Skip to content
Home » தீரா காதலே – 10

தீரா காதலே – 10


பார்த்தசாரதி நகர்


புது வீட்டில் புதுமண தம்பதியர்களாக காலடி எடுத்து வைத்தனர் தீரா ஆதினி. இவர்களின் வீடு முதல் தளத்தில் இருந்தது. பெற்றவர்களும் நண்பர்களும் வீட்டினை நிறைக்க மன நிறைவை உணர்ந்தனர் தம்பதியர்.

காலையில் தான் சார்பதிவாளர் அலுவலகத்தில் எளிமையான முறையில் மணமாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அருகில் இருந்த உணவகத்தில் உணவை முடித்துவிட்டு நேரே வீட்டிற்கு தான் வந்தனர்.

அன்று ஆதினியின் தந்தை உரைத்ததை தீராவிடம் சொன்ன ஆதினியிடம் மணமாகினால் சரியாகிடும் என்று சமாதானம் செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு இன்று மணமும் முடித்துவிட்டான்.

வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே நதீராவோட குழந்தை அழுகிறது என்பதை சாக்காக வைத்து தீராவின் அன்னை புஷ்பம் சொல்லிக்கொண்டு நதீராவை அழைத்துகொண்டு அவளின் வீட்டிற்கு சென்று விட்டார். இன்னும் சற்று நேரத்தில் அனைவரும் கிளம்ப வேண்டும்.

ஆதினி தந்தை முகத்தை ஏக்கமாக பார்த்தாள். மகளின் எண்ணம் புரிந்தவர் அவளிடம்
“இன்னும் வருத்தம் இருக்குடா கண்ணா. ஆசை ஆசையா வளத்த பொண்ண நான் ஆசபட்டபடி பெருசா கல்யாணம் காட்சி நடத்தலயேனு…” விசும்பினார்.

“டாடி ..” ஆதினி கட்டிகொண்டாள் தந்தையை. அதனை கண்டதும் தீராவும் அருகில் வந்தான்.

” ஒரு நிமிஷம் பெத்தவங்கள நினைச்சி பாத்தீங்களா? காதலிக்கிறது தப்பே இல்லடா ஆனால் வாழ்க்கை முழுவதுக்கும் காதல் வேணும். காதலிக்கும் போது இரண்டு பேரும் வேறு வேறு சூழல்ல இருந்துருபீங்க இப்ப கல்யாணம் ஆனதும் ரெண்டு பேரும் ஒன்னா இருக்க போறீங்க இப்பதான் இரண்டு பேரோட பழக்கவழக்கங்கள் பிகேவியர்ஸ் புட்ஸ் இப்படி எல்லாம் பத்தி தெரிஞ்சிப்பீங்க. சில பிடிக்கலாம் சில பிடிக்காமலும் போகலாம் ஆனால் அன்புக்கு நிறைகுறை இரண்டுமே பிடித்தமா இருக்கனும்டா கண்ணா” என்றார் ராஜன். தலையசைத்தாள் ஆதினி.

“சந்தோஷமா இருடா கண்ணா ” என்று கண்கலங்கியவர் “இப்பதான் புரியுது ஆஸ்திக்கு ஒன்னு ஆசைக்கு ஒன்னு வேணும்னு ஏன் சொல்றாங்கனு. உன்னை விட்டு எப்படி இருக்க போறேனு தெரில உனக்காக எப்போதும் நம்ம வீடு திறந்திருக்கும் நான் கிளம்புறேன்டா” என்று திரும்பி கொண்டார்.

மனம் நெகிழ்ந்து போனாள் ஆதினி இத்தனையாய் தன் மீது அன்பு வைத்திருக்கும் தந்தையை நினைத்து. சுஜாதா எதுவுமே சொல்லவில்லை. இரவு ஏழு மணியளவில் அனைவரும் கிளம்ப வீடு அமைதியையும் வெறுமையையும் பூசிக்கொண்டது.

இனி எப்போதும் ஆதினியை சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தவனாய் கதவினை தாழ் போட்டு உள்ளே வந்து ஆதினியை தேட அவள் பால்கனியில் நின்று நிலவனை ரசித்து கொண்டிருந்தாள்.

“ஹலோ மிஸஸ் தீரா ” என்று அவள் பின் நெருக்கமாக நின்று கூப்பிட அவளின் காதின் அருகில் கேட்ட குரலில் சிறிது பதற்றம் தொற்றி கொள்ள இமைகள் படபடவென அடிக்க விழிகளை விரித்து திரும்பினாள். அவளை கைப்பிடித்து உள்ளே அழைத்து சென்று அமர வைத்தவன் தண்ணீர் கொடுத்து “ரிலாக்ஸ்” என்றான்.

“ஆது உனக்கு உங்கப்பாவ விட என்ன ரொம்ப பிடிக்குமோ?”

அமைதியாக இருந்தாள் ஆதினி.
” எப்படி உனக்கு இவ்வளவு லவ் என்மேல?…. நாம அதிகம் மீட் பண்ணது இல்லை அதிகம் பேசுனது இல்லை பட் எனக்காக உங்க வீட்டில் பேசி… இப்ப இந்த இடத்தில் நிற்கிறோம் நாம… அவ்வளவு லவ்வா என்மேல?”


அந்நேரத்தில் வெளியே மணியொலி கேட்க இருவரும் வெளியே எட்டி பார்த்தார்கள். பஞ்சு மிட்டாய் விற்று கொண்டு ஒரு முதியவர் சென்றார். அவரை நிற்க சொல்லி இருவரும் வாங்கி கொண்டு மேலே ஏறி வந்தார்கள்.

“ஓய் ஸ்வீட் கேண்டி என்ன ஆச்சு பேச மாட்டியா பேச்சு வரலயா?”

” ம்ம்ம் உங்கள பாத்ததுமே எனக்கு பிடிச்சது ஆனால் சரி வருமானு தெரியாம தான் தவிச்சேன். ஆனால் முடிவு எடுத்த பின்னே நீங்க தான் என் லைப்னு டிசைட் பண்ணிட்டேன். மை பஸ்ட் லவ். இந்த கண்ல எனக்கான அன்பை பார்த்தேன் அதுல இருந்து மீளமுடில” என்று அவன் கண்களை வருடினாள்.

“ம்ம்ம் சரிடி ஸ்வீட் கேண்டி காதல்னா என்னனு நீ நினைக்கிற? எப்படி இருக்கனும்னு நினைக்கிற?” தீரா


“அது என்ன ஸ்வீட் கேண்டி?”


“அதுவா என் செல்ல பொண்டாட்டியை செல்லமா ஸ்வீட் கேண்டினு கூப்பிடுரேன். நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடி”


” காதல்னாலே அன்பு தான். அன்பு நம்பிக்கை உண்மை மூணுமே இம்பார்ட்டன்ஸ் அது போதும். நம்பிக்கை இல்லனா காதல் இல்லை” ஆதினி

“அன்பை பரிமாறி கொள்வதும் பரிமாற வைப்பதும் காதல் தான் பரிமாறிக்கலாமா மை ஸ்வீட் சாப்ட் கேண்டி..?” என்று கொஞ்சி கேட்க வெட்கப்புன்னகையுடன் தலைகுனிந்தாள் ஆதினி. வெட்கம் வந்தபின்னே பேச்சுக்கு வார்த்தை ஏது? அவள் கைகளை பற்றி கன்னத்தில் வைத்தான் இரு விழிகளும் நயனமொழி மொழிந்தன.

நிலவின் பாலொளியில்
தனிமையின் மடியில்
உறக்கம் தொலைந்த இரவில்
உன்னிதய இசையொலியில்
சொக்கி போய் நான் நிற்க…

இனிவரும் நாட்களை
உறக்கமில்லா இரவுகளாக
கடன் வாங்கி
உனக்கும் எனக்குமான
இத்தனிப்பொழுதுகளை நீட்டிக்க
நிலவனிடம் நான் வேண்டுதல் வைக்க…

காதலின் அதீதங்கள்
ஆசையாக அவதரிக்க
பேச வந்த வார்த்தைகளும்
விடுமுறை எடுக்க…

மென்காற்றின் ரகசிய மொழிகள்
தேகத்தில் நுழைந்து
மோகமாய் மாறி மெல்லிசை பாட…
பருவத்தின் தயவினில்
இளமையின் மென்ணுணர்வுகள்
விழித்து காமதேவனை அழைக்க…

விழிகள் நயனமொழியில் கொஞ்ச
உன் ஸ்பரிசம் உயிருக்குள் பூ பூத்திட
தயக்கங்கள் விடைபெற்று இளமை அணைத்திட
வெட்கங்கள் விலகி ஆவல் கூட
ஒவ்வொரு அணுவிலும் காதல் அணுக்கள் உலா வந்தன

கழுத்தினோரம் காதல் பேசி
காதுமடலில் கவி இசைத்து
விரல்கள் வீணை மீட்டி
இதழ் தூரிகைகள் ஊனூர்வலம் வந்து வெட்கப்பட்டு சொக்க

ஆடைகள் வெட்கத்தில் நழுவி செல்ல
நகக்குறிகள் ஊனில் பச்சைபதிக்க
நூலிடைவெளியும் இனி எதற்கென்று இதயம் தவிக்க
அங்கங்கள் கூச்சத்தில் துடிக்க
மச்சங்கள் மட்டும் மிச்சமாகி பரவசம் கூட்டியது

தீண்டல்களும் தூண்டல்களும் முன்னேறி செல்ல
அத்துமீறிய ஆசையின் அதீதங்கள் சிற்றின்ப பேரின்பமாக கெஞ்ச
இந்த சொர்ப்ப நிமிடங்கள் இன்னும் நீளாதோ என்ற ஏக்கத்தில்
உயிரும் மெய்யும் உயிர்மெய்யாய் தன்னுள் மெய்மறந்து பரிமாறிக்கொள்ள
அங்கு அரங்கேறியது ரகசியமாய் ஓர் அந்தரங்க அரங்கேற்றம்…!

***

வேண்டுதலை நிறைவேற்றா நிலவன் துயில் கொள்ள கதிரவன் மெல்ல துயில் எழுந்து தன் ஒளிக்கீற்றுகளை பெண்ணவள் வதனம் வெட்கத்தில் சிவந்த செந்நிற நிறமாய் எங்கும் பரவவிட்ட காலை நேரம். காதல் கொண்ட ஜோடி இன்னும் காதலில் மயங்கி இருக்க கதிரவனின் செங்கதிர் அறையின் சாளர வழியே உள்ளே நுழைய முயற்சித்தது. காதல் என்பதே மாயவித்தை தான் போலும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நொடியும் புதிய கலையை கற்று தந்துகொண்டே இருக்கும். இன்றைய விடியல் என்ன கற்று தருமோ..?

டிஜிட்டல் அலாரத்தின் ஒலியில் எழுந்த ஆதினி இன்னும் தீராவின் கைவளைவில் இருப்பதை உணர்ந்து சிறு வெட்கத்துடன் எழுந்து கொள்ள அவளின் விலகலில் தீரா விழித்து கொண்டான். இருவரும் சேர்ந்தே எழுந்து கொள்ள ஆதினி குளியலறை செல்ல நகர்ந்து போனாள்.

“எங்கே போற?” தீரா

” குளிச்சிட்டு வந்துரேன்ங்க அப்புறம் காபி போட்டு தரேன்”

“என்ன தனியா குளிக்க போறியா? சென்னைல தண்ணீ விக்கிற விலைக்கு சேந்து குளிச்சா தான் சமாளிக்க முடியும். சிக்கனம் முக்கியம் குடும்ப தலைவியே”

“அந்த சிக்கன இத்தியாயம் எல்லாம் நான் பாத்துகிறேன் இடத்தை காலி பண்ணுங்க” என்று குளியலறையில் உள்நுழைந்தவளை தள்ளி கொண்டு தானும் நுழைந்து தண்ணீர் பற்றாக்குறையை சரிகட்டினான்.

இருவரும் இணைந்தே காபி தயார் செய்து ஒரே தம்ளரில் ஊற்றி இருவரும் பகிர்ந்து கொண்டார்கள். உணவும் இருவருமே சேர்ந்து தான் தயார் செய்து ஒரே தட்டில் உண்டார்கள்.

ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்திலும் தன் பங்கினை சரிசமமாக பகிர்ந்து தன் காதலை திகட்ட திகட்ட ஆதினிக்கு புகட்டினான். ஆனால் அவனே அறியாத விஷயம் இப்படி பழக்கிய தானே தன்னவளை தனித்து விடுத்து வேடிக்கை பார்க்கும் சூழல் வருவதை.

***

இருவரும் முதன் முதலில் வெளியே சென்றது திரையரங்கத்திற்கு தான். திருமணத்திற்கு பின் முதல் முறையாக செல்லும் இடம் தன் காதலன் கைப்பற்றி என்ற எண்ணமே குதூகலமாக இருந்தது ஆதினிக்கு.
“இதுவே நாம மேரஜ் முன்னே இப்படி வந்திருந்தா இப்ப கிடைச்ச பீல் கிடைக்குமா ஆது ?” தீரா வினவ

“நோவ்வே புரியுது தீரா நீங்க ஏன் சொன்னீங்கனு இப்ப நல்லா புரியது ஐ லவ் யூ சோ மச்” உணர்ந்து உரைத்தாள்.


அன்றைய தினம் விடுமுறை என்பதால் இருவரும் தாமதமாக காலை உணவை உண்டு கொண்டிருக்கும் போது கீழ் தளத்தில் இருந்த தம்பதியர் இவர்களை காண வந்தனர். வரவேற்று அமர சொல்லி காபி தயார் செய்ய ஆதினி சமையலறை செல்ல பின்னோடு சென்று எவ்வித தயக்கமுமின்றி தீரா ஊட்டி விட்டு கொண்டிருந்தான். அதனைப் பார்த்து இருவரும் புன்னகைத்து ரகசியமாக சண்டையிட்டு கொண்டனர்.

ஆதினி காபி கலந்து கொண்டு வர தீரா உண்ட தட்டினை கழுவி வைத்துவிட்டு வர இருவரையும் பார்த்து கொண்டே இருந்தவர்களை சொடுக்கிட்டு “என்ன ஆச்சு ?” என்று தீரா கேட்டான்.


“ம்ம் ஹ..லோ ஹாய்.. நான் தீபக் இவங்க என் ஒய்ப் கிறிஸ்டினா. புதுசா குடி வந்திருக்கீங்க சோ இண்ட்டிடுயூஸ் ஆகலாம்னு வந்தோம்”


“ஓ நைஸ் டூ மீட் யூ காபி எடுத்துகோங்க” தீரா
இருவரும் காபியை எடுத்து பருகினார்கள்.


“ஏன் எங்களை அப்படி பாக்ரீங்க எதுவும் வித்தியாசமா தெரிரோமோ என்ன?” ஆதினி வினவ


“இல்ல இல்ல நாங்க வரும் போது நீங்க ஊட்டிட்டு இல்ல இல்ல சாப்பிட்டுட்டு இருந்தீங்களே எப்போதும் இப்படி தானா நீங்க” கிறிஸ்டினா


இருவரும் சிரித்து கொண்டவர்கள் “ஆமா எப்போதும் இப்படி தான் நம்ம அன்புக்குரியவங்களுக்கு அன்னம் ஊட்டி விட்டா அன்பு பெருகும்னு சொல்வாங்க” ஆதினி


“வாவ் நீங்க லவ் மேரஜ்ஜா?” கிறிஸ்டினா


“ஆமா” ஆதினி


“அட சூப்பரு நாங்களும் லவ் மேரஜ் தான் பட் ஒரு தடவை கூட எனக்கு இவன் ஊட்டுனதே இல்லை ” என்று சிணுங்கினாள் கிறிஸ்டினா


“இனி தினம் தினம் தீபாவளி தான் எங்க வீட்டில்” தீபக்


“டேய் என்ன பாத்தா பட்டாசா தெரியுதா உனக்கு?” கிறிஸ்டினா


“அவர் அத சொல்ல வேற செய்யனுமா?” என்று ஆதினி கேட்க நால்வரும் சிரித்தார்கள். சிறிது நேரம் பேசி விட்டு சென்றார்கள். அதன் பின்னான நாட்கள் நால்வரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள்.

இப்படி புதுமண தம்பதிகள் தங்களது வாழ்க்கையை அணுஅணுவாக ரசித்து வாழ்ந்தார்கள். இருவர் அலுவலகம் தான் வேறு ஆனால் வேலையும் வேலை செய்யும் நேரம் ஒன்று தான் எனவே காலையில் இருவரும் இணைந்து போவதும் மாலையில் இணைந்து வருவதும் வழக்கமாக்கி கொண்டார்கள்.

***

ஆறு மாதங்கள் நன்றாக சென்றது. அன்றொரு நாள் காலையிலேயே தீராவுக்கு அலைபேசி அழைப்பு வந்தது. எடுத்து பேசியவன் இதோ வருகிறேன் என்று சொல்லி சென்றான். அன்றிலிருந்து ஆதினியின் தனிமைகாதலி வந்து சேர்ந்தாள்.

வெளியே சென்று நேரம் செல்லவே தீராவுக்கு அழைப்பு விடுத்தாள் ஆதினி.

“ஆது கொஞ்சம் எமர்ஜென்சிமா நீ ஆபிஸ் கிளம்பி போ நான் அப்புறம் ஜாயின் பண்ணிகிறேன்”


“ஏங்க என்ன ஆச்சு?”


“வந்து சொல்றேன்டி”


“அப்ப நான் தனியாவா குளிக்கனும்?”


அவள் கேட்ட விதத்தில் அவனுக்கு சிரிப்பு வந்து விட “அடியே செல்ல கேண்டி இருக்கும் நிலை தெரியாம என்னை டெம்ட் பண்ணாம கிளம்பி போடி முக்கியமான வேலையில் இருக்கேன்” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான். வேண்டாவெறுப்பாக கிளம்பி போனாள்.

***

அம்பத்தூர் அரசு மருத்துவமனை


குருவின் தந்தைக்கு விபத்து ஏற்பட்டதாக அழைப்பு வரவும் தான் தீரா ஓடோடி வந்தது. குருவின் குணத்திற்கு யாரும் அவனிடம் அதிக நாட்கள் நட்பு பாராட்டியது இல்லை நண்பர்கள் இருந்தாலும் அதிகம் ஒட்டுதலும் கிடையாது.

யாரும் உதவிக்கு வராத நிலையில் தீராக்கு அழைப்பு விடுக்க ஓடோடி வந்து நின்று தோள் கொடுத்தான்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இயற்கைமடியில் தஞ்சம் அடைய குரு மொத்தமாக தான் உடைந்து போனான். இன்னும் இரு நாட்களில் குருவின் தங்கைக்கு திருமணம் என்ற நிலையில் என்ன செய்வது என்று தெரியாது தந்தையை இழந்த துக்கத்தில் துவண்டு போனான். தீரா அவனை தேற்றி தக்க சமயத்தில் உதவி சில லட்சங்கள் கடன் வாங்கி கொடுத்து தன் தங்கை திருமணமாக நினைத்து கொண்டு உதவிட அந்நேரத்தில் நன்றி உணர்வில் இருந்தவன் திருப்பி கொடுப்பதில் தான் நன்றி தவறிவிட்டான். அங்கு ஆரம்பித்த புள்ளி ஆபத்து புள்ளியாய் அவனை தொடரும் என்று அறியாது தீரா எடுத்த சில முயற்சிகளும் முடிவுகளும் அவனையும் அவன் வாழ்க்கையையும் அதாளபாதாளத்தில் தள்ளியது.

தீரா காதலுடன்…

4 thoughts on “தீரா காதலே – 10”

  1. CRVS2797

    அச்சோ…! இப்படித்தான், தீரா சிக்கல்ல தீரா மாட்டிக்கிட்டானா…?
    ஓ மை காட் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *