தீரனின் தென்றல் – 60
- Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
தீரன் சைட்டுக்கு வரும் வழியில் வண்டியை நிறுத்தி தென்றலுக்கு ஜூஸ் ஒன்றை வாங்கி வந்து தர எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டாள் தென்றல். அப்படியே அவளுக்கு பிடித்த டெயரி மில்க் சாக்லெட் ஒன்றை எடுத்து நீட்ட
“வேண்டாம்” என்று மறுத்தாள்.
“ப்ளீஸ் தென்னு… உனக்கு இது பிடிக்கும் ல… ஒரு காலத்துல தினமும் இதை உனக்கு வாங்கி கொடுப்பேன்… இதை நீ வாங்கிக்கிட்டா எனக்கு கொடுத்த மன்னிப்பா எடுத்துப்பேன் உனக்கு அதுல விருப்பம் இல்லாட்டி வேண்டாம்” என்று ஆதீரன் சொல்ல
“இல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல… புவிக்குட்டிக்கும் சாக்லேட் ஸ்வீட் இதெல்லாம் பிடிக்கும். ஆனா அவ ஹெல்த் கன்டிஷன்னால தரதில்லை… அதனால நானும் இதெல்லாம் இப்போ சாப்பிடுறதே இல்ல…” தான் மறுத்ததற்க்கு தென்றல் காரணம் சொல்ல தீரனும் சோகமானான்.
“பூர்வி ஆசைப்பட்டதை கூட சாப்பிட முடியாது பாவம் ல.. ஒருவகையில பெத்தவங்க நாமளும் அதுக்கு காரணம் ஆகிட்டோம் ல” என்று ஆதீரன் வருந்த
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல… அது என்ன அவ்வளவு ஹெல்த்தியான ஃபுட் கூட இல்லையே.. இப்போ என்ன நான் இதை வாங்கிக்கனும்… கொடுங்க” என்று வாங்கியவள் கொஞ்சமாக கடித்து சுவைத்தாள் இன்னட்டை…
மேலும் அடிக்கடி தென்றலுக்கு பிடித்த பாடல்களை அவள் இல்லாத நேரத்தில் ஆறுதலுக்காக கேட்கும் ஆதீரன் இப்போது அதே பாடல்களை இசைக்கவிட்டான்.
இன்னட்டும் இசையும் தென்றல் மனதை கொஞ்சம் ஆறுதல் செய்திருக்க வேலைக்காக சைட்டில் ஆதீரன் காரை நிறுத்தும் போது தென்றல் முகம் கொஞ்சம் தெளிவடைந்து இருந்தது.
“தென்றல்…. நீ வேணும்னா கார்லயே இரு நான் வந்திடுறேன்..” என்று ஆதீரன் சொல்ல
“ஏன்… பரவாயில்லை நானும் இறங்கி என்னென்ன வொர்க் நடக்குதுன்னு பார்க்குறேன்.” என்று கூறி தென்றலும் இறங்கினாள்.
காரை விட்டு வேலை நடக்கும் இடத்திற்கு வர கீழே கிடந்த ஜல்லிகளை கவனிக்காமல் நடந்த தென்றலுக்கு புடவை தடுக்கியது… அவள் விழாமல் பிடித்த ஆதீரன்
“ஏய் தென்னு பாத்து வா… கவனமா வா தென்னு..” என்று கைபிடித்து அழைத்து சென்றான் ஆதீரன்.
ஆதீரனை கண்டு அந்த கட்டிட வேலையை பொறுப்பேற்றிருக்கும் பொறியாளர் ஓடி வந்து மரியாதை தந்து பேசிக் கொண்டு இருக்க ‘அம்மாவை காணோம்’ என்று பொன்னி ஃபோனில் இருந்து அபூர்வா அழைக்க சுற்றும் முற்றும் பார்த்த படி இவர்களை விட்டு கொஞ்சம் தள்ளி வந்து நின்றாள் தென்றல்.
அபூர்வாவோடு பேசிக்கொண்டு இருக்க கீழே இருக்கும் கட்டிட அத்தியாவசிய பொருட்களை மேலேற்ற இருக்கும் பளுதூக்கி அருகில் நின்றிருக்க அந்த பளுதூக்கியின் நான்கு முனையில் இருந்த கயிற்றில் ஒன்று அறுந்து விழும் நிலையில் இருந்ததை தென்றலும் அங்கிருந்த மற்றவர்களும் கவனிக்கவே இல்லை…
இன்ஜினியரோடு பேசிக் கொண்டு இருந்த ஆதீரன் எதார்த்தமாக தென்றல் நின்ற பக்கம் திரும்ப ஆதீரன் அதை கண்டு அவளை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முன்னர் நிகழ்ந்து விட்டது அந்த விபரீதம்…
“தென்றல்… தள்ளி நில்லு” என்று கத்திக் கொண்டே ஆதீரன் அவளருகில் வேகமாக வர ஃபோனில் பேசிக்கொண்டு இருந்த தென்றலுக்கு அது கேட்கவே இல்லை… சரியாக அந்த நேரம் அந்த கயிறு அறுபட
“தென்னு…” என்று கத்தியபடி கண்ணிமைக்கும் நேரத்தில் தென்றலை அருகில் இருந்த மணற் குவியல் மீது தள்ளி விட்ட ஆதீரன் தான் தப்பிக்கும் முன்பு அவன் மீது மேலே ஏற்றிக் கொண்டு இருந்த கனமான கற்கள் மொத்தமாக ஆதீரன் மீது விழுந்தது.
என்ன நடக்கிறது என்று சுதாரிக்கும் முன்பு அனைத்தும் நடந்திருக்க மணல் மீது இருந்து எழுந்த தென்றல் “தீரா” என்று கத்தியபடி தென்றல் அவன் அருகில் ஓட அங்கு வேலையில் இருந்த அனைவரும் இங்கு ஓடி வந்தனர்.
பணியாட்கள் ஓடி வந்து அவனை அந்த கற்குவியலில் இருந்து தூக்க முயல அவர்களுக்கு உதவியபடியே கட்டிட மேஸ்திரியை “இதெல்லாம் கவனிக்க மாட்டீங்களா?” என்று பொறியாளர் கடிந்து கொண்டு இருக்க
“சார் ஃபர்ஸ்ட் தீராவை தூக்குங்க ஹாஸ்பிடல் போகனும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க” என்று தென்றல் கதற அனைவரும் துரிதப்படுத்தினர்.
இன்ஜினியரோடு தென்றல் ஆதீரனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல “தீரா தீரா” என்று மந்திரம் போல ஜெபித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் தென்றல்.
“மேம்.. சாருக்கு ஒன்னும் ஆகாது பயப்படாதீங்க மேம்” என்று ஆறுதல் கூறிய பொறியாளர் சீக்கிரம் வண்டியை ஓட்டுங்க என்று ஓட்டுநரை அவசரப்படுத்தியவன் அலுவலகத்திற்கு ஃபோன் செய்து மதனுக்கு தகவல் தெரிவித்தான்.
தென்றல் இருந்த நிலையில் அவளுக்கு மூளையில் எதுவுமே ஓடவில்லை... இரண்டு முறை கனவில் தீரன் ரத்த வெள்ளத்தில் கிடப்பது போல அறிகுறி காட்டியும் இன்று அவனை வெளியே விட்ட தன்னை நொந்து கொண்டாள்.
தீரனுக்கு எதுவும் ஆகக்கூடாது அவனை ஆபத்தில் இருந்து காக்க வேண்டும் என்று நினைத்து உடன் வந்து தன்னை காக்கவே தீரனுக்கு இந்த ஆபத்து என்று நினைத்து தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டு இருந்தாள் தென்றல்.
“தீரா கண்ணை திறந்து பாருடா.. ப்ளீஸ் என்னை அழ வைக்க மாட்டேன் னு சொன்னல்ல இப்போ நான் அழறேன் டா ப்ளீஸ் கண்ணை திறந்து பாருடா…. பாப்பா… இப்போ கூட ஃபோன்ல அப்பாவை சீக்கிரம் கூட்டிட்டு வா னு சொன்னா.. நான் அவளுக்கு என்னடா பதில் சொல்லுவேன் ப்ளீஸ் எந்திரி தீரா…” என்று தன் போக்கில் உளறிக் கொண்டு இருந்தாள்.
ஆதீரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அதற்கான படிவம் கூட அந்த பொறியாளர் நிரப்பி விட்டு கடைசியாக தென்றலிடம் கையொப்பம் மட்டும் வாங்கி தந்தான்.
மதன் சித்ரா மூலம் ஆதீரனுக்கு நடந்த விபத்து குமாருக்கும் ரூபிக்கும் தெரிய வர பொன்னி கமலம் அபூர்வா சக்தியோடு மருத்துவமனைக்கு விரைந்தனர்.
பித்துப் பிடித்தது போல “தீரா தீரா” என்று புலம்பிக் கொண்டு இருந்த தென்றலை பார்த்து “தென்றல் என்னடி ஆச்சு? எப்படி நடந்தது?” என்று பொன்னியும் ரூபியும் ஆளுக்கொரு பக்கம் கேட்க அவள் எங்கே பதில் கூறும் நிலையில் இருந்தாள்.
சித்ரா மதன் வந்து சேர மதனும் குமாரும் உடன் இருந்த இன்ஜினியரை கேட்டு தெரிந்து கொண்டனர்.
பொன்னி கமலம் ரூபா சித்ரா குமார் மதன் யார் ஆறுதல் சொல்லியும் தென்றல் தெளியும் நிலையில் இல்லை… அவளின் நிலை கண்டு அபூர்வாவும் சக்தியும் கூட பயந்து என்ன என்றே புரியாமல் அழுது கொண்டு இருந்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஆதீரனுக்கு சிகிச்சை நடந்து கொண்டு இருக்க செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளே செல்வதும் வருவதுமாக இருக்க இவர்கள் என்ன ஏது என்று ஒன்றும் புரியாமல் ஆதீரனுக்கு கவலை கொள்ளும் படிக்கு எதுவும் இருக்க கூடாது என்று வேண்டிக் கொண்டு இருந்தனர்.
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️
Interesting
So sad. Intresting
Last la nee kanavu kanda mariye avanuku ippadi aeiduchi thennu kavala padatha unakaga avan varuvan sikram
Nice👍