Skip to content
Home » பூவிதழில் பூத்த புன்னகையே

பூவிதழில் பூத்த புன்னகையே

அன்றைய பொழுதும் அப்படியே கழிந்தது “வருவின் மனதில் தேவா கண்கள் கலங்கினது மட்டுமே வந்து மறைந்தது” இருந்தாலும் “இப்போது வரை நான் அவருடைய மனதில் இல்லையே “என்று யோசித்துக் கொண்டிருந்தாள்…அவளால் அவன் பேசியதை ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. அதைவிட ஒரே ஒரு வார்த்தை ” என் மனதில் அவள் இருக்கிறாள் என் விருப்பத்தோடு தான் நான் அவளை திருமணம் செய்து கொள்ள போகிறேன்” என்று சொல்லி இருக்கலாமே என்று உலவிக் கொண்டு இருந்தாள்..ஆனால் “அந்த நேரத்தில் வரு ஒன்றை மறந்து இருந்தாள் போல இத்தனை நாட்களாக அவன் தன்னை விரும்புகிறான் ஆனால் குடும்ப சூழ்நிலையால் தான் தன்னை ஒதுக்குகிறான் “என்று நினைத்தவள்..இப்பொழுது “அவன் முழுவதாக தன்னை விரும்பவே இல்லை இப்பொழுது இந்த நொடி கூட குடும்பத்திற்காக தான் தன்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறான்” என்று எண்ணுகிறாள் ..”அவள் மனதை தவறு என்றும் சொல்லிவிட முடியாது அவன் அவனுடைய மனதை இவளிடம் வெளிப்படுத்தி இருந்தால் கூட அவள் அமைதியாக இருந்திருப்பாள்”..அவன் இவளிடமும் தனது மனதை திறக்காமல் தன் தம்பி ஆதி கேட்கும் போதும் அமைதியாக இருந்தது வருவின்   மனதை  வருத்தியது தேவா வருவின் மனதை இவ்வாறு உடைப்பான் என்றெல்லாம் அவள் என்ன கூட இல்லையா..தேவா வருவின்  அன்பையும் காதலையும் எப்போது பெறுவான் .அப்படியே நாட்கள் சென்று நாளை திருமணம் இன்று நிச்சயம் என்று வந்து நின்றது.”சுவாதி தனது அக்கா மலர் ,வசந்த் இருவரையும் அழைத்துக் கொண்டு திருமணத்திற்கு வந்திருந்தாள் வருவிற்க்கும் வசந்த் ,மலர் பழக்கம் என்பதால் இருவரும் வந்திருந்தார்கள்”..” வரு வீடு திருமண கலை கட்டி கோலாகலமாக இருந்தது அவர்கள் வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் அவ்வளவு கோலாலமாக அனைத்து வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தது” ..இதற்கு ஆப்போசிடில் தேவாவின் வீடு இருந்தது தேவாவிற்கு சொந்த பந்தங்கள் என்று பெரிதாக யாரும் இல்லை தான் இருந்தாலும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை வைத்தும் வாசு, தேவாவின் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வந்திருந்தார்கள்” …அவர்கள் வீடும்  விழாக்கோலம் கட்டி இருந்தது பிறகு “வரு வீட்டில் இருந்து வந்து மாப்பிள்ளை அழைப்பு அழைத்துவிட்டு நலங்கு வைத்து விட்டு சென்றார்கள் தேவா வீட்டின் சார்பாக யார் செல்வது வரு வீட்டுக்கு என்று யோசனை போய்க்கொண்டிருந்தது “..”அரசி அழைத்துக் கொண்டு வரலாம் என்றால் கூட இங்கு இருக்கும் மற்ற வேலைகளையும் பார்ப்பதற்கு ஆட்கள் வேண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தார் தீரன்”..அப்போது “வாசுவின் தாய் தான் தாங்கள் மூவரும் சென்று பெண் அழைத்து விட்டு, நலங்கு வைத்துவிட்டு வருகிறோம் என்றார் அரசி வாசுவின் அம்மாவின் கையை பிடித்துக் கொண்டு கண் கலங்கினார் “..”ஒன்றுமில்லை அரசி அனைத்தும் சரியாகும் என்று விட்டு வாசு, வாசுவின் அப்பா அம்மா மூவரும் சென்று வரு வீட்டிற்கு சென்று நலங்கு வைத்து விட்டு பெண்ணை அழைத்துக்  கொண்டு வந்தார்கள் பிறகு மாலை வேலையும் நெருங்கியது”…  “இரு வீட்டு நெருங்கிய உறவினர்கள் ஏற்கனவே திருமண மண்டபத்தில் கூடி இருந்தார்கள் ஒரு சில உறவினர்கள் வந்து கொண்டு இருந்தார்கள் மாலை 6:00 டு 7:30 ரிசெப்ஷன் ஆக வைத்திருந்தார்கள்”‘பெண் மாப்பிள்ளை இருவரும், மண்டபத்திற்கு நல்ல நேரத்தில் வர வேண்டும் என்பதற்காக அன்று ஞாயிற்றுக்கிழமை 4.30 to 6 .00 ராகு காலம் என்பதால் வருவை நாலு மணி அளவில் பெண் அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள்”..” தேவா வீட்டில் இருந்தும் மண்டபத்திற்கு நல்ல நேரத்தில் செல்ல வேண்டும் என்பதால் அனைவரும் நாலு மணிக்கு கிளம்பி 4.30 க்குள் மண்டபத்திற்கு வந்திருந்தார்கள்”..”அந்த 1:30 மணி நேரமும் மண்டபத்தில் இருக்கும் ஒரு சில வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள் அப்போது வரு இன்னும் கொஞ்ச நேரம் கழித்து தானே மேக்கப் போட போகிறார்கள் என்று விட்டு தனது அறையில் இருந்து வெளியில் வந்தாள்” “தேவா தன்னுடைய அலுவலகத்தில் இருக்கும் நண்பர்களிடம் பேசிக் கொண்டு இருந்தான் வரு அரசியை கூப்பிட்டுக் கொண்டு  அவளுடைய அறைக்கு  சென்றதை தேவா  பார்த்தான்”..ஆனால் “என்ன என்று கண்டு கொள்ளாமல் அமைதியாக தனது அம்மாவையும் வருவையும் பார்த்துக் கொண்டிருந்தான். அரசி தான் அவரை அழைத்து கொண்டு வந்தவுடன்  என்ன டி என்று கேட்டார்”..  “அறைக்குள் சென்ற பிறகு அரசியிடம் அத்தை நான் ஒன்று கேட்பேன் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றாள். இந்த நேரத்தில் என்ன டி என்றார்”..”திருமணத்திற்கு என்று நீங்கள்  உங்கள் பக்கம் இருந்து அனைவரையும் அழைத்து இருக்கிறீர்களா என்று கேட்டாள் அவளை மேலே இருந்து கீழே வரை பார்த்துவிட்டு நீ என்ன லூசா? நாளை திருமணத்தை வைத்துக்கொண்டு இப்பொழுது அந்த கேள்வியை கேட்கிறாய் “..”எங்களுக்கு சொந்தங்கள் என்று யாரும் இல்லை என்று உனக்கே தெரியும்” மற்றபடி எனக்கு தெரிந்தவர்கள் அவருக்கு தெரிந்தவர்கள் அவனுக்கு தெரிந்தவர்கள் என்றுதான் அவர்கள் அனைவரையும் நாங்கள் யாரையும் விடாமல் அழைத்து இருக்கிறோம்” அப்புறம் என்ன என்று கேட்டார்..” உங்களுக்கு சொந்தம் என்று யாருமே இல்லையா என்று கேட்டாள்.வரு இது விளையாடக்கூடிய நேரமில்லை எனக்கு யாரும் சொந்தம் என்று இல்லை” என்றார் ..”உங்களைப் பெற்றவர்கள் அவர்கள் இன்னும் இருக்கத்தானே செய்கிறார்கள்” அவர்கள் உங்கள் சொந்தம் இல்லையா ? என்று கேட்டாள்…”அரசி அவளை அடிக்க கை ஓங்கி  கொண்டு வந்து விட்டு கீழே இறங்கினார்” இப்பொழுது “உனக்கு என்னடி வேண்டும்” என்றார் “அவர்கள் உங்களுடைய பெற்றோர்கள் தானே தேவாவிற்கு தாத்தா பாட்டி தானே” அவர்களை இந்த திருமணத்திற்கு அழைக்க மாட்டீர்களா என்று கேட்டாள் …”நான் அழைக்காவிடிலும் அவர்கள் வருவார்கள் அவன் இந்நேரத்திற்கு அவர்களை அழைத்து இருப்பான் அந்த விஷயத்தில் எனக்காக எல்லாம் என்று அவன் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான்” என்றார் …”வரு சிரித்து விட்டு தேவா அழைத்து இருக்கிறாரா இல்லையா ?என்று நான் கேட்கவில்லை நீங்கள் உங்கள் பேரனுக்கு திருமணம் வாருங்கள் என்று உங்கள் பெற்றோர்களை அழைத்தீர்களா?” என்று கேட்கிறேன் …”வரு நான் அவர்களிடம் பேசுவதில்லை இதைப் பற்றி உனக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார் தெரியும் ஆனால் திருமணத்திற்கு முன்பு தெரியாது திருமணப் பேச்சு எடுத்த பிறகு அதுவும் நீங்கள் ஆபரேஷன் செய்து மருத்துவமனையில் இருக்கும் போது தான் தெரியும் ..அவர்கள் மருத்துவமனையில் நீங்கள் இருக்கும் பொழுது பார்க்க வந்திருந்தார்கள் அவர்கள் எனக்கு  யார் ? என்று தெரியாததால் பார்க்க விடமாட்டேன் என்று சொன்னேன்…”அவர்கள் உங்களுடைய பெற்றோர்கள் என்று சொல்லி அழுதார்கள் அதன் பிறகு நான் மாமாவை பார்த்தேன் அவரும் தலை அசைத்த பிறகு தான் நீங்கள் மயக்க நிலையில் இருக்கும் போது வந்து பார்த்துவிட்டு சென்றார்கள்”…”ஆனால் அதன் பிறகு அவர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றாள்.சரி இப்பொழுது என்ன அதற்கு என்றார் அத்தை அவர்களை கூப்பிடுங்கள் என்று சொன்னாள் .”அவர்கள் வருவார்கள் என்று சொன்னேன் சரியா அவன் நேரில் சென்று அழைத்து இருப்பான் அவர்களும் வருவார்கள்” என்றார்..” தேவா அழைப்பதற்கும் நீங்கள் உங்கள் பெற்றோர்களை அழைப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது “ஒன்றே ஒன்றுதான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் உங்களுடைய அப்பா அம்மா செய்தது தவறு என்று எத்தனை நாட்கள் நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் சரியா ..ஆனால் “இப்பொழுது நீங்கள் ஒரு தாயாக நிற்கிறீர்கள் இந்த நொடியில் கூட உங்கள் அப்பா அம்மா செய்தது தவறு என்றுதான் எண்ணுகிறீர்களா?”..” அவர்கள் பக்கம் ஒரு துளி கூட நியாயம் இல்லையா ? உங்களை பிரிந்து அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று எண்ணுகிறீர்களா ?கடைசி காலத்தில் கூட  தங்களுக்கு என்று இருக்கும் ஒரே மகளிடம்  உறவு கொண்டாடாமல் அவர்கள் இருப்பது அவர்களுக்கு எந்த அளவிற்கு வலியை கொடுக்கும் என்றெல்லாம் உங்களுக்கு புரியாதா ?.”..”ஒரு உறவு நமகாக என்று இருந்தும் நாம் அந்த உறவை கொண்டாட முடியாமல் இருக்கும் போது  எப்படி இருக்கும்  உங்களுக்கு தெரியும்” என்று விட்டு அமைதியாக இருந்தாள் …”அரசியும் ஒரு சில நொடி அமைதிக்குப் பிறகு இப்பொழுது அதற்கு நான் என்ன செய்வது என்று கேட்டார் நீங்கள் அவர்களுக்கு போன் செய்து வர சொல்லுங்கள் என்று விட்டு அமைதி ஆனாள்” ..”என்னுடைய போன் இப்போது என்னிடம் இல்லை என்றார் . சரி இந்தாங்கள் என்னுடைய போன் நம்பர் தெரியும் அல்லவா என்று கேட்டாள் .அவர் லேசாக தலையசைத்தவுடன் தனது அப்பா அம்மா நம்பர் அழுத்தினார் அந்தப் பக்கம் போன் எடுத்து விட்டு அரசின் தந்தை ஹலோ யாரு என்று கேட்டார்”. ” அரசி தன்னை தேற்றிக்கொண்டு அப்பா என்றவுடன் அரசி மா என்று அந்த பக்கம் அரசியின் அப்பா வெங்கடேசன் ப்ளீஸ் டா மா பேசு என்று அழுகை உடன் கத்தினர்”..”அதன் பிறகு வெங்கடேசன் மனைவி பத்மினியும் எங்க அரசியா கொடுங்கள் என்று வாங்கிவிட்டு அரசி என்னடி என்று கேட்டார் உனக்கு ஒன்றும் இல்லையே என்றார்.”..”என்னை பார்த்து கொள்ள இங்கு அனைவரும் இருக்கிறார்கள் எனக்கு ஒன்று இல்லையா.. உங்கள் பேரனுக்கு திருமணம் இருவரும் கிளம்பி வாருங்கள் என்று விட்டு உங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு வர வாசு வருவான் என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் வைத்துவிட்டார் “..”அரசிக்கு இங்கு தொண்டை அடைத்தது இத்தனை நாட்களுக்கு பிறகு கூட தனது தாய் தந்தை தனக்காக உருகுகிறார்கள் என்ற வலி அதனால் அரசியால் மேற்கொண்டு பேச முடியாது இது மட்டும் சொல்லிவிட்டு வைத்துவிட்டு வாசுவிற்கு அழைத்தவர் அவன் ஏற்கனவே அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு வருவதற்கு தான் தேவா சொல்லி சென்று கொண்டிருந்தான்”..”அரசி அழைத்தவுடன் அதுவும் வருவின் போனில் இருந்து என்றவுடன் ஹலோ சொல்லு வரு என்றான் நான் அரசி பேசுகிறேன் டா என்றார் சொல்லுங்கம்மா ஏன் இந்த போனிலிருந்து என்றான்”..” அவர் விபரம் சொன்ன பிறகு சரி மா என்று மட்டும் சொல்லிவிட்டு வைத்து விட்டான் அவனுக்கு வருவின் போனில் இருந்து போன் வந்தவுடன் இது வருவின் வேலையாக தான் இருக்கும் என்று எண்ணி சிரித்துக்கொண்டு அரசியின் பெற்றவர்கள் வெங்கடேசன் பத்மினியை அழைத்துக் கொண்டு வர கிளம்பினான்”..”ஆனால் வாசுவிற்குமே ஒரு பக்கம் வலி இருக்கத்தான் செய்தது அவனுமே எத்தனை நாட்களில் தேவாவிடம் ஒழுங்காக பேசவில்லை என்று தான் சொல்ல வேண்டும் தனது நண்பன் செய்த செயல் தவறுதான் இருந்தாலும் அவனை இந்த அளவிற்கு வருத்த வேண்டுமா” என்று எண்ணம் இருக்க செய்தது..”இருந்தாலும் மறுபக்கம் இருந்த  அவள் செய்வது சரியே என்று உணர்ந்தான் ஆனால் தனது நண்பனின் வாழ்வு இனியாவது சிறக்க வேண்டும்”..”வரு தனது நண்பனின் வாழ்வில் வந்துவிட்டாள் தனது நண்பனின் வாழ்க்கையை அவள் வசந்தகாலமாக மாற்றி விடுவாள் என்று எண்ணிக் கொண்டே வெங்கடேசன் பத்மினியை அழைத்துக்கொண்டு மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான் “..”மாலை ரிசப்ஷனுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஒன்று ஒன்றாக நடந்தேறியது அப்போது தேவாவும், வருவும் அருகருகே நின்று கொண்டிருந்தார்கள் இடையில் சிறிதளவு மட்டுமே இடைவெளி இருந்தது “..”தங்களுக்குள் இருக்கும் கோப தாபங்களை அடுத்தவர்கள் முன்பு காட்ட அவர்கள் இருவருமே விரும்பவில்லை அவர்கள் எப்பொழுதும் போல் லேசாக சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருந்தார்கள்”..ஆனால் “அதையும் தாண்டிய வலி இருவரது கண்களிலும் இருப்பதை தினமும் இருவரிடமும் பேசி பார்த்துக் கொண்டிருந்த இரு வீட்டினருக்கும் புரிந்தது பெரியவர்கள் என்னதான் அமைதியாக இருவரும் தங்களுக்குள் பேசிய முடிவு செய்து கொள்வார்கள் என்று அமைதி காத்தாலும் சிறிய பையனாகிய ஆதுவாள் அவ்வாறு அமைதி காக்க முடியாமல் வருவின் அருகில் வந்து நின்றான்”…”வரு என்ன ஆது என்று கேட்டவுடன் அண்ணி நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டுமே” என்றான் .சரிடா இன்னும் பத்து நிமிடத்தில் சாப்பிடலாம் என்று சொன்னார்கள் அப்போது பேசலாமா ?என்று விட்டு ஆதுவின் முகத்தை பார்த்தாள்..”ஆதுவின் முகம் சரியில்லை என்பதால் அவ்வாறு கேட்டார் அவனும் சரி அண்ணி என்று விட்டு நகர்ந்தான் அடுத்த பத்தாவது நிமிடத்தில் வீட்டில் உள்ளவர்களும் சாப்பிட சென்றார்கள்”…அப்பொழுது “ஆது வருவை சாப்பிட கூட விடாமல் மணமகள் அறைக்கு வேகமாக அழைத்துச் சென்றான்” ஆது வருவிடம் என்ன பேசப் போகிறான் அதற்கு வருவின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..அன்புடன் தனிமையின் காதலி

4 thoughts on “பூவிதழில் பூத்த புன்னகையே”

  1. CRVS 2797

    ஆஹா…! சின்னப் பையன் அப்படி என்ன தான், எதைப்பத்தி தான் பேசப்போறான்னு தெரியலையே..???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *