Skip to content
Home » புன்னகை 47

புன்னகை 47

“தேவா வரு விடம் நீ மாவு பிசைந்து வைக்க வேண்டும் என்றவுடன் வரு அதிர்ச்சியாகி என்ன நான் மாவு பிசையா  வேண்டுமா ?என்று முழித்துக் கொண்டு சமையலறையில் நின்று கொண்டு இருந்தாள்”..தேவா அவளை பார்த்துவிட்டு சமையலறையில் இருந்து வெளியில் வந்தான்  ஐந்து நிமிடம் அவள் அப்படியே நின்று கொண்டு இருந்த உடன் தேவா திரும்பவும் சமையலறைக்குள் சென்றான்..”அவள் அப்படியே நின்று கொண்டு இருந்த உடன் என்ன டி என்றான் தேவா ப்ளீஸ் மாவு வேண்டுமானால் நீங்கள் பிசைந்து தாருங்கள் நான் திரட்டி   தருகிறேன் என்றாள்”..ஏன் மேடமுக்கு மாவு பிசைய  தெரியாதோ ? என்றான் அவள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு நின்றவுடன் நான் சும்மா தான்  சொன்னேன் வாடி. மாவு இருக்கிறது ..நாம் தோசை ஊற்றிக் கொள்ளலாம் என்று அவளை கையோடு ஹாலுக்கு அழைத்துக் கொண்டு வந்தான் .பிறகு ஐந்து பேரும் ஒன்றாக அமர்ந்து வரு செய்த ஸ்நாக்ஸை சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்..அப்பொழுது “வாசு வந்தான் வந்து நின்றவன் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டு பெருசா எதிர்பார்த்து வந்தேன்  என்ன மச்சான் இங்க ஒண்ணுமே நடக்கல” என்றான்..தேவா தனது நண்பனின் தலையில் கொட்டி விட்டு சார் என்ன எதிர் பார்த்தீங்க என்று கேட்டான் வாசுவை வீட்டில் உள்ள அனைவரையும் குறுகுறுவென பார்த்தார்கள்..”வாசு அனைவரையும் பார்த்துவிட்டு தனக்கு ஒரு தட்டை எடுத்துக்கொண்டு ஆதுவின் அருகில் வந்து உட்கார்ந்தான் மற்ற ஐந்து பேரும் அவனது செயலை எண்ணி சிரித்தார்கள்”..”என்ன டா வாசு இந்த பக்கம் இந்த நேரத்துல என்றார் தீரன். வாசு ஏன் என் வீட்டிற்கு வருவதற்கு நேரம் காலம் பார்த்து தான் வரவேண்டுமா ? “என்றான் ..அதற்கு” அரசி தான் எலி அம்மணமா எல்லாம் ஓடாதுன்னு எங்களுக்கு தெரியும் டா என்றார் வாசு சிரித்துக் கொண்டே தீரன் ,அரசி இருவரையும் பார்த்தான்.” “நான் எனது மச்சான் மாமியார் வீட்டில் இருப்பானே விருந்திற்கு சென்றிருப்பேனே என்று எண்ணி உங்களை பார்த்து விட்டு வரலாம் என்று வந்தேன்” என்றான் ..அவன்  வீட்டில் தான்  இருக்கிறான் என்று எல்லாம் தெரிந்து கொண்டு நீ வரவில்லை அப்படி தானே டா நாங்கள் நம்பி விட்டோம் என்றார் அரசி ..அதன் பிறகு வாசு சிரித்த முகமாக நான் மாலை 5:00 மணி போல் இவனுக்கு போன் செய்தேன் இவன் வரு வீட்டில் இருந்து கிளம்பி விட்டதாக சொன்னான்..2 நாட்கள் இருந்து விட்டு வர வேண்டியது தானே   என்று கேட்டதற்கு வரு இங்கு செல்லலாம் என்று அழைத்துக் கொண்டு வந்து விட்டதாக  சொன்னான்..அப்போது “நான் இவனிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது அம்மாவும் அருகில் இருந்தார்கள் அம்மா தான் அவர்கள் இங்கு வந்து விட்டார்கள் என்ற உடன் நாளை அங்கு விருந்துக்கு வர சொன்னார்கள்”..”அதற்காக கூப்பிட வந்தேன் அம்மாவும் உடன் வருகிறேன் என்று சொன்னார்கள் இந்த நேரத்தில் வேண்டாம் என்று விட்டு நான் மட்டும் வந்தேன் அம்மா போனில் பேசுகிறேன் என்று சொன்னார்கள் என்று விட்டு வருவை பார்த்தான்..அவள் சிரித்துக் கொண்டே வாசுவை பார்த்தவுடன் வாசுவும்  அவளை  பார்த்துவிட்டு அம்மா வந்து உன்னை நேரில் அழைக்க வேண்டுமா? என்று கேட்டான்.”வரு சிரித்துக் கொண்டே அண்ணா சோறு போடுறேன்னு சொன்னா நான் ரெடி. அதுக்கு மேல நாளை வீட்டிற்கு வா என்று  ஒரு மெசேஜ் தட்டி விட்டா கூட வந்துருவேன் என்ற உடன் அனைவரும் சிரித்து விட்டார்கள்”..” தேவா அவளை முறைத்துவிட்டு திருந்தாத ஜென்மம் என்றான் வரு அவனுக்கு பழுப்பு காண்பித்தாள் அதன் பிறகு வாசு பக்கம் திரும்பி அவனிடம் வருகிறேன் அண்ணா “ஆனால் *மதியத்திற்கு வரட்டா கோவித்துக் கொள்ளாதீர்கள் என்று கேட்டாள் ஏன் வரு இப்பொழுது தான் சோறு என்று சொன்னால் வந்து விடுவேன் என்று சொன்னாய் என்றான் அண்ணா என்று முறைத்தாள்” சும்மா டா சொல்லு ஏன் இல்ல அண்ணா ஆதுவை பள்ளி அனுப்பிவிட்டு அவசரமாக கிளம்ப வேண்டும் மதியத்திற்கு மேல் என்றால் அவசரமாக வர வேண்டாம் பாருங்கள்.தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் அம்மாவிடம் நானும் பேசுகிறேன் மதியத்திற்கு வருகிறோம் என்று சொல்லுங்கள் காலை ஒரு 11 மணி அளவில் கூட வருகிறோம் மாலை வரை இருந்து விட்டு வந்து விடுகிறோம் என்று சொன்னாள் ..அவனும் சரி என்ற உடன் வாங்க அண்ணா சாப்பிடலாம்  என்று அழைத்தாள்  இல்ல டா எனக்கு பசிக்கவில்லை என்றான். பிறகு “நேரம் ஆவதை உணர்ந்து வரு சமையலறைக்குள் சென்று தேவா பிசைந்து வைத்த மாவை எடுத்துக் கொண்டு வந்து உணவு மேசையின் மீது வைத்தாள்”..”வாசு அமைதியாக வருவை பார்த்துக் கொண்டிருந்தான் தேவா வருவின் கையை பிடித்தான். அவனை அமைதியாக இருக்குமாறு கண்ணால் சாடை காண்பித்து விட்டு சமையல் அறைக்குள் புகுந்து குருமா வைப்பதற்கு தேவையான காய்கறிகளை எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள் “..தீரன் எதுவுமே கண்டுக்காமல் திருமண கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டு இருந்தார். ஆது படித்துக் கொண்டு இருந்தான் வாசு தான் எதற்காக இங்கு உட்கார்ந்திருக்கிறோம் என்பது போல் யோசித்தான்..ஆனால் அரசி எதையும் பேசாமல் எதைப்பற்றியும் யோசிக்காமல் அவள் எடுத்துக் கொண்டு வந்து வைத்த மாவை உருட்ட ஆரம்பித்தார் வாசு அதை வாயை பிளந்து பார்த்துவிட்டு வேகமாக  தேவாவை பார்த்தான்..தேவா அமைதியாக சமையல் அறைக்குள் புகுந்து கொண்டான் வாசு அவனது பின்னாடியே சென்றான் அப்போது வரு காய்கறிகளை அறிந்துகொண்டு இருந்தாள் ..டேய் மச்சான் இங்க என்னடா நடக்கிறது என்று வாசு சமையல் அறைக்குள் புகுந்தவுடன் தேவாவை பிடித்து கேட்டான்.அதெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் காலையிலிருந்து இப்படித்தான் நடக்கிறது என்றான்..டேய்  உனக்கு திருமணமாகி இன்றோடு இரண்டு நாள் தாண்டா ஆகிறது என்றான் ஆமாம் நான் மட்டும் என்ன இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது என்றா சொன்னேன் என்றான்.”வரு அதற்குள் நறுக்கிய காய்கறிகளையும் உருட்டிய சப்பாத்தி மாவையும் எடுத்துக் கொண்டு வந்து சமையலறையில் வைத்துவிட்டு வரவேற்புரைக்கு சென்று விட்டாள் நண்பர்கள் ஏதாவது பேசிக் கொள்ளட்டும் என்று எண்ணினாள்”..அவள் வந்தவுடன் வாசுவும் வரு பின்னாடியே வந்து உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தான். சரி நான் கிளம்புகிறேன் என்றான் அண்ணா அனைத்தும் ரெடி ஆகிவிட்டது சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்றாள்..இல்லை எனக்கு பசிக்கவில்லை  நான் வீட்டில் போய் பார்த்துக் கொள்கிறேன் என்றான்.இவ்வளவு நேரம் இருந்து விட்டு சாப்பிடாமல் சென்றால் நல்லா இருக்காது என்றாள் இல்லடா அம்மா தேடுவார்கள் என்றான்..அண்ணா நீங்கள் என்ன சின்ன பிள்ளையா இரண்டு சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள் ஒன்றும் ஆகிவிடாது என்றாள்.சரி என்று விட்டு வாசுவும் உட்கார்ந்தான்..தேவா வேகமாக சப்பாத்தி ஒரு பக்கம் குருமா ஒரு பக்கமும் செய்தவன் வருவை அழைத்தான் .அவளும் வந்து அனைத்தையும் உணவும் மேசையின் மீது எடுத்துக் கொண்டு சென்று வைத்தாள்..வாசு இங்கு நடக்கும் அனைத்தையும் விசித்திரமாக அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்து வைத்தவுடன் அனைவருடனும் உணவு மேசையில் உட்கார செய்தாள்..பிறகு சமையல் அறையில் இருந்து தேவா குரல் கொடுத்தான். ஆது உனக்கு பூரி வேண்டுமா ?என்று அண்ணா இந்த நேரத்தில் எனக்கு வேண்டாம் என்றான்.ஆது வேண்டாம் என்று சொன்னவுடன் தேவா அடுப்பில் இருக்கும் வானலை நிறுத்திவிட்டு மூன்று பூரிகளை எடுத்துக்கொண்டு வந்து உணவு மேசையின் மீது வைத்தான் ..வாசு தான் தனது நண்பனை  கேள்வியாக பார்த்தான் ஆது தான் பூரி வேண்டாம் என்று சொல்லி விட்டானே என்பது போல் பிறகு வரு அனைவருக்கும் ஒரு தட்டை எடுத்து வைத்தவுடன் அனைவரும் ஆளுக்கு இரண்டு சப்பாத்தி போட்டுக் கொண்டார்கள் ..குருமாவையும் வரு அனைவரின் அருகிலும் நகர்த்தி வைத்தாள் அவர்களாகவே போட்டு கொண்டார்கள் தங்களுக்கு வேண்டும் அளவிற்கு பிறகு வரு வேகமாக தனக்கு அந்த மூன்று பூரியையும் எடுத்து வைத்து சாப்பிட்டாள்..”பூரிகள் மூன்றும் காலியான பிறகு தேவா விடம்   மூன்று தானா என்று கேட்டாள். இந்த நேரத்தில் எண்ணெய் பண்டம் சாப்பிடக்கூடாது என்றான் அப்போது தோசை சப்பாத்தி எல்லாம் என்று கேட்டாள்.””அதில் எல்லாம் நான் என்னை அதிகமாக ஊற்ற மாட்டேன் என்றான் அவனைப் பார்த்து முறைத்துவிட்டு எனக்கு சப்பாத்தி ஒன்றும் வேண்டாம். என்றாள் தேவா ஹாட் பாக்ஸை திறந்து அவளுக்கு இரண்டு தோசை வைத்தான்”..பிறகு “ஆதுவின் பக்கமும் தோசையை நகர்த்தி வைத்தான் . ஆது அமைதியாக தோசையை எடுத்து சாப்பிட்டுவிட்டு சரி அண்ணா நேரம்  ஆகிறது என்று விட்டு படிக்க சென்று விட்டான்”..”தீரனும் ,அரசியும் அமைதியாக இருந்தார்கள் வரு சாப்பிட்டுவிட்டு அனைத்து தட்டுகளையும் விலக்கும் இடத்தில் போட்டுவிட்டு அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு வந்தாள்” ..”வாசு அனைவரையும் ஒரு நிமிடம் பார்த்துவிட்டு கைகழுவி கொண்டு தனது நண்பனை பார்த்துவிட்டு தேவாவின் அறை கதவை திறந்தான்.கதவைத் திறந்து விட்டு ஒரு நிமிடம் நின்று வருவைப் பார்த்தான்”…”வரு வாசுவை பார்த்து சிரித்துவிட்டு அண்ணா இப்பொழுதும் அது உங்கள் நண்பனின் அறை தான் என்ன கதவு திறந்து இருக்கும்போது நீங்கள் எப்பொழுதும் போல் வரலாம் சாற்றி இருந்தால் கொஞ்சம் யோசியுங்கள்”..”மற்ற படி  நான் வெளியில் இருந்தால் அதைக்கூட யோசிக்க வேண்டிய அவசியமில்லை என்றவுடன் வாசு வருவை பார்த்து சிரித்துவிட்டு தேவாவின் அறைக்குள் சென்றான் தேவாவும் பின்னாடியே வந்தான்”…”வாசு பால்கனியில் நின்று கொண்டிருந்தான் என்ன டா மச்சான் நடக்குது என்று கேட்டான் . என்னடா நடக்குது எனக்கு புரியவில்லை என்றான் தேவா.”அதை நான் கேட்க வேண்டும் அவள் உன்னிடம் பூரி கேட்டது போல் எனக்கு தெரியவில்லை ஒரு வேலை உன்னிடம் தனிப்பட்ட முறையில் சமையல் அறையில் வந்து கேட்டாலோ என்னவோ  என்றான் இல்லையே அவள் என்னிடம் பூரி வேண்டும் என்றெல்லாம் கேட்கவில்லை என்றான்” ..”அவள் அதிகமாக சப்பாத்தி சாப்பிட மாட்டாள் அதனால் அவளுக்கு மூன்று பூரி மட்டும் போட்டேன் இரவு வேலை அல்லவா எண்ணெய் பொருள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்பதால் என்றான்”..”ஓ அப்ப சாருக்கு அவளுக்கு என்ன பிடிக்கும் என்று வரை தெரிந்திருக்கிறது அப்படித்தானே என்று தனது நண்பனை கேள்வியாக பார்த்தான் தேவா அமைதியாக தனது நண்பனை பார்த்தான்”. “ஆனால் உன்னுடைய கொழுப்பு மட்டும் அடங்கவே மாட்டேங்குது இப்பொழுது கூட நீ அவளை விரும்பினாய் என்பதை சொல்ல மாட்டாய் அப்படித்தானே என்று கேட்டான் தேவா லேசாக சிரித்தான்” சரிடா மச்சான் நன்றாக இருந்தால் சரி என்று பேசிவிட்டு நேரமாகிறது என்று வெளியில் வந்தான்..”பிறகு அனைவரிடமும் சொல்லிக்கொண்டு வருவிடம் நாளை காலை11 மணி அளவில் வந்து விட வேண்டும் ஏமாத்தி விடாதே என்று விட்டு அனைவரிடம் சொல்லிக்கொண்டு அவனது வீடு நோக்கி சென்றான்””தீரன் .அரசி இருவரும் வாசு சென்ற உடன் அவர்களது அறைக்குள் சென்று விட்டார்கள் தேவா பாத்திரங்களை கழுவ சென்றான் அப்பொழுது வரு தான் நாளை காலை பார்த்துக்கொள்ளுங்கள் நேரமாகிறது வாருங்கள் என்று அழைத்தாள்”..”காலையில் எல்லாம் என்னால் அனைத்து வேலையும் இழுத்து போட்டுக் கொண்டு எல்லாம்  செய்ய முடியாது என்றான் அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை காலை பார்த்துக் கொள்ளலாம் என்று தானே சொல்கிறேன் “என்றாள்..”தேவா அவளை முறைத்து விட்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டான் வரு வேறு எதுவும் பேசாமல் தனது மொபைல் எடுத்துக்கொண்டு வந்து உணவு மேசையின் மீது உட்கார்ந்து கொண்டாள்” “ஒரு அரை மணி நேரத்தில் தேவா அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு  வெளியில் வந்தான் அவன் வரும்பொழுது அவனது உடை பாதி வேர்வையாலும் ,பாதி தண்ணீராலும்  நனைந்து இருந்தது” “வரு உணவு மேசை அருகில் உட்கார்ந்து இருப்பதை பார்த்துவிட்டு வேகமாக அவனது அறைக்குள் புகுந்தான் வரு அவன் அறைக்குச் சென்ற பிறகு அனைத்து விளக்குகளையும் நிறுத்திவிட்டு கதவு நன்றாக சாற்றி இருக்கிறதா என்று பார்த்துவிட்டு அவளது அறைக்குள் சென்றாள்”…”வரு அறைக்குள் செல்லும்போது தேவா குளியலறைக்குள் இருந்தான் கட்டிலில் ஒரு துண்டும்,மாற்றுடையும் இருப்பதை பார்த்துவிட்டு வரு பால் கனியில் போய் நின்றாள் அடுத்த 10 நிமிடத்தில் தேவா குட்டி குளியலை போட்டுவிட்டு வந்தான் “..”வரு பால் கனியில் நின்று கொண்டிருப்பதை பார்த்துவிட்டு துண்டை எடுத்து துடைத்துவிட்டு மாற்றுவுடையும் அணிந்து கொண்டு மேல் சட்டை அணியாமல் துண்டை மேலே போட்டுக் கொண்டு அவள் பின்பு வந்து நின்றான்”…”அவள் தான் பின்னாடி வந்து  நிற்பது தெரிந்தும்   கீழே பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்து விட்டு வரு  கோபமா ?என்றான். கோபம் எல்லாம் இல்லை என்றாள்.பின்ன என்ன டி  என்று அவளை திரும்பினான் “..”அவளது கண்கள் கலங்கி இருந்தது  வேகமாக அவளுடைய தாடையை பற்றினான் வனி இங்க பாரு டி என்ன என்றான்  அவனுக்குமே அவளது கண்கள் கலங்கி இருப்பதை பார்த்தவுடன் குரல் கரகரத்தது”. “வரு ஒன்றுமில்லை என்று தன் கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டு வேறு பக்கம் திரும்பி நின்றாள். ஏய் !என்ன டி என்ன பாரு என்றான் ஒன்றுமில்லை என்று விட்டு தன் தாடையில் இருக்கும் தேவாவின் கையை மெதுவாக எடுத்துவிட்டு கட்டிலில் வந்து உட்கார்ந்து கொண்டாள்”..”தேவாவிற்கு ஒன்றும் புரியவில்லை இப்பொழுது என்ன நடந்தது என்று ஒரு நிமிடம் யோசித்தான். அவனுக்கு மனதில் தோன்றியது  ஒன்றுதான்” .”அவள் காலையில் விளக்கிக் கொள்ளலாம் என்று சொன்னதை  கேட்காமல் நாம் இப்போது பாத்திரத்தை கழுவி வைத்து விட்டு வந்தோம் “..”ஒருவேளை தான் இந்த நேரத்தில் பாத்திரம் கழுவியது இவளுக்கு பிடிக்கவில்லையா ? இல்லை நான் பாத்திரம் கழுவுவதே இவளுக்கு பிடிக்கவில்லையா? என்று யோசித்தான்” .பிறகு “தனது தலையை உலுக்கி விட்டு இவள் அவ்வாறு எல்லாம் யோசிக்க மாட்டாள் நான் இந்த நேரத்தில்  பாத்திரம் கழுவியது தான் இவளுக்கு பிடிக்கவில்லையோ என்று எண்ணி வேறு எதுவும் இருக்காது என்று யோசித்து விட்டு ஒரு சில நிமிடம் பால்கனியில் நின்றான்”..பிறகு “பால்கனி கதவை சாற்றி விட்டு துண்டை எடுத்து அங்குள்ள ஒரு சேரின் மீது போட்டவன் பனியனை எடுத்து போட்டுக் கொண்டு அவளது அருகில் வந்து உட்கார்ந்தான்”  “அவன் கட்டிலில் அவளது அருகில் உட்கார்ந்த அடுத்த நொடி அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் தேவா அமைதியாக அவளது தலையை வருடி விட்டான் “.வரு எதனால் தேவாவிடம் அவ்வாறு நடந்து கொள்கிறாள் என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம். அன்புடன் தனிமையின் காதலி

4 thoughts on “புன்னகை 47”

  1. CRVS2797

    வேற என்ன..? ஆண்மகனை வேலை செய்ய விட்டு விட்டோமே என்று நினைத்து ஃபீல் செய்தாலோ என்னவோ…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *