Skip to content
Home » காதலின் காலடிச் சுவடுகள்-19 (முடிவுற்றது)

காதலின் காலடிச் சுவடுகள்-19 (முடிவுற்றது)

காதலின் காலடிச் சுவடுகள் 19

அவர் சென்றதும் கல்பனா செல்லாமல் நிற்க….

” உங்களுக்கு என்ன அதான் ரெடி செய்து கூட்டிட்டு வரேன் சொல்லிடேன் இல்ல போங்க போய் வேலையை பாருங்க “….

” இல்ல ரெடி செய்யும் போது யாருக்காவது சொல்லிட்டா”??? அதான் “என்ன அப்படி தான் யோசித்து வைத்து இருந்தீங்க போல கரெக்டா சொல்லிட்டானா”??? கல்பனா சிரிப்பு சத்தம் அறையில் கொடூரமாக கேட்டது….

” அது எல்லாம் யார்கிட்டயும் சொல்ல மாட்டோம் போங்க”…

“எப்படி நம்புவது… அது சரி போன் இருந்தா தான் சொல்ல முடியும்” என்று போனை எடுத்துக் கொண்டு ரூம் வாசல் வரை சென்று ” அப்புறம் இன்னொரு தகவல் தப்பி ஓடிடலாம் நினைக்க வேண்டாம்.. வீட்ட சுற்றி காவலுக்கு ஆள் இருக்காங்க”… மொத்த வழியையும் அடைத்து விட்டு சென்றாள்….

அவள் போனதும் கதவை அடைத்து விட்டு மதுவை தொட… தந்தை கொடுத்த அதிர்ச்சி அடி இரண்டிலிருந்து மீண்டு கவியை கட்டிக் கொண்டு அழுதாள்…

” கவலை படாத மது நீங்க பேசிட்டு இருக்கும் போதே நான் புகழுக்கு தகவல் சொல்லிட்டேன் ” கவி கூற

” அவன் என்ன செய்ய முடியும் கவி???? மாமா ஊரில் இல்லையே” என்று அழுத மதுவை தேற்ற முடியவில்லை…

“மது இங்க பார் கடவுள் மேல பாரத்தை போட்டு விட்டு நாம கிளம்புவோம்.. என்ற கவியை பார்க்க” பயப்படாதே மது என்னோட உயிர கொடுத்து கூட இந்த கல்யாணத்தை நிறுத்த விடுவேன் நம்பு….
மது எனக்கொரு சந்தேகம்.. ” என்ன” என்பது போல் மது பார்க்க ” மாப்பிள்ளை யாரு??? இவ்வளவு சீக்கிரம் யாரு கிடைத்து இருப்பான் … உங்க சித்தி மேல நம்பிக்கை இல்லை எனக்கு “…. விரக்தி சிரிப்பொன்றை உதிர்த்த மது எதுவும் பேசவில்லை… பொம்மை போல் தயார் ஆனாள்…. அரைமணி நேரம் கழித்து வந்து கதவு தட்டும் சத்தத்தில் யார் என்று கவி திறந்து பார்க்க மகேந்திரன் நின்று இருந்தான்….. அவனை பாத்தவுடன் ஆத்திரமாக மது” இப்ப உனக்கு சந்தோஷம் தானே… என்னோட வாழ்க்கையை எல்லாரும் சேர்ந்து சீரழிச்சிட்டிங்க இல்ல… நீங்க நல்லா இருங்க மாப்பிள்ளை எவனா இருந்தாலும் சரி அவன் கட்டுற தாலி என் கழுத்தில் கண்டிப்பாக ஏறாது”…

“மது நீ எப்படியாவது தப்பித்து போய்டு “… என்று சொன்ன மகியை வினோத ஜந்துவை போல் பார்த்து வைத்தால் கவி….

” லூசா நீ வீட்ட சுத்தி ஆளுங்க இருக்காங்க எப்படி போக முடியும் … சரி புதுசா இந்த ஞானோதயம் எப்படி”??? கவி கேட்க… தலை குனிந்தான் மகேந்திரன்….

“என்னனு சொல் மகி”…

” மாப்பிள்ளை “

“மாப்பிள்ளை யாரு??? கண்களை இடுக்கி கவி கேட்க”….

” ரஞ்சித் “

“என்ன”??????

” ஆமா வேற யாரவது இருந்தா கூட சரி சொல்லி இருப்பேன்… ரஞ்சித் பத்தி எனக்கு தெரியும் ” …என்று தலையை குனிந்து கொண்டு கூறினான்….

” இப்ப என்ன செய்ய மது…”???

” கிளம்பி போகலாம் “…..

” மது விளையாட்டு காரியம் இல்லை இது ” தயவு செய்து தப்பி ஓடி போய்டு “……

” இல்லை மகி எனக்கு என்னோட மாமா மேல நம்பிக்கை இருக்கு “…. கண்டிப்பா வருவாங்க …. வா போகலாம்… மது முன்னே செல்ல மற்ற இருவரும் அவளை தொடர்ந்தனர்….

கோவில் செல்ல மணமேடை அந்த நேரத்திலும் தயாராக இருந்தது….
முன்பே ஆயத்தமாக மதுவிற்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான்.. இப்படி ஒரு நாளுக்காக இவர்கள் காத்திருந்து தன் வேலையை காட்டி விட்டார்கள்…..

மதுவின் மனது முழுவதும் ரிஷியின் ஜெபமே… ” எப்படியாவது வந்து காப்பாத்திடு… இல்லையென்றால் உன்னோட லட்டுவ உயிரோட பார்க்க முடியாது…. மனதிற்குள் லட்சம் தடவையாவது சொல்லி இருப்பாள்….

மகேந்திரன் நிறைய முறை கெஞ்சி பார்த்து விட்டான் தகப்பனிடம்….. அவர் விடாபிடியாக திருமணம் நடந்தே தீரும் என்று கூற… வேறு வழியின்றி வேந்தனுக்கு அழைத்தான்… அழைப்பு செல்லவில்லை……மகேந்திரன் யோசித்து வேந்தனின் தந்தை தன் தாய் மாமனாகிய ரங்கநாதனுக்கு அழைக்க….. அவர் மறுமுனையில் எடுத்தது…

” சொல்லு மகேந்திரா “

ஒரு நிமிடம் மகிக்கு பேச்சே வரவில்லை… ஒருவாறு தன்னை சமாதான படுத்தி கொண்டு குரலை சீர் செய்து… “மாமா மதுவை காப்பாற்ற வேண்டும்.. விரைவாக ஒரு கோவில் பெயரை சொல்லி அங்கு வர சொன்னான்….

” மகேந்திரா என்ன நடந்தது… கெட்ட கனவு ஏதாவதா”… என்று நேரத்தை பார்த்து விட்டு பேச……

“அய்யோ மாமா பேச நேரமில்லை.. மதுவிற்கு கல்யாணம்… வேந்தனுக்கு கால் பண்ண ரீச் ஆகல “… என்று கூற அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தார்…

” சரி நான் கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன் பார்த்துக்கோ…. என்று கூறிவிட்டு தன் தம்பி மற்றும் இன்னொரு
தங்கையை அழைத்து விஷயம் சொல்ல அனைவரும் கோவிலுக்கு புறப்பட்டனர்… போகும் வழி எங்கிலும் வேந்தன் மற்றும் அருணுக்கு அழைக்க நாட் ரீச் என்றே வந்ததது…. அதற்குள் வேலம்மாள் பாட்டி ஊரை கூட்டி ஒப்பாரி வைக்க தொடங்கிவிட்டார்…..

” அய்யோ என்னோட பேரனுக்கு என்ன பதில் சொல்லுவேன்…. பாவி இப்ப பார்த்தா வெளியூர் போகணும்… அந்த சோலி கழுதைய வேற ஒருநாள் பார்த்துக்க கூடாதா???

” அம்மா வாய மூடு அமைதியா வர மாதிரி இருந்தா வா… இல்லையா வீட்டிலேயே இரு ” என்று ரங்கநாதன் சத்தம் போட…. மெதுவாக திட்டிக் கொண்டே வந்தார்….

கோயில் அருகில் செல்ல…

” அண்ண இப்ப வேந்தனுக்கு கால் செய்… போகுதா பார்ப்போம்”.. காசி ராஜன் கூற…

தலையை ஆட்டி விட்டு வேந்தனுக்கு அழைக்க கடைசி நொடியில் அழைப்பு ஏற்க பட்டு ” அப்பா நான் கோயில் கிட்ட நெருங்கிட்டோம்… நீங்க வாங்க என்று கூறி கட் செய்தான்”…

இவர்கள் போவதற்கும் மதுவின் அப்பா அரி சந்திரனை அடித்து பிரட்டி எடுத்துக் கொண்டு இருந்தான் வேந்தன்….

” வேந்தா என்ன இருந்தாலும் ஒரு பெரிய மனிதனை அடிப்பது தப்புப்பா”…. என்று ரங்கநாதன் கூற….

“யாரு இவனா பெரிய மனுஷன்.. அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமாபா இவனுக்கு”…… ” நம்ப குடும்பம் இப்படி நாசமா போனதுக்கு, தாத்தா இறந்தது, அத்தை இப்படி ஆனது.. அப்பறம் நம்ப ரம்யா குட்டி செத்தது எல்லாம் இவனால் தான் பா….

” என்ன வேந்தா சொல்லிட்டு இருக்க “???

” ஆமாம் பா…. நம்ப ரம்யா எப்படி செத்தா தெரியும் இல்ல அதுக்கு காரணம் இவன்தான் பா”…. என்று கூறி கணநேரத்தில் அனைவரின் மனநிலையும் மாறிவிட்டது….

10 ஆண்டுகளுக்கு முன்பு…..

ரம்யா, வேந்தா எழுந்துருங்க ஸ்கூலுக்கு நேரம் ஆச்சு… லேட்டா போனா டீச்சர் திட்டுவாங்க” … என்று கலை அழைக்க.. இருவரும் எழுந்து ரெடி செய்து கொண்டு வந்தனர்…..

“அம்மா எத்தனை தடவை சொல்றது நான் போறது காலேஜ் ஸ்கூல் இல்ல “….

” அடேய் அண்ணா அம்மா நீ காலேஜ் போகிறத ஏத்துக்கவே இல்ல” என்று ரம்யா வாய் பொத்தி சிரிக்க…. ரம்யா தலையில் வேந்தன் வலிக்கும் படி கொட்டினான்….

” அம்மா அண்ணன் என்ன அடிக்கறான் ” என்று கத்த கலைவாணி வருவதற்குள் அவளின் வாயை பொத்தி அம்மா கிட்ட சொல்லாத… உனக்கு சாக்லெட் வாங்கி தரேன் என்று தங்கையை தாஜா செய்தான்….. அதற்குள் மது, கவி இருவரும் வீட்டிற்கு வர மூவரும் பள்ளி சென்றனர்… மகி, வேந்தன், அருண், புகழ் நால்வரும் காலேஜ் செல்ல… அருண், வேந்தன் மட்டுமே லாயராக விருப்பம் தெரிவித்து லா காலேஜ் சேர்ந்தனர்….. நாட்கள் அதன் போக்கில் நன்றாக சென்று கொண்டிருந்த சமயம் அரி சந்திரனும், சாரதா வும், ரங்கராஜனை பார்க்க வரும் வரையில்….

அரி சந்திரன், சாரதா தம்பதியர் ரங்கராஜனை பார்க்க அவர்கள் இல்லத்திற்கு வந்தனர்….

அவர்கள் வரும் நேரம் வீட்டில் கலைவாணி , ரம்யா மட்டுமே இருந்தனர்….

” அண்ணி”…. என்று அழைத்து கொண்டே சாரதா வர….

” வாங்க அண்ண, வா சாரதா” …. என்று கலைவாணி அழைக்க….

“என்ன அண்ணி வீட்டில் யாரும் இல்லையா”…..

” ஆமாம்… சாரதா மாமாவும், அவரும் ஊர் பெரியவங்கள பார்க்க போய் இருக்காங்க… அத்தை பக்கத்து வீட்டு வளைகாப்பு போய் இருக்காங்க…. நானும் ரம்யாவும் மட்டும் தான் இருக்கோம்”….

” சரி அண்ணி ” என்று கூறி கொண்டே கலைவாணியுடன் சமையல் அறை சென்று விட்டார்……

ஹாலில் அரி சந்திரன் மட்டும் அமர்ந்து இருக்க ரம்யா அவள் அறையில் இருந்து வர….

“வாங்க மாமா, அத்தை எங்க”???

” என்னம்மா ரம்யா நல்லா இருக்கியா??? நல்லா படிச்சிட்டு இருக்கியா”??? என்று கேட்டாலும் அவரின் கண்கள் ரம்யாவை அத்து மீறி ரசித்தது…. 15 வயது குழந்தை தன் மகளுக்கு இந்த வயது தானே என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் வரம்பற்ற பார்வை பார்த்து வைத்தார்….

“நல்லா தான் மாமா படிக்கிறேன்..
மது வரலையா மாமா”.. என்று கேட்க

” ரம்யா இங்க வா பக்கத்தில் உட்காரு”….

ரம்யா அவரின் பக்கத்தில் அமர்ந்ததும் அவளின் தலையில் கைவைத்து , லேசாக தோள்பட்டை பிடித்து தன் கேவலமான வேலையை செய்து கொண்டு இருந்தார்….அவரின் தொடுகை ரம்யாவிற்கு எச்சரிக்கை உணர்வை தர
” படிக்கணும் நான் போறேன் ” என்று கூறி அறையில் அடைந்து கொண்டாள்…

ரங்கராஜன் வந்து இருவரும் பேசிவிட்டு வீட்டிற்கு போகும் வரையிலும் ரம்யா வரவில்லை….. இரண்டு நாட்கள் கழித்து மது ரம்யாவை வீட்டிற்கு அழைக்க…

” ரம்யா வீட்டிற்கு வாடி கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரலாம்”….

“இல்ல மது நான் வரல.. அப்புறம் இன்னொரு நாள் வரேன்”… என்ற ரம்யாவை வற்புறுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றாள்…..

” அப்பா, அம்மா ரம்யா வந்து இருக்கா!!!. நாங்க விளையாட போறோம்…..

“வா ரம்யா என்ன இப்ப எல்லாம் இந்த பக்கம் வர கூட இல்ல” என்று சாரதா கேட்க…

“இல்ல அத்தை வேலை நிறைய… படிக்க நிறைய இருக்கு அதான்.. என்று ஷோபாவில் அமர்ந்து இருந்த அரி சந்திரனை பார்த்து கொண்டே கூறினாள்….

இப்போது எல்லாம் அவரின் பேச்சும், நடத்தையும் சரி இல்லாதது போல் இருந்தது ரம்யாவிற்கு…. பார்க்கும் நேரத்தில் தவறாக பேசுவது, தவறாக தொடுவதும் அவளின் சந்தேகத்தை விதைத்து…. தன் உடல் அங்கங்களை வர்ணிப்பதும் தொடக்கூடாத இடங்களில் கை வைப்பது என்று அவரின் எல்லை மீறல்கள் அதிகமாக இருந்தது… வீட்டில் சொல்லி விட்டால் என்ன என்று யோசிக்க அதற்கு அவர் சொன்ன வார்த்தை குழந்தைக்கு பயத்தை விதைத்தது… “மது இருக்கா இல்ல “.. என்று கேட்க மதுவிடம் இப்படி நடந்து கொள்வாரோ??? என்ற பயம் அதிகரித்தது…..

யாரிடமும் சொல்லவும் முடியாமல் தன் கூட்டுக்குள் நத்தை போல் சுருக்கி கொண்டாள்… யாரவது கேட்டால் படிப்பை காரணம் கூறினாள்…..

இப்படி ஒரு நாள் வழியில் தந்தையின் காரை பார்த்த மது.. “அம்மா அப்பாவோட கார் வாங்க அதுல போகலாம்”… என்று தாயை அழைக்க…..

“அப்பா கார் இங்க ஏன் நிற்க போகுது மது”???

” இல்ல மா அது அப்பா கார் தான் ” என்று கூற….

“ஆமாம் இது உங்க அப்பாவோடது தான்… இந்த பாழடைந்த கட்டிடத்தில் அப்பா க்கு என்ன வேலை?? வா போய் பார்க்கலாம்… என்று கட்டிடம் நோக்கி செல்ல… அங்கு கண்ட காட்சியில் சாரதா விற்கு உயிர் துடிந்து அடங்கியது…. நான்கு பேர் சேர்ந்து ரம்யா நான்கு கயவர்களிடம் சீக்கிக் கொண்டு இருந்தாள்… அதில் ஒருவன் தன் கணவன் என்னும் போது சாரதா வின் நிலை…ஆம் அரி சந்திரன் ரம்யாவை கடத்தி குழந்தை என்றும் பாராமல் தன் கூட்டாளிகளுடன் பாலியல் பலாத்காரம் செய்ய.. தன் கணவனின் இந்த அயோக்கிய தனத்தை தெரியாமல் அண்ணன் மகளை பலி கொடுத்து விட்டதை எண்ணி உறைந்து நின்றாள்…

ரம்யாவின் அலறல் சத்தம் அந்த கட்டிடம் எங்கும் கேட்டது…..

” விட்டுடுங்க ப்ளீஸ் ” இந்த வார்த்தை மட்டுமே மதுவின் காதில் கேட்க…அவள் கண்ட கொடூரமான காட்சி நாளடைவில் அவளுக்கு கனவாகதோன்றியது….
மதுவிற்கு தந்தை உருவம் தெரியாமல் போனது அவளின் துரதிஷ்டம்….. அந்த குழந்தையை கொடூரமாக சிதைத்து உயிர் பிரிந்தும் வன்புணர்வில் ஈடுபட்டனர்…. ரம்யாவை ரோட்டில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்…. அதிர்ச்சியில சாரதா மயங்கி விழ மது என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டே நின்றாள்…

“அம்மா இங்க பாரும்மா… எழுந்து வாம்மா வீட்டுக்கு போலாம்” என்று கூறி பெருங்குரல் எடுத்து அழுது ஆரம்பிக்க….
அந்த வழியாக சென்றவர்கள் சாரதா வித்யாலயா ஹாஸ்பிட்டலில் சேர்த்து அரி சந்திரன் க்கு தகவல் தர அவர் டாக்டரிடம் பணம் கொடுத்து சாரதாவை மனநலம் சரியில்லாமல் செய்து விட்டார்…..

ஊரெங்கும் ரம்யாவை தேடிஒர் இடத்தில் ரம்யாவின் உயிரற்ற உடலை தான் கண்டெடுத்தனர்… ரங்கராஜன் குடும்பத்தினர்…. ரம்யாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதாக கூற ரங்கராஜன் உயிர் அந்நொடியே பிரிந்தது…… இந்த கலவரத்தில் அரி சந்திரன் மருத்துவரிடம் செய்ய சொன்ன வேலை சுலபமாக முடிந்தது…

சாரதா மயங்கி கிடந்த இடத்தை சொன்ன திலிருந்து சாரதா தன்னை கண்டு கொண்டது தெரிய அவளுக்கு மனநலம் பாதிக்க செய்யும் மருந்துகள் கொடுத்து அதன் வீரியம் அவருக்கு பக்கவாதம் வந்தது…. சாரதாவை கொண்டு ஒரு மாதத்தில் தாய் வீட்டில் விட்டு விட்டு கல்பனாவை திருமணம் செய்து கொண்டார்…. சொத்து கைவிட்டு போக கூடாது என்று இரு பிள்ளைகளை அவரே வளர்த்து வந்தார்……

இவை அனைத்தும் வேந்தன் கூறி முடிக்க வேலம்மாள் தலையில் அடித்து கொண்டு அழுதார்…

“உன்ன எங்களோட பிள்ளையா தான பார்த்தோம்… படு பாவி இப்படி பண்ணிட்டியே நீ நல்லா இருப்பியா”???? என்று சாபம் கொடுக்க….. அந்த இடத்தில் யாரையும் தேற்ற முடியவில்லை… யாருக்கு யார் ஆறுதல் தருவது என்று தெரியாமல் நின்றனர்..,

வேந்தன் கூறி முடித்ததும் யார் யாருக்கு ஆறுதல் கூற …

” வேந்தா இது உனக்கு எப்படிப்பா தெரியும் ” ….. என்று காசி ராஜன் கேட்க ..

” நான் இந்த மாதிரி கேஸ் தான சித்தப்பா எடுத்து நடத்திட்டு இருக்கேன் “…
அப்படி கண்டு பிடித்தது தான் இது… ஆனா இதுல இவர் சம்பந்தப்பட்டு இருப்பாரு நினைக்கவே இல்ல….. மத்த எல்லாரையும் முடிச்சிட்டேன்…. இவரும் இதோ இவர் பார்த்த மாப்பிள்ளை கூட்டு களவாணிங்க..

சொல்லிக் கொண்டு இருக்கும் போதே

“ஆஆஆ” என்ற அலறல் சத்தம் கேட்க…
மகேந்திரன் தன் தந்தையை கத்தியால் குத்தி இருந்தான்….

” எனக்கு ரம்யா ரொம்ப பிடிக்கும் பா.. நல்ல வேலைக்கு போய் அவள கல்யாணம் செய்துக்க கேட்கலாம் இருந்தேன்… மது வயசு தானப்பா அவளுக்கும்… உனக்கு எப்படி பா மனசு வந்தது.. சின்ன குழந்தையை போய் எப்படிப்பா???? உன்னோட வயசு என்ன??அந்த குட்டி பொண்ணோட வயசு என்ன???
அதுவும் நாலு பேர் சேர்ந்து.. ஏன் பா??? என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதான்…..

அங்கு போலீஸ் வர மகேந்திரனையும், ரஞ்சிதையும் அரெஸ்ட் செய்து கூட்டிச் செல்ல….

” என்னை மன்னித்து விடு வேந்தா…. இந்த ஆளு பேச்சு கேட்டு உங்கள எல்லாம் தப்பா நினைத்து விட்டேன் “…

” விடு மகி இப்பயாவது உனக்கு புரிந்ததே.. அது போதும் நான் உன்னை சீக்கிரம் வெளியே கொண்டு வந்துடுவேன்”…..

” வேந்தா எனக்கு ஒரு ஹெல்ப் செய்வியா”???

” சொல்லு”…

” நீ இப்பயே மதுவை கல்யாணம் செய்துக்கோ”…. வேந்தன் தந்தையை பார்க்க அவரும் சம்மதம் கூற
ரிஷி வேந்தன், மதுர யாழினி கல்யாணம் நடைபெற்றது…..

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு

“மது எங்க இருக்க”??? என்று கலைவாணி கேட்க….

” அவ எங்க இங்க இருக்க போறா??? புருஷன் கூட எங்க ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்காளோ??? என்று பெருமூச்சு விட்டாள் கவி….

கவியின் தலையில் கொட்டிய வேந்தன் உனக்கும் வேணா ரொமான்ஸ் பண்ணிக்கோ??? யார் வேண்டாம் சொன்னது….

” அப்படியே ரொமான்ஸ் பண்ணிட்டாலும்”……

அங்கு வந்த மகேந்திரன் “ஏன் டீ என்னோட ரொமான்ஸ் க்கு என்ன குறை”…..

” ஒரு குறையும் இல்லையே, ஒரு குறையும் இல்லை”…. அவள் சொன்ன தோரணையில் அனைவரும் சிரிக்க…. அங்கு கலகலப்பு நிறைந்தது…

மகேந்திரன் ஐந்து வருட தண்டனை காலம் முடிந்து முதல் வாரம் வீடு திரும்ப கவிக்கும், அவனுக்கும் திருமணம் முடித்து இரண்டு நாட்களே ஆனது…..

வேந்தனுக்கு நான்கு வயதில் ஒரு மகள் இருக்க.. அவள் தான் வீட்டின் இளவரசி…
வேலம்மாள் பாட்டி தான் வேந்தன் மகள் கயல்விழிக்கு முழுநேர காவல்….

வேந்தன், அருண் இருவரும் நம்பர் ஒன் லாயராக இருக்கின்றனர்….

தன் தங்கையின் நிலைக்கு காரணம் ஆனவர்களை தான் வேந்தன் கொலை செய்தது… அதற்கு சாட்சி இல்லை … அதனால் பிரச்சினை எதுவும் வரவில்லை…. சாரதாவை இப்போது மகேந்திரன் தான் பார்த்து கொள்கிறான்….

மதுவும் கவியும் பெண்கள் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கி பெண்களுக்கு நல்ல விஷயங்களை கொண்டு செல்கின்றனர்… குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச், தன்னை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்று சொல்லி கொடுத்து வருகின்றனர்…

நடு இரவில் தனியாக ஒரு பெண் செல்வதுதான் உண்மையான சுதந்திரம்…என்ற காலம் போய்…பெண் குழந்தைகள் வாசலில் எந்த பயமும் இல்லாமல் விளையாடுவதே சுதந்திரம் என்ற நிலை வந்து விட்டது….பெண் குழந்தைகளுக்கு குட் டச்,பேட் டச் சொல்லி கொடுத்து வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ ….அது போல் ஆண் குழந்தைகளுக்கு நல்லதை சொல்லி வளர்ப்பதும் முக்கியமானது… பெண் குழந்தைகளிடம் கண்ணியம் காப்பாற்ற சொல்லி கொடுப்பது பெற்றவர்கள் கடமை… என்று பள்ளி ஒன்றின் நிகழ்ச்சியில் மது பேசி முடிக்க அரங்கமே எழுந்து நின்று கை தட்டியது……

“நல்ல ஸ்பீச் லட்டும்மா”….

” இதுக்கு காரணம் நீங்க தான் மாமா”…..

“ஆரம்பிச்சுடாங்கடா” என்ற கவியின் புலம்பலை கேட்டு குடும்பம் மொத்தமும் சிரிப்பில் நிறைந்தது…..

முற்றும்…..

ஹப்பாடா கதை நல்ல படியாக முடித்து விட்டேன்… யாருக்காவது கதையில் ஏதாவது குறை இருந்தால் சொல்லவும்…
மத்த யார் பத்தியும் சொல்ல முடியல… சொன்னா இன்னும் அத்தியாயம் அதிகமாகும்…. அதனால் முடிந்தா வேற கதையில் இவங்களை சந்திப்போம்….

6 thoughts on “காதலின் காலடிச் சுவடுகள்-19 (முடிவுற்றது)”

  1. Kalidevi

    Nalla kathai nalla ending thrilling vachi last ena nadanthuchinu solli love family pen suthanthiram solli nalla mudivu . Congratulations

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *