💟3
லத்திகா தன் வேலையில் மெய் மறந்து கொண்டிருந்த வேளையில்
கூட பணிப்புரியும் ரவி முன் வந்து நின்றபடி,
”லத்திகா இந்த பைல்ல MD சைன் வேணும். இது புவனாவோட ஒர்க். கொஞ்சம் வாங்கி வந்து கொடுக்கறியா?” என்றான்.
”ஏன் நீங்களே அதை வாங்கியிருக்கலாமே?” என்றால் அசட்டையாக.
”லத்திகா உங்களுக்கு விஷயமே தெரியாதா? உள்ள சின்ன MD இருக்கார் ரொம்ப கோவமா… ஏற்கனவே ரெண்டு பேர் திட்டு வாங்கிட்டு வந்துட்டாங்க, புவனா எல்லாத்தையும் செக் பண்ணிட்டாங்களாம். ஜஸ்ட் சைன்” என்று மற்றவர் வேலையை ய்வள் பக்கம் திருப்பி கொடுத்தான்.
”ம் அதான் அமைதியா இருக்கா? என்னை வம்புல மாட்டி விட ட்ரை பண்றிங்க, சரி கொடுங்க” என பெற்று கொண்டாள். ‘நானும் யார் அந்த ஆராச்சியாளன் என்று பார்த்துவிட்டு வருகின்றேன்’ என மனதில் கூறியபடி அறை கதவை தட்டினாள்.
”மே ஐ கம் இன் சார்?” என நிற்க,
”லுக் யாரும் எனக்கு விஷ் பண்ண வேணாம் ஜஸ்ட் கெட் அவுட்” என மொழிந்தது அக்குரல்.
”சார் நான் ஒன்னும் விஷ் பண்ண வரலை. இதுல உங்க சைன் வாங்க வந்திருக்கேன்” என நடுங்காத குரலில் பதில் சொல்ல அவனுக்கு அவள் பேசிய எதிர் பேச்சால் எரிச்சல் தான் வந்தது.
”வைச்சிட்டு போ” என ஒருமையில் சொன்னான்.
சட்டென கோபத்தில் வெடிக்கும் லத்திகா அக்கணம் அமைதியாகவே வெளியேறினாள். மனதிற்குள் மட்டும் ‘இவனுக்கு ஆம்பிஷன் நிறைவேறலனா இப்படி தான் அவனுக்கு கீழே வேலை செய்யறவங்ககிட்ட காட்டுவான் போல பாவம் ஜெயராஜன் சார்’ என சொல்லி வேலையில் மூழ்கினாள்.
சற்று நேரத்திற்கு பிறகு பிருத்வி வேகமாக லத்திகா முன் வந்து அந்த பைலை அவள் முகத்திருக்கு முன் விசிறி எரிந்து,
”ரெண்டு இடத்துல மிஸ்டேக், அதை கூட பார்க்க மாட்டியா, ஏதோ பாய் ப்ரெண்ட் கூட ஊர் சுற்ற கிளம்பின மாதிரி மேக்அப் அள்ளி போட்டுக்கிட்டு வந்து நிற்க மட்டும் தெரியுமா? இதுல லேட்டா வேற வந்திருக்க” என்றான் காட்டமாய்.
”சார் இது என் ஒர்க் இல்லை, இருந்தாலும் நான் ஒருமுறை பார்த்து இருக்கணும் மை மிஸ்டேக்” என முடிந்த வரை பல்லை கடித்து கொண்டு பொறுமையாக சொன்னாள்.
”என்னயே எதிர்த்து பேசரியா? ”
”சார் எல்லோரும் பார்க்கறாங்க கூல்”
”ஏன் உன் லவ்வர் இங்க தான் ஒர்க் பண்றானா என்ன? திட்டினா அசிங்கமா இருக்கா?” என்று கேட்டதும் இதுவரை கட்டி காத்த பொறுமை பறந்து எப்பொழுதும் பேசும் குணம் தலை தூக்கியது.
”வாட் நான் சென்ஸ்…. இது என் ஒர்க் இல்லை. என் சீனியர் ஸ்டாப் புவனா அக்கா ஒர்க் அவங்க இன்னிக்கு லீவு அதனால ஜஸ்ட் ஒரு சைன் என்று சொன்னதால நான் வந்தேன். இதுல என் தவறு இல்லை. அண்ட் ஒன் மோர் நான் மேக்அப் அள்ளி போட்டு வந்தா என்ன வேணுமென்றாலும் பேசுவீங்களா? உங்ககிட்ட வேலை பார்குறதால உங்களை எதிர்த்து பேச மாட்டேன்னு நினைக்காதீங்க. தப்பு இல்லை என்றால் உங்களை விட என் குரல் அதிகமாகவே ஒலிக்கும். மைண்ட் இட்” என பட்டாசு போல வெடித்தவளை பார்த்து பிருத்வி ஏன் டா இவளை திட்ட வந்தோம் என்று அறைக்கு சென்று அவனின் கோவத்தை கதவை ‘படார்’ என்று சாற்றி தனித்தான்.
லத்திகா எப்பவும் போல பணியை தொடர்ந்தாள். அருகில் மட்டும் பேசும் சலசலப்பு கேட்டது. அது அவளையும் அவனையும் பற்றிய பேச்சு என புரிந்தது.
அங்கே உள்ளே பிருத்வியோ கோபமாக முகத்தோடு ‘ராட்சஷி ராட்சஷி… என்னையே எதிர்த்து பேசறா. இப்படி மேக்அப் அள்ளி போட்டு அழகா வந்து நின்றால் அதுக்கு என்ன அர்த்தம். எல்லார் எதிர்லையும் மானத்தை வாங்கிட்டா ராட்சஷி’ என புலம்பி தள்ளினான்.
அந்த நாள் முடிவடைய அடுத்த நாள் ஆரம்பம் ஆனது. புவனா வந்ததும் லத்திகா இருக்கும் இடத்திற்கு வந்து சாரி கேட்டாள்.
”சாரி லத்திகா என்னால தானே நேற்று MD கிட்ட திட்டு வாங்கின ஜானு சொன்னா ரியலி சாரி லத்திகா”
”புவனா அக்கா…. இதுக்கு போய் எதுக்கு சாரி விடுங்க”
”ஆமா நீயும் சாரை லேப்ட் ரைட் வாங்கிட்டியாமே கேள்விப்பட்டேன்” என்று இயல்பாய் பேசினார்கள்.
”வீட்ல இருந்தே எல்லா அப்டேட் சொல்றிங்க. என்கிட்ட சண்டைக்கு வந்தா விடுவேனா? என் மேல தப்பு இல்லை அதான் நானும் கத்திட்டேன்” என்றாள்.
”ம் … ஆமா ஆளு பார்க்க எப்படி இருக்கார்? செம ஹேண்ட்ஸம் என்று கேள்விப்பட்டேன்” என்று முதலாளி பற்றிய ஆர்வத்தில் கேட்டாள் புவனா.
”புவனா அக்கா உங்க வயித்துல இருக்கற பையன் உதைக்க போறான். செம ஹேண்ட்ஸமா? இருங்க இருங்க சந்தீப் அண்ணாகிட்ட சொல்றேன். உங்க மனைவி ரொம்ப பேட் என்று” என சிரித்தாள்.
”ஏய் வாலு, ஜானு தான் போன்ல எல்லாம் சொன்னா, சரி MD எப்படி?”
”அதுவா …. சரியான கடுகு டப்பா, சிடுமூஞ்சி” என்று சலிப்பாய் உரைத்தாள்.
”ஏய் எல்லா கேர்ள்ஸ் அழகு கியூட்னு சொல்லறாங்க நீ மட்டும் கடுகு டப்பா சிடுமூஞ்சிஎன்று சொல்ற” என்ற போதே பிருத்வி அவன் அறைக்கு செல்ல, எல்லோரும் எழுந்து நிற்க இவள் மட்டும் கணிப்பொறியே கவனம் செலுத்துவது போல் அமர்ந்து பணியில் செயல்பட்டாள்.
பிருத்வியோ என்ன இவ நேற்று அப்படி மேக் அப் அள்ளி போட்டு கொண்டு வந்திருந்தா, இன்னிக்கு சாதாரணமா இருக்கா இதுல எது உண்மையான கேரக்ட்டர்? ஆனாலும் ராட்சஷி அவள்… என்னை போய் சிடுமூஞ்சி சொன்னா அதுக்கு முன்னே ஏதோ சொல்லி இருக்கா என்னனு காதுல கேட்கலையே…. என்று சிந்தித்தான் . தான் அவளுக்கு ராட்சஷி என்று பட்ட பெயர் இட்டு குறிப்பிடுவது அறியாமல்…
பிருத்வி வந்ததும் புவனா அவன் அறைக்கு சென்று தனது தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்கச் சென்றாள்.
முதலில் திட்ட நினைத்த பிருத்வி அவளது மேடிட்ட வயிறை கண்டவுடன் திட்ட வேண்டாம் என விட்டுவிட்டான்.
”சாரி சார். நான் செய்த மிஸ் டேக்…. பாவம் லத்திகா. நான் தான் அன்னைக்கு செக்கப் போகிற அவசரத்துல சரியா பார்க்கலை” என்று மனதார மன்னிப்பு கேட்டாள்.
”இட்ஸ் ஓகே நான் சரி பண்ணிட்டேன்”
”சார்… சார் எப்ப வருவார்? நீங்க தான் இனி வருவீர்களா?” என்று ஐயத்தை கேட்டு நின்றாள்.
”அப்பா ஹாஸ்பிடல்ல இருக்கார். அவர் வரும் வரை நான் வருவேன்” என்றான்.
”சாருக்கு என்ன?” என்று கேட்க,
அதற்குள் போன் மணி அடிக்க ”எக்ஸ்கியூஸ்மீ” என போனில் பேசிட புவனா திரும்பி வந்து விட்டாள்.
புவனாவால் ஜெயராஜன் ஹாஸ்பிடல்ல இருக்கார் என்று மற்றவர்களுக்கு செய்தி பரவியது.
தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
Super
அருமையான பதிவு
super athu ena da pathathum udane thitura keka matiya ithula makeup alipotu vanthutanu vera solra unaku ethuku athulam . prithvi appa ku ena achi ethuku hospital la irukaru