Skip to content
Home » தேவதையாக வந்தவளே 25

தேவதையாக வந்தவளே 25

தேவதை 25

மறுநாள் காலையிலேயே கிளம்பி சென்று விட்டார் லோகநாதன். பேத்தியை பிரிய மனமே இல்லாமல் தான் சென்றார்.அவர்கள் வாழ்க்கையும் எப்பொழுதும் போலானது.

கிரஷில் குழந்தையையும் மனைவியையும் விட்டுவிட்டு அவன் தொழில் தொடங்குவதற்கான இடத்தை பார்க்க சென்று விடுவான். கிட்டத்தட்ட எல்லாம் பார்த்து தான் வைத்திருந்தான். ஆனால் மாலினியின் முடிவைக் கொண்டு அடுத்த செயலில் இறங்குவது என்று திட்டமிட்டு இருந்தான். எப்படியும் அவள் இதை தான் தேர்ந்தெடுப்பாள் என்று அவனுக்கு தெரிந்தே தான் இருந்தது. பொறுப்பானவன் மேற்கொண்ட வேலையை பாதியில் விட்டுவிட்டு செல்ல மாட்டாள் என்று தெரியும் இப்பொழுது இறங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. அனைத்து வேலைகளையும் திறம்பட கையாண்டு கொண்டிருந்தான் அரவிந்த். வீடியோ கால் மூலமாக தன் தோழனுக்கு அந்த இடத்தை சுற்றி காட்டினான்.

“அப்ப நான் வந்து பார்க்கிறேன். உன்னையும் தங்கச்சியையும் பாத்துட்டு வாழ்த்து சொல்லிட்டு போறேன்”.

“இப்ப ஒன்னும் தேவை இல்ல. எல்லாம் பார்த்து முடிவானதுக்கு அப்புறம் மொத்தமா வந்துக்கோ நீ வந்து சொதப்பி வைப்ப. அதுக்கு அப்புறம் மாலினியை கரெக்ட் பண்றது எனக்கு ரொம்ப கஷ்டமா போய்டும்”, என்றான் அரவிந்த்.

“அதான் அந்த இடத்தை ஃபிக்ஸ் பண்ணிடலாம்னு சொல்லிட்டியே டா?, நீ பார்த்துட்டல்ல அதை ஃபிக்ஸ் பண்ணிடலாம். அதுக்கு நான் வர தேவை இல்லையா? “, என்று கேட்டான் எத்திராஜ்.

“நீ வந்து பார்த்து தான், இன்வெஸ்ட்மெண்ட் பண்ண போறியா??, என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா??”.

“எதுக்குடா குடும்பஸ்தனான பிறகு இப்படி எல்லாம் பேச ஆரம்பிச்சுட்ட?, எதையோ பண்ணி தொல. எவ்வளவு பணம் வேணும். எப்ப போடணும்னு மட்டும் சொல்லு. நான் ட்ரான்ஸ்பர் பண்ணிடுறேன்”, என்று கூறி முடித்துக் கொண்டான் எத்திராஜ்.

இப்படியே இரண்டு நாட்கள் சென்றது. கிரஷில் வேலை அதிகமாகவே இருந்தது மாலினிக்கு. மாலை மங்க ஆரம்பித்தது ஒவ்வொரு பெற்றோர்களும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.தாடி மீசையுமாக கிரஷின் உள்ளே நுழைந்தான் ஒருவன். அந்த ஆண் பார்ப்பதற்கே கரடு முரடாக தெரிந்தான். ஒரு ஆண் குழந்தையின் பெயரை சொல்லி அவனை அழைத்துச் செல்ல வந்திருப்பதாக கூறினான்.

அவளுக்கு அந்த மனிதனை சுத்தமாக தெரியவில்லை. அந்த குழந்தையின் பெற்றோர் கொடுத்த குறிப்பேடு எடுத்து பார்த்தாள். அந்த மனிதரைப் பற்றிய எந்த குறிப்பேடும் இல்லை.

“சாரி சார், என்னால உங்க கூட அனுப்ப முடியாது”, பொறுமையாக கூறினாள்.

“நான் அந்த குழந்தையோட பெரியப்பா ஊர்ல இருந்து வந்திருக்கேன். என் கூட அனுப்ப மாட்டேன்னு நீ எப்படி சொல்லுவ? “, என்று அவர் ஒருமயில் சண்டை புரிய.

“மன்னிச்சிடுங்க சார் அவங்களோட பேரண்ட் கூட மட்டும் தான் நான் அனுப்புறது. வேற யார்கூடயும் கிடையாது. அப்படி யார் கூடயாவது அனுப்புறதா இருந்தா அவங்க பேரன்ட் எங்களுக்கு சைன் பண்ணி லீகலா எழுதி கொடுத்து இருக்கணும்”.

“நீ என்னடி என் வீட்டு பிள்ளையை அனுப்ப மாட்டேன்னு சொல்றது? “, என்று அந்த மனிதர் மரியாதையிண்மையாக பேச. மாலினிக்கு கோபம் வந்தது கஷ்டப்பட்டு அடக்கி கொண்டாள்.

“இங்க பாருங்க சார் குழந்தையை உங்க கூட அனுப்ப முடியாது என்ன பண்ணனுமோ பண்ணிக்கோங்க. போலீஸ் ஸ்டேஷனுக்கு போறதுனாலும் எனக்கு பிரச்சனை இல்லை. நான் லீகலா தான் இந்த கிரஷ நடத்திக்கிட்டு இருக்கேன்”, என்று திடமாக கூறினாள். அந்த மனிதன் எகிரி கொண்டு பேசினார் . கிரஷில் வேலை செய்பவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள்.

அவர்களை முறைத்து விட்டு அந்த மனிதர் சென்று விட்டார். சற்று நேரத்தில் அந்த பெற்றோர்கள் வர. நடந்த சம்பவத்தை கூறினாள் மாலினி. அவர்கள் தங்களை தவிர யாருடனும் மகனை அனுப்ப வேண்டாம் என்று கூறிவிட்டனர். அவர்கள் அந்த பக்கமாக செல்ல அரவிந்த் இந்த பக்கமாக நுழைந்தான்.

“சி.சி.டிவி ஃபுட்டேஜ்ல இருக்கும் இல்ல அந்த ஆள் மேல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்வா? “, உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக இதை தான் கூறிக்கொண்டு வந்தான்.“இல்ல இப்ப பிரச்சனை இல்ல. ஆமா உங்களுக்கு எப்படி தெரியும் யார் சொன்னது?”.

“இப்ப அதுவா முக்கியம்??, யாரோ சொன்னாங்க. அவன் அவ்வளவு பேசுறான் நீ அமைதியா இருக்க. வா கம்ப்ளைன்ட் ரெஜிஸ்டர் பண்ணலாம்”, என்று அழைத்தான் அரவிந்த்.

“அப்படி எல்லாம் சும்மா சும்மா கம்ப்ளைன்ட் எடுத்துட்டு போலீஸ் ஸ்டேஷன் போக முடியாது. அது நமக்கு தான் தேவையில்லாத பிரச்சினை ஆகும் “, என்றாள்.

“ஏன் போக முடியாது?, ஒருவேளை நம்பி அவங்க கூட அனுப்பிவெச்சு இருந்தேனா, குழந்தைக்கு ஏதாவது ஆபத்து வந்துச்சுன்னா??, அப்ப என்ன பண்ண முடியும்? “, என்று பதறியபடி கேட்டான்.

“நான் அப்படியெல்லாம் அனுப்ப மாட்டேங்க. அதுக்கு தான் யார் யார் கூட அனுப்பனும்னு எழுதி கையெடுத்து வாங்கி வச்சிருக்கேன். அவங்கள தவிர வேற யார் வந்தாலும் அனுப்ப மாட்டேன். சம்பந்தப்பட்டவர்களே போன் பண்ணி சொன்னா கூட. வீடியோ கால் மூலமாக கன்பார்ம் பண்ணிக்கிட்டு அதற்கான ஒரு லெட்டர் எவிடென்ஸ் வாங்கிக்கிட்டு தான் அவர்களை நான் அனுப்புறது. நம்மளோட சேஃப்டிக்காக மட்டும் இல்ல, குழந்தைகளோட பாதுகாப்பும் ரொம்ப முக்கியம். ஒவ்வொரு குழந்தையும் பெத்தெடுக்கறதுக்கு அந்த தாய் எவ்வளவு கஷ்டப்படுகிறாள்னு அவளுக்கு மட்டும் தான் தெரியும் என்றாள். அதில் அவள் கண்கள் கலங்கிவிட்டது.

“இங்க பாரு நடந்து முடிஞ்சதை பத்தி யோசிக்கிறதுனால எதுவும் இங்க மாற போறதில்ல. உனக்கு ஏற்கனவே ஒரு பொண்ணு இருக்காள். நான் ரெடியா இருக்கேன்”, என்று சட்டை காலரை தூக்கிவிட்டபடி கூறினான் அரவிந்த்.

முதலில் அவளுக்கு புரியவில்லை. இவன் என்ன உளறுகிறான் என்று பார்த்தாள். பிறகுதான் அவள் கலங்குவதனால் அவள் சிந்தனையை வேறு திசையில் திருப்ப கூறுகிறான் என்று அவளுக்கு புரிந்தது.

“எனக்கு அந்த ஒரு குழந்தையே போதும்”, என்று கூறிவிட்டு தன் ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு நடந்தாள்.

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. இவ்வளவு நேரம் வருத்தப்பட்டாள். நான் கேட்ட உடனே எப்படி சிலிர்த்து கிட்டு போறா பாரு?”, என்று முனங்கியபடி அவள் பின்னோடு நடந்தான்.

குழந்தை தாயின் கையில் இருந்தபடியே அவனையும் தாயையும் மாறி மாறி பார்த்தாள். அவன் வெளியில் வரும் போது அவள் காரில் அமர்ந்திருந்தாள். அவனும் ஏறி அமர்ந்த நொடி.

“நீ பீல் பண்றேன்னு சொன்னேன். மத்தபடி பர்சனலா எதுவும் இல்ல”, என்றான் அரவிந்த்.

“இப்பயும் ஒன்னும் கெட்டு போகல. நீங்க யாரையாவது திருமணம் செஞ்சுக்கலாம். எனக்கு எந்த இஸ்ஸுவும் இல்ல. நான் பிரச்சினையும் பண்ண மாட்டேன். டைவர்ஸ் செய்யறதா இருந்தா டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட கூட தயாரா இருக்கேன்”, என்று அவள் சாதாரணமாக கூறினாள்.

“எத்தனை வாட்டி டைவர்ஸ் பண்ணுவ?“, என்று அழுத்தமாக கேட்டுவிட்டான் அரவிந்த். அதில் அவள் கண்கள் அதிர்வில் விரிந்துக்கொள்ள, அடுத்த நொடி தலையை தாழ்த்திக் கொண்டாள். கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

பேசிவிட்ட பிறகு தான் தவறு அவனுக்கும் புரிய முகத்தை முழுவதுமாக சுருக்கி ஸ்டீயரிங்கை குத்தினான் அரவிந்த்.

“சாரி சாரி மாலினி, கோவத்துல ஏதோ தப்பா பேசிட்டேன். உன்ன ஹர்ட் பண்ணனும்னு பேசல. தெரியாம தான் வாய் தவறி வந்துருச்சு”, படபடப்பாக கூறினான்.

“இதுக்கு தான், நான் எனக்கு கல்யாணம் வேணாம்னு சொன்னேன். என் வாழ்க்கையை யாரோடையும் இணைத்துக்கொள்ள நான் விரும்பல. பட்ட வரைக்கும் போதும்”, என்றாள் கலக்கமான குரலில்.

“நான் அப்படி மீன் பண்ணல மாலினி, நீ மூட் ஆஃபா இருக்கன்னு, உன்ன என்துஸ் பண்றதுக்காக ஜாலியா பேசினேன். ஆனா நான் என்னமோ செக்ஸ்கு அலையர மாதிரி டைவர்ஸ்னு கேட்கும் போது. எனக்கு தானா கோவம் வந்துருச்சு. பட் என்ன கோபம் வந்திருந்தாலும் நான் அப்படி பேசி இருக்க கூடாது. சாரி, ரியலி வெரி வெரி சாரி”.

எச்சிலை உள்கூட்டி விழுங்கினாள். கண்களில் வர துடித்த கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு திரும்பினாள்.

“அம்மா அழ அழ”, என்று அவள் கண்ணீரை மகள் துடைத்து விட. பரபரத்த கைகளை கட்டுப்படுத்திக் கொண்டு அரவிந்த் அமர்ந்திருந்தான்.

“கொன்னு”, என்று ஆள்காட்டி விரலை அவன் முன்பு ஆட்டியபடி அவனை மிரட்டினாள் அவனுடைய மகள். அவன் இரண்டு காதுகளிலும் கையை வைத்துக் கொண்டு

“உங்க அம்மாவுக்கும் சாரி, உனக்கும் சாரி. தப்புதான் மன்னிச்சிரு உங்க அம்மாவையும் மன்னிக்க சொல்லு”, என்று கூறினான்.

“வண்டியை எடுங்க. நேரமாகுது பாப்பாவுக்கு பசிக்கும்”, என்று மட்டுமே கூறினாள் மாலினி.

“மன்னிச்சுட்டேன்னு சொல்ல மாட்டியா? “, என்று அவன் கெஞ்சும் குரலில் கேட்க. அதற்கும் அவள் பதில் கூறவில்லை. அவள் மகள் வேறு ஒரு புறம் அவனை முறைத்துக் கொண்டிருக்க. அமைதியாக வாகனத்தை எடுத்து விட்டான் அரவிந்த்.வீட்டுக்கு வந்த பிறகும் அதுவே தான் தொடர்ந்தது. சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டாள். அவன் மன்னிப்பு யாசித்துக்கொண்டே இருந்தான். இரவு உணவிற்காக அவள் எடுத்து வைக்கும் போது.

“நீ மன்னிச்சுட்டேன்னு சொன்னாதான் நான் சாப்பிடுவேன்”, என்றபடி கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்து விட்டான். “உங்கள மன்னிக்கிறதுக்கு நான் யார்?, இந்த மாதிரி வார்த்தைகளை கேட்டு கேட்டு எனக்கு பழகிடுச்சு. வலிக்கிற மாதிரி வார்த்தைகள் எனக்கு புதுசு இல்ல. உங்ககிட்ட வாங்குறது தான் புதுசா இருக்கு. ஆனா கொஞ்ச நாள்ல இதுவும் பழகிடும். குழந்தைக்காக எதையும் நான் தாங்கிப்பேன்”, என்றாள் மாலினி.

“சாரி மா, சத்தியமா நாம குழந்தைக்காக தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனா பிரியனுன்ற வார்த்தை இனிமே வேண்டாமே. உன் வாயிலிருந்து இனிமேல் அந்த வார்த்தை வராமல் பார்த்துக்கொள், ப்ளீஸ்”, என்றான். புருவம் இடுங்க அவனைப் பார்த்தாள் மாலினி.

“உங்களுடைய ஏக்கங்கள் உணர்வுகள் இதை நான் தப்பு சொல்லல. ஆனா என்னால அது முடியாதுன்னு தான் இந்த திருமண வேணாம்னு உங்களுக்கு படிச்சு படிச்சு சொன்னேன். இப்ப எனக்குமே குற்ற உணர்வா இருக்கு. நீங்க பேசுனதுக்கு நான் கோபப்படல நீங்க விளையாட்டுக்கு அதுவும் என்ன மாத்துறதுக்காக தான் பேசினீங்கன்னு. ஆனா உங்க உணர்வுகளோட விளையாடுற மாதிரி தோணுது. உங்க இளமை என்னால விரயம் ஆகுறா மாதிரி பீல் ஆகுது . அதனால தான் அந்த வார்த்தையை சொன்னேன். எனக்கு ரெண்டு வாட்டி கல்யாணம் பண்ணனும் என்ற எண்ணமும் இல்ல, ரெண்டு வாட்டி டைவர்ஸ் பண்ணனும் என்ற எண்ணமும் இல்லை. இனிமே இந்த வார்த்தையை உபயோகிக்க மாட்டேன். உங்க கோபத்தை பொறுத்துக்க நான் என்ன தயார் படுத்திக்கிறேன் “.

கண்களை மூடி திறந்தான்.

“எனக்கு புரியுது. தப்பு என்னுடையதுதான். இனிமேல் இதுபோல விளையாட்டுக்கு கூட பேசாம பாத்துக்கறேன்”, என்றான் “என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்லை. ஒருவேளை உங்க கருத்தில் ஏதாவது மாற்றம் இருந்தால். நீங்க தாராளமா சொல்லலாம். நான் தவறா எடுத்துக்க மாட்டேன்”, என்றாள்.

அவளை ஆழமாக பார்த்துவிட்டு அமைதியாக ஜன்னலின் புறம் சென்றவன் ஜன்னல் கம்பிகளை பிடித்தபடி நின்று கொண்டான்.அவனையே அவள் பார்த்துக் கொண்டிருப்பது தெரிய திரும்பி அவள் புறம் பார்த்தான். இதே வார்த்தையை எங்க அப்பா கிட்ட எத்தனையோ வாட்டி நான் கேட்டு இருக்கேன். இந்த அம்மா எனக்கு வேணாம்பா அம்மாவ டைவர்ஸ் பண்ணிடுங்கன்னு. அதுக்கு எங்க அப்பா என்ன சொல்வார் தெரியுமா?? “, வாழ்க்கையில் திருமணம் ஒரு வாட்டி தான் நடக்கணும். அது நல்லவங்களோ கெட்டவங்களோ அவங்க கூட வாழ்ந்து செத்துடனும்னு சொன்னாரு. நான் இதை உன்ன ஹர்ட் பண்றதுக்காக சொல்றேன்னு நினைக்காத. உன்னோட கடந்த காலம் தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உன்ன ஹர்ட் பண்ணனும்னு நான் எப்பயுமே நினைக்க மாட்டேன். உன்னோட பிரச்சினைகள் நீ பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு தெரியும். உன் நிலைமையில யார் இருந்தாலும் இந்த முடிவு எடுத்திருப்பாங்க. ஒரு வேலை அந்த இடத்துல என் தங்கச்சி இருந்தாலும் நானே அவளை அந்த படுகுழியில் இருந்து கூட்டிட்டு வந்திருப்பேன். நான் பேசறது முழுக்க முழுக்க எங்க அம்மாவ பத்தி. அவங்கள பத்தி மட்டும் தான்”, ஆழ்ந்த பெருமூச்சை விட்டபடி கைகளை கட்டிக்கொண்டான்.

அவன் கூற வருவதை அவள் உள்வாங்க ஆரம்பித்தாள்.

3 thoughts on “தேவதையாக வந்தவளே 25”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *