Skip to content
Home » நிழல் தேடும் நிலவே…8

நிழல் தேடும் நிலவே…8

நான் தான் சொன்னேனே சித்தார்த் விட்டுருங்க முடிஞ்சு போனது முடிஞ்சு போனதாகவே இருக்கட்டும் என்ற மகாலட்சுமியின் கையைப் பிடித்தவன் என்னடி சொல்ற முடிஞ்சு போனது முடிஞ்சு போனதா இருக்கட்டுமா நான் உன்னை லவ் பண்றேன் மஹா என்றான் சித்தார்த்.

நீங்க உண்மையிலேயே என்னை லவ் பண்றீங்க அப்படின்னா நீங்கள் உங்க அம்மாவை சமாதானப்படுத்துங்க அவங்க கேட்ட வரதட்சணை எங்களால் கொடுக்க முடியாது எங்க சக்திக்கு தகுந்த மாதிரி செய்முறை செஞ்சு உங்களை கல்யாணம் பண்ணிக்க அவங்களை சம்மதிக்க வைங்க அதை விட்டுட்டு சும்மா நீங்க பணம் தரேன் அந்த பணத்தை வைத்து சீர் செய்யுங்க இப்படி சொல்லி என் குடும்பத்தை அசிங்கப்படுத்தாதீங்க. உங்க அளவுக்கு வசதி இல்லைனாலும் நாங்களும் கௌரவமா வாழனும்னு நினைக்கிறவங்க கௌரவமா தான் வாழ்ந்துகிட்டு இருக்கிறோம் அதனால எங்களை கேவலப்படுத்த நினைக்காதீங்க ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க சித்தார்த் என்றாள் மகாலட்சுமி.

என்ன மஹா என்னை கொஞ்சம் கூட புரிஞ்சுக்காமல் பேசிட்டு இருக்க நான் உன் மேல உயிரையே வச்சிருக்கேன் என்று மீண்டும் சித்தார்த் சொன்னதையே சொல்ல உங்களுக்கு நான் சொல்றது புரியுதா புரியலையா சித்தார்த் எனக்கு உங்களை பிடிக்கும் நானும் உங்களை விரும்பினேன். ஆனால் உங்க அம்மா கேட்கிற வரதட்சணையை கொடுத்து என்னால உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது என்னோட குடும்ப சூழ்நிலை அப்படி இருக்கு தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க நீங்கள் என்னோட ஓடி வந்துரு இல்ல நான் காசு தரேன் அத வச்சு நீங்க கல்யாணம் பண்ணு இப்படி என் குடும்பத்தை அசிங்கப்படுத்துவதற்கு உண்டான வழியைத்தான் நீங்கள் சொல்றீங்களே தவிர உங்க அம்மாவை சமாதானப்படுத்தணும் அப்படிங்கற எண்ணம் உங்க மனசுல இல்லவே இல்லை .

நீங்க முதலில் உங்க அம்மாகிட்ட உங்க மனசை புரிய வைக்க முயற்சி பண்ணுங்க சித்தார்த் அப்பறமா நம்ம கல்யாண பேச்சு பேசலாம் ப்ளீஸ் என்னை விட்டுருங்க என்றாள் மகாலட்சுமி.

என்ன சித்தார்த் ஏதோ பேசணும்னு சொன்ன என்ற அன்பரசியிடம் அம்மா என்னை புரிஞ்சுக்கோங்க அம்மா என்னால மகாலட்சுமி இல்லாமல் வாழ முடியாது தயவு செஞ்சு அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருங்க என்றான் சித்தார்த்.

இப்ப கூட உன்னோட கல்யாணத்துக்கு நான் சம்மதம் இல்லைன்னு சொல்லவே இல்லையே சித்தார்த் எனக்கு சம்மதம் தான் நான் கேட்கிற வரதட்சணையை போட்டுட்டு அவள் இந்த வீட்டுக்கு மருமகளா வரட்டும் நான் எந்த தடையும் விதிக்க வில்லையே என்றார் அன்பரசி.

எதுக்குமா இந்த வரதட்சனை என்ற சித்தார்த்திடம் அதெல்லாம் ஒரு கௌரவம் சித்தார்த் உனக்கு புரியாது. என் பையன் என்ன வெட்டிப்பயனா ஒண்ணுமே போடாம ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து அவளை என் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க எல்லாம் நம்ம சொந்த பந்தங்கள் மெச்சுற‌ அளவுக்கு அவளை சீர் செய்யச் சொல்லி இந்த வீட்டுக்கு மருமகளா வரச்சொல்லு எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் எதுவுமே செய்ய மாட்டேன் அப்படின்னு அவள் இந்த வீட்டுக்கு வரக்கூடாது நான் அதுக்கு சம்மதிக்கவே மாட்டேன் என்றார் அன்பரசி .

அம்மா அவளோட குடும்பம் என்று அவன் ஏதோ சொல்ல வர இதோ பாரு சித்தார்த் அவர்கள் குடும்பம் இருக்கிற சூழ்நிலையில் நான் கேட்கிற வரதட்சனை செய்ய முடியாது அப்படின்னா அவளை உன்னை மறந்திட சொல்லு எனக்கு என் வீட்டு மருமகள் அப்படின்னா அவள் நான் எதிர்பார்க்கிறது மாதிரி ஒரு சீர் சனத்தியோட அவள் வந்தா தான் என் சொந்த பந்தம் என்னை மதிக்கும் .

முதல்ல நீ அதை புரிஞ்சுக்கோ நம்ம ஒன்னும் தனி தீவுல வாழ வில்லை சொந்த பந்தங்களோடு சேர்ந்து தான் வாழ்ந்துகிட்டு இருக்கோம். நம்மளை எல்லாரும் மெச்சனுமே தவிர இழப்பமா பார்க்க கூடாது அது இந்த அன்பரசிக்கு சுத்தமா பிடிக்காது என்றார் அன்பரசி.

அவள் இல்லைன்னா நான் செத்துருவேன் அம்மா என்ற சித்தார்த்திடம் தாராளமா செத்துப்போப்பா பெத்தவங்கள விட நேத்து வந்த ஒருத்தி தான் உனக்கு முக்கியம்னு நீ நெனச்சின்னா தாராளமா செத்துப் போ பெத்த பிள்ளைய சாக கொடுத்துட்டு நானும், உங்க அப்பாவும் மட்டும் என்ன உயிரோடவா இருப்போம்.

பேசாமல் விசயம் வாங்கிட்டு வா மூன்று பேரும் சேர்ந்து குடிச்சிட்டு செத்துருவோம் ஆனால் ஒன்று நான் செத்தாலும் சாவேனே தவிர அவளை இந்த வீட்டுக்கு நான் எதிர்பார்க்கிற சீர் வரிசை இல்லாமல் மருமகளா வர விடவே மாட்டேன் அதை நீ புரிஞ்சுக்கோ சித்தார்த்.

இந்த காசு, நகை, சீர் எல்லாம் எனக்காக கேட்க வில்லை உனக்காக தான் கேட்கிறேன். பிற்காலத்தில் உனக்கு யூஸ் ஆகும் அதனால தான் கேட்கிறேன் அதனால சும்மா தேவையில்லாம என் மனசை மாத்த ட்ரை பண்ணாமல் அவளை மறந்துவிடு இல்லையா நான் கேட்கிறதை அவளை செய்யச் சொல்லிட்டு இந்த வீட்டுக்கு வர சொல்லு இதுதான் வேற ஆப்ஷன் உனக்கு இல்லை . நான் செத்துப் போயிடுவேன் அப்படின்னு நீ மிரட்டுன அப்படின்னா உனக்கு முன்னாடி நான் செத்துப் போயிருவேன் அதை மறந்துடாத என்ற அன்பரசி எழுந்து சென்று விட்டார்.

சித்தார்த் நொந்து போனான் அவளோ உன் அம்மாவின் மனசை மாற்று என்கிறாள். தன் அன்னையோ நான் கேட்ட சீர்வரிசை இல்லை என்றால் திருமணம் நடக்காது என்கிறார் . அவனால் அவளை மறக்க முடியாது அந்த அளவுக்கு அவள் மேல் பைத்தியக்காரத்தனமான காதல் அவனுக்கு உண்டு. அவளுக்கும் தான் ஆனால் அவளால் அவள் குடும்பத்தை தவிக்க விட்டு இவனுடன் சந்தோஷமாக வாழ முடியாது.

அக்கா அவரே நம்ம வீட்ல வந்து இவ்வளவு தூரம் பேசுறாருன்னா நீ ஏன் அக்கா அவருக்காக யோசிக்க மாட்டேங்குற என்ற அர்ச்சனாவிடம் அவருக்காக யோசிக்காமல் இல்லை அர்ச்சனா ஆனால் ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோ நம்ம தகுதிக்கு மீறி ஒரு விஷயத்தை அடையணும்னு நினைக்க கூடாது தகுதிக்கு மீறுன ஒரு விஷயத்தை மேல ஆசைப்பட்டுட்டேன். அது அடைஞ்சே தீரனும்னு சொல்லி என்னையும் ,என்னை சேர்ந்தவங்களையும் இன்னும் நான் படுகுழிக்குள்ள தள்ளாமல் இருக்கணும் அது ஒன்று தான் ஒரு மூத்த பொண்ணா இந்த வீட்ல என்னோட பொறுப்பு அப்படின்னு நான் நம்புறேன். அதனால தான் சொல்கிறேன் சித்தார்த் வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழட்டும் எனக்கு எந்த கவலையும் இல்லை வறுத்தம் இருக்கும் தான் இல்லைன்னு சொல்ல வில்லை ஆனால் அதைவிட எனக்கு நம்ம வீட்டில் நிறைய பொறுப்பு இருக்கு அதை புரிந்து நான் நடந்துக்கணும் அதனால இனிமேல் சித்தார்த் பத்தி எந்த பேச்சும் இந்த வீட்ல பேச வேண்டாம் குறிப்பா நீ என் மனசை மாத்த ட்ரை பண்ணாதே என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் அடைந்து கொண்டாள் மகாலட்சுமி.

அண்ணா என்ற தமிழரசனிடம் ஒன்றும் இல்லை தமிழ் என்று தம்பியின் தலையை தடவி கொடுத்தான் கார்த்திகேயன். அப்பா ஹாஸ்பிடல் வரவே இல்லயே அண்ணா என்ற தமிழரசனிடம் அப்பாவுக்கு உன் மேல் கோபம் இருக்கு தமிழ் எல்லாம் சரியாயிடும் சீக்கிரம் உன் உடம்பும் சரியாகும் என்றான் கார்த்திக்.

சித்ரா என்றவனிடம் அந்த பொண்ணுக்கும், உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி எழுதி கொடுத்துட்டு வந்தாச்சு தமிழ் இனிமேல் அதைப் பத்தி பேசாதே என்றான் கார்த்திகேயன் .

அண்ணா எப்படி அண்ணா என்று அழுத தமிழரசனின் கையை பிடித்தவன் உன்னோட வலி என்னன்னு எனக்கு புரியும் தமிழ் ஆனால் வேறு வழி இல்லை நம்ம கிட்ட காசு பணம் கிடையாது அதனால நமக்கு காதலும் நிலைக்காது அதனால அத பத்தி யோசிக்காதே ஒழுங்கா படிச்சு முன்னேறுகிற வழியை பாரு நீ நல்லா சம்பாதிச்சு நல்ல நிலைமைக்கு வந்ததுக்கு அப்புறம் உனக்கான ஒரு நல்ல எதிர்காலம் அமையும் என்றான் கார்த்திகேயன்.

அவனால் தன் தம்பிக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை ஏனெனில் அவனே காதல் தோல்வியில் தானே இருக்கிறான். அவனது வலியை விட தம்பியின் வலி பெரிதா என்றால் அவனுக்கு தெரியவில்லை ஆனால் இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வலி தான் அதை அவனால் உணர முடியும். முடிந்த அளவு தம்பிக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தான் கார்த்திகேயன்.

…. தொடரும்….

4 thoughts on “நிழல் தேடும் நிலவே…8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *