Skip to content
Home » தீரா காதலே – 13

தீரா காதலே – 13

தீரா காதலே – 13

அன்பினி நிகில் இருவரும் அலைபேசியின் வீடியோ காணொளி முடிவடைந்ததும் அதை அணைத்து மேஜையில் வைத்து விட்டு கனத்த மனத்துடன் பிரியதர்ஷனை நோக்கினர். சில நிமிடங்கள் அமைதியாக கழிய

“இவ்வளவு லவ் பண்ணிட்டு மேரஜூம் பண்ணிட்டு பின்ன எதுக்கு சூசைட் பண்ணணுமாம் இதுல அந்த பொண்ணு நல்லா இருக்கனும்னும்தான் பண்ணாணாம். ஷிட். ஒரு வார்த்தை அந்த பொண்ணு கிட்ட பேசி இருக்கலாம். இல்லை இவனுங்களாம் நம்மள பத்தி என்ன நினைக்கிறாங்க நம்ம கிட்ட சொன்னா நாம ஆக்ஷன் எடுக்க மாட்டோமா? புல்ஷிட்” என்று நிகில் கோவமாக வார்த்தைகளை விடுத்து எழுந்து நின்றான்.

“ஹேய் நிகில் காம்டவுன். அப்படியில்லை இவங்க நம்மகிட்ட வராமல் இருக்கதுக்கு ரீசன் மானம் போய்டும் நாலு பேர்க்கு தெரிஞ்சா அவமானம்னு நினைக்கிறது தான். ” அன்பினி

“எக்சாட்லி. அதுமட்டும் இல்லை இவங்க தனியாளாக இருக்க வாய்ப்பில்லை… குரூப் ஆப் மெம்பர்ஸாவோ ஆர் பெரிய நெட்வொர்க் மூலமாவோ செயல்படுறாங்கனு நான் கெஸ் பண்ரேன்” பிரியதர்ஷன்

“எஸ் பஸ்ட் நாம ரிசர்வ் பேங்க்ல இதுபத்தி என்கொயரி பண்ணி பாக்கலாம்” அன்பினி

“அதுக்கு முன்னாடி கமிஷ்னர் கிட்ட இந்த ப்ரூப் எல்லாம் ஹேண்ட் ஓவர் பண்ணி பர்மிஷன் வாங்கனும். டுமோரோ மார்னிங் 9க்கு ஸ்டேஷன்ல இருக்கனும் ஓகே” பிரியதர்ஷன்

“ஓகே” மூவரும் விடைபெற்று கிளம்பினார்கள்.


பார்த்தசாரதி நகர்


வாடிய பூவாக வாடியிருந்த மெர்ஸியின் வதனத்திலிருந்த விழிநீரை துடைத்து விட்ட பிரபா அவளை வலுக்கட்டாயமாக குளியலறையில் தள்ளி முகம் கழுவி வர சொன்னாள். சமையலறைக்கு சென்று சாத்துக்குடி பழச்சாறு தயார் செய்து எடுத்து வர மெர்ஸியும் வெளியே வர பழச்சாறை குடிக்க வைத்தாள்.

“இங்க பாரு மெர்ஸி இந்த சிட்வேஷன் கொஞ்சம் கஷ்டம் தான் பட் நீ அக்செப்ட் பண்ணி தான்டா ஆகனும். நீ படிச்ச பொண்ணு உனக்கு அதிகம் சொல்ல தேவையில்லை. ஜூனியர் தீபக் உனக்கு வேண்டாமா?” என்று கடிந்து கொண்டாள்.

“என்னால முடிலடி இதோ இங்க தான் உக்காருவான் இதோ இங்க தான் நின்னு நான் சமைக்கிறத ரசிப்பான் இப்படி எங்க பாத்தாலும் அவன் தான் நிறைஞ்சி இருக்கான். இந்த இன்விடேஷன் கார்ட எப்போதும் தடவி தடவி பாப்பான் அழகா இருக்குலடானு கேப்பான்” என்று வீட்டை சுற்றி வந்தவள் அந்த கார்டை அவளிடம் நீட்ட வாங்கி பார்த்தாள்.

Deepak Weds Mercy Christina


என்று அழகிய வேலைப்பாடுகளுடன் எழுதியிருந்தது அந்த அட்டையில்.

“அவன் இப்படி பண்ணதே எனக்காகதான்னு சொல்லிட்டு போய்ட்டான் ஆனா இங்க நடக்கதே வேறடி” என்று மடங்கியமர்ந்து அழுதாள்.

“என்ன சொல்ற மெர்ஸி? ” புருவத்தை சுருக்கி வினவினாள்.

“ஆமா அவன் நான் நல்லா இருக்கனும்னு பண்ணதா சொல்லி தான் என்ன விட்டு போய்ட்டான்” என்று நாட்குறிப்பு புத்தகத்தில் தீபக் எழுதியிருந்ததையும் அலைபேசி காணொளி பற்றியும் பிரபாவிடம் சொன்னாள். அதன் பின் அவளுக்கு வந்த அலைபேசி அழைப்புகளும் அவர்கள் விடுத்த மிரட்டல்கள் பத்தியும் உரைத்தாள்.

அதனைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தவள் மூளையின் ஒரு ஓரத்தில் பல்பு எறிந்தது. விருட்டென்று எழுந்தவள் பதற்றமும் அவசரமுமாக


“மெர்ஸி தைரியமா இரு… நான் … இப்ப போயே ஆகனும்” என்று சொல்லி வெளியே வந்தவள் அவள் கணவன் வேலை பார்க்கும் அலுவலகத்தை தேடி ஓடினாள் நிறைமாதகுழந்தையுடன். மெர்சியோ மீண்டும் தன்னவன் புகைப்படத்தை நெஞ்சகத்தில் வைத்து விழிகளை விழிநீரில் நீந்தவிட்டாள்.


மறுநாள் காலை ஒன்பது மணியளவில் மூவர் குழு காவல் நிலையத்திலிருந்து காவல் ஆணையர் அலவலகத்தை நோக்கி பயணமாகியது. போகும் வழியில் அந்த வழக்கை பற்றி விவாதித்து கொண்டே போனார்கள்.

சாரதிநகரை கடக்கும் போது ஒரு பள்ளி மாணவியை சில மாணவர்கள் கேலி செய்வதும் அவள் பயந்து நடுங்குவதும் கண்களில் பட பிரியதர்ஷன் சினத்துடன் மகிழுந்தை நிறுத்தினான். அன்பினியும் நிகிலும் என்னவென்று பார்க்க அதற்குள் பிரியதர்ஷன் அவர்களை நெருங்கியிருந்தான்.

“மேடம் இந்த பொண்ணு மோகன்ராஜ் சிஸ்டர்” நிகில்

“ஓ அப்படியா? சரி வாங்க நாமளும் போகலாம்” அன்பினி

இருவரும் அருகில் வர பிரியதர்ஷன் அந்த மாணவர்களை கடிந்து பேசிக்கொண்டு இருந்தான்.

“இன்னொரு தடவை கேர்ள்ஸ் பின்னாடி வந்து டீஸ் பண்ணீங்க ஈவ்டீசிங்ல உள்ள தள்ளிடுவேன் ஜாக்கிரதை. கிளம்புங்க ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பாருங்க” என்று விரட்டினான்.

அவர்கள் போனதும் அந்த மாணவியை பார்க்க காவல் உடையை பார்த்ததும் இன்னும் பயந்து போனாள்.

“ஹாய் உங்க பேரு என்னமா ?” என்றவாறு அன்பினி அவள் கைகளை பிடித்து அழுத்தம் கொடுக்க பதற்றமும் பயமும் குறைய


“என் பேர் மோகனா”


“ஓகே ஸ்கூல் எங்கே இருக்கு உங்களை ட்ராப் பண்ணிடவா”


“இல்லை நானே போயிக்குவேன்”


“எதுக்கு பயப்புடுரீங்க செல்லம் ரிலாக்ஸ்… ஓகே.. என்ன ஸ்டாண்டர்டு படிக்கிறீங்க நீங்க”


“எய்ட்த் படிக்கிறேன். வீட்டில.. வெளியே யார் கூடயும் பேசக்கூடாதுனு சொல்லி இருகாங்க” என்று தலையை குனிந்து கொண்டாள்.


“ஓகே நல்ல விஷயம் தான் ஆனால் எங்ககிட்ட பேசலாம் ஒன்னும் சொல்லமாட்டாங்க சரியா. வா உங்க ஸ்கூல்ல விடுரோம்” என்று சொல்லி அவளையும் மகிழுந்தில் ஏற்றினார்கள். அவளோடு அன்பினி பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள்.


“ம்ம் மோகனாக்கு மோகன் அண்ணாவ பிடிக்குமா?” என்று மெதுவாக ஆரம்பித்தாள்.


“உங்களுக்கு எங்க அண்ணாவ தெரியுமா? ரொம்ப பிடிக்கும் அண்ணாக்கும் நான்னா உசிரு”


“ஓ அப்ப ஏன் அண்ணா இப்படி பண்ணாங்க”


“அண்ணாக்கு பைக் வாங்க ரொம்ப ஆசை ஈஎம்ஐ-யில் வாங்கிக்கலாம் அதுக்கு கொஞ்சம் காசு இருந்தா போதும் சொல்லி போன்ல ஒரு ஆப்ல இருந்து பணம் எடுத்தாங்க. ஆனால் கொஞ்ச நாளுலயே அந்த ‘ஆப்’காரன் நிறைய காசு கேட்டான். அவ்வளவு காசு இல்லன்னதும் அண்ணா ஏதேதோ பண்ணி பணம் கொடுத்துட்டாங்க. ஆனா அவ..ங்க ஆ..னா.. ம்ஹூ ம்ம்ம்” என்று அழ ஆரம்பித்தாள்.

“ஹேய் ரிலாக்ஸ் மோகனா இந்தா இந்த தண்ணீய குடி ” என்று தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுத்தாள். கொஞ்சம் தெளிந்தவள் முன் இருக்கையில் அமர்ந்திருந்தவர்களை பார்த்தாள். அதனை உணர்ந்தவள்


“அவங்க என் ப்ரெண்ட்ஸ்தான் யார் கிட்டயும் சொல்லமாட்டாங்க நீங்க சொல்லுங்க”


“அப்படியா சரி நீங்களும் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேனு பிராமிஸ் பண்ணுங்க” என்று கையை நீட்டினாள். அன்பினி ஒரு நொடி தயங்கி பின் கைகளை வைத்தாள்.


“அந்த ‘ஆப்’காரன் அண்ணாவ ரொம்ப பிளாக்மெயில் பண்ணாங்க பணம் தரலனா அண்ணாவோட ட்ரெஸ் இல்லாத போட்டோவ எல்லாருக்கும் அனுப்பிடுவேனு மெரட்டினான். நிறைய இடத்தில் கடன் எல்லாம் வாங்கி கூட கட்டினாங்க அண்ணா. அப்பாக்கு தெரிஞ்சதும் அப்பாவும் அவர் பங்குக்கு கடன் வாங்கி கொடுத்தாரு”


“உங்கப்பா அண்ணாவ திட்டலயா மோகனா?”


“அதெப்படி திட்டுவாங்க எங்க வீட்டில் நாங்க ரெண்டு பேரும் செல்லம் தான்”


“ஓகேமா அப்புறம் என்ன ஆச்சு?”


“அப்புறம் ஒரு நாள்… ஒரு… நாள்… ஒரு… நாள்..” என்று முன்னிருக்கையை பார்த்தாள்.


“பயப்படாம சொல்லுமா” என்று அன்பினி ஊக்கினாள்.


“அந்த ‘ஆப்’காரன் அண்ணாவோட போட்டோல இருந்து தலையை மட்டும் எடுத்து வேறு போட்டோ கூட ஜாயின் பண்ணி அனுப்பிட்டான் அதுவும் ரொம்ப அசிங்கமா இருந்ததாம் அதை அண்ணா ப்ரெண்ட்க்கு எல்லாம் அனுப்பினதால அது தாங்காமதான் அண்ணா அப்படி பண்ணிட்டான்” என்று அழுதாள்.

அவளை அணைத்து ஆறுதல் படுத்தியவள் தன் அலைபேசி எண்ணை அவளிடம் கொடுத்து
” இனி எந்த பிரச்சினைனாலும் தயங்காமல் என்ன கூப்பிடு சரியா நான் உனக்கு ஹெல்ப் பண்வேன். நீங்க முதல்லயே போலிஸ் கம்ப்ளைண்ட் கொடுத்திருந்தா அந்த ‘ஆப’காரன அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்ருபாங்க உங்க அண்ணா உங்கூட இருந்துருப்பாரு ” என்று சொன்னாள்.


விழிகளை பெரிதாக விரித்த சின்ன பெண்ணவள் “நிஜமாவா சொல்றீங்க? முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் உங்ககிட்ட சொல்லி இருப்பேன். ஐ மிஸ் யூ அண்ணா” என்று அழ ஆரம்பித்தாள்.

அவளை சமாதானம் செய்து பள்ளியில் இறக்கி விட்டு காவல் ஆணையர் அலவலகத்தை நோக்கி மகிழுந்து விரைந்தது. மோகனா பேசிய அனைத்தும் நிகிலின் உதவியுடன் பதிவு செய்யப்பட்டிருந்தது.


காவல் ஆணையர் அலுவலகம்


மூவரும் காவல் ஆணையருக்கு முறையாக வணக்கம் தெரிவித்து தாங்கள் கொண்டு வந்த ஆதாரங்களை சமர்ப்பித்தார்கள். அதனை பார்வையிட்ட காவல் ஆணையர் வரதராஜன்


“இது வேறு மாதிரி பிரச்சினையா இருக்கும் போலயே. இதுக்கு முன்னாடி இது போல கேஸஸ் பைல் பண்ணியிருகாங்களானு செக் பண்ணுங்க.”


“எஸ் சார்”


“இவங்க ஒரே குரூப்பா இருக்க வாய்ப்பில்லை ஆனால் இது ஒரு நெட்ஒர்க் தான். ஓகே என்ன பண்ணலாம்னு இருக்கீங்க? ” என்று அவர்களிடமே வினவினார்.


“சார் பஸ்ட் விக்டிமோட மொபைலை ட்ரேஷ் பண்ணி அவங்க எந்த விதமான பாதிப்புக்கு உள்ளாகியிருக்காங்கனு கண்டு பிடிக்கனும்” அன்பினி


“ஓகே”


“இதுபற்றி ரிசர்வ் பேங்க்ல என்ன சொல்றாங்கனு என்கொயரி பண்ணணும் சார்” அன்பினி


“ஓகே”


“அண்ட் இப்படி பண்றவங்களை ட்ரேஷ் பண்ண ஒரு ஸ்பெஷல் ஸ்குவாட் வேணும் சார்” பிரியதர்ஷன்


“ம்ம் ஓகே”


“சார் ஒரு ப்ரெஷ் மீட் அரேன்ஞ் பண்ணி அனௌன்ஸ் பண்ணலாம் இதிலிருந்து மீள்வதற்கான வழியை பற்றி சொல்லலாம். ஹெல்ப் லைன் நம்பரை கொடுக்கலாம் வெப்சைட் இண்ட்ரோ பண்ணலாம்” நிகில்


“எக்ஸாட்லி சார். மக்களுக்கு பஸ்ட் அவர்னஸ் தரனும் ஆண்ட் கம்ப்ளைண்ட் பண்றதுக்கான ப்ரொசிசர் பத்தி சொல்லனும்” அன்பினி


“ஓகே நீங்க சொல்றபடி செய்திடலாம் குட்ஜாப்”


“ஓகே சார்” என்று வணக்கம் வைத்தவர்கள் காவல் ஆணையர் அவுவலகத்தை விட்டு வெளியேறினர்.


கோல்டன் காபி ரெஸ்டாரண்ட்


வேலை செய்து அலுப்பாக இருக்கும் சமயத்தில் மனதையும் மூளையையும் புத்துணர்ச்சியாக்க வைக்க உதவுவது இந்த காபிதான். அதன் மணம் நாசியை தீண்டும் போதே மனம் புத்துணர்வை உணர ஆரம்பித்திடும். மூவரும் காபி ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தனர்.


“அடுத்து என்ன பண்ண போறோம் பிரிய தர்ஷன்” அன்பினி வினவினாள்.


“என்கொயரி தான். பஸ்ட் மிஸஸ் மெர்ஸிய என்கொயரி பண்ணணும். அப்புறம் மோகன்ராஜ் வீட்டில் உள்ளவங்கள என்கொயரி பண்ணணும்”


“அதுக்கப்புறம்” நிகில்


“இதுக்கிடையில் விக்டிம் மொபைல் தரவ்வா செக் பண்ண சொல்லனும் அவங்க ட்ரேஷ் பண்ணி சொல்ற டீடெய்ல் வச்சு தான் ஸ்பெஷல் ஸ்குவாடு கமிட்டியை பாலோஅப் பண்ண முடியும் அண்ட் பேங்க்ல இதுபற்றிய டீடெய்ல் கலெக்ட் பண்ணணும்” அன்பினி


“எஸ் இனிமே எவனும் அநியாயமா உயிரை விடனும்னு நினைக்கவே கூடாது” என்று பிரியதர்ஷன் சொல்லவும் அவர்கள் ஆர்டர் செய்திருந்த காபி வரவும் அருந்தி விட்டு வெளியேறினார்கள்.

இவர்கள் போட்டு வைத்த திட்டம் பலன் கொடுக்குமா? இனி உயிர்கள் அநியாயமாக பலியாகுமா? மக்கள் விழிப்படைவார்களா? காத்திருந்து பார்ப்போம்.

தீரா தேடலுடன்…

4 thoughts on “தீரா காதலே – 13”

  1. CRVS 2797

    அய்யய்யோ..! எங்களுக்கு வெயிட் பண்ற அளவுக்கு பொறுமை இல்லை. அந்த நெட்வொர்க்கை சீக்கிரமே பிடிச்சாகணும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *