மகா மகிழிடம் முகில் அண்ணா ஒரு பெண்ணை விரும்புகிறது அந்த பெண்ணிற்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் அவர்கள் வீட்டில் திருமண ஏற்பாடு செய்கிறார்கள் என்றவுடன் மகிழ் வேகமாக என்ன முகில் ஒரு பெண்ணை விரும்புகிறானா என்று வேகமாக கேட்டான் பிறகு முகிலை பார்த்து டேய் முகில் ஏண்டா எங்களிடம் சொல்லவில்லை என்று கேட்டான்
உடனே மகாவை கட்டியணைத்துக் கொண்டு அவள் நிலாவுடைய தோழி இளவேனில் நம் தென்னந்தோப்பில் கணக்கு வழக்கு பார்க்கும் ராமுடைய பெண் என்றான் அதற்கு என்னடா என்று கேட்டேன் இல்ல மச்சான் நான் அந்த பெண்ணிடம் சென்று என்னுடைய காதலை சொன்னேன் அவள் அதற்கு நீங்கள் பெரிய இடம் என்னிடம் எல்லாம் உங்கள் விருப்பத்தை சொல்லாதீர்கள் இது சரிவராது
நீங்கள் உங்களுக்கான துணை தேடி கொள்ளுங்கள் என்று மட்டும் சொன்னால் எனக்கு பிடிக்கவில்லை என்றோ இல்லை வேற எதுவும் சொல்லவில்லை சரி அவள் படித்துக் கொண்டிருக்கும் பெண் பிறகு பேசலாம் என்று எண்ணினேன் ஆனால் இப்படி அவள் வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பார்கள் என்று நான் எண்ணவில்லை
சரி அவள் என்னை விரும்பவில்லை வேறு ஒருவனை பிடித்திருக்கிறது என்றால் கூட நான் சரி என்று கூட விட்டு இருப்பேன் ஆனால் அவளுக்கு இந்த திருமணத்திலும் விருப்பமில்லை அதுவும் அவளுடைய தாய்மாமாவையே திருமணம் செய்து வைக்கலாம் என்று எண்ணுகிறார்கள் அவனுக்கும் இவளுக்கும் கிட்டத்தட்ட 15 வருடங்கள் வித்தியாசம் இருக்குமாம் 15 வருடம் வித்தியாசம் இருந்தாலும் அவளுக்கு விருப்பம் என்றால் கூட பரவாயில்லை
அவளுக்கும் விருப்பமில்லை அது மட்டும் இல்லாமல் அவளுடைய மாமா அவ்வளவு நல்லவனும் இல்லையாம் இவை அனைத்துமே எனக்கு நிலா தான் சொன்னாள் நிலவுக்கு உன்னுடைய காதல் தெரியுமா என்றான் இல்லை என்றவுடன் நிலா வந்தால் எனக்கு தெரியும் என்றால் முகில் அதிர்ச்சியாகி நிலாவை பார்த்தான் முகில் அண்ணா நீ வேணியை காதலிப்பது எனக்கு தெரியாது ஆனால் உனக்கு வேணி மேல் அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதோ என்று எனக்கு நிறைய நாட்கள் தோன்றுகிறது
நீ அவளை பார்க்கும் பார்வையை வைத்து நான் தெரிந்து கொண்டேன் அவளும் என்னிடம் சொல்லிருக்கிறாள் அவர்கள் வயலுக்கு என்று உன் கடையில் தான் வந்து அனைத்து பொருட்களும் வாங்குவாள் என்று அப்படித்தான் உன்னை தெரியும் என்று அவள் சொல்லி இருக்கிறாள் அதனால் தான் எனக்கு உன் மேல் சிறிது டவுட்டு இருந்தது ஆனால் இன்று எனக்கு அது கன்ஃபார்ம் ஆகிவிட்டது
அவள் முகம் சரியில்லை என்று உடன் நீ என்னிடம் கேட்டவுடன் என் மூலம் உனக்கு அனைத்து கதையும் தெரிந்தவுடன் உனது குரலில் ஒரு மாற்றம் இருந்தது அதை வைத்தும் உன் முக பாவனைகளை வைத்தும் நான் தெரிந்து கொண்டேன் என்றால் மகிழ் சரி முகில் இப்பொழுது என்ன செய்யலாம் என்று நினைக்கிறாய் என்று கேட்டான் முகில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்
அப்பொழுது நிலா தான் என்ன மாமா இப்படி கேட்கிறாய் முகில் மாமா சொன்னது போல் அவளுக்கு விருப்பம் இருந்து அவன் நல்லவனாக இருந்தால் கூட நாம் அமைதியாக விட்டுவிடலாம் அவனுக்கு விருப்பமில்லை அது மட்டும் இல்லாமல் அவன் நல்லவனும் இல்லை அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி விட்டு விடுவது என்றால் எழில் தான் அப்பொழுது நிலா என்ற உடனே நிலா எழில் பார்த்து முறைத்துவிட்டு நான் எதுவும் பேசவில்லை நீங்களே முடிவு எடுங்கள் என்றால்
அப்பொழுது முகில் தான் மகிழிடம் எனக்கு அந்த பெண்ணை வீட்டில் உள்ளவர்களிடம் பேசிய திருமணம் செய்து வைக்க முடியுமா என்று கேட்டான் அப்பொழுது மகிழ் எதுவும் பேசாமல் மகாவை பார்த்தான் அவள் முகம் பதட்டமாக இருந்தது எழிலையும் பார்த்தான் அவனது முகத்திலும் ஒரு பதட்டம் தெரிந்தது ஆனால் இவர்கள் இருவரும் ஏன் இவ்வளவு பதட்டமாக இருக்கிறார்கள் என்று அவனுக்கு புரியவில்லை பிறகு நிலாவை பார்த்தான்
நிலா தனது முகில் அண்ணன் நேரடியாக அவனுடைய விருப்பத்தை சொல்லி கேட்டவுடன் சந்தோஷமாக இருந்தால் எப்படியாவது இளவேனில் இடமும் அவர்கள் வீட்டில் இடமும் பேச வேண்டும் முதலில் தன் வீட்டில் உள்ளவர்களிடம் பேசிவிட்டு பிறகு அவர்கள் வீட்டில் சென்று பேசி முகில் அண்ணனுக்கு இளவேனிலை திருமணம் செய்து வைத்து விடுவார் தன் மகிழ் மாமா என்று என்னை சந்தோஷமாக இருந்தால்
மகிழ் நிலாவைப் பார்த்துவிட்டு முகிலை பார்த்து சரி முகில் முதலில் நான் அந்தப் பையனை பற்றி விசாரிக்கிறேன் அதன் பிறகு நான் வீட்டில் பேசுகிறேன் இரு நாட்களுக்கு பிறகு அதான் இன்னும் ஒரு மாத காலங்கள் இருக்கிறது அல்லவா முதலில் நான் அந்த பெண்ணுடைய மாமனை பற்றி விசாரித்து விட்டு அதன் பிறகு நம் வீட்டில் பேசலாம் அதுவரை அமைதியாக இருங்கள் என்றான்
அனைவரும் சரி என்றவுடன் சரி என்று விட்டு அனைவரும் முகில் அறையிலிருந்து வெளியில் வந்தார்கள் அப்பொழுது சுந்தரி தான் மகிழிடம் சென்று என்னடா என்று கேட்டார் அம்மா கொஞ்சம் பொறுங்கள் எதுவாக இருந்தாலும் இரண்டு நாட்களுக்கு பிறகு நான் உங்களிடம் சொல்கிறேன் என்றான் அவன் வேறு எதுவும் சொல்லவில்லை வீட்டில் உள்ள சிறியவர்கள் முகமெல்லாம் சரியில்லை என்பது மட்டும் சுந்தரி உணர்ந்தார்
அதனால் சரி அவர்கள் அப்படி ஒன்றும் சிறியவர்கள் அல்ல என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கே தெரியும் என்பதால் அவர்கள் எதுவாக இருந்தாலும் அதான் இரண்டு நாட்களுக்கு பிறகு சொல்கிறேன் என்று இருக்கிறார்கள் என்று விட்டு அமைதியாகி விட்டார் பிறகு மகாவின் முகத்தை பார்த்தார் அவள் முகம் பதட்டமாக இருப்பது போல் இருந்ததால் அவளிடம் வேறு எதுவும் பேசாமல் சமையலறைக்குச் சென்று அனைவருக்கும் கொண்டு வந்தார்
அனைவருக்கும் கொடுத்தார் மகா எனக்கு வேண்டாம் அத்தை என்று மட்டும் சொல்லிவிட்டு அவளது அறைக்கு சென்று விட்டாள் எழிலும் அதேபோல் அம்மா எனக்கு வேண்டாம் என்று அவனது அறைக்கு சென்று விட்டான் நிலா இவர்கள் இருவரையும் கவனிக்காமல் மகிழ் இந்த திருமணத்தை எப்படியாவது நடத்த வேண்டும் என்று மட்டும் மனதில் எண்ணினால் முகிலும் ஏதோ ஒரு நினைவில் இருந்ததால் இவர்கள் இருவரையும் கவனிக்கவில்லை
மகிழ் தான் இவர்கள் இருவரையும் கவனித்து விட்டு தனது அம்மாவிடம் டீ வாங்கி குடித்துவிட்டு அவனது அறைக்குச் சென்றான் மகா கட்டில் உட்கார்ந்து தலையணையை மடியில் வைத்துக்கொண்டு அழுது கொண்டு இருந்தாள் அதை பார்த்தவுடன் மகிழுக்கு ஒரு மாதிரியாக இருந்தது கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு மகாவிடம் வந்து அவளது அருகில் உட்கார்ந்து கொண்டு மகா என்னாச்சு என்றான்
மாமா எனக்கு பயமா இருக்கு என்றாள் மகிழுக்கு ஒன்றும் புரியவில்லை மகா என்னாச்சு எதற்கு உனக்கு பயம் அதுதான் இதற்கான ஒரு தீர்வு நான் எடுக்கிறேன் என்று சொல்கிறேன் அப்புறம் என்ன பயம் அது மட்டும் இல்லாமல் உன்னுடைய முகத்திலும் எழில் முகத்திலும் ஒரு பதட்டம் இருக்கிறது அது ஏன் எனக்கு புரியவில்லை என்றான் மாமா காதலை இழந்தால் எந்த அளவிற்கு வலிக்குமென்று எனக்கு தெரியும் என்று உடன் மகிழுக்கே ஒரு நிமிடம் ஒரு மாதிரியாக ஆகிவிட்டது
சாரி மாமா நான் வேண்டும் என்று சொல்லவில்லை நான் அனுபவித்த வலி என்ன என்று எனக்கு தெரியும் நான் இந்த வீட்டிற்க்காக விட்டுக் கொடுத்திருக்கலாம் ஆனால் எந்த அளவுக்கு வருந்துகிறேன் என்று எனக்கு தெரியும் அதே போல் உங்களுக்கும் அந்த வலி என்ன என்று தெரியும் அப்படி இருக்கும் பொழுது முகில் அண்ணனை பற்றி யோசித்தால் என்று விட்டு அமைதியாகி விட்டாள்
மகா ஒன்றுமில்லை என்று விட்டு அமைதியாக இரு நாம் பார்த்துக் கொள்ளலாம் சீக்கிரம் நான் அவனைப் பற்றி விசாரித்துவிட்டு நம் வீட்டிலும் பேசுகிறேன் அது சரி எழில் ஏன் நான் பார்க்கும் பொழுதிலிருந்து பதட்டமாக தான் இருக்கிறான் என்று விட்டு அமைதியாகி விட்டான் நான் போய் அவனை பார்க்கிறேன் என்றான் நீ இப்படியே உட்கார்ந்து இருக்காதே
உன்னை இப்படி பார்த்தால் வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது கேட்பார்கள் என்றான் சரி என்று எதுவும் பேசாமல் முகம் கழுவிக்கொண்டு வெளியில் வந்தால் அப்பொழுதும் எழில் வராமல் இருந்தான் மகிழ் எழில் அறைக்குச் சென்றான் எழில் அமைதியாக அவனது பால்கனியில் நின்று கொண்டு கீழே உள்ள தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தான் அவனது ரூம் கதவை ஒருவர் திறக்கிறார்கள் என்பதை கூட உணராமல் நின்று கொண்டிருந்தான்
மகிழ் எழிலின் அருகில் சென்று அவனது தோளில் கை வைத்தான் எழில் திரும்பிப் பார்த்துவிட்டு மகிழை கட்டி அணைத்துக் கொண்டு அழுதான் டேய் என்னடா என்ன ஆச்சு அண்ணா எனக்கு பயமாக இருக்கிறது எங்கே முகில் அவனது காதலை இழந்து விடுவானோ என்று என்றவுடன் டேய் என்ன ஆச்சு உனக்கு நீ சரி இல்லையே என்றான் உன்னை
அண்ணா எனக்கு மகா உன்னை விரும்புகிறாள் என்றுஉங்கள் திருமணத்திற்கு முன்பு தெரியாமல் இருந்திருக்கலாம் ஆனால் உன் திருமண பேச்சு எடுத்திலிருந்து நானும் மகாவை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் அவள் ஏதோ ஒன்று இழந்தது போல் தான் சுற்றிக்கொண்டு இருந்தால் ஏதோ ஒன்று கூட சொல்ல முடியாது அவள் நடைபினமாக தான் வாழ்ந்தால் ஆனால் நான் உன் கல்யாணத்தை எடுத்துக்கட்டி செய்ய வேண்டும் என்பதால் அவளைப் பற்றி அதிகமாக யோசிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்
அவள் என்னிடம் பேசினால் எங்கே நான் கண்டுபிடித்து விடுவான் என்று அவள் எப்போது பார்த்தாலும் இனி உடனே சுற்றிக்கொண்டு இருந்தால் நான் இனி மாசமாக இருப்பதால் இனியை பார்த்து கொள்கிறாள் என்று எண்ணி விட்டு ஏன் ஏனென்றால் அவள் அதிக நேரம் இனிவுடன் தான் இருந்தால் நான் அப்படித்தான் எண்ணினேன் ஆனால் இப்பொழுது தானே தெரிகிறது எனக்கு பயமாக இருக்கிறது என்றான்
எங்கே முகில் அவன் காதலை இழந்து விடுவானோ என்று திரும்பவும் மகிழை கட்டியணைத்துக் கொண்டு அழுதான் மகிழுக்கு ஒரு பக்கம் வருத்தமாக ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது மகா எழில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதை காட்டிலும் இருவரும் ஒரே போல் எண்ணுகிறார்கள் இதற்காகவே முகில் உடைய காதலை சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணினான் பிறகு டேய் எழில் அதை நான் பார்த்துக் கொள்கிறேன்
இதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள் அமைதியாக வெளியே வா என்று அவனை அழைத்துக் கொண்டு வந்தான் பிறகு அவனும் அனைவரிடமும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் இதில் சந்தோஷமாக இருந்தது நிஇலா மட்டும்தான் சுந்தரி தனது பிள்ளைகள் ஏதோ மனதில் வைத்துக்கொண்டு சொல்லாமல் இருக்கிறார்கள் என்று மட்டும் எண்ணினார் அவருக்கு என்ன விஷயம் என்று தான் தெரியாது ஆனால் தனது பிள்ளைகள் ஏதோ ஒன்றை தங்களிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் என்று மட்டும் உணர்ந்தார்
முகிலும் எங்கே தனக்கு தன் காதல் கைகூடி விடாதோ என்று வருந்தினான் அதேபோல் தான் மகாவும் எழிலும் கூட பயந்தார்கள் மகிழ் இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் முகில் காதலிக்கும் பெண்ணை அவனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணினான் மகிழ் மனதில் எண்ணியது போல் முகில் விரும்பும் இளவேனில் என்ற பெண்ணை முகிலுடன் சேர்த்து வைப்பான…
இல்லை இதில் ஏதாவது சிக்கல் வருமா அதே போல் வீட்டில் உள்ளவர்கள் முகில் விரும்பும் பெண்ணே ஏற்றுக் கொள்வார்களா..
என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் …
அன்புடன்
❣️தனிமையின் காதலி❣️
Serthu vaikanum magizh kandipa una tha namburanga
ஏன் முகிலுக்கு என்ன குறை..? அந்த தாய் மாமனை விட முகில் நல்லவன் தானே.
அதற்காகவே அவனுக்கு இளவேணிலை கட்டி வைக்கலாம்.
Nice