மண்டேலா
சில படங்கள் நடிகர்களுக்காக பார்ப்பது. சில படங்கள் டேரக்டருக்காக, சில படங்கள் இசைக்காக, சில படங்கள் நாயகிக்காக பார்ப்போம்.
இந்த மண்டேலா படம் யோகிபாபுவிற்காக பார்த்தேன்.
செம ஹாட்டா ஹான்ட்சமா, ஸ்மைல்-ல, அட்ராக் ஐஸ்ல, இப்படி சில நாயகன் நாயகி நம்ம இதயத்தை களவாடுவாங்க.
ஆனா யோகிபாபு ஜஸ்ட் லைக் தட் வார்த்தையால படத்தை பார்க்க வைப்பார். லைக் கோலமாவு கோகிலா, தர்மபிரபு இந்த இரண்டும். இவர் ஹீரோவா நடிச்சதுல எனக்கு ரொம்ப பிடிச்சது. அந்த வரிசையில மண்டேலா படமும் அணிவகுத்துவிட்டது.
யாரெல்லாம் சர்கார் படம் பார்த்து விஜயோட ஒரு விரல் புரட்சியே பாடி ஒர் வோட்டோட வேல்யூ தெரிந்து அந்த படத்தை பற்றி பேசியிருப்பிங்க.
இந்த கதையும் ஒரு வோட்டோட தரத்தை தான் கூற வருது. கிராமத்துல முடிதிருத்தம் செய்து தனக்கு வீடோ, இருப்பிடமோ இல்லாதவனின் கதை.
முக்கியமாக பெயர் கூட அறிந்திடாதவனின் கதை.
தனக்கு பண்ணி, இளிச்சவாயா, எருமை இப்படியான பெயரால தான் ஊர்மக்கள் அழைத்து வேலை வாங்கி உணவை கூட வீட்டுக்கு வெளியே தந்து விரட்டுறாங்க. எல்லாமே ஒரே பையில வாங்கிட்டு அரிசி தனியா பருப்பு தனியா என்று பிரிச்சி எடுக்குறார். அது மனதை வதைக்குது.
சிலர் வேலை செய்தா கொடுக்குற பணம். அந்த இருக்குற கொஞ்ச பணமும் தான் தங்கிருக்குற மரத்துல சொருகி வைக்க அது களவாடப்படுகின்றதென்று ஊரில் உள்ள தபால் அலுவலகம் செல்கின்றான் இளிச்சவாயன்.
நாயகி நடைமுறையில தபால் விதிமுறையான நாயகனுக்கு பெயர் இருந்தா தான் தபால்ல பணம் போட்டு வைக்க முடியும். உன் பெயர் என்ன அட்ரஸ் என்னனு கேட்க பெயரு… தெரியலையேனு சொல்லறான். அட்ரஸும் தான் தங்கிருக்குற மரத்தை தான் சொல்லறார்.
ஊர்ல இளிச்சவாயன் சொல்லி சொல்லி பெயரே தெரியாதவனுக்கு அவளாகவே மண்டேலா பெயரை வைக்கின்றாள்.
அன்றிலிருந்து மண்டேலா என்று அழைக்கப்படும் நாயகனுக்கு ஓட்டு ஐடி எடுக்க அழைத்து சென்று ஓட்டு ஐடிக்கு புகைப்படம் எடுக்கின்றாள்.
கிராமத்தில் புருஷன் மீதும், தாலி கொடி மீதும், குழந்தை மீதும் சத்தியம் வாங்கி இரு அரசியல் ஆட்களும் ஓட்டை முன்கூட்டியே கணித்து யார் வெற்றி பெறுவார்கள் என்று யூகிக்க இருவரும் சரிவிகித ஓட்டு எண்ணிக்கை தெரியவருகிறது.
கிராமத்தில் குறைந்த வீடும் குறைந்த மக்களும் இருக்கும் சூழ்நிலையால் மனித தலைகள் கணக்கெடுக்கப்படுகின்றது. (இது அந்த கால கதை போல இருக்கு. அதாவது ஓட்டு மெஷின் இல்லை அச்சுல போட்டு மடித்து போடும் விதமாக)
ஈகுவள் ஓட்டு இருக்கும் பட்சம் தங்கள் கட்சி ஜெயிக்க யாரேனும் விடுபட்டதாக இருக்க தேட யாரும் இல்லை. அந்த நேரம் மண்டேலா என்ற இளிச்சவாயனுக்கு ஓட்டு உரிமை தபால் மூலமாக வர, அவனை இருகட்சிகள் ஈக்கள் போல மொய்கின்றனர்.
முதலில் ஓட்டு ஐடி எனக்கெதுக்கு என்று விட்டேர்த்தியாக இருக்கும் மண்டேலா அரசியலில் இரு கட்சி ஆட்களும் உனக்கு முகத்திருத்தம் பார்க்க கண்ணாடி தருகின்றேன் நான் என்று வருகின்றான். மற்றொருவன் (சேர்)இருக்கை தருகின்றேன் என்று மாற்றி மாற்றி மண்டேலாவுக்கு வீடு முகத்திருத்தம் கடை, ஆடை, வாட்ச், மோதிரம் செருப்பு என்று இத்யாதியை அள்ளி வழங்குகின்றனர்.
ஒரு கட்டத்தில் ஏன் தருகின்றார்கள்? ஒரு ஓட்டுக்கு இத்தனை அலப்பறையா என்று சிந்திக்க இரு கட்சியில் எதுவந்தாலும தொழிற்சாலை வருவதும் அதனால் பெறும் பணமும் சேரும் அப்பொழுதைய அரசியல் தலைகள் இழந்த பணத்தை விட அதிகம் சம்பாரிக்கலாமென்ற திட்டமே ஒரு ஓட்டுக்கு அத்தனை வசதி செய்து தருகின்றனர்.
மண்டேலாவாகிய யோகிபாபு கதையில் காமெடியும் சிந்தனையும் கலந்து கொடுக்க என்னால முடிவெடுக்க முடியலை. எந்த கட்சி சிறந்ததுனு முடிவெடுக்க முடியலை என்று கூறி கூறியே உட்கார்ந்த இடத்தில் சோறு இலவசமாக அனைத்தும் பெற கூடயிருந்த சிறு பையனுக்கு உழைக்காமல் சாப்பிட பிடிக்காமல் விலகுகின்றான்.
மண்டேலா(யோகிபாபு) மற்றவரை மதிக்காது நடத்த ஒரு கட்டத்தில் கடுப்பான அரசியல் கட்சிகள் இருவரும் எதையும் தராது கட்டிய வீட்டை இடிக்கின்றனர். தீ வைத்து கொளுத்துகின்றனர். யாரு உணவு வழங்க மறுத்து சாப்பிட முடியாது கவலைப்படுகின்றான் மண்டேலா.
நாயகியும் திட்டி தீர்த்து உனக்கெல்லாம் மண்டேலா பேரு வச்சேன் பாரு. இலவசத்தை வாங்கிட்டு உழைக்காம சுத்தற. என்னிடம் பேசாதே என்று கடந்திட மண்டேலாவின் தவறு அவனுக்கு புரிகிறது. ஒரு ஓட்டும் அதற்கான மதிப்பும் அறிந்திடுகின்றான்.
முன்பு போல யாரிடமும் பணமோ உணவோ பெறாது தவிக்க தன்னிடம் இருக்கும் சிறுவனுக்கு அடிப்படவும் மீண்டும் அரசியல் ஆட்களிடம் உனக்கு ஓட்டு போடறேன் இந்த பையனை காப்பாத்துனு துடிக்கின்றான்.
கை விரித்த இரு அரசியல் கட்சிகளும் மீண்டும் உதவுகின்றது. பையனை மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.
இம்முறை எனக்கு தண்ணீர் வேண்டும் என்று நீச்சல் குளம் போல கட்டி கேட்டு வாங்குகின்றான். ஊரில் அனைவருக்கும் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க.
மலம் கழிக்க இரவில் பெண்கள் அல்லல்படவும் பொது கழிப்பிடம் கட்ட சொல்கின்றான். ரோடு போட கூறுகின்றான். ரோட்டில் பாதை தெரிய விளக்கு கம்பம் போட கூறுகின்றான். மாறி மாறி இரு அரசியல் கட்சிகளும் ஒருவர் மாற்றி ஒருவர் அதனை செய்து கொடுக்கின்றனர்.
இலவசத்தை மறுக்கின்றான் மண்டேலாவை பார்த்து மற்ற மக்கள் முன்பு திட்டினார்கள். இன்றோ கொஞ்சம் கொஞ்சமாய் யோசித்தனர்.
ஓட்டு போடும் நேரமும் வந்தது.
“யாருக்கு ஓட்டு போடுவ?” என்று இரு கட்சி அரசியல்வாதியும் வழிமறைத்து கேட்கின்றனர்.
“என் ஓட்டு நான் யாருக்கு வேண்டுமென்றாலும் போடுவேன். அதை உனக்கு சொல்ல முடியாது” என்று திமிராக(கெத்தாக) கூறி ஓட்டு போட்டு வருகின்றான் மண்டேலா.
யார் ஜெயித்தாலும் தோற்ற அரசியல் கட்சி மண்டேலாவை சாகடிக்க திட்டமிடுகின்றது.
இரு அரசியல் கட்சி ஆட்களின் அடியாட்களும் மண்டேலாவை கொள்ள காத்திருக்கின்றனர். யார் ஜெயிக்கின்றனர் என்பதும் மண்டேலா யாருக்கு ஓட்டு போட்டிருப்பார் என்பதும் ரகசியமாக நமது கற்பனைக்கு விட்டிருப்பார் கதையை இயக்கியவர்கள்.
எப்படி ஓட்டு ரகசியமாக்கப்பட்டதோ அதே போல மண்டேலாவை சாகடிக்க வந்தவருக்கும் எதிராக ஊரில் இருப்பவர்கள் வரிசையாய் முடித்திருத்தம் சேவிங் என்று வரிசையாய் பாதுகாப்புக்கு வந்து நின்று மண்டேலாவை காத்திடுகின்றனர்.
ஒரு காலத்தில் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்க கூடாதென்று புறவாசல் வழியாக சோற்றை கொடுத்து அனுப்பியவர்கள், மண்டேலாவின் இலவசத்தை புறக்கணித்து நல்லது செய்ய ஆரம்பிக்கவும் மண்டேலா கேட்காமலே பாதுகாப்புக்கு வந்து நின்றது அருமையோ அருமை.
நகைச்சுவையோடு யோகிபாபுவிற்காகவும் கதைக்காகவும் பார்க்கலாம்.
மாஸ் காட்டலை, டூயட் இல்லை, அணல் தெறிக்கும் வசனமில்லை, அழகான நாயகி இல்லை(அழகா தான் தெரியறாங்க) மிகவும் இயல்பாய் இருந்தது.
நான் ரசித்தவை Netflix இருக்கு.
நன்றி
பிரவீணா