Skip to content
Home » சிநேகம் 4

சிநேகம் 4

திருவனந்தபுரம் டு கொல்லம் நெடுஞ்சாலை

பெரும் அமைதியுடன் சென்று கொண்டிருந்தது அந்த மகிழுந்து. அதில் அமர்ந்திருந்த யாரும் பேசவில்லை. சச்சின் உண்ணி இருவரும் முன்னால் அமர்ந்திருக்க மாளவிகா ஆதவி இருவரும் பின்னால் அமர்ந்திருந்தனர். அங்கு நிலவி இருந்த அமைதியை கலைக்கவென மாளவிகா வாய் திறந்தாள்.

“எத்ர சமயம் ஒந்நும் சம்சாரிக்காதே வாரான்போனு?” ( எவ்வளவு நேரம் எதுவுமே பேசாம வர போறீங்க?)

அதற்கு அவர்கள் எதுவும் கூறாமல் அமைதியை காத்தனர். இதில் கடுப்படைந்த மாளவிகா

“இனி நிங்கள் சம்சாரிக்கான் பறஞ்ஞாலும் ஞான் மிண்டூலா ( இனி நீங்க பேச சொன்னாலும் பேசமாட்டேன்) என்று கோபித்துக் கொண்டாள்.‌ அவளது இந்த பேச்சு சிறு பிள்ளைத்தனமாக தோன்ற தனக்குள்ளே புன்னகைத்துக் கொண்டாள் ஆதவி. அதையும் தாண்டி அவளது பேச்சு ஆதவிக்கு வேறு ஒருவரையும் நினைவுப்படுத்தியது. தன்னுள்ளே எழுந்த அந்த சின்ன முறுவலையும் மறைத்துக் கொண்டவள் முகம் அந்த ஒருவரை நினைத்த பின்பு மீண்டும் இறுகியது. முன் இருக்கையில் இருந்த இருவரையும் நோக்க அது கோபமாகவும் வெறுப்பாகவும் வெளிவந்தது.

அவளது கோபத்தை இன்னும் அதிகரிக்கவே அந்த அழைப்பு வந்தது. அதூ வேற யாருமல்ல. அவளது ஆசை அருமை சகோதரி அத்யாவே தான்.
அழைப்பை ஏற்றவள் “அத்யா நான் திருவனந்தபுரம் வந்துட்டேன் இங்கிருந்து கொல்லம் போயிட்டு இருக்கிறேன்” என்று கூற

அத்யா ” ஆ பாத்து பத்திரமா போ” என்று கூறினாள்.

ஆதவியும் “சரிடி நான் போயிட்டு மெசேஜ் பண்றேன் “என்றவள் அழைப்பை துண்டிக்க முயல அதை தடுத்த அத்யா “ஆது நான் சொல்றத பொறுமையா கேளு, என்ன நடந்தாலும் நிதானமாயிரு. உன் பொறுமையை கைவிட்றாத. எதுக்கும் கோபப்படாதே.. நீ அங்க போய் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் யார வேணா பாக்கலாம் ஆனால் அமைதியாகவே கடந்து போ” என்று அறிவுரை கூறிட அதில் கடுப்படைந்த ஆதவி ” எத்தனை பேர் பிளான் பண்ணீங்க? யார் கூட நீயும் கூட்டு சேர்ந்த? ” எனக்கத்திட முன்னால் அமர்ந்திருந்த சச்சினும் உண்ணியும் ஒருமுறை திரும்பி ஆதவியைப் பார்த்தனர். அவளது கோபம் பற்றி அவர்கள் நன்கு அறிந்திருந்ததால் எந்த பொழுது அமைதியை கடைபிடிக்க வேண்டும், எப்பொழுது பேச வேண்டும் என‌ அறிந்திருந்தனர். அவர்களது அமைதி ஆதவி இன்னும் கடுப்பாக்க அந்தக் கோபத்தையும் அத்யாவிடம் காட்டினாள்.

” அதான் எல்லாரும் சேர்ந்து பிளான் பண்ணி உங்க விருப்பத்துக்கு எல்லாம் நடக்குதுல.. அப்புறம் எதுக்கு இன்னும் அமைதியா இருக்காங்க எதுக்கு என்னை கூட்டிட்டு போறாங்கனாச்சு சொல்ல சொல்லு” எனக்கத்திட இனி அவர்கள் அமைதியாக இருந்தால் அவர்களுக்கு நல்ல வார்த்தைகள் அபிஷேகம் உறுதி என உணர்ந்தவர்கள் அவளிடம் பேச்சு கொடுக்க ஆரம்பிக்க அவளோ அவர்கள் பேசுவதை கேட்க ஆரம்பித்தாள்.

“ஆதவி.. இப்ப நீ எதுக்கு இவ்ளோ எமோஷனல் ஆகுற? …‌ முதல்ல உனக்கு என்ன பிரச்சனை அதை சொல்லு எதுக்கு எங்க எல்லாரையும் ஒதுக்குற? ஏன் இங்கு யார்கிட்டயும் பேச மாட்டேங்குற நாங்க என்ன பண்ணோம்? அவ ஒருத்தி எல்லாரையும் தூக்கி எறிஞ்சிட்டு போனதுக்கு எங்கள எதுக்கு பனிஷ் பண்ற” என நிதானத்துடனே கேள்வி கேட்டான் சச்சின். அதற்கு ஆதவிடமிருந்து பதில் வராமல் போக
சச்சினைத் தொடர்ந்து உண்ணியும் பேசினான்.

” இப்போ நாங்க உன்னை எங்க அழைச்சிட்டு போறோம் அது தெரியணும் அவ்வளவு தானே, அத்யா உனக்கு பிஜி எதுவும் பார்க்கவில்லை. கொல்லம் அடூர் பக்கத்துல மாளவிகா ஒரு ப்ளாட்ல தனியா ஸ்டே பண்ணி இருக்கா அங்க அவ கூட தான் நீயும் தங்க போற” என்று கூறிட அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள் ஆதவி. ஏனெனில் அவள் நன்றாக அறிந்ததே… இவர்களை கண்டபின் அவர்கள் அவளை கட்டாயம் தனியாக தங்க அனுமதிக்க போவதில்லை‌. ஆனால் இதில் அதிர்ச்சி என்னவென்றால் அத்யாவும் அவர்களுடன் கூட்டு சேர்ந்தது. “இருக்கு அத்தி உனக்கு ” என தன் மனதுக்குள் கூறிக்கொண்டவள் அமைதியாகவே அமர்ந்தாள்.

“இவ்ளோ பேசியும் வாய் திறக்கிறாளா பாரு” என உண்ணியிடம் கூறினான் சச்சின்.

தனது நண்பர்களையே தவறாக நினைத்ததை எப்படி சொல்வாள் அவள்? அவர்களை தவறாக நினைத்த குற்ற உணர்ச்சி தானே இத்தனை நாள் அவளை அவர்களிடம் இருந்து ஒதுங்க வைத்திருந்தது. அதனாலேயே இப்பொழுதும் அதே அமைதியை கடைப்பிடித்தாள். குற்ற உணர்ச்சி ஒரு புறம் இருந்தாலும் அவர்களை அவள் குற்றம் சுமத்திய நிகழ்விற்கு விடையெதுவும் கிடைக்காத காரணத்தினால் ஒருபுறம் கோபமும் வெறுப்பும் இருக்கத்தான் செய்தது. அதைக் காட்டிலும் இவள் பேசவில்லை ஒதுங்குகிறாள் என தெரிந்ததும் அவர்கள் ஒதுங்கியது அவளை இன்னும் வருத்தியது. கொஞ்சம் ஈகோவும் அவளுள் சுழன்றடிக்க மொத்த குழப்பங்களும் அவளை புயலாய்படுத்தியது.

சச்சினும் உண்ணியும் இவ்வளவு இறங்கி வந்து பேசியும் அவள் பேசாத காரணத்தினால் மீண்டும் அமைதியே கடைபிடித்தனர் இருவரும். காதலாயினும் நட்பாயினும் சுயமரியாதை மிகவும் அவசியம் என நினைப்பவர்கள் அவர்கள். முக்கியமாக அதை அவர்களுக்கு கற்பித்தவளே ஆதவி தான். அதனாலயே கடந்த காலத்திலும் இப்பொழுதும் ஒரு முறை இறங்கி வந்தவர்கள் இவளிடமிருந்து எந்த எதிர் வினையும் கிடைக்காது போக மீண்டும் அமைதியே கடைபிடித்தனர்.
ஒன்றரை மணி நேரம் கடந்த பின் அவர்கள் சேர வேண்டிய இடம் வந்ததும் மாளவிகா,ஆதவி இருவரின் உடமைகளை எடுத்து அந்த வீட்டில் ஒழுங்கு படுத்தியவர்கள் சற்றும் தாமதிக்காது மாளவிகாவிடம் கவனமாக இருக்க கூறிவிட்டு ஆதவியிடம் கடமைக்கு அறிவித்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டனர்.

இத்தனை நேரம் அழுத்தமாக இருந்த ஆதவிக்கு இதற்கு மேலும் அப்படி இருக்க முடியவில்லை. அதனாலயே தனக்கென ஒதுக்கப்பட்ட அறையை கேட்டறிந்து அவ்அறைக்கு சென்றவள் கதவைத் தாளிட்டு கொண்டாள். அவளுள்ளே ஓராயிரம் யோசனைகள். ஓவர்திங்க் ராணி போலும்.

ஹாலில் கேட்ட சத்தத்தில் யோசனை கலைய அவளுக்கு தெரியும் நண்பர்களில் இருவரை இன்று கண்டவள் கூடிய விரைவில் மற்ற அனைவரையும் காணத்தான் போகிறாள். ஆனால் எங்கே எப்போது என்பது அவள் அறியா வினாவாக இருக்க நடப்பது நடக்கட்டும் காலத்தோடு நாமும் பயணிப்போம் என மனதுக்குள் நினைத்து தனது அடுத்த வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். ஆனால் அவள் அறியாதது அவள் சில நாட்கள் கழித்து எதிர்பார்த்திருந்த
அந்த சந்திப்பு மறுநாளே நிகழப் போகின்றது என்பதும், எதிர்பாராதது அப்படி நிகழ்கையில் அதற்கு அவளது எதிர்வினை என்னவாக இருக்கும்? இனியும் தன் கூண்டுக்குள் ஒடுங்கிப் போவாளா இல்லை, பறக்கும் பட்டாம்பூச்சியாக அவளை சிறகடிக்க வைப்பார்களா?

சிதறி நின்ற அந்த பட்டாம்பூச்சிக் கூட்டம் தங்கள் கடந்த கால நினைவலைகளில் சிறகடிக்க முயல சிதறி இருந்த அந்த அறுவரின் நினைவுகளிலும் வந்து புன்னகை செய்தவள் அவள். அழகான அன்பு கூட்டம் இப்படி பிரிய காரணமானவள்.
அவள் காரணம் என்பதை விட அவளது பிரிவு இவர்களையும் பிரிய செய்தது. காலம் இவர்களின் நட்பு வட்டாரத்தை எங்கனம் மீட்கும் என்பதை வரும் அத்தியாயங்களில் அறிந்து கொள்வோம்

3 thoughts on “சிநேகம் 4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *