அத்தியாயம்-21
Thank you for reading this post, don't forget to subscribe!இரவென்றால் ஆளுக்கொரு புறம் முதுகுகாட்டி படுத்துக்கொள்வது, அதிகாலை காருண்யா குளித்து முடித்து விளக்கேற்றி, பில்டர் காபி குடித்து, சமைத்து முடித்து பேக்கிங் செய்யவும், கிளை வேலையாக வாஷிங் மெஷினில் துணி துவைத்திருக்க, நிதானமாக காயபோட்டு அலுவலகம் செல்வதற்கு தயாராவாள்
ராவணன் எப்பவும் போல எழுந்து, குளித்து காருண்யா தரும் காபியை பருகி அலுவலக உடையோடு கிளம்பி இருவரும் சோர்ந்தே பேசியபடி சாப்பிட்டு, ஒன்றாக அலுவலகம் செல்வார்கள்.
அங்கே பக்கத்து பக்கத்து இருக்கை என்றாலும் ராவணன் அவன் வேலையில் காருண்யாவிற்கும் மற்றவர்களுக்கும் சலுகை தரமாட்டான்.
மதியம் அலுவலக நண்பர்களோடு சோர்ந்தே சாப்பிட்டு காருண்யாவிடமும் பேசுவான்.
மீண்டும் மாலை திரும்பும் நேரம் ராவணன் வண்டியோட்ட காருண்யா பின்னால் உட்கார்ந்து வருவாள்.
“காரு… சைக்கிளை ஓட்டுற பீல் கொடுக்குது” என்றவன், வண்டியை நீ ஒட்டு என்பது போல சாவியை தருவான்.
அவளும் இரண்டு மூன்று முறை அமர்ந்து ஓட்டுவாள். சில நேரம் பிடிமானத்திற்கு அவள் இடையை பிடிக்க, கைகள் பரபரக்கும். ஆனால் இன்னமும் நட்பு தாண்டி பழக அவன் மனமுமே தயாராகவில்லை. இப்படியாக வாழ்க்கை சென்றுக் கொண்டிருக்கும் தருவாயில், இரண்டாம் ஞாயிறு வந்தது.
“என்னங்க.. இன்னிக்கு என்ன காய்கறி சமைக்க?” என்று கேட்டு வந்தாள்.
“மட்டன் கறி வாங்குவோம்” என்று கூற, கையிலிருந்த கரண்டியை நழுவவிட்டாள்.
அதன்பின்னே ராவணன் “சாரி… ப்லோல.. சொல்லிட்டேன். கல்யாணமாகி மூன்று வாரமா நான்வெஜ் சுத்தமா சாப்பிடலை. அந்த ஆர்வத்துல கேட்டுட்டேன்.
உனக்கு எது வருமோ அதை செய். நாட் இன்ட்ரஸ்ட்” என்று கூறிவிட்டான்.
ராவணனை பொறுத்தவரை சனி ஞாயிறு நன்றாக தூங்கவேண்டிய நாள். எழுந்து அவனுக்கு பிடித்த அசைவ ஹோட்டலில் சாப்பிட செல்வான்.
காருண்யா சமைக்க ஆரம்பித்த பிறகு அசைவத்தை மறந்தே போனான்.
சாதாரணமாய் ‘என்ன பிடிக்குமோ சமைத்து வை காரு’ என்று கூறியிருந்தால் இரண்டு வகையான காய்கறியும் ரசம் மோர் குழம்பு என்று செய்து அசத்திருப்பாள்.
அசைவம் என்றதும் சற்று குழம்பிவிட்டாள். ஊரில் ராவணன் பக்கத்து வீடு என்பதால் ரோகிணி சிவராமன் அங்கிளிடம் ராவணனுக்காக அசைவத்தில் பலவிதமாக வாங்கி சமைத்து போடுவதை அறிவாள். தன்னை மணந்தப்பின் தனக்காக அசைவத்தை ஒதுக்கிவிட்டானா? என்று ஆச்சரியப்பட, அவளுக்குள் பரவசம் உண்டானது.
பாட்டி அமிர்தம் எல்லாம் நல்ல நாளில் ஈருயிர் ஓருடலா மாறணும், சாந்தி முகூர்த்தம் பார்த்து வச்ச நாளில் எல்லாம் முடியணும் என்று கூறிய நாட்களில் காருண்யாவுக்கு கண்கள் கலங்கியது.
சிவனேயென்று இருந்தவளிடம் மாப்பிள்ளை பார்ப்பதாக ஹரிஹரன் புகைப்படத்தை நீட்டினார்கள். போதாத குறைக்கு அவனோடு போனில் விருப்பு வெறுப்பை பேசியிருக்கின்றாள். நேரில் பார்க்காமல் போனில் பேசியதால் ஏதோ ஹரிஹரனும் எல்லை மீறி பேசியதில்லை. காருண்யாவும் ரத்தின சுருக்கமாய் கேட்டதற்கு பதில் பேசினாள்.
ஒருவேளை ஹரிஹரன் நேரில் பார்க்க வந்து எல்லை தாண்டிய பேச்சு பேசி அதன் பின் திருமணம் தடைப்பட்டிருந்தால் காருண்யா நிலை கவலைக்கிடம் தான்.
ஏதோ போனில் ஒரு அளவுக்குள் பேசியதால் ஹரிஹரனோடு நின்ற கல்யாணத்தால் பாதிக்கவில்லை. ஆனாலும் சட்டென தன் பால்ய சிநேகிதனை மணக்க கூறியதில், பெரிதும் ஆடிப்போனாள்.
அலுவலகத்தில் கல்யாண பத்திரிக்கை நீட்டும் வரை ஒரு மாதத்திற்கு மேல், யாரோ எவரோ என்றது போல கடந்து சென்ற நாட்களே அதிகம்.
கொஞ்சம் கொஞ்சமாய் பாட்டியின் பேச்சால் மூளை சலவை செய்யப்பட்டு, ரோகிணியோட பையன் ராவணன் நல்லவாளா இருப்பான். அவனோட சண்டை சச்சரவு இல்லாம வாழணும்’ என்ற கட்டளையோடு காருண்யா திருமணம் நிகழ்ந்தது.
அதுவுமில்லாமல் ஆம்பளையாண்ட மனசு கோணாம நடந்துக்கணும்’ என்ற வார்த்தையை திருமணத்திற்கு முன்னே பதிய வைத்துவிட்டார். அந்த எரிச்சலோடு தான் மணக்கோலத்தில் ராவணனோடு நிற்கவும் சிரிக்கவும் கூட கஷ்டப்பட்டாள்.
சாந்தி முகூர்த்தம் ஜாதகம் பார்த்து தள்ளி சென்றதில் அத்தனை சந்தோஷம். ஆனால் அதெல்லாம் சென்னை போனதும் நேரம் காலம் பார்த்து இணையுங்கள் என்று கூறிட, கட்டுக்கடங்காத கோபம் உருவானது.
ராவணன் என்ன தான் சிநேகிதனாகவும் பக்கத்து வீட்டில்பார்த்து பழகியவனாகவும், ஒரே அலுவலகத்தில் பக்கத்து பக்கத்தில் அமர்ந்து வேலை செய்த பொழுதும், தன்னை குழந்தை உடையில் அர்ப்பணிக்க சங்கோஷமாக நினைத்தாள்.
ராவணனாக கைப்பிடித்து இழுத்தால் வேறு வழியுமேது? என்று ஓரளவு எல்லா சடங்கிற்கும் தயாராக இருந்தாள்.
சொல்லப்போனால் ராவணன் மட்டும் அன்று சிவராமனிடம் பேசி அணைத்துவிட்டு, ‘எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் தேவை காரு. சடனா இந்த கல்யாணம் என்னை டிஸ்டர்ப் பண்ணுது. நாம நேரம் எடுத்துக்கலாம். இந்த முதலிரவு எல்லாம் வேண்டாம்.’ என்றதும் அத்தனை நிம்மதி.
சொன்னதை போலவே அவன் பாட்டிற்கு படுத்துக்கொண்டான்.
அவளிடம் ஹால்ல படுக்காத, என்றதோடு சரி. இந்த இடைப்பட்ட நாளில், நண்பர்களாகவே பழகுகின்றான். ஒரே வீட்டில் ஒரே அறையில், ஒரே மெத்தையில் இருந்தாலும், அவனுக்கு பழக காலம் தேவைப்பட்டதில் நிம்மதியானாள். ஓரளவு ஒரே வீட்டில் அறையில் மெத்தையில் நிம்மதியை உணர துவங்கினாள்.
அலுவலகத்தில் ரோஸ்லினுடன் காட்டும் தோழமை, ஷாஸ்டலில் ராகவியோடு தங்கும் தோழமை உணர்வை ராவணனிடம் அனுபவிக்க துவங்கினாள்.
அந்த உணர்வு அவளுக்குள் புதுவிதமான எண்ணங்களை தூவியது. அதுவும் தனக்காக ஒருவன் மாமிசம் சாப்பிடுவதை தவிர்த்திருக்க, அவனிடம் இன்னமும் நெருங்கி பழகுவதில் தயங்கவில்லை.
சில நேரம் ராவணன் தன்னை இயல்பை தாண்டி மனைவியாக காணும் நேரம், அவன் பார்வையில் தவிப்பையும் அறிந்துவிட்டாள்.
அவனாக முன்னெடுத்து வைக்காமல், அவளாக பேச அடுத்த அடியை எடுத்து வைக்க தான் பெரும் தயக்கம்.
ராவணனாக தன்னை நாடினால் மட்டும் மறுப்பது கடினமென்று புரிந்தது. பாட்டியின் அறிவுரையோ, அல்லது அவனை ராவணன் என்று அழைக்காமல், ‘ஏங்க’ ‘என்னங்க’ என்று கூப்பிட்ட நிமிடமோ, அல்லது திரும்பும் பக்கமெல்லாம் ராவணன் காருண்யா கணவன் மனைவி என்ற ரீதியில் பார்க்க மனதில் பதிந்த நினைப்போ, ஏதோவொன்று கணவனாக காண ஆரம்பித்திருந்தாள்.
இதே எண்ணத்தில் நளபாகத்தோடு சமைத்து வந்து வைத்தாள். பாலக்காயில் செய்த கிரேவி. பார்ப்பதற்கு மட்டன் குழம்பு போல தான் இருக்கும். சுவை சற்று முன்ன பின்ன வரும்.
வறுவல் பிடிக்குமோ என்று வாழைக்காய் வறுவல், மீன் துண்டு போல வெட்டி வறுத்து வைத்திருந்தாள். எல்லாம் பார்ப்பதற்கு சைவ உணவிலேயே பாதி நிறைவேற்றிய மகிழ்ச்சி.
யானை பசிக்கு சோளை பொறி’ என்பதாக தான் கொறித்து வைத்தான். நல்லா தான் இருக்கு காரு’ என்று பாராட்டினான்.
ஆனால் சத்தமில்லாமல் ‘சிக்கன் கபாப்’, முழுங்கி விட்டு வந்தான்.
அருகே வாடை வராமல் இருக்க மிண்ட் பிளேவரில் சூயிங்கம் வேறு. ஓரளவு முத்தமிடும் நெருக்கம் இல்லாததால் அப்படியொன்றும் வாடையில்லாமல் பார்த்துக்கொண்டான்.
அடுத்த நாள் அலுவலகம் செல்லும் நேரம் ஸ்கூட்டியில் சாவி போட்டு திருகியவன் ”பச் இந்த சைக்கிளை நீயே ஓட்டு” என்று சலித்து பின்னால் அமரும் முடிவுடன் நகர, காருண்யா ஸ்கூட்டியில் ராவணனை உட்கார வைத்து ஓட்டினாள்.
பாதி வழியில், அவள் கூந்தலின் சிகை கற்றை ராவணன் முகத்தில் படர, நுகர்ந்தவனுக்கு அவளை ரசிக்கும் ஆர்வம் மேலிட்டது.
அவள் காதில் தொங்கிய ஜிமிக்கி, கழுத்தில் அவன் கட்டிய மஞ்சள் கயிறு, கூடவே தங்க சங்கிலி, அவளது வழுவழுப்பான கன்னம், என்று ரசித்தவன் தன் இரு கரத்தையும் அவள் இடையில் போட, காருண்யா எதிர்பாராது சடன் பிரேக் போட்டாள்.
சடன் பிரேக் என்றதும் ராவணன் கைகள் மேலும் அழுத்தமாய் அவளது இடையில் அழுத்த, பதட்டமாய் திரும்பினாள்.
ராவணனின் முகமோ தேன் குடிக்கும் வண்டின் கிறக்கத்தில் கண்கள் மோகத்தில் திளைத்திருக்க, பின்னால் ஹாரன் சப்தத்தில் இடத்தை ஆராய்ந்தாள்.
ராவணனும் சித்தம் களைந்தவனாய், மாறினான். பின்னால் திரும்பி, சிக்னல் ரெட்ல தானே இருக்கு.” என்றான் முறைப்போடு. சிக்னல் கோட்டுக்கு முன் சில வண்டிகள் இருந்தாலும் காருண்யா வண்டிக்கு முன் சற்று இடைவெளியிருந்தது. அதற்கு தான் பின்னால் இருந்த கூட்டம் முன்னே செல்ல ஹாரன் அடித்தது.
காருண்யா வண்டியை ஸ்டார்ட் செய்து, சிக்னல் பக்கமாக நிறுத்தினாள்.
33, 32, 31, என்று மெதுவாக எண்ணிக்கை குறைந்து, 3,2,1 என்று வரும் வரை ராவணன் இடையை விடாமல் பிடித்திருக்க, அந்த முப்பது நிமிடம் காருண்யா படபடப்பாய் மாறினாள்.
வேர்த்து விறுவிறுத்து வண்டியை ஓரமாய் நிறுத்தினாள்.
“நீ.. நீங்க ஓட்டுங்கோ” என்று கூற, அவனோ மறுக்க பார்த்தான். ஆனால் அவளது அச்சத்தில் வாங்கிக் கொண்டான்.
மனசாட்சியோ ஸ்பேஸ் வேண்டும்னு பெரிய புடுங்கி கணக்கா பேசிட்டு இடுப்பை பிடிச்சா’ என்று தன்னயே திட்டிக்கெண்டான்.
நேராக அலுவலகம் வந்தவன், ஸ்கூட்டியை எதிரி போல பார்த்தான். என் உசரத்துக்கு இதெல்லாம் செட்டாகுமா?’ என்று நடக்க, அவன் அலுவலகம் விட்டதும் ரோஸ்லினை கண்டு அவளோடு பேசியபடி நழுவியிருநந்தாள் காருண்யா.
அதன்பின் ராவணன் கொஞ்சம் மனதில் குழப்பமாய் தான் திரிந்தான்.
காருண்யாவை அடிக்கடி பார்வையிட்டவன், வேலையில் கவனச்சிதறல் அடைந்தான்.
பிரேக் டைம் எழுந்து கேண்டீன் பக்கம் வந்து டீ வாங்கி பருகினான்.
ரோஸ்லின் அடிக்கடி ”என்னப்பா உன் ஆளு டென்ஷனா சுத்தறான்” என்று கேட்டு இம்சிக்க, காருண்யாவோ ‘இங்கே நானே டென்ஷன்ல தான் இருக்கேன். இவ வேற’ என்று சலிக்க, “ஏய்.. உனக்கென்ன ஆச்சு. நீயும் ஒரு மாதிரி இருக்க.” என்று கேட்டதும், “ஒன்னுமில்லையே” என்று நழுவினாள்.
காருண்யா எவ்வாறு உரைப்பாள், ராவணன் இடையை தீண்டியது இன்னமும் வெதுவெதுப்பாக தன் மேனியில் ஊர்ந்திட, பெண்ணவள் தவித்துக் கொண்டிருக்க, ராவணனிடமே வந்தாள்.
“டீ ஆறி பாலைடை விழுது. சூடா இருக்கறச்ச குடிச்சா தான் சுவை நாக்குல ஓட்டியின்டு இருக்கும்” என்றாள். ராவணன் அவளை பார்வையிட, “என்னாச்சு? ஒரு மாதிரி இருக்கேள். ரோஸ்லின் என்ன பிடிச்சு என்னாச்சுடின்னு கேட்டு இம்சிக்கறா” என்றதும் ராவணன் உட்கார கூறி இருக்கை முன் கையை நீட்டினான்.
அவளும் அமர, ”அன்னைக்கு ஸ்பேஸ் வேண்டுமின்னு கேட்டேன். இப்ப உன்னை சிநேகிதியா பார்க்க முடியலை. ரொம்ப டிஸ்டர்ப் பண்ணற காரு” என்றவன் எச்சிலை கூட்டி விழுங்கி, “என்னை தப்பா நினைக்காத. அன்னைக்கு நேரம் கேட்டதும் நான் தான். இன்னிக்கு மனசு சஞ்சலம் ஆகறதும் நான் தான். அதை உன்னிடம் சொல்லணும் இல்லையா?” என்று கேட்க, ஆமென்றோ இல்லையென்றோ தலையாட்ட முடியாமல் காருண்யா ஸ்தம்பித்தவளாக மாற, “உனக்கும் ஸ்பேஸ் போதுமென்று தோன்றினா உடனே சொல்லிடு” என்று எழுந்து சென்றான்.
காருண்யா அவன் செல்வதை கூட கவனிக்காமல் தலை குனிந்திருந்தாள். ராவணன் கேண்டீனில் இருக்கும் பையனிடம் காருண்யாவுக்கு டீ கொடுக்க சமிக்ஜை செய்து செல்ல, சில வினாடியில் டீ வந்து சேர்ந்தது.
“நான் ஆர்டர் பண்ணலையே” என்றாள்.
“ராவணன் அண்ணா போறப்ப கொடுக்க சொன்னார் மேம்” என்று வைத்துவிட்டு சென்றான் கேண்டீன் பையன்.
‘நேக்கு அதிர்ச்சி தந்துட்டு, மனசை சமன்படுத்த டீயை வேற ஆர்டர் தந்துட்டு போயிருக்கா. இப்படியெல்லாம் பேசுவான்னு எதிர்பார்க்கலையே. இப்ப என்ன செய்ய?’ என்றவளுக்கு அவன் தீண்டிய அழுத்தம் இன்னமும் உணர்த்தியது.
அவன் தேகச்சூட்டும் தாப பார்வையும், மின்னலாய் காட்சிக்கு வந்துப் போக, டீயை ஒரே மடக்கில் குடித்து விட்டு புறப்பட்டாள்.
ராவணனிடமிருந்து தப்பிக்க இயலுமா? அவன் அருகே அமர வேண்டும் என்பது விதி இயற்றப்பட்டு வந்து சேர்ந்தவனாயிற்றே.
ராவணனை பார்த்தும் பாராததும் போல அமர்ந்து வேலையில் கவனம் செலுத்த, ராவணனோ மென்முறுவலோடு அவளை கவனித்து தன் பணியில் கவனம் செலுத்த துவங்கினான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 aha eppdiyo feelings vandhachu koodiya seekirama love um start ayidum😍🥰 adei raavana nee mattum chicken saptadhu avaluku therinjidhu avlo dhan😂
Nice epdi sis… Mella mella maarum manam nilayaanadhu nu azhaga kaamikareenga.. avalum maarara avanum maararan.. fulfilling epdi sis
Super super. Ravana really a good husband. He ask karru opinion. Its very good. He didn’t take advantage. Karru you too accept him as husband. Awesome narration sis.
👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Ada paavi side gapla chicken ah.. konruva therinja.. unna paathalum paavama than eruku.. neeyavathu pattunu pottu odachiye
ஐயங்காரு வீட்டு அழகே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 21)
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது… அம்புட்டுத்தான்.
ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆற பொறுக்கலையான்ங்கிற
பழமொழியெல்லாம் இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் சரி வராது. அதைத்தான் சிம்பாலிக்கா காரு கிட்ட சொல்லிட்டு போறான் நம்ம ராவணன்… காருக்கு இது புரியுமோ…? புரிஞ்சா சரி.
😀😀😀
CRVS (or) CRVS 2797
❤️❤️❤️ pavam Ravana nonveg sapatama thavikuran iva veliya poi saptukonga nu solurala paru 😤
Story samma entrastinka erukku super Ravanan manasu puriyyma entha Karu kku
Adai Ennada நடக்குது
Super😍
Super super super super super super super super super super super super super ❣️❣️❣️😍😍😍
Ravanan next move aagittaan..maami yenna panna porel 😝😝😝😝
Intresting update 👍👍👍