Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-24

ஐயங்காரு வீட்டு அழகே-24

அத்தியாயம்-24

Thank you for reading this post, don't forget to subscribe!

    பூரிக்கு பதிலாக முத்தங்களை பரிமாறி கொண்ட ஜோடி, ஹாலிலிருந்து எந்த நொடியையோ தங்கள் பள்ளியறைக்கு மாறியிருந்தனர்.

  காருண்யா இதழ் தன் இதழில் சிக்கி கொண்டு அவன் வசமானப்பின், அவளை அள்ளி தூக்கி கொண்டு சென்றான் ராவணன்.

  அதன்பின் பூவை போல கையாள துவங்க, காருண்யா மறுக்கும் வாய்ப்பை மறந்துவிட்டாள்.
    
  இதோ அதிகாலை ராவணனின் வெற்று மார்பில் தலை வைத்து படுத்துக்கிடந்தாள். போனில் சுப்ரபாதம் பாடல் ஒலிக்க, கைக்கு வசதியாக போனை எடுத்து ராவணன் தான் அணைத்தான். காருண்யா இன்னமும் விழித்திறக்கவில்லை.

   ஆழ்ந்த உறக்கத்தில் களைப்பில் இருக்க, ராவணன் அலுவலகத்திற்கு விடுமுறை போடலாமா என்று யோசித்தான்.‌
   அவனுக்கு காருண்யாவின் மீது மோகம் குறையவில்லையே. மெதுவாக அவளது புஜத்தை வலிக்காமல் பல்லால் கடிக்க, “ராவணா” என்று அரை தூக்கத்தில் சிணுங்க, “நாழியாகுது… ஆபிஸுக்கு லேட்டாச்சு. முதல்லயே எழுப்ப மாட்டேளா’னு பிறகு என்னை சொல்லாத” என்று கூறினான்.

   காருண்யா அவன் பேசிய விதமும், சொன்ன விஷயமும் கேட்டு மெதுவாக எழுந்தாள்.

கடிகாரத்தை பார்த்து, “அச்சோ.. டிபன் செய்யலை… பிரேக்பஸ்ட் செய்யலை….” என்றவள் அடிவயிற்றில் சுருக்கென்ற வலியில் சுணங்கினாள்.

ராவணனோ “எனக்கு இந்த பிரேக்பஸ்ட் போதும்” என்று அவளது நெற்றியில் கைவைத்து மூக்கு உதடு என்று பயணம் செய்ய, காருண்யா அவசரமாய் தன் அலங்கோல நிலையில், போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டாள்.

  அவளது பதட்டத்தை ரசித்தவனாக, “ஆபிஸுக்கு லீவு அப்ளை பண்ணிடலாமா? உனக்கு கஷ்டமாயிருக்கலாம்” என்று அவள் முகம் சுணங்கியதை கவனித்தவனாக, அவனது ஷர்ட்டை தேடி கேட்டான்.

அவனது மேற்சட்டை நேற்று அவசரமாய் கழட்டி, எங்கோ வீசியெறிய, கைக்கு கிடைக்காமல் போனது.
  அவனை பார்வையிட தயங்கிய காருண்யா, “இல்லை.. ஆபிஸ்ல பிராஜக்ட் கொடுத்தப்பவே லீவு போடாதேள்னு நீங்களும் ஜவஹரும் சொன்னிங்களே. நான் ஓகே தான்
ஆபிஸ் போகலாம்‌” என்றாள் சமாளித்தவளாக.

  “சரி குளிச்சிட்டு வா. பால் சாண்ட்விச் மட்டும் செய்துடலாம். ஆப்டர்நூன் கேண்டீன்ல பார்த்துக்கலாம்” என்றதும், அவனை காணாமல் தலையை ஆட்டினாள்‌.

   அடுத்தடுத்து ராவணன் பல் விலக்க காருண்யா குளிக்க ஓடியிருந்தாள்.
 
   கழுத்துப்பகுதியும் உடலிலும் ராவணனின் புதர் தாடி புண்ணியத்தில், ஆங்காங்கே அவள் மேனியில் சிவப்பு தடிமன் காணப்பட்டது. நல்ல வேளை எதுவுமே வெளிபார்வைக்கு தெரியாமல் போக, நிம்மதியுற்றாள்.
 
  குளித்து முடித்து வந்ததும், வீட்டை சுத்தம் செய்தாள். நேற்றிரவு செய்த பூரி சென்னா எல்லாம் பாதி சாப்பிட்ட தட்டில் அப்படியே சிங்கிள் கிடந்தது.

   எச்சி கையோடு இரவு தூங்க சென்றது காருண்யாவுக்கு அப்பொழுது தான் நினைவு வந்தது.

  குருமா குழம்பு கெட்டுப் போயிருந்தது. நல்லவேளை அதிகமாக மீந்துப்போகவில்லை. டைனிங் டேபிளில் இருந்த தட்டை எல்லாம் சிங்கிள் ராவணன் எடுத்து போட்டது புரிய, அறையை காணும் நேரம் தலைதுவட்டியபடி அவள் தேடுதலை கவனித்து வந்தான். கூடவே பனியன் அணிவதை கண்டாள். முதுகில் புஜத்தில் நகப்பூச்சு பூசிய விரலால் அவனை இறுக்கமாய் அணைத்திருக்க, அவள் உடலில் காணப்பட்டதை போல சிவப்பு நகக்கீறல் தழும்புகள்.

  லேசாக சங்கடமாய் மாற, “காரு.. சாண்ட்விச் பிடிக்கும்ல?” என்றான்.

  “பிடிக்கும்” என்றாள்‌ ஒற்றை வார்த்தையில்‌….

   அதன்பின் மடமடவென லேசான களைப்பில் வேலை செய்தாள். இருவரும் சாப்பிடும் நேரம் ராவணனோ, “சாந்தி முகூர்த்தம் நேரம் குறிச்சப்ப, எதுவும் நமக்குள்ள தோணலை. பட் நேத்து பிளான் போட்டு எல்லாம் உன்னை தூக்கிட்டு போகலை. நமக்குள்ள இயல்பான கெமிஸ்ட்ரி பாண்டிங் நல்லாயிருந்தது. சடனா நடந்துடுச்சு.” என்றான்.‌

  ராவணன் நேற்றைய இரவை பற்றி பேசவும் சாண்ட்விச்சில் பாதி கடித்து தடுமாற, தக்காளி ஸ்லைஸ் தனியாக விழுந்தது.

“ஏ பெட்டர் ஆஃப். என்னை பிடிச்சிருக்கா?” என்றவன் தக்காளியை எடுத்து விழுங்க, “ம்ம்… பிடிச்சிருக்கு.” என்றாள் காருண்யா. அவள் முகத்தில் அத்தனை பிரகாசத்தை கண்டவன், சடுதியில் இதழ் முத்தமழையை பொழிந்தான்.

  சிறிது நேரம் கழித்து விடுவிக்க, வெட்கத்தோடு மூச்சு வாங்கினாள்.

  “பைத்தியம் பிடிக்குது… லீவ் போட்டுட்டு உன்‌ மடிலயே விழுந்து கிடக்கலாமானு இருக்கு” என்றான்.‌

  “அசடாட்டும் பேசாதேள். நீங்க தான் நம்ம பிராஜக்டுக்கு டீம் லீடரா வழிநடத்தறவா. பிறவு ஜவஹர் கேள்வி எழுப்புவார். நான் சமாளிச்சிடுவேன். கிளம்புங்கோ” என்று அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளினாள்.

  அவள் கையை பிடித்து, உள்ளங்கையில் முத்தமிட்டான்.

“அச்சோ… போதும்… நான் ஸ்னானம் பண்ணின்டேன். சும்மா சும்மா என்னை தீண்டாதேள்” என்று வெட்கத்துடன் கூற, “மேடம் அடிக்கடி ஸ்னானம் பண்ண தயாராகுங்க” என்றவன் கடிகாரத்தை பார்த்து நேரமானதாக உரைத்திட, மின்னலாய் இருவரும் புறப்பட்டனர்.‌

  ராவணன் பைக்கில் பின்னால் அமர்ந்தவள், தலைக்கு குளித்திருக்க காற்றில் முடிபறந்தது.

  “காரு… முன்ன தான் பிரெண்ட் கேப் விட்டு உட்காருவ. இப்பவும் ஒன்சைட் போட்டு எட்டியிருந்தா எப்படி.” என்றான்.
 
  “மேல் வலிக்குண்ணா… வேண்டுமின்னா கட்டிக்கறேன்” என்று தோளில் கை வைத்தாள்.

“இதான் கட்டிக்கிறதா அங்கப்பாரு” என்று முன்னேயிருந்த ஜோடியை காட்டினான்.

  காற்றுப்புகா வண்ணம் முன்ன இளஞ்ஜோடி அணைத்தபடி சென்றனர்.

“ஆசை தோசை அவாளுக்கு வீட்ல தோப்பனார் நினைப்பு இல்லாம இருக்கலாம். நேக்கு எங்கப்பா பாட்டி பார்த்தா என்ன சொல்வா. இதெல்லாம் நேக்கு சரிப்பட்டு வராது.” என்று மறுத்தாள்.

  “ஸப்பா… சின்ன வயசுல நீ இப்படியில்லை தெரியுமா‌?” என்று பேசியப்படி அலுவலகம் வந்திருந்தனர்.

  பைக் நிறுத்தி அவன் வரும் வரை காத்திருந்து சேர்ந்தே லிப்டில் பயணித்தனர்.

   “ஆமா ஏன் பொய் சொன்ன?” என்று கேட்டான்.
  என்ன பொய்?” என்று எதிர் கேள்வி கேட்க, “சைக்கிள் ஓட்டறச்ச விழுந்து வாறி தழும்பு வந்துச்சானு கேட்டேன். இல்லையேனு அன்னிக்கு சொன்ன. ஆனா நேத்து பார்த்தப்ப முட்டில தழும்பு இருந்ததே.” என்று கேட்டான்‌.

  “அப்ப உங்களிடம் சொல்ல பிடிக்கலை. அதனால் அந்த பதில் சொன்னேன். இப்ப போய் நேத்து நடந்ததையே பேசறேளே. நேக்கு இதே பேசினா வேலை ஓடாது. செத்த சும்மாயிருக்கோ” என்றாள்‌.

  லிப்டில் கதவு திறக்க ரோஸ்லின் நின்றிருக்க, ராவணன் காருண்யா பேசி சிரித்து வருவதை எட்டாவது அதிசயமாக பார்வையிட்டாள்.
 
   ரோஸ்லின் என்றதும், ராவணன் நாசூக்காய் கடந்துவிட்டான்.
 
   அதன்பின் காருண்யா ரோஸ்லினுடன் நடந்து கேபினில் அமர, வேலைகள் கழுத்தை நெறித்தது.

  அடிக்கடி ராவணன் அவளை கண்டு நெருங்கி பேசி கையை வேண்டுமென்றே பிடித்து இம்சை கூட்ட செய்தான்.

“தலைக்கு மேல அங்க சிசிடிவி இருக்கு. சும்மாயிருங்கோ” என்று உரிமையாய் அதட்டினாள்‌.

வேலையில் மற்ற ஆட்களும் சந்தேகம் கேட்டு அடிக்கடி வர, ராவணன் விளையாட்டை மூட்டைக்கட்டினான்.

  மதியம் வரை வேலையில் முழ்கிட, கேண்டீனில் வந்து நின்றார்கள்.

“என்ன சாப்பிடறேள்” என்று கேட்க, “நைட்டு பார்த்த வேலைக்கு மட்டன் பிரியாணி நெஞ்செலும்பு” என்றவன் காருண்யா முட்டைக்கண்ணில் முழிக்க, பேச்சை மாற்றும் விதமாக “தயிர் சாதமோ.. சாம்பார் சாதமோ.. வாங்கு” என்றான் சிரித்தான்.

  இரண்டையும் மறுத்துவிட்டு புலாவ் வாங்கி வந்து நீட்டினாள். “காய்கறி நெய் முந்திரி பாதம் போட்டு சூடா இருக்கு. இதுவும் சத்தானது தான் சாப்பிடுங்கோ” என்று கொடுக்க, ‘சூடாறிட்டா வறட்சியா போகும். இதுக்கு புளியோதரை தயிர் சாதமே பெட்டர்‌.’ என்று எண்ணியவன் எந்த வாதமும் செய்யாமல் சுவைத்தான்.

  மாலையில் புறப்படும் போது ராவணன் ஏகக்குஷியில் புறப்பட, காருண்யா அவன் சந்தோஷத்தின் சாராம்சம் புரிந்து நேசத்துடன் தோளைப்பற்றி வந்தாள்.

  கதவு திறந்து அடுத்த நிமிடம் தாமதம் செய்யாமல் முத்தகவிதை இயற்ற முயல, “அச்சோ… நெரிசலில் கசகசன்னு தூசியா இருக்கேன். குளிக்கணும். செத்த விடுங்கோ” என்று விடுபட போராட, அவளை மேற்கெண்டு பேசவிடாமல் கூடலில் கலந்து, மெத்தையில் ஓய்ந்து, முடிக்க, “நேக்கு ரொம்ப பசிக்கு. என்னால சமைக்க முடியாது. உங்களால் தான் நேக்கு இந்த வலி. போய் ஐயங்கார் பவன்ல மசாலா தோசை வாங்கிட்டு வாங்கோ” என்று கூற, “ஐயங்கார் பவனா… பார்டா… இதெல்லாம் கவனிச்சு வச்சியிருக்க. உடுப்பி ஹோட்டல்ல வாங்க கூடாதா.” என்றிட, “பசி பிராணத்தை வாங்குது. விளையாடிண்டு இருக்கேள்.” என்றதும், “குளிச்சிட்டு ராவணன் வாங்கிட்டு வந்துட்டியாடானு கேளு. அதுக்கு முன்ன கண்ணெதிர்ல நிற்பேன்” என்று சட்டை மாட்டிவிட்டு சென்றான்.‌

  காருண்யா நன்றாக குளித்து முடித்து தும்மல் வர, பாட்டியிடம் பேசினாள்.

  “ஏன்டி தும்மற?” என்று கேட்க “ஒரே தூசி பாட்டி, தலைக்கு ஊத்தினேன்” என்று சமாளிக்க, “தலைக்கு ஊத்தினியா? ஆமா… இந்த முறை வீட்டுக்கு தூரமானியா?” என்று விசாரித்தார்.

  “ம்ம்… அதெல்லாம் ஒரு வாரம் முன்னவோ முடிந்துடுச்சு பாட்டி.” என்றாள்.

  “ம்கூம்… சந்தோஷமா சொல்லறியே. என்ன பொண்ணோ.‌. அப்பறம் சொல்ல மறந்துட்டேன். எப்பவேண்டுமென்றாலும் ரோகிணியும் நானும் உங்காத்துக்கு வருவோம். கல்யாணமாகி இன்னமும் உனக்கு தாலி பிரிச்சு கோர்க்கலையோனோ. அதை நல்ல நாளும் அதுவுமா செய்திடணும்னு பேசியிருக்கோம். உன் ஆம்பளையாண்டனிடம் சொல்லிடு. அப்பறம்… லீவு கிடைக்கலைன்னோ முன்கூட்டியே சொல்லலைன்னோ பேசப்போறார்.” என்றார்.

“அய்யோ பாட்டி.. அவர் அப்படி எதுவும் சொல்ல மாட்டார். நீங்க எப்பன்னாலும் வாங்கோ. ரோகிணி மாமி கூட தானே வருவேள். அப்படின்னா ரோகிணி மாமியே அவரிடம் சொல்லி வைச்சிருக்கலாம்.” என்று கூற, “சரிடிம்மா… உடம்பை பார்த்துக்கோ. நேக்கு மேலுக்கு முடியலை. அங்க வர்றதுக்குள் உடலை சரிப்பண்ணி வரணும்‌.” என்று சுணங்க, ராவணன் வந்துவிட்டதாக பைக் சத்தம் கேட்டது.

”சரி பாட்டி… உடம்பை கவனிங்கோ” என்று அணைத்துவிட்டு அவனை காண ஓடினாள்.

“காரு… அம்மா போன் பண்ணினாங்க. நெக்ஸ்ட் வீக் வந்தா வருவாங்களாம். ஏதோ தாலி பிரிச்சி கோர்க்கணும்னு உங்க பாட்டி சொன்னாங்களாம்” என்று கூற, “ஆமா பாட்டி இப்ப தான் போன்ல என்னிடமும் சொன்னா.” என்று பேசி பொட்டலத்தை பிரித்தாள்.

“உங்களுக்கு வாங்கிக்கலை.” என்று கேட்க, “ஆஹ்… நான் சாப்பிட்டு வந்துட்டேன். மசாலா தோசை லேட்டாச்சு. அதனால் இட்லி சாப்பிட்டு உனக்கு வாங்கிட்டு வந்தேன்.
  நீ சாப்பிடு.. நான் குளிச்சிட்டு தயாரா வர்றேன்.” என்று கண்சிமிட்ட, அவன் கூறியதன் அர்த்தம் புரிந்து புன்னகைத்தாள்.

     -தொடரும்.

12 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-24”

  1. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 24)

    அடப்பாவி…! அவளுக்கு மட்டும் ஐயங்கார் பவன்ல மசால் தோசை கொடுத்துட்டு, இவன் மட்டும் சிக்கன் பப் மட்டன் எலும்பு சூப் குடிச்சிட்டு வந்துட்டானோ…?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *