அந்த மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் …….
“எஸ் பி ரூம் எங்க இருக்கு” என கேட்டுக்கொண்டு ஒருவன் வந்திருந்தான்
“செகண்ட் ப்ளோர் லெப்ட் பக்கம் நாலாவது ரூம் “என ஒரு கான்ஸ்டபிள் கூறவும்
கான்ஸ்டபிள் கூறிய அந்த அறையின் கதவை தட்டி ” மே ஐ கம்மின் சார் ” என கூறவும், வாங்க நிரஞ்சன் ப்ளீஸ் பி சிட் என ஐஜி கனகரத்தினம் கூறவும் அந்த இருக்கையில் போய் அமர்ந்தான் நிரஞ்சன்,
ஹலோ ப்ரண்ட்ஸ் , இவர் நிரஞ்சன் க்ரைம் ப்ரான்ஜ் ல இருக்கார் சமிபமா நடக்குற கொலைகள கண்டுபிடிக்க வந்திருக்கார் .. இனி நம்மலோட பயணிப்பார்
ரஞ்சித் கோபம் கொண்டவனாக,
சார்!!இப்ப எங்க மேல நம்பிக்கை இல்லனு சொல்றீங்களா??இல்ல திறமையில்லனு சொல்றிங்களா?? அந்த ராஸ்கல்ஸ் ஸ நானே என்கவுண்டர் ல போடுறேன் என கர்ஜிக்கவும்,
ரஞ்சித் கூல் !!கூல்!!என்னாச்சு இப்ப டென்சன் நம்ம ஒரு பக்கம் தேடுவோம் அவங்க ஒரு பக்கம் தேடட்டும் நமக்கு ஏய்ம் அக்யூஸ்ட் தான சீக்கிரம் பிடிக்க தான் இந்த ஏற்பாடு
இங்க மாத்தி மாத்தி சண்டை போட நேரமில்லை நாம தாமதிக்கிற ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு த்தரா இறந்து ட்டு இருக்காங்க சீக்கிரம் கண்டுபிடிக்கிற வேலைய பாருங்க என ” ரத்தினம் கூற அனைவரும் விடை பெறும் தருவாயில்,
போலிஸ் கண்ரோல் ரூம் சார் முடிவைத்தானந்தல் காட்டு பகுதியில ஒரு பாடி கிடக்குது னு சொல்றாங்க னு ஒரு கான்ஸ்டபிள் கூறினான்.
சொல்லி முடிக்கல அடுத்த மர்டர் என எஸ் பி கையை விரிக்கவும்
விடைபெற்று அங்கிருந்து அனைவரும் கிளம்பினர் .
இங்கு …..
யாரு பாடிய முதல்ல பார்த்தது என விசாரிக்கவும்,
நான் தான் சார் என கருப்பையா வந்தான்
ஐயா நாங்க டெய்லி இந்த பக்கம் காலைக்கடனுக்காக ஓதுங்குவோம் அப்ப இந்த சூட்கேஸ் கிடந்தது என்ன எதுனு கிட்ட போய் பாக்க போனா ஒரே கவுச்சி வாட அதான் நா தகவல் கொடுத்தேன் என கூறவும்,
அதற்குள்ளாக நிரஞ்சன், முத்தையன், காஜா அந்த இடத்திற்கு வந்தனர்
பாரன்சிக் கிற்கு கூறப்பட்டு ஆய்வு மேற்கெள்ளப்பட்டுகொண்டிருந்தது.
காஜா பார்த்தவுடன் சார் இவர் நேத்து நம்ம ஸ்டேஷனுக்கு பையன காணோமே னு கம்ளைன் குடுக்க வந்தார் சார் என கூறவும்,
முத்தையன் “இவராடா காஜா நல்லா பார்த்து சொல்லு ,
ஆமா சார், இவர்தான் நேத்து இவரும் இவர் சம்சாரமும் வந்தாங்க சார் என அழுத்திக் கூறவும்
இங்கு எல்லா பார்மாலிட்டிக்ஸ் முடித்து கிளம்பினர்…
நிரஞ்சன் சார் இந்த கேஸ் சம்பந்தப்பட்ட பைல் கள் எங்க இருக்கு நா பாக்கணுமே சார் என கேட்கவும்
ஸ்டேஷன் போனதும் எடுத்துதரசொல்றேன் நீங்க ஸ்டார்ட் பண்ணலாம் என முத்தையன் கூறினார்
ஒரு அரை மணி நேரம் பயணம் ஸ்டேஷனை அடைந்தது.
“காஜா எல்லா பைல்ஸ் ம் எடுத்துக்குடு நா வீடு வரை போயிட்டு வரேன்” என கூறி முத்தையன் சென்றார்
நிரஞ்சன் கேட்க கேட்க காஜாவும் பதிலளித்துக்கொண்டே வந்தார்
நிரஞ்சன் முக்கியமான வற்றை குறிப்பு எடுத்து கொண்டான்..
காஜா சார் “நம்ம ஹரிஹரன் சார் லாஸ்டா க்ளோஸ் பண்ண பத்து கேஸ் பைல்ஸ் கொஞ்சம் வேணுமே சார்” எனக் கேட்கவும்
சார் “அது அவர் வொர்க் பாத்த புதுக்கோட்டை ஸ்டேஷன் தான் போகணும் சார் “என கூறவும் சரி “நாம அங்க கிளம்பளாம்” என கூறினான் நிரஞ்சன்.
காஜா முத்தைய னுக்கு அழைத்து சார் நிரஞ்சன் சார் புதுக்கோட்டை ஸ்டேஷனுக்கு கூப்பிடுறாங்க போயிட்டு வரவா?? சார் என பர்மிஷன் கேட்க
அதெல்லாம் ஓன்னும் சொல்லமாட்டார் நா பேசிக் கிறேன் என காஜாவிடம் இருந்து மொபைலை வாங்கி சார் நா கூட்டிட்டு போறேன் என கூறிவிட்டு போனை அணைத்தான்.
என்ன ஒரு திமிரா!!! என் பதிலைக் கூட கேட்காம போனை வச்சுட்டான். நாலு கேஸ கண்டுபிடிச்சுட்டா பெரிய இவனா கவனிச்சுக்கிறேன்…
சாரதா! ஏய் சாரதா!!இங்க நா கத்திட்டு இருக்கேன் எங்கடி போன??
போலீஸ் னுதான் பேரு வீட்ல ஒரு வார்த்தை க்காச்சும் மதிக்குதா பாரேன்
வீட்ல மதிக்கலனா அங்க எவன் மதிப்பான் இந்த மளிகை கடைக்காரன் மொவளுக்கு என்ன திமிரு பட்டிக்காடு என கத்திக் கொண்டே தோட்டத்திலிருந்து முன் வீட்டின் உள் வந்தார் …
சாரதா வெயிலுக்கு இதமாக தர்பூசணி யில் ஜூஸ் போட்டுக் கொண்டிருந்தாள்
ஏய் சாரதா “காது எதும் போச்சா எத்தனை கத்து கத்துறேன் ஒரு வாட்டி என்னனு கேட்டா என்ன குறைஞ்சா போயிருவ” என கேட்கவும்
எல்லாம் கேட்டுச்சு இந்த மளிகை கடக்காரிக்கு காது நல்லா கேட்டுச்சு என பதில் கூற
அச்சச்சோ அப்படி இல்ல அம்முமா அங்க தோட்டத்தில செடியெல்லாம் புடுங்கி கிடக்குதே அத கேட்டேன் டா என ஐஸ் வைக்கவும்
ஜூஸ் ல ஐஸ் நிறைய போட்ருக்கேன் ..
இந்தாங்க என ஜூஸை நீட்டவும்…. வாங்கி பருகிக்கொண்டே ஆமா பாப்பா எங்க ஆளக்காணோம் என வினவ…
அவ எங்க வீடு தங்குறா?? எப்பவும் ஓடி கிட்டே இருக்கா நீங்க ஓவர் செல்லம் வயதுக்கு வந்த பொண்ணு மாதிரி இல்ல ம்க்கும் என கழுத்தை வெட்டியவுறு கூற
கழுத்த ரொம்ப வெட்டாதடி கழுத்து சுளுக்க போகுது என கூறியவாறு ஜூஸ் முழுவதும் குடலுக்குள் இறக்கினார்… வெயிலுக்கு இதமாக …..
….
இங்கு ஸ்டேஷனில் மூர்த்தி ஹாயாக தூக்கிக்கொண்டு இருந்தார்…
நிரஞ்சன் காஜாவை பார்த்து “சார் அவர எழுப்புங்க” என க் கூறவும்,
ஏட்டையா! இவர் வீட்டுக்கு போகலையா இல்ல விடமாட்றீங்களா என்ன தூக்கம் தூங்குறார் போய் எழுப்புங்க.. ஒரு கேஸ் விஷயமா பேசணும் என கூறவும்.. ஏட்டுவும் எழுப்ப சென்றார்…
சார் !!எஸ்பி ஆபிஸ் ல இருந்து வந்துருக்காங்க என”, கூறவும்,
போ ….ரைட்டர் ட கம்ளைன்ட் எழுதி கொடுத்துட்டு போக சொல்லு என்பதை கண்களை திறக்காமல் கூறவும்,
என்னா மனுஷன்யா நல்லா வாழுறான் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு
சார் க்ரைம் பிராஞ்ச் ஆபிசர் நிரஞ்சன் வந்துருக்கார் என அழுத்திக் கூறவும் இருயா வரேன்… தூங்குற நேரத்தில தான் *“”வருவானுங்க என எழும்பி முகம் அலம்ப சென்றார்.
வாங்க Mr. நிரஞ்சன் உங்கள நானே மீட் பண்ணலாம்னு நினைச்சேன் நீங்களே வந்துட்டிங்க சொல்லுங்க என்ன சாப்டுறீங்க என கேட்டுக்கொண்டே நாலு இளநீ வாங்கிட்டு வா என பர்ஸ் லிருந்து ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து கொடுக்க மொத்த ஸ்டேஷனும் ஷாக்…
பின்ன வாங்கி தான பழக்கம் ஆள் ஐநூறு ரூபாய் கொடுக்கிறார்! அல்லவா
அதெல்லாம் ஒன்னும் வேணாம் சார் ஒரு மர்டர் விஷயமா கேக்கலாம்னு வந்தேன் என நிரஞ்சன் கூறவும்,
சார் அந்த பையன் மேல்தான் எனக்கு டவுட்டு அவன் தான் ஏதாச்சும் பண்ணிருக்கனும் மிலிட்டரி ல காஞ்சி போய் வந்திருக்கான்ல அதான் ….
சார் சார் நா ஹரிஹரன் மர்டர் பத்தி அவர் லாஸ்ட் டா அட்டன் பண்ண கேஸ் பத்தி விசாரிக்கவந்தேன் நீஙகளா பல உண்மைகள சொல்றீங்க என நக்கல் தொனியில் பேச,
கொஞ்ச நேரம் வெட வெடத்துதான் போனான் . ..
ஏட்டையா அந்த டாக்டர் கேஸ் கட் எடுத்துக் கொடுங்க என கூறிவிட்டு வெளியே சென்றான்,
இன்ஸ்பெக்டர் மேல் ஒரு கண்ணை வைத்தவன், அந்த கேஸ் பைலை எடுத்து படிக்க ஆரம்பித்தான்… அதில் ஒரு சிறுமி ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்ததாகவும்………………அந்த சிறு பெண்ணை ரேப் பண்ணின குற்றவாளியான இருபத்தி ரெண்டு வயது இளைஞனை பிடிக்க சென்றபோது என்கவுண்டர் செய்யபட்டு கேஸ் க்ளோஸ் ஆகி இருப்பதாக குறிப்பிட பட்டிருந்தது.
இதனை குறிப்பெடுத்தவன் காஜா வாங்க போகலாம் என கிளம்பினர்….
காஜா இந்த பொண்ணு வேலை பார்த்த வீட்டுக்கு போகணும் என அந்த அட்ரஸ் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர் இருவரும் அந்த தெருவினை அடைந்ததும்….திடீரென ப்ரேக் போட்டார் காஜா” ஏன் என்னாச்சு? என வினவ….
சார் காலையில ஓரு மர்டர் பாத்தோம் இல்ல அவர் வீடு இருக்குற தெரு சார் ஒரு குழப்பமா இருக்கு சார் என காஜா தெரிவிக்க….
சரி போங்க ,வீட்டு பக்கம் போய் விசாரிப்போம் என கூறவும் காரில் வீட்டை யடைந்தனர்….
வீட்டை அடைந்து ஹாலிங் பெல்லை அழுத்தவும் ஒரு அம்மா கதவை திறந்தார்..
இவர்கள் இருவரையும் கண்டவுடன்
அய்யா ! என் பையன் பத்தி தகவல் கிடைச்சதா அதுபத்தி தான் சொல்ல வந்திருக்கிங்களா ….என் பையனுக்கு என்னாச்சு??? நல்லா இருக்கானா எங்க இருக்கான் என பெத்த பையனைக்குறித்த கவலை தோய்ந்த குரலில் கேட்கவும்….
இல்ல வேற யாராச்சும் இருக்காங்களா விட்ல என காஜா கேட்க
எங்க அண்ணே வந்திருக்கார் என அந்த அம்மா தெரிவிக்கவும்
வணக்கம் சார் நா ராஜா வசந்தியோட அண்ணன் என அறிமுகபடுத்திக்கொண்டு வந்தார்…
வாங்க எங்க கூட என காஜா அழைக்கவும்
சரி சார் போலாம் என கூட வநதார்…
சார் பையன் கிடைச்சுட்டானா எங்க இருக்கான் எதும் பிரச்சினை என வினவ!
இல்ல உங்க தங்கச்சி மாப்ள எப்படி அவங்களுக்கு வேற எதும் தொடர்பு இருக்கா என காஜா கேட்கவும்
இல்ல சார் தங்கமான மனுசன் சார் நல்ல உதவும் மனுசன் அவர் மாதிரி ஆள் பாக்கவே முடியாது என தனது மச்சானை கூறவும்,
சரி உங்களுக்கு எதிரினு யாராச்சும் இருக்காங்களா??தொழில் போட்டி என கேள்விகளை தொடுத்தார் காஜா
அப்படி யாரும் இல்ல சார் மருத்துவம் ங்கிறதால நிறைய இலவசமா பார்ப்பார் சார் ஏன்? என்னாச்சு இத்தனை கேள்வி சார் என் ராஜா கேட்டார்…
இல்ல உங்க தங்கச்சி மாப்ளைய யாரோ கொலைபண்ணிருக்காங்க…..அதான் அடையாளம் பாத்துக்க தான் ….
மச்சான கொலை பண்ணிட்டாங்களா???என அதிர்ச்சியடைய……
கொஞ்சம் ப்ரேக் மன்னிச்சு ஊருக்கு வந்துருக்கேன்….அதான் லேட்…
கதை எப்படி உன் கொஞ்சம் சொல்லிட்டு போங்கோ….
இனி சீக்கிரம் போட்ருவேன்……
Nice
Next episode post panalaia or deleted ahh??? Can you pls share next episodes???