Skip to content
Home » கானல் பொய்கை – 17 (Final)

கானல் பொய்கை – 17 (Final)

எம்.எஸ்.என் பல்நோக்கு மருத்துவமனை, நுங்கம்பாக்கம்...

பிரியம்வதா பரிந்துரை கடிதத்தில் கையெழுத்திட்டுப் பாலாவிடம் நீட்டினார். கூடவே பாரதியின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நேரிடையாக கண்காணித்து அவர் தயாரித்த மருத்துவ அறிக்கை, அவளுக்கு இதுவரை கொடுக்கப்பட்ட தெரபிகள், மருந்துகள் பற்றிய விவரங்கள் அடங்கிய கோப்பும் இருந்தது.

பாலா அவற்றை வாங்கிக்கொண்டான்.

“டெக்சாஸ்ல என் ஃப்ரெண்ட் நீல்காந்த் சர்மா ஃபேமஸ் சைக்கியாட்ரிஸ்ட்… இந்த லெட்டர் அண்ட் ஃபைலோட அவரை மீட் பண்ணுங்க பாலா… ஹி வில் கண்டினியூ த மெடிகேசன்… தேவைப்பட்டா பாரதிக்குத் தெரபியும் குடுப்பார்… நான் அவர் கிட்ட இன்னைக்கு மானிங் பேசிட்டேன்… சோ நோ வொரிஸ்… பாரதியோட ஹார்மோன் லெவல்ஸ் எல்லாமே பேக் டு நார்மல்… அவளுக்கு ஹெவியான டோசேஜ் குடுக்கவேண்டாம்னு மென்சன் பண்ணிருக்கேன்… நீங்க தாராளமா பேபிக்கு ட்ரை பண்ணலாம்” என்ற பிரியம்வதாவின் சொற்கள் பாரதியின் முகத்தில் பூரிப்பை வரவழைத்தன.

“தேங்க்யூ சோ மச் மேடம்” என்றாள் அவள் உள்ளார்ந்த நன்றியுணர்வுடன்.

அவளது கையைப் பற்றி ஆதுரமாகத் தட்டிக்கொடுத்தவர் “ஃபீனிக்ஸ் சைட்ல உன்னோட ஈடுபாடு என்னைப் பிரமிக்க வச்சிருக்கு பாரதி… போன தடவை வெப்பைனார்ல நீ உன்னோட மனவுணர்வுகளை வெளிப்படையா சொல்லியிருந்த… குற்றவுணர்ச்சிக்கோ, தற்கொலை எண்ணத்துக்கோ அடிமையாகாதிங்கனு நீ சொன்ன வார்த்தை நிறைய பேருக்கு நம்பிக்கைய விதைச்சிருக்கு…  நீ சஜஸ்ட் பண்ணி போன மாசம் வந்தாளே ரவீணானு ஒரு காலேஜ் கேர்ள், அவ முன்ன மாதிரி இல்ல… ஷீ இஸ் கோ-ஆப்ரேட்டிங் வித் தி ட்ரீட்மெண்ட் வெரி வெல்… சீக்கிரமே அவளும் தொலைஞ்சு போன அவளோட கனவுகளை மீட்டெடுப்பா…. நீ மட்டும் சொல்லலனா ட்ரீட்மெண்ட் எடுத்துக்குற தைரியமே வந்திருக்காதுனு சொன்னா… உன்னால ஒரு பொண்ணோட வாழ்க்கை மாறப்போகுது… ஒரு பேஷண்டா நீ இங்க வந்த… உன்னை மாதிரி பாதிக்கப்பட்ட பொண்ணுங்களுக்கு மனவுறுதியைக் குடுக்குற தைரியமான வழிகாட்டியா மாறி இங்க இருந்து நீ கிளம்பப்போற… உன்னோட சேஞ்ச் ஓவர் என்னைப் பிரமிக்க வைக்குது…. உன் வாழ்க்கையில எல்லாமே உனக்கு பெஸ்டா அமைய என்னோட வாழ்த்துக்கள் பாரதி” என்றார் மனம் நெகிழ்ந்து.

பாரதியின் கண்களில் சந்தோசமிகுதியில் கண்ணீர் துளிர்த்தது.

அவரை நன்றியுணர்ச்சியோடு பார்த்தாள்.

“என்னைப் பத்தி உண்மைகளை நான் சொன்ன தெரபில நீங்க முட்டாள்கள் அருவருப்புக்கு அப்பாற்பட்டவங்கனு சொன்னிங்க மேடம்… ஞாபகம் இருக்குதா? யெஸ், முட்டாள்கள் அருவருப்புக்கு அப்பாற்ப்பட்டவங்க, ஆனா எல்லாரோட இரக்கத்துக்கும் தகுதியானவங்க… நீங்க என் மேல காட்டுன இரக்கம் என்னை இந்த ட்ரீட்மெண்ட்டை முழு மனசோட ஏத்துக்க வச்சுது… பாலா என் மேல காட்டுன இரக்கம் எனக்கு வாழுறதுக்கான தைரியத்தைக் குடுத்து இத்தனை நாள் எனக்குள்ள குவிஞ்சிருந்த முட்டாள்தனத்தை அடிச்சு நொறுக்கியிருக்கு… வாழுறதுக்குப் பணம் அவசியம் தான், ஆனா அதை சம்பாதிக்குறதுக்கான வழிகள் கௌரவமானதா இருக்கணும்ங்கிறதை நான் புரிஞ்சிக்கிட்டேன்… இன்னைக்கு நான் ஒரு டீச்சரா மனநிறைவோட, பொருளாதார சுதந்திரத்தோட இருக்கேன்… இதுக்குக் காரணம் நீங்க மட்டும் தான்… என்னைத் தொட்டுத் தாலி கட்டுன புருசனே இனி நான் வேண்டாம்னு ஒதுங்குனப்ப நீங்க எனக்குத் துணையா நின்னிங்க மேடம்.. உங்களுக்கு எத்தனை தடவை தேங்க்ஸ் சொன்னாலும் அது பத்தாது மேடம்”

நன்றியுணர்ச்சியோடு கரம் குவித்தாள் பாரதி.

“இன்னைக்கு ஒரே நன்றி சொல்லுற படலமா இருக்கு… லீவ் தட்… என் பொண்ணும் நானும் நாளைக்கு உன்னையும் பாலாவையும் சென்ட் ஆப் பண்ண ஏர்போர்ட் வருவோம்…. பாரதி மேம்கு நான் ஸ்பெஷல் கிப்ட் வாங்கப்போறேன்னு ஒரே அலப்பறை வீட்டுல”

“பிரார்த்தனாக்காக நாளைக்கு நானும் வெயிட் பண்ணுவேன்” என்றாள் பாரதி.

“கங்கிராட்ஸ் டு போத் ஆப் யூ டூ ஸ்டார்ட் அ நியூ சேப்டர் இன் யுவர் லைஃப்” என்று இருவரையும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் பிரியம்வதா.

காரிலேறியதும் பாலா பாரதியிடம் அவளது சிகிச்சையின் போது தனக்கும் சில கண்திறப்புகள் நடந்தேறியதைப் பகிர்ந்துகொண்டான். பாரதி அமைதியாக அவன் பேசுவதைக் கேட்டபடி அமர்ந்திருந்தாள்.

கார் நிதானமான வேகத்தோடு சாலையில் சென்று கொண்டிருக்க பாலா மனம் திறந்து மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தான்.

“பொண்ணுங்கனா இப்பிடி தான் இருக்கணும்னு நானே ஸ்டீரியோடைப் மோல்ட் செஞ்சு வச்சு அதுக்குள்ள உன்னை ஃபிக்ஸ் பண்ண பாத்தது எவ்ளோ பெரிய தப்புனு இந்தக் குறுகிய காலத்துல நான் புரிஞ்சிக்கிட்டேன் குட்டிமா… வயசுக்கோளாறுல பசங்க செய்யுற தப்பை கண்டுக்காம விடுறதும், பொண்ணுங்க செஞ்சா அதை பூதாகரமாக்கி அவளோட நடத்தையை கேவலப்படுத்துறதும் ரொம்ப அருவருப்பான செயல்னு எனக்குப் புரிய வச்சவ நீ… மனரீதியான பிரச்சனை உள்ளவங்களுக்கு நம்ம குடுக்குற பெரிய சப்போர்ட்டே அவங்களுக்கு நம்ம துணையா நிக்குறது தான்ங்கிறதை இந்த ஃபேமிலி தெரபி எனக்குச் சொல்லிக் குடுத்திருக்கு… மனரீதியா பாதிக்கப்பட்டவங்களோட ஸ்டேட் ஆப் மைண்டை புரிஞ்சிக்காம அவங்களைத் திட்டி தற்கொலை முடிவுக்குத் தள்ளிவிடுற குடும்பங்கள் இன்னும் நம்ம நாட்டுல இருக்கு… ஒரே ஒரு பாலாக்கு மட்டும் இது எல்லாம் புரிஞ்சு என்ன பிரயோஜனம்?” என்று சலிப்பாகச் சொன்னவனின் தோளில் சாய்ந்துகொண்டாள் பாரதி.

“சிறுதுளி பெருவெள்ளம் பாலா… நாளைக்கே அந்தப் பெருவெள்ளம் பிரம்மாண்டமான சமுத்திரமா ஆகலாம்… ஒருத்தர் ஆரம்பிச்சு வச்சா தானே புதிய மாற்றங்கள் பத்தி சமுதாயத்துக்குத் தெரியவரும்… நீங்க இப்ப ஆரம்பிச்சு வச்சிருக்கிங்க பாலா… உங்களை ஃபாலோ பண்ணி நிறைய ஆண்கள் தன்னோட மனைவி, அம்மா, தங்கச்சி, காதலியோட மனரீதியான பிரச்சனைகளைப் புரிஞ்சிக்கிட்டு அவங்களுக்குத் துணையா நின்னு குணமாக உதவுவாங்க… எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு பாலா”

கணவனும் மனைவியும் மென்மையான உரையாடலோடு காரில் பயணித்துக்கொண்டிருக்கையிலேயே பாலாவின் மொபைல் அலறியது.

அழைத்தவர் நங்கை! உடனே அழைப்பை ஏற்றவன் “சொல்லும்மா” என்றதும்

“என்ன சொல்லும்மா? இன்னுமா ரெண்டு பேரும் ஆஸ்பத்திரில இருக்கிங்க” என படபடத்தார் நங்கை.

“இல்லம்மா… வீட்டுக்கு வந்துட்டிருக்கோம்” என்று பதிலளித்தவன் மனைவியைப் பேசும்படி சொல்ல அவளும் மொபைலைத் தன் காதில் வைத்தாள்.

“நாளைக்கு வெளிநாட்டுக்குக் கிளம்புறதுக்கு உனக்கும் பாலாக்கும் துணிமணி எல்லாம் நானும் மதினியும் எடுத்து வச்சிட்டோம் பாரதி… உன் அப்பாவும் மாமாவும் திருவல்லிக்கேணி பார்த்தச்சாரதிய பாத்தே ஆகணும்னு கிளம்பிட்டாங்க… உன் அம்மா உனக்கு ரொம்ப பிடிக்கும்னு மாம்பழம் போட்டு மோர்க்குழம்பு வச்சிருக்காங்க… அந்த பய சொல்லுறான்னு ஹோட்டல்ல சாப்பிட்டுடாத… வீட்டுக்கு வாங்க.. எல்லாரும் ஒன்னா உக்காந்து சாப்பிடலாம்.. சரியா?”

“சரிங்கத்தை”

“ஆஸ்பத்திரில டாக்டரம்மா என்ன சொன்னாங்க? உனக்குச் சூட்டுவயித்த வலி தானே?” என்று விசாரித்தார் நங்கை.

“ஆமா அத்தை” என பாரதி சமாளிக்கவும்

“நானும் உன் அம்மையும் சொன்னப்ப நீ கேக்கல… இப்ப டாக்டரம்மா சொன்னதும் கேக்குற… சூட்டுவயித்தவலிக்கு தொப்புள்ல நல்லெண்ணெய் வச்சுட்டு வெந்தயத்தண்ணி குடிச்சா போதும்… இதுக்குப் போயி டாக்டருக்கு மொய் எழுதிட்டு வாரிங்க ரெண்டு பேரும்.. இந்தக் காலத்துப் பிள்ளைங்களுக்குப் பெரியவங்க சொன்னா ஒரு அர்த்தம் இருக்கும்னு நம்பிக்கையே இல்ல… சீக்கிரமா வீடு வந்து சேருங்க” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் நங்கை.

மகனும் மருமகளும் வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் நங்கையும் வரதனும் சம்பந்திகளுடன் சென்னைக்கு வந்து அன்றோடு இரு தினங்கள் கழிந்திருந்தன.

அவர்களிடம் பாரதி சைக்கியாட்ரிஷ்டிடம் தெரபிக்குச் செல்வதை எல்லாம் பாலா பகிர்ந்துகொள்ளவில்லை. என்ன தான் பெருந்தன்மையானவர்கள் என்றாலும் முந்தைய தலைமுறைக்குச் சில விசயங்கள் புரியாது. அதைப் புரியவைப்பதை விட சொல்லாமல் இருப்பது சிறந்தது என்று முடிவெடுத்து அன்றைய தினம் தெரபிக்குக் கிளம்பியபோது பாரதிக்குத் தொடர்ந்து வயிறு வலிப்பதால் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை எடுப்பதாக மட்டும் பெரியவர்களிடம் சொல்லியிருந்தான் பாலா.

வீட்டிலிருந்து கிளம்பும்போதும் அப்படி சொல்லிவிட்டுத் தான் கிளம்பினான் பாலா.

பாரதி கணவனிடம் மொபைலைக் கொடுத்தவள் “நம்ம பேரண்ட்ஸ் கிட்ட பொய் சொல்லிருக்கக்கூடாதோ?” என்று கேட்கவும்

“பொய்மையும் வாய்மையிடத்தனு திருவள்ளுவரே சொல்லிருக்கார் குட்டிமா… இந்தக் காலத்து பையன் என்னாலயே உன்னோட பாதிப்பைச் சரியா புரிஞ்சிக்க முடியல… நம்ம பேரண்ட்ஸ் போன ஜெனரேசன்… அவங்க கிட்ட சொல்லி அவங்களைக் குழப்பி அவங்க நம்மளை எதுவும் திட்டுனா மனவருத்தம் தான் மிஞ்சும் குட்டிமா… அவங்களைப் பொறுத்தவரைக்கும் உனக்கு வந்தது சூட்டுவயித்தவலியாவே இருக்கட்டும்… அது தான் நம்ம சந்தோசத்துக்கும் அவங்க மனநிம்மதிக்கும் நல்லது” என்று அவளுக்குப் புரியவைத்தான் பாலா.

கணவனின் கூற்றில் இருந்த தெளிவு பாரதியை அமைதியாக்கியது. பொய் சொல்கிறோமே என்று அவளுக்குள் இருந்த குற்றவுணர்ச்சி அந்தப் பொய் ஆறு பேரின் மனநிம்மதிக்கான அடித்தளம் எனப் புரிந்ததும் காணாமல் போனது.

காரை ஓட்டிக்கொண்டிருந்த கணவனின் தோளில் வாகாகச் சாய்ந்துகொண்டாள் பாரதி.

கானல் பொய்கையில் நீரருந்த அவா கொண்டு தாகத்தில் மடியப்போன பாரதியெனும் அச்சிறுபறவையின் மயக்கம் தீர்த்து கலக்கம் நீக்கி மெய்யான சுனையைக் காட்டி தாகம் நீங்க செய்ததோடு வாழ்க்கையின் தாத்பரியத்தைப் புரியவைத்தவன் பாலா.

சில விசயங்கள் மறைவாக இருப்பதே அழகு! அப்படி இருந்தால் தான் அதன் மீதான ஈர்ப்பும் விருப்பமும் ஆரோக்கியமானதாக இருக்கும். காமமும் அப்படி தான். காமமும் காதலுமின்றி உலகின் எந்த உயிரும் இயங்குவதில்லை. அவை பசி, தாகம் போல இயல்பான உணர்வுகளே தவிர சந்தையில் வியாபாரம் செய்வதற்கான பொருட்கள் இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சாகும் போது காமம் மட்டும் எம்மாத்திரம்? ஆணோ பெண்ணோ அதைத் தவறான முறையில் அணுகுவது மனபாதிப்புக்கு வித்திடும். அப்படி பாதிப்பு உண்டானால் சரிசெய்து கொள்ள அருவருப்போ குழப்பமோ கொள்ளவேண்டாம். இதை பாரதிக்குப் புரியவைத்தவர் பிரியம்வதா.

இந்த இருவர் கொடுத்த இறக்கைகளே பாரதியெனும் சிறு பறவையை கானல் பொய்கையிலிருந்து விலகி பறக்கவைத்து உலகம் மிகப்பெரியதென்ற உண்மையைப் புரியவைத்தன.

தனது பாதுகாவலனான பாலாவுடன் பாரதியின் வாழ்க்கை இனி தெளிந்த நீரோடையாய் செல்லட்டும்!

இனிதே நிறைவுற்றது!

17 thoughts on “கானல் பொய்கை – 17 (Final)”

  1. Kalidevi

    Superb ending . Crt tha intha generation la iruka bala ve itha purinjikala apo eppadi periyavanga purinjipanga so sollama irukurathu best but ellathaium purinjitu bharathi thunaiya irunthu iniku ava recover agi nalla iruka intha mari husband thunai venum. Congratulations

  2. CRVS2797

    வாவ்…! சூப்பர்ப் ஸ்டோரி.
    நல்ல வேளை, பாரதியை புரிந்துக் கொண்டதால் பாலா
    அவளின் அனைத்திற்கும் துணையாக நின்றான்.

    1. ரொம்ப ரொம்ப அழகான அருமையான கருத்தை சொல்லும் கதை கதையை படிக்கும் போது பாரதியை நினைத்து கவலையோடும் கண்ணீர் ரோடும் படித்தேன் சகோதரி அந்தளவு மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது சில காரியங்களே பிள்ளை களிடம் சொல்லகூடாது தவறானது என்று நினைப்பதால் தான் பிள்ளைகள் அதே தேடி அலைக்கிறார்கள் சகோதரி வாழ்த்துகள்

  3. Fellik

    கதையை தொடங்கி முடிக்கும் வரைக்கும் வைக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பாக இருந்தது. இன்னைக்கு எத்தனையோ பேர் கானல் பொய்கைல தான் மூழ்கிட்டு இருகாங்க.

    கதையை பொறுத்தவரை நிஜத்தில் நடப்பதை நச்சுனு சொல்லி இருகாங்க.

    ஒரு தம்பதியர் சைக்கியாட்ரிஸ்ட்ட பாக்க போற சீன்தான் ஆரம்பம். நடப்புல அப்படி போனா பைத்தியம்னு முடிவு கட்டிருவாங்களே.

    தன் மனைவி மேல அன்பா இருக்கும் பாலா அவளுக்கு இப்படி ஒரு மனநோய் இருப்பது தெரிய வரும் போது வெறுத்து ஒதுக்கி வார்த்தைகளை முள்ளாய் கடித்து துப்பும் போது கோவமும் கண்ணீரும் வந்தது. பாரதி பாவம் ஆனாலும் தன்னை மீட்டெடுக்க அவள் மேற்கொண்ட முயற்சிகள் சூப்பர். இருவரும் இணைந்தார்களா பிரிந்தார்களா என்பதை கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். சின்ன வருத்தம் அவன் அவ்வளவு பேசியதுக்கு இவள் பதிலடி கொடுக்கலேயேனு.

    எக்ஸ்ட்ரீம் ரொமான்ஸ் கதைகளை எழுதினா சட்டப்படி ஆக்ஸன் எடுக்கலாம் மக்களே அதுக்கு சைபர்ல கம்ப்ளைண்ட் பண்ணா போதும் ( சைபர்ல கம்ப்ளைண்ட் பண்றதை பற்றி தீரா காதலே கதையில் இருக்கும் யூஸ் பண்ணிகோங்க) னு அருமையான தகவலை சொல்லி இருகாங்க கண்டிப்பா பியூச்சர்ல உபயோகபடும். எழுத்துலக அரசியலின் ஆழத்தை கண்டு அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம் தான்.

    ஆணோ பெண்ணோ ஒழுக்க விதி ரெண்டு பேருக்கும் பொருந்தும். ஆண் என்றால் வயசு கோளாறு பெண் என்றால் ஒழுக்க கேடுனு சொல்ற சமுதாயம் எப்ப மாற போகிறதோ. இதுல பெண்களும் வீடியோஸ் பாக்ராங்கனு சோன்னது எனக்கு ஷாக் தான்.

    எழுத்து நடை ரொம்ப நல்லா இருந்தது. தெளிவான விளக்கம் அழகான காதல் கதையுடன் நிறைவான முடிவு. போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    1. கணவன் மனைவி இருவருக்கும் தெரிய வேண்டிய கருத்துக்களை விரிவாக எழுதியது மிகவும் நிறைவாக இருந்தது.வெற்றி பெற வாழ்த்துக்கள் நித்யா

      1. Superb story. Very nice and clean writing. So much politics in the writing world!!!??!! Big salute and best wishes to every genuine writer.

  4. நல்ல கதை இந்த காலகட்டத்துக்கு ஏற்ற கதை. Congratulations

  5. இன்றைய சமுதாயத்துக்கு தேவையான நல்லகருத்து👍🤝👌👌👌👏👏👏

  6. ரொம்ப ரொம்ப அழகான கதை சகோதரி எல்லா இன்றைய சமுதாயத்தில் இருக்கும் பிரச்சனைகளே அழகாக எடுத்து சொல்லிருங்க சகோதரி பாலா பாரதியை பண்ணின கொடுமையை படிக்கும் மனதிற்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்தது மா எத்தனையோ கதைகள் படித்திருக்கேன் ஆனா அழுதது இல்லை இந்த கதை அதோடு ஒன்றி வாழ வைத்து விட்டது மா வாழ்த்துகள் சகோதரி

  7. ரொம்ப ரொம்ப மெல்லிய உணர்வுகளை அசிங்கமா, அவமானமா உருவக படுத்தாம அத எப்படி கையாளும் நிஜ சமூக பார்வைல பதிவு பன்னது வெகு சிறப்பு நித்தி மா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
    இந்த 21ம் நூற்றாண்டின் கூட மனநலம் சார்ந்த பாதிப்புகளுக்கு வெளிப்படையாக சிகிச்சை என்பது அரிது தான் சுலபமாக பொத்தாம் பொதுவாக பைத்தியம் முத்திரை தான் கிடைக்குது 😤😤😤😤😤😤😤😤😤
    இதில் இன்னொரு அதிர்ச்சி எனக்கு என்ன னா எழுத்துலகில் நடக்குற அரசியல் 😨😨😨😨😨 இப்படி நடக்குதா, இப்படி எல்லாம் கூட இருக்காங்கற மாதிரி நான் இருந்துச்சு எனக்கு வருத்தமும் அதிர்ச்சியாவும் 🥲

  8. மிகவும் அருமையான கதை கரு. அழகான எழுத்து நடை. மிகுந்த பாராட்டுக்கள். தொடர்ந்து இது போன்ற சிறந்த கதைகளை தரவும்

  9. As usual good finish. Waiting for next journey. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *