Skip to content
Home » என் தேடலில் தொலைந்தவன் (ள்) நீ-2

என் தேடலில் தொலைந்தவன் (ள்) நீ-2

அதிகாலை பொழுது சிட்டுக்குருவி களின் இன்னிசையோடு ஆதவனும்  தான் போத்திருந்த போர்வையின  விலக்க   அந்த கண்ணாடி கதவின் வழியாக மெலிதாக ஓளி மங்கை அவளின் மீது படர மெதுவாக கண்ணை திறந்தாள்…. எதிரில்  உஷ்ணமாய்  அம்மா நின்றிருந்தார்

“குட் மார்னிங் மம்மி “என செல்ல சினுங்களோடு அவள் உடலை நெளித்துக்கொண்டே  கூறினாள்.

ஏண்டி  எத்தனை தடவை சொல்றது  பெரியப்பொண்ணா சீக்கிரம் எழும்பவேண்டாம்  இப்ப நீ கலெக்டர் டீ  பொருப்பா  எழும்பி உன் வேலைய பாக்க வேணாம் என காலையிலே அர்ச்சித்து கொண்டிருந்தார்.

தன் உடற்பயிற்சி கூடத்திலிருந்து  வெளியே வந்த விஷ்ணு வர்தன் அக்கா வசவு  வாங்குவதை பொறுக்காமல்….

ம்மா”  இன்னைக்கு சண்டே மா…

காலை லே உங்க பஜனைய  ஆரம்பிச்சிட்டீங்களா” என அக்கா க்கு துணைக்கு  வந்தார்

“தாத்தா அந்த காலத்து பஜனை பாடுவாராம்  அதுக்குன்னு  உங்களுக்குமா சொல்லி குடுத்துட்டு  போனார்”னு கிண்டல் பண்ண….

“என்னடா இங்க காலை லே சத்தம் காதகிழிக்குது” என பேப்பர் வாசித்துக் கொண்டே கார்த்திக் அங்கு வந்தார்.

“யப்பா உங்க பொண்ண நா ஓன்னுமே  சொல்லலப்பா  அப்பாவும் மகனும் வரிஞ்சு கட்டிகிட்டு வாரிங்க” காதில் கைவைத்து பொத்தியவாறு அமர்ந்தார்.

ஓடி வந்து”என் மம்மி க்கு சீக்கிரம் எழுப்பணும் அதான… இந்தா எழும்பிட்டேன் னு கட்டிக்கொள்ள காலை பஞ்சாயத்து ஓவர்”

அந்த நேரத்தில் கார்த்திக்கின் செல்போன் சிணுங்கியது.

எதிர்புறத்தில் என்ன கூறப்பட்டதோ  ”சரி சரி …. ஆ அப்படியே பண்ணிடுறேன்” என பேசிக்கொண்டே திரும்ப

விஷ்ணு என்னப்பா எதும் பிரச்சனையா யார் போன்ல…. என்னாச்சு” என் துளைத்து எடுத்தார்.

“டேய் ! துருவ் சார் தான் போன் பண்ணினார்…. அது பாப்பா பாதுகாப்புக்கு ஒரு டீம் ஏற்பாடு பண்ண சொல்லி”

“அப்பா நா இருக்கும் போது யார் என் அக்காவ என்ன செய்ய முடியும்” என முறுக்கினான்

“உங்க முறுக்கெல்லாம்  காமாட்சியம்மன் கோயில் ல போயி வித்துக்கலாம்… போலிஸ் எக்ஸாமுக்கு தயாராகுங்க போங்க” என நக்கலாக கூறினார் அவர்.

“அப்பா!” என விஷ்ணு கத்த

“இப்ப என்னடா போ போயி படிக்கிற வேலைய பாரு….. என்னமோ நாலு நாள் ஜிம் க்கு போயிட்டாணாம்..  நெஞ்ச நிமித்திக்கிட்டு வாரான்” என சொல்லிட்டே  அவர்  தன் பேப்பர் வாசிக்கும் படலத்தை தொடர்ந்தார்.

அந்த நேரத்தில்,   தட தட வென புல்லட் சவுண்டு  வீட்டின் வாயிலில் கேட்கவும் 

சஞ்சனா வெளியே வந்து பார்கத்தாள்.

“கலெக்டர எங்க அய்யா பாக்கணுமாம் .பதினோரு மணிக்கு  ஊர் எல்லையில  இருக்குற தோப்புக்கு வர சொன்னார்” என அந்த  சதாசிவம் வீட்டிலிருந்து வந்த ஆள்  கூறினார்.

வரமுடியாது னு போய் சொல்லு  னு வீட்டிலிருந்து ஒரு குரல் கணீர்னு ஒலித்தது.

பிரியா”தான்  “வரமுடியாது  ஐ மீன்  ஆபிஸ் ல வந்து பாக்க சொல்லுனு ” அழுத்தி கூறவும்….

“சபாஷ் டா குட்டி  இப்படி தான் தைரியமா பேஸ் பண்ணனும்” னு கார்த்திக்  ஹை பை அடித்துக் கொள்ள….

வந்திருந்தவனோ எங்க அய்யா ஒரு வார்த்தை சொன்னா அந்த ஆண்டவன் கிட்ட இருந்து வந்த மாதிரி நீங்க யாரை பகைக்கிறீங்க தெரியுமா!! எங்க அய்யாவை  பகைக்கிறதும் நாகப்பாம்பை  பகைக்கிறதும் ஓன்னு ” என முறைத்துக்கொண்டே கிளம்பினார்கள்.

“டேய் இதென்னடா பஞ்ச் டயலாக்  யார்டா  சொல்லிக்குடுத்தா  ஒழுங்கா பஞ்சே  பேச வரல  வந்துட்டான்  டப்பாவ தூக்கிலிட்டு மிரட்ட” னு சொல்லிக்கொண்டே

“டேய் !முன்ன பாத்து போடா  கேட்ல முட்டிக்காத என சொல்லி முடிக்கவும்  கேட்டில் முட்டி கிழே விழ”,அடேய்  நாந்தான் சொன்னேனே டா  இப்ப பாரு கேட்ட டேமேஜ் பண்ணிட்ட சும்மாவே எங்க டேட் காசு செலவு பண்ண யோசிப்பாரு  … இது ல தண்ட செலவு னு சொல்லி” விஷ்ணு திரும்பி பார்க்க

மூக்கில் புகை வராத குறியோடு நின்றிருந்தார்  கார்த்திக்

ஆமாங்க இவங்க வீடு நல்ல கல கலப்பான  வீடு  இதில் அவங்க நண்பர்கள் வந்தாங்க இன்னும் கலப்பா  ஆகிடும்… எப்பவும் நண்பர்கள் குடும்பங்கள் ஒன்னா கூடும்போது என்ன சந்தோஷம் வரும்னு உங்க எல்லாருக்குமே  தெரியும்

(  முதல் பாகத்தில் நிறைய கேரக்டர் கொண்டுவந்து உங்கள குழப்பிட்டேன்….
வரும் பாகங்கள்ல  தெளிவா உங்களுக்கு புரிஞ்சிடும்)

வாங்க கதைக்குள்  போகலாம். 🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️

இங்கு…..

“அடேய் அந்த சிறுக்கிக்கு அவ்வளவு திமிரா என் அனுபவம் இருக்குமா அவ வயசு… நா கூப்டு வரமாட்டேன் னு சொல்லிட்டாளா…. என கடும் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தார்…. சதாசிவம்…

டேய் மச்சானுக்கு போனப்போடுறா  அவள உண்டு இல்லனு  ஆக்கனும்  னு பொரிந்தார்.

அருகில் இருந்த  ஒருவன்  தடுமாறவும் பளார் னு கன்னத்தில் ஒரு அறை விழுந்தது

“நான் எவ்வளவு கொதிச்சுபோய் இருக்கேன் நீ தடவிட்டு  இருக்க” என  சதாசிவம் சதா கத்தி கொண்டே இருந்தார்.

அடுத்த ஒருமணிநேரத்தில் தோப்பில் “மச்சான், மருமகன், மினிஸ்டர் ஏகாம்பரம் என சில கட்சி தொண்டர்கள் என ஒரு கூட்டம் குழுமி இருந்தது

“ஹலோ நான் மினிஸ்டர் … பீ ஏ பேசுறேன் கொஞ்சம் அவசரமா உங்கள மீட் பண்ணனும்னு  சொல்றார் நீங்க இந்த இடத்திற்கு வாங்க” என அட்ரஸ் சொல்லப்பட்டது.

எதிர் புறத்தில் “சரி வரேன்” என் சொல்லி மொபைலை அணைத்தாள்  “வதனா

கொஞ்சம் யோசித்தவராய் சரி விச்சுவயும் கூப்பிட்டு போ ” என சொல்ல

“அப்பா நா மினிஸ்டர வ பாக்க போறேன் எதோ அவசரமா கூப்டுறார் …என்ன மீட்டிங் னு தெரியல  அவர பார்த்துவிட்டு மதியம் லஞச் வெளியே சாப்டுறேன்” என கூறவும்….

அமோதித்தவளாக ” சரிப்பா…. நா கிளம்புறேன்” என அவளது அறைக்குள் சென்றுவிட்டாள்….

விஷ்ணுவும் ரெடியாகி அக்கா வோடு அங்கு செல்ல  காரில் புறப்பட்டனர்

இவர்கள் வெளியேறவும் ஒர் உருவம் கிளம்பிட்டாங்க என மறுமுனையில் இருக்கும் ஒருவனுக்கு தகவல் தெரிவித்தது.

காரில் அரைமணிநேரப்பயணம் அந்த தோப்பினை  அடைந்தனர்.

வாசலில் நாலு ஐந்து பேர் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தனர்

அதில் ஒருவன்”என்னடா கலெக்டர் அம்மா பாதுகாப்பு க்கு ஸ்கூல் பையன கூட்டிட்டு வந்திருக்கு” என கலாய்த்தனர்.

விஷ்ணு வாய் சும்மா பொறுக்க மாட்டாமல் “செனத்தவளைக்கு சொக்கா போட்ட மாதிரி இருந்து என்ன கலாய்க்கிறியா” என பதில் உரைத்தார்.

“விஷ்ணு சும்மா வா” என தம்பியை அழைத்துக் கொண்டு மினிஸ்டரை  சந்திக்க சென்றாள்.

அவரை பார்த்து வணக்கம் வைத்து விட்டு அந்த நாற்காலியில அமர…..

அது ஒன்னுமில்ல  மா சொந்த ஊருக்கு வந்தேன் புதுசா கலெக்டர் வந்திருக்கிறதா கேள்வி பட்டேன்….. சரி ஒரு வார்த்தை பேசிட்டு போயிருவோமே னு கூப்டு விட்டேன். சரி மக்கள் பணி பாக்கவே  டைம் இல்ல இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை கிழமை மாதிரி ஏதோ ஒரு நாள் தான் இப்படி உறவுகளை சந்திக்க முடியுது.

அப்புறம்…. இது என் மாமா சாத்தான்குளத்தில எம் எல் ஏ வா இருக்கார்… அவர் பையன் உனக்கு தெரிஞ்சிருக்கும் னு நினைக்கிறேன்…. இது என் நட்பு சதா…. தொழிலதிபர்…. நாம எல்லாம் நட்பு வட்டத்த பெருக்கினாத்தான் மக்கள் பணிய செய்யலாம்*னு அறிமுக படலத்த முடித்து வைத்தார்.

இந்த ஊர்ல என்ன பிரச்சனை எல்லாம்  என் நண்பனுக்கு அத்து படி… னு சொல்ல

அவள் ஏறிட்டுப் பார்க்க அவர் உர் ர் னு இருக்க….. பேருக்கு சிரித்து வைத்தாள்.

“இருந்து சாப்பிட்டு தான் போகணும்” என கூறவும்

“இல்ல சார் வேற வேலை இருக்கு நா கிளம்புறேன்” என  அங்கிருந்து விடை பெற்றாள்.

இவர்கள் அங்கிருந்து கிளம்பவும்….
“மச்சான் ஆளு  நல்ல தலதலனு தான் இருக்கா” என நாக்கின் மேல் பல்லை போட்டு வைத்தியநாதன் பேச…. இன்னும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டே  மதுக்கிண்ணங்களை தாங்கள் வயிற்றுனுள்ளே சரித்துக்கொண்டனர்.

……….

கேம்ப் வந்தவர்கள்  ‘மச்சான் உங்க டோலி என்ன உன்ன செம டோஸ் கொடுத்தார்” போல என  நவின் “கலாய்க்க

“டேய் சும்மா டோலி னு நக்கல் பண்ண வாய உடைச்சிருவேன்” னு கோபப்பட….

“சரி சரி கோபம் லா வேணாம். அம்மா பேசுனாங்களா ஏதோ பொண்ணு பாத்ததா சொன்னாங்க ல்ல” அது என்னாச்சு னு வினவ?

“அட நீ வேற டா மச்சான் நம்ம உயிர் எப்ப போகும்ணு நமக்கே உத்திரவாதம் இல்ல இதுல கல்யாணம் வேற “என தலையில் அடித்துக் கொண்டு … அம்மா தான் எவ்வளவு சொன்னாலும் கேக்கமாட்றாங்கடா. திருவிழா க்கு போற அந்த டைம்ல பொண்ணு பாக்கலாம் னு சொல்லிருக்காங்க என கூறிவிட்டு விளையாட தயாராகிக் கொண்டிருந்தான்.

நம்ம ஹீரோ
மேஜர் ஆதித்யா …… தூத்துக்குடி மாவட்டத்தில் முடிவைத்தானேந்தல் எனும் சிற்றூரில் வசிக்கும் முனியசாமி சரோஜா தம்பதியினரின் புதல்வன்… இந்தியன் ஆர்மியில் கணவனை பறிகொடுத்து தன் மகனையும் அதே இராணுவத்தில் பணிபுரிய செய்த வீரத்தாய் னு கூட சொல்லலாம்……

முடிவைத்தானேந்தல் ஊர் அன்றிலிருந்து இன்றுவரை காவலுக்காகவே தன்னை அர்பணித்த ஊர் என ஓர் கூற்று ண்டு…. அந்த காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் நகைகளை அணியாபரநல்லூர் எனும் ஊரிலிருந்து மதுரைக்கு எடுத்து செல்லும் வழியில் பாதுகாப்புக்காக இந்த ஊரில் உள்ள மக்களே தாமாக வந்து பாதுகாப்பாக மதுரை மீனாட்சி அம்மன் க்கு நகைகளை வந்து செலுத்த… அதுமட்டுமல்லாது இந்த ஊரில் உள்ள நிறைய மக்கள் வெவ்வேறு அரசு பணிகளில் பாதுகாவலராக உள்ளனர்…..

இங்கு விளையாடி கொண்டிருந்தவர்களில்
“டேய் நரேஷ் நீ எவ்வளவு தான் சீனியராக இருந்தாலும் நம்ம ஆதி மாதிரி நித்தேஷ் ஜீ கிட்ட நெருங்க முடியாது… ஆதி எப்பவும் நம்ம கமாண்டர் க்கு செல்லப் பிள்ளை….

எத்தனை பேர் வந்தாலும் அடித்து துவம்சம் பண்ணிவிட்டு ஆப்ரேஷன் சக்ஸஸ் ஆ முடித்துவிட்டு வருபவர் மேஜர் ஆதித்யா ” என உசுப்பேத்திவிட….

நரேஷ் ஆதியை விட சீனியராக இருந்தாலும் இரத்தத்தை பார்த்து நடுங்கும் ஒரு ஜீவன்…..

இருந்தாலும் ஆதியை வன்மமாக நினைக்க தொடங்க, அடுத்த ஆப்ரேஷனில் ஆதியை பழிவாங்கும் அளவுக்கு குரூரமாக மாறியது.

ஆதி திருவிழா போகப்போறானா???? இல்ல இவன் வலையில் சிக்க போறானா

-தொடரும்.

கதை எப்படி னு கொஞ்சம் சொல்லிட்டு போங்கோ🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️

6 thoughts on “என் தேடலில் தொலைந்தவன் (ள்) நீ-2”

  1. அடப்பாவிங்களா..! உங்க சொந்த வன்மத்தையெல்லாம் ஏன்டா நாட்டுக்கு சேவை செய்யறவங்க மேல காட்டறிங்க.

  2. ஆளு அனுப்பி ஏன்டா அசிங்க படுறிங்க..😂😂😂 இப்போ இவளை பார்த்தே ஆகணுமா 🤧🤧
    ஒருத்தன் நல்விதமா இருந்தா புடிக்காதே. ஆதிக்கு எதிரியை விட துரோகிங்க தான் அதிகம்…கூட இருந்தே குழி பறித்து அவனை வீழ்த்த பார்த்து.. அவர்களே மண்டை உடைத்து இருந்த இடத்தை விட்டு ஓடிடுவாங்க …. ஆதி ஹீரோடா..😍😍😍😍😍

  3. Yov mams semaiya 😂😂antha vaiku kannula milagapodiya thoovunga

    Yen pa aadhi nu peru vachi drogam tan panuvingala🥲🥲

  4. நம்ம கலெக்டர் தைரியமான ஆளு தான்🤩🤩🤩🤩🤩தம்பியுடையான் படைக்கு அஞ்சான்னு கிளம்பி மூனு உருப்படாத உருப்படிங்களைப் பார்த்துட்டு வந்துச்சு😏😏😏😏😏😏ஆதினு பேரு வச்சாலே இருக்குற எல்லா வில்லனுங்களும் சுத்தி வளைச்சிடுவானுங்களோ🙄🙄🙄🙄🙄ஆனாலும் மேஜரோட ஆபரேஷன்ல எவன்லாம் சிக்கி சின்னாபின்னமாகப் போறானோ😂😂😂😂😂😂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *