பாகம்- 19
வழக்கம்போலக் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள் நிமிர்ந்தால் அங்கே சூர்யா நின்றுக் கொண்டிருந்தான்.கையைக் கட்டிக் கொண்டு. இது தான் அவன் காட்டும் தோரணை. அவளுக்கு மிகவும் பிடித்த தோரணை. அறிவும் ஆண்மையும் கலந்து நின்றவனை பார்த்து எந்தப் பெண் தான் மயங்கி மாட்டாள்? இவளும் மயங்கித்தான் போனாள் . ரசித்து நின்றிருந்தாள் . அவன் அப்படி அல்ல போலும். “யார் கூட வந்திருக்க?” அவன் மிரட்டலில் இருந்தே அவனுக்கு பதில் தெரியும் என்பதை அறியாதவளா சந்திரா? இருந்தாலும் அவன் பதிலுக்கு காத்துக் கொண்டிருக்கிறான். “தனியாத்தான்” அவள் சொன்ன பதிலில் அவனுக்கு அத்தனை கோபம். “பளார்னு ஒன்னும் விடணும்போல இருக்கு” கோபத்தை கட்டுப்படுத்த முயன்றவன் முகத்தை திருப்பிக் கொண்டான். கோபம் அடங்க வில்லை. அதிகரித்தது. “அறிவிருக்கா?”எப்போதும் அவன் கேட்கும் அதே கேள்வி. அவளுக்கு அவனிடம் பிடித்த விஷயங்களில் இந்த உரிமையும் ஒன்று. அன்று இதே கேள்வியைக் கேட்டுத்தான் மனதில் புகுந்தான். “பால்ஸ்பெயின் வந்து இன்னும் ரெண்டு நாள் தான் ஆகுது.டாக்டர் அன்னிக்கு உன்ன எவ்ளோ கவனமா இருக்க சொன்னாங்க? அதுக்குள்ள மேடம் தனியா ஊர சுத்த ஆரம்பிச்சுடீங்க”. அவன் கோபத்தில் நியாயம் இருந்தது. அவள் ஏங்கி இருப்பது இந்த உரிமைக்காகத்தான். தலையை குனிந்துக் கொண்டாள் . அடுத்து அவளின் இயலாமையால் கண்ணீர் வரும். அதுதான் அவனுக்கு நன்றாகத் தெரியுமே! “வா! போகலாம். இந்த சில் காத்துல சளி புடிக்காது ?” திட்டிக் கொண்டே இரண்டடி எடுத்துவைத்தான். இவளால் நடக்க முடியாது என்பதை பார்த்தவன் மெதுவாக கை பிடித்து அழைத்துச் சென்றான். அப்போதும் அதே பெண்மணி பூ விற்றுக் கொண்டிருந்தார். ஏக்கத்துடன் சூர்யாவின் முகத்தைப்பார்த்தாள் சந்திரா. அவன் இவளுக்கு பூ வாங்கிக் கொடுத்தான். ஏன் இப்போது இவர்களை கணவன் மனைவி என்று அவர் நினைக்க மாட்டாரா ? மற்றவரின் கேள்விகளை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. …….. வழக்கம் போல அவனே அவளை காரில் அழைத்து வந்தான். அவளுக்கு இந்த தனிமை பிடித்திருந்தது. அவனை ஒட்டி அமர்ந்து புஜங்களை கட்டிக்க கொண்டு தொழில் சாய்ந்து கொள்ள ஆசையாக இருந்தது. மிரர் பார்த்து காரை பாந்தமாக ரிவர்ஸ் எடுத்து பிறகு வண்டியை த் திருப்பினான். அவனின் ஒவ்வொரு அசைவையும் மனதில் புதைத்துக் கொண்டாள் . இது எல்லாம் அவள் வாழ்வில் எப்போது கிடைக்குமோ? கிடைக்காத பொக்கிஷம். இனிய நிகழ்வுகளை மனதில் பொத்தி வைத்துக் கொண்டாள் . வண்டி நேர்ப் பாதையில் செல்லும்போது ரேடியோவை ஆன் பன்னி இருந்தான். அவளுக்கும் மனதிற்கு இதமாக ஏதாவது பாடல் கேட்டால் தேவலாம் போல இருந்தது. இதோ இவர்களின் பிரதிபலிக்கும் பாடல். இருவருக்குமே பிடித்த வரிகள் … தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம் ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும் ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்…………. ஏற்கனவே காதல் கிளிகள் மயங்கி இருக்க சித்ராவும் எஸ் பி பீயும் வேறு சேர்ந்து மயக்கினார்கள் ……… வரிகள் சந்திராவை பார்த்த நாளில் இருந்து சூர்யாவுக்கு பிடிக்கும், அன்றாடம்போகும் பாதையாவும் இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில் நீவந்துஎன்னை மீட்டுச்செல்வாய்என்றுஇங்கேயே கால்நோக கால்நோகநின்றேன் ……….. அவளால் இதற்க்கு மேல் முடியாது. தன் மனதில் இருக்கும் அத்தனை பாரங்களை சூர்யாவிடம் இறக்கி வைத்து விட வேண்டும் என்று மனம் குமுறியது. ஏனோ தன்னையே அந்த கதாநாயகியாக நினைத்திருந்தாள் சந்திரா . சூர்யாவிடம் இப்போது எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டும் என்று தோன்றியது. அதே தான் அவனுக்கும் தோன்றியது. வேறு மாதிரியாக. இல்லை!பேசக் கூடாது! என்று பொறுமையாக மனதை அடக்கியவனால் வாயை அடக்க முடியவில்லை. “எதுக்கு சந்திரா எல்லா தடவையும் தனியாவே வர்ற ? உன்னோட ஹஸ்பண்ட் வரமாட்டாரா ? அன்னிக்கு ஆபிசுக்கு கூட வந்தாரு இல்ல? அவள் எதுவும் பதில் பேசவில்லை. கீழ் உதட்டை கடித்துக் கொண்டாள் . “நீ ஏன் எனக்கு இன்றோ கொடுக்கல? பாவம் நீ எப்படி குடுப்ப? இவன் என்னோட எக்ஸ் . நாகா ரெண்டு பெரும் ரொம்ப நெருக்கமா கூட இருந்திருக்கோம். பட் அப்ப அவன் ஒரு பிச்சைக்காரன். அவங்க அம்மா ஒரு வாழாவெட்டி! அதனால கை கழுவிட்டேன்னு சொல்லுவியா?” “உனக்கு தான் கல்யாணம் ஆகலையே? அப்புறம் இந்த குழந்தைக்கு அப்பா ? அவள் பதில் பேச முடியாமல் தவித்ததை அவன் உபயோகப்படுத்திக் கொண்டான். “நீதான் காசுக்காக என்ன வேணா செய்வியே ? இந்த குழந்தைக்கு என்ன விலை பேசி இருக்க?” கண்ணை மூடி வான் பேசுவதைக் கேட்டுக் கொண்டாள் . அவன் பேசட்டும். எத்தனை காதலுடன் முகம் நோக்கி காதலைச் சொன்னான். அவனுக்கு தான் எப்படி வார்த்தைகளினால் சவுக்கடி கொடுத்தேன். இப்போது அவன் நேரம். பழி தீர்க்கட்டும்.அமைதியாகவே இருந்தாள் . “எங்கம்மா உன்ன பெத்த பொண்ணாதானே பார்த்தாங்க?அவங்கள ஏமாத்த எப்படி டி உனக்கு மனசு வந்தது? என்ன என்ன அப்பன் பெரு தெரியாதவன்னு நினைச்சியா? நீ இஷ்டத்துக்கு எங்க வீட்டுக்கு வரும்போது நீ எப்படிப்பட்டவலையோன்னு எங்களுக்கு உன்ன சந்தேகப்பட தோணல. ஆனா இப்ப? சீ !பணத்துக்காக இப்ப எத்தனை பேர் வீட்டுக்கு போறியோ ? அவளை ஏற இறங்கப் பார்த்து அருவருப்புடன் கூறினான். “கொஞ்சம் வண்டியை ஓரமா நிறுத்தறீங்களா?” வெறியை அடக்க முடியவில்லை. அவன் வண்டியை நிப்பாட்டினான். அதற்காகவே காத்திருந்தாள்.அவன் கன்னத்தில் பளீரென்ற அறை விழுந்தது. “இது உங்கம்மாவை அசிங்கப்படுத்தினதுக்கு” இன்னொரு அறையும் விழுந்தது. “இது அவங்க வளர்ப்பை அசிங்கப்படுத்தினத்துக்கு” சொல்லிவிட்டு காரை விட்டு இறங்கி ஆட்டோவில் ஏறி சென்று விட்டாள் . அதிர்ச்சியில் இருந்தான் சூர்யா. ============================================================================ அவள்தான் அவனை அடித்தாள் . ஆனால் இவளுக்குத்தான் வலித்தது.வீட்டிற்கு வந்தவளுக்கு அமர்ந்து அழ கூட முடியாமல் ராகவ் வந்திருந்தான். எப்போதும் போல இவள் வந்த உடனே பின்னோடே வந்தான். “ப்ளீஸ்! என்ன விட்டுடுங்க,உங்களுக்கு தான் உங்க பொண்டாட்டி இருக்காளே?” கெஞ்சினாள். இவளுக்கு அவனிடம் போராட மனதிலும் உடலிலும் தெம்பு இல்லை. “அவ இருக்கா. அவகிட்ட என்ன இருக்கு? ஒன்ன மாதிரி அழகு? எப்படி தளதளன்னு இருக்க? வயத்துல புள்ள இருக்கும்போதே இப்படி இருக்கியே?” என்று சுவற்றில் மோதியவளின் இரு பக்கமும் கையை வைத்து அவள் மேனியை முகர்ந்தான். அவளுக்கு அந்த நொடியே இறந்து விடமாட்டோமா என்றிருந்தது. அவன்,அவளை “இது என்ன கன்னமா ?” என்று ஒவ்வொரு பகுதியாக வருணித்து, காதில், “ஏன் புள்ளைக்கு பால் குடுக்க மட்டும்தானா****?” “ச்சே !” அவனை பலம் கொண்ட மட்டும் தள்ளி விட்டாள் . அசராதவனாக ,”புள்ளைய வச்சே உன்ன எப்படி வரவைக்கறேன்னு பாருடீ!” சுவற்றோடு சாய்ந்து அமர்ந்தவள் விம்மி விம்மி அழுதாள். “கடவுளே எதுக்கு என்ன காப்பாத்தின ? என்னையும் அப்பா அம்மாவோட கூப்டருக்க கூடாதா, தலையில் அடித்துக் கொண்டு அழுதாள். இந்த புள்ளைய மட்டும் பத்திரம் பெத்து குடுத்துடறேன். நான் வாழ வேண்டாம்” ராகவன் சென்றதும் மகளை பார்க்க வந்த தந்தையிடமும் இதையேதான் கூறினாள் . “அப்பா! எப்படியாவது இந்த குழந்தை பொறந்தவுடனே என்ன கொன்னுடுங்கப்பா. ப்ளீஸ் ….” “என்ன பாப்பா ?” அவருக்கு அதிர்ச்சிதான். “அப்பா ப்ளீஸ்!”அவர் தோளிலேயே முட்டி முட்டி அழுதாள். தந்தையால் அவளை சமாதானப் படுத்த முடியவில்லை. சற்று நேரம் கடந்து அவளே கேவிகேவி அழ ஆரம்பித்தாள். “எதுக்கு பாப்பா இப்படியெல்லாம் பேசற? உனக்கு என்ன பிரச்சனை சொல்லுமா. அப்பா நானிருக்கேண்டா” “இல்லப்பா! நான் சாகனும்.நான் இனிமே உயிரோட இருக்க கூடாது” “பாப்பா நான் வேணா சூர்யாவை வரச் சொல்லவா ?” கேட்டதுதான் தாமதம். அவன் பேசியது, ராகவன் பேசியது எல்லாம் கொட்டிவிட்டாள் . வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் தன் குழந்தையின் நிலையை எண்ணி அவரும் தலையில் அடித்துக் கொண்டு அழுதார். இதுவே தான் பெற்ற மகளாக இருந்திருந்தால் இந்த நிலைக்கு அவளைத் தள்ளி இருப்பேனா? அவரும் தலையில் அடித்துக் கொண்டார். சில நொடிகளில் தன்னை தேற்றிக் கொண்டவர் கண்களை துடைத்துக் கொண்டு மெதுவாக மகளை தண்ணீர் குடிக்க வைத்து சமாதானப்படுத்தினார். சுந்தரி டிபன் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு இங்கே நடந்தது எதுவும் தெரியாது. தெரிந்தாலும் அவள் இவளை ஒரு பொருட்டாக மதிக்கப் போவதுமில்லை. கணேசன் மகளை சமாதானப் படுத்தி கட்டிலில் மெதுவாக படுக்க வைத்தார். மனதின் பாரங்கள் நீங்கியதாலோ என்னவோ அழுது அழுது ஓய்ந்தவள் தூங்கிவிட்டாள் .மகளின் கையைப் பிடித்துக் கொண்டே இருந்தவர், மனைவி வந்ததும் சென்று முகம் கழுவிக் கொண்டார். சிறிது நேரத்தில் சந்திராவுக்கு உடம்பு கொதிக்க ஆரம்பித்தது. அப்பா!அப்பா! என்று அனத்த ஆரம்பித்துவிட்டாள். வேகமாக உடல் சூடு அதிகரித்தது. பயந்து போனவர் உடனடியாக ஆம்புலன்ஸிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டார். அந்த நேரத்தில் அவருக்கு யாரை உதவிக்கு அழைப்பது ஒன்றும் புரியவில்லை. ராகவனுக்கு சொல்லித்தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லாமல் காயத்ரிக்கு சொன்னார். உடனேயே அவர்கள் வந்து விட்டனர். மகளை விட்டு தந்தை நகராமலேயே இருந்தார். நேரம் கூடிக்கொண்டே போனது. கணேசன் பிரம்மை பிடித்தது போல அமர்ந்திருந்தார். சுந்தரிக்கு எதுவும் புரியவில்லை. இங்கு ஏனோ சாரதாவுக்கு நிலை கொள்ளவில்லை. மனதுபிசைவது போல இருந்தது. நிச்சயம் சந்திராவுக்கு ஏதோ சங்கடம் என்று மனது அடித்துச் சொன்னது. மகனோ மறுநாள் கிளம்புவதற்கு பதில் அன்றைய இரவே ஹைதெராபாத் கிளம்பினான். அவனிடம் எதையும் சொல்லி கலவர படுத்த விரும்பவில்லை அவன் அன்னை. அப்படியேச் சொன்னாலும் அதை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ? மகன் கிளம்பியதும் பொறுக்க முடியாமல் அவரே கணேசனுக்கு அழைத்து விட்டார். போனை எடுத்த காயத்ரி நிலைமையை சொல்லி விட்டாள். உடனே அவர்கள் மருத்துவமனைக்கு பறந்தனர். சாரதாவை பார்த்த கணேசன் கதறி விட்டார். “அண்ணா! இருங்க கவலை படாதீங்க!” மருத்துவரின் அனுமதியுடன் சந்திராவை பார்த்தாள் . “சந்திரா! ஆன்டி வந்துருக்கேன் பாரு” அவளை பார்த்தவருக்கு மனம் தாங்கவில்லை. பொறுத்துக்கொண்டு அவள் தலையை மெதுவாக கோதினார் . லேசாக கண் திறந்து சிறு புன்னகையுடன் மீண்டும் கண் மூடியது. இவருக்கு மனதில் பீதி கிளம்பியது. “பரவால்லையே! ரெஸ்பான்ஸ் இருக்கே . நீங்க எங்கையும் போகாதீங்க. கூடவே இருங்க.நாங்க எவ்ளோதான் முயற்சி பண்ணாலும் அவங்ககிட்டேர்ந்தும் கொஞ்சமாவது ரெஸ்பான்ஸ் வேண்டாமா? நீங்க அவங்ககிட்ட பேசுங்க. இது வரைக்கும் பேபி நார்மலா இருக்கு. அது எவ்ளோ நேரம் அப்படி இருக்குன்னு சொல்ல முடியாது. அவங்களுக்கு மனசுல ஏதோ பெரிய விஷயம் தாக்கி இருக்கு. அவங்களுக்கு தைரியம் சொல்லுங்க” சொல்லி விட்டு வெளியில் சென்றார் டாக்டர். மாயாவிக்கும் மனம் அடித்துக் கொண்டது. ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்திருந்தாலும் சந்திராவின் முக அழகோ அல்லது மன அழகோ மாயாவை வெகுவாகக் கவர்ந்து விட்டது. அதிலும் தன் உயிரைப் பற்றிக் கூட கவலை படாமல் வண்டியின் பின்னே ஓடிச் சென்று ராணியை காப்பாற்றிய சென்ற சந்திராவை யாருக்குத்தான் பிடிக்காது? முதலில் வெறுத்திருந்தாலும் சான்றவைப் பார்த்த நொடி மாயாவின் மனத்திலும் அழகாக அமர்ந்துக் கொண்டாளே ?மாயா சூர்யாவுக்கு அழைத்தாள். அவனோ போனை எடுக்கவே இல்லை . கால் டாக்ஸியில் ஏறியவன் , கண் மூடி அமர்ந்து நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தான். எங்கோ எதையோ தொலைத்தது போன்ற உணர்வு. அவனால் தன் மோசமான பேச்சையும், அரை வாங்கியதையும் அன்னையிடம் கூற முடியாது. அதற்காகவே இப்போது தப்பித்து ஓடுகிறான். இருப்பினும் ஏதோ ஒன்று சந்திராவிடம்…. யோசித்து பார்த்தவனுக்கு அவளின் காதலும் ஏக்கமும் கலந்த பார்வை, அதோடு கழுத்தில் ‘எஸ்! அதைஎப்படி மிஸ் பண்ணேன்? அப்படின்னா அவ என்ன மட்டும்தான் கணவனா நினச்சுருக்களா? நான் ஏன் அவளை பேச விடல. எல்லாமே என் தப்புதான். உடனே அவளைப் பாக்கணும். மன்னிப்பு கேட்கணும். அவளால் என்னோட சூடு சொல் தாங்க முடியாது’ தவறை உணர்ந்தவன் இதோ சந்திராவின் கையை பிடித்து கொண்டிருந்தான் சாரா என்ற அழைப்புடன். அவளிடமிருந்து பதில் வருமா?
போ டா., .. போ டா… முட்டாப் பையன் மவனே…!
Ipovathu thonuche surya unaku vanthuta ava una tha ninachi engitu iruka ipo yosi pesurathuku munnadi yosikama ellam pesita varthai vituta
போடா முட்டாள்… பாவம் சந்திரா
Nice epi