அத்தியாயம்-4
Thank you for reading this post, don't forget to subscribe!வானம் தூரியது. பின் வெயில் கொளுத்தியது. மறுநாள் பனி அடித்தது. மனிதர்கள்
வருகிறார்கள், போகிறார்கள் மலர்கள் மலர்ந்தன, உதிர்ந்தன……. எதையும் பொருட்படுத்தாத
மோன நிலையில் இருந்தாள் சுஜா. மனம் சுருங்கி ஒரு நூல் போல் தக்கையாக கிடந்தாள்.
“அம்மா……என்னம்மா இது? சாப்பிடாம கொள்ளாம……” ஆயா பரிவுடன் அவள் நெற்றியில்
புறங்கை வைத்தாள். சுட்டது.
டாக்டர் கிட்டே போங்கம்மா..”
சுஜா பிரயத்தனப்பட்டு கண் திறந்தாள். வடிந்த துக்கமெல்லாம் மீண்டும் நியாபாக ஏட்டில்
ஏறிக் கொண்டது.
“என்னைத் தனியா விடுங்க.” என்று கத்த தோன்றியது. ஆனால் மூன்று நாட்களாக
சாப்பிடாமல் கிடந்ததால் தெம்பு இருக்கவில்லை. போர் சத்யம் பிசைந்து “சாப்பிடுங்கம்மா’
என்று ஆயா நீட்டிய போது சுஜா அழுதுவிட்டாள். அவள் கண்ணீரை துடைத்தாள் ஆயா.
“ஆயா……நான் என்ன பாவம் செய்தேன்? எதுக்கு இப்படி அல்லாடறேன்.? என்னோட குற்றம்
என்ன.? நான் என்ன ஒரு பொருளா? நினைத்தபடி, விருப்பப்படி அவரவர்கள்
கையாள்வதற்கு.?”
ஆயா மென்மையாக ஒற்றைக் கோடு போல் முறுவலித்தாள். அதில் காலத்தின்
பின்னடைவுகள் பற்றின கழிவிரக்கம் தெரிந்தது.
“கண்ணு….உன் புருஷன் கிட்டே பேசிப் பார். உன் வாழ்க்கையை காப்பாதகிக்க பார். அவர்
தவறு செய்திருந்தாலும் பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடு குழந்தைக்காக.” என்றாள்.
சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தாள் சுஜா.
“தேங்க்ஸ் ஆயா. பேசவே கூடாதுன்னு நினைச்சேன். பேசணும்கற அவசியத்தைப் புரிய
வச்சிட்டடீங்க.”
இப்படி ஒரு முடிவுக்கு வந்த பின் அவள் முகத்தில் குத்துவிளக்கின் சுடர் போல் ஒரு ஒளி,
கவிதை போல் மின்னியது.
“சாப்பிடுங்கம்மா. பாப்பா ரெண்டு நாளா நீங்க இறந்த நிலை பார்த்து அழுதிடுச்சு. இப்ப
ஸ்கூல் விட்டு வரும் நேரம். மனசை தைரியப்படுத்திக்கோங்க.”
சுஜா ஆயா உருட்டித் தந்த உணவை ஆவலுடன் சாப்பிட்டாள். அம்மா அன்று உருட்டித் தந்த
கூட்டாஞ் சோறுக்கு நிகராக, மனசும் வயிறும் நிரம்ப பெற்றாள். சுஜா எழுந்து ஷவரில்
நீராடிவிட்டு, நீல நிற காட்டன் நைட்டி அணிந்து ஒரு மனுஷியாக உட்கார்ந்தாள். ஸ்ரீதரை
அறைந்த போது மின்சாரம் தடைபட்டதால், அந்த சம்பவம் பொது இடத்தில் நடந்தும்,
கவனிக்கப் படாமல் போனது. இது ஒரு விதத்தில் நல்லதாக போயிற்று. மக்கள் கூடி
ராசபாசமாகி, அவள் இருந்த மனநிலையில் ஸ்ரீதர் குற்றவாளி என்று பிரகடன
படுத்தியிருந்தால்—அவன் அவமானப்பட்டு அவளை பழி வாங்க புது பிரச்னைகளை
ஏற்படுத்தினால்? இருப்பதையே நேர் படுத்த முடியாமல் திணறும் போது……கூடுதல் பாரம்
எதுக்கு?
அந்த ஓவியம் மட்டும் கிடைக்காமல் இருந்திருந்தால் சுஜா தான் ஏமாற்றப்பட்டுக்
கொண்டிருப்பதை அறிந்து கொல்லாமலே இருந்திருப்பாள். அதை ஜீரணிக்க கஷ்டமாக
இருந்தது. மூன்று நாள்….வனவாச சீதை போல் தூயரூற்று, இப்பொழுது மெல்ல எழுந்து
விட்டிருந்தாள். தங்கையை கூப்பிட்டு விஷயம் சொன்னாள்.
“சுதா….இன்னைக்குத் தான் பேசும் நிலையிலே நான் இருக்கேன். ஆர்த்தி அப்பாக்கிட்டே
பேசணும்னு முடிவு பண்ணியிருக்கேன். சிந்துபாத் தோடர் போல் இந்த நிலை நீடிச்சுக்கிட்டே
போறதிலே என்ன அர்த்தம் இருக்கு.?இப்போ என் கவலை ஸ்ரீதர் பத்தி இல்லை. இரு
கோடுகள் தத்துவம் போல் அந்தக் கவலை சின்னதாச்சு. என் காவாலி இப்போ என் புருஷன்
பத்தி தான். எங்கே அவரை இழந்து விடுவேனோன்னு பயமா இருக்கு. ஸ்ரீதரை அவருக்கு
தெரிந்திருக்கிறது. அவனிடம் பேசச் சொன்னதும் போனை கட்ட பண்ணிட்டார். அங்கு நான்
இப்போதைக்கு ஷிப்ட் பண்ண முடியாது சுதா. என் வாழ்க்கை எந்த வழியில் போக்குதுன்னு
கூட எனக்குத் தெரியலை. அதனால் என் இம்மிடியட் அட்டன்ஷன் என் வாழ்க்கையை
காப்பாத்திக்கிறது தான். அம்மாகிட்டே இதெல்லாம் சொல்ல வேண்டாம். ஆனந் கிட்டே
சொல்லிடு.”
“சரிக்கா. கேக்கவே எல்லாம் கஷ்டமா இருக்கு. சின்ன வெடி என்று பார்த்தால் பெரிய
ஆட்டம்பாம் தயாராகிடட்டு இருக்கு. அக்கா எதுவானாலும் நாங்க இருக்கோம். தைரியமா
இரு. சரியா.?”
“தேங்க்ஸ். சுதா.”
சுஜா ஒரு யுத்தத்துக்கு தயாராவது போல் பாரம் உணர்ந்தாள். இரெண்டு நாட்கள் எல்லாம்
மறந்து அலுவலக வேலையில் மூழ்கினாள். ஆர்த்தி பள்ளியில் ஸ்போர்ட்ஸ் புரோகிராம்
வந்தது. குழந்தைக்காக தன்னை மகிழச்சி உள்ளவளாக காட்டிக் கொண்டு சென்றாள்.
அந்த கலகல சூழ்நிலை அவள் கருத்தைக் கொள்ளை கொண்டது. ஆர்த்தி இரு பரிசுகள்
வென்றாள். உற்சாக களிப்புடன் அவள் ஆர்ப்பரித்தாள். சுஜா மனசு லேசாயிற்று. இரவு படுத்த
போது ஆர்த்தி சொன்னாள்.
“அம்மா….நான் பரிசு வாங்கியதுக்கு பாராட்டி ஸ்ரீதர் அங்கிள் காங்கிராட்ஸ் சொன்னார்மா
போனிலே..”
“அந்தாளுக்கு எப்படித் தெரியும்.?’
“நான் தான் சொன்னேன் மா.”
“எதுக்குடி சொன்னே.? அந்தாள் கூட உனக்கு என்ன பேச்சு.?”
“ஸ்ரீதர் அங்கிள் ரொம்ப நல்லவர் மா. இதய பாருங்க.”
“என்னது அது? கவிதையா.?”
“ம்….என்னைப் பத்தி எழுதியிருக்கார். படிங்க….”
ஆர்த்தி….
என் புறங்கையில் முத்தமிட்டாய்
தேவதைகள் ரோஜாக்கள் தூவி
ஆசீர்வதிப்பது போல் இருந்தது.”
“இதெல்லாம் ஒரு கவிதையா.? ஸ்டுப்பிட். பேசாம தூங்கு. தேவையில்லாம கண்டவங்க கூட
பேசக் கூடாது ஆர்த்தி.”
சுஜா அந்த காகிதத்தகை சுருட்டிப் போட்டாள். இவன் தொல்லை தாங்க முடியவில்லை.
ஆர்த்தி மவுனமாக படுத்துக் கொண்டாள்.
இரவு ஒரு மணிக்கு சுஜாவுக்கு தாகம் எடுத்தது. தண்ணீர் குடிக்க எழலாமா என்று
நினைத்தாள். அந்த சமயம் ஆர்த்தி எழுவது தெரிந்தது. மெல்ல சென்று சுருட்டி வீசிய கவிதை
தாளை எடுத்து, நீவி விட்டு. தன் பென்சில் பாக்ஸில் பத்திரப்படுத்திக் கொண்டாள். பிறகு
வந்து நைசாக படுத்துக் கொண்டாள். தன்னை காப்பாற்றியவன் என்பதால் குழந்தை
அவனிடம் ஒட்டிக் கொண்டு விட்டாளா?
ஆரத்தியை என்னிடமிருந்து அபகரித்து விடுவானோ.? என் ஒரே ஒளி அவளல்லவா? சுஜா
கண்களிலிருந்து தூறல் போல் கண்ணீர் இறங்கியது. அமைதியான வாழ்க்கை இனி
அவளுக்கில்லை என்று புரிந்து போயிற்று. எதை எப்படி சமாளிக்கப் போகிறாள்.?
அவளுக்கேத் தெரியவில்லை.
வெள்ளிக்கிழமை ரமேஷ் ஃபோன் செய்தான். சுஜா கஷ்டப்பட்டு ஹலோ சொன்னாள்.
“சுஜா….என்ன டல்லா இருக்கே.?”
“எப்படி இருக்கச் சொல்றீங்க.? உங்களுக்கு நான் அலுத்துவிட்டேனா.?” சொல்லும்போதே
கண்ணீர் முட்டியது.
“சண்டே நேரில் வரேன். பேசுவோம்.” அவன் குரலே மாறி இருந்தது.
“இங்க தான் இருக்கீங்களா.?”
“ஆமா….”அதோடு போனை துன்டித்து விட்டான். யூகங்கள் தவறாகலாம் என்ற நப்பாசை
அகன்றது. சுஜா போர் அறிவிப்பு வந்துவிட்டதென்று உணர்ந்தாள். அவளிடம் எந்த படையும்
இல்லையே.! நிராயுத பாணியாக நிற்கிறாள். அவன் கட்டிய தாலி தான் அவள் ஆயுதம்.
பார்ப்போம்.
அவன் சொன்ன சண்டே வழக்கம் போல் விடிந்தது. கிழக்கு சூரியன், ஏதோ அஸ்தமன சூரியன்
போலவே பட்டது. பட்டப்பகல் இருட்டு போலவே தோன்றியது. ஷாம்பு போட்டு குளித்து,
வேகமாக அவனுக்கு பிடித்த ஆடையை அணிந்து கொண்டாள். ஆயாவுடன் சேர்ந்து
அவனுக்குப் பிடித்த உணவு தயாரித்தாள். நேர்காணலுக்கு போகும் மாணவி போல் திக் திக்
மனதுடன் காத்திருந்தாள். ஆரத்தியை ஆயாவுடன் மாரியம்மன் தெப்பக்குளம் அனுப்பிவிட்டு.
ஜாடைசி நம்பிக்கையுடன் பரபரத்த இதயத்துடன் நின்றாள்.
சரியாக பத்து மணிக்கு வாசலில் ஒரு கருப்பு நிறக் கார் வந்து நின்றது. எமன் வந்து நிற்பது
போல் மனசு நடுங்கியது. காரில் இருந்து ரமேஷ் இறங்கினான்…..ஏதோ ஒரு நாட்டின்
இளவரசன் போல் ஆணவம் தோன்ற நின்றான். கூடுதலான நிறம். கூடுதலான கம்பீரம்.
அவளை வளைத்து போட்ட அதே புன்சிரிப்பு. அவனை ஓடிச் சென்று வரவேற்க்க
நினைத்தாள். ரமேஷ் பார்….உனக்கு பிடித்த பிங்க் கலர் சூடி போட்டிருக்கேன். நீ ரசித்த
ராஜஸ்தான் பிங்க் வளைகள், பிங்க் தொங்கட்டான். பிங்க் முத்துமாலை. நல்லாயிருக்கா.?
அழகாயிருக்கேன் தானே.? உன் தேவதை நான் தானே.?
“ஹாய் சுஜா….” என்றான். அவள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே இன்னொரு கதவு
திறந்து அவள் இறங்கினாள். “திஸ் இஸ் தர்ஷினி….” ராமனை ஜெயித்ததுவிட்ட சூர்பனகை
இவள் தானா.? அவள் நீல நிற ஜீன்ஸ். ரோஸ் நிற டாப்ஸ் அணிந்திருந்தாள். முடிந்தது. சுஜா
போராட, வாதாட ஒன்றுமில்லை. தப்பான தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.
“ஸாரி சுஜா….உனக்கு ஷாக் கொடுக்காம மெதுவா விஷயத்தை உடைக்கலாமுன்னு
இருந்தேன். அறிமுகம் இப்படி ஸ்ட்ரெட்டா முடிஞ்சுடுத்து. ஸோ…. உள்ளே வரலாமா.?”
மின்னல் வெட்டியது போல் துக்கமும் சினமும் அவளுள் முட்டி மோதியது. அவன் தனியாக
வருவான். அவன் கட்டிய தாலியை காட்டி இதுக்கு பதில் சொல்லுங்க என்று நீதி கேட்கலாம்
என்ற அவள் எண்ணத்தில் மண் விழுந்தது. “போற்றா ஒழுக்கம் புரிந்தீர்..” என்று மன்னித்து
சேர்த்துக் கொள்ளலாம் என்ற அவள் நப்பாசை தவிடு பொடியானது. இவன்….அந்தக்
கண்ணகி கண்ட கோவலன் இல்லை. அவனாவது மாதவியை விட்டு விட்டு குற்றம் உணர்ந்து
வந்தான். இவன் மாதவியை கூடவே ரைட் ராயலாக கூட்டிக் கொண்டு வந்திருக்கும் புதிய
கோவலன்……ஸாரி கேவலன்.
“இது சீதையின் அசோகவனம். ராவணனுக்கோ மாண்டோதரிக்கோ இடமில்லை. பல
அவதாரம் எடுக்க நீங்க கடவுள் இல்லை. ராமனா……சுஜாவின் கணவனா நீங்க மட்டும்
உள்ளே வரலாம். இல்லை
புது மாப்பிள்ளைன்னா வந்த வழியே போகலாம்.”
“இரெண்டும் தான் சுஜா. நான் உன் அன்பான கணவன் தான். அதே சமயம் வெல்….புது
மாப்பிள்ளை இல்லை.” சிரித்தான் சகஜமாக.
“இவளுடன் கல்யாணமாகி மூணு வருஷமாச்சு. ‘ஆர்’ என்ற மோதிரம் அவள் கையில். ‘டி’
என்ற மோதிரம் என் கையில். குழப்பம் ஒன்றுமில்லையே.? வெல்……இத் ஜஸ்ட் ஹாப்பென்ட்
யு நோ….”
அவள் எதிர்ப்பை புறக்கணித்து விட்டு தர்ஷினி கைப் பற்றி உள் நுழைந்தான். வெளிரிப்
போனாள் சுஜா.
“கெட் அவுட்….” என்று கத்தினாள். அவள் பத்திரக்காளி முகம் கண்டு ரமேஷ் ஒரு கணம்
அரண்டு போனான். அந்த நேரம் சுஜாவின் செல்ல கூப்பிட்டது. ‘ஹலோ..” என்றாள். ஒதுங்கி
நின்று பேசினாள்.
“நான் தான் ஸ்ரீதர். கட்ட பண்ணிடாதே. உன் புருஷனும் தர்ஷனியும் வந்திருக்காங்களா.?”
“இதை நோட் பண்றதை தவிர உனக்கு வேறு வேலையே இல்லையா.?” சுஜாவினுள்
நெருப்பே பற்றி எரிந்தது.
“சுஜா கோபப்படாதே. அவனை விரட்டி விடாதே…..”
“ஸ்டுப்பிட்….வைடா போனை.”
“பிளீஸ் சுஜா சொல்றதைக் கேளு. அவன் என்ன சொல்கிறான்.? எந்த காம்பிரமைசுக்கு தயாரா
இருக்கான்.? அவனோட அடுத்த ஸ்டெப் என்ன? எல்லா கேள்விகளையும் கேட்டு கிளியர்
பண்ணிடு. அப்ப தான் நீ முடிவு எடுக்க சௌகரியமா இருக்கும். வேகம் வேண்டாம் சுஜா.
விவேகம் தேவை. அப்புறம் அவனைத் தேடி நீ தான் அலையனும்.”
இப்படியொரு புதுமையான வில்லனை அவள் எந்த திரைப்படத்திலும், சீரியலிலும் பார்க்கவே
இல்லை. அவன் சொல்வதிலும் அர்த்தமிருக்கிறது. ஆயா கூட பேசுங்கம்மா என்றாளே….
“சரி….”
“தேங்க்ஸ் சுஜா.”
சுஜா ஹாலுக்கு வந்தாள். அவர்கள் முகங்களை ஆராய்ந்தாள். என்ன நோக்கத்தகுதியான
வந்திருக்கிறார்கள் என்று முதல் முறையாக நிதானம் பெற்று யோசித்தாள்.”எதுக்காக
ஜோடியா வந்திருக்கீங்க.?”
“அப்படி கேள். அது பாயின்ட். சுஜா……தர்ஷினி சம்மதிச்சுட்டா. ரியலி கிரேட்….அவள்
பெருந்தன்மையை எப்படி பாராட்டறதுன்னே தெரியலை. நீ தான் சம்மதிக்கணும்.”
“எதுக்கு.?”
“வேறு எதுக்கு.? நாம் சேர்ந்து வாழத்தான்.”
“ஓ……ரெண்டு பெண்டாட்டிக்காரனா……”
“புருஞ்சுக்கிட்டே….குட்.”
“சாரி மிஸ்டர் ரமேஷ்….நீங்க தர்ஷினியோடவே வாழலாம்.”
“நிஜமா?’
“நிஜமா தான். உன்னை மாதிரி மனசாட்சி இல்லாத வெறும் கூடுகள் கூட வாழறதை நான்
அவமானமா நினைக்கிறேன்.”
“அப்ப டிவோர்ஸ் பத்திரத்தில் கையெழுத்திட சம்மதிக்கிறே….”
உடந்து போய்க் கொண்டிருந்த மனசை திடப்படுத்திக் கொண்டு தலையாட்டினாள்.
கண்ணீரை வெளிக்காட்டிக் கொள்ள அவள் விரும்பவில்லை. தன்னை மதிக்காதவன் முன்னே
அழுது அந்தக் கண்ணீரை வீணாக்க அவள் விரும்பவில்லை. வேலை சுலபமாக முடிந்ததில்.
பிஸினஸ் பேசி முடித்தது போல் மகிழ்ச்சியுடன் “தேங்க்ஸ்” என்றான். “உங்க தேங்க்ஸ்
எனக்குத் தேவையில்லை. கெட் அவுட்.” அவர்கள் குதூகலமாக வெளியேறினார்கள். சுஜா
விக்கித்து நின்றாள்.
ஸ்ரீதர் ஃபோன் செய்தான். “போயிட்டாங்களா.?”
“போயிட்டாங்க….திருப்தி தானே டா.? இதுக்குத் தானே காத்திட்டு இருந்தே. ஸ்கவுன்ட்ரல்….”
பதி அளித்துவிட்டு சுஜா வாய்விட்டு அழுதாள்.
“நீ பெற்ற துயரை நான் கேட்டு துடித்தேன் சுஜா..” என்றான்.
“சீ….நாசமா போறவனே.” என்று போனை நிறுத்தினாள். கண்ணீரை நிறுத்த முடியவில்லை.
Omg. Sema twist. Intresting