தட்டிக்கொடு
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
பிள்ளைகளை வளர்ப்பதில் அப்பா அம்மாவோட முக்கிய வேலையில் ஒன்னு தட்டிக்கொடுக்கறது.
எந்த காரணம் என்றாலும், எந்த வித சோகத்திலும் மனசொடிந்து தன் பிள்ளைங்க சோர்வா இருக்கறப்ப தட்டிக்கொடுத்து ஆதரவா பேசுவாங்க.
பெரும்பாலும் பெற்றவர்கள் தட்டிக்கொடுப்பதில் எந்த குறையும் இருக்காது. ஆனா வளர வளர நம்ம வீட்டை தாண்டி பள்ளிக்கு போகுமா போது, பள்ளிக்கூடத்தில் நம்மளை போல ஐம்பது மாணவ மாணவிகள் இருப்பாங்க. அதில் எல்லாருக்கும் பாடம் புகட்டும் ஆசிரியர், ஒரு சில மாணவர்களுக்கு தட்டிக்கொடுத்து அறிவுரை சொன்னா முன்னுக்கு வருவாங்கன்னு தெரியும். அந்த மாணவ மாணவிகளை மனம் திறந்து பாராட்டி, சியர் அப் செய்யும் வார்த்தைகளை வழங்கி தட்டிக்கொடுப்பாங்க.
இது அந்த பர்டிகுலர் மாணவ மாணவிகளுக்கு எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா? துவண்டு வருந்தும் போது, நமக்காக ஒருத்தர் முன் வந்து ‘உன்னால முடியும் நீ செய்துடுவ. இன்னும் நல்லா செய்யணும்’ என்ற ஆக்கப்பூர்வமான வார்த்தையில் தட்டிக்கொடுத்து சென்று விடுவார்கள். இது அவர்களுக்கே நினைவேட்டில் இருக்காது. ஆனா மோட்டிவேஷன் தேவைப்படும் சிலருக்கு அந்த தட்டிக்கொடுத்து அப்ரிஷேட் செய்த நபரோட வார்த்தைக்கு அத்தனை வலிமையானதா ஏற்று வாழ்க்கையை வாழ்வாங்க. ஒவ்வொரு முறையும் தட்டிக்கொடுத்த நபரின் வார்த்தைகள் மந்திரமா முன்ன வந்து, ஒரு உத்வேகத்தை தரும்.
சரி எப்பவும் அப்பா அம்மா, உறவினர், ஆசிரியர், வயதில் பெரியவர்கள் இப்படி யாராவது வந்து தட்டிக்கொடுத்தா தான் நமக்கான உத்வேகம் வரணுமா? ஏன் நம்மை நாமே தட்டிக்கொடுத்து பாஸிடிவ் வைப்பை உருவாக்க முடியாது.
தன்னை தானே மெருக்கேற்ற தெரிந்தவனுக்கு, தட்டிக்கொடுத்து சரிதவறை ஆராய்ந்து பழகுபவருக்கு, இந்த உலகத்தில் எந்த துயரம் சோர்வு வந்தாலும், போராடும் வலிமை கூடும்.
எந்த சூழ்நிலையிலும் சட்டுனு துவள மாட்டாங்க. தன்னை தானே தட்டிக் கொடுத்து அடுத்த கட்டம் என்ன? அதில் தன்னை நுழைத்து கொள்வார்கள்.
எப்பவும் ‘தன் கையே தனக்குதவி’ன்னு இதை பழமொழியாகவும் கேள்விப்பட்டிருப்போம்.
உனக்கான உத்வேகம் கூட நீயே உன்னை தட்டிக்கொடுத்து வழிநடத்தும் போது அங்க சோர்வு ஏமாற்றம் வலி எதுவும் இருக்காது. கடந்து போக, ஏமாற்றத்தை தாங்கிக்க, சோர்வை களைய, நம்மிடமே அந்த அபூர்வமருந்து இருக்கும் போது, வேறன்ன வேண்டும் சொல்லுங்க.
தட்டிக்கொடு…
தளராது உழை,
பிறர் உன்னை உதாரணமாக பேசும் வரை,
ஓய்ந்திடாம கடைசிவரை போராடு.
தட்டிக்கொடு… உன்னை போல இருக்கும் மற்றவர்களுக்கும்….
-தொடரும்.