அத்தியாயம் – 9
ஸ்டீவ் இஷானை தன் மகன் என்று சொன்னதும் இஷான் அவளைத்தான் பார்த்தான் அவளோ அதிர்வின் எல்லைக்கே சென்றுவிட்டாள்..
‘அப்படியானால் இவன்தான் இவரோட பிள்ளையா? என் மனசு இவனை தேடிட்டு இருந்துச்சே அப்போ நான் இப்போ என்ன செய்ய?” என்றபடி யோசனையில் இருந்தாள்.. அவளை பார்த்துவிட்டு பார்வையை இஷானை நோக்கி திருப்பிய ஸ்டீவ்..
“எஸ்..ஹீ ஈஸ் மை ஒன் அண்ட் ஒன்லி சன் மிஸ்டர்.இஷான்..Yeah..He wanted to work as an employee, so that I send him as a manager( அவர் சாதாரண வேலையாளாக வேலை செய்ய விரும்பினார் அதனால்தான் அவரை சாதாரண மேனேஜராக நியமித்தேன்)
சோ..ப்ளீஸ் அவருக்கு உங்க எல்லாரோட சப்போர்ட்டும் வேணும்..அவரை என் சன்னா பார்க்காம உங்க மேனேஜராகவே பாருங்க” என்று கூற எல்லோரும் தயக்கமாக சரியென தலையசைக்க..
“ஓகே..லெட்ஸ் கம் ட்டூ த பாயிண்ட்..இப்போ நம்ம ரேடியோ சேனல் பத்தி பேசுவோம்” என்றுவிட்டு அவரவர் ப்ரோகிராமில் என்னவெல்லாம் புதிய மாற்றங்கள் செய்யலாம் என்று எல்லோரிமும் கலந்தாலோசிக்க.. இஷான் தனது கருத்துக்களை முன்வைக்க..அவனது கருத்தும் புதிய ஐடியாக்களும் மற்றவர்களை ஈர்த்தது..
கயலோ அவனது ஆளுமையும் அவன் கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் கூறியது அவன்மீது தன்னால் ஒரு ஈர்ப்பலையை உண்டாக்கினாலும் அவளது பழிவாங்கும் எண்ணமும் தலைதூக்க யாருக்கோ என்னவோ போல என்று நின்றிருந்தாள்..கடைசியாக அவளது ப்ரோகிராமில் ஏதாவது மாற்றம் செய்யலாமா என கேட்க..
அவளும் தான் யோசித்தவற்றை முன்வைத்தாள்..அதில் தன்னவளை மெச்சுதல் பார்வை பார்த்தான் இஷான்..அவனது பார்வையை பார்த்த ஸ்டீவ் அவளது கருத்துக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளித்தார்..அதில் அவள் முகம் சிரித்தது போல் ஆனாலும் உள்ளுக்குள் நெருப்பாய் கனன்று கொண்டிருந்தது.. மீட் முடிந்து
அனைவரும் கலைந்து செல்ல ஸ்டீவ் தன் மகனுக்கு கால் செய்ய அதை அவன் அட்டென் செய்ய அவன் அருகில் வந்ததவளுக்கு அவன் கையில் இருந்த கட்டு என்னவானதோ என்று பிசைந்தது..
‘நோ கயல் அவனுக்கு இரக்கம் பார்க்க கூடாது..ஆனா இப்போ இவன்கிட்ட இணக்கமா பேசனுமே? என்ன செய்ய?’ என்ற யோசனையில் அவனை பார்க்க அவனோ அவளை ஒரு பார்வை பார்த்தவன் தாண்டி செல்ல விலக மீண்டும் அவனை மறித்தபடி நின்றாள்..அவனோ அவளை ‘என்ன?’ என்பது போல் பார்க்க..
“அது..அதுவந்து உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் சார்” என்று திக்கி திணறி கூறிவிட்டாள்..
“சொல்லுங்க மேடம்” என்றான் அவளை தெரியாதவன் போல..
“ஐ..ஐயம் சோ சாரி சார்..நா..நீங்க யாருனு தெரியாம அன்னைக்கு அடிச்சுட்டேன்.” என்று கூற
‘ஒரு மாசம் கழிச்சுதான் உனக்கு நியாயம் தோணுதா மிர்ச்சி’ என்று மனதில் எண்ணியவன்..
“இட்ஸ் ஓகே மேம்” என்றபடி நகர
“ப்ரண்ட்ஸ்” என்றபடி கையை நீட்டினாள்.. அவளையும் அவள் கையையும் மாற்றி மாற்றி பார்த்தவன்..
‘இதுல ஏதும் ப்ளான் இருக்குமோ’ என்று எண்ணினான்..
“இல்ல உங்கள பத்தி சரியா தெரிஞ்சுக்காம அடிச்சுட்டேன்.. அன்னைல இருந்து சரியா தூக்கம்கூட வரல நீங்க வளர்ந்த சூழ்நிலையில லவ் லாம் சகஜம் எனக்கு தான் அது பிரச்சனை சோ உங்களை கஷ்டப்படுத்திட்டேன்னு தான் உங்ககிட்ட பேசனும்னு இருந்தேன்..ஆனா நீங்க என்னை பார்த்தாலே கோவமா போனீங்களா அதான் பயம் இப்போ பேசியே ஆகனும்னு தான் மீட்டிங் வந்தேன்..இங்கே சாரோட பையனா இருப்பீங்கனு எதிர்பார்க்கல..சரி பேசவேண்டியது பேசிடலாம்னு வந்தேன்..லவ் எனக்கு வர்றது கஷ்டம் ஆனா ப்ரண்ட்ஸ்ஸா இருக்கலாமே ப்ளீஸ்.. நீங்க என்னை மன்னிச்சு என்னை ப்ரண்ட்டா ஏத்துகிட்டா என்கூட ப்ரண்டா இருங்க..இல்ல மன்னிக்க மாட்டேன்னா இட்ஸ் ஓகே” என்று கூற..அவளை உற்று பார்த்தவன்..
“நான் ஃபாரினர் தான் ஆனா அதுக்காக இண்டியன் கல்ச்சரை பத்தி எதுவுமே தெரியாம இங்க வரலை, என் அம்மா தமில்தான் எனக்கு பேச சொல்லி கொடுத்து இருக்காங்க.. அண்ட் உங்கள லவ் பண்ண ஆரம்பிச்ச அப்புறம் நான் உங்க கல்ச்சரை பத்தி கத்துக்க ஆரம்பிச்சு இருக்கேன்.. அபோவ் செவன் மன்த் நான் உங்கள லவ் பண்ணிட்டு இருக்கேன்.. என்னால நிச்சயமா உங்கள ப்ரண்ட்டா பார்க்க முடியாது..பிகாஸ் ஐ லவ் யூ சோ மச் அண்ட் ஐ வாண்ட் ட்டூ மேரி யூ..As a husband i will handle u friendly that’s it..எஸ் ஐ லவ் யூ from before eight months” என்று பெருசாக பேசி முடிக்க அவனை ஆவென பார்த்தாள் பாவை..
அவள் விழிகளில் தொலையும் உணர்வை கட்டுக்குள் கொண்டு வந்தவன்..
“ப்ளீஸ் விழி..அப்படி பார்க்காதே..நான் லண்டன் கல்ச்சர்ல வளர்ந்து இருந்தாலும் இதுவரைக்கும் எந்த பொண்ணையும் லவ் பண்ணதும் இல்ல..அவ கண்ணபார்த்து இப்படியெல்லாம் சேன்ஜ் ஆனதும் இல்ல.. யுவர் ஐஸ் ஆர் மெஸ்மெரைஸிங் மீ..யுவர் ஐஸ் அண்ட் யுவர் ஆக்ட்டிவிட்டீஸ்லாம் என்னால என்னை கண்ட்ரோல் பண்ணவே முடியல விழி..சோ டூ ஒன்திங் அக்செப்ட் மை லவ் ஆர் எல்ஸ் ரிஜக்ட் மீ வித் இன் ஒன் டே..பட் ப்ரண்ட்ஷிப் ஈஸ் நாட் சூட் ஃபார் மீ.. உண்மைய சொல்லிட்டு கெட்டவனா இருந்துக்குறேன்..பொய் சொல்லிட்டு என்னால நல்லவனா ஆக்ட் பண்ணமுடியாது..Hope u understand myself..Take ur own time and answer me.. ur decision is accept my love or reject my love I will accept and move on but I never forget u in my life..And no one will come to replace u..நாளைக்கு உன் பதிலுக்காக வெயிட் பண்ணுவேன்..” என்று கூறிவிட்டு விருவிருவென சென்றுவிட்டான்..தன் அறைக்குள்..
“ஹப்பா இவகிட்ட பேசிட்டு வர்றதுக்குள்ள ஏதோ சிங்கம் புலிகிட்ட ஃபைட் பன்ற மாதிரி இருக்கே..மிர்ச்சி மேடம் உன் கண்ணு உண்மைய சொல்லிடுச்சு.. இந்த ஒன் மன்த் நீ என்னை எப்படிலாம் பார்த்தனு நான்தான் பார்த்தேனே..ப்ரண்ட்டாவா இருக்கனும் உன்ன எப்படி என் வழிக்கு கொண்டு வரணும்னு தெரியும்டி மிர்ச்சி.. கொண்டு வருவேன்” என்றபடி தன் தாய் பாடும் பாடலை மொபைலில் ஒலிக்கவிட்டவன் மனம் நொடியில் வதங்கியது..
‘உங்களுக்கு செஞ்ச ப்ராமிஸ்ஸ கண்டிப்பா காப்பாத்துவேன்மா..அப்புறம்தான் உங்கள பார்க்க வருவேன்’ என்று மனதோடு வருந்தியவன் இனி என்னென்ன நேர்ந்திடுமோவென யோசிக்க ஆரம்பித்துவிட்டான்..
அவன் அப்படியெல்லாம் பேசி செல்ல பக்கத்தில் நின்றிருந்த கெளதமிற்கு தன் தோழியின் நிலையை பார்க்க வருத்தமாக இருந்தாலும் இஷான் அவசரம் அவசரமாக பேசிச்சென்றது சிரிப்பை தான் உண்டுபண்ணியது..
‘சிரிச்சு இவகிட்ட யாரு அடி வாங்குறது’
என்று எண்ணியவன் மொபைல் அலறியது குறுஞ்செய்தி வந்ததாக.. பார்த்தால் இஷான்தான் அனுப்பி இருந்தான்..
‘உங்க ப்ரண்ட்ட பார்த்து கூட்டிட்டு போங்க’ என்று அதை பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.. ‘சரி’ என்று அனுப்பிவிட்டு “வா கயல் போலாம்..இப்படியே நின்னா எல்லாம் லூசுனு நினைப்பாங்க.. முதல்ல அந்த டோரை க்ளோஸ் பண்ணுடி” என்று அவளை உலுக்கினான் கெளதம்..
அப்போது தான் அவளுக்கு சுயநினைவே வந்தது..
‘என்ன’ என்பது போல மலங்க மலங்க விழித்தவளை பார்க்க அவனுக்கே ஐயோ என்றாகிவிட்டது..
“வா கயல் போலாம் எல்லாரும் போய்ட்டாங்க” என்று கூற
“அவ..அவரு எட்டு மாசம் முன்னமே என்னை லவ் பன்றதா..எப்படி” என்று அவள் புரியாமல் நிறுத்த ‘ஓஓஓ..அவரு..மரியாதையை பாருடா’ என்று எண்ணியவன் ‘ஆமாம்’ என்பதை போல தலையாட்டியவன்
“எப்படினு அவரத்தான் கேட்கணும்டா..நான் வேணா போய் கேட்டு வரவா..இல்ல நாளைக்கு நீயே கேட்டுக்கறியா?” என்று கேட்க..
“நாளைக்கு என்ன?” என்று அவள் முழிக்க..
“மக்கு..நாளைக்கு தான் அவர் உன்ன பதில் சொல்ல சொன்னாரு” என்று கூறியவனை அதிர்ந்து பார்த்தவளுக்கு அப்போது தான் அவன் கூறி சென்றது எல்லாம் நியாபகம் வந்தது..
“இல்லடா இ..இது சரிபட்டு வராது..வா இப்போவே போய் நோ சொல்லிட்டு வரலாம்” என்று கூறியவளை தடுத்தான் கெளதம்..
“நீ என்ன லூசா? வா என்கூட” என்றபடி அவளை பார்க்கிங் ஏரியாவிற்கு இழுத்து சென்றவன் அங்கே அவளை நிறுத்தி..
“இவரைத்தானே இங்க வரவைக்கனும்னு யோசிச்ச aஇவரைதானே பழி வாங்கனும்னு யோசிச்சு ப்ளான்லாம் போட்ட இப்போ அவரே வந்து உன்ன லவ் பன்றேன் சொல்லி உன் வலையில ஈஸியா மாட்டுறாரு நீ என்னடானா வேணாம் சொல்லபோறேன்னு சொல்ற உனக்கு அறிவு இருக்கா இல்லையா?” என்று அமைதியாக அதே சமயம் கோவமாக பேசினான் கெளதம்..அவன் சொன்னதும் அவள் மனம் பழிவாங்க யோசிக்க..
“ஆனாலும்..அவரு அப்போ லவ் சொன்னப்போ அவரும் சாதாரண எம்ப்ளாயி நானும் சாதாரண எம்ப்ளாயி.. ஆனா இப்போ போய் ஓகேசொன்னா அவரு பணக்காரர்னு தெரிஞ்சு ஓகே சொல்றமாதிரி ஆகாதாடா?” என்று கேள்வி கேட்க..
“அட அறிவே அவருதான் எப்பவோ உன்ன லவ் பன்றதா சொல்றாரே..அப்புறம் என்ன? இங்க பாரு கயல் தானா உனக்கு ஒரு சான்ஸ் கிடைச்சு இருக்கு அதை விட்டுட்டாதே..நல்லா யோசிச்சு நாளைக்கு அவருக்கு பதில் சொல்லு வா போலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றான் கெளதம்..மறுநாள் காதல் சொல்வாளா? இல்லை காதலால் கொல்வாளா?
சூப்பர்… அன்ட் வெரி நைஸ் கோயிங்.
மிக்க நன்றி சகோ❤️🥰
Love solliduviya vizhi avanum ethoplan la tha irukan but rendu perum real ah love pannitu eppadi pazhi vangipanga apram athu nadakathu paru
Avan unmaiyave than love pannuvan kayal than ipdi yosippa aana avalala pazhi vanga mudiyadhu
இஷான் என்ன தவறு பண்ணான் இவள் பழிவாங்க இவளின் தந்தையின் தந்தை பண்ண துரோகத்துக்கு
இவளை லவ் பண்ணானே அது போதாதா..மிக்க நன்றி சகோ❤️🥰
Nice epi