துஷ்யந்தா-46
தன்வீ தன் சின்ன சிறு கைகளால் கத்தியை பிடிக்க டிரகதி அவளுக்கு துணையோடு கைப்பிடித்து வெட்டினாள்.
விதுரன் மனம் பிரகதியை குழந்தையை ஒரு கணம் வருடி பார்த்தது. இப்படியொரு விழா நடந்து எத்தனை வருடமாகின்றது.
அம்மா அப்பா இருந்தால் தனக்கருகே நின்றிருப்பார்களோ என்று பக்கத்தில் தேடினான்.
அவனின் கண்ணிற்கு காட்சி கொடுத்தது போல பிம்பமாய் அவர்களை மணக்கண்ணில் கொண்டு வந்தான்.
“அப்பாவுக்கு கொடு” என்ற குரல் கேட்டு விதுரன் திரும்பினான்.
பிரகதி வாயால் தன்வீயிடம் கூறிய வார்த்தை கேட்டு உதடு பிரிக்காமல் முறுவலித்தான். அந்த கேக் பகுதியை தன்வீயிடம் நீட்டி அவளை உண்ண வைத்தான். பிரகதி விதுரன் ஊட்டி முடிக்கவும் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தான் விதுரன்.
அழகான இளஞ்சிவப்பு சேலைக்கட்டி வைரத்தில் சாதாரணமான ஒப்பனையிலேயே தேவலோக மங்கையாக இருந்தவளை கண்டு பெரிதாக இரசிக்கும் ஆர்வம் அவனிடம் இல்லை. பிரகதி சும்மாவே பேரழகியாக தான் விதுரன் மனம் பாவிக்கும்.
முன்பக்கம் மட்டும் பற்கள் வளர்ந்திருந்த தன்வீக்கு கேக் சப்புக் கொட்டினாள். யுகனுக்கு ஊட்டிவிட்டு முடிக்க, அனைவரும் பரிசு கொடுத்து புகைப்படம் எடுத்தனர்.
அடுத்து பணியாட்கள் வந்து அவர்களாகவே கேக் கட் செய்து உணவை விநியோகம் செய்ய ஆரம்பித்தனர். நடக்க ஆரம்பித்த சில மாதமே என்பதால் தத்தி தத்தி நடந்து விழுந்து எழுந்தாள்.
ரக வாரியான உணவினை ஒரு தட்டில் சரியான அளவிற்கு வைத்து நிறைவாய் பணியாட்களே ஒவ்வொருத்தருக்காய் கொடுக்க ஆரம்பித்தனர். சிறுவர்களுக்கு எது பிடிக்கும் என்று ஆராய்த்து வறுவலோடு அவர்களுக்கு ஏற்ற உணவை கிட்ஸ் பிளேட்டாக சிறிது உணவை குறைத்து வைத்து கொடுக்க பாதிக்கு மேலாக குழந்தைகள் விரும்பி உண்டனர்.
ஒருவர் மாற்றி ஒருவர் பேசி மகிழ்ந்து புறப்பட தயாரானார்கள். இன்பாவும் கிளம்ப தயாரான போது பரிசு கொடுக்க வந்தான்.
“எங்க ஓடறிங்க இன்பா. சௌமியா சசி பற்றி நாம பேச வேண்டியது இருக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றான்.
“நாங்க பெர்த்டே பார்ட்டிக்கு தான் வந்தோம்.” என்று இன்பா கூற, விதுரனோ “அதை தனியா கேட்கறேன் அப்போ சொல்லுங்க. ஒரு ஹாப் ஹவர் இருங்க” என்றான்.
அவன் குரல் மாறியது போன்ற மாயம் இன்பாவை ஆட்டி படைத்தது.
திக் திக் நொடிகளாக நேரம் கடந்தது. வீட்டை விட்டு வெளியே செல்லவும் முடியாமல் விக்னேஷ் தர்மா என்று தடையாக கதவருகே நின்றிருக்க, தற்போது ஏன் வந்தோம் என்றானது.
வந்தவர் எல்லாம் சென்று முடிக்க விதுரன் கைகளை டிசு பேப்பரை கொண்டு கைகளை துடைத்து இன்பா அருகே வந்தான்.
சசியோ வந்தவர்கள் எல்லாம் சென்றதும் தன்னை காண வந்தவர்கள் வந்திருக்க மாட்டார்கள் என்று நிம்மதியடைந்தான்.
“சொல்லுங்க இன்பா. என்னவோ அப்ப ஏதோ சொன்னிங்க.” என்று கோர்ட் பட்டனை கழட்டி சோபா மீது வைத்தான்.
வேலையாட்கள் கூட வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தனர்.
மனதில் திடத்தை வரவழைத்தவனாக “எங்களுக்கு பணக்கார வாழ்வு வேண்டாம். எங்களை விட்டுடுங்க. உங்க தரத்துக்கு ஏற்றது போல பொண்ணு தேடுங்க ப்ளிஸ்.” என்றான்.
விஜயலட்சுமி கோமதியை பார்த்து மிரண்டு இருந்தார். உடல் முழுக்க நகையை அணிந்து வந்தால் அவர்களோடு நிற்கவே ஏதோ போன்ற உணர்வு.
அனிலிகா எட்வின் தன்வீயை தூங்க வைக்க செல்வதாக கூறி பத்மாவதி இருந்த அறைக்கு சென்றார்கள்.
“தம்பி எங்களுக்கு அதிகப்படியா தோன்றுது நாங்க போகறோம்” என்று விஜயலட்சுமியும் விடைப் பெறவே துடித்தார்கள்.
விதுரன் சௌமியாவை பார்த்து “உன் முடிவு சொல்லு சௌமியா” என்றதும் சௌமியாவுக்கு உதறல் எடுத்தது.
“அம்மாவுக்கு அண்ணாவுக்கு தெரியாததா? அவரை முதலாளியா தான் பார்த்தேன். வேற உறவு முறையில் பார்க்க முடியாது.” என்றாள்.
அதன் பின் இன்பா தயக்கமின்றி “சொல்லியாச்சா. இப்ப விடறிங்களா.” என்று ஓடப்பார்த்தான்
“ஏன் சௌமி சசிக்கு திக்குவாய் என்று பிடிக்கலையா?” என்றான்.
“இல்லை. என்னால முடியாது. நான் தான் குறையானானவள். ” என்று முகம் பொத்தி அழுதாள்.
“என்ன குறை?” என்று விதுரன் பொறுமையிழந்து கோபமாக கேட்டான்.
“விதுரன் ஏன் மிரட்டறிங்க. அவ முடியாதுனா விட்டுடறது தான் உங்களுக்கு நல்லது. அவ தான் சொல்லறாலை. ஏன் குழந்தை பெற முடியாதுனா உங்க இஷ்டப்படி ஆட்டி வைக்க தேடறிங்களா? சரியான வில்லன் சார் நீங்க ” என்று கேட்டான்.
இம்முறை பிரகதியோ “இன்பா.. மைண்ட் யுவன் வோர்ட்ஸ் விதுரனுக்கு உங்க தங்கையால குழந்து பெற்றுக்க முடியாதுனு தெரியாது.” என்றாள்.
“இங்க என்ன நடக்குது?” என்று சசிதரன் புரியாது குழம்பினான்.
“ஆஹா பிள்ளையை கிள்ளி விட்டு சமாதானம் படுத்தறார் உங்க தம்பி விதுரன்.
ஏன் சார் எங்க பொண்ணை வேலைக்கு தானே அனுப்பினோம். அவர் என்ன உங்களுக்கு மணப்பெண்ணா மாற்றிட எங்களை மிரட்டறார்.
எங்க சௌமியா வேண்டாம்னு மறுத்தும் மிரட்டினா எப்படி?” என்று இன்பா சசிதரனிடம் பேசிட, சசிதரன் உடைந்திடும் நிலையில் மாறினான்.
“ஏன் வித்..துரா… இப்படி பண்..ணற… என்..னக்கு எது..வும் வே..வேணாம். இப்படி ஒ…ரு எண்ணத்…துல தான் சௌமி..யாவை என..க்கு கீழே வேலை..க்கு வச்சியா. ப்ளி..ஸ் டா. நான் என் பையனை வளர்…ர்க்க முடியலைனா ஆ..ஆ..ஆசிரமத்துல கூட போட்டுக்கறேன். எனக்கு கல்யாணமே வே..வே..ண்டாம். நான் போறேன்” என்று ஒடத் துணிந்தவனை “நீ போனா உன் லைப்பை அழிச்சது நான்னு முடிவாகும். ஓகேனா போ சசி.” என்றான் விதுரன்.
சசி கால்கள் நகர மறுத்தது.
“நா..நான் தானே டா தீ..தீபிகாவை விரும்பி சேர்த்து வைனு வந்து நின்..றேன். அதுல உ..உன் தப்பு என்ன. ஒருத்தரை கல்யாணம் பண்ணி தான் வை..வைக்க முடியும். அ..அவங்க வாழற வாழ்க்கை முறை தோ..தோல்…ல்வியா போச்சுனா கட்டி வச்சவங்க எப்படி அ..அ..ழிச்சதா முடிவு பண்ணுவ. நா..நான் அப்படி நினைக்கலை. நீ சொல்வியே தீ..தும் நன்றும் பிறர்…தரவார அதான் உண்மை.” என்று இதற்கு மேல் பேசயியலாது அழுதான்.
விதுரன் எல்லோர் முன்னும் சசி அழுவதை காண சகிக்காமல் “இனி கட்டாயப்படுத்த மாட்டேன். பெர்த்டேவுக்கு வந்து விஷ் பண்ணியதுக்கு தேங்க்ஸ்.” என்று வணக்கம் வைத்து ரிட்டன் கிப்டாக இன்பா குடும்பத்து ஆளுக்கு ஒன்றை கையில் கொடுத்தான்.
மறுக்க எண்ணினாலும் விதுரனின் அழுத்தமான பார்வையிலும் இறுகிய தாடையிலும் தன்னால் பரிசை வாங்கி கொண்டு சென்றனர்.
சசிதரனோ பிள்ளை யுகனை பெற்று கொண்டு நகர பார்க்க, கோமதியோ தளர்ந்தவராய் நடந்ததை வேடிக்கை பார்த்து அமைதியாக மாறி சென்றார்.
விதுரனுக்கோ ஹாலில் சோபாவில் சாய்ந்து தன் தாய் தந்தை புகைப்படத்தை நோக்கினான்.
பிரகதி அவன் பார்வை சென்றதை கண்டு மெதுவாக அவனருகே அமர்ந்தாள்.
“ஏன் விதுர் இப்படி அடுத்தவங்க லைப்ல நீ மூக்கை நுழைக்கிற? உனக்கு தானே கெட்ட பெயர் வருது. சசி மேரேஜ் பண்ணாயென்ன பண்ணாட்டினா உனக்கென்ன. கோமதி அத்தை பார்த்துப்பாங்களே. நீ அவரை விட சின்னவன் ஆனா பழி பாவம்னு அதிகம் சேர்த்துக்கற” என்றவளின் கண்களை நேர்கொண்டு நோக்கியவாறு, “உனக்கு கூடப் பிறந்த தங்கை அண்ணா இருந்தா எனக்கென்னனு நீ மட்டும் சந்தோஷமா இருப்பியா?” என்றதும் வேகமாக தலையாட்டினாள்.
“விதுர் ஆனா..” என்றவளின் பேச்சை நிறுத்துமாறு செய்கையில் காட்டி, “இங்க அதிகமா சசிக்காக ஸ்கூல் காலேஜ் சண்டை போட்டு அடிதடியா போகுதுனு தான் Pg படிப்பு கனடால முடிச்சிட்டு ஆசையா அப்பா அம்மாவோட வாழணும் இனி தனியா இருக்க வேண்டியதில்லைனு வந்தா, பிளைட் ஆக்சிடெண்ட்ல அப்பா அம்மா சித்தப்பா, சின்ன தாத்தானு குடும்பத்தோட ஆணிவேர்களையே சாய்த்துட்டு தேவானந்த் அவனோட வளர்ச்சில முதல்ல நிற்கணும்னு வந்தான்.
ஒரு மனுஷன் முன்னேறனும்னா அது சரியான பாதையில வளரணும் பிரகதி. அடுத்தவங்களை அழிச்சு பின்னுக்கு தள்ளி, குறுக்கு வழில ஏறி வர எண்ண கூடாது. தேவ் அப்படி பண்ணியதுக்கு அப்பா தடுப்பு சுவரா இருக்க பகையே இல்லாம சாகடிச்சான்.
அப்பா மட்டும் போறதா எண்ணி தான் இந்த பிளான் பண்ணியதா தேவ் நாக்கு துண்டாக்கும் போது கதறினான். பட் கடைசி நிமிஷம் பிளான்ல தெரியும்ல.. யோசித்து இருக்கலாம்ல… ஒரு உயிருக்கு நாலு உயிர் இருக்கேனு கொஞ்சம் தவிர்த்து இருந்தா வீட்டுக்கு நல்லது கெட்டது முடிவெடுக்க யாராவது இருந்திருப்பாங்களே.
எல்லா முடிவையும் ஆசையா என் குடும்பத்தோட என்ஜாய் பண்ண வந்த என் தலையில் விழுந்திருக்காது.
தாத்ரு சிகிச்சை முடிந்து சசிதரனை பார்த்து என்ன சொன்னாரு தெரியுமா? அப்பா அம்மா என்று இரண்டு பேரை இழந்தும் நீ நிமிர்ந்தே நிற்கற. அவனை பாரு டா. என் தம்பி தம்பி பையன் இறந்ததும் என் தம்பி பேரன் சசி உடைஞ்சுட்டான்.
முன்ன எதுக்கெடுத்தாலும் அவனுக்கு நீ சண்டைக்கு போனது பெரிசுல்ல. இனி அவனுக்கு எல்லாமே நீ தான் முன்ன நிற்கணும்னு சொன்னப்ப, ஒரு குடும்பத்துல பிறந்துட்டு நான் பாவம் புண்ணியம் பார்த்து அவனோட வாழ்க்கையை தீர்மாணிக்க முடியாதே.
என்னை பொருத்தவரை என் சசி வாழ்க்கையை நான் அவனுக்கு பிடிச்ச மாதிரி கொடுத்தேன். என்ன தீபிகாவுக்கு வாழ தெரியலை. சசியை வாழ விடலை.
பட் இப்ப சௌமியா அவனுக்கு பெஸ்ட் பேர்னு எனக்கு தெரியுது. அப்படியிருக்க விடமுடியுமா.
பாவம் புண்ணியம் பார்த்து தள்ளி ஒதுங்கினா பியூட்டிபுல் லைப் கிடைக்குமா?
நான் இப்படி தான் சசி மாதிரி என்னால நாலு உயிர் போச்சேனு சும்மா இருக்க முடியலை. அப்ப தேவ் நாக்கை தான் துண்டாக்கி வார்ன் பண்ணி அனுப்பினேன்.
கடவுள் எல்லா உறவும் ஒட்டு மொத்தமா என்னோட கேரக்டரா என்னவளா உன்னை காட்டினப்ப எந்தளவு நீ வேண்டும்னு முதல்ல வந்ததும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு பிறகு பொறுமையா எகஸ்பிளைன் பண்ண காத்திருந்தேன்.
அப்பவும் விட்டானா… உன்னை கொல்ல எப்ப ஸ்கெட்ச் போட்டானு அப்ப முடிவு பண்ணினேன். இனி வாழ்ந்து அவனொன்னும் கிழிக்க வேண்டாம்னு.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒருத்தர் யோசித்து குடும்பத்தோட வாழ்வை சீர்படுத்த இருப்பாங்க. என் குடும்பத்துக்கு நான் இருக்கேன். என்னை நம்பி கோமதி சித்தி சசி லைப்பை சேஞ்ச் பண்ண சொல்லிருக்காங்க. பண்ணுவேன்… இந்த சௌமி தான் சசியோட ஜோடி. இந்த முறை மாற்ற முடியாது. நானா கெஞ்ச மாட்டேன். ஆனா தானா நடக்கும். உன் பிரெண்ட் இன்பாவே அவன் தங்கையை சசிக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாமானு வந்து நிற்பான்.” என்றவன் அவள் கையை பற்றினான்.
“என்னை அப்பாவாக்கி நீ அம்மாவா பிறந்து ஒரு வருஷமாகுது. வாழ்த்துகள் பிரகதி” என்றவன் கால் சட்டையிலிருந்து இடை சங்கிலியை எடுத்து இடையில் அணிவித்து விட்டான்.
“என்னயிது? எல்லாரும் செயின், ரிங்னு பிரசண்ட் பண்ணுவாங்க. நீ என்ன வித்தியாச பிறவியா?” என்று அவன் மண்டியிட்டு இருக்க தலைக்கோதியவாறு கேட்டாள்.
“நான் தான் டெவில் கிங் ஆச்சே.” என்று பற்தடம் பட கடிக்க பிரகதி அவன் தலையை இடையோடு அணைத்தாள்.
அதே நேரம் நான் இங்கு தான் உறங்குகின்றேன் என்று தன்வீ சிணுங்கி அவள் இருப்பை சுட்டிக் காட்டி முறுக்கினாள்.
-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Super😍
Vidhu oda intha asathiya thairiyam konjam malaipa irruku epti oru manusanala ivlo uruthiya irruka mudium ? Manasu odaiyatha ? Oru sottu kannir varatha ? Avlo uruthi epti …..