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

     அதிகாலை எழுந்தவன் குளித்து முடித்து ஹோட்டல் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தான் மாறன்.

     அதற்குமுன் வடிவேலு போனில் அழைத்திருந்தார்.

   “தம்பி எத்தனை நாள் லீவுனு போர்டு வைக்கப்பா?” என்று கேட்டதும், “போர்டு வேண்டாம்னா… அங்க தான் வந்திட்டு இருக்கேன். கடையை எதுக்கு அடைக்கணும். அது பாட்டுக்கு வேலை ஓடட்டும். நம்மை நம்பி சாப்பிட வர்றவங்களை ஏமாற்ற வேண்டாம்” என்றான் மாறா.

     “தம்பி நீங்க வர்றிங்களா?” என்று கேட்டார்.

      “ஆமா அண்ணா… தனியா எங்கயிருந்தாலும் நினைவுகள் துரத்தும். அதுக்கு கடைக்கு வந்துடறது பெட்டர்.” என்றதும் “வாங்க தம்பி உங்க மனசுக்கு பட்டதை செய்யுங்க” என்று அணைத்தார் வடிவேல்.

     நினைவுகள் துரத்துது… துரத்த ஆரம்பிக்கறேன் என்னை இப்படி தனியா விட்டவங்களை’ என்று கிளம்பி செக்கியூரிட்டியிடம் கதவை திறக்க கூறினான்.

   அவரோ “ஒரு நிமிஷம் சார்” என்று நித்திஷ்வாசுதேவனுக்கு அழைப்பை தொடுத்தார்.

     “ஐயா சார் வெளியே போகணும் கதவை திறக்க சொல்லறார். என்ன செய்ய?” என்றதும், ஒரு நிமிஷம் போனை கொடு என்றததும் “சார் ஐயா போன்ல” என்று அழைத்தார் செக்கியூரிட்டி.

     லேண்ட்லைனை கை மாற்றி பேச, “என்ன மதி வெளியே போற. காபி போட தேவையானது வீட்லயே இருக்கு. டிபன் மட்டும் எட்டு மணிக்கு டிரைவரிடம் கொடுத்து விடுவேன்.” என்றார் நித்திஷ்.

     “சார் நான் டீ காபி குடிக்க வெளியே போகலை. என் ஹோட்டலை வழிநடத்த போறேன். எனக்கு தனியா இருக்க என்னவோ மாதிரி இருக்கு. நான் கடைக்கு போறேன். அங்க நாலு மனுஷங்க பார்த்ததும் கொஞ்சம் இயல்பா மாறுவேன்.” என்றதும் நற்பவி தந்தையிடம் என்னப்பா? என்றாள்.

    “சின்ன மாப்பிள்ளை ஹோட்டலுக்கு போறேன்னு குதிக்கறார்.” என்று கூறவும் நற்பவி போனை வாங்கினாள்.

     “ஏன் மாறா இப்படி பண்ணற. வீட்லயே இரு… யாரை தேடி போவ? சரத் காலேஜ்ல போய் பிரெண்ட்ஸ் எல்லாம் யாருனு விசாரிக்க முடியாது. அங்க பரவலா சரத்திற்கு என்னாச்சுனு தெரியுது. நீ போனா நீயாருடானு பிடிச்சிப்பாங்க. இல்லைனா அவனை என்ன பண்ணினனு தாக்குவாங்க.” என்று கூறினாள்.

     “ஏ… நான் ஹோட்டல்ல தான் இருக்க போறேன். நீ வேண்டுமின்னா வடிவேல் அண்ணாவிடம் அடிக்கடி வீடியோ கால் போட்டு கூட கேட்டுக்கோ என்னை கண்கானிச்சிக்கோ.

   நான் சரத் தேடி எங்கயும் போகலை” என்று நடித்தான்.

      நற்பவியோ “நம்பலாமா?” என்று கேட்டாள்.

     “நம்பி தான் ஆகணும். இங்க தனியா என்னவோ மாதிரி இருக்கு மா.” என்றான் மதிமாறன்.

     “சரி போயிட்டு வாங்க. மாறா..  கடைவிட்டு வரும் போதும் போகும் போதும் ஜாக்கிரதை. எனக்கு பயமாவேயிருக்கு. போனை செக்கியூரிட்டியிடம் கொடுங்க” என்று கூறவும் கொடுத்தான்.

    “அண்ணா… அவர் போகட்டும். அந்த  ஐடெண்டி மிஷின் கார்டை அவரிடம் கொடுக்காதிங்க. நீங்களே அவர் வரும் போதும் போகும் போதும் கதவை திறந்துவிடுங்க.” என்று கோரிக்கை விடுத்தாள்.

    “சரிம்மா சரிம்மா.” என்று கதவை திறந்து விட்டார்.

    “எப்ப ரிட்டர்ன் வருவிங்க தம்பி.?” என்று கேட்டதும் “நைட்டு சார். இங்க பத்து மணிக்கு மேல வரக்கூடாதா?” என்ற ஐயத்தை கேட்டான். சில இடங்களில் அபார்ட்மெண்டில் சில விதிமுறைகள் உள்ளதே. அதுபோல உள்ளதா என கேட்டான்.

     “இல்லை சார் நான் இங்க தான் ஸ்டே பண்ணறேன் இங்கயே இருப்பேன். தாராளமா எந்நேரம் என்றாலும் வாங்க” என்றதும் தலையசைத்தான்.

     மாறன் பைக்கில் கடைக்கு வந்திறங்கினான். 

    வடிவேலால் மற்ற ஊழியர்களுக்கும் மாறனின் வீட்டில் நிகழ்ந்த இறப்பு சம்பவம் அறிந்ததால் வர யோசித்து வடிவேலிடம் லீவா என்று கேட்க, பணியாட்களுக்கு தகவல் தரும் வகையில் வாட்சப் குரூப்பில் ‘கடை தினசரி பணியை தொடரும்’ என்று போட்டிருக்க அடித்து பிடித்து சிலர் நேரம் கழித்து வந்தனர்

      மாறனோ யாரையும் திட்டவில்லை… ஏன் கண்டுக்கவும் இல்லை. நேராக தனது அறையில் கல்லாப்பெட்டியின் அருகே அமர்ந்து மடிக்கணினியை இயக்கினான்.
  
     சரத் ஆறுமாசத்துக்கு முன்ன வேலைக்கு சேர்ந்தான். அப்ப பொங்கலென்று தான் பிரெண்ட்ஸை அழைச்சிட்டு வந்தான். என்று பொங்கலன்று ஒட்டிய நாட்களில் இருக்கும் தேதியில் போட்டு பார்த்தான்.

   எதுவும் கண்ணுக்கு அகப்பட்டது போல தோன்றிடவில்லை.

     போதாத குறைக்கு வடிவேல் நற்பவியிடம் ரன்னிங் கமென்ட்ரி மூலமாக என்ன செய்கின்றான் ஏது செய்கின்றானென பார்த்து கொண்டும் கேட்டு கொண்டாள்.

    நற்பவியோ நிம்மதியாய் உணரும் நேரம் தர்ஷனின் அழுத்தமான காலடி ஓசைக் கேட்டு வந்தார்.

      “மாப்பிள்ளையோட பாடம் படிச்சிட்டு வந்தவனில் நீ ஒருவனா தான் இருப்ப நித்திஷ்.” என்று தர்ஷன் பேசவும் நித்திஷோ “சொல்லிட்டாளா… ஆமா பா. அதுவொரு காலம். இப்ப மறக்க முடியுமா. ஒரு மாப்பிள்ளை எழுத்தும் கதையும் வச்சி நண்பனா வந்தவர். இவர் சமையலும் எழுத்தும் கலந்தவர்.” என்று நகைத்தார்.

     நற்பவிக்கோ இவர் என்ன வெடிக்குண்டை போட வந்தாரோ என்று பயந்து நின்றாள் நற்பவி.

      மனித உரிமை கமிஷன் அதுயிது என்று போட்டோவை வைத்து நாரடித்து விடுவாரோ என்று சிந்தித்தாள்.

     “உட்காரு மா.” என்றவன் தலையை அழுத்தி கோதி, பெருமூச்சை வெளியிட்டு, “நேத்தே பிரஸ் மோப்பம் பிடிச்சி கேட்டிருக்கணும். பை தி வே டிலேயாகி இப்ப பிரஸுக்கு நியூஸ் போயிருக்கு.” என்றதும் நற்பவி கலங்கியவளாக கையை பிசைந்தாள்.

    “பிரஸ் மீட்ல என்ன கேட்பாங்கனு தெரியுமா?” என்று கேட்டதும் “சார் நீங்க கேட்கறதே வயிற்றுல புளியை கரைக்குது. பயமாயிருக்கு சார். என்னை கைது பண்ணுவாங்களா. வேலை நீக்கம் கொடுத்துடுவாங்களா?” என்று கேட்டாள்.

    “லுக் அழுது பயந்து என்ன பண்ணற… பின்ன லாக்கப்ல நம்மாள ஒருத்தர் இறந்தாலும், இல்லை தற்செயலா லாக்கப்ல கொலை செய்யப்பட்டாலும் இரண்டுத்துக்கும் நாம தான் பொறுப்பு. 

    அவனை தேடி அங்க ஆட்கள் வருவாங்கனு யோசித்து முடிவெடுத்து இருக்கணும். சரிவிடு முடிஞ்சதை மாத்த முடியாது.” என்றவர் நாலு பேர் சூழ்ந்து கேட்டா எதுக்கு என்ன பதில் சொல்லணும்னு தெரியுமா?” என்று கேட்டதும் “என்ன கேட்பாங்க சார்… அங்கிள் சத்தியமா பயமா இருக்கு.” என்று சாரிலிருந்து அங்கிளுக்கு மாறினாள்.

     “ஓ காட்… நன்விழி நீ உட்காரு” என்று அருகே அழைத்து உட்கார வைத்தான். காபியை வாங்கி பருகினான்.

     “நன்விழி இப்ப நீ நற்பவி இடத்துல இருக்க ஓகே வா… நீ என்ன விதமா ஆன்சர் பண்ணுவனு அவளுக்கு ஒரு டெமோ காட்டு” என்று கூறவும் “அங்கிள் ப்ரிப்பர் பண்ணாமலையா..” என்று கேட்டாள்.

    “லேட்டா ஆன்சர் பண்ணினா கூட போதும். பட் எப்படினு கத்து கொடு” என்றவர், செருமிக்கொண்டு “உங்களால ஒரு மாணவன் உயிர் இறந்திருக்கார்? அதுக்கென்ன சொல்லப்போறிங்க? மனிதநேயம்னு ஒன்னு இருக்கறதை அடிக்கடி போலஸான நீங்க மறந்திடறிங்க?” என்று கேட்டு பதிலாக என்ன கூறப்போகின்றாளென வேடிக்கை பார்த்தார் தர்ஷன். நற்பவியும் அக்காவை பார்த்தாள்.

      “மாணவன் உயிர் பிரிந்திருக்கா… சார் யாரை சொல்லறிங்க. எனக்கு புரியலை எங்க லாக்கப்ல டெத்தா? கனவேதாவது கண்டுட்டு காலையிலேயே இங்க வந்துட்டிங்க. போராட்டத்துல மாணவ மாணவியரை பாதுக்காத்தது நான். அவங்களால் கத்து வெட்டி வாங்கியது நான். அப்படியிருக்க மாணவர் ஒருவர் இறந்துட்டதா சொல்லறிங்க. அதுவும் என் ஸ்டேஷன்ல… என் ஸ்டேஷன்ல நான் எந்த மாணவரையும் கைது பண்ணலையே. நீங்க யாரை சொல்லறிங்க?” என்று கேட்டாள்.

      தர்ஷன் சிரித்து விட்டு நற்பவியை பார்க்க, நற்பவியோ திடுக்கிட்டு தர்ஷனை கண்டாள்.

    “அங்கிள் அதெப்படி தெரியாதுனு சொல்லமுடியும்?” என்று சந்தேகம் கேட்டாள்.

     “வெயிட் எங்க கான்வெர்ஷன் முடியற வரை பாரு.” என்று நன்விழியிடம் திரும்பினார் தர்ஷன்.

   நன்விழியோ தங்கையின் கேள்வியில் நகைத்து பின் சீரியஸானாள்.

     “நீங்க பாதுகாப்பு கொடுத்த மாணவர்களில் சரத் என்பவர் மா. இப்படி பொய் சொல்லறிங்க.” என்றதும், நன்விழி சிந்திப்பதாய் யோசித்து, “யா… ரீசன்டா காலேஜ் ஸ்டூடண்ட் ஒருத்தன் டிரக் சப்ளை பண்ணறதா கேள்விப்பட்டு விரட்டினேன். அநேகமா அவனை தான் சொல்லறிங்கனு நினைக்கறேன். பட் சார்…. அன்னிக்கு டிரக் பொட்டலம் கொஞ்சமா அவனிடமிருந்து அபகரிச்சோம். ஆனா தப்பிச்சிட்டானே.

   அந்த சரத்தை தேடி பிடிச்சி கோர்ட்ல நிறுத்தணும். நீங்க அவனையா சொல்லறிங்க.” என்று கேட்டாள்.

     “வாட்… உங்க லாக்கப்ல இறந்துட்டதா சொல்லறேன். தப்பிச்சிட்டான்னு சொல்றிங்க. நீங்க தான் கொன்னுட்டிங்க?” என்று கேட்டார்.

     “சார்… கொன்னுட்டேனா… அபாண்டம் சார்.. நானே டிரக் கேஸ்ல ஆள் பிடிப்பட்டா மேலிடத்துல சொல்லி மெடல் வாங்கற கனவுல இருக்கேன். அவன் பிடிக்க முடியலைனு பீல் பண்ணிட்டு இருக்கேன். என் ஸ்டேஷன்ல இறந்துட்டதா திரும்ப திரும்ப சொல்லறிங்க. லுக்… அப்படியே செத்திருந்தா அவனோட பிணம் எங்க?” என்று கூறி இடைவெளியிட்டு, “லுக் முதல்ல பிடிப்பட்டதா ஆதாரம் காட்டுங்க. அடுத்து இறந்தான்னு ஆதாரம் காட்டுங்க. நான் அவன் உயிரோட இருக்கான்னு ஆதாரம் காட்டறேன். இங்க பாருங்க ப்யூ டேஸ் பிஃவோர் அவன் என்னிடம் இருந்து தப்பி ஓடியதற்கான ஆதாரம். போராட்டத்துல என்னை பார்த்ததும் உஷாராகி தலைமறைவாகிட்டான். மற்றபடி லாக்கப் டெத் நடக்கவேயில்லை. யாரோ ஒருத்தர் வெள்ளை பேப்பர்ல ஒரு பெட்டிஷன் உங்க மனித உரிமை சங்கத்துக்கு அனுப்பிட்டா இங்க வந்துட வேண்டியது. முதல்ல உண்மையா பொய்யான செய்தியானு தெரிந்துக்கிட்டு வாங்க” என்று கூறினாள்.

    நற்பவி உடனே “சரத் பாடி என்ன பண்ணினிங்க?” என்று தர்ஷனை பார்த்து கேட்டாள்.

    “தெரிந்த மருத்துவமனையில பத்திரமா இருக்கு மா. ஸ்டேஷன்ல இருந்த போலீஸுக்கு அங்க டெத் நடந்ததை மறக்க சொல்லி க்ளியரா பேசியாச்சு. இனி பிரச்சனை ஒன்னு வந்தா பிரஸ் பீப்பிள் மனித உரிமை ரெண்டு தான். ரெண்டுத்துக்கும் திரும்ப திரும்ப இதையே சொல்லற.

   வீ சப்போர்ட் யூ. ஓகே அப்பறம் பதில் சொல்லறப்ப உங்க அக்கா மாதிரி தெனாவட்டா பதில் சொல்ல பழகிக்கோ. புரிஞ்சுதா..” என்றதும் நற்பவியோ கண்ணீர் உடைப்பெடுத்து “அங்கிள்… யூ ஆர் ரைட். நான் நன்விழி அக்கா மாதிரி இல்லை. பட் அந்த இடத்தை பிடிப்பேன். கூடிய விரைவில்.” என்றதும் நன்விழி தங்கையின் கன்னம் தட்டி “எனக்கும் மேல வருவ பவி நீ வேண்டுமின்னா பாரு” என்றாள்.

     நற்பவி போலீஸ் உடையணிந்து தர்ஷனோடு பிரஸ் மீட் மற்றும் மனித உரிமை சங்கத்தினை சந்திக்க தயாராகி வந்தாள்.

   போகும் வழியில் மாறனின் ஹோட்டல் வந்து அவனின் பைக்கிலிருந்து அன்று சரத் வீட்டில் எடுத்த டிரக் மட்டும் எடுத்து கொண்டாள்.

     அவனிடம் பிரஸ்ஸை மீட் பண்ணிட்டு வர்றேன்” என்று புறப்பட்டாள்.

      இங்கு தர்ஷன் நன்விழிக்குமான விவாதம் போல நற்பவியிடம் சிலர் கேட்க, நேர்கொண்ட பார்வையாக பதில் தந்தாள்.
  
    டிரக் பிடிச்சதுக்கு ஆதாரம் இருக்கா?” என்று மனித உரிமை சங்கத்தில் ஒருவர் கேட்க, தன் வைத்திருந்தவற்றை டிரக்பேக்கெட்டை எடுத்து முன் வைத்தாள்.

    அதே போலவே சிக்னலில்  தப்பியோடிய நிலையில் சரத் இருந்த காணொலியில் தேவைக்கேற்ப கத்தரித்து ஓடவிட்டாள்.

    இது ஹெல்மெட் போட்டிருந்தாலும் சரத் தான் என்று ஏற்கனவே அவனோட காலேஜ்ல படிச்ச பொண்ணு அடையாளம் காட்டிட்டா.(நற்பவியோட வெட்டு வாங்கின பெண் அடையாளம் காட்டினா) அதை மீறி டவுட்னா இந்த காணொலியை பார்த்திட்டு இருக்கற அவனோட மத்த பிரெண்ட்ஸ் பார்த்து சொல்லட்டும்.

     அப்பறம் மறைந்து வாழுற சரத் மற்றும் அவனோட கும்பலுக்கு ஒரு எச்சரிக்கை. கூடிய விரைவில் கையில விலங்கிட நான் வருவேன். பிகாஸ் எனக்கு உங்களை கண்டுபிடிக்க பர்மிஷனும், பிரமோஷனும் தந்து தனிப்படையும் அமைச்சி தந்திருக்கார் கமிஷனர் சார். கூடிய விரைவில் கைது செய்வேன்.

   மனித உரிமை சங்கத்துக்கும் பிரஸ் பீப்பிளுக்கும் எனது தாழ்மையான வணக்ககங்கள்.” என்று கிளம்ப அவளை சில பல புகைப்பட ப்ளாஷ் லைட்டுகள் சூழ்ந்தது. ஆனாலும் எதையும் கருத்தில் பதிய வைக்காமல் தன் இலக்கை நோக்கி அடியெடுத்தாள்.

      மாறனோ “வெல் சூப்பர்” என்று டிவியை பார்த்து பேசினான்.

     நன்விழி ப்ரனிதிடம் “எப்படி டா நற்பவி டாக்கிங். என்னோட டிரைனிங்” என்று கேட்டாள்.

   “எங்கூட ஜோடியா ஒரு போலீஸ் ஸ்டோரிக்கு நடிக்க வைக்கலாம் போலயே. நடிப்புல பின்னறா. இந்த மூஞ்சியா நேத்து சோகமே உருவாகி பீல் பண்ணினானு சொன்னா நம்ப மாட்டாங்க.” என்றான் வீடியோ காலில் ப்ரனித்.
  
    “டேய்… கொழுப்பு தானே. நான் கூட பயப்படுவானு பார்த்தேன். தர்ஷன் அங்கிள் தான் செத்தவன் ஒன்னும் நல்லவன் இல்லையே மா. ஏன் பயப்படுற… தப்பா ப்ளே பண்ணி வழிகாட்டுறேன்னு யோசிக்கறியா. தப்பானவங்களுக்கு இந்த ரூட் தான் கரெக்ட்’ என்று சொல்லி அவளை கண்வின்ஸ் பண்ணினார்.

     அவரே கையிட் பண்ணறப்ப அவ பயப்படலை.” என்று கூறினாள்.

   இங்கு குருவோ மஹாவிடம் “என்கவுண்டர் எல்லாம் இப்படி தான் பண்ணுவாங்க போல. புள்ள சினிமா மாதிரியே கீதுல” என்று அவளுக்கு வைத்த ஆப்பிள் துண்டை எடுத்து திண்றான்.

    மஹாவோ “ஆமா இப்படிப்பட்டதுங்களுக்கு இப்படி தான் பதில் தரணும் மே.. நம்மளை புள்ளத்தாச்சி யோசிச்சானா. தீயை வச்சிட்டு போயிட்டானுங்க. கையில கிடைச்சா நானே போட்டு தள்ளியிருப்பேன்.” என்று மஹா சூடாக பேசினாள்.

      நற்பவி பேசிவிட்டு நடந்து சென்ற காட்சியையே பலமுறை ஓடவிட்டு பார்த்து புகையை இழுத்தான் எதிராளி. அதிலிருந்த கஞ்சா புகை சிவந்திருந்த கண்களை அரக்கனாக காட்ட, உதடு விரிந்து இந்த பொண்ணை பிடிச்சி ஒரு நாள்… வச்சிருந்து செய்யணும்.” என்றவன் பார்வை அனுஅனுவாய் நற்பவியின் உடலை மேய்ந்தது.

    “இவளுக்கு மேலிடத்துல அந்த கமிஷனர் சப்போர்ட் இருக்கு சார்.” என்று கைத்தடி ஒருவன் எடுத்துரைத்தான்.

     “எப்பவும் ஆட்களோடவா வருவா. ஒரு நேரம் தூக்கிடுவோம். இவளோட பயோடேட்டா எனக்கு அனுப்பி வை. கூடவே அவளோட போட்டோவும்” என்று கூறினான் கூட்டத்தின் தலைவன்.

    அதே நேரம் ‘இவன் தான் காலேஜ் பிரெண்ட் இல்லை. இவனை தேடி தூக்கணும். இந்த பரந்த உலகத்துல அவனை எங்கனு தேடுவேன்.’ என்று மதிமாறன் அவனின் மடிக்கணினியில் இருந்த உருவத்தை தனது போனில் போட்டோ எடுத்து கொண்டான்.

    மிக துல்லியமான புகைப்படமாக அதுயில்லையென்றாலும் அவனை நேரில் கண்டதால் முகம் நினைவுப்படுத்திக் கொள்ள உதவியது.

தொடரும்
பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “இதயத்திருடா-22”

  1. Kalidevi

    Super pavi akka solli koduthatha appadiye pesita but avana mari aaluku ippadi tha pannanum nallavan illaye sarath . Nee inum try pani sikiram avana ethathu pannanum athuku munnadi mathi kitta mataporan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!