வேணி மனதிற்குள் எண்ணி வருந்தியதை அவர்களது அறைக்குள் சென்ற பிறகு முகிலிடமும் சொல்லி அழுதால் என்னை மன்னித்து விடுங்கள் எழில் அண்ணா இவ்வாறு நடந்து கொள்வதற்கு நான் தான் காரணம் என்று சொன்னால் வேணி நீ ஒன்றை புரிந்து கொள் மேலே நீ என்ன மகாவிடம் கேட்டாய் மகா உன்னிடம் என்ன சொன்னால் என்று எனக்கு தெரியாது….
வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரியாது ஆனால் எனக்கு அதை பற்றி கவலை இல்லை ஆனால் நீ வருந்தும் அளவிற்கு எதுவும் நடக்காது என்றான் இல்லை எழில் அண்ணா எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று பார்த்தீர்கள் தானே என்றாள் முகில் வேணியை பார்த்து சிரித்துவிட்டு இப்பொழுது இப்படி கத்தியவனே நாளை தனது தோழிக்கு என்று வந்து நிற்பான் நீ அதை பார்ப்பாய் நீ வருத்தம் கொள்ளும் அளவிற்கு எதுவும் நடக்காது….
மகிழும் மகாவிடம் எதுவும் கோபித்துக் கொள்ள மாட்டான் நீயே பார் இப்பொழுது இதை எதையும் நினைத்து வருந்தி கொண்டு இருக்காதே என்று முகில் மேனியிடம் சொல்லிவிட்டு வேணியை தனது நெஞ்சில் சாய்த்து படுக்க வைத்தான் வேணி ஒரு சில நிமிடங்கள் எதையோ எதையோ நினைத்து கொண்டு இருந்தாள் பிறகு தனது கணவனின் நெஞ்சில் சாய்ந்து இருப்பதை உணர்ந்து நிம்மதியான உறக்கத்திற்கு சென்றால் …..
மறுநாள் காலை விடிந்தது 8 மணி போல் மகா தனது கையில் வாட்சைக் கட்டிக் கொண்டே கீழே இறங்கினாள் எழில் எழில் என்று இரண்டு முறை அழைத்தால் எழில் அவனது அறையில் இருந்து வந்தான் வீட்டில் உள்ள அனைவரும் எழில் மகா இருவரையும் பார்த்தார்கள் மகா ஒரு நிமிடம் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துவிட்டு எழில் கிளம்பி விட்டாயா இன்று ரிசல்ட் இருக்கிறது …..
நாம் சீக்கிரம் செல்ல வேண்டும் என்றால் அதன் பிறகு தான் வீட்டில் உள்ள அனைவருக்கும் இன்று நிலா வேணி இருவருக்கும் ரிசல்ட் வரப்போகிறது என்று கூட தெரியும் இருக்கும் பிரச்சினையில் இதைப் பற்றி யாரும் யோசிக்கக் கூட இல்லை அனைவரும் நிலா வேனி இருவரையும் பார்த்தார்கள் அவர்கள் இருவரும் அமைதியாக தான் இருந்தார்கள்…
எழில் தனது தாயிடம் சொல்லிவிட்டு கிளம்பினான் டேய் சாப்பிடு டா என்றார் நான் வெளியே பார்த்துக்கொள்கிறேன் இல்லையென்றால் கல்லூரி கேன்டினில் சாப்பிட்டுக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு மகாவை அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்றான் வேணி தான் அவர்கள் இருவரும் சென்ற பிறகு சுந்தரியிடம் வந்து நின்றால் சுந்தரி வேணியை பார்த்தார் …..
நேற்று எழில் அண்ணன் மகா அண்ணியிடம் அப்படி நடந்து கொண்டார் இன்று எதுவும் நடக்காது போல் எப்போதும் போல் நடந்து கொள்கிறார்களே என்று கேட்டார் சுந்தரி சிரித்தார் வேணி அவர்கள் இருவரும் இப்பொழுதும் நண்பர்களாக இருக்கிறார்கள் சரியா அவர்கள் இருவருக்கும் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் அது என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது இது மகிழை வைத்து நடந்தது என்று மட்டும் எனக்கு புரிகிறது …..
அவன் இப்போது செல்வது அவனுடைய தோழி உடன் அவனுடைய அண்ணியுடன் அல்ல அதை நீ நினைவில் வைத்துக்கொள் என்று விட்டு அமைதியாக சமையல் அறைக்குள் புகுந்து விட்டார் வேணிக்கு இப்பொழுதும் ஒன்றும் புரியவில்லை என்னதான் சுந்தரி அம்மா சொல்லிவிட்டு செல்கிறார்கள் நான் இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து மகா அண்ணி எழில் அண்ணன் தனது தோழியாக மட்டும் தானே பார்த்துக் கொண்டிருக்கிறார் …..
அண்ணியாக பார்க்கவில்லையே என்று வாய் விட்டே புலம்பினாள் நிலா அவளது தலையில் கொட்டி விட்டு வேணி இல்லாத மூளையை கசக்கி பிழிஞ்ச வரைக்கும் போதும் என்றால் வேணி நிலாவை பார்த்து முறைத்தாள் நீங்க சொன்னது என்னவோ உண்மை தான் சரியா எழில் மாமா மகிழ் மாமாவுக்காக அதாவது எழில் மாமாவோட அண்ணனுக்காக அப்படி தனது அண்ணனுக்காக பேசுனதால அந்த இடத்தில் மகா அவருக்கு அண்ணியா தெரிஞ்சா ஆனா இப்போ அவர் கூப்பிட்டு போறது அவரோட தோழி லட்சுவை புரிகிறதா இல்லை இன்னும் விளங்கவில்லையா என்றால் ….
வேணி நிலாவை முறைத்து விட்டு போடி நாயே என்று விட்டு அமைதியாக அவளது சென்று விட்டாள் மகா எழில் இருவரும் கல்லூரிக்கு சென்று விட்டு ரிசல்ட் காக காத்துக் கொண்டிருந்தார்கள் ரிசல்ட் 10 மணியளவில் வெளியாகியது பத்தரை மணி அளவில் எழில் இடம் இருந்து நிலாவிற்கு ஃபோன் வந்தது நிலா போன் அடிக்கும் சத்தம் கூட கேட்காத அளவிற்கு உட்கார்ந்து இருந்தால் அவளது போன் வரவேற்பரையில் தான் இருந்தது….
இனிதான் நிலா உன்னுடைய போன் அடிக்கிறது என்று சொல்லிக் கொண்டே எடுத்துக் கொண்டு வந்தால் யாரு அண்ணி என்று கேட்டால் எழில் சார் என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தால் எழில் சார் என்றவுடன் நிலா வேகமாகச் சென்று இனி கையில் இருக்கும் போனை புடுங்கினால் எழில் சார் என்றால் எழிலா என்று கேட்டால் வேணி ஆமாம் என்றவுடன் நிலா கையில் இருக்கும் ஃபோனை இனி புடுங்கி போனை அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட்டால்….
நிலா இனியை முறைத்தாள் இனி சிரித்து விட்டு அமைதியாக இருந்தால் மிஸ் அகல் நிலா என்றான் எஸ் ஆர் சொல்லுங்க சார் நான் தான் பேசுறேன் என்றால் நிலா வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒரு நிமிடம் சிரிப்பு வந்துவிட்டது எழிலை வார்த்தைக்கு வார்த்தை வாடா போடா மாமா என்று அழைப்பவளா இப்பொழுது சார் சார் என்று சொல்கிறாள் என்று எண்ணினார்கள் பிறகு நிலா வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்து முறைத்தவுடன் அனைவரும் அமைதியாகி விட்டார்கள் …..
நீங்கதான் நம்ம காலேஜ் பர்ஸ்ட் வந்து இருக்கீங்க நம்ப டிபார்ட்மெண்ட் மட்டும் இல்லை மொத்த காலேஜ்லையும் நீங்கள் தான் முதல் மதிப்பெண் எடுத்திருக்கிறீர்கள் 99 புள்ளி 8 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்கிறீர்கள் நீங்களும் உங்கள் பெற்றோர்களை அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு வர முடியுமா இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் பிரின்ஸ்பல் சார் வர சொன்னார் என்று உடன் சரி என்று விட்டு போனை வைத்தாள் ….
வீட்டில் உள்ள அனைவரும் அவ்வளவு சந்தோஷம் நிலா அவ்வளவு மதிப்பெண் எடுப்பாள் என்று வீட்டில் உள்ள யாரும் என்ன வில்லை ஏன் அவள் இதுவரை 95 சதவீதத்திற்கு மேல் தான் மதிப்பு எடுத்திக் கொண்டிருந்தாள் இப்பொழுது தான் முதல் முறை அவ்வளவு மதிப்பெண் எடுத்திருக்கிறாள் இனி வாய்விட்டே கேட்டால் என்னடி இவ்வளவு மதிப்பெண் எடுத்திருக்கிறாய் என்று அண்ணி இவ்வளவு நாள் நான் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட இப்பொழுது எனது கனவு நினைவாக வேண்டும் என்று படித்திருக்கிறேன் அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு அமைதியாக அனைவரையும் பார்த்தால் …..
அடுத்த பத்தாவது நிமிடம் வேணிக்கு போன் வந்தது நிலா தான் வேணியின் போனை எட்டிப் பார்த்துவிட்டு அதிலும் எழில் சார் என்று தான் வருகிறது என்று உடன் போனை அட்டென்ட் பண்ணி ஸ்பீக்கரில் போட்டால் வேணி நிலாவை முறைத்து விட்டு போன் பேச ஆரம்பித்தால் மிஸஸ் இளவேனில் என்றான் நீங்கள் நமது டிபார்ட்மெண்டில் இரண்டாவது மதிப்பெண் எடுத்திருக்கிறீர்கள் 97.6% மதிப்பில் உங்களை பிரின்ஸ்பல் கல்லூரிக்கு வர சொல்லி இருக்கிறார்….
உங்கள் பெற்றோர்களையும் அழைத்துக்கொண்டு இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு வைத்தான் எழில் போன் வைத்தவுடன் நிலா ஹே என்று வேகமாக கத்தினால் இனி கேட்டால் என்னடி நீ அவ்வளவு மதிப்பெண் எடுத்தாய் அப்பொழுது கத்தவில்லை இப்பொழுது காத்துக்கிறாய் என்று அண்ணி நான் மேற்கொண்டு படிப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதற்கான முயற்சி எடுத்தேன் ….
ஆனால் வேணி இதுவரை 92 சதவீதம் மட்டும் தான் எடுத்துக் கொண்டிருந்தால் அவள் நன்றாக படிப்பாள் தான் நாள் இல்லை என்று சொல்ல மாட்டேன் ஆனால் இப்பொழுது திருமணம் ஆகி வீட்டிலும் வேலை செய்து கொண்டு ரொம்ப ஹார்டு வொர்க் பண்ணி படித்து இவ்வளவு மதிப்பெண் எடுத்திருக்கிறாள் என்று சொல்லிவிட்டு வேணிக்கு கை கொடுத்தால் வேணி முகிலை பார்த்தால் ….
முகில் கண் மூடி திறந்தவுடன் நிலாவை கட்டிக்கொண்டு அழுதால் பிறகு வீட்டில் உள்ள அனைவரும் நிலா வேணி இருவரையும் அழைத்துக் கொண்டு அவர்களது கல்லூரிக்கு கிளம்பினார்கள் அனைவரும் கல்லூரிக்கு செல்லும் பொழுது மகா எழில் வருண் இன்னும் அவர்கள் துறையில் அவர்கள் கல்லூரியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் அவர்களது துறையில் இருந்து வரும் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் வரவேற்பதற்கு வாசலில் நின்று கொண்டிருந்தார்கள் ……
அனைவரையும் வரவேற்றார்கள் பிறகு மகாவும் அனைத்து மாணவர்களும் பெற்றவர்களையும் வரவேற்று அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தாள் அதேபோல்தான் தங்கள் வீட்டில் இருந்து வந்திருப்பவர்களையும் பார்த்து வாங்க மேடம் வாங்க சார் என்று சொல்லி அழைத்தால் வேலுவிற்கு சிரிப்பே வந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும் எத்தனை நாட்களாக மாமா அப்பா என்று அழைத்தவள் இப்பொழுது சார் மேடம் என்று அழைக்கிறாள் என்று எண்ணினார்….
பிறகு தனது மருமகள் மகாவையே பார்த்துக்கொண்டு இருந்தார் நிலா தனது மாமாவின் தொடையில் லேசாக கிள்ளினாள் என்ன நிலா என்று கத்தினர் மாமா இப்போது அவள் உங்கள் மருமகள் இல்லை என்னோட மேம் அதனால உங்க பாசத்தை வீட்டில் சென்று வச்சுக்கோங்க என்றவுடன் வேலு சிரித்தார் பிறகு நிலா கல்லூரியின் முதல் மதிப்பெண் என்றவுடன் அவளை மேடைக்கு அழைத்து அவளுக்கு சர்டிபிகேட் கோல்ட் மெடல் அனைத்தும் கொடுக்கப்பட்டது ….
பிறகு வந்தவர்களுக்கு மதிய உணவும் போடப்பட்டது கல்லூரியில் வேலை செய்யும் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது நிலாவிடம் மேற்கொண்டு என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டார்கள் நிலா ஒரு நிமிடம் எழிலை பார்த்துவிட்டு நிமிர்ந்து நின்று நான் மேற்கொண்டு எம் பீல் வீட்டில் இருந்தபடியே படிப்பதற்கு போட்டுவிட்டு லேப் தனியாக வைத்து என்னுடைய கனவை நினைவாக வேண்டும் என்று இருக்கிறேன் என்றால் ….
அங்குள்ள அனைவரும் கரங்களும் கர தோஷம் எழுப்பியது ஒரு சில பெற்றவர்கள் அப்படி என்றால் என்ன என்று புரியாமல் தனது பிள்ளைகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்கள் இந்த பெண்ணால் இதை சாதிக்க முடியுமா என்றும் ஒரு சிலர் பேசினார்கள் ஆனால் ஆசிரியர்கள் அனைவரும் நிலாவை ஊக்குவித்தார்கள் ஒவ்வொரு துறையிலும் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இரண்டாம் மதிப்பெண் எடுத்த மாணவர்களை கூப்பிட்டு பரிசு வழங்கினார்கள் ….
பிறகு வேணியின் முறையும் வந்தது வேணியின் துறை எச்ஓடி பேச ஆரம்பித்தார் நான் இந்த பொண்ணை பற்றி பேச விரும்புகிறேன் இந்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டது அது இந்த கல்லூரியில் உள்ள எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் இவ்வளவு நேரம் பேசிய அனைத்து மாணவர்களில் யாருக்கும் திருமணம் ஆகவில்லை ஆனால் இந்த பெண்ணுக்கு சூழ்நிலையில் தான் திருமணமும் ஏற்பட்டது …..
இந்த பெண் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு படிப்பிலும் முன்னேறி இருக்கிறாள் இதுவரை இந்த பெண் எடுத்த சதவீத மதிப்பெண்ணை விட இப்பொழுது அதிக மதிப்பெண் எடுத்து எங்கள் துறையில் இரண்டாவது மாணவியாக வந்திருக்கிறாள் என்றவுடன் ஒரு சில பெண்களின் கண்களில் இருந்து நீர் வழிந்தது அனைவரும் கை தட்டினார்கள் முகிலுக்கு சந்தோஷமாக இருந்தது …
வேணி அங்கு நின்று முகிலை பார்த்துவிட்டு தனது எச்ஓடியிடம் சார் ஒரு நிமிடம் நான் பேசலாமா என்று கேட்டால் அவரும் பர்மிஷன் கொடுத்த பிறகு நான் எனது கணவனின் கையால் இந்த பரிசை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்றால் வீட்டில் உள்ள அனைவரும் இதை எதிர்பார்க்கவில்லை அப்போது நிலா தான் ஹோ புருஷன் கையால் கொடுத்தால் தான் மேடம் வாங்கிக் கொள்வார்களோ என்று கமெண்ட் அடித்தால்….
அப்பொழுது எழில் தான் அகல் நிலா செட்டப் என்றவுடன் நிலா எழிலை பார்த்து வாயை கோணித்து காண்பித்து விட்டு அமைதியாகிவிட்டால் வீட்டில் உள்ள அனைவரும் சிரித்தார்கள் நிலாவைப் பார்த்து நிலா அனைவரையும் பார்த்து முறைத்தாள் இப்படித்தான் கல்லூரியில் இருவருக்கும் முட்டிக் கொள்ளும் போல எழில் எப்படித்தான் இவளை சமாளிக்கிறானோ நிலா கல்லூரியில் இப்படித்தான் வால்த்தனம் செய்வால் போல என்று இனி வாய் விட்டே சொன்னால் …..
இனியை நிலா முறைத்துப் பார்த்தால் இனி சிரித்தால் பிறகு முகில் மேடை ஏறி வேணிக்கு கல்லூரியில் கொடுக்கும் பரிசை வழங்கினான் பிறகு இருவரும் ஜோடியாக கீழே இறங்கினார்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் அவ்வளவு ஆனந்தமாக இருந்தது வேணி முகில் இருவரும் கீழே இறங்கி வரும்போது தான் மகிழ் அவர்கள் கல்லூரிக்குள் வந்தான் நிலா பரிசு வாங்கும் பொழுது மகிழ் இல்லை நிலா மேடை ஏறும் போது ரொம்ப நேரமாக மகிழை எதிர்பார்த்து வாசலையே பார்த்துக் கொண்டிருந்தால் …..
ஆனால் அவன் வரவில்லை தான் பரிசு வாங்கும்போது தனது மகிழ் மாமா இல்லை என்று நிலா மகிழிடம் கோபித்துக் கொள்வாளா அதற்கு மகிழ் என்ன காரணம் சொல்வான் என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ….
அன்புடன்
❣️தனிமையின் காதலி❣️
NICE EPI