தேவா படித்து முடித்தவுடன் நல்ல வேலைக்கும் போய் சேர்ந்தான் முதல் சம்பளத்தில் தனது சித்திக்கு புதிய புடவை ஒன்றும் ஆதுவிற்கு ஒரு சிறிய கார் பொம்மையும் வாங்கிக் கொண்டு வந்தான் …
தனது தந்தைக்கு என்று வாட்ச் வாங்கி கொண்டு வந்து தந்தான் ஆனால் “அரசி அந்த புடவை வேண்டாம் என்று அவனது முகத்திலேயே வீசி எறிந்தார் எனக்கு என்ன தேவையோ அதை என்னுடைய கணவன் வாங்கி தருவார் எனக்கு வாங்கித் தர நீ யாருடா “என்று கேட்டார்..
அரசியை அடிக்க தீரன் கை ஓங்கி கொண்டு வந்தார் தேவா அப்பா என்று கத்தினான் அரசி தேவாவை முறைத்துவிட்டு தீரனிடம் நான் உங்களை எதுவும் சொல்லவில்லை ஆனால் அவன் எனக்கென்று எதுவும் செய்யத் தேவையில்லை…
” நீங்கள் வேண்டுமானால் அவனுக்கு அப்பாவாக இருந்து கொள்ளலாம் உங்கள் மீது அவன் உரிமை கொண்டாடுவதையும் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் என்னிடம் அவனுக்கு எந்த உரிமையும் இல்லை”..
அதேபோல் “என்னை கேள்வி கேட்கிற உரிமையும் இந்த விதத்தில் அவனது விஷயத்தில் உங்களுக்கு இல்லை என்று நினைக்கிறேன் “என்று விட்டு நகர்ந்து விட்டார் தீரன் அரசியை கோபமாக பார்க்க செய்தார்…
என்னதான் அரசி பழையபடி முற்றிலுமாக மாறி வந்தாலும் தேவாவை வேறுக்க ஆரம்பித்தார் என்பதை தீரன் உணர்ந்தார் அதற்கு முற்றிலும் காரணம் நான் தான் என்று வருந்த ஆரம்பித்தார் தேவா தனது தந்தையின் தொழில் கைப் போட்டு “அப்பா அம்மா என்னை ஏற்றுக் கொள்ளும் நாள் வரும் “என்றான்…
தீரன் அமைதியாக அவனைப் பார்த்தார் நீங்கள் என்னை சித்தி என்று கூப்பிட சொல்லி இருக்கலாம் அம்மாவும் கூப்பிட சொல்லி இருக்கலாம் நான் கூப்பிட்டாலும் மனதளவில் கூப்பிடவில்லை அவர்களின் சந்தோஷத்திற்காக மட்டும் சித்தி என்று கூப்பிடுகிறேன்…
என்றுமே அரசி அம்மா எனக்கு அம்மா தான் அதை யாரும் நினைத்தாலும் மாற்ற முடியாது அவர்களுக்கு என் மேல் கோபம் அவ்வளவுதான் என்று தனது தந்தையின் தோளில் தட்டி விட்டு “அம்மா எந்த அளவிற்கு இணை வெருகிறார்களோ அந்த அளவிற்கு என்னை நேசிக்கக்கூடிய நாள் விரைவில் வரும்” என்று விட்டு நகர்ந்து விட்டான்..
இவ்வளவு நேரம் நடந்த அனைத்தையும் ஆது அமைதியாக பார்த்தான் அதன் பிறகு தனது அம்மாவிடம் சண்டை இட்டான் அண்ணன் முதல் முதலாக வாங்கி கொடுத்ததை ஏன் வேண்டும் என்று சொல்கிறீர்கள் என்றான்..
உனக்கு உன் அண்ணன் வாங்கி கொடுத்தால் வாங்கிக் கொள் என்னிடம் அவனைப் பற்றி எதுவும் பேசாதே என்றார் “ஏன் என்னுடைய அண்ணன் உங்களுடைய மகன் இல்லையா என்று கேட்டான்”.
எனக்கு நீ மட்டும் தான் மகன் என்றார் அம்மா என்று கத்தினான் இதற்கு மேல் உன்னிடம் பேசுவதற்கு எனக்கு எதுவும் இல்லை என்னை அம்மாவாக நினைத்து என்னிடம் பேசுவது என்றால் பேசு உன் அண்ணனுக்கு தம்பியாக பேசுகிறாய் என்றால் என்னிடம் நீயும் பேச வேண்டியது இல்லை …
உன் அண்ணனுடன் மட்டும் பேசிக் கொண்டே இருந்து கொள் என்று நகர்ந்து விட்டார் தேவா ஆதுடம் ஏற்கனவே சொல்லி இருக்கிறான் “எனக்காக அம்மாவை எந்த இடத்திலும் எதிர்த்துக் கொண்டு நிற்காதே “என்று அதை நினைவில் வைத்துக் கொண்டு ஆது அமைதியாக நகர்ந்து விட்டான்.
இப்படியே வருடங்களும் சென்றது முழுக்க முழுக்க தினமும் வீட்டு வேலைகள் அனைத்தும் தேவாவின் பொறுப்பில் இருந்தது தினமும் வேலைக்கு செல்வதற்கு முன் சமைத்து வைத்துவிட்டு பாத்திரங்களையும் கழுவி வைத்துவிட்டு செல்வான்.
ஒரு சில நேரங்களில் அவன் சீக்கிரமாக சென்று விட்டால் இல்லை வேலைக்கு செல்வதற்கு நேரம் ஆகினால் பாத்திரங்களை அப்படியே விட்டு செல்வான் ஆரம்பத்தில் பாத்திரங்கள் அப்படியே இருப்பது பிடிக்காமல் விலக்கி வைத்தவர்…
தனது மகன் முழுவதுமாக தேவாவின் தம்பியாக வளர்வதை பார்க்கப் பார்க்க ஒவ்வொரு நிமிடமும் அவருக்கு பற்றி கொண்டு வந்தது அந்த கோபத்திலேயே இரவு எத்தனை மணி ஆகினாலும் அவனே வந்து விலகட்டும் என்று போட்டு வைப்பார் இப்படியே தேவாவின் மீது கோபத்தையும் வன்மத்தையும் வெறுப்பையும் வளர்த்துக் கொண்டார் ….
அரசி முற்றிலுமாக தேவாவை வெறுக்க செய்தார் அவரின் மீது அணைத்து பழியையும் போட்டு விட முடியாது அவரது சூழ்நிலை அவர் இப்படி மாற காரணமாக இருந்தது “தன் மகனையும் இழந்து விட்ட உணர்வு தன் கணவரும் அவனுக்கு அப்பாவாக இருக்கிறார்* என்ற உணர்வு நிச்சயமாக அரசியை இந்த அளவிற்கு மாற்றி இருந்தது என்று தான் சொல்ல வேண்டும் …
எந்த அளவிற்கு நல்லவராக இருந்தாரோ அந்த அளவிற்கு முற்றிலுமாக கெட்டவராகி போனார் என்பதை விட சூழ்நிலை அவரை கெட்டவராக ஆகிவிட்டது என்று சொல்ல வேண்டும் காலை வீட்டில் இருந்து வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு எட்டரை மணி போல் வீட்டிலிருந்து கிளம்புபவன் இரவு எட்டு மணிக்கு வீடு வந்து சேருவான் …
அதுவரை அரசி அவருக்கு மட்டும் டீ போட்டு குடித்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து இருப்பார் தீரன் வந்தால் அவருக்கும் போட்டுக் கொடுப்பார் ஆரம்பத்தில் ஆத்விக்கு டீ போட்டுக் கொடுத்தார் ஆனால் ஒரு சில காலங்கள் அமைதியாக இருந்தவன் .
உங்களால் அசதியில் வரும் அண்ணனுக்கு ஒரு வாய் டீ கூட போட்டு தர முடியாது அதேபோல் வீட்டில் இருக்கும் வேலைகளை கூட உங்களால் செய்திருக்க முடியாது நீங்கள் ஒன்றும் எனக்கு டீ போட்டு தரத் தேவையில்லை எதுவாக இருந்தாலும் எனது அண்ணனேப் பார்த்துக் கொள்வார் என்று நகர்ந்து விட்டான் …
அன்றிலிருந்து ஆத்விக்கு டீ போடுவதை நிறுத்திக்கொண்டார் அமைதியாக யூனிபார்ம் மாற்றிக் கொண்டு ஓரிடத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான்…
தேவா அலுவலகத்தில் இருந்து வந்த பிறகு வந்தவுடனே தன் தம்பி படித்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அவனை பார்த்து லேசாக சிரித்து விட்டு ஹாலிலேயே அவன் அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு செல்லும் பையை வைத்துவிட்டு முதல் வேலையாக கிச்சனுக்கு சென்று ஆதுவிற்கு பால் காய்சி கொடுத்துவிட்டு தானும் கொடுத்துவிட்டு தான் மற்ற வேலைகளை கவனிப்பான்..
இப்படியே வருடங்களும் உருண்டோடி விட்டது ஆத்விக் முழுமையாக தனது தாயே விட்டு நகர்ந்தான் என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் தேவா ஒவ்வொரு முறையும் அம்மாவை விட்டு விலகாதே என்று சொல்லிக் கொண்டே இருப்பான் ..
ஆனால் என்னதான் தேவாவின் வளர்ப்பாக இருந்து தெளிவாக சொல்வதை கேட்பவனாக ஆது இருந்தாலும் தனது தாயின் செயலால் தனக்குள் ஏற்படும் எரிச்சலை வெளியிலும் காட்ட முடியாமல் தனது அண்ணன் மீதும் காட்ட முடியாமல் அவனாகவே தனது தாயிடம் இருந்து முழுவதுமாக விலகி தேவாவின் வளர்ப்பில் வாழ ஆரம்பித்தான் என்று தான் சொல்ல வேண்டும் …
அதுவே அரசி தேவாவை முற்றிலுமாக வேறுப்பதற்கு காரணமாகி போனது ஆனால் அது ஆத்விக் உணரவில்லை அதை உணர்ந்து தேவா ஆத்விடம் எவ்வளவு எடுத்துக் கூறினாலும் ஆது கேட்பதாக இல்லை சரி சின்ன பையன் வளர்ந்த பிறகு எப்படியும் புரிந்து கொள்வான் என்று தேவா அமைதியாக விட்டான் …
ஆனால் அதுவே தேவாவை அரசியிடம் இருந்து முற்றிலுமாக இழக்க காரணமாக அமைந்தது என்பதை தேவா ரொம்ப வருடங்களுக்கு பிறகு தான் உணர்ந்தான் அப்படியே வருடங்கள் உருண்டோடி இப்போது ஆது பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்…
தீரன் அரசி இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்தாலும் அப்போது இருவருக்கும் முட்டிக் கொள்ளும் அப்படி இருவருக்கும் முட்டிக் கொள்ளும் விஷயம் இரண்டு தான் ஒன்று தேவா மற்றொன்று பாரு…
அரசி தேவாவை ஒவ்வொரு முறையும் திட்டும் போதும் தீரன் அவரையும் மீறி பாரு இருந்திருந்தால் இப்படி இருக்குமா என்ற வார்த்தை வந்துவிடும் அந்த வார்த்தையே அரசியை இன்னும் தேவாவை வெறுக்க காரணமாக இருந்தது இவன் அவளுடைய மகனாக இருப்பதால் தானே தன்னுடைய கணவர் தன்னை இன்றளவும் கத்திக் கொட்டிக் கொண்டிருக்கிறார்…
தன்னிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார் அதற்கு முழுக்க முழுக்க காரணம் அவளும் ,இவனும் தானே இல்லாத அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறார் இருக்கும் என்னை விட இல்லாதவள் தான் அவருக்கு பெரிதாக போய் விட்டாளா? …
அவள் வயிற்றில் பிறந்த மகன்தான் இவருக்கு பெரியதா ? அப்பொழுது என் வயிற்றில் பிறந்தவனை பற்றி இவர் யோசிக்க மாட்டாரா? என்று எண்ணினார் ..
ஆனால் தீரன் முழுக்க முழுக்க தேவாவை பற்றிய நினைப்பில் இருந்தார் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது அவரது முழு கவனமும் அரசியின் மீது மட்டும் தான் இருந்தது தேவா வளர ஆரம்பித்த உடனே சொல்லிவிட்டான்.
அப்பா அம்மா இப்பொழுது தான் உங்களிடம் முன்பு போல் அன்பாக பேசிக் கொண்டிருக்கிறார் அதை எனக்காக அவரிடம் வாதாடுகிறேன் என்று சொல்லி கெடுத்து கொள்ளாதீர்கள் அம்மாவை முழுமையாக பார்த்துக் கொள்ளுங்கள் ..
நான் ஆதுவை பார்த்துக் கொள்வேன் நான் வளர்ந்து விட்டேன் என்னை பார்த்துக் கொள்ள எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டான் தீரனுக்கு கூட அவன் சொல்வதே நியாயமாக பட்டது தனது மகனை எந்த இடத்தில் விட்டுக் கொடுக்க மாட்டார் தான் ஆனால் அதற்காக அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை விட அரசியை பார்ப்பது சரி என்று தோன்றியது …
அதுவும் அரசிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் சென்றதால் அரசியை இழந்து விடக்கூடாது என்பதற்காகவே அமைதியாக இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும் இப்படியே சென்று கொண்டிருந்த தேவாவின் வாழ்வில் தான் வசந்தம் வீச வந்தாள் வருணிகா…
அவன் வேலை செய்யும் கம்பெனியில் வேலைக்கு சேர செய்தால் அவள் வேலைக்கு சேர்ந்த மூன்றாவது மாதத்தில் இருந்து தேவாவிடம் தனது காதலை சொல்லி டார்ச்சர் செய்ய ஆரம்பித்தாள்..
அவன் எனக்கு காதல் மீதும் நம்பிக்கை இல்லை எனக்கு காதலிக்க நேரமும் இல்லை விருப்பமும் இல்லை என்று சொல்லிவிட்டான் இந்த வயதிலேயே வாழ்க்கையை வெறுத்து விட்டாயா? காதலிக்க விருப்பம் இல்லையா? காதல் மீது அப்படி என்ன கோபம் என்று கேட்டால்..
அதை உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டான் போகும் தேவாவை பார்த்து வரு மனதிற்குள் என்னிடம் அதை சொல்ல வேண்டிய அவசியம் உனக்கு இல்லையா ?
உன்னை முழுவதுமாக என் உலகமாக ஆக்கி காட்டுகிறேன் என்று மனதிற்குள் எண்ணினால் ஆனால் அதற்கு அவள் எத்தனை வருடங்கள் தவம் கெடுக்க வேண்டும் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை தேவாவை உடனடியாக மாற்றிவிடலாம் என்று அவள் மனதிற்குள் மணக்கோட்டை கட்டி விட்டால் …
ஆனால் தேவாவை அவ்வளவு எளிதில் கரைக்க முடியாது என்று அவளுக்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு தான் புரிந்தது அவளும் அவனிடம் எப்படி எப்படியோ கெஞ்சி பார்த்து விட்டால் மிரட்டியும் பார்த்து விட்டால் ஆனால் அவன் எதற்கும் மசிவதாக இல்லை …
அவன் வருவிடம் நான் சொல்வதைக் கேள் உனக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது உனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது அதை பார்த்துக்கொண்டு செல் என்னிடம் என் பின்னாடி சுற்றுகிறேன் என்று உனது வாழ்க்கையை அழித்துக் கொள்ளாதே உனக்காக இருக்கும் வாழ்க்கையை அழித்துக் கொள்ளாதே …
உனக்கான சந்தோஷம் எதுவோ அதை தேடு இங்கு நீ வேலைக்கு தானே வந்தாய் அந்த வேலையை மட்டும் சரியாக செய் உனக்கு வெளியுலகம் தெரிய வேண்டும் என்பதற்காகவும் இந்த பீல்டில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தானே வேலைக்கு வந்தாய் அதில் மட்டும் உனது கவனத்தை செலுத்து என்று நகர்ந்து விடுவான் …
ஆனால் அவன் பேசுவதை வரு மனதிற்குள் ஏற்றுவாள் ஆனால் அடுத்த நொடி அவள் மனதுக்குள் தேவா மீதான காதல் வந்து அவளை ஆட்டி படைக்கும் இவனை எப்படியாவது தன்னை விரும்ப வைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இப்பொழுது அவளது ஒரே குறிக்கோளாக இருக்கிறது…
அவளுடைய லட்சியம் அவளுடைய கேரியர் அனைத்தையும் தன்னைப் பார்த்தவுடன் அதைப் பற்றி யோசிக்காமல் தன்னை பற்றி யோசிக்கும் வருவை எண்ணி தேவாவிற்கு வருத்தமாக இருந்தது தன் மேல் ஆசை வைத்த ஒரு பெண் அவள் எத்தனை நாட்களாக கேரியர் முக்கியம் என்று எண்ணிக் கொண்டிருந்தாள் …
ஆனால் தன்னை பார்த்து தன் பின்னாடி இப்படி காதலிக்கிறேன் என்று சொல்லி அலைந்து கொண்டிருக்கிறாளே இந்த பெண்ணை என்ன சொல்லி திருத்துவது என்று எண்ணினான் இந்த இரண்டு வருடங்களில் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல் தேவா மனதில் அவ்வப்போது வரு மீது ஒரு சில நேரங்களில் காதல் துளிர் விட ஆரம்பித்தது…
ஆனால் அதை முளையிலேயே கிள்ளி எரியவும் செய்வான் தேவா எப்பொழுதெல்லாம் அவனுக்கு வரு மீது இணக்கம் ஏற்பட்டு அவனது மனம் அவள் பக்கம் சாயும் பொழுது அடம்பிடித்து தனது மனதை இழுத்துப் பிடிப்பான்…
அப்பொதெல்லாம் அவன் நினைவில் வந்து செல்வதெல்லாம் அரசியும் ஆதுவும் மட்டும்தான் ஆத்விக்கிற்கு அண்ணனாகவும் அரசிக்கு மகனாகவும் இருந்தால் போதும் என்று தனது மனதிற்கு சொல்லிக்கொண்டு வருவை விட்டு ஒரு அடி நகர்ந்து விடுவான் …
வரு ஒரு அடி தேவாவிற்கு முன்பு நகர்ந்தால் தேவா இரண்டடி பின்னுக்கு நகர்வான் இப்படியே வருடங்கள் ஓடியது வரு எப்படியாவது தேவாவின் மனதை மாற்றி அவன் காதலில் திளைத்து அவன் வாழ்க்கையில் நுழைய வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாள் அவளது நினைப்பு கனவாகுமா இல்லை நினைவாகுமா? என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்..
Kanavu niraiveranum kandipa varum deva va mrg pannanum avanuku amma pasam tha sariya kedaikala iva Kitta ella pasamum kedaikanum
நாமளும் பொறுத்திருந்தே பார்க்கலாம்.
Nice
Nice epi