வரு அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வரும்போது தேவாவின் பெற்றோர்களும் தம்பியும் இருப்பதை பார்த்துவிட்டு மூவரையும் வாருங்கள் என்று அழைத்துவிட்டு அவளது அறைக்குள் சென்று விட்டாள்…
இவர்கள் மூவரும் இப்பொழுது எதற்கு வந்திருக்கிறார்கள் என்ன விஷயம் என்று தெரியவில்லையே ? என்று யோசித்தாள். பிறகு முகம் கை கால் கழுவிக்கொண்டு வந்தாள்…
டீ போடடுடா குடிக்கிறீர்களா ?என்று கேட்டாள் அதெல்லாம் குடித்து விட்டோம் மா கலை கொடுத்து விட்டாள் என்று தீரன் சொன்னார் .
ஆதுவை பார்த்து மேகி செய்து தரட்டா சாப்பிடுகிறாயா ?என்று கேட்டாள் ஆது சிரித்துக் கொண்டே நான் என்ன சின்ன பையனாக்கா மேகி செய்து தருகிறேன் என்று சொல்கிறீர்கள் என்றான் பிறகு நீ சின்ன பையன் இல்லையா பெரிய மனிதனாகிவிட்டயா ? என்று சிரிப்பு உடனே கேட்டாள்.
அவனும் லேசாக சிரித்து விட்டு அக்கா என்றான் சரி என்ன வேண்டும் என்று சொல் செய்து தருகிறேன் என்றாள்.உங்களுக்கு சமைக்க தெரியுமா ?என்று கேட்டான் .டேய் என்ன விளையாட்டா என்று சிரித்து விட்டு லேசாக சமைப்பேன் அவ்வப்போது கலைக்கு உதவி செய்வேன்.
“அந்த அளவிற்கு எல்லாம் சமையலில் செஃப் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது என்றாள் அப்பொழுது எனக்கு சமோசா செய்து தருகிறீர்களா ?” என்றான் .தீரன் அதட்டினார் .சின்னப்பையன் ஆசையாக கேட்கிறான் அங்கிள் விடுங்க என்று விட்டு இப்பொழுது மட்டும் நீ சின்ன பையன் லிஸ்டில் சேர்ந்து விட்டாய் என்று விட்டு சமையல் அறைக்குள் சென்றாள் …
அவள் சமோசா செய்து எடுத்துக் கொண்டு வரும் வரை பொதுப்படியாக பேசிக் கொண்டிருந்தார்கள் என்ன மூவரும் ஒன்றாக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டாள் அனைவரும் ஒரு முக்கியமான விஷயம் பேசிவிட்டு சொல்லலாம் என்று தான் என்றார்கள்..
வரு தனது தாய் தந்தையை பார்த்தாள் அவர்கள் கண் மூடி பிறந்தவுடன் அமைதியாகி விட்டாள் சரி என்று விட்டு கொஞ்ச நேரம் பேசி விட்டு எழுந்தார்கள் ஆன்ட்டி சாப்பிட்டுவிட்டு சொல்லலாமே இப்பொழுதே நேரம் ஆகிவிட்டது என்று சொன்னாள்…
இல்லை வீட்டில் சாப்பாடு இருக்கும் என்றார் அரசி. “வரு அரசியை முறைத்து பார்த்தாள் அவர் லேசான சிரிப்புடன் அவன் செய்து வைத்திருப்பான் அனைத்தும் வீணாகிவிடும் நாங்கள் இங்கு வருகிறோம் என்று அவனிடம் சொல்லவில்லை “என்று விட்டு எழுந்தார் …
பிறகு மூவரிடமும் சொல்லிக்கொண்டு ஆது அரசி தீரன் மூவரும் தங்கள் வீடு நோக்கி சென்றார்கள் அவர்கள் சென்றவுடன் வரு தான் தன் தாய் தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டு என்ன முக்கியமான விஷயம் அம்மா என்று கேட்டாள்….
” தேவாவின் திருமணத்தைப் பற்றி பேசுவதற்கு வந்தார்கள் என்றவுடன் என்ன தேவாவிற்கு பெண் பார்த்திருக்கிறார்களா ? திருமணமா ?”என்று அதிர்ச்சி ஆகி கேட்டாள்.
“கலை அவளது அதிர்ச்சியை மனதில் குறித்துக் கொண்டு உன்னை தான் தேவாவிற்கு பெண் கேட்டு வந்தார்கள் “என்றார்…
இப்பொழுது எழுந்து நின்று தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தி விட்டு “தனது தாய் தந்தையின் கையைத் தன் கொள் வைத்துக் கொண்டு அம்மா நான் உங்களிடம் ஒரு விஷயத்தை மறைத்து விட்டேன்” என்றாள்.
இருவரும் அமைதியாக தங்களது மகளைப் பார்த்தார்கள் எனக்கு தேவாவை பிடித்திருக்கிறது .இரண்டு வருடங்களுக்கு முன்பே நான் அவரிடம் என்னுடைய விருப்பத்தை சொல்லி இருந்தேன் .
ஆனால் அவர் உங்களுக்கே இப்போது புரிந்திருக்கும் அவர் அம்மாவை கருத்தில் கொண்டு தனது காதலை வேண்டாம் என்று ஒதுக்குகிறார் . அவர் மனதில் நான் இருக்கிறேன் என்று நான் நம்புகிறேன் ஆனால் உங்களிடம் சொல்ல கூடாது என்று நினைக்கவில்லை
.
அவரே எனக்கு ஒரு முடிவான பதிலை சொல்லாத போது நான் எப்படி உங்களிடம் வந்து பேசுவது என்று தான் எண்ணினேன் என்று சொல்லிவிட்டு தனது தாய் தந்தையின் முகத்தை பார்த்தாள்..
எங்களுக்கு தெரியும் என்றார்கள் இப்பொழுது வரு அதிர்ச்சியாகி அம்மா என்றாள் இரண்டு வருடமாக தெரியாது இப்போது அரசி ஆபரேஷன் செய்த பிறகு நீ தேவாவை பார்க்கும் பார்வையில் ஒரு சில நிமிடங்களில் உன் கண்களில் காதல் இருப்பதை உணர்ந்து இருக்கிறோம்…
நானும் அப்பாவும் ஆனால் நீயாக சொல்வாய் என்று காத்துக் கொண்டிருந்தோம் ஆனால் இப்பொழுது அரசியாக வந்து பெண் கேட்பார் என்று நாங்கள் எண்ணவில்லை என்றார்..
அம்மா அது தான் எனக்கும் அதிர்ச்சி முதலில் அவர்கள் மகனிடம் இதைப் பற்றி பேசினார்களா ? அது என்னடி அவர்கள் மகன் என்று சொல்கிறாய் என்றார்கள் சரி மா தேவாவிடம் முதலில் பேசினார்களா ?நம் வீட்டில் வந்து பேசுகிறார்களே என்றாள்…
முதலில் தேவாவிடம் பேசிவிட்டு தேவா சம்மதித்த பிறகு தான் நம் வீட்டில் வந்து பேசினார்கள் என்றவுடன் என்ன அவர் திருமணத்திற்கு சம்மதித்து விட்டாரா ?என்னை என்று தெரிந்துமா என்றாள். உன்னை என்று தெரிந்த பிறகு தான் போதுமா…!
நேரம் கொடுத்து இருந்தார்களாம் அவர் யோசித்து தான் பதில் சொன்னாராம் என்றார் இரண்டு நாட்களாக தேவா ஏதோ ஒரு நினைப்பில் இருந்ததை மனதில் நினைத்து விட்டு சரிமா நேரமாகிறது பார்..
எனக்கு பசிக்கிறது என்றாள் அவரும் வேறு எதுவும் பேசாமல் தன்னுடைய மகள் யோசிக்கட்டும் என்று விட்டு சமையலுக்குச் சென்று சமைக்கச் சென்ற பிறகு சமைத்த அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்து வைத்தார் …
பிறகு அனைவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தார்கள் சாப்பிட்டுவிட்டு பிறகு மாணிக்கம் தான் என்ன மா அவர்களுக்கு என்ன பதில் சொல்லலாம் என்றார் கலை அமைதியாக தனது மகளை பார்த்தார்..
அப்பா எனக்கு தேவாவை பிடித்திருக்கிறது தான் நான் இல்லை என்று சொல்ல மாட்டேன் ஆனால் நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை அது உங்களுக்கும் தெரியும்.ஒரு இரண்டு நாட்கள் டைம் தாருங்கள் என்றாள். அவரும் அமைதியாக சென்றுவிட்டார் …
அவளுக்கும் நேரம் வேண்டும் என்பதால் அமைதியாக விட்டுவிட்டார்கள்
இங்கு தீரன்,அரசி ,ஆது வீட்டிற்குள் வந்தவுடன் தேவா மூவரிடமும் மூவரும் எங்கு சென்று வருகிறீர்கள் என்றான்…
நீ சம்மதம் என்று சொன்னதால் வரு வீட்டில் சென்று
பெண் கேட்டு விட்டு வருகிறோம் என்றார் தீரன் அப்பா உடனடியாக பேச வேண்டுமா? என்றான்.அரசி அவனை சக முறைத்துவிட்டு நிச்சயம் மட்டும் அவர்கள் வீட்டில் விருப்பம் என்று சொன்ன பிறகு வைத்துக் கொள்ளலாம்…
திருமணத்தை மூன்று மாதங்கள் பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று விட்டு அவரது அறைக்கு சென்று விட்டார் .சாப்பாடு ரெடியா என்று கேட்டார்.அவன் ரெடி என்றவுடன் மூவரும் ஒன்றாக உட்காந்து சாப்பிட்டார்கள் பிறகு தேவா தான் அப்பா அவர்கள் வீட்டில் என்ன சொன்னார்கள் என்று கேட்டான் …
அவர்கள் அப்பா அம்மாவிற்கு விருப்பம் வருவிடம் நாங்கள் இதைப் பற்றி பேசவில்லை. நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது தான் அவள் வீட்டிற்குள் வந்தாள் அவர்கள் வீட்டில் பேசிவிட்டு சொல்வார்கள் என்றார்…
அவள் தன்னை விரும்பினாள் தான் ஆனால் இப்போது திருமணம் என்பது பற்றி அவள் யோசித்து இருக்க மாட்டாளே ? என்று யோசித்தான் அதேபோல் தான் வருவும் அங்கு யோசித்துக் கொண்டிருந்தாள்…
தான் இவரை நேசித்தது நேசிப்பது உண்மைதான் ஆனால் இப்பொழுது திருமணத்திற்கு நான் ரெடியா என்று யோசித்தாள் நம்மிடம் அதற்கான பதில் இல்லையே நாம் இதுவரை திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லையே என்று எண்ணினாள்..
சரி இதை பற்றி காலையில் யோசிப்போம் என்று கண் அயர்ந்து விட்டாள் தேவாவும் வேறு எதுவும் பேசாமல் இங்கு தூங்கிவிட்டான் மறுநாள் அலுவலகம் வந்த பிறகு தேவா வருவை அந்த அளவிற்கு பார்க்கவில்லை. அவளுக்கு தெரிந்த பிறகு அவள் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்து விட்டு அமைதியாக இருந்தான் ..
இங்கு வரு தேவாவை பெரிதாக சீண்டவில்லை எதுவும் செய்யவில்லை அமைதியாக இருந்தாள் மாலை வேளையில் வாசுவை பார்த்து அண்ணா நான் உங்களிடம் பேச வேண்டும் நம் அலுவலகத்திற்கு அருகில் உள்ள பூங்காவிற்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டு சென்றாள் ..
வாசுவும் வந்தான் என்ன வரு என்றான் அண்ணா உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் என்றாள். தெரியுமா நீ என்ன முடிவு செய்திருக்கிறாய் என்றான். நான் நான் அவரை விரும்பியது ,விரும்புவது உண்மைதான் ஆனால் நான் திருமணத்திற்கு என்று இன்னும் தயாராகவில்லை அண்ணா…
எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றாள் நான் உங்களை அதற்காக அழைக்கவில்லை உங்கள் நண்பனை ஒரு ஒரு மணி நேரமோ அறை மணி நேரமோ அலுவலகத்திலே பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். நான் அவர்கள் அம்மாவிடம் பேசிவிட்டு வரவேண்டும் என்றாள்…
வரு அம்மா உன்னை பார்க்க வந்திருக்கிறார்கள் என்ன பேசினார்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் நீ அவர்கள் உன்னிடம் எதுவும் தவறாக பேசவில்லை என்றான்..அண்ணா அவர்களிடத்தில் இருந்து அவர்கள் பேசியது சரிதான் அதற்காக நான் அவர்களை குத்தம் சொல்ல மாட்டேன்…
அதேபோல் நான் யோசிக்க வேண்டும் என்றாள் வாசுவும் சரி என்று விட்டு நான் முடிந்த அளவிற்கு அவனை சமாளிக்கிறேன் நீயும் சீக்கிரம் பேசிவிட்டு திரும்பி விட்டு சரியா என்றான் சரி என்று விட்டு வரு தேவா வீட்டை நோக்கி வண்டியை விட்டாள்..
வாசு அலுவலகம் சென்றான் தனது நண்பன் கிளம்பி வெளியே வருவதை பார்த்துவிட்டு மச்சான் கொஞ்சம் உள்ளே வாயேன் உன்னிடம் பேச வேண்டும் என்றான் டேய் நேரம் ஆகிறது ஆது வேறு வந்து விடுவான் என்றான்..
கொஞ்சம் நேரம் வாடா என்று அழைத்துக் கொண்டு சென்றான் பிறகு என்ன டா என்றான் இல்லை டா வரு அங்கு வீட்டிற்கு செல்கிறேன் என்று சொன்னாள் அதனால் உன்னை இங்கு இருக்க சொன்னால் என்றான் …
டேய் அவளுக்கு தான் வேலை இல்லை எனக்குமா என்றான் ஏன் அவள் யோசிக்க கூடாதா என்று கேட்டான் வாசு. இங்கு நான் அவளை யோசிக்க வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லையே ஆனால் ஆதுக்கு எக்ஸாம் நடந்து கொண்டு இருக்கிறது டா…
கொஞ்சம் நேரம் அமைதியாக இரு இது உனக்கு மட்டும் வாழ்க்கை இல்லை அவளுக்கும் தான் வாழ்க்கை சரியா ?உங்கள் வீட்டில் உள்ளவர்களை பார்த்து பேச வேண்டும் ஏதாவது சொல்ல வேண்டும் என்றெல்லாம் யோசிக்கலாம் தோன்றலாம் அதற்கான இடத்தை கொஞ்சம் அவளுக்கு கொடுப்பதால் ஒன்றும் ஆகி விடப்போவதில்லை சரியா என்றான்…
ஆதுவிற்கு தேர்வு தானே நடந்து கொண்டிருக்கிறது இவள் போவதால் அவனது படிப்பு ஒன்றும் கேட்டு விடாதே என்றான் அதன் பிறகு தேவா எதுவும் பேசவில்லை சரி என்று கம்பெனியில் இருக்கும் ஒரு சில வேலைகளை பார்வை இட்டான்…
வாசு தன்னுடைய ஃபோனை எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான் வரு தேவா வீட்டிற்கு வந்தாள் ஆது அப்பொழுது ஹாலில் உட்கார்ந்து படித்துக்கொண்டு இருந்தான் . ஆது வருவை பார்த்துவிட்டு வாங்க அக்கா என்று வரவேற்றான் ..
மாடல் எக்ஸாம் நடந்து கொண்டு இருக்கிறதா படிப்பு எல்லாம் எப்படி போகிறது என்று கேட்டாள் ஓகே அக்கா நன்றாக தான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றான் சரி நீ படி நான் அம்மாவை தான் பார்க்க வந்தேன் பேசிவிட்டு வருகிறேன் என்றாள்…
டீ குடித்து விட்டாயா என்று கேட்டால் இல்லையே அண்ணன் வந்தால் தான் என்றான் சரி ஆது நீ படி நான் அம்மாவை பார்க்க வந்தேன் அம்மா எங்கே என்று கேட்டாள்..
உள்ளே அவர்களது அறையில் தான் இருக்கிறார்கள் அக்கா என்றான் சரி நான் அவர்களை பார்த்து விட்டு வருகிறேன் என்று விட்டு அரசி இருக்கும் அறைக்குச் சென்று நின்றாள் அவர் ஏதோ யோசனையில் இருப்பதை பார்த்துவிட்டு கதவை லேசாக தட்டினாள்…
அவர் நிமிர்ந்து பார்த்தவுடன் என்ன மாமியார் பலத்த யோசனை போல என்று கேட்டாள். அரசி அவளை முறைத்து விட்டு அனைவரும் இருக்கும் போது தன்னை ஆன்ட்டி என்றும் யாரும் இல்லாத பொழுது மாமியாரே என்று தன்னை சீண்டுபவளே எண்ணி மனதிற்குள் சிரித்துவிட்டு வெளியே முறைத்தார் …
ஒன்றுமில்லை என்றார் டீ குடித்து விட்டீர்களா என்று கேட்டாள் அவன் வந்தா தான் என்றார். உங்களால் உங்களுக்கும் ஆதுவவிற்க்கு மட்டும் கூட டீ போட முடியாதா என்று சொல்லிவிட்டு அவரை மறைத்து பார்த்தாள் .அது உனக்கு தேவையில்லை என்றார் அரசி அதன் பிறகு வரு அவரை முறைத்து விட்டு சமையலறைக்குச் சென்று மூவருக்கும் டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்தாள்.
ஆது விடம் கொடுத்தாள் அவன் தேங்க்யூ என்று சொல்லிவிட்டு வாங்கிக் கொண்டான் பிறகு அரசி அறைக்கு வந்து அரசியிடம் கொடுத்தாள் அவர் வேறு எதுவும் பேசாமல் வாங்கி கொண்டார் அவள் அமைதியாக டீ குடிக்கும் வரை இருந்துவிட்டு அவர் டீ குடித்து முடித்தவுடன் நான் உங்களிடம் பேச வேண்டும் என்றாள்…
அரசியும் சொல் என்று விட்டு அமைதியாக பார்த்தார் அங்கிள் எங்கே ஒன்று கேட்டாள் .அவர் ரொம்ப நாட்களாக கடைக்கு செல்லவில்லை ஆனால் இப்பொழுது இரண்டு நாட்களாக தான் கடைக்கு செல்கிறார் அதனால் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்..
வருவதற்கு கொஞ்ச நேரம் ஆகும் என்றார். அவளும் சரி என்று விட்டு கதவை சாற்றி விட்டு வந்து அவரது அருகில் அமர்ந்தாள். அவரும் அமைதியாக பார்த்தார் நான் உங்கள் மகனை விரும்பியது உண்மைதான்.
ஆனால் திருமணத்தை பற்றி நான் இதுவரை யோசிக்கவில்லை என்று கூட சொல்லலாம் என்றாள்..
அவசரம் இல்லை உடனடியாக திருமணம் செய்து வைக்கப் போவதில்லை தான் இருந்தாலும் உங்கள் மகன் நான் தான் பெண் என்று சொன்ன பிறகும் ஒத்துக் கொண்டாரா ?என்று கேட்டாள்…
அவன் ஒத்துக் கொண்டு பிறகு தான் உங்கள் வீட்டில் வந்து பேசியது என்று சொன்னார் அவரை அமைதியாக பார்த்தாள் திருமணத்திற்கு மூன்று மாதம் இருக்கு அது வரை நீ நேரம் எடுத்துக் கொள்ளலாம் திருமணத்தைப் பற்றி யோசித்துக்கொள்ளலாம் என்றார்..
அதற்குள் யோசிக்க வேண்டுமா? என்று கேட்டால் ஏன் மூன்று மாதத்திற்குள் யோசிக்க முடியாத என்றார் இது வாழ்க்கை திருமணம் என்றாள் திருமணம் தான் நான் இல்லை என்று சொல்லவில்லையே ஆனால் எனக்கு எல்லாம் ஒரு நாள் கூட யோசிக்க நேரம் கிடைக்கவில்லையே…
நான் போய் நின்ற அடுத்த நொடி எனக்கு திருமணம் என்று எண்ணவில்லை என்றார் நான் இங்கு யோசிக்க வேண்டாமா அது உங்களது சூழ்நிலை என்றாள். ஒத்துக் கொள்கிறேன் அது என்னுடைய சூழ்நிலைதான் அதற்காக உன்னை திருமணம் செய்து கொள் என்று சொல்லவில்லையே என்றார் …
புரியவில்லை திருமணத்திற்கு பிறகு எனது வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டாமா என்று கேட்டாள் ஏன் எப்படி இருக்கும் இந்த வாழ்க்கையில் யாருமே சண்டை சச்சரவு இல்லாமல் வாழ்வதில்லை அனைவரது வாழ்க்கையிலும் அனைத்தும் வந்து கொண்டு தான் இருக்கிறது…
ஏன் எனக்கும் உன்னுடைய அங்கிளுக்கும் கூட சில பல நேரங்களில் சண்டை வந்து கொண்டு தான் இருக்கிறது அதனால் நாங்கள் சந்தோஷமாக இல்லை என்று நினைக்கிறாயா? என்றார் நான் அப்படி சொல்லவில்லை என்றாள் பிறகு எப்படி என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் அறை கதவு தட்டப்பட்டது…
யாரு டா இது என்று யோசித்து விட்டு வரு கதவை திறந்தாள்.அங்கு தேவா நிற்பதை பார்த்துவிட்டு இவனை நாம் அங்கு தானே இருக்க சொன்னோம் எண்ணினாள்..
நேரம் ஆகிறது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லையா ?நேரம் ஒன்பது தொட போகிறது வீட்டில் உன்னை தேட மாட்டார்களா ?என்று கேட்டான் தேவா. வரு அவனை முறைத்து விட்டு அது எங்களுக்கும் தெரியும் வீட்டில் சொல்லிவிட்டு தான் வந்திருக்கிறோம் என்றாள் ..
சீக்கிரம் கிளம்புற வேலையை பாரு இப்படி இங்கே உட்கார்ந்து கொள்ளலாம் என்று எண்ணாதே என்று விட்டு நகர்ந்தான் . வரு , அரசி இருவரும் இவன் எப்பொழுது வந்தான் என்று யோசித்தார்கள்.
தேவா இவர்கள் இருவரும் பேசியதை கேட்டிருப்பானா இல்லை இப்பொழுது நான் வந்தானா. வரு இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்வாளா ?என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்
அன்புடன்
❣️ தனிமையின் காதலி ❣️
Love panrenu avan pinnadi suthuna ipo pesi mrg panalam vanthu irukanga nee ena na mrg pathi yosikala solra mrg panna ena ipo sammatham sollu varu
சரியான லூசா இவ..? லவ் பண்றேன்னு பின்னாடியே சுத்திட்டு, இப்ப திருமணத்துக்கு ரெடி ஆகலைங்கறாளே…
அப்ப, அதுக்கு தனியா ரெடியாகணும், இதுக்கு தனியா ரெடியாகணுமோ…???
Interesting
Interesting epi