Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே 25

பூவிதழில் பூத்த புன்னகையே 25

தீரன் அரசி தேவாவிற்கு பார்த்திருக்கும் பெண் வருணிகா என்றவுடன் ஆது அதிர்ச்சியாகி.  என்னப்பா வருணிகா அக்காவை அம்மா அண்ணனுக்கு பார்த்திருக்கிறார்களா என்றான்…ஆமாம் என்றார் நான் சொல்வது உண்மை உன் அம்மாவே பேசினாள் என்றார் அப்பா நான் ஒன்று சொன்னால் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே அந்த அக்கா நம்ம அம்மாவை நன்றாக பார்த்துக் கொண்டார்கள் என்பதற்காகவா என்றான் நானும் கூட ஒரு சில நிமிடம் அப்படி யோசிக்க தான் செய்தேன் டா…ஆனால் அது காரணம் அல்ல அந்தப் பெண்ணின் குணம் அது மட்டும் இல்லாமல் அந்த பெண் தானே அன்று உன் அண்ணாவிற்கு போன் செய்து பேசியதாக சொன்னாய் என்று கேட்டார் அப்பா அந்த அக்கா தான் அன்று அண்ணனுக்கு போன் செய்தவர் பேசியது…அது மட்டும் இல்லாமல் அந்த அக்காவிற்கு அண்ணன் மீது விருப்பம் இருக்கிறது என்பதையும் நான் வாசு அண்ணன் மூலம் தெரிந்து கொண்டேன். ஆனால் அண்ணனுக்கு அந்த அக்கா மீது விருப்பம் இருக்கிறதா ?என்று தெரியவில்லையே என்றான்…உன் அண்ணனை நீ அவ்வளவு தான்  தெரிந்து கொண்டிருக்கிறாய். உன் அண்ணனின் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்றார் அப்பா இப்படி கேட்கிறீர்கள் எனக்கு புரியவில்லை அண்ணன் மீது சந்தேகம் கொள்கிறீர்களா ? என்று கேட்டான். டேய் நான் அப்படி சொல்லவில்லை ஆனால் உன் அண்ணன் மனதில் அந்த பெண் இருக்கிறாளா ? இல்லையா? என்பது அந்தப் பெண் அன்று பேசிய பொழுது நீ எப்படியும் அவனை வம்பு இழுத்திருப்பாய் அன்று அவனது முகத்தில் தோன்றிய உணர்வுகளை பார்த்தாயா ? இல்லை அதன் பிறகு அவள் நம் வீட்டிற்கு வந்து சென்றபோது என்றார் …ஒரு நிமிடம் ஆது அனைத்தையும் யோசித்து விட்டு எனக்கு என்னவோ அண்ணனுக்கு ஏதோ ஒரு மூலையில் அந்த அக்காவின் மீது காதல் இருக்கிறதா என்றெல்லாம் சொல்ல தெரியவில்லை ஈர்ப்பு இருக்கிறது என்று கண்டிப்பாக சொல்வேன் ஆனால் அது காதல் ஆகுமா ? இல்லையா ?என்றெல்லாம் எனக்கு தெரியாது …ஆனால் அந்த அக்கா நம் வீட்டிற்கு வந்தாள் நன்றாக இருக்கும் அண்ணனின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது என்றான் சரி டா இதைப் பற்றி நாம் உன் அண்ணனிடம்  பேசலாமா என்றார் ஆனால் அவன் ஒத்துக் கொள்வது கொஞ்சம் கடினம் தான் என்றார் …அப்பா அண்ணன் மனதில் இருப்பது ஒன்றே ஒன்றுதான் அண்ணன் திருமணம் வேண்டாம் என்று சொல்வதற்கும் என்னை பொறுத்தவரை ஒரே காரணம்தான் அவர் தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை கெட்டு விடக்கூடாது என்று நினைக்கிறார் அவனால் என்னடா கெட்டுவிடும் என்றார் …தனக்கும் தெரிந்திருந்தும் இருந்தாலும் தனது இளைய மகனின் புத்தி கூர்மையை எண்ணி என்ன  என்று கேட்டார் அவரால் என்றால் அவரால் என்று ஆகிவிடாது ப்பா அவர் வரும் பெண்ணை நன்றாக தான் பார்த்துக் கொள்வார் மனைவியாக எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் பார்த்துக் கொள்வாரா என்பதுதான் அவருடைய கேள்வி.கணவனாக அவர் எல்லா இடங்களிலும் விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும் அல்லவா ? இப்பொழுது வரும் பெண்ணிடம் ஒரு பெண் தனக்கு மனைவியாக வந்த பிறகு தாயா தாரமா என்று வரும் பொழுது என்ன தான் நீங்களும் நானும் சொன்னாலும் அண்ணனின் முதல் முடிவு அம்மாவாக தான் இருக்கும் அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசிங்கள்…”இரண்டு பக்கமும் நிற்காமல் இருப்பதும் தவறு ஒரு பக்கமாக நிற்பதும் தவறு அதுவும் அம்மா என்றால் அண்ணன் யாரையும் விட்டுக் கொடுத்து விடுவார் அது உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும் அப்படி எந்த ஒரு பெண்ணையும் நிக்க வைத்து விட கூடாது என்பதற்காக “யோசிக்கிறார் அதேபோல் “அம்மா திட்ட செய்தால் அந்த வரும் பெண் அமைதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே”… “நீங்களும் நானும் கூட அமைதியாக இருப்பதிலேயே அப்படி இருக்கும்போது புதிதாக வருகிறாவர். அம்மா பேசும் அனைத்திற்கும் அமைதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையே அப்படி அமைதியாக இல்லாமல் அவர்கள் எதிர்த்து பேசினால் அண்ணன் பிற்காலத்தில் கை ஓங்க கூட செய்யலாம் இதை எல்லாம் அண்ணன் யோசிக்காமல் இருக்க மாட்டார்” …இது எல்லாம் யோசித்து தனக்கு திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் அவன் அதற்காகத்தான் வேண்டாம் என்று சொல்கிறேன் என்று எனக்கும் தெரியும் டா அதற்காக நாம் அப்படியே விட்டு விட முடியாது  நான் இன்னொன்றும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் …என்னை பொறுத்தவரை நம்ம வீட்டிற்கு அந்தப் பெண் வந்தாள் உன் அம்மாவை சமாளித்து விடுவாள் உன் அண்ணனையும் சமாளித்து விடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது உன் அண்ணனிடம் எப்படி பேச வேண்டுமோ அப்படியும் உன் அம்மாவிடம் எப்படி பேச வேண்டுமோ அப்படியும் வேசுவாள் என்று நினைக்கிறேன்…இதை நான் கண்கூடாக பார்த்ததால் மட்டுமே சொல்கிறேன் உன் அம்மாவின் நலனை கவனத்தில் கொண்டு அந்த பெண் நம் வீட்டிற்கு வந்த போதெல்லாம் உன் அண்ணனை பெரிதாக  வேலைதான் வாங்கினாள் உன் அண்ணன் கேள்வி கேட்கும் கேள்விகளுக்கு கொட்டு வைக்க செய்தாள் …அதேபோல் தான் உன் அம்மாவிடம் எந்த அளவிற்கு அவளை கேர் எடுத்து பார்த்துக் கொண்டாலோ அதே அளவிற்கு உங்க அம்மாவிடம் வாயாடவும் செய்தாள் உன் அம்மா பேசுவதோ செய்வதையோ சரி என்றால் சரி என்றும் t நீங்கள் செய்வது தவறு என்றால் தவறு என்பதை சுட்டிக்காட்டி செய்தாள்…ஆது அரசி ஒரு சில விஷயங்களை ஏற்றுக் கொண்டாள் ஒரு சில விஷயங்கில் அவளிடம் வாயாடி செய்தாள் அது இனியும் பிற்காலத்திலும் நடக்க தான் செய்யும் ஆனால் உனது அண்ணன் மனதளவில் பாதிக்கப்பட மாட்டான் என்று நினைக்கிறேன் என்றார் ..அவனும் ஒரு சில நிமிடம் தன் தாய் உடல்நிலை சரியில்லாத போது வருணி வந்து சென்ற போது நடந்த விஷயங்களை ஓட்டிப் பார்த்துவிட்டு சிரித்த முகமாக சரிப்பா நாம் இதைப்பற்றி அண்ணனிடம் பேசலாம் ஆனால் அவர் ஒத்துக் கொள்வது கடினம் நீங்கள் ஒரே வார்த்தையாக அம்மா பார்த்த பெண் என்று சொல்லிவிடுங்கள் அவர் அமைதியாக ஒத்துக் கொள்வார்…அவருக்கும் அந்த அக்காவின் மீது ஈர்ப்பு இருக்கிறது பிற்காலத்தில் இல்லை இப்பொழுது திருமணத்திற்கு முன்பு அது காதலாக மாறலாம் திருமணத்திற்கு கொஞ்சம் கேப் எடுத்துக் கொள்ளுங்கள் என்றான் தீரன் தனது மகனின் தோளில் கை போட்டு லேசாக சிரித்துக் கொண்டே பெரிய மனுஷா உன்னிடம் இவ்வளவும் சொல்லி உன்னுடைய கருத்தை கேட்கிறேன் என்பதற்காக எனக்கு இவ்வாறு செய்யுங்கள் என்று சொல்லிக் கொடுக்கிறாயா என்றார் …அவருடன் இணைந்து சிரித்துவிட்டு இது என் அண்ணனுடைய வாழ்க்கை நம் குடும்ப சந்தோஷம் என்றான் அவர் கண்கள் லேசாக கலங்கி சிரித்துக் கொண்டே எனக்கும் புரிகிறது டா அனைத்தும் சரியாக செய்து விடுவாள் அந்த பெண் என்ற எண்ணம் என் மனதில் உதிர்த்து இருக்கிறது ..எப்படியாவது இந்த பெண்ணை நம் வீட்டு மருமகளாக ஆக்க வேண்டும் என்றார் ஆதுவும் சிரித்துக் கொண்டே அவர்களை என் அண்ணனின் மனைவியாக ஆக்கி என் அண்ணன் வாழ்க்கையில் வசந்தம் வீச செய்வேன் நானும் நீங்கள் அவர்கள் வீட்டில் சென்று பேசும்போது வருகிறேன் என்றான் …உன் அம்மா வருவாளா என்று தெரியவில்லையே என்றார் அப்பா அந்த பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் அவர்கள் எப்படியும் அண்ணன் வாழ்க்கையில் ஒரு சில விஷயங்கள் செய்தாக வேண்டி இருக்கிறது அவர்களுக்கு விருப்பமில்லை என்றாலும் இது சரி வருமா என்று அவர்களாக தானே உங்களிடம் அந்த அக்காவை அண்ணனுக்கு பார்க்க சொல்லி இருக்கிறார்கள்….கேட்க சொல்லி இருக்கிறார்கள் அப்போது அவர்கள் வருவார்கள் அவர்கள் நமக்காக வரவில்லை என்றாலும் கலை ஆன்டிகாக வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது நான் பேசிப் பார்க்கிறேன் மேற்கொண்டு வரமாட்டேன் என்று சொன்னால் அதன் பிறகு மேற்கொண்டு பேசலாம் …மற்றபடி ஆரம்பத்தில் சாதாரணமாக வர சொல்லி கேட்டு பார்க்கலாம் என்றான் அவருக்கும் அவன் சொல்வதை சரி என்று பட்டதால் சரி நேரம் ஆகிறது நீ வேறு படிக்க வேண்டும் உன் அண்ணன் வேறு இவ்வளவு நேரம் எங்கு சென்றோம் என்று கேட்பான் வா…வீட்டிற்குச் சென்றால் பூகம்பம் வெடிக்குமா? இல்லை புன்னகை முளைக்குமா?என்று பார்க்கலாம் எதுவாக இருந்தாலும் நாம் சமாளித்து தான் ஆக வேண்டும் என்றார் விடுங்கள் பார்க்கலாம் என்றான் சரி என்று விட்டு இருவரும் வீட்டிற்கு சென்றார்கள் …இருவரும் வீட்டிற்கு செல்லும் போது தேவா அன்றைய சமையலுக்கு தேவையான காய்கறிகளை உணவு மேசையின் மீது உட்கார்ந்து அரிந்துகொண்டு தனது தந்தை தனது தம்பி அதுவும் எங்கு சென்றிருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டே அரிந்து கொண்டிருந்தான்..இருவரும்  பேசி சிரித்துக்கொண்டே வருவதை பார்த்துவிட்டு எங்கு அப்பா இவனை அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறீர்கள் இவனுக்கு படிக்கும் வேலை இல்லையா எக்ஸாம் வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது இன்னும் நான்கு மாதங்கள் தான் இருக்கிறது தேர்விற்கு என்றான் தேவா…டேய் இன்னும் நான்கு மாதங்கள் இருக்கிறது என்றார் அதற்காக அவன் வெளியே எங்கும் சொல்லாமல் இருக்க வேண்டுமா என்றார் நான் அப்படி சொல்லவில்லையே நீங்கள் நான் வந்து இவ்வளவு நேரம் ஆகி வரவில்லையா அதனால் தான் என்றான் சும்மா தாண்டா வீட்டுக்குள்ளே இருந்தது ஒரு மாதிரியாக இருந்தது …அதனால் அருகில் உள்ள பூங்கவிற்கு சென்றேன் துணைக்கு இவனை அழைத்து கொண்டு சென்றேன் என்றார் அதன் பிறகு தேவா வேறு எதுவும் பேசவில்லை உங்களுக்கு என்ன செய்யட்டும் என்றான் டேய் அதான் காய்கறி அரிந்து கொண்டிருக்கிறாயே என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து இருப்பாய் தானே ..இல்லை என்றாலும் உன் அம்மாவிடம் கேட்டிருப்பாய் தானே  என்றார் அமைதியாக இருங்கள் அம்மா என்ன என்று தெரியவில்லை ஏதோ யோசனையாக இருக்கிறார்கள் நீங்கள் வேறு அம்மா என்று சொல்லி இன்னும் ரெண்டு திட்டு வாங்கிக் கொள்ளாதீர்கள் என்றான்  …அவரும் சிரித்துக் கொண்டு சரிடா நீ என்ன செய்ய யோசித்தாயோ அதையே செய் என்று என்றார் அவனும் சிரித்துக் கொண்டே சரிப்பா என்று விட்டு வேகமாக சமையல் அறைக்குச் சென்று சமைத்துவிட்டு வந்தான் பிறகு அனைவரையும் சாப்பிட அழைத்தான் …சித்தி இன்னமும் யோசனையாக இருப்பதை பார்த்துவிட்டு சித்தி என்றான் அவர் நிமிர்ந்து கேள்வியாக அவனைப் பார்த்தார் சாப்பாடு ரெடி ஆகிவிட்டது நேரம் ஆகிவிட்டது ஏதோ ரொம்ப நேரமாக யோசிக்கிறீங்க உடல் எதாவது செய்கிறதா என்றான்..அரசி அவனை ஏறிட்டுப் பார்த்து முறைத்து விட்டு  அப்படி எனக்கு ஏதாவது என்றால் என் மகனிடம் எனது கணவரிடம் எனக்கு சொல்லிக் கொள்ளத் தெரியும் அதை பற்றிய கவலை உனக்கு தேவையில்லை என்று விட்டு எழுந்து சென்று  முகம் கை கால் கழுவிக்கொண்டு வெளியில் வந்தார்…நேராக உணவு மேசையின் அருகில் வந்து உட்கார்ந்தார் தேவா வேறு எதுவும் பேசாமல் அமைதியாக அவருக்கு சாப்பாடு பரிமாறினான் பிறகு அரசி தீரனை பார்த்தார் தீரன் அவன் சாப்பிட்டு முடிக்கட்டும் என்பது போல் கண்ணால் சொன்னவுடன் அமைதியாக சாப்பிட செய்தார் ..அனைத்தையும் தேவா பார்த்துக் கொண்டுதான் இருந்தான் என்ன ஒருவரும் பேசிக் கொள்கிறார்கள் என்று முழுவதாக தெரியாமல் அமைதி காத்தான் பிறகு அவனுக்கும் பசி எடுப்பதால் இன்னொன்று அவனுக்கு வேலை வேறு இருக்கிறது என்பதால் தன் தாய் சாப்பிட்டு முடிக்கும் முன்பே அனைவருக்கும் தேவையானது எடுத்து வைத்துவிட்டு அவனும் ஆதுவின் அருகில் உட்க்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்….இது அடிக்கடி நடக்கும் விஷயம்தான் அவன் தனக்கு பரிமாற வேண்டும் என்றெல்லாம் அரசி எண்ண மாட்டார் அதேபோல் அவன் சாப்பிட வேண்டாம் சீக்கிரம் என்றும் எண்ண மாட்டார் அதனால் அமைதியாக தன் தட்டில் இருக்கும் உணவில் கவனத்தை செலுத்திவிட்டு சாப்பிட்டுவிட்டு தனது கணவரை ஒரு முறை பார்த்துவிட்டு ஆது சாப்பிட்டு விட்டாயா ?சாப்பிட்டு விட்டாய் என்றால் போய் படி என்றார் …ஆது தனது தாயை  பார்த்து சிரித்துவிட்டு சரி மா என்றான் அதன் பிறகு அரசி  சென்று விட்டார் தீரனும் சாப்பிட்டுவிட்டு தனது இரண்டு மகன்களையும் பார்த்துவிட்டு அமைதியாக அவரது அறைக்குச் சென்றார் உங்களிடம் என்ன சொன்னேன் என் பின்னாடி வருகிறீர்கள் என்றார் அரசி …தீரன் லேசாக மனதிற்குள் சிரித்துக் கொண்டு உன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க உனக்கு அவ்வளவு ஆசையா இதை அவனிடம் நேராக நீ பேசலாமே ஆனால் எது டி உன்னை தடுக்கிறது அவன் மீது உனக்கு இப்பொழுதும் பாசம் இருக்கிறது என்பதை நான் சில காலங்களாக உணர்ந்து கொண்டுதான் இருக்கிறேன் .அதை உணர்ந்தான் அவனும் என்னிடம் இத்தனை வருஷங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறான் நான்தான் முட்டாளாக இருந்திருக்கிறேன் என்று யோசித்தார் எங்கு இருக்கிறீர்கள் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் கவனம் வேறெங்கோ இருக்கிறது போல என்றார் தீரன் தனது மனைவியின் நெற்றியில் முட்டினார் …”என்ன வயசாக தான் சாருக்கு பாசம் முளைக்குதோ என்றார் அப்படியும் வச்சுக்கோயேன் என்று மனைவியின் நெற்றியில் முத்தமிட்டார் தீரன்  அரசியும் சிரித்துவிட்டு இப்படி எல்லாம் பேசி என் மனதை மாற்றுவதை விட்டுவிட்டு உங்கள் மகனிடம் போய் கொஞ்சுவீர்களோ கெஞ்சுவீர்களோ ஆனால் போய் பேசுங்கள் என்றார்”..உனக்கு அந்த பெண்தான் இந்த வீட்டுக்கு மருமகளாக வர வேண்டுமோ என்றார் உங்கள் மகனின் மனைவியாக வைத்துக் கொள்ளுங்கள் என் மருமகள் என்று சொல்ல வேண்டாம் என்றார் அதற்குள் உனக்கு கோபம் மண்டையின் மீது ஏறிவிட்டதா என்றார் …அரசி லேசான சிரிப்புடன் நான் எப்பொழுதும் போல் தான் இருக்கிறேன் அவள் வந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன் பிறகு உங்களது விருப்பம் உங்கள் மகனது விருப்பம் இதில் நான் தலையிட மாட்டேன் என்று விட்டு அமைதியாக விட்டார் தீரனும் தனது மனைவியை பார்த்து லேசாக சிரித்து விட்டு சரி டி நான் அவனிடம் பேச தான் போகிறேன் ஆனால் என் ஆதுவை படிக்கச் சொன்னாய் என்றார்…”அவன் சின்ன பையன் நீங்கள் அவனை வைத்துக் கொண்டு பேச வேண்டாம்  அது உங்கள் மகனுக்கு பிடிக்காது அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும் என்றார் ஓ என் மகன் அதாவது நீ வளர்த்த மகன் தேவாவிற்கு என்ன பிடிக்காது எப்பொழுது பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் இதெல்லாம் தெரிந்திருக்கிறது உனக்கு அப்படித்தானே “என்றார்…அரசி முறைத்தவுடன் சரி சரி முறைக்காதே மாத்திரை சாப்பிட்டுவிட்டு படு நான் சென்று பேசி விட்டு வருகிறேன் எப்படியும் நான் வரும் வரை நீ  தூங்க மாட்டாய் என்று எனக்கு தெரியும் நான் அவனிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று விட்டு வெளியில் சென்றார் ஆது அரசி சொன்னது போல் சாப்பிட்டுவிட்டு சரி அண்ணா எனக்கு படிக்கும் வேலை அதிகமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு படிக்க சென்று விட்டான் …தேவாவும் சாப்பிட்டுவிட்டு அனைத்து பாத்திரங்களும் கழுவி வைத்துக் கொண்டிருந்தான் அப்பொழுது தீரன் வந்து நின்றார் என்ன அப்பா தூங்கவில்லையா?  என்றான் தூங்க வேண்டும் தான் ஆனால் அதைவிட முக்கியமாக உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும் என்றார்…  அப்படி என்னப்பா முக்கியமான விஷயம் இந்த நேரத்தில் என்றான் காலையில் கூட பேசி இருக்கலாம் இந்த நேரத்தில் உங்களுக்கு  தூக்கம் கெடுக்கிறது அல்லவா என்றான்  காலையில் பேசுவதற்கு நீ எங்கு இருக்கிறாய் காலையில் வீட்டு வேலை முடிந்தவுடன் வேலைக்கு சென்று விடுகிறாய் அப்படி இருக்கும் போது இரவுகளில் தானே பேச முடியும் என்றார்…சரிப்பா அப்படி என்ன விஷயம் என்றான் உன்னுடைய திருமணத்தைப் பற்றி என்றார் தேவா அதிர்ச்சியாகி என்ன என் திருமணத்தை பற்றியா ?என்று தான் செய்து கொண்டு இருந்த வேலைகளை அப்படியே விட்டு அதிர்ச்சி ஆகி தனது தந்தையை பார்த்தான் …இவ்வளவு நேரம் தேவா தனது தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தாலும் கை தன் போக்கில் தன்னுடைய வேலைகளை செய்து கொண்டிருந்தது இப்பொழுது தனது தந்தை சொன்னவுடன் தனது கையை இழுத்து விட்டு தனது தந்தையை ஏறிட்டுப் பார்த்தான் தீரன் வருகை பற்றி பேசுவாரா அதற்கு தேவா ஒத்துக் கொள்வானா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்…அன்புடன் ❣️தனிமையின் காதலி❣️

4 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே 25”

  1. ஆது சொன்ன மாதிரி அரசி தான் கல்யாணம் பண்ண சொல்றான்னு சொல்லுங்க தீரன் .. தேவா மறு பேச்சு பேசாம கல்யாணம் பண்ணிப்பான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *