Skip to content
Home » மகாலட்சுமி 62

மகாலட்சுமி 62

இனி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டில் உள்ள அனைவரும் வீட்டிற்கு சென்றார்கள் அனைவரும் வீட்டிற்கு சென்று இறங்கியவுடன் 10 நிமிடங்கள் ஆகியும் காவேரி வெளியில் வரவில்லை …

இனி மகாவை பார்த்தால் மகா உள்ள சென்று ஆரத்தி கரைத்து வருவது போல் தெரியவில்லை என்று அமைதியாக இருந்தால் பத்து நிமிடங்களுக்கு பிறகு நிலா தான் வீட்டிற்குள் சென்று ஆரத்தி கரைத்துக் கொண்டு எடுத்து வந்தால் பிறகு ஆரத்தி சுற்றினால் அனைவரும் வீட்டிற்குள் சென்றவுடன் அப்பொழுதும் காவேரி அவரது அறையில் தான் இருந்தார் …

இனி தான் குழந்தையை தூக்கி கொண்டு தனது அத்தை காவேரியின் அறைக்கு சென்றாள் அவள் குழந்தையை தூக்கி கொண்டு வருவதை பார்த்தவுடன் வேகமாக எழுந்து வந்து குழந்தையை வாங்கினார் …

இவர்கள் வரும் சத்தம் அவருக்கு கேட்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் அவர் ஏதோ நினைவுகளில் இருந்ததால் இவர்கள் வந்ததை உணரவில்லை குழந்தையை வாங்கிவிட்டு இனி நெற்றியில் முத்தம் வைத்தார் முதலில் இனி இடம் தான் உனக்கு உடம்பு எப்படி இருக்கிறது என்று கேட்டார் …

இனி எதுவும் பேசாமல் தனது அத்தை காவேரியை பார்த்துக்கொண்டு இருந்தால் அவரும் எதுவும் பேசாமல் இனியையும் அழைத்துக் கொண்டு குழந்தையையும் தூக்கிக்கொண்டு வரவேற்பறைக்கு வந்தார் அனைவரும் வீட்டில் இருப்பதை பார்த்துவிட்டு தனது அம்மா அப்பா இருவரிடமும் வந்து நின்றார் …

இருவரும் தனது மூத்த மகள் காவேரியை பார்த்துக் கொண்டிருந்தார்கள் இந்த குழந்தையை நீங்கள் நன்றாக பார்த்துக் கொள்வீர்கள் என்று எனக்கு தெரியும் அந்த நம்பிக்கையில் தான் நான் ஒரு முடிவு எடுத்துக் இருகிறேன் என்றார் வீட்டில் உள்ள அனைவருக்கும் இவர் அப்படி என்ன செய்யப் போகிறாரோ என்று அதிர்ச்சியாக இருந்தது ….

அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள் பாண்டியம்மா பாட்டி எதுவும் பேசாமல் தனது மகள் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக அமைதி காத்தார் காவேரியே நானும் என் கணவரும் இந்த வீட்டை விட்டு செல்லலாம் என்று இருக்கிறேன் என்றார்…

அப்பொழுது இனி தான் அத்தை என்று கத்தினால் ப்ளீஸ் இனி என்றார் அவள் அருகில் சென்று விட்டு நாங்கள் இந்த வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர்கள் நான் இந்த வீட்டில் வாழ வந்தவள் இல்லையே நான் வாழ சென்ற வீடு வேறு நாங்கள் தான் இந்த வீட்டில்  இத்தனை காலங்கள் ஒட்டிக்கொண்டு வாழ்ந்து விட்டோம் என்றார்….

அவர் அவாரு சொன்னவுடன் மகா தான் வேகமாக கத்தினாள் யாரும் இந்த வீட்டில் ஒட்டிக்கொண்டு வாழவில்லை இந்த வீடு இங்கு இருக்கும் அனைவருக்கும் சொந்தமானது தான்  என்று விட்டு தனது மகிழ் மாமாவை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு நானும் மகிழ் மாமாவும் இந்த வீட்டை விட்டு சென்று விடுகிறோம் நாங்கள் இருவரும் செய்ததுதான் தவறு …

எங்களால் இந்த வீட்டில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் இந்த வீட்டின் உறவையே முறித்துக் கொண்டு வாழ்கிறாள் அதை எப்படி சரி செய்வது என்றே எங்களுக்கு தெரியவில்லையே அதானால் இன்னொரு பாவத்தையும் நாங்கள் செய்ய விரும்பவில்லை அதற்காக நாங்கள் இந்த வீட்டின் உறவை முழுவதாக முறித்துக் கொள்ளவும் முடியாது…

நாங்கள் இருவரும் வீட்டை விட்டு செல்கிறோம் ஆனால் மேலே மொட்டை மாடியில் இருக்கும் அறையில் தங்கிக் கொள்கிறோம் நாங்கள் இங்கு இருக்கிறதால் இங்கு இருக்கும் யாரிடமும் உறவு கொள்ள மாட்டோம் எங்களை நம்பலாம் என்று விட்டு மகிழை பார்த்தால் …

அவன் அமைதியாக மகாவையே பார்த்துக்கொண்டு இருந்தான் வேணி என்று கூப்பிட்டால் வேணி மேலே அனைத்தும் ரெடி செய்து விட்டேன் அண்ணி என்றாள்  நீங்கள் இருவரும் மேலே செல்லுங்கள் என்றவுடன் மகா தனது தாத்தா பாட்டி இருவரையும் பார்த்துவிட்டு உங்கள் இருவரையும் நம்பி தான் செல்கிறேன் என்பது போல் அவர்களிடம் கண் காண்பித்து விட்டு மகிழ் கையைப் பிடித்து அவனை அழைத்துக் கொண்டு மொட்டை மாடியில் இருக்கும் அறைக்கு சென்றால் …

மொட்டை மாடியிலும் இரண்டு அறைகள் கொண்டது போல் இருக்கும் ஆனால் அங்கு கிச்சன் மற்றபடி வேறு எதுவும் இருக்காது  இரண்டரைகள் அந்தந்த அறையில் பாத்ரூம்  இருக்கும் அங்கு தான் மகா மகிழ் இருவரும் தங்க செல்கிறார்கள் மகா மருத்துவமனையில் இருக்கும் பொழுதே தனது பெரியம்மா வீட்டிற்கு சென்றவுடன் வேணியிடம் நீ வீட்டிற்கு சென்று எங்களுக்கு என்று மேலே மொட்டை மாடியில் தங்க  அனைத்து ஏற்பாடு செய் என்று சொன்னால் …

அப்பொழுது கூட வேணி எதற்காக அண்ணி என்று கேட்டால் எப்படியும் பெரியம்மா  இந்த முடிவு  தான் எடுப்பார் எங்களுக்காக பெரியம்மா வெளியே செல்வதை நாங்கள் எப்பொழுதும் விரும்ப மாட்டோம் சொன்னாலும் சொல்ல விட்டாலும் எங்கள் மீது தான் தவறு இருக்கிறது …

நாங்கள் இருவரும் அனைவரையும் விட்டுவிட்டு வீட்டை விட்டும் செல்ல இயலாது ஆனால் மொட்டை மாடியில் தங்கிக் கொள்ளலாம் அதனால் தான் என்றவுடன் வேணிக்கும் அதுவே சரி என்று பட்டதால் சரி அண்ணி என்று விட்டு வீட்டிற்கு சாப்பாடு செய்ய சென்ற வேலையில் மகிழ் மகா இருவரும் தங்குவதற்கான எல்லா ஏற்பாடும் செய்து விட்டு வந்திருந்தால் ….

வீட்டில் உள்ள யாருக்குமே இவள் இப்படி ஒரு ஏற்பாடு செய்திருக்கிறாள் என்று தெரியாது இப்பொழுது மகா சொன்ன பிறகுதான் அனைவருக்கும் தெரியும் வேணி ஒவ்வொரு பொருளாக மேலே எடுத்துக் கொண்டு சென்றாள் மகா கொஞ்சம் பணமும் கொடுத்திருந்தால் மளிகை சாமான் காய்கறிகள் வாங்குவதற்கு சுந்தரி கோதை என அனைவரும் வேணி எடுத்துக்கொண்டு செல்லும் பொருட்களை பார்த்தார்கள்…

மகா அப்பொழுது ஏற்கனவே முடிவு செய்து தான் இருக்கிறாள் என்றும் உணர்ந்தார்கள் ஆனால் வேணி இடம் இந்த பொருட்கள் எப்படி வந்தது என்றும் கேட்கவில்லை இந்த முடிவை எப்போது எடுத்தீர்கள் என்றும் கேட்கவில்லை அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்தார்கள் …

கருப்பையா தாத்தா அமைதியாக அங்குள்ள சோபாவில் உட்காருந்தார் வேலு தனது அப்பாவின் அருகில் உட்கார்ந்தார் வீட்டில் உள்ள அனைவரும் அமைதியாக இருந்தார்கள் காவேரி எதுவும் பேசாமல் அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு நான் இப்பொழுதும் சொல்கிறேன் நானும் என் கணவரும் இந்த வீட்டை விட்டு சென்று விடுகிறோம் என்றார் ….

அப்போது கந்தன் ஒரு முடிவெடுத்துவராக காவேரி நான் எங்கும் வருவதாக இல்லை இந்த வீடு நீ பிறந்து வளர்ந்த வீடாக இருக்கலாம் ஆனால் இந்த வீட்டிற்கு நான் வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது இந்த வீட்டில் உள்ள அனைவரும் நம் குடும்பத்தினர்கள் தான் …

அது தான் மகா மகிழ் இருவரும் மாடிக்கு சென்று விட்டார்களே அதன் பிறகு உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டார் காவேரி தனது கணவனையே பார்த்துக் கொண்டிருந்தார் ஏன் உங்களால் என்னை வைத்து சோறு போட முடியாதா என்று கேட்டார் ….

கந்தன் சிரித்துக் கொண்டே இருந்தார் பாண்டியம்மா பாட்டி தான் என்னடி பேச்சு இது உன் புருஷனை பார்த்து என்று கேட்டார் அத்தை நீங்கள் கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள் என்று தனது மாமியாரான பாண்டியம்மாவிடம் கந்தன் சொல்லிவிட்டு காவேரி என்னால் இந்த வயதிலும் உன்னை தனியாக அழைத்துக் கொண்டு சென்று சோறு போடும் அளவிற்கு எனக்கு வருமானம் இருக்கிறது….


நான் இல்லை என்று சொல்லவில்லை உடலில் தெம்பும் இருக்கிறது ஆனால் இந்த வீட்டை விட்டு என்னால் வர முடியாது என்றார் காவேரி தனது கணவனை முறைத்துவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு அவரது அறைக்குச் சென்று விட்டார் இனி தனத்தை குழந்தை அழுதால் தூக்கிக்கொண்டு வருவார் என்று எண்ணிவிட்டு அவளது அறைக்கு சென்று விட்டாள் …

கந்தன் தனது மனைவி சென்றவுடன் உட்கருந்து அழுதார். கந்தன் இடம் மகா ஏற்கனவே சொல்லி இருந்தால் வேணியுடன் சொன்னது போல் மருத்துவமனையில் இருந்து தனது பெரியம்மா மட்டும் சென்றவுடன் அனைவரும் இனி மற்றும் குழந்தையை பார்த்துவிட்டு வந்த பிறகு தனது பெரியப்பாவை தனியாக அழைத்து பெரியம்மா எப்படியும் இந்த முடிவை தான் எடுப்பார்கள் .,

நீங்கள் அவர்கள் சொல்லும் அனைத்திற்கும் சரி என்று சொல்லாமல் இந்த வீட்டை விட்டு செல்ல மாட்டேன் என்று சொல்ல வேண்டும் நானும் மகிழ் மாமாவும் சென்று விடுகிறோம் என்று சொன்னால் என்ன மகா பேசுகிறாய் என்று கேட்டார் கந்தனிடம் எவ்வளவோ சொல்லி தான் சமாளித்தால்…

அவரும் சரி என்ற பிறகுதான் வேனியிடம் கூறி அனைத்து ஏற்பாடுகளையும் செய்தால் இப்பொழுது வீட்டில் உள்ள பெரியவர் சிறியவர் அனைவருக்கும் எப்படியாக இருந்தாலும் இருவரும் மொட்டை மாடியில் தானே இருக்கிறார்கள் என்று எண்ணிவிட்டு அமைதியாக அவரது அறைக்குச் சென்று விட்டார்கள்….

சுந்தரி அமைதியாக உட்கார்ந்து விட்டார் கோதை தான் வந்து சுந்தரி தோளில் தொட்டார் சுந்தரி கோதையை பார்த்து அழுது கொண்டே இருந்தார் ஏன் டி உனக்கு ஒரு துளி கண்ணீர் கூட வா வரவில்லை என்று கோதையை பார்த்து கேட்டார்…

கோதை சிரித்துக் கொண்டே அண்ணி உங்களுக்கு உண்மையாகவே மகா மகிழ் இருவரும் விரும்புவது தெரியாதா என்று கேட்டார் சுந்தரி அதிர்ச்சியாகி எழுந்து நின்றார் கோதை என்று உண்மையை சொல்லுங்கள் அண்ணி உங்களுக்கு தெரியாதா என்றுடன் தெரியும் என்று மண்டை ஆட்டினார் ….

அண்ணி தெரிந்து கொண்டே தான் நீங்கள் இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்தீர்களா என்று கேட்டார்  சுந்தரி கோதையை முறைத்துவிட்டு உன் மகள் என்னிடம் எப்போது சொன்னால் என்று உனக்கு தெரியுமா அதற்குள் நான் என்ன மறைத்து விட்டேன் என்று சொல்கிறாய் என்று கேட்டார்…

அண்ணி அவர்கள் எப்பொழுது சொன்னதாக கூட இருக்கட்டும் நீங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி இருக்கலாம் அல்லவா இப்பொழுது எந்த அளவிற்கு பிரச்சினை ஆகி இருக்காதே என்று கேட்டார் சுந்தரி  கோதையை முறைத்து பார்த்துக் கொண்டே நான் சொல்லாமல் விட்டதால் தான் இப்பொழுது இவ்வளவு பிரச்சினையுமா என்று கேட்டார் …

அண்ணி நான் அப்படி சொல்லவில்லை தவறு இருவர் மீதும் இருக்கிறது ஆனால் பெரியவர்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும் போது நீங்கள் சொல்லி இருக்கலாமே என்று கேட்டார் திரும்பத் திரும்ப அதையே சொல்லாத கோதை மகா என்னிடம் அவளுடைய விருப்பத்தை சொல்லும் நேரம் எது என்று உனக்கு தெரியுமா….

கயல் மகிழ் வேண்டாம் என்று சொல்லி அன்புவை திருமணம் செய்து சென்ற பிறகு கயலுக்கு திருமணமே ஆகிய பிறகு மகா மகிழ் இருவருக்கும் நாளை திருமணம் என்று இருக்கும் வேளையில் அன்று நாம் மண்டபத்திற்கு செல்வதற்கு முன்புதான் மகாவே அவளுடைய நேசத்தை என்னிடம் சொன்னால் ….

அந்த நேரத்தில் நான் என்ன செய்வேன் என்று நீ யோசி மண்டபத்திற்கு அனைவரும் செல்லும் வேளையில் என்னை தனியாக அழைத்துச் சென்று சொன்னால் அந்த நேரத்தில் என்னால் வீட்டில் உள்ள அனைவரிடமும் இதை சொல்லக்கூட முடியவில்லை அப்படியே கயலும் இவர்களால் தான் இப்படிப்பட்ட ஒரு சூழலில் திருமணம் செய்து கொண்டால் என்றும் சொன்னாள்….

நான் அந்த நேரத்தில் என்ன முடிவு எடுத்திருக்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை நீ அந்த இடத்திலிருந்து இருந்தால் என்ன செய்திருப்பாய் என்று கேட்டார் கோதை தனது அண்ணியை பார்த்துக் கொண்டு இருந்தார் அவரால் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று கூட யோசிக்க முடியவில்லை ….

தன்னுடைய மகள் இப்படி ஒரு சூழ்நிலையில் தனது அண்ணியை வந்து நிறுத்தி இருப்பாள் என்றும் அவர் என்னவில்லை தங்களிடம் சொல்லாத விஷயங்கள் கூட தனது அண்ணியிடம் தனது மகள் சொல்வாள் என்ற தைரியத்தில் தான் இப்பொழுது கேட்டார் ஆனால் அவள் அவரிடமே இப்படி ஒரு இக்கட்டண சூழ்நிலையில் வந்து தான் தனது விருப்பத்தை சொல்லியிருப்பாள் என்று கோதை எண்ணவில்லை …..

இப்பொழுது தனது அண்ணியை பாவமாக பார்த்தார் சுந்தரி அழுகையும் சிரிப்பும் ஆக சிரிக்க செய்தார் அவரது சிரிப்பில் உயிர்பு இல்லை காவேரிக்கு சுந்தரிக்கு ஏற்கனவே தெரியும் என்று உண்மை தெரிந்தால் வீட்டில் இன்னும் பெரிதாக பூகம்பம் வெடிக்குமா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …

அன்புடன்

❣️ தனிமையின் காதலி❣️

2 thoughts on “மகாலட்சுமி 62”

  1. CRVS2797

    ஆக மொத்தம், எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயத்தை வைச்சுக்கிட்டு எதுக்கு தான் தினம், தினம் ஒரு சண்டை, சச்சரவை வளர்த்துட்டே இருக்கிறாங்களோ தெரியலை…???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *