Skip to content
Home » மனம் உன்னாலே பூப்பூக்குதே 9

மனம் உன்னாலே பூப்பூக்குதே 9

பூ 9

திருச்சி செல்ல ஏர் பஸ் ஏறி அமர்ந்துவிட்டனர் கோகுல கிருஷ்ணனும் ஆருத்ராவும். வீட்டில் கார் இருந்தும் திருமணமான புதிதில் தனித்து காரில் செல்வது வேண்டாம் என்று தடுத்தது சுபாஷிணி தான்.

அவர் கூறிய காரணம் ‘கண்ணேறு பட்டிருக்கும் நேரத்தில் தொலைதூர பயணம் செய்வது ஆகாது’ என்றும், தேவைப்பட்டால் டிரைவர் போட்டுக் கொண்டு போகும்படி கூற,

ஏற்கனவே இருவரும் சரியாகப் பேசிக்கொள்வதில்லை இதில் இடையில் மூன்றாவது மனிதரை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று எண்ணி, அதை வேண்டாம் என்று சொல்லி பஸ்ஸில் டிக்கெட் போட்டுவிட்டான் கோகுல்.

திருச்சி பஸ் ஏறி அமரும் வரையில் இருந்த ஆருத்ரா வேறாகவும் பேருந்து நகர துவங்கியதும் தன் அருகே அமர்ந்திருக்கும் அவள் வேறொருவராகவும் தோன்றத் துவங்கியது கோகுலகிருஷ்ணனுக்கு.

இந்த சில நாட்களில் அவள் சிரித்து பார்த்திருக்கிறான் தான். ஆனால் அவள் முகத்தில் இத்தனை மகிழ்ச்சியை அவன் கண்டதில்லை கண்ணாடி சொன்னால் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவள் முகத்தில் அத்தனை இன்பம். உதடுகள் நீண்டு, விரிந்து தன் மகிழ்ச்சியை தயக்கமின்றி வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

ஈரமான, மெத்தன்று மென்மையை பறைசாற்றிய அவ்விதழ்களை முதல் முறையாக வித்தியாசமாகப் பார்த்தான் கோகுல்.

இந்த சில நாட்களில் அவள் அருகில் அமர்ந்திருக்கிறான் தான். அணைத்துக் கொண்டும் இருக்கிறான். ஆனால் அப்போதெல்லாம் தோன்றாத ஏதோ ஒரு உணர்வு, மகிழ்ச்சியில் விரிந்திருக்கும் அச்செவ்விதழ்களை கண்டபோது உள்ளத்தில் ஏதோ நகர்ந்தது.

இன்றுவரை இந்த திருமணத்திற்கு இவள் எப்படி சம்மதித்திருக்க கூடும் என்று எண்ணிக் கொண்டிருந்தவன், அதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு என் மனைவி தானே என்று அவளை சைட் அடிக்க ஆரம்பித்தான்.

அவ்ளோ தன் அருகில் ஒருவன் அமர்ந்து தன்னையே வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருப்பதை அறியாதவளாக வெளியே தெரியும் ஜனத்திரளை வேடிக்கை பார்த்துக் கொண்டும், தான் திருச்சி செல்ல இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியை தயக்கமின்றி வெளிப்படுத்திக் கொண்டும் வந்தாள்.

சற்று நேரம் பொறுமையாக இருந்தவன் அதற்கு மேலும் அமைதியாக இருக்க விரும்பாமல் அவளை அழைக்க எண்ணினான். ஆனால் அவள் இருக்கும் அந்த மோனநிலையை அவன் கலைக்க விரும்பவும் இல்லை.

‘இதுவும் இல்லாமல் அதுவும் இல்லாமல் இது என்ன திருசங்கு சொர்க்கம் போல திண்டாட்டம்’ என்று மனதிற்குள் நினைத்தாலும் ஏனோ அவளை ரசிப்பதை அவன் நிறுத்தவில்லை.

அவன் அவளையே ஆவென்று பார்த்திருக்க அவன் கையில் இருந்த ஐஸ் வாட்டர் பாட்டில் உருண்டு அவளது மடியில் சென்று விழுந்தது.
அவள் அணிந்திருந்த லெகின்ஸ் ஈரம் பட்டு தொடையில் சில்லென்ற உணர்வு எழுந்ததும் திரும்பி அதனை நோக்கியவள் அப்போதுதான் தன்னை விளங்குவது போல பார்த்துக் கொண்டிருக்கும் கணவனை கவனித்தாள்.

‘இவர் என்ன இப்படி பார்த்துட்டு இருக்காரு?” என்று அவன் கண் முன்னே தன் கைவிரல்களை அசைத்து அவனை நிலவுலகுக்கு அழைத்து வந்தாள்

“என்ன ஏதோ கனவில் மிதந்து இருக்கீங்க? பஸ்ல போகும்போது பேசலாம்னு சொன்னீங்க? ஒன்னும் பேசாம வர்றீங்க?” என்று அவனிடம் அவள் கேள்வி எழுப்ப,

இத்தனை நேரமாய் உலகை மறந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவள் தன்னை இப்படி கேட்பதை பொறுக்க மாட்டாமல்,

“பராக்கு பாத்துட்டு இருந்தது நீ! என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்த என்ன கேள்வி கேக்குறியா?” என்று விளையாட்டாக அவன் வினவியதும் ‘ஈ ‘ என இளித்து தன் பற்களைக் காட்டினாள்.

“போதும் போதும். என்ன ஒரே சந்தோஷமா வர? என்கிட்ட சொல்ல மாட்டியா?” என்று முதல்முறையாக உரிமையுடன் அவளிடம் கேள்வி எழுப்பினான்.

“அதான் சொன்னேனே. அங்க போய் சொல்றேன்னு. நீங்களும் தான் அங்க இருக்க போற அப்போ சந்தோஷமா இருக்குறதுக்கு கேரண்டி கொடுத்திருக்கீங்க. ஞாபகத்துல வச்சுக்கணும்.” என்று சின்ன குழந்தை தன்னிடம் கொடுத்த வாக்குக்காக மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துதல் போல குழந்தைத்தனமாக பேசினாள்.

“ஓகே ஓகே. நான் பேசணும்னு நினைச்சதை பேசவா? நீ வேடிக்கை பார்க்கிறது எல்லாம் நிறுத்திட்டு கொஞ்சம் கவனமா கேக்குறியா?” என்றான்

மெல்ல அவன் பக்கம் திரும்பி சொல்லுங்க என்று கேட்பதற்கு தயாரான நிலையில் அமர்ந்தாள்.

ஏதோ சொல்ல நினைத்தவன் முதலில் சில சந்தேகங்களுக்கு பதில் தெரிந்து கொள்ளும் நோக்கில்,

“அன்னைக்கு பேசும்போது உன்னை கேட்காமல் உனக்கு ஒரு விஷயத்தை செஞ்சா நீ அதை மறுக்கவும் மாட்ட, அதே நேரம் உனக்கு பிடிக்காதது நீ செய்யவும் மாட்டனு தெளிவா சொல்லிட்ட. அது ஏன் அப்படி? உனக்கு பிடிக்கலைன்னா மறுக்கறதுக்கு உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. மறுக்கலாமே? அதை விட்டுட்டு குடுக்குறவங்க கிட்ட சரின்னு வாங்கிட்டு நீ அதை பயன்படுத்தாம இருக்கிறது தப்பில்லையா?” என்றதும்,

“பேசணும்னு சொன்னீங்க இப்ப கேள்வி கேக்குறீங்க? ஓகே நான் பதில் சொல்றேன்.”என்று இலகுவாக அதனை எடுத்துக் கொண்டவள்.

“இதுக்கு பதில் சொல்லணும்னா நான் ஆரம்பத்தில் இருந்து நிறைய விஷயங்களை உங்களுக்கு சொல்லணும். எங்க அம்மா அப்பா ஒரு நாளும் எனக்கு பிடிக்காதத செஞ்சதில்ல. அதே மாதிரி எனக்கு எது பிடிக்கும் பிடிக்காதுன்னு கேட்காமலும் செஞ்சது இல்ல. அதெல்லாம் கொஞ்சநாள் தானே! அம்மா அப்பா இறந்ததுக்கு அப்புறம் ஒருத்தர் கூட உனக்கு இது பிடிக்குமா? இது வேணுமா அப்படின்னு கேட்டதே இல்லை. என்கிட்ட கேட்காமலே இவளுக்கு இது போதும் அப்படிங்கற எண்ணத்தோடு எனக்கு கொடுக்க ஆரம்பித்தப்ப எனக்கு கொஞ்சம் கொஞ்சமா அது பிடிக்காமல் போச்சு. ஆனால் எனக்குன்னு யாரும் இல்லாத சூழ்நிலையில் ஒருத்தர் கொடுக்கிறத வேண்டாம்னு முகத்தில் அடிச்ச மாதிரி சொல்றது மரியாதை இல்லை என்கிற காரணத்தினால அவங்க கொடுக்கிற மரியாதைக்கு வாங்கிகிட்டாலும் எனக்கு பிடிக்காதத நான் பயன்படுத்த மாட்டேன். எனக்கு இதுல தப்பு இருக்கிறதா தெரியல. அவங்களுக்கு வேண்டாம், இல்ல அவங்களுக்கு பிடிச்சதை கொடுக்க நினைக்கிறவங்க ஒரு நாளும் அது எனக்கு பிடிக்குமான்னு கேட்டதே இல்ல. வாங்கற இடத்துல இருந்து பார்க்கிறவங்களுக்கு தான் அதோட வலி என்னனு புரியும். உங்களுக்கு புரியுமானு எனக்கு தெரியல.” என்று நிதானமாக கூறினாள்.

“நீ என்ன உனக்கு யாரும் இல்லைன்னு சொல்ற? நீ வாங்குற இடத்துல இருந்ததா சொல்ற? உனக்கு உன் பாட்டி இருந்தாங்க அவங்க உனக்கு எல்லாமே செஞ்சாங்க. அப்படி இருக்கும் போது நீ இப்படி சொல்றது முரண்பாடா உனக்கு தெரியலையா?”

“பாட்டி இருந்தாங்க பாட்டி செஞ்சாங்க ஆனா அத நான் ஏத்துக்கணும் இருக்கணும்ல?” என்று அவள் புருவம் உயர்த்தி கேட்க முதல்முறையாக அவளது பேச்சில் அதிர்ந்து நின்றான்.

“என்ன சொல்ற இன்னைக்கு வரைக்கும் உன் பாட்டி உனக்காக தானே இவ்வளவும் செய்றாங்க. நீ அதை ஏத்துக்கலயா? இப்ப மட்டுமா? இல்ல முதல்ல இருந்தே உன் பாட்டி செய்ற எதையுமே நீ ஏத்துக்கலையா?” என்று அதிர்ச்சியுடன் அவன் வினவிய போது

“அப்படி சொல்ல முடியாது விவரம் தெரியற வரைக்கும் நான் அவங்க எனக்கு செஞ்ச எல்லாத்தையும் அன்புன்னு நினைச்சு தான் ஏத்துக்கிட்டேன். ஆனா நாள் பட பட  எனக்கு அது அன்பா தெரியல கடமையா தான் தெரிந்தது. ஓரளவுக்கு என்னாலயே எல்லாத்தையும் சமாளிக்க முடியும் என்று தோன்ற ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அவங்க கடமைக்கு செய்கிற எதையும் நான் வாங்கிக்க தயாரா இல்லை. அதே நேரம் அவங்க கொடுக்கும்போது மறுக்கவும் முடியாத சூழ்நிலை. அதனால அவங்க கொடுக்கும்போது வாங்கிப்பேன் ஆனா பயன்படுத்த மாட்டேன்.” என்று அழுத்தமாக கூறினாள்.

“பாட்டிக்கு இருக்கிறது நீ மட்டும் தான் அப்படி இருக்கிறப்ப, அவங்க உனக்கு அன்போடு தானே செய்வாங்க? நீ ஏன் அவங்க செய்யறத கடமைன்னு நினைக்கிற உன் மேல அவங்க உயிரே வச்சிருக்காங்க அப்படி இருக்கிறப்ப நீ இப்படி சொன்னா அவங்க மனசு கஷ்டப்படாதா?” என்று அவளிடம் மிகவும் தீவிரமாக கேள்வி எழுப்பினான்

“நீங்க ஏதோ உங்கள பத்தி என்கிட்ட சொல்ல போறீங்கன்னு ரொம்ப ஆர்வமா வந்தேன். நீங்க என்னடான்னா என்னை பத்தி கொடஞ்சி கொடஞ்சி கேள்வி கேட்டு இருக்கீங்க? இதுக்கெல்லாம் பதில் சொல்றது நான் நிறைய சொல்லணும். நிறைய பேச வேண்டி இருக்கும். நீங்க தான் பேசவே மாட்டீங்களே?”  என்று முதல் முறையாக அவனைப் பற்றி அவனிடமே கூறினாள்.

“நான் பேசமாட்டேனா? நான் பேச மாட்டேன் உங்கிட்ட எப்ப சொன்னேன்?” என்று அவன் சிந்திக்க துவங்க,

“நீங்க பேச மாட்டீங்கன்னு நீங்க வந்து சொல்ல வேண்டாம்.  நீங்க பேசாம இருந்தாலே அது எனக்கு புரியும். இல்ல நீங்க எங்க என்கிட்ட பேசினீங்க?”  என்று அவள் நிதானமாக வினவிய போது,

“உன்கிட்ட பேசல. ஆனா உனக்காக நிறைய பேசியிருக்கேன். அது உனக்கு தெரியாது. தெரியலனாலும் எனக்கு அது ஒரு பிரச்சனையும் இல்லை.” என்று தோளை குலுக்கி கொண்டான்.

“ஹ்ம்ம்” என்று பெருமூச்சு விட்டவள்,

“என் பாட்டி உயிரா இருக்காங்கன்னு எதை வச்சு சொன்னீங்க? எனக்காக மாப்பிள்ளை பார்த்தது, என்ன படிக்க வச்சது, இன்னைக்கு என்ன கல்யாணம் பண்ணி கொடுத்து அனுப்பி இருக்கிறது இதெல்லாம் வச்சு அவங்க என் மேல உயிரையே வச்சிருக்காங்கன்னு சொல்றீங்களா? எனக்கு அப்படி தோணல.

அவங்க அவங்க பையன் இறந்ததுமே உடைந்து போயிட்டாங்க .தனக்கு முன்னாடி தன் மகன் இறந்ததை அவங்களால ஏத்துக்கவே முடியல. நான் என் அப்பா அம்மாவ இழந்துட்டு நின்னப்போ எனக்கு தேவையா இருந்தது அன்பும் அரவணைப்பும்தான்.

ஏன்னா அப்போ என் வயசு ரொம்ப கம்மி. பாட்டி என் பக்கத்துல வந்து உட்கார்ந்து இருந்தப்போ ‘சரி அப்பா அம்மா தான் இனிமே இல்ல, இனி பாட்டி எப்பயும் நம்மளுக்காக இருப்பாங்க’ அப்படின்னு நம்பினேன்.

அவங்க என்ன அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகும் போது ‘நமக்குன்னு ஒரு வீடு இருக்கு, அம்மா அப்பா இல்லனாலும் நமக்கு ஒரு வாழ்க்கை இருக்கு’ அப்படின்னு அந்த பிஞ்சு மனசுல எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனா அதெல்லாம் நாலே நாள்ல தகர்ந்து காணாம போச்சு.

என் பாட்டு என்னைக் கொண்டு போயி ஒரு ரெசிடென்சியல் ஸ்கூல்ல சேர்த்துட்டாங்க. அப்பா அம்மாவோட மட்டுமே இருந்த என்னை சட்டுன்னு அறுத்து விட்டது போல இருந்தது அப்ப.

அப்பா அம்மா இல்லாத பொண்ணு அனாதை பொண்ணுங்கறத சொந்த பாட்டியை நிரூபிச்சதுக்கு அப்புறம் அவங்க என் மேல உயிரா இருக்காங்க நான் அவங்க மேல உயிரா இருக்கணும்னு எல்லாரும் எப்படி எதிர்பார்க்கிறீங்க?”  என்று சாதாரணமாக கேட்டுவிட்டு தன் கையில் இருந்த நெயில் பாலிஷை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.

“அவங்களுக்கு வயசு ஆகுது இல்லையா? சின்ன பொண்ணு உன்னை பார்த்துக்க முடியாதுன்னு தானே விட்டாங்க. அவங்கள போய் நீ இப்படி பேசலாமா? தப்பில்லையா?” என்று லேசாக சினமேறிய குரலில் வினவினான்.

“அப்ப என் பாட்டிக்கு ஒன்னும் நூறு வயசுல்லாம் இல்ல. இப்பயும் இல்ல அது வேற விஷயம். அப்ப என் பாட்டிக்கு ஒரு 55, 60 வயசுக்குள்ள தான் இருக்கும் கண்டிப்பா என்ன பாத்துக்க முடியாம போற அளவுக்கெல்லாம் அவங்க உடம்புக்கு ஒன்னும் இல்ல.

அவங்களுக்கு அவங்க பையன் இறந்து போயிட்டாரு அப்படின்னு வருத்தம். அந்த இழப்பை தாங்க முடியாத வலி. தன்னோட கணவர் இல்லை, நான் மகனும் இல்லை இப்படி எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறோம் என அவங்களுக்கு அவங்கள பத்தின கவலைதான் அதிகமா இருந்தது. அந்த சின்ன வயசுல நான் எல்லாத்தையும் தொலைச்சிட்டு நிக்கிறேன்னு என்னைப் பத்தி நினைக்கவேயில்ல.

இதுல என்னோட பொறுப்பும் அவங்களுக்கு சேர்ந்திருச்சேன்னு கூட நெனச்சி இருக்கலாம். தன் மகனோட மகள், அவளை படிக்க வைக்கணும்னு கடமைக்கு படிக்க வைத்திருக்கிலாம்.

ஆனா என்ன கூட இருந்து பாத்துக்கலையே! ஒரு சின்ன குழந்தை அம்மா அப்பாவ இழந்துட்டு நிக்கிறா அவளுக்கு அந்த அன்பை கொடுக்கணும்னு அவங்க நினைக்கலையே!

இந்த உலகத்தில் யார் எதை வேணாலும் ஒருத்தர் கேட்டு இன்னொருத்தருக்கு கொடுக்கலாம். ஆனால் யார்கிட்டயும் யாரும் கேட்காமலே ஒருத்தர் இன்னொருத்தருக்கு கொடுக்க முடிஞ்ச ஒரே ஒரு விஷயம்னா அது அன்பு மட்டும்தான். இலவசமாக கிடைக்கிற அந்த அன்பு கூட எனக்கு கிடைக்கலன்றது தான் என்னோட வருத்தமே.”

அவள் பேசப் பேச அவள் அன்புக்கு ஏங்கி இருக்கிறாள் என்பது புரிந்தது. இனிமேலும் பாட்டியை பற்றியோ அவளது இந்த குணத்தை பற்றியோ பேசி தனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. அவன் பேச வந்த விஷயத்தை பேசுவது தான் அவனுக்கு சிறந்தது என்று எண்ணினான்.

“ஓகே இப்ப நான் சொல்ல வந்ததை உன்கிட்ட சொல்லிடுறேன். நீ இதை எப்படி எடுத்துக்குவேன்னு எனக்கு தெரியாது” என்று இழுக்க

“எதுனாலும் சொல்லுங்க. நோ ப்ராப்ளம்.” என்று கூறியவள் குரல் சற்று வித்தியாசப்பட்டிருந்ததோ ?ஆனால் அதை அவன் கவனித்திருக்கவில்லை .

“ஆக்சுவலா நான் கல்யாணம் பண்ற ஐடியாலயே இல்ல. ஜாதகம் ஜோசியம் ஏதோ சொல்லி அம்மா அப்பா தான் போர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க வச்சாங்க ஆனாலும் இதுக்கு பின்னாடி இன்னொரு காரணமும் இருக்கு..” என்று அவன் சொல்ல முடியாமல் தடுமாறினான்.

“ஒரு நிமிஷம் நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே?” என்று அவனுடைய வலது கரத்தை பற்றி கொண்டாள்.

புரியாமல் அவளை நோக்கியவன் “சொல்லு” என்று மட்டும் கூற

“எனக்கு உங்கள பத்தி ஒன்னுமே தெரியாது. உங்களுக்கும் என்ன பத்தி பெருசா எதுவும் இப்ப வரைக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்ல. வாழ்க்கை நீண்டு கிடக்கு.  மெதுவா தெரிஞ்சுக்கலாம். எல்லாத்தையும் ஒரே நேரத்துலயோ, இல்ல உடனேவோ சொல்லி தெரிஞ்சுக்கணும் எந்த அவசியமும் இல்லை.

இந்த கல்யாணம் உங்களை போர்ஸ் பண்ணி தான் பண்ணி வச்சாங்கன்னு எனக்கு தெரியும். ஆனா ஒன்னே ஒன்னு தெரிஞ்சுக்கோங்க.

பாட்டி கல்யாணத்துக்கு என்னை போர்ஸ் பண்ணாங்களே தவிர, உங்களை கல்யாணம் பண்றதுக்கு அவங்க என்ன போர்ஸ் பண்ணல. நானா விரும்பி தான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதனால இத பத்தி உங்களுக்கு ஏதாவது குழப்பம் இருந்தா அதை தூக்கி தூரமா போட்டுடுங்க.

நீங்க என்கிட்ட சொல்ல வர விஷயம் ஏதோ பெருசுன்னு எனக்கு நல்லா தெரியுது. ஆனா அதைக் கேட்டு, புரிஞ்சு, பிராசஸ் பண்ணி, லைஃப்ல அதை எப்படி கொண்டு போகணும்னு டெசிஷன் எடுக்கிற அளவுக்கு நீங்களும் நானும் இன்னும் நெருக்கமாகல. அதனால அந்த விஷயத்தை அப்படியே வைங்க நம்மளுக்குள்ள ஓரளவுக்கு புரிதல் வந்துருச்சுன்னு எப்ப நாம ரெண்டு பேருமே நினைக்கிறோமோ அப்ப இந்த விஷயத்தை பத்தி பேசலாம். இதை ஏன் முன்னாடியே சொல்லல அப்படின்னு அன்னைக்கு கண்டிப்பா நான் உங்க கூட சண்டை போட மாட்டேன். அது மட்டும் நான் உங்களுக்கு தெளிவா இப்பவே சொல்லிடுறேன். ப்ளீஸ் இனிமே கொஞ்ச நாளைக்கு இதை பத்தி பேசாதீங்க.” என்று கூறிவிட்டு பேச்சு முடிந்தது என்பது போல முகத்தை ஜன்னல் பக்கமாக திருப்பிக் கொண்டாள்.

இது என்ன? இவள் இப்படி சொல்லிவிட்டாள்? தான் சொல்ல வந்த விஷயம் எத்தனை பெரியது அது என்னவென்று அறியாமல் ஏதோ பெரிய விஷயம் ஆனால் இப்போது வேண்டாம் என்று ஏன் தடுக்கிறாள் என்று குழம்பி அவள் முகத்தை பார்க்க அவன் முயற்சிக்க அவளோ சுத்தமாக அவள் முகத்தை மறைத்தபடி வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

இதற்கு மேல் பேசுவதற்கு கோகுலுக்கும் எதுவும் இருக்கவில்லை அதே நேரம் அவளது பேச்சின் சாராம்சமும் புரியவில்லை புரிதல் வந்த பிறகு பேசலாம் சரி பேசலாம் என்று சீட்டை நன்றாக சாய்த்து கண்களை மூடிக்கொண்டு அமர்ந்துவிட்டான்

அவனிடம் எந்தவித அசைவும் இல்லாது போக மெல்ல திரும்பி அவனை நோக்கியவள்

‘உங்ககிட்ட யாரு இப்ப பழைய கதை எல்லாம் கேட்டது? சைட் அடிச்சிட்டு இருந்தீங்கல்ல பேசாம அதை அடிக்க வேண்டியது தானே? தேவை இல்லாம பாட்டி அது இதுன்னு பேசி கடைசியில் எங்க வந்து நிக்கிறாரு பாரு இதுதான் பேசணும்னு சொன்னாரா? தெரிஞ்சு இருந்தா வந்த உடனே கண்ண மூடி நானே தூங்க ஆரம்பிச்சு இருந்திருப்பேன். அப்பா சாமி எஸ்கேப்.” என்று அவள் மனதிற்குள் பேசிக் கொண்டிருக்க விஷயம் தெரிந்து தான் தவிர்த்து இருக்கிறாள் என்று தெரியாமல் அங்கு ஒருவன் நிம்மதி இன்றி கண் மூடி படுத்திருந்தான்.

14 thoughts on “மனம் உன்னாலே பூப்பூக்குதே 9”

  1. M. Sarathi Rio

    மனம் உன்னாலே பூப்பூக்குதே…!
    (அத்தியாயம் – 9)

    ஆருத்ராவோட பாயிண்ட் ஆஃப் வ்யூவில அவை சொல்றது எல்லாமே சரின்னுத்தான் தோணுது. அம்மா, அப்பாவை இழந்த ஒரு சின்ன பெண்ணால அந்த வயசுல அன்பை மட்டும் தானே அப்ப எதிர் பார்த்திருப்பா. யார் கிட்டேயும் யாரும் கேட்காமலே, எதிர் பார்க்காமலே கிடைக்கிறது
    அன்பு மட்டும் தானே… அந்த அன்பு கூட கிடைக்கலைங்கறது தான் அவளோட வருத்தமே.

    அதானே.. அவன் சொல்ல வர்ற விஷயம் ரொம்ப பெருசுன்னு தெரியுது.. ஆனா, அவ ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே முட்டுகட்டை போட்டுட்டாளே ஏன் ? அப்படின்னா, அவளுக்கு முன்னாடியே இந்த விஷயம் தெரியுமா…? அந்த கசப்பான விஷயம் இப்ப எதுக்குன்னு தான் அவாய்ட் பண்ணாளோ ?
    ஒருவேளை, அது கோகுலோட லவ் ஸ்டோரியோ…???
    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Avatar

    அவன் ஆரம்பிக்கும் முன்னாடியே அவ முட்டுக்கட்டை போட்டுட்டா, சோ விஷயம் என்னன்னு அவளுக்கு தெரியுமா?

  3. Avatar

    Aaru sonnathu thappu nu sollamudiyathu andha vayasula ava yenguna anbu ah kudukka vittutaga la iva ipadi stop panra thu ah partha vishayam avalukku already therinchi irukum pola yae

  4. Avatar
    Anupama Ravichandran

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  5. Avatar

    ஆருமா….உன் point a nee பேசிட்ட….chinna chinna வயசுல அப்பா, அம்மா இல்லாம…அன்புக்கும், அரவணைப்புக்கும் ஏங்கினன்னு.
    கிரிஷ் யோட…point a கேக்கவே இல்லையே… ஏன் மா…உனக்கு தெரிஞ்சி இருக்கு…ஆனா அந்த அமுல் டப்பாக்கு தெரியலையே….🤣🤣🤣 நீ நடத்து….உனக்கு என்னமோ தெரிஞ்சி இருக்கு….☺️💕❤️♥️♥️♥️

  6. Avatar

    இவன் இப்படி வேண்டாம் சொல்லறா அப்போ அவளுக்கு விசயம் தெரிஞ்சுருக்கு

  7. Avatar

    ஆருத்ரா ஆல்ரெடி அவன் மேல் oneside love la இருந்து இருப்பாளோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *