சவால்
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
பலதரப்பட்ட தளத்திலிருந்து என் தளம் வித்தியாசமாக காட்சியளிக்க வேண்டும். நான் அதற்கான புது விஷயத்தை சிந்திக்க வேண்டும். அது எனக்கு சவாலாக அமைய வேண்டும்.
இந்த one magic word அப்படி தான். எனக்கு நானே சவாலாக ஏற்றுக் கொண்டு தொடரப் போகின்றேன்.
அதாவது ஒரு வார்த்தையில் ஒராயிரம் அர்த்தம் உள்ளது. அந்த ஒராயிரம் வார்த்தையை உள்ளே வைத்திருக்கும் ஒரு வார்த்தை. ஒரு மந்திர வார்த்தையை வைத்து சிந்திக்க தூண்டும் விதமாக எழுதப்படும் விஷயம் இந்த கட்டுரையில் கொடுக்க வேண்டும் என்பதே என் ஆசை.
இன்று நான் எடுத்திருக்கும் தலைப்பிலிருந்தே அந்த மந்திர வார்த்தைகள் எடுத்தாள வந்துவிட்டேன்.
சவால்…
யாருக்கு தான் பிடிக்காது?
நம்மை ஒரு விஷயத்தை செய்ய முடியுமா? என்று எதிர்தரப்பிலிருந்து யாரேனும் தூண்டி விடும்படியாக கேட்டுவிட்டால், அங்கே நமக்கான எழுச்சி நம்முள் தோன்றி, சவாலை ஏற்க வைத்திடும்.
அதற்காக நாம் இரவு, பகல் பசி, தூக்கம் இன்பம், துன்பம் கூட பாராமல் நம் வாழ்க்கையை நோக்கி சவாலில் வெற்றி பெற ஓடுவோம். அத்தகைய சவாலில் நிச்சயம் வெற்றி மட்டுமே நமக்கானது.
இந்த சவாலில் நமக்கு படுதோல்வி கிடைக்கும் அளவிற்கு கூட, சூழ்நிலை பாதாளத்தில் தள்ளும். ஆனால் அதுபோன்ற இக்கட்டில் இருந்தாலும் நம் மனதிற்குள் தோன்றும் தீப்பொறியான சவாலை கைவிடக்கூடாது.
பின்னடைதல் கூடாது.
‘இது தான் கடைசி’, ‘இதோடு எல்லாம் முடிவுற்றது’ என்ற எதிர்மறை எண்ணம் தகர்த்தி, சவாலில் முன்னேற கடைசி நொடி வரை போராட வேண்டும்.
சவால்… சின்ன சின்ன விஷயத்திலிருந்தே நமக்குள் தான் உள்ளது.
உன்னால முடியாது. அவனால் முடியாது. அவளால் நிச்சயம் முடியாது.
இதெல்லாம் செய்ய நேரம் போதாது.
செய்தாலும் வேஸ்ட். தேவையற்ற வேலை.
அப்படி என்ன புதுசு பார்க்க தானே போறேன். என்ற நக்கல் பேச்சு, ஏளனம்.
இவனா(ளா)ல் முடியாதென்று ஒரு கூட்டம் கூறும். ‘முன்னறேவே வாய்ப்பில்லை’ என்ற சொற்கள் மனதை அழுத்தும்.
இதெல்லாம் கொஞ்ச நாட்களுக்கு…
அதன்பின் முற்றிலும் மறைந்திடும் என்ற பலரின் யூகங்களாக பேசப்படலாம்.
இப்படி பலதரப்பட்ட வார்த்தையில் உட்பொருளாக சவால் நம்மை பார்த்து வீசப்படும்.
தெளிவான மனதோடு, சவாலை ஆரோக்கியமானதாக ஏற்று நம்மால் முடியும். நான் நிகழ்த்தி முடிப்பேன், நேரம் போனாலும், இந்த விஷயத்தில் ஏதேனும் நான் கற்றுக்கொள்வேன்.
தேவையற்ற செயலாக இருந்தாலும், அதில் தேவையை புகுத்தி மற்றவர்கள் பார்வையை, பாராட்டை நிச்சயம் பெறுவேன்.
நக்கலும் கேலியும் என்றாவது என்னை பார்த்து பிரமிக்கும். அதுவரை எனக்குள் இதை சவாலாக ஏற்றுக்கொள்வேன் என்ற எண்ணம். எண்ணத்திற்கு பலமாய் நம் செயல்.
இதெல்லாம் சவாலில் வெற்றியை தந்து முகத்தில் புன்னகையை தழுவ செய்யும். ஒரு கர்வம் கூட முகத்தில் மிளிரும்.
ஆம் உனக்கான சவாலில் நீ தோய்ந்திடாமல் பயணித்தால்….
சவால் எல்லாம் சாதாரணமாய் வெல்வோம்.
சவாலை சமாளிப்போம்.
-பிரவீணா தங்கராஜ்.
இதுவொரு தன்னம்பிக்கைக்கு உதவும் வகையில் எழுதப்படுவது. எழுத எழுத ஒரளவு வாசிப்பவருக்கு தேவையானதை தருவேன் என்ற நம்பிக்கை சவாலோடு ஆரம்பித்துள்ளேன்.
Thank u
Super sis
👌👌👌👌👌
super sisy padichathum oru mari boost ah iruku kandipa saval irukanum poradanum vetri kedaikuravarai poraduvom savalodu .