அத்தியாயம் – 16
நள்ளிரவில் உடல் தூக்கிபோட நர்ஸ் டாக்டர்களை அழைக்க ஆறு பேர் கொண்ட குழு இஷானை நோக்கி ஓடினர்..
அவசரம் அவசரமாக மருத்துவம் செய்ய இரத்த அழுத்தம் அதிகமாகுவதும் குறைவதுமாக இருந்தது இஷானுக்கு வெளியே ஓடிவந்த ஒரு நர்ஸ் மருந்து சீட்டை ஜோனஸ்ஸிடம் நீட்டி “சார் உடனடியாக இந்த மருந்து வாங்கிட்டு வாங்க” என்று கூற அவன் ஓடினான் ஃபார்மஸி நோக்கி ஸ்டீவ் என்ன ஆனது என்று விசாரிக்க..
“டாக்டர் வருவாங்க பேசிக்கோங்க சார்” என்றுவிட்டு அந்த பெண் ஓடிவிட..
அவசரமாக ஆக்ஸிஜன் சிலிண்டர் கொண்டு வரப்பட்டது..போன வேகத்தில் ஜோனஸ் மருந்துடன் ஓடிவர வெளியே வந்த நர்ஸ் அவனிடமிருந்து மருந்தை பிடுங்கி கொண்டு ஓடினார்..
மருந்தை செலுத்தி ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தி உடம்பில் ஏகப்பட்ட ஒயருடன் இருந்தான் இஷான் நினைவின்றி..
ஆபரேஷன் செய்ததும் ஃபிட்ஸ் வரக்கூடாது வந்தால் நோயாளிக்கு ஆபத்து..இதயதுடிப்பை காட்டும் மானிட்டரும் சிறிது சிறிதாக குறைந்துகொண்டே வர அனைவருக்கும் பதட்டம் அதிகரித்தது..
எல்லோரும் வெளியே பதட்டத்தோடு நிற்க.. கயல் மட்டும் வெளியே இருந்து உள்ளே பார்க்கும் ட்ரான்ஸ்பரன்ட் கண்ணாடி மூலம் உள்ளே நடப்பதை பார்க்க தன்னவன் உயிருக்கு போராடுவதை பார்த்து துடித்தவள் ஏதோ தவறாக நடக்கப்போவதை உணர்ந்தவள் போல் கதவை திறந்துக்கொண்டு அவனிடம் ஓட நர்ஸ் அவளை பார்த்துவிட்டு வந்து தடுத்தனர்..
“மேடம் ஐசியுக்குள்ள யாரும் அலோவ்ட் இல்ல வெளியே போங்க” என்று கூறி அவளை இருவர் பிடித்துக்கொள்ள..
“என்ன விடுங்க நான் என் இஷான்கிட்ட போகணும் விடுங்க” என்று அவள் திமிர அங்கோ தன்னவனுக்கு ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தி இருக்க…
அவனது உடல் தூக்கி தூக்கி போட்டது..
இதயத்துடிப்பை காட்டும் இயந்திரம் ஜீரோவை காட்ட இஷானின் உடலும் அசையாமல் ஆனது..அதைக்கண்டு அப்படியே ஷாக் அடித்தது போல் நின்றாள் கயல்விழி..
டாக்டர்கள் ஷாக் கொடுத்து அவனது உயிரை மீட்ட போராட defribilator மூலம் மீண்டும் மீண்டும் ஷாக் கொடுக்க அனைத்தும் நடந்துகொண்டே இருக்க விழி மூடி மயங்கி சரிந்தாள் இஷானின் விழி..
அவளை பிடித்துநின்ற நர்ஸ்கள் அவளை தாங்கியபடி மேடம் மேடம் என்று கன்னத்தை தட்டி எழுப்ப அவளிடம் அசைவே இல்லை..
இஷானது உயிரை காப்பாற்ற இயலாமல் மருத்துவர்கள் திரும்ப.. இவளை கண்டு இவளுக்கு மருத்துவம் துவக்கினர்..
வெளியே வந்த ஜோனஸ்ஸின் தோழன்..அவனிடம் ‘இல்லை’ என்பது போல தலையசைக்க “நோ…” என்று அலறினான் ஜோனஸ்..
“இன்டர்னல் ப்ளீடிங் ஸ்டாப் ஆகலைடா அதிகமாகி அவருக்கு” என்று நிறுத்த ஓஓவென கதறிவிட்டான் ஜோனஸ்..
நடக்கப்போவதை முன்னமே அறிந்தவர் போல இருந்த ஸ்டீவ் வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தாலும் ஏதோ ஒரு எண்ணம் தன் மகன் பிழைத்துவிட மாட்டானா என்று ஆனால் அது நடக்கவில்லை என்ற அதிர்ச்சியில் மனமுடைந்து போனார்..
அவருக்குத் தெரியும் முன்னமே தன் மீராவிற்கு நடந்தது போல அதே ஆக்சிடெண்ட் அதே மண்டையில் அடி..தன் வாழ்வின் அஸ்திவாரமும் அந்தி சூரியன் போல அஸ்தமனமாகியது அவரை சுக்குநூறாய் உடைத்தது..
அதற்குள் இஷானின் உடலை ஒப்படைப்பதற்காக அவரிடம் கையெழுத்து வாங்க வந்தார் நர்ஸ்..
இவர்களை கண்ட இனியனும் மதுமிதாவும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர்..
தன்னால்தான் ஒரு உயிர் அதும் வேறு ஒருவர் செய்த பாவத்தை நேர் செய்ய வந்த நல்ல மனம் படைத்தவன் உயிர் பிரிந்ததில் குற்ற உணர்ச்சியில் மறுகினார் மதுமிதா..
இனியனோ தமையளும் தன்னைபற்றி எண்ணி இறந்துபோனாள் சொந்தம் என்று வந்தவனும் இப்படி வந்த மாத்திரத்திலேயே பிரிந்து போவான் என்று எதிர்பாராததால் நெஞ்சை அழுத்திக்கொண்டு அமர்ந்துவிட்டார்..
கெளதமிற்கு கடவுள்மேல் இருந்த நம்பிக்கையே போய்விட்டது.. மயங்கி விழுந்த கயல்விழி க்கு ஊசி போட்டு இருந்ததால் மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்க்க அது வேறு ஒரு அறை என்று விளங்க தான் எப்படி இங்கே வந்தோம் என்று யோசிக்க இஷானுக்கு ஷாக் கொடுத்தது நினைவு வர தனது கையிலிருந்த டிரிப்ஸ் இன்ஜெக்ஷனை பிடுங்கி வீசிவிட்டு எழுந்து ஓடினாள்..
அவள் அருகில் இருந்த நர்ஸ்
“மேடம் மேடம்”
என்று கத்திக்கொண்டே அவள் பின் ஓடிவர ஸ்டீவ் அருகில் ஓடியவள் ஆணி அடித்தது போல் சட்டென நின்றாள்..
வெள்ளைதுணி போர்த்தப்பட்டு இஷானின் உடல் ஸ்டீவ்விடம் ஒப்படைக்கப்பட்டது.. அதைக்கண்டவள் அப்படியே நின்றுவிட்டாள்..
அவளைக்கண்டு அவள் அருகில் சென்ற ஸ்டீவ்விடமும் கெளதமிடமும்..
“என் இஷான் என்னைவிட்டு போய்ட்டானா? செஞ்சு கொடுத்த சத்தியத்தை காப்பாத்தாம போய்ட்டானா? என்னை வேணாம்னு சொல்லிட்டு போய்ட்டானா? அவன் லவ்வ சொன்னப்பவே ஏத்துக்கிட்டு இருந்திருந்தா இந்நேரம் நல்லா இருந்து இருப்பான் இல்ல கெளதம்.. பழிவாங்க போறேன்னு சொல்லி நானே அவன கொன்னுட்டேன்ல..
அவன் நல்லவன்னு நீ அப்பவே சொன்ன நான்தான் கேட்கலல..அதான் என்னை வேணாம்னு போய்ட்டான்ல?”
என்று கேள்விகேட்க அவளை அழுகையோடு அணைத்துக்கொண்டான் கெளதம்.. மனமுடைந்து போன ஸ்டீவ் அவளது தலையை தடவ அவரது கையை தட்டிவிட்டவள்..
அவரை பார்த்து கோவமாக
“உங்களுக்கு அவன் செத்துடுவான்னு தெரியும் அதனால தானே என்னை பார்த்து அப்படி ஒரு வார்த்தை சொன்னீங்க? சொல்லுங்க சார் அதானே?” என்று கத்த
அவரோ ‘ஆமாம்’ என்பதை போல தலையசைத்தார் கண்ணீரோடு.. அதிர்ச்சியாய் பார்த்தவள்..
“ஏமாத்திட்டீங்கல்ல..அவன் காதலிக்கிறேன் உன்னை நீயே போனு சொன்னாக்கூட விட்டு போகமாட்டேன்னு சொல்லிட்டு அவன் என்னை ஏமாத்திட்டு போய்ட்டான்..நீங்க அவன் செத்துடுவான்னு தெரிஞ்சும் என்கிட்ட சொல்லாம ஏமாத்திட்டீங்கல்ல..” என்று அவள் கத்தினாள் ஆனால் அவள் கண்கள் கண்ணீரை சிந்தவில்லை..
அனைவரும் கண்ணீரோடு கையாளாகாத நிலையில் நின்றிருந்தனர்..
கெளதமோ..
“இல்லடி நீ டென்ஷன் ஆகாத..” என்று அவளை சமாதானம் செய்ய…
“சொல்லி இருக்கலாம்ல இதுதான் உண்மைனு சொல்லி இருந்தா இதைவிட வேற எங்கேயாவது அவனை கொண்டு போய் நான் காப்பாத்தி இருப்பேனே இப்படி என்னை விட்டு போய் இருக்கவிடமாட்டேனே..ஏன் சொல்லல அங்கிள்” என்று கேட்க..
அவளது அமைதி அவரை கூறுபோட்டது..
“இல்லம்மா.. ரிப்போர்ட் வெச்சு என் லண்டன் டாக்டர் ப்ரண்ட்ஸ் கிட்ட ஒப்பினியன் கேட்டேன் அவ..அவங்கதான்” என்று அவர் முடிக்கவில்லை..
“அவங்க என்ன கடவுளா சார் அவங்க யாரு சொல்றது என் இஷான் என்னைவிட்டு போய்டுவான்னு..” என்று கத்தினாள் அப்போதும் அழவில்லை..
இஷானின் உடல் அருகே சென்றவள் மேலே போர்த்தி இருந்த துணியை விலக்கினாள் நடுங்கிய கைகளை கொண்டு..
தலையில் கட்டுடன் அமைதியும் கம்பீரமுமாக அவனது அழகு முகம் பார்த்தவள்…
“ஏமாத்திட்டல” என்று கேட்க.. அவளை பார்த்து அமைதியாக சிரிப்பதுபோல் இருந்தது அவனது மீளாத்துயில் கொண்ட முகம்..
அவனது அழகு முகத்தை தன் கைகளால் அளந்தவள் குனிந்து அவனது நெற்றியில் இதழ் பதித்தாள்..
“விடமாட்டேன் சொன்னியே இஷா” என்று கேட்டவள் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு ஒரு முத்தம் பதித்தாள்..
அதைக்கண்டு அனைவரும் கலங்கி அழுதனர்..
அவ்வளவு தான் அவள் பேசியது அன்று காதலை ஒப்புக்கொள்ள அவனது வீட்டுக்கு சென்றவள் இப்போது அவனது கடைசி வழியனுப்ப சென்றாள்..
அங்கே அவனது உடல் கண்ணாடிப்பேழையில் வைக்கப்பட விஷயம் தெரிந்த அனைவரும் மதியத்திற்குள் ஓடிவந்தனர்..
அவனது இறுதிச்சடங்கில் பங்குபெற லண்டனில் இருந்து இஷானின் தாத்தாவும் பாட்டியும் தனிவிமானம் மூலம் அந்தி மாலையில் வந்திரங்க..
யார் வந்தால் என்ன போனால் என்ன என்று அவனை பார்த்தவள் கண் சிமிட்டினாள் காணாமல் போய்விடுவானோ என்று எண்ணியபடி வெறித்துக்கொண்டு இருந்தாள் கயல்விழி..
ஸ்பைசி எஃப் எம்மின் அனைத்து உறுப்பினர்களும் வந்து அவனது உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு சென்றனர்..
இஷானின் தாத்தா வந்து சிறிது நேரத்தில் அவனது உடல் அடக்கத்திற்கு மயானத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடக்க அதுவரை அவனது உடைமையை அவளது கரம் விடாமல் வைத்து இருந்தது அதை பார்த்த மதுமிதா அதை வாங்க வந்தார்..
“அது அந்த தம்பியாண்டானோட ட்ரஸ்ஸும் செயினும் கொடுடா அதை அவர் உடலோடவே வெச்சு அனுப்பனும்..அவர் உபயோகிச்சதுலாம் அவரோடவே இருக்கனும்டாமா” என்றபடி அதை வாங்க கை நீட்ட
“நோ..மாட்டேன் நான் தரமாட்டேன்..என் இஷான என்கிட்ட இருந்து பிரிக்காதீங்க..நோஓஓஓ” என்று வெறிபிடித்தவள் அலறி அழுதாள்.. எல்லோரும் அதிர்ச்சியாய் பார்த்தனர்..
அய்யய்யோ…! என்ன இப்படி போட்டுத் தள்ளிட்டாங்க.
இதுக்குத்தான் அந்த இஷான் அவ பின்னாடி லவ், லவ்வுன்னு சொல்லிட்டு திரிஞ்சானாமா… ? இப்படி ஒரேயடியா விட்டுப் போகத்தானா…????
Vandhu..Ipo nan enna soldradhu 🙄🙄🏃🏃
Nee avana live pani ematha iruntha aana kalam una vazhka muluka emathiduchi paru ipo kadhal mattum tha iruku avan illa
Ama ama😑😑
அச்சோ
🏃🏃🏃 நான் ஓடிட்டேன்..மிக்க நன்றி சகோ❤️🥰