Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே 26

பூவிதழில் பூத்த புன்னகையே 26

தீரன் தேவாவிடம் உன் திருமணத்தைப் பற்றி என்று சொன்னவுடன் என்ன என் திருமணத்தை பற்றியா என்று அதிர்ச்சி ஆகி கேட்டான் அவர் லேசான சிரிப்புடன் என்னடா உன்னிடம் தான் ஏற்கனவே கேட்டிருந்தேன் உங்களது விருப்பம் என்று சொன்னாயே என்றார்…

அப்பா அப்போ சொன்னீர்கள் ஆனால் நீங்கள் அதை இன்னும் விடவில்லையா ?அம்மாவிற்கு இப்போது உடல்நிலை சரியில்லை என்றான். அதனால் தான் சொல்கிறேன் இப்பொழுது நீயே பார்த்தாய் தானே உன் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாத போது நாம் ஒன்றுக்கு மூன்று பேர் இருந்தும் நம்மால் உன் அம்மாவிற்கு உதவ முடியவில்லை…

என்ன தான்  நாம் உன் அம்மாவை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாலும் நம்மை விட உன் அம்மாவிற்கு ஒரு பெண் துணை தேவைப்படுகிறது அதை இப்பொழுது உன் கம்பெனியில் வேலை செய்யும் பெண் இருந்ததால் சமாளித்து விட்டோம் அதுவே அனைத்து முறையும் யாரையாவது துணைக்கு அழக்க முடியுமா? என்றார்…

அதற்காக என்றான் உன் அம்மாவிற்காக கூட திருமணம் செய்து கொள்ள மாட்டாயா என்றார்  அப்பா நீங்கள் என்னை பிளாக் மெயில் பண்ணுவது போல் இருக்கிறது என்றான் அவர் சிரித்துக் கொண்டே நான் உன்னை பிளாக்மெயில் பண்ணவில்லை..

” உனக்காகவோ இல்லை  உன் அம்மாவிற்காகவோ இல்லை எனக்காகவோ ஆதுக்காகவோ என்று நான் சொல்லவில்லை உன் வாழ்க்கையில் இதிலிருந்து கொஞ்சம் வெளிவர வேண்டாமா” என்றார்…

“நான் என்னவோ புதைக் குழியில் விழுந்து கிடப்பது போல் சொல்கிறீர்கள் என்றான் டேய் நீ புதை குழிக்குள் இல்லை தான் பூந்தோட்டத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் ஆனால் அதில் இருக்கும் அனைத்து பூக்களும் ஒன்று போல் இருக்காதே “என்றார் ..

அப்பா அம்மாவைப் பற்றி தவறாக பேசுவதாக இருந்தால் என்னிடம் பேச வேண்டாம் என்றான் உன் அம்மாவைப் பற்றி பேசி விட்டால் மட்டும் உனக்கு எங்கு இருந்து தான் கோபம் வருகிறதோ ஆனால் உன் திருமணத்தைப் பற்றி பேச வேண்டிய உரிமை எனக்கு இருக்கு என்று நினைக்கிறேன் …

உனக்கு அதில் விருப்பம் இருக்கிறதா இல்லையா என்றார் நான் உன்னை மதிக்கிறேன் திருமணத்திற்கு சம்மதிக்கிறேன் சரிப்பா சொல்லுங்கள் என்றான் இப்பொழுது நான் உனக்கு ஒரு பெண் பார்த்து இருக்கிறேன் அந்த பெண் வீட்டில் சென்று பேசுவதற்கு முன்பு உன்னிடம் பேசலாம் என்ற எண்ணம் என்றார் …

சரி மேற்கொண்டு நீங்கள் திருமணத்தைப் பற்றி பேசுங்கள் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்றான் பெண் யார் ? என்று கேட்க மாட்டாயா என்றார் ..

அப்பா நான் தான் ஏற்கனவே நீங்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி இருந்தேனே அப்புறம் என்ன என்றான் இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளப் போவது நீதானே பெண் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா ? என்றார் ..

சரி சொல்லுங்கள் அப்படி யார் ? அந்த பெண் என்று கேட்டான் உனக்கு தெரிந்த பெண் தான்  என்றார் எனக்கு தெரிந்த பெண்ணா  எனக்கு புரியவில்லை என்றான் வருணிகா என்று சொன்னார் என்ன வரு வா என்று அதிர்ச்சியாகி கேட்டான்…

அவர் லேசான சிரிப்புடன் ஏன் டா உனக்கு அந்த பெண்ணை பிடிக்கவில்லையா என்றார்  அப்பா நமக்கு உதவி செய்தார்கள் என்பதற்காக நாம் அவர்கள் வீட்டு பெண்ணை கேட்பது சரியா ?என்றான் …

நானும் முதலில் அப்படித்தான் யோசித்தேன் ஆனால் நான் அப்படி ஒரு எண்ணத்தில் அந்த பெண்ணை கேட்கவில்லை அந்த பெண் வந்தாள் இந்த வீடு சந்தோஷமாக இருக்கும் நீ சந்தோஷமாக இருப்பாய் என்று எண்ணினேன் அவ்வளவுதான் என்றார் ..

அப்பா எனக்கு புரியவில்லை நீங்கள் அந்த பெண்ணை பார்த்து எத்தனை நாட்கள் இருக்கும் என்று  கேட்டான் டேய் சாதாரணமாக உனக்கு என்று ஒரு பெண்ணை பார்த்தால் நான் என்ன அந்த பெண்ணை பார்த்து தெரிந்து கொண்டு வந்து உனக்கு திருமணம் செய்து வைக்க போகிறோமா இல்லையே .. என்றார்
..

அப்பா நான் அப்படி சொல்லவில்லை இருந்தாலும் என்றான் தேவா என்றார் அவன் அமைதியாக இருந்தான் உனக்கு அந்த பெண்ணை பிடித்திருக்கிறதா ?இல்லையா ?  அன்று உன்னிடம் போனில் பேசியது அந்த பெண் தானே ? என்றார் ..

அப்பா அவள்தான் இருந்தாலும் என்றான் உனக்கு அந்த பெண்ணை பிடித்திருக்கிறதா இல்லையா அதை மட்டுமே யோசி உனக்கு இரண்டு நாட்கள் டைம் தருகிறேன் என்னால் அவ்வளவுதான் சொல்ல முடியும் எனக்கு அந்த பெண் பிடித்திருக்கிறது நான் ஆதுவிடம் பேசி விட்டேன் அவனுக்கும் விருப்பம் என்றார்…

அப்பா அம்மா என்றான் அவர் லேசான சிரிப்புடன் இந்த பெண்ணைப் பற்றி பேச சொன்னதே உன்னுடைய அம்மா தான் ஆனால் உன் அம்மாவிற்காக உன்னை இங்கு யாரும் சம்மதம் என்று சொல் சொல்லவில்லை எங்களுக்காக என்றும் யோசிக்க சொல்லவில்லை உனக்கு விருப்பம் இருந்தால் மட்டும் நீ திருமணத்தை பற்றி எங்களிடம் பேசு..

நாங்கள் மேற்கொண்டு செய்ய வேண்டியதை செய்கிறோம் என்றார் அது சரி உன் அம்மா தான் சொன்னது ஆனால் திரும்பவும் சொல்கிறேன் உன் அம்மாவிற்காக என்று அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளக் கூடாது. உனக்கு விருப்பம் இருந்தால் மட்டும் இரண்டு நாட்கள் டைம் எடுத்துக் கொள் இரண்டு நாட்களுக்கு பிறகு உன்னுடைய முடிவை சொல்..

நல்ல முடிவாக சொல்வாய் என்று நான் நினைக்கிறேன் இருந்தாலும் உன்னுடைய முடிவை நீ நிதானமாக யோசித்து விட்டு சொல் என்று விட்டு அமைதியாக சென்று விட்டார் ஆது படித்துக் கொண்டிருந்தான் தேவா தனது தம்பியை பார்த்துவிட்டு அமைதியாக பால்கனிக்கு போய் நின்றான்…

அவனுக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை தனது தந்தை தன் திருமணத்தைப் பற்றி பேசுவார் என்று கூட அவன் எண்ணவில்லை  அதுவும் வருவை என்று ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்து விட்டு இது எப்படி சாத்தியமாகும் என்று ரொம்ப நேரமாக யோசித்தான் .

தான் ஏற்கனவே அவளை வார்த்தைகளால் கொன்று கொண்டிருக்கிறோமே என்றும் யோசித்தான் அவள் இந்த வீட்டிற்கு மருமகளாக வந்தாள் என்றால் இந்த குடும்பம் சந்தோஷமாக இருக்கும் ஆனால் அவள் என்று யோசித்தான் அவனது மண்டைக்குள் நிறைவே  குழம்பியது..

தன்னால் அவளை நன்றாக பார்த்துக் கொள்ள முடியுமா ? தனது அம்மாவிற்காக என்று யோசித்து நாம் எங்கு வேண்டுமானாலும் சருக்களாமே என்றும் எண்ணினான் ஆனால் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை தலை வலிப்பது போல் இருந்தது..

தலையை உலுகினான் அப்போது அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஆது தான் தனது அண்ணன் ஒரே நாளில் அனைத்தையும் குழம்பி கொள்ள  கூடாது என்று எண்ணி  அண்ணா நேரமாகிவிட்டது வாருங்கள் தூங்கலாம் என்றான் …

தேவா நேரத்தை பார்த்தான் இரவு 11 மணிக்கு மேல் காண்பித்தவுடன் சரி என்று விட்டு தேவாவும் வந்து படுத்து விட்டான். அடுத்த சில நேரத்திலே ஆது அவனது அருகில் வந்து அவன் மேல் கை வைத்துக் கொண்டிருந்தவுடன் அவனை தட்டிக் கொடுத்து விட்டு தேவாவும் உறங்கி இருந்தான்..

தேவா  காலையில் எப்பொழுதும் போல் ஐந்து மணி அளவில் எழுந்து வீட்டு வேலைகளை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்தான் அவனது கைகள் என்னவோ வேலை செய்து கொண்டிருந்தது ஆனால் மனதில் முழுவதும் தனது தந்தை நேற்று பேசிய விஷயங்களில் ஓடிக்கொண்டிருந்தது…

தனக்கு இரண்டு நாட்கள் டைம் கொடுத்து இருக்கிறார்கள் யோசிக்கலாம் அப்பா சொன்னது போல் நம் வீட்டில் உள்ளவர்களாக என்று எண்ணி  அவளை திருமணம் செய்து கொள்வது தவறு அவள் தன் மேல் வைத்திருக்கும் காதலுக்கு நாம் செய்யும் துரோகம் என்றெல்லாம் யோசித்தான் …

அவள் வேண்டுமா வேண்டாமா என்று நாம் தான் யோசிக்க வேண்டும் ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல என்று தலையை உலுக்கினான் பிறகு வேலைகளில் கவனத்தை செலுத்தினான் தனது தம்பியையும் அனுப்பி வைத்துவிட்டு அவனும் அலுவலகம் வந்து சேர்ந்தான் ..

அலுவலகம் அவன் வந்த சிறிது நேரத்தில் வருவும் வந்திருந்தாள் தன் கேபின் கண்ணாடி சுவர் வழியாக வருவை ப் பார்த்தான் அவளை ஒரு ஐந்து நிமிடம் நன்றாக உற்றுப் பார்த்துவிட்டு இவள் நம் வாழ்க்கைக்குள் வந்தாள் நம் வாழ்க்கை நன்றாக இருக்கலாம் ஆனால் அவள் வாழ்க்கை என்று யோசித்தான்..

ஒன்றும் புரியவில்லை ஆனால் அவனது யோசனை அனைத்தும் வருவே நிறைந்திருந்தாள் வருவும் அவன் கேபினுக்கு வெளியே நின்று எத்தனையோ முறை தட்டி பார்த்தாள் உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றவுடன் கதவை திறந்து கொண்டு மே இன் கமின் சார் என்றாள் ..

அதன் பிறகு தான் தேவா தனது யோசனையில் இருந்து வெளியில் வந்து அவளை லேசாக முறைத்து பார்த்துவிட்டு வா என்ன என்றான் ரொம்ப நேரமாக தட்டினேன் உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை அதனால் தான் என்றாள்…

அவன் வேறு எதுவும் பேசாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தான் என்ன விஷயம் என்றான் இல்லை கொட்டேஷன் ரெடி பண்ணி இருக்கிறேன் எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று பார்த்து சொன்னால் நான் கொட்டேஷனை அனுப்பி விடுவேன் என்றாள்..

ஓ நீ செய்து இருப்பதில் தவறு இருக்கிறதா என்று நான் பார்ப்பதற்கு தான் நீங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறீர்களா என்று கேட்டான் அவளுக்கு லேசாக கண்கள் கலங்கியது சாரி சார் நான் மீண்டும்  ஒன்று இரண்டு முறை எரார் இருக்கிறது என்று செக் பண்ணி விட்டு வருகிறேன் என்று சொன்னாள்..

அவன் வேறு எதுவும் பேசாமல் கொடு என்று கையெழுத்திட்டு அனுப்பி வைத்தான் வருவும் எதுவும் பேசாமல் எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறார் எங்கோ இருக்கும் கோபத்தை தன் மீது காட்டுகிறார் போல என்று எண்ணிவிட்டு அமைதியாக அவளது வேலையில் மூழ்கி விட்டாள் ..

அன்றைய பொழுது அப்படியே கழிந்தது மாலை வீட்டிற்கு செல்வதற்கு முன்பு வாசு அவனது கேபினுக்கு வந்திருந்தான் டேய் நீ இன்னும் வீட்டுக்கு கிளம்பவில்லையா என்று கேட்டான் வாசு கிளம்ப வேண்டும் ஆனால் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொன்னான்…

வாசு சொல்லுடா என்றான் வீட்டில் எனக்கு பெண் பார்த்து இருக்கிறார்கள் அந்த பெண் என்றான் எனக்கு தெரியும் என்றான்  வாசு எப்படி என்று அவனை அமைதியாக பார்த்தான் தேவா அம்மா என்னை கூப்பிட்டு பேசினார்கள் என்றான் நீ என்ன  என்ன சொன்னாய்  என்று கேட்டான் வாசு…

டேய் அவளுக்கும் எனக்கு ஒத்து வராது என்றான் எனக்கு புரியவில்லை மச்சான் ஏன் உனக்கும் வருவிற்கும் ஒத்து வராது என்று கேட்டான்  என்னுடைய குணம் வேறு அவளுடைய குணம் வேறு என்றான் இங்கு ஒரே குணம் உடையவர்கள் யாரும் திருமணம் செய்து கொண்டு வாழவில்லையே? ஏன் மச்சான் உனக்கும் எனக்கும் ஒரே குணமா என்றான்..

டேய் இது வேறு அது வேறு இல்லையா ?என்ன வேறு இது வாழ்க்கை டா .அதைத்தான் நானும் சொல்கிறேன் இது உன்னுடைய வாழ்க்கை உனக்கு பிடித்த மாதிரி வாழ பழகு உனக்கு அவள் வேண்டுமா இல்லையா என்று நீ தான் முடிவு செய்ய வேண்டும்.

அம்மா சொன்னார்கள் அப்பாவிற்காக ஆதுவிற்க்காக என்று யோசிக்காதே .உனக்கு அவளை பிடித்திருந்தாள் அவளை பற்றி மேற்கொண்டு யோசி மச்சான் என்றான் டேய் உனக்கு புரிகிறதா இல்லையா என்றான் தேவா. உனக்கு தான் புரியவில்லை என்று நினைக்கிறேன் உன் மனதில் அவள் இல்லை என்று சொல்லி விடுவாயா என்று கத்தினான் வாசு.

டேய் என்று இருவரும் கத்திக் கொண்டிருக்கும் போது வரு அந்த அறை கதவை தட்டிக் கொண்டு வந்தாள் வாசு வா வரு என்றான் தேவா தனது நண்பனை முறைத்து  விட்டு  இது என்னுடைய கேபின் என்றான் வரு லேசாக சிரிப்பு செய்தாள். வந்த வேலை என்னவோ அதை பார்க்கலாம் சிரிக்க சொல்லி கூப்பிடவில்லை என்றான் தேவா கடுகடுவென்று முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான்…

வரு  அனைத்து பைல்களையும் ஒப்படைத்துவிட்டு சரி சார் நேரமாகிறது நான் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு வரு கிளம்பி விட்டாள் போகும் வருவை அமைதியாக  தேவா பார்த்துக் கொண்டிருந்தான். வாசு அதை பார்த்துவிட்டு நேரமாகிறது வீட்டிற்கு கிளம்பு என்னால் அவ்வளவு தான் சொல்ல முடியும்..

நிதானமாக யோசி ஒன்றும் கேட்டுப் போய்விடவில்லை ஆனால் போகும் பொக்கிஷத்தை விட்டு விட்டால் திரும்ப கிடைக்காது அது மட்டும் இல்லாமல் நீ என்னதான் மறைக்க வேண்டும் என்று எண்ணினாலும்  நீ அவளை விரும்புவதை உன்னால் தடுக்க முடியாது அவள் இல்லாமல் உன்னால் வாழ்ந்து விட முடியுமா ?..

இல்லை அவளிடத்தில் உன்னால் வேறொரு பெண்ணை வைத்து பார்க்க முடியுமா ?என்று நீயே நிதானமாக யோசி எங்களால் அதை மட்டும் தான் சொல்ல முடியும் என்று விட்டு வாசு கிளம்பி விட்டான் தேவா போகும் வருவையும் வாசு பேசி சென்றதையும் யோசித்துக்கொண்டு தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தான் …

தேவா என்ன முடிவு எடுப்பான் வருவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று வீட்டில் சென்று சம்மதம் தெரிவிப்பானா ? இல்லை அவள் தன் வாழ்க்கைக்கு வேண்டாம் என்று எண்ணுவானா என்பதை நம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்

அன்புடன்

,❣️தனிமையின் காதலி❣️

4 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே 26”

  1. Kalidevi

    Intha mudivu tha nalla mudivu deva unala varu illama iruka mudiyathu Yen ippadi yosikira unga amma tha ivala pathu pesi irukanga apo kuda Yen yosikura

  2. இவன் எப்பவுமே இப்படித்தானோ…? கையில் கிடைத்த பொக்கிஷத்தை நழுவ விட்டுடுவானோ..???
    😜😜😜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *