அதிகாலை வானம் மஞ்சளா சிவப்பா என புரியாத அளவிற்கு வருண் நிகழ்த்தும் யாவும் நட்பா காதலா மேலும் இவை எல்லாம் எதற்காக என புரியாமல் தவித்துக் கொண்டு இருந்தாள் பேதையவள்…
ஏனெனில் இன்று காலை ஒன்பது மணி அளவில் தாய் மடி தேடிடும் கன்றுகளின் குரல், பதிலுக்கு பால் கொடுக்கும் பசு…
குஞ்சுகளுக்கு இறைத் தேடி செல்லும் பறவைகள்… முதிர்ந்த இலைகளை உதிர்த்து விட்டு பிஞ்சுகளை உருவாக்கும் மரங்கள்… என மதி காணும் அத்தனையிலும் தாய்மையின் சாயலே தெரிந்திட, பெண்ணவளுக்கு கூட அழுகையும் வந்தது.
“ஐயம் ரியல்லி மிஸ் யூ ம்மா….
மிஸ் யூ ப்பா..
ஏன் என்ன மட்டும் விட்டு போனீங்க….
என்னையும் உங்க கூட கூப்டு போயிருக்க வேண்டியது தானே….
நீங்க இருந்திருந்தா மாமா வீட்டுக்கு நான் போயிருக்க மாட்டேன். இப்படி மாமா குடும்பம் பிரியக்கூடாதுன்னு இன்னக்கி உங்க சமாதிக்கு கூட வரமுடியாத அளவுக்கு யாரும் இல்லாத அனாதையா ஆகியிருக்க மாட்டேன்….
என அழுது தவித்தவள் தன் கண்களை துடைத்து கொண்டு வேறு பக்கம் பார்வையை திருப்பிட ஒரு வாரமாக அவள் கண்களில் அகப்படாமல் எங்கே அகப்பட்டால் அன்று குமாருடன் பேசியதற்கான காரணத்தை கேட்டு விடுவாளோ என முடிந்த அளவிற்கு வெளியே நின்ற படியே ஹாய் மதி, பை மதி என விடைப்பெற்றுக் கொண்டிருந்த வருண் இன்று அவள் கண்கள் முழுவதிலும் நிறைந்து நின்றிருந்தான்.
அவனை அங்கு சிறிதும் எதிர்பாராத மதி சட்டென திடுக்கம் அடைந்தவளாக அவள் அமர்ந்திருந்த நெகிழி நாற்காலியில் இருந்து எழுந்தாள்…..
ஒரு வாரமாக அவனைத் தேடியதை இன்று அவள் துக்கத்தில் மறந்துப் போனாள்.
“வாங்க வருண். என்ன இன்னக்கி ஆஃபிஸுக்கு போகலையா?….”
என்று வினவ,
“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா மதி?…..”
என்று கேட்டான் ஆடவன்.
“எது ஹெல்ப்பா?…
நான் என்ன….
பண்ண?…..”
என்று குழப்பத்துடன் மதி கேட்டிட,
“நம்ம பழைய ஊருல ஒரு லாண்ட் வந்திருக்கு…..
ரொம்ப நாளா கேட்டு வச்சிருந்தது தான்….
அம்மாவுக்கு அங்க போய் தான் லாஸ்ட் டேஸ ஸ்பென்ட் பண்ணனும்னு ஆச…..”
என்றவனைக் கண்ட மதி இவன் என்ன கேட்க வருகிறான் என யோசித்தாள்.
“அதுக்கு நான் என்ன பண்ணனும்?…..”
என்று தெளிவில்லாமல் கேட்கவும் செய்தாள்.
“நீ எதுவும் பண்ண வேண்டாம்….
அங்க லாண்ட் கொடுக்குறவங்க கொஞ்ச செண்டிமெண்ட் பாப்பாங்க…
அவங்க பொண்ணோட மேரஜ்க்கு பணம் கேட்ருந்தாங்க.
இப்ப தனியா நான் பணத்த கொடுக்க வர்றத விரும்ப மாட்டாங்க.
அம்மா இருந்திருந்தா நோ ப்ராப்ளம்….
பட் இப்ப அம்மா இல்ல…
அவங்க செண்டிமென்டா லேடீஸ் கையில இருந்து தான் பணம் வாங்குவாங்க.
சோ…….”
என்று வருண் இழுக்க, மதிக்கு அவன் கூற வருவது புரிந்தது.
அதை விட அவன் சொன்னக்காரணம் அவளுக்கு மிக்பெரிய விடயமாக பட்டது.
“எங்க ஃபேமிலி ல ஒரு ஆளா அட்வான்ஸ் கொடுக்க மட்டும் வந்தா கொஞ்ச நல்லா இருக்கும்….
மீதி அமௌண்ட நானே பாத்து தனியா கொடுத்திடுவேன்…….”
என்று கூறவும் மதிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
இன்று எந்த ஊருக்கு அவள் செல்ல முடியாமல் தவித்தாளோ அதே ஊருக்கு ஒரு நல்ல விடயத்திற்காக தன்னை அழைக்கிறானே….
அங்கே செல்லலாமா….
வேண்டாமா?…
அதுவும் அவனின் அன்னைக்கு பதிலாக அவன் அவளை அழைக்கும் போது…..
இன்று அந்த ஊருக்கு சென்றே ஆக வேண்டும் என இருக்கிறது போல நினைத்தவள் சரி செல்லும் வழியில் அன்னை தந்தையின் சமாதியை கண்டு விட்டு செல்லலாம்….
அங்கே தாத்தா பாட்டியின் அரவம் தெரிந்தால் அப்படியே வந்து விடலாம் என முடிவெடுத்தவளாக சரி வருண், வர்றேன்….. என்றாள்.
“ஒரு ஃபிஃப்டின் மினிட்ஸ் டைம் கொடுத்தா நான் போய் ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வந்துடுவேன்……”
என்று அனுமதி கேட்டாள்.
வருணும்,
“சரி நீ சேஞ்ச் பண்ணிட்டு வா…..
நான் கார்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன்…….”
என்று தன் மகிழுந்தின் பக்கம் சென்றவன் அவள் சொன்ன கால் மணி நேரம் தாண்டி இருபத்தைந்து நிமிடங்கள் கழித்து வருவதை கண்டான்.
பச்சை நிற பட்டு சுடிதார்.
அடக்கடவுளே சுடிதார் தான் போட்டு வர்றா…
இதுக்கு இவ்ளோ நேரமா?…
டேய் வருண் ஃபியூச்சர்ல இன்னும் நீ வெயிட் பண்ண வேண்டியது போல இருக்கே டா….. என நினைத்தவன் அவள் அருகில் வர வர அவளை உற்று நோக்கினான்.
“ஐயம் ரெடி வருண்……”
என்றவளுக்கு கதவை திறந்து அமர வழி செய்திட, இருவரும் அமர்ந்தனர்….
மகிழுந்து கிளம்பியது…….
பயணமும் தொடங்கியது.
ஆனால் இருவரும் எதுவும் பேசிக் கொள்ள வில்லை.
காரணம்
மதி முழுக்க முழுக்க தன் அன்னையின் நினைவு நாளின் சிந்தனையிலே இருந்தாள்.
இன்று காலை வரை அவள் தான் ஊருக்கு செல்ல வேண்டாம்…
ஒருவேளை அங்கே தன் குடும்பத்தினரை கண்டு விட்டால் தன் தாத்தா பாட்டி இருந்து விட்டால்…
அவர்களை எதிர் கொள்ள எனக்கு துணிவில்லையே….
வேண்டாம் வேண்டவே வேண்டாம்…. என்று அழுதபடி தாய் தந்தையின் நினைவில் அழுதுகொண்டு இருந்தாள்.
ஆனால் ஆடவன் வந்து உதவிக் கேட்கவும் மனதில் ஓரத்தில் லேசாக ஒரு தைரியம் கிளம்பியது….
வருணோட வொர்க் முடிஞ்தும் அவர் கிட்ட பெர்மிஷன் கேட்கனும்….
கடவுளே அதே நேரம் தாத்தா பாட்டி வந்திருந்தாலும் அவங்க எனக்கு முன்னாடி வந்துட்டு போயிடனும்…
என ஏகப்பட்ட கற்பனையான எண்ணங்களுடன் அவனுடன் பேசாமல் பயணித்தாள்.
அதே போல வருணும் அவளின் மனவோட்டத்தை புரிந்தானோ என்னவோ, அவளை தொந்தரவு செய்யாமல் தனக்கு பிடித்த யுவன் ஹிட்ஸுகளை ப்ளூடூத் வழியாக கேட்டபடி ஹம்மிங் செய்து கொண்டு வாகனத்தை இயக்கிட, மகிழுந்தானது சீறிக்கொண்டு ஒரு மணி நேரத்தில் அவர்களின் சொந்த ஊரை அடைந்தது.
இன்னும் ஒரு அரை மணி நேரம் பயணித்தால் இவர்கள் தங்கியிருந்த இல்லம் வந்துவிடும்.
ஆனால் அங்கு இவர்களுக்கு வேலை இல்லாததால் மனைப்பகுதிகள் போன்ற இடங்களை வருண் கடந்து செல்ல சிறிது நேரத்திற்கு பிறகே மதிக்கு வாகனம் சென்றுக் கொண்டிருக்கும் இடம் புரியத் தொடங்கியது.
இந்த பக்கம் தானே அம்மா அப்பா சமாதி இருக்கு….. என வருணிடம் கேட்க தயங்கிக் கொண்டே முதுகை நிமிர்த்தி அமர்ந்தவள்,
“வருண் இந்த பக்கம் தான் நீங்க வாங்க போற லேண்ட் இருக்கா?……”
என்று கேட்டிட,
“இல்ல மதி லேண்ட் எல்லாம் இல்ல…
அது சும்மா உலுலாய்க்கு……”
என்று சிரித்தான் வருண்.
மதிக்கு ஒன்றும் புரியவில்லை….
என்ன இவன் உலர்றான்….. என அவனின் முகத்தை கண்டுக் கொண்டே யோசித்தவள்,
“ரொம்ப யோசிக்காத….
உன் தாத்தா பாட்டி உனக்காக வெயிட் பண்றாங்க… வா……”
என வாகனத்தை நிறுத்தினான், மகிழுந்தில் இருந்து இறங்கினான்.
சட்டென சீல்ட் பெல்ட்டை கழட்டிக் கொண்டு மதியும் இறங்கிட, பின் பக்க சீட்டில் இருந்து ஒரு மாலை மற்றும் ஒரு நெகிழிப் பையை எடுத்தான்.
“இந்தா இதுல மால, இதுல ட்ரஸ் இருக்கு….
சீக்கிரம் போ…
ஐயர், தாத்தா பாட்டி எல்லாம் வெயிட்டிங்….”
என்றிட, மதிக்கு கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
துடைக்க தெரியாமல் அவன் அளித்த பைகளை பார்த்தவள்,
“இதெல்லாம் ஏன் என் கிட்ட முன்னாடியே சொல்லலல…..”
என்று குரல் கம்ம கேட்கவும்,
“முன்னாடியே சொன்னா நீ வந்திருப்பியா?…
இல்ல வருண் நான் வர மாட்டேன்…
என்னால என் மாமா ஃபேமிலி பிரியக்கூடாதுன்னு டயலாக் பேசுவ.
ஆனா அம்மா அப்பாவுக்கு அஞ்சலி செலுத்த முடியலுன்னு அழுவ…
அதனால தான் இதெல்லாம் உன்கிட்ட முன்கூட்டியே சொல்லல….”
என்று அவன் கூறிட, மதி அவனை வித்தியாசமாக பார்த்தாள்.
“என்ன பாக்குற….
இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரியும்னு தானே.
உன் ஃபர்ண்ட் மரகதம் தான் உன்ன பத்தி சொன்னா…
அன்னக்கி அவ நீ வேலய விட்டு போனதுக்கு மெயின் ரீசனே இது தான்னு அவ சொன்னதும் எனக்கு உன் மேல கோபம்.
ஏதோ ஒரு பழமொழி சொல்வாங்க அந்த காலத்துல…
கொசுக்கு பயந்து யாரோ கோட்டைய விட்டுட்டு போனானாம்.…
அந்த மாதிரி இருந்தது நீ செஞ்சது….
உனக்கு உன் அம்மா அப்பா சமாதிய பாக்குனும்னா உன் தாத்தா இமெயில் பண்ணியிருந்தா உடனே நீ அவருக்கு ரிப்ளை பண்ணி இங்க வர சொல்லாம மாமா மாமான்னு வசந்துக்கு பயந்து உட்கார்ந்தது பெரிய தப்பு மதி…
நீ ஒன்னும் உன் மாமா கிட்ட போய் பேசி அவர் ஃபேமிலிய கொலாப்ஸ் பண்ண போறது இல்லையே…..
உன் தாத்தா பாட்டிய சத்தம் இல்லாம சமாதிக்கு தானே வரவைக்க போற..
அதுல என்ன உனக்கு ப்ராப்ளம்?….”
என்று ஆடவன் கேட்டிட, சத்தியமாக மதிக்கு இந்த யோசனைகள் தோன்றவில்லை.
ஏனெனில்
ஏதேனும் ஒரு சூழ்நிலையில் இது சிவாவிற்கு தெரிந்து விடுமோ என்று நினைத்தவள் அவளை தூரத்தில் இருந்து கண்டதும் தன்னை நோக்கி அரக்க பறக்க வரும் இரண்டு ஜீவன்களை கண்டாள்.
அவள் வயதிற்கு ஓடிச் சென்று அவர்களை கட்டி அணைத்து கண்ணீர் மழை பொழிந்தாள்.
அவர்களின் செல்ல அடிகளை பெற்றாள்.
வசந்த் பற்றி ஏன் முறையிடவில்லை என்றவர்ளை அடக்கினாள், வருண் பற்றி அவர்கள் கேட்டதற்கு நண்பன் என்றாள்.
ஆனால் அனைத்தும் முடிந்து ஒரு வித மனநிறைவுடன் இருவரும் அவரவர்களின் இல்லம் திரும்பிக் கொண்டிருந்த போது ரேணுகா அழைத்தார்….
அங்கே இரவு நேரம் என்றும் மதியின் பெற்றோருக்கு அஞ்சலி செலுத்தி விட்டீர்களா என கேட்க, மதிக்கு வருணின் மேல் லேசாக சந்தேகம் எழுந்தது.
ஆனால் அலைபேசியில் ரேணுகா அழுவதாக வருண் சமன் செய்வதில் தெரிய,அவன் அலைபேசியை வைத்ததும்,
“அம்மாக்கு தம்பிய பாக்கும் போது எல்லாம் அப்பா நினப்பு வருதாம்.
கௌரி அக்கா பையனோ பொண்ணையோ பாக்க அப்பா ரொம்ப ஆசப்பட்டாரு.
அவர் இருந்திருந்தா இன்னும் நல்லா இருக்கும்னு அம்மா ஃபீல் பண்றாங்க…”
என்று அவனும் முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு கதைக்க, தாய் தந்தை என இரு உயிர்களையும் பறிக் கொடுத்த மதிக்கு அவனின் வலி நன்றாக புரிந்தது.
“ம்ம் அங்கிள் மாதிரி ஒருத்தர ஆன்டி மிஸ் பண்ணாம இருந்தா தான் அதிசயம்….
என்ன தான் ஆன்டி மேல அங்கிள் க்கு லவ் இருந்தாலும் கௌரி அக்காவையும் அவர் சொந்த பொண்ணா பாத்தது தான் பெரிய விஷயமே..
எனக்கு சின்ன வயசுல இதெல்லாம் புரியல.
கௌரி அக்கா மேரேஜ் ல தான் எனக்கு புரிஞ்சது…
அவர் நினச்சா, ஏதோ ஒரு சாதாரண சம்பந்தம், சுமாரான மாப்பிள்ள, சிம்பிளா மேரேஜ் அப்படின்னு பண்ணியிருக்கலாம்.
ஆனா சொந்த பொண்ணுக்கு செய்யுற மாதிரி நல்லா ஃபேமிலி, அமெரிக்கா ரிட்டன், கிராண்டா மேரேஜ்ன்னு செஞ்சது க்ரேட்..
அதுவும் பழைய அக்கம் பக்கத்தில எல்லாம் கூப்டு யாரையும் மறக்காம….
வெரி குட் பெர்சன்…..
நம்ம ஏரியால காலி ஆகி போன நிறைய பேர அன்னக்கி தான் நான் பாத்தேன்.
ஒரு ரியூனியன் மாதிரி இருந்தது…..”
என்று தன் தந்தையை பெருமையாக பேசும் பெண்ணை வருண் கண் கொட்டாமல் ரசித்திட,
“அன்ட் நீங்களும் தான்….
பாட்டி எல்லாம் உங்கள பத்தி தான் பேசுனாங்க.
அரக்க பறக்க ஓடி ஆடி வேல பாத்துட்டு இருந்தீங்க…
நாங்க எல்லாம் வந்தோமான்னு கூட கண்டுக்கல….
என்று அவள் விளையாட்டாய் சிரித்தபடி கூறவும்,
“ஏன் பாக்கல..
அதெல்லாம் நல்லா கவனிச்சேன்….
ப்யூர் க்ரீன் கலர் ஃபுல் ஹேண்ட் சுடிதார்ல இதோ இந்த சுடிதார் தான்….”
என இன்று அவள் அணிந்திருந்த சுடிதாரை கை காட்டியவன்,
“டாப் டூ பாட்டம் வர எல்லா ஆக்ஸஸரீசும் க்ரீனலையே போட்ருந்த……
உன் நெத்தியில இருந்த கல் வச்ச பொட்டு முதற்கொண்டு க்ரீன் கலர்….”
என்று கூறியவன் மதி அவனை குழப்பமாக கண்ட நேரத்தில் வீடு வந்திருச்சு…..
எனக்கு ஒரு வேல இருக்கு….. என அவளை இறக்கி விட்டு சென்றிட,
உன் நெத்தியில இருந்த கல் வச்ச பொட்டு முதற்கொண்டு க்ரீன் கலர்…. என்ற வார்த்தையின் மதியின் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.
இந்த அளவுக்கு என்ன நோட் பண்ணியிருந்தானா?….
அதுவும் அம்மா சேலையில தச்சதுன்னு இன்னக்கி போட்டத முதற்கொண்டும் பார்த்து சொல்றான்னா?…..”
என அவள் யோசித்துக் கொண்டு இருக்க, அவளின் அலைபேசிக்கு ஆடவன் அழைத்திருந்தான்.
மதிக்கு முதலில் தயக்கமாக இருந்தது.
ஆனால் இன்று தனக்கு தன் தாய் தந்தையரையும் , தாத்தா பாட்டியையும் சென்று காட்டி வந்தவன் என எண்ணம் மேலோங்க சட்டென அழைப்பை ஏற்றாள்.
“ரெண்டு பேரும் மதியம் எதுவும் சாப்பிடலன்னு சரவண பவன் ல மீல்ஸ் வாங்கியிருக்கேன்….
எதுவும் ப்ரீப்பேர் பண்ணிடாத….
பத்து நிமிசத்தில அங்கிருப்பேன்…..”
என்று கூறி விட்டு அழைப்பை துண்டிக்க, மதிக்கு நன்றாக உறுதி ஆனது வருண் தன்னை ஒரு தலையாக காதலிக்கிறான், அதுவும் தனக்கு தெரியாமல் கௌரியின் திருமணத்திற்கு முன் இருந்து விரும்பியிருக்கிறான் என்று..
அதனால் தான் தான் வைத்த கல் பொட்டின் நிறம் முதற்கொண்டு அவனுக்கு நினைவிருக்கிறது என நினைத்தவளுக்கு அவன் அளித்த போதனை நினைவுக்கு வந்தது.
ஆம் முன் பக்கம் சரியில்லை என்றால் பக்கத்தை மாற்று, புத்தகத்தை மூடாதே என்றானே… என மதி நினைத்துக் கொண்டு அமர்ந்திருக்க கதவு தட்டப்பட்டது….
பெண்ணவளுக்கு தெரிந்து போனது…
உணவுடன் வருண் வந்திருக்கிறான் என…
அப்படியெனில் இவன் தான் புதிய பக்கமா என நினைத்தது அவளின் மூளை..
அதே நேரம், ஏன் புதிய பக்கமாக அவன் இருந்தால் என்ன?….
உன் தேவைகள் என்ன?….
உன் விருப்பு வெறுப்புகள் என்ன?…
என அறிந்து உனக்கு உறுதுணையாக இருக்க அத்தனை தகுதியும் அவனுக்கு இருக்கிறது என மூளைக்கும், மனதிற்கும் இடையே நின்றிருந்த மதி ஒரு முடிவுடன் தட்டாதே திறக்கிறேன் என தன் மனக்கதவையும் சேர்த்து அவனுக்காக திறந்திட……
வாயப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்…..
நன்றி
வணக்கம் 🙏
அதிக அளவில எதிர்பார்ப்பு மிக்க கதை இல்ல…
முதல் காதலில் தோல்வி அடைந்த பெண்ணின் மனக் கதவை திறந்திடும் கதை தான்….
முடிந்த அளவிற்கு சுவாரஸ்யம் தந்துருக்கிறேன்..
பிடித்திருந்தால் படித்து விட்டு ஆரோக்கியமான விமர்சனங்களை தாருங்கள்.
Super super😍😍 Good and super finishing👏👏👏
Nice
Nice story
Spr sis….. Feeling good story 👌👌👌👌👌💕💕💕💕💕💕💕
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Short and sweet story, keep writing.